Loading

ரகசியம் – 26

ஒருபுறம் மாறனும் மதுரிகாவும் குசுகுசுவென பேச மறுபுறம் மதுரனும் அறிவும் குசுகுசுவென பேச அதனைக் கவனித்த இனியா,

‘இதுங்க நாலு பேரும் செட்டு சேர்ந்து அப்படியென்ன குசுகுசுன்னு பேசுதுங்க’ என்று நினைத்தவள்,

“ஹலோ அங்க என்ன குசுகுசு” என்று கேட்க பின்பு நால்வரும் சகஜமாயினர்.

அவ்வாறே அந்நாள் கழிய அனைவரும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாயினர். அப்பொழுது இனியாவோ,

“ஹே மது.. நாளைக்கு என் தங்கச்சிக்கு பிறந்தநாள்.. அவளுக்கு சர்ப்ரைஸா டிரஸ் எடுத்துக் கொடுக்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன்.. செலெக்ஷன் பண்ண நீயும் வாயேன்.. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி டிரஸ் எடுத்துட்டு போகலாம்” என்று கேட்க பின்பு மாறன் இனியா மதுரிகா மூவரும் கடைக்கு சென்றனர். மதுமாறன் டெக்ஸ்டைலஸ்க்கு தான் சென்றனர்.

ஒவ்வொரு ஆடையாக பெண்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது மாறனின் கண்களில் நீல நிறத்தில் ஒரு ஆடை தென்பட்டது. அதில் இனியாவைக் கற்பனை செய்தவன் அவள் தேவதையாக தெரிய அதனை எடுத்து அவர்களிடம் நீட்டினான். அதனைக் கண்ட இனியா,

“டேய் மாறா இந்த டிரஸ் செமையா இருக்கு.. அவளுக்கும் நல்லா இருக்கும்” என்று கூறியபடி அதனைப் பார்க்க அவனோ,

“இல்லடி இது உனக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு” என்று கூற இனியாவோ,

“எனக்கா.. நீ வேற.. எனக்கு இந்த கலர் பிடிக்காது டா சாரி..” என்று மாறனுக்கு வருத்தமாக இருந்தது. இதனை மது கவனிக்கவும் தவறவில்லை.

“ஆனா விழிக்கு ரொம்ப பிடிச்ச கலர்.. நான் இதையே அவளுக்கு வாங்கிக்குறேன்” என்று அவள் கூறி பணம் செலுத்த போக மாறனோ,

“பரவாயில்ல இருக்கட்டும்.. நம்ம கடை தான்” என்று கூற இனியாவோ வாயைப் பிளந்தாள்.

“என்ன டி சொல்றான் இவன்.. உங்க கடையா இது” என்று மது கூற அவளும் ஆமோதித்தாள். பிறகு,

“இது தெரியாம இருந்துருக்கேன் இவ்ளோ நாளா.. சரி அதுக்காக.. ப்ரண்ட்ஷிப் வேற பிசினஸ் வேற.. நான் பணம் கொடுத்தே வாங்கிக்குறேன்” என்று இனியா கூற மாறனோ,

“உன் தங்கச்சிக்கு என் கிப்ட்டா இருக்கட்டுமே ப்ளீஸ்” என்று இனியாவிடம் பணம் வாங்க மனமில்லாமல் கூற அதற்குமேல் மறுக்க முடியாமல் இனியாவும் சரி என்றாள். பிறகு அலங்கார பொருட்கள் சில வாங்க வேண்டும் என்று கூற மாறனோ,

“வாங்கி முடிச்சுட்டு நீயே மதுவை எங்க வீட்டுல டிராப் பண்ணிடு.. பாய் மது.. அவ கூட வந்துரு.. நான் கிளம்புறேன்” என்று கிளம்பினான். செல்லும் வழியில் இமைவிழி தனியாக பதற்றமாய் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தவன்,

‘இந்த பச்சமிளகா ரோட்டுல தனியா நின்னு என்ன பண்ணிட்டு இருக்கா… ஒருமாதிரி பதட்டமா வேற இருக்கா’ என்றபடி அவளருகில் சென்றான்.

விழி சாலையில் பதற்றமாய் இருப்பதைப் பார்த்த மாறன் அவளருகில் சென்றான்.

“ஹே பச்சை மிளகா.. நீ என்ன இங்க தனியா நின்னுட்டு இருக்க.. ஏதும் பிரச்னையா” என்று கேட்க அவளோ அவனைப் பார்த்து,

‘அடப்பாவி இப்போ தான உன்னைப் பத்தி சொல்லிட்டு வந்தேன்.. அதுக்குள்ள வந்து நிக்குற’ என்று அகமகிழ்ந்தாலும் பதற்றமாய் சற்று தள்ளியிருந்த மரத்தைத் திரும்பி பார்த்தாள். அங்கு இரண்டு பள்ளி மாணவர்கள் நின்று கொண்டு விழியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். சில நாட்களாக விழியைக் காதலிக்குறேன் என்று ஒருவன் அவளின் பின்னே அலைந்து கொண்டிருக்க அன்று கோவிலில் மாறனும் விழியும் பேசுவதைப் பார்த்தவன் இன்று அவளிடம்,

“அன்னைக்கு ஒருத்தன் கூட கோவில்ல ஒருத்தன் கூட பேசிட்டு இருந்தியே யாரவன்” என்று கேட்க விழியோ,

“நான் தான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருக்கேன்.. எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்குன்னு.. நீ தான் நம்பள.. அவன் தான் என் ஆளு.. இனிமேயாச்சு என் பின்னாடி சுத்தாம இரு” என்று அவனிடம் மாறனும் அவளும் விரும்புவதாக கூறியவள் திரும்பி பார்க்காமல் சைக்கிளில் செல்ல அப்பொழுது தான் சைக்கிள் பஞ்சரானது. நடவற்றை நினைத்தபடி விழி நிற்க மாறனோ,

“ஒய்.. உங்கிட்ட தான் கேட்குறேன் என்னாச்சு” என்று மீண்டும் கேட்க அவளோ,

“இல்ல ஒண்ணுமில்ல.. சைக்கிள் பஞ்சர் ஆயிட்டு.. நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்” என்று பதற்றமாய் கூற அவனோ,

“சைக்கிள் பஞ்சராயிட்டுன்னு சொல்ற.. அப்புறம் எப்படி போவ” என்று கேட்க அவளோ,

‘ஐயோ கடவுளே.. இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைல தான் கிடைக்கணுமா.. வேற ஒரு நல்ல சிட்டுவேஷன்ல கிடைச்சுருந்தா.. நம்மாளு கூட ஜோடி போட்டு ஜாலியா போயிருக்கலாம்.. எல்லாம் என் நேரம்.. அவனுங்க கிட்ட வேற இவன என் ஆளுன்னு சொல்லி வச்சுருக்கேன்.. இப்போ அவனுங்க வந்து இவன்கிட்ட எதையும் ஒளரிட கூடாது’ என்று வேண்டியவள் திரும்பி பார்க்க அவர்கள் இவளை நோக்கி தான் வந்து கொண்டிருந்தனர்.

‘ஐயோ போச்சு வரானுங்க’ என்று நினைத்தவள் திரும்பி பார்த்து இன்னும் பதற்றமாக.. அவள் பார்க்கும் திசையில் மாறனும் பார்த்தான். பின்பு இவளிடம்,

“என்னாச்சு.. அந்த பசங்க உன்ன டிஸ்டர்ப் பண்றங்களா” என்று கேட்க இவள் ஆமென்று தலையசைத்தாள்.

“சரி ஓகே பயப்படாத.. நான் பார்த்துக்கறேன்” என்று இவன் கூற அவளோ,

‘அடேய் அவனுங்கள நெனச்சு நான் பயப்படலடா.. என் பயமே உன்ன நெனச்சு தான்.. அவனுங்க எதையாச்சும் உன்கிட்ட சொல்லிட்டா அவ்ளோ தான்.. என் லவ்வ நான் தான் உங்கிட்ட சொல்லுவேன்.. ஆனா இப்படி ஒரு சூழ்நிலைல உனக்கு தெரியுறதுல எனக்கு விருப்பம் இல்ல’ என்று மனதில் நினைத்தபடி இவள் நிற்க அவர்கள் இருவரும் இவர்கள் அருகில் வந்துவிட்டனர்.

