Loading

தமிழ் அந்தக் கவரைப் படித்தவள், “லூசு என்ன பண்ணி வச்சிருக்க?” என்றாள். கண்கள் கலங்க அகியைப் பார்த்து.

 

“எதுக்கு, மேடம் இப்ப இவ்வளவு கோவப்படுறீங்க?” என்று கேட்க,

 

“இல்லடி எதுக்கு இப்ப இவ்வளவு செலவு?”

 

“எது செலவா?”

 

“அப்போ உன் வாழ்க்கையில் எனக்கு எந்த உரிமையும் இல்லையா?” என்றாள்.

 

“லூசு மாதிரிப் பேசாதே அகி. நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்று தமிழ் கேட்டாள்.

 

“பின்ன நீ கேட்பது அப்படித்தானே இருக்கு.”

 

“இல்லடி இது செலவு இல்லையா?”

 

“அப்படி என்னதான் இருக்கு ஓவரா பில்டப் குடுக்குறீங்க?” என்று விட்டு காயு அதைப் பிரித்துப் படித்தாள்.

 

பெரியவர்களுக்கும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

அதில் ருத்ரன், தமிழ் இருவரும் ஹனிமூன் செல்வதற்கு டிக்கெட் இருந்தது.

 

அதுவும் ஃபாரின் செல்வதற்கு. பெரியவர்களே “எதற்கு அவ்வளவு தூரம்? இங்கயே ஏதாவது பார்த்திருக்கலாம் இல்ல” என்று அகியைப் பார்த்துக் கேட்க,

 

“ஏன்? இங்க இருக்க ஊரை அவங்களால எப்பவுமே சுத்திப் பார்க்க முடியாது, பாருங்க” என்று பெரியவர்கள் அனைவரையும் பார்த்துக் கேட்டவள்,

 

தமிழின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, “என்னுடைய தமிழுக்கு வெளியே போகனும் என்று தான் ஆசை இருக்கு. அது எனக்குத் தெரியும்” என்று சிரிக்க,

 

காயுவுமே தமிழின் இன்னொரு தோளில் கையைப் போட்டவள், “எனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்” என்று சிரித்தாள்.

 

இருவரது தலையிலும் முட்டிய தமிழ் அமைதியாக இருக்க, ருத்ரனின் பார்வை தமிழ் பக்கம் சென்று திரும்பியது.

 

‘நம்ம இவர்கிட்ட இதைப் பத்திச் சொல்லலனு இதுக்கும் தனியா கோச்சுப்பாரோ?’ என்று யோசித்தாள்.

 

பிறகு ‘பார்த்துக் கொள்ளலாம்’ என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

 

அதன் பிறகு நேரம் ஆவதை உணர்ந்து அனைவரும் வீட்டிற்குச் செல்வதற்கு வண்டியில் ஏறினார்கள்.

 

பஸ்ஸில் முதலில் ஏறிய தமிழும் ருத்ரனும், ஃபர்ஸ்ட் சீட்டில் உட்கார்ந்து இருக்க,

 

அப்பொழுது தான் ஏறிய காயுவின் கையைப் பிடித்த ருத்ரன், “சில்வண்டு, நீ எல்லாம் எதுவும் தர மாட்டியா?”

 

“நீ, உன் பிரண்டு ரெண்டு பேரும் எந்த கிப்ட்டும் தரல” என்றான்.

 

அவனைப் பார்த்து முறைத்து விட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே, “உன் மச்சானும், உன் மச்சினிச்சியும் வேலைக்குப் போறாங்க தருவாங்க. நானும் என் ஃப்ரண்ட்டும் எந்த வேலைக்குப் போறோம்? எங்ககிட்ட எங்க காசு இருக்கு? என்று கேட்டாள்.

 

அவளது கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு “உனக்கும், உன் பிரண்டுக்கும் காசு இல்லை, அப்படித்தானே”

 

“நாங்களே காசுக்கு உங்ககிட்ட தான் பிச்சை எடுக்கிறோம்” என்று சிரித்தாள்.

 

“அது சரி… அப்பக் காசு இல்லாம தான் காலேஜ் கட் அடிச்சுட்டு தியேட்டருக்குப் போறீங்க. வாரத்துல ஒரு நாளு உங்க காலேஜுக்கு அடுத்த சந்துல இருக்க டீக்கடையில டீ குடிக்கறீங்க… அதுக்கு அடுத்து ரெண்டு கடை தள்ளி இருக்க ஜூஸ் கடையில ஜூஸ் குடிக்கிறது. ஐஸ்கிரீம் சாப்பிடுவது, ஃபலூடா சாப்பிடறது…”என்றான்.

