
ரகசியம் – 5
“அது சரி டா.. போகும் போது ஏதோ போருக்குப் பின் மண்டேன்னு சொல்லிட்டு போனாளே.. அப்படினா என்ன டா” என அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்க,
“டேய் அது போருக்குப் பின் மண்டே இல்ல.. போர்க்குயூப்பைன் மண்டை.. என் ஹேர்ஸ்டைல பார்த்து முள்ளம்பன்றி மண்டன்னு இங்கிலீஷ்ல புகழ்ந்துட்டு போறா” என்றவன் தன் அலைபேசியில் செல்ஃபீ கேமிராவை எடுத்து நிஜமாகவே அவ்வாறு தான் இருக்கிறதா என்று ஆராய அவன் செயலில் அறிவுக்கு சிரிப்பு தாளவில்லை. வயிற்றைப்பிடித்துக் கொண்டு சிரிக்க அதில் கடுப்பான மது,
“மூடிட்டு சீக்கிரம் வா டா.. அப்பிளிக்கேஷன் முடிஞ்சுற போகுது” என்றவன் முன்னே நடக்க,
“இவன் எப்போ பார்த்தாலும் எனக்கு தான் எண்டுகார்ட் போடுவான்” என்று புலம்பியபடி அவனோடு சென்றான் அறிவு.
உள்ளே..
மதுவும் அறிவும் எந்த பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பம் வாங்க வேண்டுமோ அதே வரிசையில் தான் மதுவும் இளமாறனும் நின்றுக் கொண்டிருந்தனர். அதனை முதலில் கண்ட அறிவு,
“ஐயோ காளியாத்தா ” என்றபடி பின்னே செல்ல எத்தனிக்க அதனைக் கண்ட மது,
“டேய் என்னடா ஆச்சு” என்றிட,
“மச்சான்.. காளியாத்தா நம்ம நிக்க வேண்டிய லைன்ல தான் டா நிக்குறா” என கூற மதுவும் அப்பொழுது தான் கவனித்தான்.
“ஓஹோ இவளும்.. நம்ம எடுக்க போற மேஜர் தான் எடுக்க போறாளா’ என்று நினைத்தவனுக்கு புன்னகை எட்டிப்பார்த்தது. எதேர்ச்சியாக மது திரும்ப அவள் கண்களில் மதுவு அறிவும் தங்களைப் பார்த்து ஏதோ பேசி கொண்டிருப்பது தெரிந்தது. மாறனை அழைத்தவள்,
“டேய் மாறா.. அங்க பாரு இவனுங்க இங்கயும் வந்துட்டானுங்க” என்றிட அவனோ,
“ஹே மது நீ ரொம்ப ஓவரா பண்ற.. இது காலேஜ் அவங்களும் அட்மிஷன் வாங்க வந்துருப்பாங்க.. நாம நம்ம வேலைய மட்டும் பார்ப்போம்” என்று கூற அவளும் ஏதும் கூறாமல் திரும்பி கொண்டாள். பின்பு விண்ணப்பங்களை வாங்கிய மது மற்றும் மாறன் வெளியில் சென்று அமர்ந்தனர். கடைசியாக மதுவும் அறிவமுதனும் நிற்க அவர்கள் வாங்குவதற்குள் இன்றைக்குரிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை காலியாகிவிட்டது.
“வாங்கிட்டு போன யாராச்சு இன்னும் அப்பிளிக்கேஷன் நிரப்பாம வச்சிருந்தா அவங்க கிட்ட வாங்கி நகல் எடுத்துக்கோங்க” என்று அலுவலக அறையில் கூறிவிட யாரேனும் நிரப்பாமல் வைத்திருக்கிறார்களா என்றார் பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரும் மும்முரமாக நிரப்பிக் கொண்டிருக்க அறிவோ,
“மச்சான் பேசாம நாளைக்கு வந்து வாங்கிப்போமா” என்று கேட்க,
“டேய் டிஸ்டன்ஸ் அதிகம் டா எத்தனை தடவ வரது.. அதுமட்டுமில்லாம இந்த மாதிரி கோர்ஸ் எல்லாம் லிமிடெட் சீட்ஸ் தான் இருக்கும்.. ஒருவேளை கிடைக்காம போயிடுச்சுனா என்ன செய்ய” என்று மது கூற அதுவும் அறிவுக்கு சரியெனப்பட,
“சரி நீ அந்த பக்கம் போய் தேடு.. நான் இந்த பக்கம் தேடுறேன்” என்றவன் சென்றிட யாரேனும் நிரப்பாமல் வைத்திருக்கிறார்களா என தேடியபடியே வெளிய வந்த மதுவின் காதுகளில் விழுந்தது,
“டேய் மாறா.. நீ தப்பா ஏதும் நிரப்பிடாத.. நான் வந்த அப்புறம் நிரப்பு.. இப்போ வந்துடுறேன்” என்ற வார்த்தைகள். கேன்டீனிற்குள் சென்று பப்ஸ் மற்றும் ஜூஸ் சகிதமாக வந்து சேர்ந்தாள் அவள். அதனைக் கண்ட மாறனோ,
“அடியே என்கூட தானே டி நின்னுட்டு இருந்த.. அதுக்குள்ள கேன்டீன் எங்கேயிருக்குன்னு எப்படி பார்த்த” என்றிட,
“நீ எதை தான் ஒழுங்கா கவனிச்சுருக்க.. வேஸ்ட் ஃபெல்லோ” என்றவள் வாங்கி வந்ததை சாப்பிட ஆரம்பித்தாள்.
“தின்னி பண்டாரம்.. ” என்று மாறன் திட்ட,
“யூ மீன் ஃபூட் லைப்ரரி (food library)” என்று வாயில் பப்ஸைத் திணித்தபடி கேட்க,
“என்னடி உளறுற” என மாறன் புரியாமல் கேட்டான்.
“நூலகத்தின் வேறுபெயர்களில் ஒன்று பண்டாரம் .. நம்பிக்கை இல்லைனா கூகிள் மாமாகிட்ட கேட்டுக்கோ” என்று தோலைக் குலுக்கிவிட்டு கூற நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மது அப்பொழுதே கூகிள் ஆண்டவரை அணுகி அவள் கூறியதைப் பார்க்க அவனோ சத்தமாக சிரித்தே விட்டான்..
தேடி திரிந்த அறிவு சோர்வாய் மதுவிடம் வர அலைபேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து கடுப்பானவன்,
“டேய் பரதேசி.. நான் பாட்டுக்கு அங்க அப்பிளிக்கேஷன் கிடைக்குதான்னு தேடி அலைஞ்சுட்டு வரேன்.. நீ என்ன டா மொபைலைப் பார்த்து ஹாயா சிரிச்சுட்டு இருக்க” என படபடவென பொரிய,
“டேய் அறிவு.. அப்பிளிக்கேஷன் கிடைச்சுட்டு.. வா” என்றுவிட்டு மது மற்றும் மாறனை நோக்கி சென்றான்.
“இவன் என்ன மறுபடியும் அவகிட்டயே போறான்.. அய்யயோ அவ வேற முறைக்குறாளே.. மறுபடியும் என்ன கூத்து நடக்க போகுதோ” என்று வேண்டியவன் மதுவின் பின்னே சென்றான்.
மது மற்றும் மாறனிடம் மது செல்ல அவன் வருவதைப் பார்த்த பெண்ணவள் முறைத்தபடி பார்த்து அவன் வந்ததும் திட்ட ஆயத்தமாயிருந்தாள். வந்ததும்,
“ஹே மிஸ்டர்.. உனக்கு வேற வேலை இல்லையா” என்று ஆரம்பிக்க அவளைக் கை நீட்டி தடுத்தவன்,
“மிஸ் பண்டாரம்.. நா உன்கிட்ட பேச வரல” என்றவன் மாறனிடம் திரும்பி,
“ப்ரோ ஒரு ஹெல்ப்” என்றிட,
“சொல்லுங்க பாஸ்” என்றான் இளமாறன். மது அவளை அழைத்த பண்டாரம் என்ற அழைப்பில் கடுகடுவென நின்றிருந்தாள்.