“ஹே விழி.. ” என்றழைத்தவன் ஏதோ கூறுவர அதற்குள் மாறனோ,

“டேய் யாருடா நீங்க.. எதுக்கு இவளை டிஸ்டர்ப் பண்றீங்க..” என்று மிரட்ட அவனோ,

“அதை சொல்ல நீங்க யாரு முதல்ல.. ” என்று அவன் பதிலுக்கு எகிற மாறனோ சற்றும் யோசிக்காமல்,

“டேய் அவ என் ஆளுடா.. என் ஆளுகூட உனக்கென்ன பேச்சு.. இன்னொருதடவ இவ பின்னாடி நீ சுத்துறத பார்த்தேன் தொலைச்சு கட்டிருவேன்” என்று கூற விழியன் மனதில் இளையாராஜா பிஜிஎம் ஒலிக்கத் தொடங்கியது. வந்தவனோ,

‘அப்போ நிஜமாவே இவன் அவ ஆளு தானா.. ச்ச நல்ல ஃபிகர் மிஸ் ஆயிட்டாளே… இவன் வேற பார்க்க கொஞ்சம் ஜிம் பாடியா இருக்கான்.. எதுக்கு வம்பு அப்டியே போயிடுவோம்..’ என்று நினைத்துக் கொண்டு எதுவும் கூறாமல் நிற்க மாறனோ விழியிடம்,

“இதுக்கு தான் அப்போவே சொன்னேன்.. டெயிலி நானே உன்ன கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரேன்னு.. கேட்டியா.. வா ஒழுங்கா வந்து வண்டில ஏறு” என்று கூற விழிக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அந்த நிலைமையில் எதுவும் கேட்க முடியாத காரணத்தால் சைக்கிளை ஓரமாக நிறுத்தியவன் மாறனின் பின்னே ஏறிக்கொள்ள மாறனோ வந்தவனிடம்,

“டேய் சொன்னது புரிஞ்சது தானே.. இனிமே இவள தொந்தரவு பண்ணக் கூடாது சொல்லிட்டேன்” என்று மிரட்டிவிட்டு வண்டியைக் கிளப்ப அவனையே பேவென பார்த்த விழி பிடிமானம் இல்லாமல் உட்கார்ந்திருக்க அவன் கியரை முறுக்கியதில் நிலைத் தடுமாறி அவன் மேல் மோத அவனது முதல் ஸ்பரிசத்தில் தன்னை இழந்தவள் பின்பு தான் தன்னிலை அடைந்தாள்.

விழி வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி வண்டியை நிறுத்தியவன் அவளிடம்,

“சாரி.. அவனுங்க கிட்ட இருந்து உன்ன தப்பிக்க வைக்க தான் உன்னை என் ஆளுன்னு சொன்னேன்… நீ எதுவும் தப்பா நெனச்சுக்காத.. ஏதும் பிரச்சனைனா தைரியமா ஃபேஸ் பண்ணு ஓகே.. இனியாக்கு தங்கச்சியா இருந்துட்டு இப்படி பயந்துட்டு இருக்குற.. உங்கொக்கா விட்டா வாயாலயே ஊற வித்துருவா” என்று அவன் சிரித்தபடி கூற விழியோ,

‘எனக்கு பயமா.. போனவாரம் அவன் செவுள்ள விட்ட அடிய நீ பார்த்துருக்கணும்.. அது தெரியாம பேசிட்டு இருக்க சில்லி பாய்.. ஆனா ஒன்னு இப்போ என்னை உன் ஆளுன்னு நீ சொன்ன பொய் கூடிய சீக்கிரம் உண்மையா ஆகும்னு நம்புறேன்.. அதுக்குள்ள உன் மனச வேற எவகிட்டயும் பறிக் கொடுத்துறாத செல்லம்’ என்று இவள் மனதில் நினைத்துக் கொண்டிருக்க அவனோ,

“ஒய் பச்சைமிளகா.. என்ன நீ அடிக்கடி ஏதோ கனவு காண ஆரம்பிச்சுருர.. ” என்று அவள் முன் சொடக்கிட அவளோ,

“நீங்க ஏன் என்னைப் பச்சைமிளகான்னு கூப்புடுறீங்க” என்று அவள் கேட்க அவனோ,

“அவசியம் தெரிஞ்சே ஆகணுமா” என்று கேட்க அவளோ,

“சொல்லுங்களேன்.. ப்ளீஸ்” என்று கேட்க அவனோ சிரித்தபடி கூற ஆரம்பித்தான்.

அன்று விஜயா மாறனைக் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கி வர சொல்ல அவனும் வந்திருந்தான். அப்பொழுது கடைக்காரிடம் ஒரு பெண்,

“அண்ணா.. என்ன நீங்க.. இவ்ளோ காய்கறி வாங்கியிருக்கேன்.. பச்சைமிளகா ஃபிரியா கொடுக்க மாட்டிங்களா.. எப்போதும் உங்க கடைல தான பொருள் வாங்குது” என்று கீச் கீச் குரலில் பேரம் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது அங்கு வந்த மாறன்,

‘இந்த குரலை எங்கயோ கேட்டுருக்கோமே’ என்று நினைத்தபடி பார்க்க அவளைக் கண்டவன்,

‘இவ அவ தான.. இவ பேரு என்னன்னு தெரியலையே’ என்று நினைத்தவன் அவளிடம் பேச போக அதற்குள் அவன் நண்பர்கள் சிலர் அவனை சூழ்ந்துகொண்டனர். விழியோ ஒருவழியாக பேரம் பேசி,

“இப்போ என்னமா பச்சை மிளகா தான் வேணும்.. இந்தா எடுத்துக்கோ” என்று கடைக்காரரே சொல்லும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டாள். நண்பர்களிடம் பேசினாலும் விழியை கவனித்தவன் அவள் செயலில் சிரித்து,

“பச்சைமிளகா” என்று தனக்குள் கூறியபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். விழிக்கோ தன்னை யாரோ பார்ப்பது போன்று தோன்ற திரும்பி பார்க்க அதற்குள் அவன் கடைக்குள் சென்றிருந்தான். இவ்வாறு தான் அவளை பச்சைமிளகாய் என்று அழைப்பதற்கான காரணத்தை அவளிடம் கூற அவளோ,

‘அப்போ அன்னைக்கு யாரோ நம்மள பார்க்குற மாதிரி நமக்கு ஃபீல் ஆச்சே.. அப்போ நம்மாளு தான் பார்த்துருக்கானா’ என்று நினைத்து மகிழ்ந்தாள்.

“ஆமா உன் பேரு தான் என்ன.. இனியா விழின்னு கூப்பிட்டதை கவனிச்சேன்.. ஒருவேளை கயல்விழியா” என்று மாறன் கேட்க அவளோ,

“இல்லையே..” என்றாள். பிறகு மீண்டும் யோசித்தவன்,

“மலர்விழி..?” என்று கேட்க அவளோ இல்லையென்றாள்.

 

ரகசியம் – 27

பிறகு,

“சரி போ நீ சொல்ல மாட்ற.. ஹே சொல்ல மறந்துட்டேன்.. உனக்கு பர்த்டேன்னு இனியா சொன்னா.. அட்வான்ஸ் விஷஸ்” என்று கூற அவளோ,

“ஒரு க்ளூ வேணா கொடுக்குறேன்.. உங்க நேமோட ஃபர்ஸ்ட் லெட்டர் தான் எனக்கும் ஃபர்ஸ்ட் லெட்டர்.. நாளைக்கு பர்த்டேக்கு நேர்ல வந்து விஷ் பண்ணுங்க என் ஃபுள் நேம் சொல்றேன்.. பாய்” என்றவள் சிரித்தபடி சென்றாள். அவனும் சிரித்தபடி வண்டியைக் கிளப்பினான்.

மாலை வீடு வந்த இனியா விழியிடம் தான் எடுத்து வந்த ஆடையைக் கொடுக்க அதனை ஆவலாய் பிரித்து பார்க்க தனக்கு பிடித்த நிறத்தில் அந்த ஆடையைப் பார்த்தவள்,

“ஹே தேங்க்ஸ் டி.. செமயா இருக்கு” என்று அவளைக் கட்டிக்கொள்ள இனியாவோ,

“மாறன் தான் டி செலெக்ட் பண்ணான்.. அவனோட கிப்ட் தான் இது” என்று கூற அவளோ,

“ஹே என்னடி சொல்ற.. அவங்க எப்படி” என்று கேட்க இனியா நடந்ததைக் கூறினாள்.

