Loading

முடிந்து போன பயணத்தில் உன்னை தேடுகிறேன் 

மூழ்கிய பின்னும் மூச்சு நின்ற கதை தெரியாத  

சுவாசம் மரித்த ஜீவன் நான்

பற்று அற்று பறக்க நினைத்தேன் 

என் வானில் வேகம் கூடிய இன்னுமொரு 

சிறகு நீ ஆனாய் 

வேடந்தாங்கல் மறந்து போனேன் 

மனதை வேட்டையாடிய வேடன்

நீயென உணராமல் 

கடந்து போன உன்னிலே நான் 

இனி பிழைக்கப்போவதில்லை 

காலம் உதவுமென காயங்கள் சொல்கிறது 

முடிந்தால் வாழ்ந்து விட்டு போ

என் சாபங்கள் வாழ்த்துகளாய் மாறி

வெகு நாட்களானது 

இருந்தும் 

எங்கோ ஓரமாய் 

விஷ முள் குத்தியது

முதல் காதலின் மெல்லிய தாக்கம் கொண்டு.

கமலா.வரிகள்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்