“நாங்க டிப்ளமா இன் ஆக்டிங் (Diploma in Acting) கோர்ஸ் சேருறதுக்காக வந்துருக்கோம்” என மது கூற,
“நாங்களும் அதே கோர்ஸ் தான் பாஸ்” என்றான் மாறன் சிரிப்புடன்.
“ஹான் தெரியும் ப்ரோ.. அதான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்க வந்தேன்” என் கூற மாறன் புரியாமல் மதுவைப் பார்க்க அவளோ வேண்டாம் என்று கண்களால் ஜாடைக் காட்டினாள். மீண்டும் மதுவே தொடர்ந்தான்.
“அதுவேற ஒண்ணுமில்ல.. அப்பிளிக்கேஷன் காலி ஆயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க.. அதான் நீங்க இன்னும் ஃபிள் பண்ணாம தான வச்சிருக்கீங்க.. கொஞ்சம் குடுத்தா போட்டோ காபி எடுத்துட்டு கொண்டு வந்து கொடுத்துருவோம்” என்று உதவி கேட்க,
“அட இவ்ளோ தான.. இந்தாங்க பாஸ்” என்று மாறன் எடுத்து கொடுக்க போக அவனிடமிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பிடுங்கிய மது,
“டேய் மாறா.. நீ ஏன் டா இவ்ளோ மக்கா இருக்குற.. அவன் சும்மா புளுவிட்டு இருக்கான்.. நாம இன்னும் அப்பிளிக்கேஷன் நிரப்பலன்னு அவனுக்கு எப்படி தெரியும்.. அதுமட்டுமில்ல என்னை என்னனு கூப்பிட்டான் கவனிச்சியா.. பண்டாரம்னு சொன்னான்.. இதுல இருந்து என்ன தெரியுது..” என்று கேட்க அவளை ஒரு மாதிரியாக பார்த்த மாறன்,
“நீ லூசுன்னு தெரியுது..” என்றிட அதில் கடுப்பானவள்,
“டேய் எரும.. அவன் நம்மள வாட்ச் பண்ணிட்டு இருந்துருக்கான் டா இவ்ளோ நேரம்.. நான் தான் லைன்ல நிக்கும் போதே சொன்னேன்ல.. இந்த மாதிரி ஆளுக்கு எல்லாம் உதவி பண்ண கூடாது” என்றவள் வேகமாக விண்ணப்பப் படிவத்தில் பெயர் எழுத ஆரம்பித்தாள். “MADHU” என்று எழுத சரியாக ‘U’ என்று எழுதும் போது அவளிடம் இருந்து படிவத்தை வாங்கிய மாறன்,
“ஹே லூசு என்ன டி பண்ற நீ” என அவளைத் திட்ட அதனைக் கண்டுகொள்ளாமல் மாறனின் படிவத்திலும் அவனின் பெயரை எழுத நினைத்து இளமாறனின் பெயரில் ‘I’ என்று எழுதும் போதே படிவத்தைப் பிடுங்கியவன்,
“பைத்தியம் மாதிரி பண்ணாத டி” என்று நிஜமாக கோபம் வந்து திட்டினான் மாறன்.
“ப்ரோ விடுங்க.. எதுக்கு இப்ப திட்டுறீங்க” என அவளின் முகம் சுருங்க பொறுக்காத மது கேட்க,
“பின்ன என்ன பாஸ்.. இப்படி சின்னப்பிள்ளைத் தனமா பண்ணிட்டு இருக்கா.. இவ இப்படி பண்ற ஆளே கிடையாது” என்றவன் படிவத்தை மதுவிடம் காட்டி,
“பாருங்க பெயரை எழுதிட்டா ரெண்டுலயும்” என அவளை குற்றம் சாட்ட அதனை வாங்கி பார்த்த மதுவின் உதடுகள் புன்னகைத்தன.
“பரவாயில்ல ப்ரோ.. அவங்க எழுதுனதுனால ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க” என்றவன் அறிவிடம் திரும்பி,
“டேய் இந்த ரெண்டையும் ஒரு ஒரு காப்பி எடுத்துட்டுவா சீக்கிரம்” என அவன் கையில் கொடுக்க புரியாமல் அறிவு விண்ணப்பதைப் பார்க்க புரிந்தது அவனுக்கு நண்பன் சிரித்த காரணம். அவனும் சிரித்துவிட்டு,
“சரி டா” என்றுவிட்டு கூறியபடி ஐந்து நிமிடத்தில் நகல் எடுத்துவிட்டு வந்து படிவத்தை மாறன் கைகளில் கொடுக்க மதுவும் மாறனும் அறிவு மற்றும் மதுவை புரியாமல் நோக்கினர்.
“தேங்க்ஸ் ப்ரோ” என்று கூறியபடி இருவரும் சென்றுவிட,
“இவனுங்க என்ன லூசா டா.. அப்பிளிக்கேஷன்ல அடிச்சு எழுத கூடாதுன்னு தெரியும் தான அவனுங்களுக்கு.. அப்புறம் ஏன் இதை வாங்கிட்டு போறாங்க” என்று மது கேட்க,
“அதான் எனக்கும் தெரில.. ஆமா நீ ஏன் டி இப்படி ஆயிட்ட.. எதிரியா இருந்தாலும் உதவின்னு வந்து கேட்டா பண்ணனும்னு எனக்கு வாய் கிழிய அட்வைஸ் பண்ணுவ.. இப்போ ஏன் கேவலமா பிஹேவ் பண்ற” என்று கண்டிப்புடன் கேட்டான் மாறன்.
“எதிரிக்கு கூட செய்யலாம்னு தான் சொன்னேன்.. பொறுக்கிக்கு இல்ல..” என்று கூறினாலும் மாறன் கேட்ட கேள்வி அவள் மனத்திலும் ஓட தான் செய்தது.
‘நான் ஏன் இப்படி ஆயிட்டேன்.. அவனைப் பார்த்தாலே எனக்கு சண்டைப் போடணும்னு தான் தோணுது.. நான் யாரையும் இப்படி உடனே எல்லாம் திட்டுனது இல்ல’ என்று சிந்தித்தவள் பிறகு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப ஆரம்பித்தாள். மாறனும் நிரப்பினான்.
இவர்கள் நிரப்பிவிட்டு அலுவலக அறையில் சென்று கொடுக்க அப்பொழுது மதுவும் அறிவும் விண்ணப்பங்களை நிரப்பி கொடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தனர். மாறனோ,
“ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் நில்லுங்க.. நான் இதை கொடுத்துட்டு வந்துருறேன்” என்று கூறிவிட்டு செல்ல இருவரும் அவனுக்காக காத்திருந்தனர்.
“டேய் இப்போ எதுக்கு அவனுங்கள நிக்க சொன்ன” என்று கேட்க அதற்கு பதில் கூறாமல் வேகமாக இருவரது படிவத்தையும் அலுவலகத்தில் கொடுத்தவன் மது மற்றும் அறிவிடம் வந்தான். பெண்ணவள் அங்கு செல்ல பிடிக்காமல் சற்று தள்ளி நின்றுகொண்டாள்.
“அது ஒண்ணுமில்ல.. அப்பிளிக்கேஷன்ல ஓவர் ரைட்டிங் பண்ண கூடாது தானே.. கரெக்ஷன் பண்ணாம நேம் எழுதுன அப்பிளிக்கேஷன்ல எப்படி உங்க நேம் எழுதி கொடுத்தீங்க” என்று மாறன் கேட்க அவன் கேட்ட கேள்வியில் சிரித்த அறிவு,
“ட்யூட்.. ஐம் அறிவமுதன் சன் ஆஃப் ஐயப்பன்.” என கூற அப்பொழுது புரிந்தது மாறனுக்கு. அறிவின் தந்தைப் பெயரின் முதல் எழுத்து ‘I’ என்றதால் தான் அறிவமுதனால் அடித்தல் திருத்தல் இல்லாமல் அதோடு சேர்த்து அவனின் பெயரையும் எழுதி கொடுக்க முடித்தது என்று.