அங்கு இனியா அறிவுக்காக செய்வதை மாறன் தனக்காக செய்ததாக எண்ணி மகிழ்ந்தது போல இங்கு மாறன் இனியாக்காக செய்ததை விழி தனக்காக செய்ததாக எண்ணி மகிழ்ந்தாள்.

மறுநாள் கல்லூரியில் அனைவரும் அமர்ந்து எப்பொழுதும் போல் போட்டிக் குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது இனியாவோ வேறு ஏதோ சிந்தனையில் இருக்க அதனை கவனித்த அறிவு,

“அன்பு.. என்னாச்சு.. ஏதோ யோசனைல இருக்க மாதிரி இருக்கு?” என்று கேட்க அவளோ,

“ஆமா டா.. இன்னைக்கு என் தங்கச்சிக்கு பிறந்தநாளுன்னு சொன்னேன்ல.. அதான் சின்ன பார்ட்டி மாதிரி பண்ணலாமா .. என்ன பிளான் பண்றது எங்க பிளான் பண்றதுன்னு ஒரே யோசனையா இருக்கு.. வீட்டுல வச்சு பண்ணா அவளுக்கு தெரிஞ்சுடும்.. ” என்று கூற அந்த நேரம் மதுரிகாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. விஜயா தான் அழைத்திருந்தார். பேசி முடித்து அழைப்பைத் துண்டித்தவள் மாறனிடம்,

“டேய் மாறா அத்தையும் மாமாவும் வெளியூர்ல ஒரு கல்யாண வீடுன்னு போறாங்களாம்.. வர நாளைக்கு காலைல ஆகுமாம்.. நம்மள பத்திரமா இருக்க சொன்னாங்க” என்று கூற மாறனோ,

‘அப்போ அந்த பச்சைமிளகா பர்த்டே பார்ட்டிய நம்ம வீட்டுலயே வச்சா என்ன’ என்று சிந்தித்தவன் இனியாவிடம்,

“ஹே பஜாரி.. அதான் எங்க வீட்டுல யாரும் இல்லல.. நாம காலேஜ் முடிஞ்சு எல்லாரும் நம்ம வீட்டுக்கு போலாம்.. அங்க போயிட்டு அர்ரேஞ்சமென்ட்ஸ் எல்லாம் பண்ணிட்டு ஈவ்னிங் அவளை அங்க வர வச்சு சர்ப்ரைஸ் பண்ணிடுவோம்” என்று கூற மதுவோ,

“ஹே ஆமா டா.. அதுவும் சரி தான்.. அத்தை மாமாவும் இல்ல.. சோ நல்ல என்ஜாய் பண்ணலாம்” என்று கூற அறிவோ,

“அப்புறம் என்ன.. மஜா தான்” என்று கூற மதுரனோ,

“அதானே நாம இன்னைக்கு என்ஜாய் பண்ணனும்னு தான் கரெக்ட்டா மாறன் அப்பா அம்மா ஊருக்கு போறாங்க போல” என்று கூற இனியாவோ யோசனையாகவே இருந்தாள். மாறனோ,

“இன்னும் என்ன யோசிச்சுட்டு இருக்க” என்று கேட்க இனியாவோ,

“இல்ல டா.. இதுவரை ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் இந்த மாதிரி போனது இல்ல.. அப்பா என்ன சொல்லுவாங்களோன்னு தான் பயமா இருக்கு” என்று கூற மாறனோ,

“அதை நான் பார்த்துக்கறேன்.. உங்க அப்பா நம்பர் சொல்லு” என்று கேட்க அவளும் கூற அலைபேசி எடுத்துக்கொண்டு சற்று தூரம் தள்ளி நின்று பேசியவன் பிறகு அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு இனியாவிடம் கொடுக்க அவளோ,

“ஹலோ அப்பா” என்று கூற ராமானுஜமோ,

“அன்பு.. நல்லபடியா பர்த்டே ஃபன்க்ஷன என்ஜாய் பண்ணிட்டு நைட்டு எட்டு மணிக்குள்ள நீயும் விழியும் வீட்டுக்கு வர பாருங்க.. சரியா டா மா.. அப்பாக்கு வேலை இருக்கு அப்புறம் பேசுறேன்” என்று கூறிவிட்டு துண்டிக்க அனைவரும்,

“ஹே எப்புர்ரா” என்ற ரீதியில் பார்த்தனர். இனியாவோ,

“டேய் என்ன டா சொன்ன” என்று கேட்க அவனோ,

“உண்மைய சொன்னேன்” என்று செட்டிலாக கூற மதுரிகாவோ,

“அடச்சீ சொல்லு” என்றிட அவனோ,

“ஹாஹா வெறி சிம்பிள்.. அன்னைக்கு அவ தங்கச்சி என் கைய உடைச்ச அப்போவே அவங்க அப்பாவ எனக்கு தெரியும் சொன்னேன்ல.. அதுல இருந்தே அவருக்கு என்மேல ஒரு மதிப்பு இருக்கு.. வெளிய ரெண்டு மூணு தடவ எதேர்ச்சியா பார்க்கும் போது அக்கறையா விசாரிப்பாரு.. அதனால நான் கேட்டதும் சரின்னு சொல்லிட்டாரு” என்று கூற மதுரனும் அறிவும் அவன் கூறுவது புரியாமல் முழிக்க மாறன் மற்றும் விழியின் முதல் சந்திப்பு பற்றி அவர்களுக்கு கூறினாள் இனியா.

“சரி ஓகே அப்போ எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு.. வாங்க கிளம்பலாம்” என்று மதுரிகா கூற அனைவரும் மாறன் மற்றும் மதுரிகா வீட்டிற்கு சென்றனர். அறுவரும் முதன்முறையாக ஒன்றாக சந்திக்க போகிறார்கள். இந்த சந்திப்பு யாரேனும் ஒருவர் வாழ்வில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வருமா..? பார்க்கலாம்.

ஐவரும் ஒன்றாக கிளம்ப மாறன் வண்டியில் எப்பொழுதும் போல் மதுரிகா ஏறிக்கொள்ள மதுரனின் வண்டியில் அறிவு ஏறிக்கொள்ள இனியா அவளது ஸ்டான்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட ஸ்கூட்டியில் கால் வைக்க போக திடீரென கால் தடிக்கு கீழே விழுந்து “அம்மா” என்று அலறினாள். மாறன்,

“ஹே இனியா பார்த்து” என்றும் அறிவு,

“ஹே அன்பு பார்த்து” என்றும் ஒரே சமயத்தில் பதற மது பின்னே இருந்ததால் சட்டென வண்டியிலிருந்து இறங்கி வர முடியாமல் மாறன் இருக்க அறிவோ அதற்கு முன்னரே வண்டியில் இருந்து இறங்கி அவள் கரம் பற்றி எழுப்பிவிட்டான்.

“பார்த்து வர கூடாதா” என்று கேட்க அவளோ,

“இல்ல கவனிக்கல டா” என்று கூற மாறனோ,

“அடி எதும் படல தானே” என்று கேட்க அவளும் இல்லையென்று கூற வந்தவள் சட்டென எதையோ யோசித்து,

“கை மட்டும் லேசா வலிக்குது” என்று முகம் சுருக்கி கூற மதுரிகாவோ,

“ஹே கை வலிக்குதுன்னு சொல்ற.. ஸ்கூட்டி ஓட்டிடுவியா..” என்று கேட்க இனியாவோ,

‘அப்படி கேளு டி என் செல்லாக்குட்டி’ என்று மனதில் நினைத்தவள்,

“தெரியல.. கொஞ்சம் அதிகமா தான் வலிக்குது.. ஓட்ட ட்ரை பண்றேன்” என்று பாவமாக கூற மதுரனோ,

“டேய் அறிவு.. நீ அவ ஸ்கூட்டியை ஓட்டிட்டு வா டா” என்று கூற,

‘வாவ்.. ஃபிரண்ட்ஸ்னா இவனுங்க தான் ஃபிரண்ட்ஸ்.. எப்படியெல்லாம் எடுத்து கொடுக்குறாங்க’ என்று மனதினுள் பாராட்டி மகிழ,

“சரி அன்பு.. நான் உன் ஸ்கூட்டியை எடுத்துட்டு வரேன்.. நீ வேணா மதுரன் பின்னாடி ஏறிக்கோ” என்று கூறி இவ்வளவு நேரம் குளிர்ந்திருந்த இனியாவின் மனதில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்தான் அறிவு.