 

“இந்த வேலையை எல்லாம் பாக்குறாங்களா?” என்று தமிழ் கேட்க,

 

நாக்கை கடித்தான் ருத்ரன். காயத்ரி இடுப்பில் கையை வைத்து முறைத்துக் கொண்டு நின்றாள் ருத்ரனை.

 

“சாரி காயுமா” என்றான்.

 

“அதான் போட்டுக் கொடுத்துட்டியே மாமா, அப்புறம் என்ன?”

 

“உங்களுக்கு ஏதுடி காசு இதுக்கெல்லாம்?” என்று கேட்க,

 

“அதான் அடிக்கடி நீயே காசு தர… அப்புறம் என்னைக் கேள்வி கேட்கிற?”

 

“காசு கொடுத்தது உங்க செலவுக்கு. இப்படி ஊர் சுத்த இல்ல” என்றாள்.

 

தமிழ் ஊர் சுத்த என்றவுடன் ருத்ரனுக்குக் கோவம் வந்து, “அவங்க ஒன்னும் ஊர் சுத்தல தமிழ். அவங்க செலவுக்கு நீ கொடுத்தது எதுக்கு? .காலேஜுக்கு பீஸ் கட்டவா? இந்த மாதிரி விஷயத்துக்காகத் தான… அவங்களோட சின்னச் சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத் தானே…

 

அவங்க விருப்பப்பட்டதை வாங்கிச் சாப்பிடத் தானே. மத்தப்படி அவங்களுக்கு வேற என்னடி செலவு இருக்கு?” என்றான்.

 

தமிழ் அதன் பிறகு அமைதியாகி விட்டாள் .காயத்ரி எதுவும் பேசாமல் செல்ல,

 

“சில்வண்டு, கேட்டதுக்குப் பதில் சொல்லாம போற?” என்றான்.

 

“அதான், கோர்த்து விட்டு வேலை பார்க்கிறாயே… அப்புறம் என்ன மாமா? சந்தோஷமா இரு” என்று விட்டுப் போய் தனது தோழியுடன் உட்க்கார்ந்து கொள்ள,

 

சரவணன் கையில் இருந்த அமுதனைக் கேட்டான் ருத்ரன்.

 

அமுதனும் வேகமாக வந்து ருத்ரன், தமிழ் இருவருக்கும் இடையில் உட்கார்ந்து கொண்டான்.

 

சிறிது தூரம் வண்டி சென்ற பிறகு சரவணன் தான் “மச்சான், அமுதனைத் தா…” என்றான்.

 

“இல்லடா இருக்கட்டும்” என்றான் ருத்ரன்.

 

அவன் எங்க கூட இருக்கட்டும். மச்சான் கொடு” என்ற சரோவின் ஒற்றை வார்த்தையில் அமுதனை அவனது கையில் கொடுத்த ருத்ரன், தனது மச்சானை அமைதியாகப் பார்த்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.

 

அவனது கண்கள் தன்னை மீறிக் கலங்கி இருந்தது.

 

அவன் வயதை ஒத்தவன். தன்னுடன் சிறுவயதில் இருந்து ஓடி ஆடி விளையாடியவன். தனக்குக் கல்யாணம் ஆகி மனைவியுடன் சந்தோஷமாக இருக்க,

 

தனது நண்பன் மட்டும் தனியாக இருப்பதை எண்ணி வருந்திய ருத்ரன் தன்னை மீறி அவனது கண்கள் கலங்கி இருக்க,

 

“அவனது கண்ணீர் கீழே விழுவதற்கு முன்பாகவே அவனது கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்த தமிழ், “ப்ளீஸ் மாமா சீக்கிரம் சரியாகும்” என்றாள்.

 

அவளது கையை மெதுவாக எடுத்து விட்ட ருத்ரன் “எப்படி சரியாகும்டி. நீயே சொன்ன, பெரியவங்க யோசிக்கணும். கொஞ்சம் அமைதியா இருங்கனு. இப்ப ஒரு மாசத்துக்கு மேல ஆகி இருக்கு தமிழ். விளையாடாதீங்கடி. அப்புறம் நான் ஏதாவது பேசிட்டேன்னு சொல்லுவீங்க” என்று விட்டு அவன் இந்தப் பக்கம் திரும்ப,

 

சரவணன் தான் “ருத்ரா…” என்று அழைத்தான்.

 

கண்கள் கலங்கத் திரும்பிப் பார்த்த ருத்ரன் சரவணன் கண்ணை மூடித் திறக்க, ருத்ரன் கண்ணை மூடித் திறந்து விட்டு இந்தப் பக்கம் தமிழ் தோளில் சாய்ந்து கொண்டான்.