ரகசியம் – 6
“ஓஹோ புரிஞ்சுடுச்சு. ஐம் இளமாறன்” என்றவன் பின்பு மதுவைக் கேள்வியாக நோக்க அவனும்,
“ஐம் மதுரன்” என்றான் சிரித்தபடி. அதனைக் கேட்ட மாறன்,
“நிஜமாவா ப்ரோ” என்று சற்று ஆச்சர்யமாய் கேட்க அவனோ,
“ஏன் இவ்ளோ ஷாக்கு” என்று கேட்க,
“அதுவா.. தோ நிக்குறாளே.. என் அத்தை பொண்ணு.. ஹெர் நேம் இஸ் மதுரிகா” என்றிட இப்பொழுது ஆச்சர்யப்படுவது மது மற்றும் அறிவின் முறையாயிற்று.
விண்ணப்பப் படிவத்தில் மது என்ற பெயரைப் பார்த்த மதுரன் அக்கணம் ‘மதுமிதா, மதுமதி,’ என்று ஏதாவது பெயர் இருக்குமோ என்று தான் யோசித்தானே தவிர அவனின் பெயருக்கு மிகவும் பாந்தமாய் பொருந்தும் அளவிற்கு அவள் பெயர் இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனோ இனம்புரியா மகிழ்ச்சி மதுரனுக்கு தோன்றியது.
கண்டவுடன் காதல் என்றெல்லாம் மதுரனுக்கு தோன்றவில்லை. உடன் பயின்ற மாணவர்களின் பள்ளிப்பருவக் காதல் கதைகள் முக்கால்வாசி கண்டவுடன் காதலாக ஏற்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறான். புத்தகத்திலும் படித்திருக்கிறான். அக்காதலில் என்ன புரிதல் இருக்க கூடும் என்பது இவனின் எண்ணம். அதனாலேயே அதில் அவனுக்கு நம்பிக்கையும் கிடையாது என்பது அவனுக்கும் தெரியும்.
பேரழகன் இல்லையென்றாலும் இயற்கையிலேயே காண்போரை மறுமுறை திரும்பி பார்க்கவைக்கும் அளவிற்கு ஓரளவு மதுரனின் முகம் வசீகரமானது தான். அதனாலேயே இதுவரை அவனைப் பார்த்த மற்றும் பேசிய பெண்கள் அவனிடம் மலர்ந்த முகத்துடனே பேசுவார்கள். ஆண்களுக்கு கூட அவனின் தோற்றம் மரியாதையை வரவழைக்கும் விதமாக தான் இருக்கும். அதனால் கூட மாறன் ஆரம்பத்திலிருந்து மதுரனுக்கு சார்பாக பேசியிருக்க கூடுமோ என்னவோ..?
இதுவரை அவ்வாறு மட்டுமே மற்றவர்களை மதுரன் எதிர்கொண்டிருக்க முதல் சந்திப்பிலேயே அவனை வறுத்தெடுத்த மதுரிகா அவனுக்கு புதிதாக தான் தெரிந்தாள்.
“மதுரிகா” என்று ஒரு முறை அவளின் பெயரை மனதினுள்ளே கூறிப்பார்த்தவனின் பார்வை அவளை சென்றடைய அவளோ இவனைத் தான் முறைத்து கொண்டிருந்தாள்.
‘இந்த மாறன் எதுக்கு அவன் கிட்ட சிரிச்சு பேசிட்டு இருக்குறான்.. அவனும் அவன் மண்டையும்’ என்று திட்டியபடி.
“ஓகே.. காலேஜ் திறந்ததும் மீட் பண்ணலாம்.. அந்த ராட்சசி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. அப்புறம் பத்திரகாளி ஆயிடுவா.. பாய்” என்று மாறன் மற்ற இருவருக்கும் பொதுவாக கூற அவர்களும் சிரித்தனர். மதுரன் மற்றும் அறிவமுதனிடம் இருந்து விடைபெற்று மதுரிகாவிடம் வந்து,
“போலாமா டி” என்றிட அவளோ,
“டேய் நீ என்ன அவனுங்க கிட்ட சிரிச்சு பேசிட்டு வர” என்று கேட்க,
“அதுவா.. அப்பிளிக்கேஷன ஓவர் ரைட்டிங் பண்ணாம எப்படி ஃபிள் பண்ணீங்கன்னு கேட்க போனேன்” என்று கூற அவளுக்கும் அந்த கேள்வி ஓடியது,
“எப்படி பண்ணாங்களாம்” எனறு கேட்க மாறனோ,
“உனக்கு தான் அவங்களைக் கண்டாலே பிடிக்கலையே.. அப்புறம் எதுக்கு கேக்குற” என்க,
“ஆமா இது பெரிய ரகசியம்.. அவனுங்க என்ன செஞ்சா எனக்கென்ன.. அதுலையும் அந்த இன்னொருத்தன் மேல கூட எனக்கு பெருசா எதும் இல்ல.. அந்த போர்க்யூபைன் மண்டையன பார்த்தா தான் காண்ட் ஆகுது” என்று அவனை நினைத்தபடி கடுப்பாய் கூற,
“மது.. எனக்கென்னமோ நீ தா தப்பா புரிஞ்சு வச்சுட்டு ரொம்ப திட்டுறன்னு தோணுது.. ஒருத்தங்களைப் பத்தி முழுசா தெரியாம இவ்ளோ கடுப்பாகாத” என்று மாறன் அறிவுரை வழங்க,
“அது தான் உனக்கும் சொல்றேன்.. ஒருத்தன பத்தி முழுசா தெரியாம அவனுக்கு ரொம்ப வக்காலத்து வாங்காத.. மூடிட்டு வந்து வேண்டிய எடு.. வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சி” என்றவள் முன்னே செல்ல மாறனும் வண்டி எடுத்து வர அப்பொழுது சரியாக மதுரனும் வண்டியை எடுத்துக்கொண்டு வந்தான். இரு வண்டிகளும் கிளம்ப தயாராக இருக்க அப்பொழுது மதுரனின் வண்டியில் ஸ்டான்ட் சரியாக எடுத்துவிடாமல் இருப்பதைக் கவனித்தாள் மதுரிகா..
அதைக் கவனிக்காத மதுரன் வண்டியை இயக்கி செல்ல போக அவன் பெயர் வேறு தெரியாததால்,
“ஹெலோ மிஸ்டர் போர்க்யூபைன் மண்டையன்..” என்று சத்தமாக அழைக்க சட்டென பிரேக் அழுத்தி வண்டியை நிறுத்தியவன் பின்னே திரும்பி பார்க்க,
“நக்கலா பேச தெரிஞ்சா மட்டும் போதாது. ஸ்டாண்ட சரியா எடுத்துவிட்டுட்டு வண்டி ஓட்ட தெரிஞ்சுருக்கணும்” என்றிட அப்பொழுது தான் ஸ்டேண்டை சரியாக எடுத்துவிட்டவன்,
“தேங்க்ஸ் மிஸ் பண்டாரம்.. பாய்” என்று சிரித்தபடி கூறி பறந்தான் தன் வாகனத்தில்.
“கொழுப்பைப் பார்த்தியாடா இவனுக்கு.. இவன் நல்லதுக்கு நான் சொன்னா இவன் என்னை நக்கல் பண்ணிட்டு போறான்..” என்று மூக்குப்புடைக்க கூற,
“கர்மா இஸ் பூமராங் மது” என்ற மாறனுக்கு இரண்டு கொட்டுகளைப் பரிசாக வழங்கினாள். வலியில் தலையை தேய்த்தபடி மாறனோ,
“ஆமா பொறுக்கிக்கு ஹெல்பெல்லாம் பண்ணமாட்டேன்னு சொன்ன.. இப்போ என்ன அக்கறை திடிர்னு” என்று கேட்க,
“ஹெல்ப் தான் பண்ண மாட்டேன்னு சொன்னேன்.. அதுக்காக அவன் சாகட்டும்னு நெனைக்குற அளவுக்கு சேடிஸ்ட் இல்ல.. மூடிட்டு கிளம்பு” என்று மரியாதையாகக் கூற அதற்குமேல் வாயைத்திறக்காமல் கிளம்பினான் மாறன்.
மோதலில் ஆரம்பித்த இவர்களின் சந்திப்பின் பாதை சென்றடையும் இடம் பகையா? நட்பா? காதலா? காத்திருப்போம் ரகசியங்கள் கசியும் தருணத்திற்காக..