‘டேய் பன்னி.. நீ தெரிஞ்சு இதெல்லாம் பண்றியா.. இல்ல தெரியாம பண்றியா டா.. கடவுளே இந்த வடிகட்டின முட்டாள வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய போறேனோ’ என்று மனதினுள் புலம்பியவள்,

“அவ்ளோ பெரிய வண்டியில ஏறி பழக்கம் இல்ல.. நான் உன்கூட ஸ்கூட்டியிலேயே வரேன்” என்று கூறியவள் அவன் கூறும் முன்னே அவன் பின்னே ஏறிக்கொள்ள மாறனின் முகம் லேசாக வாடியது. நொடியில் தன் முகபாவனையை மாறன் மாற்றிவிட ஆனால் மதுரிகா மட்டும் கண்ணாடி வழியே கண்டுகொண்டாள் தன் மாமன் மகனின் வாட்டத்தை.

இனியாவின் திட்டம் மதுரனுக்கு புரிய அவனோ அறிவிற்கு கண்களால், ‘நீ நடத்து நடத்து” என்று ஜாடைக் காட்ட அவனோ முறைத்தான். பிறகு,

“சரி கிளம்பலாமா” என்று மதுரன் கேட்க இப்பொழுது மாறனின் வண்டி இயங்கவில்லை. உதைத்து உதைத்து பார்த்தவன் மதுவை வண்டியை விட்டு இறங்க சொல்ல அறிவோ,

“என்னாச்சு டா” என்று கேட்க

“தெரில டா.. பெட்ரோல் இருக்கு.. ஆனா ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது” என்று கூறியபடி வண்டியை ஆராய்ச்சி செய்ய அறிவோ,

“சரி இப்போ என்ன செய்யலாம்.. மது நீ வேணா மதுரன் வண்டில ஏறிக்கோயேன்” என்று கூறிவிட்டு மதுரனுக்கு ஜாடைக் காட்ட.. சிரிக்கக்கூடாது என்று நினைத்தாலும் அவனை மீறி புன்னைகை ஒட்டியது மதுரனுக்கு. ஆனால் ஏற்கனவே மனம் வருந்திய மாறனை விட்டுச்செல்ல மனமில்லாத மதுவோ,

“உன்ன மட்டும் தனியா விட்டுட்டு நாங்க போகவா.. வேணாம் நீ வண்டிக்கு என்னாச்சுன்னு பாரு ஒண்ணா போய்டலாம்” என்று கூற அப்பொழுதும் அவள் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசும் தன் அத்தை மகளை நினைத்து மகிழ்ந்த மாறன்,

“இல்ல மது.. நீ அறிவு சொன்ன மாதிரி மதுரன் கூட போயிட்டு அவங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ.. தேவையான அரேஞ்சமென்ட்ஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.. நான் வண்டிக்கு என்னாச்சுன்னு பார்த்துட்டு சீக்கிரமா வந்துருறேன்” என்று கூற பிறகு,

“சரி மாறா.. சீக்கிரம் வா.. ஏதாச்சும்னா கால் பண்ணு” என்று கூறியவள் மதுரனின் உயரமான வண்டியில் எப்படி ஏறுவது என்று யோசிக்க அதனைக் கண்டுக் கொண்டவன்,

“மிஸ் பண்டாரம்.. இந்த ஸ்டூல் இல்லனா ஏணி எதுவும் தேவைப்படுதா” என்று சிரிப்பை உதட்டுக்குள் மறைத்து கேட்க அவளோ,

“மிஸ்டர் போர்க்யூபைன் மண்டை.. நீங்க ரொம்ப ஓவரா போறீங்க சொல்லிட்டேன்” என்று கூறியவள் முகத்தைத் திருப்பிக் கொண்ட நிற்க அதனையும் ரசித்த மதுரன்,

“சரி சரி கோச்சுக்காத.. பார்த்து ஏறு” என்றவன் தன் கைகளை நீட்ட அதுவரை இருந்த கோபம் மாறி இப்பொழுது லேசாக கூச்சம் வந்து ஒட்டிக்கொள்ள அதனை உதட்டைக் கடித்து மறைத்தவள் பின் அவன் கரம்பற்றி அவனது வண்டியில் ஏறிக்கொண்டாள். அக்காட்சியைக் கண்ட மாறனோ மதுவிடம்,

“என்ஜாய்” என்று இரு புருவங்களைத் தூக்கி காண்பிக்க அவனை முறைக்க முயன்று தோற்று புன்னகைத்த முகத்தை அவன் பார்க்கா வண்ணம் திருப்பி கொண்டாள். பிறகு நால்வரும் கிளம்ப செல்லும் அவர்களைப் பார்த்தபடி நின்றான் மாறன்.

ஏனோ அன்று போல் இன்றும் தனிமையாக உணர பிறகு பெருமூச்சுவிட்டவன் தன் வண்டியைத் தள்ளிக் கொண்டே அருகில் இருக்கும் பழுது பார்க்கும் கடைக்கு கொண்டு சென்றான்.

இனியாவிற்கோ தன்னவனுடன் வண்டியில் செல்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தன் அலைபேசியை எடுத்தவள் அதில் காதொலிப்பானை மாட்டி,

பார்த்த முதல் நாளே உன்னைப்
பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன்
காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே

எனும் பாடலை ஒலிக்கவிட்டபடி கேட்டுக்கொண்டே கண்ணாடியில் அவனின் முகத்தை ரசித்துக் கொண்டே வர இப்பாதை இவ்வாறே முடியாமல் நீண்டு கொண்டே போகாதா என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.

 

ரகசியம் – 28

மதுரனுக்கும் மதுரிகா தன்னுடன் வருவது பிடித்திருந்தது. வண்டியின் பின் இருக்கை சற்று உயரமாக இருக்க பிடிமானம் இல்லாமல் அவள் அவதிப்படுவதை உணர்ந்தவன் வேகத்தடைகளில் முற்றிலும் வேகத்தைக் குறைத்து மெதுவாக செல்ல அவனின் இந்த செயல் மதுரிக்காவிற்கு பிடித்திருந்தது.

நால்வரும் மது மற்றும் மாறனின் வீட்டிற்கு வந்து இறங்கினர். மூவரையும் மதுரிகா வீட்டினுள் அழைத்து செல்ல மதுரனுக்கோ சொல்லவியலா உணர்வு தோன்றியது வீட்டினுள் நுழையும் போது.

பிறகு மூன்று மணி நேரமாக பிறந்தநாள் விழாவிற்கு தேவையான அனைத்தையும் ஒரு அறையில் ஏற்பாடு செய்தவர்கள் ஹாலில் குழும மதுரிகாவோ,

“இந்த மாறன் ஏன் இன்னும் வரல” என்று நினைத்தவள் அவனுக்கு அழைக்க அழைப்பை ஏற்றவன்,

“இப்போ தான் முடிஞ்சுது மது.. வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்” என்று கூற,

“வந்துட்டு இருக்கியா.. சரி டா வா” என்க இனியாவோ அவளிடம் இருந்து அலைபேசியை வாங்கி,

“ஹே மாறா மாறா.. வர வழில தான் என் தங்கச்சி ஸ்கூல் இருக்கு.. இந்நேரம் ஸ்கூல் விட்டுருப்பாங்க.. நீயே கூட்டிட்டு வந்துடுறியா.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கூற அவளது கெஞ்சலில் சிரித்தவன்,

“ஹே லூசு.. இதுக்கு எதுக்கு இத்தனை ப்ளீஸ்.. கூட்டிட்டு வரேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் விழியை அழைத்து வர அவளது பள்ளிக்கு சென்றான்.

