Loading

அகிலாவும் இரண்டு நாள்கள் தனது கணவருடன் தன் வீட்டில் இருந்துவிட்டுத் தங்களது வீட்டிற்குச் சென்று விட்டாள்.

அவளுக்கு நாலாவது மாதம் பிறந்த பிறகு வாமிட்டிங் கொஞ்சம் குறைந்து இருக்க மயக்கமும் குறைந்திருந்தது.

நான்காவது மாதத் தொடக்கத்தில் ருத்ரனைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தாள்.

அவளைப் பார்த்துச் சிரித்த ருத்ரன், “என்ன அகி மா, உன் தங்கச்சி கல்யாணத்துக்கான வேலையை ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்க,

“அதைப் பத்திப் பேசலாம் என்றுதான் வந்தேன் மாமா” என்றாள்.

“நிச்சயம் பண்ணித் தேதியும் குறிச்சிட்டு, அவளை எத்தனை நாளைக்கு நம்ம வீட்டில் வைத்துக்கொண்டு இருக்கிறது? என்று கேட்டாள்.

அப்போது பாக்கியம் தான், “ஒரு வருஷம் போகட்டுமேடி… இப்போதான் ஒரு கல்யாணம் முடிஞ்சுச்சு. உனக்கும் வளைகாப்பு பார்க்கணும் இல்ல” என்றார்.

“ஒரு மருமகளை வச்சு சமாளிக்கவே அவன் அவனுக்கும் நாக்கு தள்ளுதாம். ஆனா, நீ மட்டும் எப்படி அத்தை, ஒரே வீட்டுக்குள்ள ரெண்டு மருமகளை வச்சு சமாளிக்கிற பாத்தியா? உன் தைரியத்தைப் பாராட்டணும்” என்று சிரிக்க,

“அடி சிறுக்கி, நீயும் உன் தங்கச்சியும் எங்க இருந்துதான் பேசக் கத்துக்கிட்டு வரிங்களோ?” என்றார்.

“என் மருமக ஒன்னும், உன்ன மாதிரியும், உன் தங்கச்சி மாதிரியும் வாயாடி இல்ல” என்று சிரித்தார்.

ருத்ரனைப் பார்த்த அகிலா, “அப்படியா மாமா, உன் பொண்டாட்டிக்குப் பேசத் தெரியாத ஊமையா? சொல்லவே இல்ல” என்று சிரித்தாள்.

ருத்ரன் முறைத்துக் கொண்டே “உள்ள தான்டி இருக்கா” என்று சொல்ல,

தனது வாயை மூடிக் கொண்டாள் அகிலா.

“என்ன அத்தை விளையாடுறியா? ஏற்கனவே நம்ம அதிரன் வீட்டில் எனக்கு நாலாவது மாசம் தொடங்கின உடனே கல்யாண வேலை ஆரம்பிச்சிடலாம், என்று பேசியிருந்தோம் தானே… அண்ணன் கல்யாணத்தப்பவே, இப்ப என்ன நீ மாத்திப் பேசுற?” என்று தனது அத்தையிடம் மல்லுக்கு வர,

“சும்மா சொன்னேன்டி. அண்ணன் ஏற்கனவே பேசிட்டுப் போயிட்டாரு. இன்னும் ஒரு மாசத்துல எல்லா வேலையும் முடிச்சிடலாம்னு சொன்னாரு” என்றார் பாக்கியம்.

“சரி” என்று விட்டுத் தமிழுடன் ஸ்கூலுக்குக் கிளம்பி விட்டாள்.

வீட்டில் உள்ள அனைவரும் அகிலாவுக்கு வாமிட்டிங் சென்ஸ் இருக்கு என்று லீவ் போடச் சொல்ல,

“நான் குழந்தை பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு லீவ் போட்டுக் கொள்கிறேன், அதுவரை என்னால் வீட்டில் இருக்க முடியாது” என்று விட்டாள்.