அவ்வாறே ஒரு மாதம் கழிந்திருக்க கல்லூரி திறக்கும் நாளும் வந்தது. நால்வரும் தத்தம் கனவுகளை எதிர்நோக்கி முதல்நாள் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தனர்.
“டேய் மாறா.. கிளம்பிட்டியா இல்லையா.. மணி ஆயிடுச்சு பாரு” என்று ஹாலில் இருந்து மதுரிகா கத்திக்கொண்டிருக்க,
“தோ வரேன் டி இரு..” என்று தன் சட்டையின் கைப் பொத்தானை மாட்டியபடி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த சத்யனோ,
“இங்க பாருங்க.. எனக்கு இதுல உடன்பாடு இல்லனாலும் உங்க ரெண்டு பேர் ஆசைக்காக மட்டும் தான் ஒத்துக்குறேன்.. ஆனா நீங்க எந்த விஷயம்னாலும் எங்க கிட்ட கேட்டு தான் பண்ணனும்.. ” என்று கண்டிக்க,
“மாமா.. நீங்க இவ்ளோ சீக்கிரம் எங்க ஆசைக்கு சரின்னு சொன்னதே பெரிய விஷயம்.. அதுவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.. எங்க ஆசைக்கு மரியாதைக் கொடுத்த உங்ககிட்ட சொல்லாம நாங்க ஏதும் செய்ய மாட்டோம்..” என்று சத்யனிடம் கூறிய மதுரிகா.. மாறனிடம் திரும்பி,
“அப்படி தானே டா” என்று கேட்க அவனும் ஆமோதித்தான்.
“நல்லது .. உங்க ஆசைக்கு நான் தடையா நிக்கல.. அதே மாதிரி நான் ஒருநாள் உங்க கிட்ட ஒருவிஷயம் கேட்பேன்.. அப்போ நீங்களும் என் ஆசைக்கு தடையா நிக்க கூடாது.” என்று முன்னேறிச்சையாக சத்யன் கேட்க விஜயாவோ அவரை, ‘இப்போ எதுக்கு இதெல்லாம்’ என்ற ரீதியில் பார்க்க அவரோ, ‘நான் பார்த்துக்குறேன்’ என்றபடி கண் அசைத்தார்.
சத்யனின் கேள்விகளில் குழப்பமடைந்த மது மற்றும் மாறன் ஒருவரையொருவர் பார்க்க பின்பு அப்படி என்ன கேட்டு விட போகிறார் என்று நினைத்தபடி சரியென்றனர். விஜயாவும் அவர் பங்கிற்கு பல அறிவுரைகள் வழங்கி பிள்ளைகளை முதல் நாள் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். மாறன் மற்றும் மது அவனின் இரு சக்கர வாகனத்தில் கல்லூரி நோக்கி புறப்பட்டனர்.
—————–
அங்கு மதுரனும் தன் முதல் நாள் கல்லூரி செல்வதற்கு தன் அன்னையிடம் அலைபேசியில் ஆசீர்வாதம் வாங்கி கொண்டிருந்தான்.
“ம்மா.. ஏன் மா இப்படி பண்றீங்க.. இப்போ நீங்க ப்லெஸ் பண்ண போறீங்களா இல்லையா” என்று கெஞ்சலாய் கேட்க,
“என் இஷ்டம் இல்லாம செய்ற ஒரு விஷயத்துக்கு என் ஆசீர்வாதம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன டா.. அதான் உன் அப்பா கிட்ட வாங்கிட்டியே அப்புறம் என்ன” என்றபடி அவர் முறுக்கிக் கொள்ள,
“ம்மா ம்மா.. இப்படி சொன்னா என்ன அர்த்தம்.. சரி அப்போ விடுங்க.. நீங்க வெளிப்படையா என்கிட்ட சொல்லலனாலும் மனசுக்குள்ள என் புள்ளை நல்லபடியா வரணும்னு தான நெனைப்பீங்க.. அது போதும்.. சரி மா நான் காலேஜுக்கு போயிட்டு வரேன்.. ” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்க எத்தனிக்க,
“டேய் மதுரா.. ஒரு நிமிஷம்” என்றார் கமலா. இதைத் தான் எதிர்பார்த்திருந்தவனாய்,
“சொல்லுங்க மா” என்றான்.
“உங்கிட்ட கோபம் கூட பட முடியல போடா. ஆனா வருத்தம் இருக்க தான் செய்து.. இருந்தாலும் சரி நல்லபடியா போய்ட்டு வா.. ஆல் தி பெஸ்ட்” என்று கூற மதுரன் உதடுகள்,
“தேங்க்ஸ் மா.. லவ் யு” என்றபடி புன்னகைத்தன. பிறகு தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் அறிவமுதனை ஏற்றிக்கொண்டவன் கல்லூரி வந்து சேர சரியாக அன்று போல் இன்றும் அதே சமயத்தில் மதுரிகா மற்றும் இளமாறன் வந்து இறங்கினர்.
அன்று பார்த்த பார்வைக்கும் இன்று பார்த்த பார்வைக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. இளமாறன் மதுரன் மற்றும் அறிவைப் பார்த்து சிநேகமாய் புன்னகைக்க அதற்கு மாறாக மதுரிகா முறைத்தபடி பார்த்தாள். இருவரும் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வர,
“ஹாய் பாஸ்.. ” என்றபடி இளமாறன் இருவருக்கும் கைகுலுக்கி அணைத்து கொள்ள அவர்களும் பதிலுக்கு அணைத்து கொண்டனர். பின் மதுரனோ,
“ஹெலோ மிஸ் பண்டாரம்” என்று கூறிவிட்டு வேண்டுமென்றே அணைக்க வருவது போல் வர,
“ஹே ஹே.. என்ன பண்ற நீ” என்றபடி பின்னே நகர்ந்தாள் மதுரிகா.
“இல்ல ஒரு வெல்கம் ஹக்…” என்றபடி இழுக்க அவளோ,
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்” என்றபடி நின்றாள். அவன் அணைக்க வந்த போது அவனின் நகம் கூட அவளைத் தீண்டவில்லை.. வம்பிழுக்க தான் அப்படி செய்தான் என்று மதுரிகாவுக்கு நன்றாகவே புரிந்தது. அதனால் பெரிதாக ஏதும் திட்டாமல்
‘போர்க்யூபைன் மண்ட’ என்று வாய்க்குள் புலம்பியடி அவனை முறைக்க மட்டும் செய்ய அவனோ சிரித்தான். அறிவோ,
“வந்ததும் ஆரம்பிச்சுட்டீங்களா..” என்று கேட்க இளமாறனோ,
“அதானே.. இவங்களுக்குள்ள எப்போ பார்த்தாலும் முட்டிக்கிது” என்றிட அதற்கு மதுரிகா அறிவிடம்,
“ஹே உன் பேரு என்ன” என்று கேட்க அவனோ,
“என்னது ஹேயா” என்க,
“ஆமா டா” என்று அவள் கூற,
“எதே டா வா” என்று கேட்க,
“அடச்சீ பேர சொல்லு” என்றிட,
‘இதுக்கு மேல போனா நம்ம மரியாதை தான் காலி ஆகும்’ என்று நினைத்தவன்,
“அறிவமுதன் சிஸ்டர்” என்றான். அதனை கேட்டவளோ,
“பாரேன் உனக்கில்லாத ஒன்ன பெயரா வச்சுருக்காங்க..” என்றிட அவனோ ‘பாவி கலாய்க்குறா’ என்று நினைத்தபடி நின்றான், மீண்டும் தொடர்ந்தவள்,
“இங்க பாரு தம்பி.. உன் ஃபிரண்ட் வான்டெடா வந்து வம்பு இழுக்கிறான்.. சொல்லி வை சொல்லிட்டேன்” என்றவள் மாறனிடம்,
“நீ என்கூட வரியா அவங்க கூட போறியா” என்று கேட்க,
“இரு டி ஒரு நிமிஷம்” என்றவன் மதுரன் மற்றும் அறிவு இருவரின் அலைப்பேசி எண்ணை வாங்கி பதிவு செய்து கொண்டவன்,
“ஓகே பாஸ் கிளாஸ்ல மீட் பண்ணலாம்” என்றவன்,
“வா டி போலாம்” என்று முன்னே செல்ல மதுரனைக் கடந்து செல்லும் போது அவனை முறைப்பதில் மும்முரமாக இருந்த மதுரிகா கீழே இருந்த சேற்றை கவனியாமல் மிதித்துவிட கால் வழுக்கி விழ போக மதுரன் நினைத்திருந்தால் அவளின் கைப் பிடித்து விழாமல் தடுத்திருக்கலாம். ஆனால் பிடிக்கவில்லை. அவளும் விழுந்துவிட்டாள்.