தன் தோழிகளுடன் பேசி சிரித்து வந்து கொண்டிருந்த விழி வாசலில் மாறன் நிற்பதைப் பார்த்து,

‘நம்மாளு இன்னைக்கும் இங்கேயா’ என்று யோசித்து மகிழ பிறகு,

‘இல்ல இல்ல இது என் கற்பனை.. நேத்து ஏதோ காரணமா வந்தான்.. அதே மாதிரி இன்னைக்கும் வருவான்னு நாம ஆசைப் பாட்டனால நமக்கு அவனை மாதிரி தெரியுது போல..’ என்று நினைத்தவள் அவனைக் கடந்து செல்ல அவனோ,

“என்ன இவ பார்த்தும் பார்க்காத மாதிரி போகுறா” என்று நினைத்தவன் அவளருகில் வண்டியை நிறுத்தி,

“ஓய் பச்சைமிளகா.. என்ன நீ கண்டுக்காம போற” என்று கேட்க அவளுக்கோ ஆச்சர்யம்.

“அப்போ இன்னைக்கும் நம்ம கற்பனை இல்லையா.. நிஜமா அவன் தான் வந்துருக்கானா” என்று யோசித்தபடி அவனையே பார்க்க அவனோ,

“போச்சு டா.. மறுபடியும்.. கனவுலகத்துக்கு போயிட்டியா” என்று அவளை உலுக்க நினைவு வந்தவள்,

“நீங்க எங்க இங்க” என்று கேட்க அவனோ,

“அதென்ன நாம எப்போ மீட் பண்ணாலும் இதே கேள்வியை கேட்குற.. சரி விடு வா வந்து வண்டியில ஏறு” என்று கூற அவளுக்கோ மயக்கம் வராத குறைதான்.

—————————-

அங்கு மதுவும் இனியாவும் வீட்டினுள் இருக்க ஹால் வாசலில் நின்று யோசனையாக வீட்டை தன் கண்களால் அலசியபடி பார்த்தான் மதுரன். அவனின் தோளைப் பற்றிய அறிவு,

“என்னாச்சு டா” என்று கேட்க அவனோ,

“தெரிலடா.. ஏதோ வித்தியாசமா ஃபீல் ஆகுது.. ஏற்கனவே இங்க வந்த மாதிரி இருக்கு” என்று கூற அறிவோ,

“ஏன் தோணாது.. அதான் ஃபியூச்சர்ல அடிக்கடி இங்க தான வர போற.. அதான் உனக்கு அப்படி தோணுது” என்று நக்கலாக கூற மதுரனோ,

“டேய் உன்ன வெளுக்க போறேன் பாரு.. அவகிட்ட நான் இன்னும் என் ஃபீல கன்வே கூட பண்ணலடா.. அதுக்குள்ள நீ பாட்டுக்கு ஃபியூச்சர் வரைக்கும் போய்ட்ட” என்று சாதரணமாக கூற அறிவோ,

“டேய் மச்சான்.. இப்போ என்ன சொன்ன நீ.. அப்போ உனக்கு லவ் வந்துட்டு அப்படி தான.. நீயே உன் வாயால சொல்லிட்ட” என்று கூற தான் உளறியதை நினைத்து நாக்கைக் கடித்தவன்,

“கத்தித் தொலையாத டா.. அவ காதுல கேட்டுட போகுது.. ” என்று கூறி ஹாலினுள் ஒரு சுவற்றோரம் அறிவைத் தள்ளிக்கொண்டு சென்றான் மதுரன்.

“இப்போதைக்கு எதையும் சொல்ல போறது இல்ல.. அட்லிஸ்ட் ஒன் இயாராச்சு முடியட்டும்.. அதுமட்டும்மில்ல என் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சியைப் பத்தி நான் அவகிட்ட சொல்லி அவ அதை ஏத்துக்கிட்டா தான் நீ சொன்ன ஃபியூச்சர் எல்லாம் நடக்கும்.. இல்லனா இதுக்கு அப்படியே எண்ட்கார்ட் தான்..” என்று கூறிக் கொண்டிருக்க சுவற்றின் மேல் மாட்டியிருந்த புகைப்படத்தில் இருந்த பூ ஒன்று மதுரனின் மேல் விழுந்தது.

இருவரும் மேலே பார்க்க அதில் தம்பதிகள் சகிதமாய் சிரித்துக் கொண்டிருந்தனர் பிரபாகரன் மற்றும் பானுமதி.

“டேய் மச்சான்.. இது மதுரிகா அப்பா அம்மாவா இருக்குமோ.. பாரேன் இப்போவே மாமனார் மாமியார் ஆசிர்வாதம் கிடைச்சுருச்சு போல உனக்கு” என்று கேட்க மதுரனும்,

“உன்ன சாவடிச்சுருவேன்..” என்று கூறியவன் யோசனையாக அந்த புகைப்படத்தைப் பார்த்தான்.

“மது பாவம்ல டா.. அப்பா மட்டும் இல்லாமையே நான் ரொம்ப ஃபீல் பண்றேன்.. இதுல ஒரு பொண்ணா இருந்து அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லாம இருக்குறது.. ரொம்பவே கஷ்டமா இருக்கும்ல… ஆனா இதை எல்லாம் அவ எதுமே இதுவரை வெளிய காட்டிக்கிட்டது இல்லல” என்று கூற மதுரனோ,

“ஃபீல் பண்ணா தான டா வெளிய காட்டுவா.. எனக்கு தெரிஞ்சு மாறன் அப்பா அம்மா அவளை ரொம்பவே நல்ல பார்த்துக்குறாங்க.. அதனால அவளுக்கு அப்பா அம்மா ஏக்கம் வராம இருக்கு” என்று மாறன் கூற அப்பொழுது அங்கு வந்த இனியா,

“ஹே மதுரா.. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் மதுகிட்ட நான் இந்த கேள்வியை கேட்டேன்.. அப்பா அம்மா இல்லன்னு ரொம்பவே ஃபீல் பண்ணுவலன்னு.. ஏன்னா ஒரு அம்மா இல்லாம வளருறது ரொம்பவே கஷ்டம்னு அனுபவிச்ச எனக்கு தெரியும்.. என்ன தான் அப்பா நல்ல பார்த்துக்கிட்டாலும் ஒரு பொண்ணுக்கு அம்மாவோட அரவணைப்பு ரொம்பவே அவசியம்.. ஆனா அவ என்கிட்ட நீ சொன்னத தான் சொன்னா.. என் அத்தை மாமா என் சொந்த அப்பா அம்மா மாதிரி பார்த்துக்குறாங்கன்னு..” என்று இனியா கூற இனியாவின் அன்னை இறந்த விஷயம் இப்பொழுது தான் தெரியவந்தது மதுரன் மற்றும் அறிவுக்கு. அறிவோ,

“அன்பு.. உங்க அம்மா…” என்று சங்கடமாய் இழுக்க அவளோ,

“இறந்துட்டாங்க அமுது” என்று கூறியவள் விரக்தி சிரிப்புடன் சென்றாள். மதுரனோ,

“இவ்ளோ நாள் பழகிருக்கோம்.. இது தெரியாம இருந்துருக்கோமே டா” என்று கேட்க அறிவோ,

“ஆமா மச்சான்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனை.. ச்ச” என்றவன் இனியாவிற்காக வருத்தப்பட்டபடி செல்ல மதுரனோ புகைப்படத்தில் இருந்த தம்பதியரை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தபடி சென்றான்.

மாறன் விழியை உரிமையாய் வண்டியில் ஏற சொல்ல விழியோ மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில்,

‘என்னாச்சு இந்த மனுஷனுக்கு.. ஒருவேளை நாம்மாளுக்கு நம்ம மேல ஏதும் ஃபீல் வந்துருக்குமோ.. இவ்ளோ உரிமையா பேசுறாப்டி.. ஆனா மூஞ்சில லவ்வுக்கான எவிடென்ஸ் எதுவுமே தெரியலையே.. என்னவா இருக்கும்.. சரி எதுக்கும் நாம கொஞ்சம் ஸீன் போடுவோம்’ என்று நினைத்தவள்,

“ஹலோ.. என்ன நீங்க.. நீங்களா வந்திங்க.. நீங்களா வண்டியில ஏறுன்னு சொல்றீங்க.. சைக்கிள் ரிப்பேர் ஆனதுனால என்னைக் கூப்பிட அப்பா வரேன்னு சொல்லிருக்காங்க.. உங்க கூட எதுக்கு நான் வரணும்” என்று கூறியவள் அருகில் இருந்த டெலிபோன் பூத்தில் தன் தந்தைக்கு அழைத்தாள். மாறனோ,

“அடேங்கப்பா.. ரொம்ப தான்.. உங்க அப்பாக்கிட்டயா பேச போற.. சரி பேசு பேசு” என்றவன் வண்டியில் அமர்ந்தபடியே கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்க்க அழைப்பை ஏற்ற ராமானுஜம்,

“விழிமா.. மாறன் தம்பி வீட்டுக்கு போ… அப்பா வர நைட்டு ஆகும்டா” என்று கூறிவிட்டு துண்டித்துவிட விழிக்கோ தலையே சுற்றியது.

