Loading

அகிலா தான், “டேய் அண்ணா, மாமா என்ன சொல்லிட்டுப் போகுது? அப்போ மாமாவுக்கு…” என்று விட்டுத் தன் அண்ணனைப் பார்க்க,

 

அவளைப் பார்த்துக் கண் அடித்த சரோ, “நான் எப்படி அகிலா உன் மாமா கிட்டச் சொல்லாம இருப்பேன். இதுவரைக்கும் எதையாவது மறைச்சிருக்கேனா? என் மச்சான் கிட்ட இதுவரைக்கும் எந்த விஷயத்தையும் மறைச்சதில்லை.”

 

“என்னடா சொல்ற? அவனோட தங்கச்சி, அப்படி இருந்துமா?”

 

“அவன் தங்கச்சிக்கு தான் அவன் அண்ணன். எனக்கு என் மச்சான் தான… என் மச்சான் கிட்ட எதையும் நான் மறைச்சது இல்லை.”

 

“அப்புறம் ஏன்?”

 

“என்ன அகிலா, உன் கிட்டச் சொன்னதுதான், கொஞ்ச நாள் ஆகட்டும்.”

 

“அண்ணா, மாமாவே சொல்லிட்டுப் போதே.”

 

“அவன் சொல்லிட்டுப் போகட்டும், அவன் சொல்றதுக்காக…”

 

“எதையோ பண்ணு. ஆனால், நீ இப்படியே இருக்கிறது நல்லதுக்கு இல்லை. அவ்வளவு தான் சொல்லுவேன்” என்று விட்டு அகிலா தனது கணவன் வீட்டோடு செல்ல,

 

திருமணம் நல்ல முறையில் முடிந்ததால், அகிலா வீட்டில் இருந்து அனைவரும் சென்று அகிலாவைப் புகுந்து வீட்டில் விட்டுவிட்டு வந்தார்கள்.

 

அகிலா தைரியமாக என்னவோ மகியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஆனால் அவனது வீட்டிற்குள் சென்றவுடன் இதுவரை தனிமையில் மகியை அவள் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

இனி அவனுடன் ஒரே ரூமில் தனியாக என்பதை யோசிக்கும் பொழுதே அவளுக்கு கை கால்கள் நடுங்கியது.

 

கோதையிடம் தினமும் பேசத்தான் செய்தாள். அவர் என்னவோ நன்றாக தான் பேசினார். குழந்தை அமுதன் கூட அகிலாவிடம் நன்றாக தான் பேசினான். இந்த வருட ஆரம்பத்தில் தான் அவனைப் பள்ளியிலும் சேர்த்திருக்க,

 

அதுவும் அகிலா தாங்கள் வேலை செய்யும் பள்ளியிலேயே சேர்க்கச் சொல்லி இருந்தாள்.

 

தன்னுடனே அழைத்துக் கொண்டு சென்று, அழைத்து வருவதாகச் சொல்ல,

 

கோதை தான், “உன் கூட அழைச்சிட்டுப் போய் அழைச்சிட்டு வரலாம் சரிப்பட்டு வராது மா. அதை நான் பாத்துக்குறேன். ஆனா, நீங்க வேலை செய்ற ஸ்கூலுக்கு வரட்டும் மா” என்று விட்டு அமைதியாகி விட்டார்.

 

இரவு வரை எப்படியோ ஹாலில் நேரத்தை ஓட்டி விட்டாள் அகிலா.

 

இரவு ரூமுக்குள் கொண்டு போய்விட, “அத்த தம்பி…” என்று கேட்க,

 

“அமுதன் என் கூடத் தூங்கட்டும். நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க. அவன் உன் மகன் தான், நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா, என் மகனுடைய வாழ்க்கையை நானும் பார்க்கணும்” என்று விட்டு அமைதியாகி விட,

 

ஒரு சில நொடி நின்று திருதிருவென முழித்த அகிலா, எப்பொழுதாக இருந்தாலும் போய் தானே ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ரூமுக்குள் சென்றாள்.