ரகசியம் – 7
கல்லூரி முதல்நாள் என்று ஆசையாக அணிந்து வந்த வெள்ளை உடை சேற்றினால் அலங்கரிக்கப்பட கையை உதறிக்கொண்டு எழுந்தாள் அவள். ஏதோ சத்தம் கேட்டு திரும்பிய மாறன்,
“ஹே கண்ண வச்சு பார்த்து வரமாட்டியா.. எப்போ பார்த்தாலும் விழுந்துகிட்டே இருக்க” என்றபடி அவளின் உடையில் ஒட்டியிருந்த சகதியை தன் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த அறிவமுதன் கூட,
“டேய் உன் முன்னாடி தான விழ போனாங்க.. பிடிச்சுருக்கலாம்ல” என்றிட அவளோ,
“ஆமா கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு விழ போறாளே.. அவளைக் காப்பாத்தணும்னு கொஞ்சம் கூட தோணாம பார்த்துட்டு நிக்குற நீயெல்லாம் மனுஷனா” என கீழே விழுந்ததில் உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தின் எரிச்சல் தாங்காமல் கேட்க மதுரனோ,
“எதே.. மறுபடி பிடிக்கணுமா.. ஒரு தடவ விழ போறாங்களோன்னு நெனச்சு பிடிச்சதுக்கே அம்மையார் என்னைப் பொறுக்கின்னு ஃபிக்ஸ் பண்ணிட்டாப்டி.. இதுல மறுபடியும் பிடிச்சு நான் ஈவ் டீசிங் பண்றேன்னு கம்பிளைன்ட் பண்ணிட்டா நான் என்ன செய்ய” என்று கூற மதுரிகாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அன்று நிகழ்ந்ததை மீண்டும் ஒருமுறை நினைத்து பார்த்தவளுக்கு,
‘நாம் தான் தவறாக புரிந்துக் கொண்டு அதிகப்படியாக பேசிவிட்டோமோ..’ என்று முதல் தடவையாக மதுரிகா உணர ஏதும் கூறாமல் நின்றாள். அன்று இவள் திட்டிய திட்டுக்களை எல்லாம் இளமாறனும் கேட்டுக்கொண்டு தானே இருந்தான். மதுரன் கூறுவதில் தவறில்லை என்று உணர்ந்த இளமாறன் மதுரிக்காவிற்கு பரிந்து பேச முன்வரவில்லை.
பிறகு சுற்றி இருந்த அனைவரும் மதுரிகாவை ஒரு மாதிரி பார்க்க தன் பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்த மதுரன் அவளிடம் கொடுத்து சுத்தம் செய்து கொள்ள சொல்ல அவளுக்கும் அது தேவைப்பட்டதனால் மறுக்காமல் வாங்கி கொண்டு கழிவறை நோக்கி சென்றாள். ஆடவர்கள் மூவரும் அவளுக்காக காத்திருந்தனர். அப்பொழுது மதுரன்.
“சாரி மாறன்.. உங்க அத்தைப் பொண்ண இப்படி பண்ணிட்டேன்னு உங்களுக்கு கடுப்பாயிருக்கும்ல..” என்று கூற,
“இல்ல பாஸ்.. எனக்கு உங்க மேல தப்பு இல்லன்னு தான் தோணுது.. ஏற்கனவே உங்கள தப்பா நெனச்சுட்டு இருக்கா.. இந்த நேரத்துல மறுபடி அதே மாதிரி நடந்தா இன்னும் உங்களுக்குள்ள பிரச்சனை அதிகமாகிடும்.. எனக்கு தெரிஞ்சு நீங்க இப்படி செஞ்சனால இந்நேரம் அவ தப்பு அவளுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்” என்று கூற,
“அப்படியா.. எப்படி சொல்ரீங்க” என்று மது கேட்க,
“அட இத்தனை வருஷம் அவகூட இருக்கேன்.. அவ மூஞ்ச பார்த்து என்ன நெனைக்குறான்னு தெரிஞ்சுக்குறது அவ்ளோ கஷ்டமா என்ன” என்று கூறிக்கொண்டிருக்க தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் எதுவும் கூறாமல் பாட்டிலை மதுரனிடம் நீட்ட அவனோ,
“எனக்கு தெரிஞ்சு நான் ஏதும் தப்பா செய்யலன்னு நினைக்குறேன்.. உனக்கு ஒருவேளை தப்பா தெரிஞ்சுதுன்னா.. சாரி” என்றவன் பாட்டிலை வாங்கி கொண்டு அறிவமுதனை அழைத்துக்கொண்டு வகுப்பிற்கு சென்றான்.
“டேய் மது.. இருந்தாலும் நீ அவளை இப்படி பழிவாங்கிருக்க கூடாது.. பார்க்கவே பாவமா இருந்துச்சு” என்று கூற,
“டேய் நான் எங்கடா பழிவாங்குனேன்” என்று மதுரன் கேட்க,
“பின்ன இப்போ நீ செஞ்சதுக்கு பேரு என்னவாம்” என்று கேட்க மதுரனோ,
“டேய் அறிவுஉஉ” என்று தன் அக்மார்க் இழுவையை இழுக்க அதை புரிந்த அறிவு டைரியையும் பேனாவையும் எடுக்க அதில் சிரித்த மதுரன்,
“டேய் மச்சான்.. தயிர் வேணும்னா பாலை புளிக்க வைக்க தான் செய்யணும்.. புளிச்சு போனா கேட்டு போய்டுமேன்னு பாலுக்காக யோசிச்சா தயிர் கிடைக்குமா.. கிடைக்காது.. அதே மாதிரி தான்” என்று கூற,
“இன்னைக்கு தயிர்சாதம் செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கன்னு நல்லாவே தெரியுது.. மூடிட்டு புரியுற மாதிரி சொல்லு” என்று அறிவு பல்லைக் கடித்தபடி கேட்க,
“மச்சான்.. அவளைப் பழிவாங்கணும்னு எல்லாம் எனக்கு எந்த எண்ணமும் இல்ல.. சில விஷயங்களை அதோட போக்குல புரியவைக்கணும்.. அதை தான் பண்ணிருக்கேன்.. சில நேரம் வார்த்தைகள குறைச்சுட்டு செயல்ல புரியவைக்கணும்.. அப்போ தான் சரியான பாதையில கன்வே ஆகும்.. ஏன்னா சில நேரம் நாம ஒரு விஷயத்தை அது இப்படிதான்னு நெனச்சுட்டா அது யாரோட வார்த்தைகளையும் நம்பாது. இந்த மாதிரி டெமோ காட்டுனா ஈஸியா புரியும்.. நம்ம செய்ற ஒரு விஷயத்துல தப்பு இல்லனு தோணுச்சுனா நாம செய்யலாம்.. புரிஞ்சுதா” என்று கூற அதையும் குறித்துக்கொண்டான் அறிவமுதன்.
‘எப்படி தான்.. இப்படி எல்லாம் தத்துவம் சொல்றானோ..’ என்று நினைத்தபடி மதுரனோடு வகுப்பறைக்கு சென்றான் அறிவு.
இளமாறனோ மதுரிகாவிடம்,
“ஹே மது.. ஆர் யூ ஓகே” என்றிட,
“ஐம் நாட் ஓகே டா.. நீ அன்னைக்கு அவனைப் பத்தி சொல்லும் போது கூட எனக்கு ஏதும் தோணல.. ஆனா இன்னைக்கு அவன் அப்படி சொன்னதும் கொஞ்சம் கில்ட்டா இருந்துச்சு..