‘இங்க என்ன தான் நடக்குது.. ஒரு எழவும் புரியல.. நம்மாளு நம்மள கூப்பிட வந்தது ஒரு ஆச்சர்யம்னா.. நம்ம அப்பாவே இவன் வீட்டுக்கு போக சொன்னது அடுத்த ஆச்சர்யம்.. என்ன நடக்குது இங்க..’ என்று குழம்பியபடி மாறனைப் பார்க்க அவனோ உதடு மடித்து சிரித்தபடி நக்கலாக பார்த்தான் விழியை. பிறகு தன் தந்தை சொன்னதால் எதுவும் கூறாமல் வண்டியில் ஏறிக்கொள்ள அவனும் வண்டியைக் கிளப்பினான்.

“ஆமா இப்போ எதுக்கு நீங்க பிக்கப் பண்ண வந்துருக்கீங்க.. நாம ஏன் உங்க வீட்டுக்கு போறோம்..” என்று விழி கேட்க அவனோ,

“ஹான்.. நேத்து நீ தான சொன்ன.. உன் பர்த்டேக்கு நேர்ல வந்து விஷ் பண்ணா உன் முழுப்பெயரை சொல்றன்னு.. அதுக்கு தான் கூட்டிட்டு போறேன்” என்று இவன் கூற அவளோ,

“அதை நீங்க இங்கயே விஷ் பண்ணாக் கூட நான் சொல்லுவேனே.. உங்க வீட்டுக்கு எதுக்கு” என்று கூற அவனோ பதில் கூறாமல் வண்டி ஓட்டுவதில் கவனமாயிருந்தான்.

‘ஐயோ கடவுளே.. நடக்குற எல்லாம் எனக்கு சாதகமா நான் சந்தோஷம் படுற மாதிரி நடக்குது.. ஆனா நான் சந்தோஷம் படாம குழப்பத்துல புலம்பிட்டு இருக்கேன்.. சரி என்னவோ நடந்துட்டு போகட்டும்.. இப்போ நம்ம ஆளு கூட இருக்குற இந்த மொமெண்ட்டை என்ஜாய் பண்ணுவோம்’ என்று நினைத்தவள் அவனை சைட் அடித்துக் கொண்டு வர வீடும் வந்தது. மாறன் முன்னே நடக்க விழியோ எதற்கிங்கே வந்திருக்கிறோம் என்று மீண்டும் யோசித்தபடி தயக்கமாய் நின்றிருந்தாள்.

“இவ ஒருத்தி ஆனா ஊனா கனவு கண்டுட்டு நின்னுடுவா” என்று வாய்விட்டு புலம்பியவன் அவளின் கரம்பற்றி வீட்டினுள் அழைத்து செல்ல அவனையே இமைக்க மறந்து பார்த்த இமை அவளறியாமலே வலதுகால் எடுத்து வைத்து வைத்து உள்ளே சென்றாள்.

அங்கு இனியா மதுரிகா மதுரன் மற்றும் அறிவு நாள்வரை பார்த்தவள் இனியாவிடம்,

“இனியா.. நாம எதுக்கு இங்க வந்துருக்கோம்.. இவங்க ரெண்டு பேர் யாரு” என்று மதுரனையும் அறிவையும் சுட்டிக்காட்டி கேட்க இனியாவோ,

“இது மதுரன்.. அவன் அறிவு” என்க இருவருக்கும் ஹாய் என்று கூறினாள் விழி. பிறகு மதுரன் அறிவு மதுரிகா மூவரும் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.

‘அட பக்கிங்களா.. பர்த்டே சர்ப்ரைஸ் பண்ண தான் இவ்ளோ அளப்பறையா.. ச்ச நான் கூட நம்ம ஆளுக்கு நம்ம மேல ஃபீல் வந்துட்டோன்னு நெனச்சு சந்தோஷம் பட்டுட்டேன்’ என்று மனதில் நினைத்து ஏக்க பெருமூச்சுவிட பிறகு வேண்டுமென்றே இனியாவை வெறுப்பேற்ற அறிவிடம்,

“நீங்க சிரிச்சா க்யூட்டா இருக்கீங்க” என்று கூற அறிவோ,

“இஸ் இட்.. தேங்க்ஸ் விழி” என்று அவன் சிரிக்க அதனைப் பார்த்த இனியாவுக்கு வயிறு எரிந்தது. பிறகு விழியோ,

“ஏதோ புகை வாட வருதுல்ல” என்று நக்கலாக கேட்க அவள் கூறுவது எதற்கென்று புரிந்த மதுரன்,

“ஆமா டா மா.. எனக்கும் வருது” என்று கூற விழியோ,

“அப்படி சொல்லுங்கண்ணா” என்று கூறி ஹைஃபைக் கொடுத்து கொள்ள இனியா முறைத்தாள். அறிவோ அவர்கள் கூறியது புரிந்தும் புரியாதது போல் அலைபேசியைப் பார்த்தபடி கண்டுகொள்ளாமல் இருந்தான். இவர்கள் பேசுவது புரிந்த மதுரிகாவோ மாறனை நினைத்து வருத்தப்பட்டாள்.

 

ரகசியம் – 29

‘எனக்கென்னமோ இனியா அறிவை லவ் பண்ரான்னு இப்போ கன்ஃபார்மா தோனுது.. இது தெரியாம மாறன் இனியா மேல ஃபீலிங்ஸ வளர்த்துட்டு இருக்கான்.. ஆனா அறிவுக்கு இனியா மேல ஃபீல் இருக்க மாதிரி தெரிலையே.. ஒருவேளை அறிவு இனியாவை லவ் பண்ற மாதிரி தெரிஞ்சா அதை சொல்லியாச்சு மாறனைத் தடுக்கலாம்.. இப்போ என்னன்னு சொல்றது எப்படி சொல்றது.. இது எங்க போய் முடிய போகுதோ..’ என்று வருந்தியவள் மாறனைப் பார்க்க அவனோ இவர்கள் பேசுவது எதையும் கவனிக்காமல் இனியாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முதமுறையாக தன் வீட்டில் அமர்ந்திருப்பதை பார்த்த உடனே அவனது மனதில்,

என் வீட்டில் நீ
நிற்கின்றாய் அதை
நம்பாமல் என்னைக்
கிள்ளிக்கொண்டேன்

எனும் வரிகள் மனதினுள் ஒலிக்க மற்றவர்கள் அனைவரும் பேசுவது அவனுக்கு ஓசையற்ற காணொளியாக காணப்பட்டது. இனியாவோ,

‘போயும் போயும் இவளுக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு ரெடி பண்ணேன்ல.. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. இந்த மதுரன் வேற அவகூட சேர்ந்து கிண்டல் பண்றான்.. ஒருவேளை அவனுக்கு டவுட் வந்துருக்குமோ.. அவனுக்கு டவுட் வந்தா இந்நேரம் அமுதுக்கும் தெரிஞ்சுருக்கும் தான அப்போ.. எதுக்கு வம்பு நாம அப்படியே எஸ்கேப் ஆயிடுவோம்’ என்று நினைத்தவள்

‘வீட்டுக்கு வா டி.. உன்ன கவனிச்சுக்குறேன்’ என்று கண்களால் தன் தங்கைக்கு சைகைக் காட்டியபடி ஏற்பாடு செய்த அறைக்குள் சென்றாள். சென்றவள் தன் கையில் நேற்று வாங்கிய உடையைக் கொண்டு வர அதனை விழியிடம் கொடுத்து,

“பேசுனது போதும் மூடிட்டு போய் ட்ரெஸ் செஞ்ச் பண்ணிட்டு வா” என்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மதுவின் அறைக்கு அவள் செல்ல போக அவளைத் தடுத்த மதுரிகா,

“ஓய் அங்க வேணாம் டா.. மாடில மாறனோட ரூம் இருக்கு.. அங்க போய் ட்ரெஸ் செஞ்ச் பண்ணிக்கோ” என்று கூற விழியோ,

‘ஆஹா.. இன்னைக்கு என்ன.. எல்லாமே டபுள் தமக்காவா இருக்கே.. நம்மாளோட ரூமுக்கு போக போறோம்’ என்று நினைக்கவே அவளுக்கு வெட்கமாக இருந்தது.