 

அகிலா வருவாள் என்று எண்ணிய மகி கையைக் கட்டிக் கொண்டு நடந்து கொண்டு இருக்க,

 

அகிலா ‘இவரை எப்படிச் சமாளிப்பது?’ என்று புரியாமல் ரூமுக்குள் வந்தவள் ஒரு சில நொடி அமைதியாக நின்றாள்.

 

அவளைப் பார்த்து மகி “ஏன்? விடிய விடிய நின்னுக்கிட்டே இருக்கலாம் என்று நினைச்சுட்டு இருக்கீங்களோ, மேடம்” என்று சொல்ல,

 

“சார் அது” என்று இழுக்க,

 

“அவளைப் பார்த்து முறைத்துவிட்டு, “அதான் நினைத்ததைச் சாதிச்சிட்டீங்க இல்ல, போய் படுத்துத் தூங்கு” என்றான்.

 

இதுதான் சாக்கு என்று வேகமாகக் கட்டிலின் ஒரு மூலையில் சென்று படுத்துக் கொள்ள,

 

“படுத்துத் தூங்க தான் உங்களை உள்ள அனுப்பி வைத்தார்களோ?” என்று முறைத்துக் கொண்டே மகி கேட்க,

 

‘இவருக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா?’ என்று யோசித்தவள்,

 

எழுந்து உட்கார்ந்து, “வேற என்..ன சார் பண்ண.னும்?” என்று திக்கித் திணறிக் கேட்டாள்.

 

“இன்னைக்கு என்ன நாள் என்று தெரியுமா?”

 

“உனக்கும், எனக்கும் கல்யாணம் ஆன நாள், அது மட்டும் இல்லாம இந்த நைட்டு உனக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் நைட்” என்ற உடன் அகிலாவிற்குக் கை கால்கள் உதறியது.

 

“இல்ல, அது நான்…” என்று திக்கித் திணற அகிலாவைப் பார்த்துச் சிரித்தவன்,

 

கட்டிலில் சிறிது இடைவெளி விட்டு அவளது அருகில் உட்கார்ந்து, அவள் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு, “எனக்கு உன் மேல கொஞ்சம் விருப்பம் இருந்துச்சு அகிலா, ஒத்துக்கிறேன். உன் வாழ்க்கையில் மட்டும்தான் என்னை நீ ஏத்துகிட்டு இருக்க.

 

இன்னும் நீ என்னை வேற எந்த விதத்திலும் ஏத்துக்க முயற்சி கூடப் பண்ணல… அதுக்கு இந்த ஒரு உதாரணமே போதும். விளையாட்டுக்குக் கேட்ட உடனே, உன் முகம் எல்லாம் வேர்த்துடுச்சு. கை கால்கள் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. உன் வாய் தந்தி அடிக்குது” என்று சொல்ல,

 

அகிலா அவனை முறைத்துவிட்டு, அவனது கையை விடுவிக்க,

 

“உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம் சரியா? இப்பவே வேணும் என்று நான் கேட்கவும் செய்யல.

இதப்பத்தி நான் யோசிக்கக்கூட இல்ல. ஆனா ஒன்னே ஒன்னு தான் சொல்லிக்க விரும்பறேன். ஏற்கனவே நீ சொன்னது தான். இந்தக் குடும்பத்தை உன் குடும்பமா நினைச்சு, நானும் இந்தக் குடும்பத்துக்குள்ள வரணும்னு நினைக்கிறேன், என்று அன்னைக்கு வந்து சொன்ன…

 

அதை நீ வாழ்நாள் ஃபுல்லா காப்பாத்துவேன்னு நினைக்கிறேன். இது உன் மேல நம்பிக்கை இல்லாமல் நான் உன்கிட்டக் கேட்கல, சொல்லல” என்று விட்டு அவளது கையை விடுவித்து விட்டு அவளைத் தாண்டிச் சென்று அந்தப் பக்கம் படுத்துக் கொள்ள,

 

அகிலா தான் மகியைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “நான் ஒத்துக்கிறேன் மகி. நான் அன்னைக்குச் சொன்னது தான். இந்தக் குடும்பத்தைக் கடைசி வரைக்கும் என் குடும்பமா, இல்ல இல்ல… நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தி தான். இது என்னோட குடும்பம் தான் சரியா?