ஆக்சுவலி அன்னைக்கு மார்னிங் நியூஸ் பேப்பர்ல ஒரு நியூஸ் படிச்சேன்.. ஒரு பொண்ணை அவக் கூட படிக்குற பையன் ஹராஸ் பண்ணிட்டான்னு.. அந்த நியூஸ் மண்டைக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு.. அந்த நேரம் பார்த்து அவன் அப்படி செஞ்சதும் எனக்கு தப்பா நெனைக்க தோணிடுச்சு.. அதுவும் நான் ஸ்டெடியா இருந்தததைப் பாக்காம அவன் இழுத்தது வேணும்னு அப்படி பண்ணிட்டான்னு நெனைக்க வச்சுருச்சு.. இப்போ புரியுது” என்று கூற,
“சரி டி விடு.. அவங்க கிட்ட ஒரு சாரி கேட்டுரு.. அவ்ளோதானே” என்று கூற அவளோ,
“சாரியா..” என்று கேட்க,
“ஆமா ஏன்.. ஈகோ தடுக்குதா” என்று கேட்க,
“இல்ல டா.. ஆனா நேர்ல கேட்க ஒரு மாதிரி இருக்கே” என்று கூற தன் அலைபேசியில் மதுரனுக்கு அழைத்து அவளிடம் நீட்டி,
“இந்தா அவங்களுக்கு தான் கால் பண்ணிருக்கேன்.. இதுல சாரி கேட்டுடு” என்க,
“டேய் எதுக்கு டா அதுக்குள்ள கால் பண்ண” என்று கேட்க,
“சில விஷயம் எல்லாம் தள்ளி போடா கூடாது மது.. உனக்கு சாரி கேட்கணும்னு தோணுச்சு தானே உடனே கேட்ரு” என்று கூற அதற்குள் மறுமுனையில் அழைப்பி ஏற்கப்பட மதுரிக்காவும் பேச தொடங்கினாள்.
மறுமுனையில் மதுரன் அழைப்பை ஏற்று,
“ஹலோ சொல்லுங்க மாறன்” என்க இவளோ,
“ஹலோ” என்றாள். மாறனின் அலைபேசியில் பேசும் பெண் மதுவாக தான் இருக்க முடியும் என்றறிந்தவன் அவளை சீண்ட எண்ணி,
“யாரு நீங்க” என்று கேட்க அவளோ,
“நான் மது பேசுறேன்” என்றாள். அதற்கு அவனோ,
“ஆமா நான் மது தான் பேசுறேன்” என்று கூற ஒருகணம் இவன் என்ன பைத்தியமா என்று யோசிக்க பின்பு தவறாக காதில் விழுந்திருக்குமோ என்று நினைத்தவள்,
“இல்லை நான் என்னோட பேரை சொன்னேன்.. ஐம் மது” என்று கூற அவனும் சளைக்காமல்,
“அட நான் மது தான் பேசுறேன்.. சொல்லுங்க” என்று கூற இவளுக்கு பொறுமை காற்றில் பறந்தது. அலைபேசியைத் துண்டித்து விட்டு மாறனிடம் கொடுக்க,
“என்னடி பேசிட்டியா அதுக்குள்ள” என்று கேட்க,
“அட போடா.. தப்பு பண்ணிட்டோமேன்னு சாரி கேட்கலாம்னு பார்த்தா அவன் ஓவரா கலாய்க்குறான்” என்று சலிப்பாக இவள் கூற,
“ஏன் டி என்னாச்சு” என்று கேட்க அவள் அவன் பேசியதைக் கூறினாள்.
‘அட அவங்க பேரு மதுரன்னு இவளுக்கு தெரியாதுல.. அதான் இப்படி நெனச்சுருக்கா போல’ என்று நினைத்தவன்,
“ஹே லூசு இப்போவும் நீ தப்பா புரிஞ்சுருக்க” என்று கூற அப்பொழுது சரியாக மணியடிக்க,
“நீ மறுபடியும் அவனுக்கு சப்போர்ட் பண்ணாத.. இந்த தடவ என்மேல தப்பு இல்ல.. சரி வா கிளாசுக்கு போவோம்.. பெல் அடிச்சுட்டாங்க” என்றவள் விறுவிறுவென நடக்க,
‘சரியான முந்திரிக்கொட்டை.. எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்குறா’ என்று அவளை நினைத்து நொந்த மாறன் அப்புறமாக அவளிடம் சொல்லி கொள்ளலாமென்று அவளுடன் வகுப்பறைக்கு சென்றான். நேராக உள்ளே வந்தவள் மதுரனிடம் சென்று,
“ஹலோ.. நான் அன்னைக்கு உங்கள அப்படி பேசுனதெல்லாம் தப்பு தான்.. சாரி.. இதை சொல்ல தான் கால் பண்ணேன்.. ஆனா நீங்க என்னைக் கலாய்க்குறீங்க,, ஹ்ம்ம்” என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பி கொண்டு சென்று அமர்ந்துவிட்டாள். அவளின் செயலில் மதுரனின் இதழ்கள் சிரிக்க அவனின் செயலில் அறிவும் மதுரிகாவின் செயலில் இளமாறனும்,
“ஹையோ தலையெழுத்து” என்று தலையிலடித்துக் கொண்டனர்.
பிறகு வகுப்பினுள் ஆசிரியர் வர அனைவரும் எழுந்து வணக்கம் கூறி அமர்ந்தனர்.
“ஹெலோ காய்ஸ்.. வெல்கம் டு ஆள்.. என்னோட நேம் வேம்பு.. நானும் இதே காலேஜ்ல படிச்சு வளர்ந்து இப்போ இங்கேயே வேலையும் செய்றேன்.. உங்க க்ளாஸ்க்கு நான் தான் இன்சார்ஜ்.. நீங்க என்னை ப்ரொஃபெசர் ரேஞ்சுக்கு லான் பார்க்க வேணாம்.. என்னையும் உங்க ஃபிரண்டா நெனச்சுக்கலாம்..” என்று கூறிக்கொண்டிருக்க அறிவமுதனோ,
“ஓகே மச்சான்..” என்று குரல் கொடுக்க வகுப்பிலுள்ள அனைவரும் சிரிக்க வேம்புவோ லேசாக முறைத்தார்.
“இல்ல சார் நீங்க தானே ஃபிரண்ட்னு சொன்னீங்க… ஈஈ” என்று எழுந்தவன் அசடுவழிந்து நிற்க இப்பொழுது வேம்புவும் சிரித்தார்.
” சிட் டௌன்” என்று அவனிடம் இலகுவாக கூறியவர் பின் மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்.
“நடிப்புங்குறது ஒரு கலை அந்த கலையைக் கத்துக்க தான் நீங்க இங்க வந்துருக்கீங்க.. ஆனா உண்மைய சொல்லனும்னா இதைக் கத்துக்க வேண்டிய அவசியமே இல்ல.. ஏன்னா நாம வாழ்க்கையிலேயே நாம ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு மாதிரி நடிச்சுக்கிட்டு தான் இருக்கோம்.. உலகமே ஒரு நாடக மேடை.. அதில் நடிக்கும் நடிகர்களே நாம்னு சும்மாவா சொல்லி வச்சாங்க..
கடவுளுங்குற இயக்குனர் கதை எழுதி கதாபாத்திரங்கள் செலெக்ட் பண்ணி இவங்களுக்கு இந்த ரோல் அவங்களுக்கு அந்த ரோல்.. இவங்களோட ஜோடி இவங்க அவங்களோட எதிரி அவங்க.. இப்படி லட்சக்கணக்கான நடிகர்களை உருவாக்கி இந்த வாழ்கைங்குற நாடகத்தை ஓட்டிட்டு இருக்காரு.. இப்படி ஏற்கனவே நடிகர்களா இருக்குற நாம நடிக்குறதுக்காக தனியா காலேஜ் வந்துருக்கோம்னா எதுக்கு..
நாம எல்லாருக்கும் நடிக்க தெரியும்.. ஆனா எங்க எப்படி எந்த மாதிரி நடிக்கணும்னும் அந்த நடிப்பு மூலமா நம்மளோட கரியர எப்படி வளர்த்துக்கணும்னும் கத்துக்க தான் இங்க வந்துருக்கோம்.. ஒன்ஸ் அகைன் வெல்கம் ஆல் டு சவுத் இந்தியா பிலிம் இன்ஸ்டிடியூட். நீங்க எதுக்காக இந்த துறையைத் தேர்ந்தெடுத்தீங்கன்னு நான் கேட்க போறதில்ல.. ஏன்னா பிடிக்காத விஷயத்துக்கு தான் கரணம் தேவைப்படும்.. பிடிச்ச விஷயத்துக்கு காரணங்கள் தேவைப்படாது.. சோ ப்ளீஸ் இண்ட்ரோடியுஸ் யுவர்செல்வ்ஸ் வித் யுவர் நேம்” என்றவர் நாற்காலியில் அமர ஒவ்வொருவராய் தங்களை அறிமுகம் செய்ய தொடங்கினர்.
