
இரண்டு நாட்களாய் மூளைக்குள் அணி வகுத்து இருந்த, கேள்வியின் முடிச்சுக்கள் அனைத்தும், தன் கண் முன்னே ஒவ்வொன்றாக அவிழ்வதைப் போல் உணர்ந்தாள் நிலா.
“ச்சே இதை எப்படி நோட் பண்ண மறந்தேன்.”
என்ற வாய்விட்டே கூறியவள், தான் பேசுவது புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்த செல்லம்மாவை இறுக்கி அணைத்துக் கொண்டு,
“ரொம்ப தேங்க்ஸ் ம்மா, இருட்டுல திக்கு திசை தெரியாம தனியா தவிச்சிட்டு இருந்த எனக்கு, சரியான வழியை காமிச்சு கொடுத்திருக்கீங்க, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.”
“எனக்கு ஒன்னு மட்டும் புரிய மாட்டேங்குது நிலாம்மா, சரவணன் தம்பியும் அகல்யா பாப்பாவும் காதலிக்கிற விஷயம், விஷ்வா தம்பிக்கு தெரிய கூடாதுன்னு அவங்க அந்த போட்டோவை, மறைச்சு எடுத்துட்டு போனதுக்கு காரணம், நித்திலா சரவணன் தம்பி கல்யாணம் எங்க நடக்காம போயிடுமோங்கறா, பயமா கூட இருக்கலாம்.
அது சரி தான், ஆனா முதல்ல அதை அங்க கொண்டு வந்து வைச்சது யாரு? அதை விட அந்த போட்டோ அங்க தான் இருக்குன்னு இவங்களுக்கு எப்படி தெரியும்?”
“அங்க போட்டோவை மறைச்சு வைச்ச அவங்களுக்கே, எப்படி ம்மா அது தெரியாம போகும்?”
“என்ன நிலாம்மா சொல்லறீங்க? அவங்களே இதை மறைச்சு வைச்சுட்டு, எதுக்காக அவங்களே யாருக்கும் தெரியாம அதை எடுத்துட்டு போகணும்? எனக்கு புரியல. ”
“ஏன் செல்லம்மா நித்திலா உங்க தும்பிக்கு அத்தை மக தானே?”
“ஆமாம் ஆனா… அதுக்கும் இதுக்கும் என்ன நிலாம்மா சம்பந்தம்?”
“ இருக்கே… உங்க விஷ்வா தம்பி இங்க தன்னோட அம்மாவோட வரப் போறாருன்னு தான், இந்த குடும்பத்துக்கு தெரியும். ஆனா அவரு என்னை கல்யாணம் பண்ணி, தன் மனைவியான என்னையும் இங்க கூட்டிட்டு வர போறாருங்க விஷயம், சூர்யா அண்ணனை தவிர இங்கிருக்க யாருக்குமே தெரியாது இல்லையா?”
“ஆமா…”
“ஒருவேளை உங்க தம்பி என்னை கல்யாணம் பண்ணாம இங்க வந்திருக்கும் போது, இந்த போட்டோ அவர் கண்ணுல பட்டிருந்தா, அடுத்து இங்க என்ன நடந்திருக்கும்?”
செல்லம்மா ஒன்றும் புரியாமல், அவளை போலவே அதே கேள்வியை கேட்டார்.
“என்ன நடந்திருக்கும்?”
“சிம்பிள் தன் தம்பியோட காதலை சேர்த்து வைக்கவும், தன் தாத்தா மறுபடியும் ஊர் முன்னாடி தலை குனிய கூடாதுங்கறதுக்காகவும், நித்திலாவை கன்வின்ஸ் பண்ணி, உங்க விஷ்வா தம்பியே அந்த நித்திலாவை கல்யாணம் பண்ணி இருப்பாரு.”
செல்லம்மா வாய் பிளந்து நின்று விட, அவரை கண்டு மென்மையாக புன்னகைத்தவளோ,
“ என்ன செல்லம்? இதே சிச்சுவேஷனை கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி எங்கயோ நேரடியா பார்த்த மாதிரி தோனுதா உங்களுக்கு?”