ஸ்கூலிலும் தமிழ் தன்னால் முடிந்த வரை அகிலாவைப் பார்த்துக் கொண்டாள்.

காயத்ரி திருமண வேலைகளும் வேகமாக ஓட ஆரம்பித்தது.

அவ்வப்போது காயத்ரி தன்னுடைய குறும்புகளையும் அதிரனிடம் காட்டிக் கொண்டு தான் இருந்தாள்.

காலேஜ் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது அவளாகவே அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் அதிரனை வம்பு இழுத்து, எதையாவது பேசி விட்டு வீட்டிற்குக் கிளம்பி விடுவாள்.

வீட்டிற்குச் சென்ற பிறகு அதிரன் போன் செய்தாலும், எடுக்காமல் போக்குக் காட்டுவாள்.

நாள்கள் வேகமாகச் சென்று காயத்ரி, அதிரன் திருமண நாளும் வந்தது.

தமிழ், தனா, அகி மூவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டு இருக்க, முகூர்த்த நேரம் நெருங்க இருவரையும் மணமேடையில் உட்கார வைத்தார்கள்.

“நான் தான் அண்ணி” என்று சொல்லி தனா அதிகமாகவே பொறுப்புகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய, தோழிகள் இருவரும் தனாவே செய்யட்டும் என்று ஒரு சில வேலைகளை அமைதியாக விட்டுக் கொடுத்து விட்டார்கள்.

முகூர்த்த நேரம் நெருங்கத் தாலியை ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வரச் சொல்லிக் கொடுக்க,

தனா “நீங்க ரெண்டு பேருமே போயிட்டு வாங்கிட்டு வாங்க” என்று சொன்னாள்.

அதன் பிறகு அகிலாவும், தமிழும் அனைவரிடமும் தாலியை எடுத்துக் கொண்டு சென்று ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

அப்போது அகிலா தனது தோழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி லூசு, என்னை எதுக்கு இப்படி முழுங்குற மாறிப் பாத்துட்டு இருக்க?” என்று தமிழ் கேட்க,

“இல்ல தமிழ், உன் மூஞ்சில எதோ வித்தியாசமா தெரியுது. ஆனா என்னனு தான் புரியல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்று விட்டு “நேரம் ஆகுது” என்று மேலே படி ஏறினார்கள்.

இருவரும் பேசிக் கொண்டே படி ஏற, தமிழ் புடவை தடுக்கிக் கீழே விழச் சென்றாள்.

வேகமாக அவளைத் தாங்கிப் பிடித்த அகிலா, “தமிழ்!” என்று லேசாகக் கத்த,

“ஒன்னும் இல்ல வாடி” என்று விட்டுத் தனது தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு மணமேடைக்கு அருகில் வந்து நின்றார்கள்.

தாலியை ஐயரிடம் கொண்டு வந்து கொடுக்க,

அதிரனும் பெரியோர்களைப் பார்த்துவிட்டுச் சுற்றத்தார் ஆசிர்வாதத்துடன் காயத்ரி கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான்.

ஒவ்வொரு சடங்காக நடந்தேறியது.

அனைத்துச் சடங்குகளும் முடிய, ஐயர் இறுதியாக மெட்டி கேட்க, அதை எடுக்கச் சென்ற தமிழ் மயங்கிக் கீழே விழ,

அவளைத் தாங்கிப் பிடித்த அகிலா, “தமிழ்!” என்று அவளது தாடையில் தட்ட, சுற்றி இருந்த பெரியோர்களும் தமிழுக்கு என்னவோ ஏதோ என்று கூறினார்கள். மணமேடையில் இருந்து எழுந்த காயத்ரி, “தமிழ் என்னடி ஆச்சு?” என்று அவளது அருகில் வர,

“காயூ, ஒன்னும் இல்லடா… நீ போய் உட்காரு” என்றாள்.

“என்ன அகிகா விளையாடுறியா? இப்படி மயக்கம் போட்டு விழுறா, நீ என்னைப் போய் மணமேடையில் உட்காரச் சொல்ற” என்று முறைத்தாள்.