ரகசியம் – 8
வகுப்பில் வரிசைக்கு நான்கு மேஜைகளாய் மூன்று வரிசைகள் அமையபெற்றிருந்தது. நடு வரிசையில் இரண்டாம் மேஜையில் இடது புறம் இளமாறன் நடுவில் மதுரிகா அமர்ந்திருக்க மதுரிகாவின் அருகில் இடம் காலியாக இருந்தது. வாசல் நுழைவில் இருந்து முதல் வரிசையில் மூன்றாம் மேஜையில் இடது புறம் மதுரனும் அவன் அருகில் அறிவமுதனும் அமர்ந்திருந்தனர்.
அறிமுக படலத்தில் மதுரனின் வாய்ப்பு வர எழுந்தவன்,
“மை நேம் இஸ் மதுரன்” என்றான் மதுரிகாவின் மேல் பார்வையைப் பதித்தபடி. அதனைக் கேட்டு ஆச்சர்யப்பட்டவளுக்கு அப்பொழுது தான் தனக்கு இதுவரை அவனுடைய பெயரே தெரியாது என்ற ஒன்று நினைவிற்கு வந்தது. அன்று விண்ணப்பபடிவத்தில் திருத்தம் இல்லாமல் இவன் நிரப்பி கொடுத்தது எப்படி என்றும் இன்று அலைபேசியில் அவன் “மது தான் பேசுறேன்” என்று கூறியது ஏன் என்றும் இப்பொழுது தான் மதுரிகாவிற்கு புரிந்தது. அசடு வழிந்தபடி மதுரனை ஏறிட்டவள் பின்பு மாறனிடம் திரும்பி,
“டேய் எரும.. நீயாச்சு சொல்லமாட்ட.. அவன் பேரு மதுரன்னு.. இது தெரியாம மறுபடியும் அவன்கிட்ட மல்லுக்கு நின்னுட்டு வந்துருக்கேன்” என்று கேட்க மாறனோ,
“எதே.. நான் உங்கிட்ட சொல்லலையா.. முந்திரிக்கொட்டை.. நீ அவசரப்பட்டு நான் சொல்றத கூட கேக்காம போயிட்டு இப்போ என்னை சொல்றியா” என்று அவளின் தலையில் கொட்டினான்.
அவனின் பெயரைக் கேட்ட வேம்பு..
“மதுரனா.. இதே மாதிரி இன்னொரு நேம் யாரோ சொன்ன மாதிரி இருக்கே” என்று கேட்க மாறன்,
“தோ இவ தான்.. மதுரிகா” என்று மாட்டிவிட அவள் எழுந்து நின்றாள்.
“மதுரன் மதுரிகா.. ஹ்ம்ம்.. பேரு நல்ல மேட்ச் ஆகுதே” என்று சாதாரணமாக அவர் கூற மதுரனுக்கு புன்னகை அரும்ப மதுரிகாவுக்கு என்ன பாவனை கொடுக்கவேண்டும் என்று தெரியாமல் நின்றாள்.
இவ்வாறு அனைவரும் தங்களை அறிமுகம் செய்து முடிக்க,
“எல்லாரும் இன்ட்ரோ பண்ணியாச்சு தான” என்று கேட்டு முடிக்க அப்பொழுது அரக்கப்பரக்க ஓடி வந்து வாசலில் நின்றாள் ஒருத்தி.
“யாரு மா நீயு..” என்று அவர் கேட்க,
“சாரி சார்.. ஸ்கூட்டி ப்ரேக்டௌன் ஆயிடுச்சு.. அதான் லேட்” என்று கூற,
“முதல்நாளே ப்ரேக்டௌனா விளங்கும்.. உள்ள வா” என்றிட பதற்றமாய் உள்ளே வந்தவள் மதுரிக்காவின் அருகில் அமர்ந்தாள்.
“உன்னைப்பத்தி இன்ட்ரோ பண்ணிக்கோ” என்று வேம்பு கூற அவளும் எழுந்து,
“ஹாய் ஆள் ஐம் அன்பினியா..” என்று கூறிவிட்டு அமர்ந்தாள். பிறகு மணியடிக்க,
“ஓகே காய்ஸ்.. இன்னைக்கு செஷன் முடிஞ்சுது.. எப்போதும் காலேஜ் டைமிங் 9 am – 1 pm. இன்னைக்கு முதல் நாளுங்குறதுனால இதோட முடிச்சுப்போம்.. நாளைல இருந்து ரெகுலர் க்ளாஸ் ஸ்டார்ட் ஆகும்.. பாய் காய்ஸ்” என்றபடி வெளியே செல்ல அதுவரைப் பயந்தது போன்று அமைதியாக இருந்த அன்பினியா இப்பொழுது “ஷப்பாஆஆ” என்று கூறியபடி கால் மேல் கால் போட்டு அமர அவளை தான் வினோதமாக பார்த்து கொண்டிருந்தனர் மதுவும் மாறனும்.
“என்னா வெயிலு.. சுட்டெரிக்குது..” என்று அவள் போக்கில் அவள் புலம்பி கொண்டிருக்க மதுவும் மாறனும் இன்னும் அவளின் மேல் வைத்த பார்வையை விலக்கவில்லை. யாரோ தன்னையே பார்ப்பது போன்று அன்பினியாவிற்கு தோன்ற அருகில் பார்த்தாள். அவளையே வினோதமாக பார்த்த மது மற்றும் மாறனை நோக்கியவள்,
“ஹே ஹாய் காய்ஸ்.. நான் அவ்ளோ அழகா இருக்கேனா.. இப்படி வச்சக் கண்ணு வாங்காம பார்க்குறீங்க..” என்று கேட்க அவர்களிருவரும்,
‘தேவை தான் எங்களுக்கு’ என்று நினைக்க மீண்டும் அவளே,
“சரி சரி கூல்.. காண்டாகாதிங்க.. ஐம் அன்பினியா.. யு கேன் கால் மீ இனியா” என்று கூறியபடி கைநீட்ட மதுவும்,
“ஹாய் ஐம் மதுரிகா” என்று கைக் குலுக்கினாள். பின்பு மாறனும்,
“ஹாய் ஐம் இளமாறன்” என்று கூற,
“சூப்பர்.. வந்த உடனே ரெண்டு பேரை ஃபிரண்ட் பிடிச்சாச்சு..” என்று கூற மாறனோ,
“ஆமா நீங்க…” என்று ஏதோ கூற வர,
“ஹே சீ.. என்ன இது அசிங்கமா வாங்க போங்கன்னு.. என்னைப் பார்த்தா ஆன்டி மாதிரி தெரியுதா” என்று கேட்க அவள் கூறியதில் மது மாறனைப் கேலி பார்வைப் பார்த்தாள்.
“சரி விடு.. நீ மதுரன் கிட்ட அசிங்கப்பட்டல அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு” என்று மதுவின் காதில் அவன் கூற மது அவனை முறைத்தாள்.