“நிலாம்மா… அப்போ…”
“அதே தான், இங்க நடந்த அத்தனை குழப்பத்துக்கும் முழு முதற் காரணம், உங்க தம்பியை நித்திலா கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சது தான். அன்னைக்கு நடந்த பிரச்சினைக்கு அப்பறம் நித்திலாவை தானே, உங்க தம்பிக்கு ஏத்த மணப்பெண்ணா அவரோட தாத்தா தேர்ந்தெடுத்தார். சொல்லப் போனா அவருக்கு வேற சாய்ஸே இல்லாம அப்படி தேர்ந்தெடுக்க வைச்சிருக்காங்க. ஆனா கடைசி நேரத்துல விஷ்வா தாத்தாவோட முடிவை எதிர்த்து நிற்பாருன்னும், இப்படி வீட்டை விட்டே வெளியே போவாருன்னும் அவங்க எதிர்பார்க்கவே இல்ல.”
செல்லம்மா பேச்சற்று நிற்க நிலாவே மீண்டும் தொடர்ந்தால்,
” விஷ்வாவை அவ கல்யாணம் பண்ணிக்க நினைச்சதுல தப்பில்ல, ஆனா அதுக்காக என்னையும், என் பிரண்டையும் அவ பகடைக்காய் ஆக்கி இருக்கக் கூடாது. இவ செஞ்ச காரியத்தால பாதிக்கப்பட்ட உங்க தம்பி, அது அத்தனைக்கும் காரணம் நாங்கன்னு நினைச்சு, எனக்கும் என் பிரண்டுக்கும் நிறைய வலிகளை கொடுத்துட்டார்.”
கண்களை இறுக்கமாக மூடிய படி நிலா தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயல, பதறிப் போன செல்லம்மா,
“ நிலாம்மா அது…”
“புரியுது உடனே உங்க தும்பிக்கு சப்போட்டா விற்க ஆரம்பிக்காதீங்க. ஆனா எனக்கு இன்னும் ஒரே ஒரு டவுட் மட்டும் இருக்கு.”
“இன்னும்மா?”
அவரது வார்த்தைகளில் சட்டென்று சிரித்தவளோ,
“ஆமாம் ம்மா இருக்கு, இந்த விஷயத்துல இவங்களோட கைவரிசை மட்டும் தான் இருக்கா? இல்ல இந்த வீட்ல இருந்து வேற யாராவது அவங்களுக்கு உதவறாங்களா?”
அவளது கூற்றில் செல்லம்மாவிற்குமே, அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் மனமோ நிச்சயமாக இருக்காது என்று அடித்து சொன்னது. தனக்குள்ளே போராடிக் கொண்டிருந்தவரை நிலாவின் குரல் கலைத்தது.
“மை டியர் செல்லம்மா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?”
“என்னம்மா இப்படி கேட்கறீங்க? நீங்க இந்த குடும்பத்தோட மூத்த மருமகம்மா, அதோட எனக்கு சின்ன முதலாளியம்மா வேற, இதை செய்யின்னு சொல்லுங்கம்மா அதை நான் செஞ்சு முடிக்கறேன்.”
“நீங்க இதை விட மாட்டீங்களா ம்மா? உங்க தும்பியே இதை கேட்டா, உங்ககிட்ட சண்டைக்கு வருவாரு. சூர்யா அண்ணா சொன்னதை வச்சு பார்த்தா, அந்த ஆசாரி குடும்ப சங்கிலியை, ஒரு பொண்ணுகிட்ட கொடுத்ததா சொல்லி இருக்கார் இல்லையா?”
“ ஆமா… ஆனா அது யார்னு அவர் சொல்றதுக்கு முன்னாடியே, அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சே.”
“அதை தான் நானும் சொல்ல வரேன், நிச்சயமா நித்திலா தான் அந்த நகையை வாங்கி இருக்கா, அவ தான் அதை வாங்கினாங்கறதுக்கு ஒரே சாட்சி அவர் மட்டும் தான். அதனால தான் அவர் மூலமா எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு, அவரை போட்டுத் தள்ள பார்த்திருக்காங்க. இங்க இருக்கவங்க யாருக்கும் தெரியாம, நான் எப்படியாவது அவரையோ இல்ல அவர் குடும்பத்தையோ சந்திக்கனும் ஏற்பாடு பண்ண முடியுமா?”