 

“உன் மச்சான் சொன்னா தான் இல்லை” என்று சிரித்தாள்.

 

“உன்னை விட அவனுக்கு இம்பார்ட்டண்ட் தரேன் என்று நினைக்கறியா?” என்று கேட்டான்.

 

அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு “நான் அப்படி என்னைக்குமே நினைக்கக் கூட மாட்டேன் மாமா, அப்படி உனக்குத் தோணுதா, என்ன?” என்று அவனது தலையோடு தலை சாய்த்தாள்.

 

மாலை போல் அனைவரும் வீட்டிற்கு வந்திருக்க,

 

அசதியில் அனைவருக்கும் காயத்ரி டீ போட்டுக் கொடுக்கக் குடித்துவிட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

இரவு உணவு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க,

 

காயத்ரியும், தனாவும் தாங்களே செய்வதாகச் சொன்னார்கள்.

 

“பரவாயில்லை, சின்னப் புள்ளைங்க என்று நினைச்சதுக்கு வேலை செய்ய எல்லாம் பழகிடுச்சு” என்று முனுசாமி சொல்ல,

 

தனது பெரியப்பாவைப் பார்த்துச் சிரித்த தமிழ், “ஏன், பெரியப்பா நம்ம பிள்ளைகளுக்கு எந்த வேலையுமே தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களோ?”

 

அப்படி இல்ல தமிழ். இரண்டும் சின்னப் பிள்ளைகளா நம்ம வீட்டையே சுத்திச் சுத்தி வந்துச்சுங்களே, அதனாலதான்” என்றார்.

 

“அவங்க ரெண்டு பேத்துக்குமே வீட்டு வேலை எல்லாமே தெரியும். உங்க தங்கச்சியையும், அங்க உங்க தம்பியையும் கேளுங்க” என்று சொல்ல,

 

இருவருமே சிரித்த முகமாக இருக்க,

 

“செய்ய மாட்டாங்கனு கிடையாது. நம்ம வேலை வைக்காமல் இருக்கோம். போற இடத்துல ரெண்டு பேரும் வேலை செய்வாங்க” என்று விட்டு அமைதியாகி விட,

 

முனுசாமிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

“தமிழு, நீ என்ன ஆத்தா சொல்ல வர?” என்றார் முனுசாமி.

 

“பெரியப்பா, அது உண்மையாவே சாதாரணமா என் வாயிலிருந்து வந்த வார்த்தை பெரியப்பா” என்று விட்டுத் தமிழ் கண்கள் கலங்கத் தன்னுடைய ரூமுக்குச் செல்ல,

 

அவள் இரண்டு அடி எடுத்து வைக்கும் பொழுதே “தமிழ்…” என்று முனுசாமி அழைக்க,

 

“இல்ல பெரியப்பா” என்று சொல்ல,

 

“நில்லுடா அப்பா உன்கிட்டக் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு” என்றார்.

 

“சரி” என்று தன் கண்ணீரைத் துடைத்து விட்டு தமிழ் ஹாலில் நிற்க,

 

“நீ என்ன பண்ணலாம்னு நினைக்கிற? நீ தான் தமிழ் சொல்லணும்”

 

“நானா? நான் என்ன பெரியப்பா சொல்லணும்”

 

“நீதானடா பொண்ணு தரப் போற…”

 

 

“பெரியப்பா வந்து பொண்ணு கேட்டா பொண்ணு கொடுத்துருவல்ல, ஏதும் யோசிக்க மாட்ட இல்ல” என்றவுடன், தன்னையும் மீறிக் கண்ணீர் வர வேகமாகச் சென்று தனது பெரியப்பாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

 

“பெரியப்பா உண்மையாவா?” என்றாள்.

 

அவளை நிமிர்த்தி அவளது நெற்றியில் இதழ் பதித்த முனுசாமி, “உண்மையாவே தாண்டா தங்கம். இன்னைக்கு தான் சொல்லணும்னு நினைச்சேன். இன்னைக்கு நல்ல நாளும் கூட. கோவிலுக்குப் போயிட்டு வந்து சொல்லிக்கலாம் என்று இருந்தேன்.

 

அதுக்கு முன்னாடி உன் மாமனுக்கும், அண்ணனுக்கும் வண்டியில நடந்த விஷயத்தை நான் பார்த்தேன். அவங்க பேசிக்கல தான். ஆனாலும், அவங்க கண்கள் பேசிகிட்ட கதையும் எனக்குப் புரிஞ்சுச்சு. நம்ம பேசி முடிவு பண்ணலாம்.