“ஓகே மது அக்கா” என்று மதுவிடம் கூறியபடி மாறனின் அறைக்கு செல்ல போக மாறனோ,

“ஹே பச்சைமிளகா ஒரு நிமிஷம்.. நான் போய்ட்டு ஷர்ட் மட்டும் மாத்திட்டு வந்துடுறேனே.. ரொம்ப ஸ்வெட்டா இருக்கு.. இல்லனா அம்மா அயன் பண்ண ஷர்ட் என் டேபிள்ள இருக்கும் அதை மட்டும் எடுத்து கொடு நான் மாத்திக்குறேன்” என்று கூற விழியோ,

“நீங்க ரெடியாக இப்போ என்ன அவசரம்.. நான் தானே பர்த்டே பேபி.. எனக்கு தானே சர்ப்ரைஸ் பார்ட்டி.. அப்போ நான் தான் முதல்ல ரெடியாகணும்” என்று கூற அறிவோ,

“என்ன விழி.. இப்படி பொசுக்குன்னு கண்டுபிடிச்சுட்ட.. அன்பு எவ்ளோ கஷ்டப்பட்டு சர்ப்ரைஸ் பிளான் போட்டா தெரியுமா” என்று கூற விழியோ,

“அட நீங்க வேற.. இது பெரிய சிதம்பர ரகசியமா.. பிறந்தநாள் அன்னைக்கு திடிர்னு ஒரு பிள்ளையை கூட்டிட்டு வந்து எதுவுமே சொல்லாம ரெடியாகிட்டு வான்னு சொன்னா வேறென்ன இருக்க போகுது..” என்று கூறி சிரித்தபடி சென்றாள். மதுரனோ,

“இனியா உன்னைவிட உன் தங்கச்சி ரொம்ப ஷார்ப்பா இருக்கா..” என்று கூற அனைவரும் சிரித்தனர். கதவினைத் திறந்து அறையை நோட்டம்விட்டவள்,

‘பரவாயில்ல நம்மாளு ரூமை க்ளீனா தான் வச்சுருக்கு.. நமக்கு ஃபியூச்சர்ல ரூம் க்ளீன் பண்ற வேலை மிச்சம்..’ என்று நினைத்தவள் பிறகு தனது எண்ணத்தை நினைத்து வெட்கப்பட்டு கொண்டாள். அவ்வாறே கனவு கண்டபடியே மாறன் வாங்கி கொடுத்த உடையை மாற்றிவிட்டு சிறிதான ஒப்பனையுடன் வெளியே வர எத்தனிக்க அப்பொழுது மேஜையில் அயன் செய்யப்பட்ட மாறனின் சிவப்பு நிற சட்டையைப் பார்த்தவள்,

‘நம்ம ப்ளூ டிரஸ் போட்டா நம்மாளும் நமக்கு மேட்ச்சா ப்ளூ டிரஸ் தான போடணும்’ என்று நினைத்தவள் அயன் செய்த அந்த சட்டையை கசக்கி ஓரமாக வைத்துவிட்டு கப்போர்டில் நீல நிற சட்டையைத் தேடி எடுக்க அது மிகவும் கசங்கி இருந்தது.

‘இதென்ன இவ்ளோ கசங்கியிருக்கு.. சரி நாமளே அயன் பண்ணுவோம்.. ஃபியூச்சர்ல எப்படியும் நாம செய்ய வேண்டிய வேலை தான இது’ என்று நினைத்து அதனை அவளே அயன் செய்து மேஜையில் வைத்தாள். பிறகு அறையைவிட்டு வெளியே வந்தவள் வந்ததும் மாறனைத் தான் பார்த்தாள். அவனோ,

“ஹே பச்சைமிளகா.. உனக்கு இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு” என்று கூற மனதினில்,

‘இது போதும் எனக்கு.. இது போதுமே.. வேறென்ன வேண்டும் நீ போதுமே’ என்று பாடல் ஒலிக்க புன்னகைப் புரிந்தாள். பிறகு மாறன் சென்று உடைமாற்றிவிட்டு வர விழி நினைத்தது போல் அவளும் அவனும் கனகச்சிதமாக பொருந்தியது போன்ற உணர்வு விழிக்கு.

பிறகு இனியா விழியின் கண்களைக் கட்டியபடி ஏற்பாடு செய்திருந்த மதுவின் அறைக்குள் அழைத்து செல்ல உள்ளே வந்ததும் விழிவிரித்து பார்த்தாள் விழி. அலங்காரங்கள் அவ்வளவு அழகாக இருந்தது. இதுவரை இந்த அளவு ஏற்பாடோடு பிறந்தநாள் கொண்டாடியதில்லை விழி.

ஏற்கனவே தன்னவன் அருகில் இருக்கும் ஆனந்தம் ஒருபுறம் இவ்வளவு ஏற்பாடுகள் தனக்காக என்று நினைக்கும் போது ஏற்படும் ஆனந்தம் ஒருபுறம் இது போதாது என்று இத்தகைய ஏற்பாடுகளுக்கு காரணமே மாறன் கொடுத்த யோசனை தான் என்று இனியா கூறி மேலும் ஆனந்த மழையில் நனைக்க செய்தாள் அவளை.

பிறகு கேக் வெட்டிக் கொண்டாடி அதை அனைவரும் விழிக்கு ஊட்டவும்.. விழி அனைவர்க்கும் ஊட்டவும்.. என அமோகமாக கொண்டாடட்டம் முடிந்தது. பிறகு அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள விழியோ,

‘நம்மாளு கூட தனியா ஒரு பிக் எடுத்தா செமையா இருக்குமே’ என்று யோசித்தவள் அதற்கு ஒரு திட்டம் தீட்டி,

“நான் தான பர்த்டே பேபி.. சோ எல்லார்கூடயும் தனித்தனியா ஒரு செல்ஃபி எடுப்பேன்” என்று கூறி ஒவ்வொருவருடனும் எடுத்துக் கொண்டாள். கடைசியாக அவள் எதிர்பார்த்தபடி மாறனுடன் எடுக்க இருவரது ஜோடி பொருத்தம் அழகாக இருந்தது. அவள் குறும்பாக விதவிதமாய் பாவனைக் கொடுக்க அதனைக் கண்டு சிரித்தவன்,

“பார்க்கவும் கொழந்த மாதிரி இருக்க.. உன் பிஹேவியரும் கொழந்த மாதிரி க்யூட்டா இருக்கு” என்று வெறும் அன்பின் அடிப்படையில் கூறியவன் விளையாட்டாய் அவள் மூக்கை ஆட்டிவிட அது விழியின் காதல் மனதில் மேலும் காதலைக் கூட்டியது. அவளோ அவனிடம்,

“நீங்களும் ப்ளூ ட்ரெஸ் நானும் ப்ளூ ட்ரெஸ்.. சேம் பின்ச்.. சாக்லேட் கொடுங்க” என்றிட அவனோ ஏற்கனவே தன் சட்டைப் பையில் வைத்திருந்த கிட்கேட் சாக்கலேட்டை எடுத்து அவளிடம் கொடுக்க அவளுக்கோ இன்ப அதிர்ச்சி.