 

நீங்க சொன்னது தான். நான் மெண்டலி உங்க கூட மனசார வாழ மட்டும் தான் ஆசைப்பட்டேன். ஆனா ஃபிசிக்கலி அப்படின்னு நான் இந்த நிமிஷம் வரைக்கும் யோசிக்கல. அதனால் தான் கொஞ்சம் நர்வஸ் ஆகிட்டேன். மத்தபடி உங்க மேல நம்பிக்கை இல்லாமலும் கிடையாது.

 

அதே நம்பிக்கையை என் மேல நீங்க வச்சிருக்கீங்கன்னு நான் நம்புறேன். இது என்னோட குடும்பம் தான் என்று சொல்லிட்டு அமைதியாகப் படுத்து விட்டாள் .

 

அகிலாவின் வாழ்க்கை நன்றாகச் சென்றது.

 

இருவரும் மனதளவில் கணவன், மனைவியாக வாழ்ந்தார்கள். உடல் அளவில் இருவருமே இன்னும் அதற்குத் தயாராகவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

 

அகிலா தினமும் அமுதனைப் பள்ளிக்குக் கிளப்பி விட்டு ஒரு ஆட்டோவிற்குச் சொல்லி இருக்க,

 

முதல் இரண்டு நாள்கள் அகிலா அழைத்துக் கொண்டு சென்று அழைத்துக் கொண்டு வந்தாள்.

 

மாலை செட் ஆகாது என்ற காரணத்தினால் கோதை சொன்னது போல் அகிலாவும் ஆட்டோவில் அனுப்பி வைக்க ஒத்துக் கொண்டாள்.

 

ஒருநாள் பள்ளியில் தமிழ் யோசனையுடன் உட்கார்ந்து இருக்கும் போது அவளது தோளில் கை வைத்த அகிலா,

 

“என்ன தமிழ், ரொம்ப யோசனையா இருக்க?”

 

“இல்ல, வீட்டப் பத்தி தான்.”

 

“வீட்டைப் பத்தினா, யாரைப் பத்தி… மாமாவைப் பத்தியா?” என்று விட்டு அமைதியாகி விட,

 

“இன்னும் மாமா என்கிட்ட ஒழுங்காப் பேசலை அகி.”

 

“நீயா அவர்கிட்டப் போய் பேச வேண்டியதுதானே, உன் புருஷன் தானே” என்று கேட்டாள்.

 

“பேசணும் அதுக்கான நேரம் வரல…”

 

“எப்ப தாண்டி வரும்? எனக்குக் கல்யாணம் ஆகி மூணு மாசத்துக்கு மேல ஆகுது. உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப்போகுது தமிழ், இன்னமுமா யோசிக்கல?

 

அதுக்கான நேரம் வரலனு சொல்லிட்டு இருந்தா என்ன அர்த்தம்? உன் மனசுலயும் அவரு இருக்காரு. அவரு மனசுலயும் நீ இருக்க. அப்புறம் எந்தக் காரணத்துக்காக நீ அவரை விட்டு விலகி இருக்கனு எனக்குப் புரியல தமிழ்.

 

அவர் பண்ணது தப்பா கூட இருக்கட்டும். ஆனா, எனக்கு இப்போ எதும் சொல்லத் தோணல. உன் வாழ்க்கை நீ தான் முடிவு பண்ணனும்” என்று விட்டு அகிலா சென்றுவிட,

 

அகிலாவின் கையைப் பிடித்த தமிழ், “நான் இப்போ யோசிச்சது மாமாவைப் பத்தி இல்ல. என் வாழ்க்கை பத்தி நான் யோசிச்சு முடிவு பண்ணிட்டேன். இப்ப நான் யோசிச்சது தனாவைப் பத்தி.”

 

“தனாவைப் பத்தியா? அவளப் பத்தி யோசிக்க என்ன இருக்கு?”

 

“அது…” என்று விட்டு நிறுத்தி விட,

 

“தனாவப் பத்தி யோசிக்க என்னடி இருக்கு?”

 

“இல்ல அகி, அவ யாரையோ விரும்புறாளோனு தோணுது” என்றவுடன் அகிலா அதிர்ச்சியாகித் தமிழைப் பார்க்க,

 

“என்ன சொல்ற தமிழ், உண்மையாவா? தனா விரும்புறாளா? யாரு? உன் கிட்டச் சொன்னாளா?” என்று கேட்க,

 

“நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற?”