“ஹலோ.. நான் ஒருத்தி இங்க இருக்கேன்.. நியாபகம் இருக்கா.. ஆமா நீங்க என்ன ரொம்ப க்ளோஸா தெரியுறீங்க.. லவ்வர்ஸா..” என்று இனியா கேட்க,
“எதே.. இந்த பிசாசு எனக்கு லவ்வரா.. இவள வச்சு மனுஷன் சமாளிப்பானா.. இது என் அத்தை பொண்ணு” என்றிட மதுவோ,
“ஹே இனியா.. அவன் என்னை என்ன சொல்றது.. நான் சொல்றேன்.. இவன லவ் பண்ணி நான் சாகமுடியாது.. மாமா பையங்குற பேருல என்கூடயே எப்போ பார்த்தாலும் அட்டை மாதிரி ஒட்டிட்டுத் திரியுது..” என்று கூற இருவரின் கூற்றைக் கேட்ட இனியாவோ,
“ஹே ரெண்டு பேரும் நிறுத்துங்க.. நானே ஒரு பஜாரி.. நீங்க என்னைவிட அராத்து பண்றீங்க.. மாறன் நீ ஏதோ என்கிட்ட கேட்க வந்தியே..” என்று கேட்க,
“நீ கொடுத்த மரியாதைல நான் என்ன சொல்ல வந்தேன்னே தெரிலயே.. ” என்று யோசித்தவன்,
“ஹான்.. ஆமா வரும் போது அப்பாவியா வந்த.. சார் வெளிய போனதும் அப்பாவி போய் அடப்பாவின்னு சொல்ற ரேஞ்சுக்கு மாறிட்ட.. எது ஒரிஜினல் இனியா..” என்று கேட்க,
“அப்போ நீ நான் வந்ததுல இருந்து என்னைத் தான் பார்த்துட்டு இருந்திருக்க அப்படித்தானே” என்று அவள் சிரித்தபடி கேட்க அவனோ,
‘ஆத்தி கண்டுபிடிச்சுட்டாளே’ என்று நினைத்தவன் ஏதும் பேசாமல் இருக்க அவனை மேலும் கீழுமாக பார்த்தாள் மதுரிகா. பின்பு அவளே,
“நானும் அதைக் கவனிச்சேன் இனியா.. அவன் கேட்கலனா கூட நானும் கேட்ருப்பேன்” என்றிட அவளோ,
“அதை ஏன் கேட்குறீங்க.. அது ஒரு பெரிய அலைச்சல் கதை” என்று பெருமூச்சிவிட,
“பரவாயில்ல அவுத்துவிடு.. கேட்போம்.. எங்களுக்கும் போர் அடிக்குது” என்று மதுரிகா கூற அவளை முறைத்தவள் பின்பு கூற ஆரம்பித்தாள்.
மதுவும் மாறனும் இனியாவின் தாமத வருகைக்கும் அவள் விசித்திர பாவனைக்கும் காரணம் கேட்க அவளும் கூறலானாள்.
இன்று காலை ஒன்பது மணியளவில் தன் வீட்டில் இருந்து கிளம்பிய அன்பினியா செல்லும் வழியில் பெட்ரோல் போட எண்ணி அங்கே சென்றாள். அப்பொழுது அங்கு இவளுக்கு முன்னே ஒரு இருசக்கர வாகனம் நிற்க அதில் இருவர் அமர்ந்திருந்தனர். பின்னே அமர்ந்திருந்தவனின் தோளில் மாட்டாயிருந்த பையின் பூட்டு அவிழ்ப்பு விரி (zip) திறந்திருக்க அதனுள் இருந்த காகிதம் ஏதோ கீழே விழுவது போன்றிருக்க உதவி செய்ய எண்ணி அதனை சரியாக மூட சென்றாள். அப்பொழுது அவளின் கையில் அணிந்திருந்த தங்க கைச்செயினின் (bracelet) கொக்கி அதில் மாட்டிக்கொள்ள அப்பொழுது முன்னே இருந்தவன் வண்டியை இயக்க அவளின் கைச்செயின் அவளுக்கு டாடா என்று கைக்காட்டியபடி பின்னே அமர்ந்திருந்தவனின் பையோடு சென்று விட்டது.
“அட கடவுளே.. டேய் டேய் நில்லுங்கடா .. டேய் என் ப்ரேஸ்லெட் டா..” என்று சத்தமிட அது அவர்களின் காதில் விழுந்தால் தானே. வண்டியில் பறந்துவிட்டனர் இருவரும்.
‘மூடிட்டு இருக்காம உதவி செய்ய போன எனக்கு இது தேவை தான்’ என்று தன்னைத் தானே நொந்தவள் அப்பொழுதும் முயற்சியைக் கைவிடாமல் தன் வண்டியை எடுத்துக் கொண்டு அவர்களைத் தேடி வீதி வீதியாக அலைய சற்றுமுன் நிரப்பப்பட்ட பெட்ரோல் தான் தீர்ந்ததே ஒழிய அவர்கள் இவள் கண்ணில் சிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் இனிமேல் கிடைக்கப் போவதில்லை என்று சிந்தித்தவள் வேறு வழியின்றி கல்லூரிக்கு 10.30 க்கு வந்து சேர்ந்தாள்.
இவ்வாறு அவள் கூறி முடிக்க மதுவோ,
“அதான் 10.30 க்கு வந்துட்டியே.. ஆனா க்ளாஸ்க்கு வர ஏன் 11 ஆச்சு” என்று கேட்க அவளோ ஈஈ என இளித்தாள்.
“அடச்சீ .. மூடிட்டு பதிலை சொல்லு” என்க
“அது வந்து… கிளாசுக்கு வந்துட்டு இருந்தேனா.. வர வழில கேன்டீன் என்னை வாவாங்குது.. அலைஞ்சு கலச்சுப் போன என் வயிறு போபோங்குது.. அதைப் பார்க்கவும் பாவமா இருந்துச்சா அதான் ரெண்டு முட்டை பப்ஸ் ஒரு பட்டர் பன் ஒரு காபின்னு வாங்கி கொடுத்து கவனிச்சுட்டு வந்தேன்…” என்று சிரித்தபடி கூற மதுவோ,
“என் இனமடா நீ” என்று அவள் தோளில் கைப்போட இனியாவோ,
“இஜிட் ?(is it?)” என்று கேட்க,
“யெஸ் மச்சி” என்றாள் மது. இருவரையும் கண்ட மாறன்,
“சோத்துக்கு செத்தவளுங்க” என்று தலையிலடிக்க மதுவோ,
“அவன் கிடக்கான்.. டாங்கிக்கு தெரியுமா கேம்பர்(camphor) ஸ்மெல்.. ” என்று மது இனியாவோடு சேர்ந்து மாறனைக் கலாய்க்க அவனோ,
“சரி அதை விடு.. இதுக்கும் நீ அப்பாவியா மூஞ்ச வச்சுட்டு வந்ததுக்கும் என்ன சம்மந்தம்” என்று கேட்க அவளோ,
“டேய் மடையா..” என்று இழுக்க மதுவோ வாய்பொத்தி சிரிக்க மாறானோ பாவமாக பார்த்தான்.
“ஹிஹி.. கண்டுக்காத.. ஃப்லோல அப்படி தான் வரும்..” என்க
“ஃப்லோலயா.. அப்போ சரி” என்று அவன் கூற மதுவோ,
“ஃப்லோல கெட்ட வார்த்தைக் கூட வரும்.. என்ன இனியா” என்று கேட்க அவளும்,
“சம்டைம்ஸ்” என்று கூற மாறானோ,
“என்னங்கடி ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துடீங்களா கூட்டு..” என்று முறைத்தபடி கேட்க இருவரும் சிரித்தனர்,
பின்பு மதுவோ,
“சரி டா சரி டா.. கொச்சுக்காத.. நீ மேல சொல்லு டி” என்க இனியாவும் தொடர்ந்தாள்.
“என்ன கேட்ட.. ஹான் எதுக்கு அப்பாவி மாதிரி வந்தன்னு கேட்டல.. அது வேற ஒன்னுமில்ல.. எல்லாம் ஒரு பெர்பமான்ஸ் தான்.. நடிக்க வந்துட்டு இதைக் கூட செய்யலனா எப்படி.. சாரும் என் நடிப்பைப் பார்த்து கேள்வி கேட்காம உள்ள வர சொல்லிட்டாருல எப்பூடி” என்று கூறி ஏதோ சாதித்தவிட்ட நிம்மதியில் கூற மதுவும் மாறனும் இனியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு “த்தூ” என்று துப்ப அவளும்,
“தேங்க்யூ தேங்க்யூ” என்று வாங்கிக் கொண்டாள்.
பிறகு வகுப்பில் இருந்த அனைவரும் வெளியே செல்ல, இவர்களும் கிளம்ப எதனிக்க, அப்பொழுது இனியா ஏதோ மாறனைக் கலாய்க்க, அதற்கு அவன் வாக்குவாதம் செய்ய என இருவருக்குள்ளும் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