“ஐயோ தம்பிக்கு கூட தெரியாமையா? எதுக்குமா இந்த விஷப் பரிச்சை? ஏற்கனவே தம்பி உங்கள தப்பா நினைச்சுட்டு இருக்கு, அப்புறம் இதனால உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதாவது பிரச்சனை வந்திடப் போகுது?”
க்கும் இப்ப மட்டும் என்ன கலகலன்னா எங்க வாழ்க்கை இருக்கு என்று மனதில் நினைத்தவளோ,
“சொன்னா புரிஞ்சுக்கோங்க செல்லம்மா, இப்போ உங்க தம்பிகிட்ட போய் இந்த போட்டோவை காட்டி, நீங்க இங்க நடந்த அத்தனை விஷயத்தையும் அவருக்கு ஒன்னு விடாம சொன்னாலும் கூட, இதை நான் தான் அங்க வெச்சு குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கிறேன்னு சொல்லுவாரு.
அவரைப் பொறுத்த வரைக்கும் நான் கெட்டவ தான் இருந்துட்டு போறேன், அதுவும் உண்மை தானே, நான் தெரியாம செஞ்சிருந்தாலும், அதனால அதிகமா அவர் பாதிக்கப்பட்டிருக்காரு.
அது நானே அறியாம தவறுதலா செஞ்சதுன்னாலும் அது குற்றம் தான், அதுக்கு பிராயச்சித்தம் தேடத் தான் நான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.
இப்போதைக்கு இதை பத்தி அவருக்கு எதுவும் தெரிய வேணாம். ஒருவேளை இது அவருக்கு தெரிஞ்சா, அவரோட நடவடிக்கை வேற மாதிரியா இருக்கும். இது நித்திலாவோட குரூப்புக்கு அட்வான்டேஜ் ஆகிடவும், சான்ஸ் இருக்கு.
முதல்ல இதை நித்திலா தான் செஞ்சாளான்னு கன்பார்ம் பண்ணி ஆதாரத்தோட நிரூபிக்கனும். இந்த விஷயம் சின்னதா வெளியே தெரிஞ்சா கூட, அவங்க உஷாராகிடுவாங்க. அப்புறம் நம்மளால எதுவுமே பண்ண முடியாம போயிரும். ஷோ நான் சொல்றவரைக்கும் நீங்க இதை பத்தி வெளிய வாய் திறக்க கூடாது சரியா?”
“சரிங்கம்மா, முதல்ல எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அந்த ஆசாரி இந்த ஊர்ல தான் இருக்காறான்னு விசாரிச்சு, அவரை சந்திக்க ஏற்பாடு பண்றேன்.”
“ ம்ம்ம், நானும் என்னோட பிரண்டு கிட்ட, எங்களோட பேசின அந்த பொண்ணோட போட்டோ எதுவும் கிடைச்சுதான்னு, மறுபடியும் விசாரிச்சு பார்க்கறேன். எந்த ஒரு லூப்புமே கிடைக்காம தான் இங்கே வந்தேன், இப்போ ஒரு நூல் கிடைச்சிருக்கு, அதை வைச்சு இதோட ஆதிமூலத்தை எப்படியாவது கண்டு பிடிக்கனும்.”
சோபாவில் அமர்ந்தபடியே லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, அப்படியே உறங்கி இருந்தான். செல்லம்மாவிடம் பேசி முடித்து விட்டு, யோசனையோடு அறைக்கு வந்த நிலாவிற்கு, அவன் மீது ஒருபுறம் கோபம் வந்தாலும், மறுபுறம் அவனது நிலை கண்டு இரக்கமும் தோன்றியது.