“அவ சாப்பிடலயா? அதான் மயக்கம் போட்டு விழுந்துட்டாளா? நைட்டு சாப்பிட்டாளா, இல்லையா” என்று கேட்டாள் காயு லேசான அழுகையுடன்.

“ஒன்னும் இல்லடி சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேலையில் மும்முரமாக இருந்த ருத்ரனும், சரவணனும் அருகில் வர,

“விழி மா” என்று ருத்ரன் தமிழ் தாடையில் தட்ட,

“மாமா, தண்ணி எடுத்துட்டு வா… வேற ஒன்னும் இல்ல” என்றாள்.

அப்பொழுது அங்கு கல்யாணத்திற்கு வந்திருந்த ஒரு டாக்டர், தமிழ் மயங்கியதால் மேடை ஏறி என்னவென்று பார்க்க,

தமிழைப் பரிசோதித்து விட்டு மாசமாக இருப்பதாகச் சொல்ல, ருத்ரனுக்குத் தன்னை மீறிக் கண்கள் கலங்கியது. காயு வேகமாகத் தனது ருத்ரன் மாமாவைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.

“ஒன்னும் இல்லடா காயூ மா” என்று அவளது தலையைக் கோதிய ருத்ரன் காயுவின் நெற்றியில் முத்தமிட, அதிரன் சிரித்தான். தனா சிரித்த முகமாக தனது அண்ணனை இன்னொரு பக்கம் வந்து கட்டிக் கொள்ள,

தமிழ் கண்ணைத் திறக்கும் போது, தன்னுடைய கணவன் தனது தங்கையையும், தனது மச்சினிச்சியையும் ஆளுக்கு ஒரு பக்கம் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு இருப்பதைத்தான் பார்த்தாள்.

இருவரையும் பார்த்துவிட்டு அமைதியாக எழுந்து நிற்க, அகிலா தான் முறைத்துக் கொண்டு நின்றாள்.

“விடு அகி” என்று சரவணன் சொல்ல,

“அது எப்படி அண்ணா, நான் இப்போ அவ தாலி எடுத்துட்டு வரும்போது கூட கேட்கிறேன், வாயவே திறக்கல” என்று முறைத்தாள்.

தமிழ் ஒன்றும் புரியாமல் “என்னடி கேட்ட?” என்று கேட்டாள்.

“ஆமாம், உனக்கு ஒன்னும் தெரியாது பாரு.”

“லூசு மாதிரிப் பேசாத அகி, என்னன்னு சொல்லிட்டுத் திட்டு” என்றாள்.

“உனக்கு இந்த மாசம் தேதி தள்ளிப் போய் இருக்கா இல்லையா?” என்றவுடன் கண்கள் மின்னத் தமிழ் ருத்ரனை இப்போது திரும்பிப் பார்க்க,

ருத்ரன் தனக்கும் நினைவில் இல்லை என்பது போல் மண்டை ஆட்ட,

“கல்யாண வேலையில பிஸியா இருந்தா எப்படி மேடம் தெரியும்?” என்று முறைத்தாள் அகி.

“சரி விடு அகிமா, உனக்கும் எனக்கும் தெரியும் தானே, அப்புறம் என்ன?” என்றான் சரோ.

“அப்போ உங்க ரெண்டு பேருக்குமே தெரியுமாடா, என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று ருத்ரன் வேகமாகச் சண்டைக்கு வர,

“ஏன் மச்சான், முன்னாடியே சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?” என்று சரோ உரிமையாகச் சண்டைக்கு வர,

“போடா லூசு” என்று விட்டுத் தனது மச்சானைக் கட்டிக்கொண்டு அழுதான்.