 

“இல்ல, அதிர்ச்சி ஆகல. இருந்தாலும் நீ சொல்லு, நம்ப தனா இல்லையா?”

என்று விட்டு அமைதியாக இருக்க,

 

முதலில் அகிலாவைப் பார்த்துச் சிரித்த தமிழ், பின்பு முறைத்துக் கொண்டே “ஆனாலும், இவ்வளவு அமுக்குனியா நீங்க இருக்க வேண்டாம்டி. நீ என்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லணும்னா கூட அவ்வளவு கஷ்டமா இருக்கு இல்ல. உன்னோட விருப்பத்தை தான் சொல்லாமல் விட்ட. ஆனா, சரவணன் அண்ணன் விருப்பத்தைப் பத்திச் சொல்லக்கூட அவ்ளோ கஷ்டமா இருக்கு இல்ல”

 

அகிலா தமிழைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

 

“அண்ணா, அண்ணா… விஷயம் உனக்கு” என்று விட்டு அமைதியாகி விட,

 

“உங்க கல்யாணத்தப்போ புரியல, நீ அன்னைக்குத் தனாகிட்டப் பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன்” என்று விட்டு அமைதியாக விட,

 

“சரிடி இப்போ அதுக்கு என்ன? ஆனா, தனா வேற யாரையோ விரும்புறான்னு சொல்றியே.”

 

“விரும்புறா தான். ஆனா அப்புறம்…” என்று விட்டு அமைதியாக, “தெரியல தனாகிட்டப் பேசினா மட்டும் தான் இதுக்கு முடிவு கிடைக்கும்”.

 

“நான் பேசட்டுமா?”

 

“என்னன்னு பேசுவீங்க?”

 

“அகிலா, அண்ணா தான் சொல்லணும். நீயும் நானும் சொல்ல முடியுமா?”

 

“இல்ல ஏற்கனவே சொல்லி இருக்கிறார் தமிழ், உண்மையாவே எனக்கு இதைப் பத்தித் தெரியாது. எனக்கு சீரியஸா தெரியாது.”

 

“என்ன தாண்டி நெனச்சிட்டு இருக்கீங்க? உன் விருப்பத்தைச் சொல்லும் போதும் அமைதியா இருந்த, இதுவும் தானா நடந்துரும்னு நினைச்சுட்டு இருக்கீங்களா?”

 

“அப்ப நீ மட்டும்?” என்று அகிலா கேக்க,

 

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றாள்.

 

“சரி நம்ம சண்டையை அப்புறமா வச்சுக்கலாம். தனா யாரையாவது விரும்புறேன்னு சொன்னாளா?”.

 

“அவ விரும்புறா தான். ஆனா… மத்த எந்த டீடெயிலும் எனக்குத் தெரியாது” என்று கோபத்துடன் அகிலாவைப் பார்த்து முறைத்துவிட்டு அவளோட நடவடிக்கை வச்சு சொல்றேன். மத்தபடி எனக்கு முழுசா ஏதும் தெரியல, சரியா? அந்த யோசனையில இருந்த அப்போ தான் நீ என் பக்கத்துல வந்த. என் மனசுல இருந்த எல்லாத்தையும் மொத்தமா சொல்லிட்டேன். மத்தபடி எனக்கே தெரியாத விஷயத்தை நான் எப்படி உனக்குச் சொல்ல முடியும்?” என்று தனது தோழியிடம் சொல்லி விட்டு எழுந்து விட,

 

தனக்கு அடுத்த வகுப்பு இருக்கிறது என்று சென்று விட்டாள் தமிழ்.

 

இங்கு அகிலா தான் குழப்பத்துடன் தனது அண்ணனின் வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
19
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. வரிசை வரிசையாக ஒருஒரு காதல் ✨
    Nice flow… தனா யாரை லவ் பண்ணியிருப்பா..? எல்லாம் குடும்பத்துக்குள்ள தான் லவ் பண்ணுது..‌ஆனா சொல்றது மட்டும் இல்ல