“பண்றதை எல்லாம் பண்ணிட்டு தூக்கத்தை பாரு பச்ச குழந்தை மாதிரி, வீட்ல இருக்குற கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க தெரியல, இதுல இவரு பெரிய பிசினஸ் மேக்னட்டாம். உன்னால அந்த அவார்டுக்கு உண்டான மரியாதையே போச்சுய்யா.”
ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் கட்டிலின் ஒரு பக்கம் போட்டவள், மறுபக்கம் படுக்க ஆயுத்தமானாள். சத்தம் கேட்டு விழித்தவனோ நிலாவின் செயலை கண்டு,
“மேடம் என்ன பண்றீங்க?”
“ ம்ம்ம் நான் தூங்கறதுக்காக பெட்டை அரேஜ் பண்ணறேன். இந்த ரெண்டு தலகாணியும் எனக்கு வேணும் அங்க இருக்கிறதை வச்சு நீங்க தூங்கிக்கங்க, குட் நைட்.”
என்றபடி கட்டிலின் நடுவில் தலையணையை வைத்தவள் முதுகு காட்டியபடி படுத்துவிட,
“அட ஆமா இல்ல, ரொம்ப டைம் ஆகிடுச்சு தூங்கலாமா?”
என்றுபடி லேப்டாப்பை மூடிவிட்டு கட்டிலின் அருகில் வந்தவன், தொப்பென்று அதில் குதிக்க, அவன் விழுந்த வேகத்தில் திடுக்கிட்டு எழுந்தாள் நிலா.
அவளை நோக்கி திரும்பியவனோ, இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஒற்றை புருவத்தை உயர்த்திய படி,
“ஆமா… அப்போ எதுக்கு சிரிச்சேன்னு சொல்லவே இல்லையே?”
திடுக்கிட்டவளோ திருதிருவென விழிக்க, அவன் கண்களில் சுவாரசியம் கூடியது.
“என்ன மிஸ்ஸஸ் விஷ்வேஸ்வர பாண்டியன், புருஷன் கேட்ட கேள்வி புரியலையா இல்ல…”
சாதரணமாக அவன் பார்வையிலேயே மனதை பறி கொடுப்பவள், மயக்கும் புன்னகையை சிந்தினாள் என்ன தான் செய்வாள் பாவம்! அவனால் தனது முகத்தில் ஏற்பட்ட குங்கும வதனத்தை மறைக்க, மீண்டும் முதுகை காட்டியபடி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவஸ்தையாக நெளிந்து கொண்டே இருந்தவள், உறங்க வெகு நேரம் ஆனது. ஆனால் விஷ்வாவோ மனநிறைவோடு பல நாட்களுக்கு பிறகு, அன்று தான் நன்றாக உறங்கினான்.
அடுத்த நாள் அதிகாலையில் அவர்களது அறைக் கதவு வேகமாக தட்டப்படும் சத்தத்தில் தான் கண் விழித்தவன் விஷ்வா. திரும்பி நிலாவை பார்க்க, அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அன்னிச்சையாக அவனது இதழ்கள் புன்னகைக்க, மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில், அவளிடம் இருந்து விழிகளை திருப்பியவன், மணி நான்கு என்று காட்டியதை பார்த்தபடியே, யாராக இருக்கும் அதுவும் இந்த நேரத்தில் என்று நினைத்த படியே எழுந்து சென்று அறைக் கதவை திறக்க, வெளியே பதட்டத்தோடு நின்றிருந்தார் செல்லம்மா.
அவரை கண்டவுடன் அவரது பதட்டம் இவனுக்கும் தொற்றிக் கொள்ள,
“என்ன ஆச்சு ம்மா? அம்மா… அம்மாவுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே?”
“ தம்பி அது… அம்மா…”
அதற்கு மேல் அங்கு நிற்காமல் தனது அன்னையைக் காண அவர் அறை நோக்கி ஓடி இருந்தான் விஷ்வா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஒருவழியா நிலா வில்லன் கூட்டத்தை நெருங்கிட்டா.. அந்த இன்னொரு ஆள் யாரா இருக்கும் 🤔 விஷ்வா அம்மாவுக்கு என்னாச்சு..
ஆமாம் சிஸ்