அதன் பிறகு அனைத்தும் நல்லபடியாக முடிய,

அதிரன் வீட்டுக்கு காயத்ரியை அழைத்துச் சென்று அங்கும் அனைத்தும் நல்லபடியாக முடிந்த பிறகு, காயத்ரியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு தங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

தங்கள் வீட்டிற்கு வந்தவுடன் ருத்ரன் வேகமாகத் தமிழை இறுக்கிக் கட்டி அணைத்தான்.

“மாமா பாப்பா…” என்று சொல்ல,

“உண்மையாவே உனக்குத் தெரியாதாடி” என்று அவளது கண்ணை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்க,

“லூசா மாமா நீ, தெரிஞ்சு இருந்தா உன்கிட்ட கூடச் சொல்லாம இருந்திருப்பேனா? அகிலா காலையில கேக்கும் போது கூட எனக்குத் தெரியல. உண்மையா தான்” என்று லேசாகக் கண்கள் கலங்கச் சொல்ல,

அவளைப் பார்த்துச் சிரித்த ருத்ரன் தனது கண்களை அவளது கண்களுடன் கலக்க விட்டு, அவளை முழுவதாக ஆட்சி செய்ய ஆரம்பித்தான்.

அன்றைய பொழுது அப்படியே கழிய,

இங்கு காயத்ரிக்கு இரவு சடங்கு செய்யத் தனாவும், அகிலாவும் அவளுடன் இருந்தார்கள்.

தனா தனது தோழியைக் கட்டி அணைத்து விட்டு, “மேடம், நாளையிலிருந்து என் பங்கா இருப்பியா?” என்று சிரிக்க.

“லூசு, நான் எப்பவும் உன்னோட பங்கு தாண்டி” என்று சிரித்தாள் காயுவும்.

அப்போது தொண்டையைக் கனைத்த அதிரன் இருவரையும் பார்க்க, இருவரும் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க,

“என்ன தனா, உன் பிரண்டுகிட்டப் பேசி முடிச்சிட்டனா, கொஞ்சம் வெளியே போனா நல்லா இருக்கும். இது எனக்கான நேரம் என்று நினைக்கிறேன்” என்று சிரிக்க, தனா சிரித்த முகமாக வெளியில் கிளம்ப,

அவனை முறைத்த காயூ “ஏன், இனிமே இந்த வீட்டில், இந்த ரூம்ல தான இருக்கப் போறேன். அவ என்கிட்டப் பேசிட்டுக் கொஞ்ச நேரம் கழித்துப் போனா உங்களுக்கு என்ன வந்துச்சு?” என்று சொல்ல,

“வாயாடி, எந்த நேரமும் பேசிட்டு இருக்காதடி” என்று அவள் தலையில் கொட்டி விட்டுத் தனா வெளியில் சென்றுவிட்டாள்.

அதிரன் சிரிப்புடனே அவளது அருகில் வந்து அவளது உதட்டைப் பிடித்து, “இப்படி விடாமப் பேசுற உதட்டுக்கு ஏதாச்சும் தண்டனை கொடுக்கணுமேடி” என்று விட்டுத் தனது வேலையில் இறங்கி இருந்தான்.

மறுநாள் காயத்ரியை மறு வீடு அழைக்கப் பெரியவர்கள் வந்திருக்க,

காயத்ரிக்கு தனது அக்காவை விட்டு இருக்க மனம் இல்லை.

அதும் இந்த மாதிரி நேரத்தில்.

ஆனால் திருமணம் நடந்த பிறகு அதுவும் ஆரம்பத்திலே தான் இங்கு தங்குவது நல்லது அல்ல என்று அவள் யோசிக்க, அதிரன் சிரித்த முகமாக “நம்ம ரெண்டு நாள் சகல வீட்டுல இருந்துட்டு, ஒரு நாள் உங்க வீட்ல இருந்துட்டு அதுக்கப்புறம் நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றான்.

அதிரனை வேகமாகக் கட்டிக்கொண்டு, காயு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்த..

“மேடம், நம்ம ஹால்ல இருக்கோம். அது ஞாபகத்துல இருக்கா?” என்றவுடன் தனா வேகமாகச் சிரித்து விட்டாள்.