 

உனக்கு இப்போ நம்ம தனாவை சரவணனுக்குக் கட்டிக் கொடுக்க விருப்பமா? படிச்சிட்டு இருக்க பொண்ணு, அந்த ஒரு காரணத்துக்காகக் கேட்கிறேன் டா. வேற எதுவும் இல்லை” என்றார். அவளது கையைப் பிடித்துக் கொண்டு.

 

தனாவை ஒரு சில நொடி பார்த்துக் கொண்டு நின்றாள் தமிழ்.

 

தனா தனக்கு இப்பொழுது திருமணம் வேண்டுமா? இல்லையா? என்று கூடப் புரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க, திரும்பித் தனது அண்ணன் சரவணனைப் பார்த்தாள்.

 

அவன் கண்ணை மூடித் திறந்தவுடன், வேறு யாரையும் திரும்பியும் பார்க்காத தமிழ், “முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரமாகவே முடிச்சிடலாம் பெரியப்பா. பெருசா பண்ணாலும் சரி. இல்ல, சிம்பிளா முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணாலும் சரி. அது பெரியவங்க உங்க விருப்பம். முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரமா முடிச்சா எனக்குப் போதும்” என்று விட்டு அமைதியாக விலகி நிற்க,

 

முனுசாமி மேற்கொண்டு பேச பாக்கியம், செல்வம், தனத்தைப் பார்த்தார்.

 

தனது மனைவியையும் பார்க்க,

 

அனைவரும் சிரித்த முகத்துடன் இருந்தார்கள்.

 

தனா மட்டும் குழப்பமான முகத்துடன் நிற்க அவளது அருகில் வந்த அகி, “என்னடி யோசனை?”

 

“ஏன்? உனக்கு எங்க அண்ணனைப் புடிக்கலையோ?” என்று கேட்டாள்.

 

அகிலாவின் கையைக் கெட்டியாகப் பிடித்த தனா, “அண்ணி எனக்கு மாமாவைப் பிடிக்காது என்று நான் எப்போ சொன்னேன்? ஆனா…” என்றாள்.

 

“என்னடி?”

 

“ஆனா, இப்போ கல்யாணம் வேணாம்னு யோசிக்கறியா? அப்படி ஏதாவது இருந்தால் சொல்லு தனா” என்று கேட்க,

 

“எனக்கு இந்தக் கல்யாணமே வேணுமானு யோசனையா இருக்கு அண்ணி…”

 

“கல்யாணம் வேணாம்னு யோசனையா? இல்ல, எங்க அண்ணன் வேணாம்னு யோசனையா?” என்ற உடன் அகிலாவின் கை இறுக்கம் கூடியது.

 

“அண்ணி…” என்று சொல்ல,

 

எதுவும் பேசாத அகிலா, அவளது கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு நகர்ந்து நின்று விட்டாள்.

 

தனாவிற்கு தான் அழுகையாக இருந்தது.

 

‘தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதைக் கூட முழுதாகக் கேட்காமல் இப்படி விலகிப் போகும் அவரிடம் எண்ணத்தைச் சொல்லிப் புரிய வைப்பது’ என்று புரியாமல் ‘இதை நான் யாரிடம் சொல்லிப் புரிய வைப்பது?’ என்று யோசித்தாள் தனா.”

 

அகிலாவின் அருகில் வந்த காயு, “ஏன் அக்கா என் பிரண்டு கல்யாணமே வேணான்னு யோசிக்கிறானு தான சொன்னா. அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்குமோ?”என்று கேட்டாள்.

 

“நான் எப்படி அவளைத் தப்பா நினைச்சேன்னு சொன்னேன்?”.

 

 

“சின்னப் புள்ள அவ மனசுல நிறைய விஷயத்தை நம்மளே கொண்டு போய் வலியை தான் ஏத்தி வச்சு இருக்கோம். அவ அண்ணனைப் பிடிக்காமல் வேணாம்னு சொல்லலையே… இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தா அத்தை, மாமாவுக்கு ஏதோ ஆயிடுமோனு பயப்படுறா. சின்னப் புள்ள மனசுல அப்படி ஒரு பயத்தை விதைத்தது நாங்க தானடி” என்று சொல்ல,

 

அகிலாவின் கையைத் தட்டிக்கொடுத்த காயு, அவளே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுவா அக்கா… இதப் பத்தி தமிழ் கிட்டயும் இல்ல, யார்கிட்டயும் பேசாத… முக்கியமா மாமா கிட்ட” என்றாள் காயு. சரி என்று கண்ணை மூடி திறந்தாள் அகிலா..

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்