“நீ எப்படி நல்ல சேதி சொல்லுவ?” என்று காயத்ரி தனாவைப் பார்த்துக் கேட்டாள்.

தனாவின் கண்கள் சரவணன் பக்கம் செல்ல, சிரித்த முகமாக “நீ சொல்லுடா தங்கம், அதுக்கப்புறம் அண்ணன் சொல்றேன். என்ன அவ்வளவு அவசரம் இப்ப நமக்கு?” என்றான்.

இப்பொழுது காயத்ரி முறைத்துக் கொண்டு சரவணனைப் பார்க்க,

“முதல்ல படித்து முடிங்க, இரண்டு பேரும் அதுக்கப்புறம் அதப்பத்திப் பேசலாம். ஏற்கனவே இருக்க ரெண்டு பேரையும் வச்சு சமாளிக்கணும்” என்று சிரித்தான். அவன் சொல்வதும் நியாயம் என்று பட காயத்ரி சிரித்து விட்டு அமைதியாகி விட்டாள்.

இரண்டு நாள்கள் தன் அக்காவிற்குப் பிடித்த அனைத்தையும் தன் கையால் செய்து கொடுக்க,

தமிழ் தான் உன்னை மறு வீட்டுக்கு அழைத்து இருக்கேன்டி, நான் உனக்குச் செஞ்சு போடணும். நீ எனக்குச் செஞ்சு போடுற” என்று சிரிக்க,

“உண்மையாவே எனக்கு உனக்கு நாள் தள்ளிப் போனது தெரியல தமிழ்” என்று கண்கள் கலங்கச் சொல்ல,

“லூசு, விடு” என்று ருத்ரன் அவளது தலையில் கொட்டினான்.

நாள்கள் வேகமாகச் சென்றது. காயத்ரி திருமணம் முடிந்து காலேஜ் செல்ல ஆரம்பித்தாள்.

அதிரன் ஒரே வார்த்தையாகச் சொல்லி விட்டான்.

“நம்ம வீட்டுல இருந்து நீ தனாவை அழைச்சிட்டு வர ஒரு பத்து நிமிஷம் தான் ஆகும். அங்க போய் அவளை நீயே கூட்டிட்டுப் போயிட்டு வா. உங்களுக்கான நேரம் அதுவாதான் இருக்கும், என்னதான் ரெண்டு பேரும் காலேஜ்ல பார்த்துக்கிட்டாலும், உங்களுக்கு அங்க நேரம் பெருசா கிடைக்காது.” என்று

அதன் பிறகு இருவரும் ஒன்றாகவே காலேஜ் சென்று வந்தார்கள்.

அகிலாவிற்கு ஏழாவது மாதம் தொடங்கி இருந்தது. தமிழுக்கு 4 மாதம் தொடங்கி இருக்க,

தமிழ், அகிலாவின் வளைகாப்புக்கும் வரக்கூடாது. அகிலாவையும் அதிகமாகப் பார்க்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லிவிட,

தமிழ் அகிலா இருவரும் சிறிது கூட வருத்தப்படவில்லை.

அப்பொழுது தனா தான் தான் வாய்விட்டுக் கேட்டாள்.

“ரெண்டு பேரும், உங்க ரெண்டு பேத்துக்கும் எதையும் எடுத்துக்கட்டிச் செய்ய முடியாது என்று கொஞ்சம் கூட ஃபீலிங் இல்லையா?” என்று கேட்க,

இருவருமே சிரித்துக் கொண்டே எங்களை மாதிரியே எங்க புள்ளைங்களும் பிரண்ட்ஸா வளருங்க” என்று சிரித்தார்கள்.

“அதானே பார்த்தேன்” என்று சிரித்த தனா சிரித்த முகமாக அகிலா வளைகாப்புக்குத் தேவையான அனைத்தையும் செய்தாள்.

அகிலாவின் வளைகாப்பும் நல்ல முறையில் முடிந்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்