“இது எப்போ வாங்குனீங்க” என்று கேட்க அவனோ,

“நேத்து உன்ன உங்க ஏரியால விட்டுட்டு வரும் போது..” என்று கூறிவிட்டு செல்ல விழியோ,

‘அன்னைக்கு எனக்கு கிட்கேட் பிடிக்கும்னு சொன்னதை இன்னமும் நியாபகம் வச்சுருக்கீங்க.. தேங்க்ஸ்’ என்று மானசீகமாக நன்றி கூறிக்கொண்டாள். பிறகு அனைவரும் அமர்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருக்க மணி இரவு ஏழு ஆனது. மதுவோ,

“சரி இருங்க.. நான் ஏதாச்சும் சமைக்குறேன்.. சாப்பிட்டு போலாம்” என்று கூற மதுரனோ,

“போச்சு நாளைக்கு யாரும் உயிரோட இருக்க மாட்டோம்.. இதுதான் நம்ம கடைசி சந்திப்பு” என்று கூற மதுரிகாவோ,

“என்ன டா சொன்ன” என்றபடி அடிக்க துரத்த அவள் பிடியில் சிக்காமல் ஓடிய மதுரன் மதுவின் அறைக்குள் ஓடி அவள் அலமாரிக்குள் ஒளிந்து கதவினை உள்பக்கம் தாழிட,

“மவனே மாட்டுனியா.. என் சமையலயா கிண்டல் பண்ற.. உள்ளயே இருந்துக்கோ” என்றவள் வெளியே சாவியைப் பூட்டிவிட்டு வர மாறனோ,

“அடியே செத்துற கித்துற போறான் டி.. அப்புறம் நீ தான் கொலை கேஸ்ல உள்ள போகணும்” என்றவன் மதுரனை விடுவிக்க எண்ணி கதவினைத் திறக்க மதுரனோ மயங்கி சரிந்தான்.

மதுரனை விடுவிக்க எண்ணி மாறன் அலமாரிக் கதவினைத் திறக்க மதுரன் மயங்கி சரிந்தான்.

“ஹே மதுரா.. டேய் என்னாச்சு” என்று சத்தமிட்டபடி அவனின் கன்னங்களில் தட்டி எழுப்ப சத்தம் கேட்டு அனைவரும் அங்கு குழும மதுரன் மயங்கி இருப்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். அதிலும் அறிவும் மதுரிகாவும் மிகவும் பதறிப் போயினர்.

மதுரிகாவிற்கோ கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர மாறன் மற்றும் அறிவு தொடர்ந்து அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை எழுப்பும் முயற்சியில் இருந்தனர். விழியும் இனியாவும் பதற்றமாய் நிற்க மதுவோ மதுரனின் அருகில் வந்து அவனது தலையைத் தன் மடியில் ஏந்தியவள் அவள் பங்கிற்கு எழுப்ப முயற்சி செய்ய அவனோ கண் விழிக்கவே இல்லை.

“நான் விளையாட்டா செஞ்ச ஒரு விஷயம் இப்படி ஆயிடுச்சே.. என்னால தான் இவனுக்கு இப்படி ஆச்சு” என்று கூறியபடி மதுரிகா அழ தொடங்க,

“ஆமா உன்னால தான் இப்படி ஆச்சு” என்று மதுரனின் குரல் கேட்க அனைவரும் மதுரனைப் பார்க்க அவனோ கண் விழிக்காமல் தான் இருந்தான். அனைவரும் பேந்த பேந்த முழிக்க மயங்கியது போன்று நடித்த மதுரன் சிரிக்க அப்பொழுது தான் அனைவருக்கு மூச்சே வந்தது.

“டேய் நாதாரி.. ஏன் டா இப்படி பண்ண” என்று மாறனும் ,

“டேய் அறிவுகெட்ட நாயே.. எதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை வேணாமா” என்று அறிவும்,

“ஆமா லூசாடா நீ.. நாங்க எவ்ளோ பதறிட்டோம் தெரியுமா” என்று இனியாவும்,

“ஏன் அண்ணா இப்படி செஞ்சீங்க.. என் பர்த்டே அதுவுமா உங்களுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு எவ்ளோ வருத்தப்பட்டேன் தெரியுமா.. மது அக்கா வேற பாவம்.. ரொம்ப அழுதுட்டாங்க” என்று விழியும் கூற மதுரனோ மிகவும் ஒய்யாரமாக மதுவின் மடியில் தலையை வைத்தபடியே அவள் முகத்தைப் பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் இப்போவோ அப்பாவோ என்று விழ காத்திருக்க அவனையே முறைத்து பார்த்தாள் மதுரிகா. கோவமாக அவனது தலையை கீழே வைத்தவள் எழுந்து செல்ல போக அவளது கைப் பிடித்து தடுத்தவன்,

“மிஸ் பண்டாரம் சாரி.. சும்மா விளையாண்டேன்” என்று கூற எதுவும் கூறாமல் கையை உதறிக்கொண்டு சென்றவள் நேரே வெளியே இருந்த தோட்டம் போன்ற இடத்திற்கு சென்று அமர்ந்துவிட்டாள். மற்ற மூவரும்,

‘அதுங்களுக்கு வேற வேலை இல்ல.. எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டு திரியுதுங்க’ என்று நினைத்தபடி ஹாலில் அமர்ந்துவிட விழியோ,

“பாவம் அந்த அக்கா.. யாராச்சும் சமாதானம் பண்ணலாம்ல..” என்று கேட்க இனியாவோ,

“அவன் செஞ்சதுக்கு அவன் தனியா சமாதானம் பண்ணட்டும்.. கொஞ்ச நேரத்துல பதற வச்சுட்டான் படுபாவி” என்று கூற பிறகு விழியும் அவர்களோடு அமர்ந்து கொண்டாள்.

 

ரகசியம் – 30

மதுரனோ, “ஓய்.. இப்போ எதுக்கு இப்படி மூஞ்சை வச்சுருக்க.. நான் தான் சொல்றேன்ல சும்மா ஒரு ஃபன்னுக்கு மயக்கம் போட்ட மாதிரி நடிச்சேன்.. நீ இவ்ளோ ரியாக்ட் பண்ணுவன்னு நான் நினைக்கல” என்று கூறியவனுக்கு அவளின் கலங்கிய முகம் இன்னும் கண்ணில் நின்றது. தனக்காக ஒரு பெண் அழுகிறாள் என்பது மதுரனுக்கு இதுவே முதல் முறை. அவளோ,

“உன் நடிப்பு தன்மையை உனக்கு நெருக்கமானவங்க கிட்ட காட்ட தான்.. நீ நடிப்பை கத்துக்க காலேஜுக்கு வந்தியா.. மத்தவங்க எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்கன்னு யோசிக்கவே மாட்டல..” என்று கோபமாக கூற இன்னும் அதன் தாக்கம் மதுவிடம் குறையவில்லை என்று அவள் குரலிலும் கையிலும் இருந்த நடுக்கம் பறைசாற்றியது. அவளையே சிரிப்புடன் மதுரன் பார்க்க அதனைப் பார்த்த மதுரிகா,

“சிரிக்காத தயவு செஞ்சு.. செம்ம கடுப்பாகுது..” என்று நடுங்கிய விரலை நீட்டி எச்சரிக்க அவளின் கையைப் பற்றியவன் தன் கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டான் மதுரன். அவனது இந்த செயலை எதிர்பார்க்காத மதுரிகா திகைத்து அவனைப் பார்க்க அவனோ அவள் கண்களைத் தான் பார்த்திருந்தான். அவனது ஸ்பரிசத்தில் சற்று அவளது நடுக்கம் குறைய,

‘ஒண்ணுமில்ல.. ஐம் ஓகே’ என்று கண்களால் கூறியபடி கைகளில் அழுத்தம் கொடுத்தான். மதுரிகாவிற்கோ இப்பொழுது என்ன மாதிரி பாவனைக் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் கைகளை அவனிடம் இருந்து எடுக்க மனம் வராமலும் எடுக்காமல் இருக்கவும் முடியாமல் பெண்ணவள் திணற அதனைப் புரிந்துக் கொண்டவன் அவள் கைகளை விடுவித்து கொண்டான்.

“நான் ஒன்னு கேட்டா.. உண்மைய சொல்லுவியா” என்று அவன் கேட்க அவளோ,

“என்ன” என்றாள்.

“நான் மயங்கி விழுந்ததும் அங்க இருந்து எல்லாரும் பதறுனாங்க.. ஆனா நீ மட்டும் அழுத.. ஏன்” என்று கேட்க அவளோ,

“இல்ல அது.. என்னால தான் இப்படி ஆயிடுச்சோன்னு” என்று இழுக்க அவனோ,

“ஓ.. அப்போ வேற யாராலயும் இப்படி எனக்கு ஆயிருந்தா இந்த அளவுக்கு பயந்திருக்க மாட்ட.. அப்படி தான” என்று அவள் கண்களை ஊடுருவியபடி கேட்க அவன் கண்களைக் காண முடியாதவள் வேறு பக்கம் திரும்பி கொண்டு,

“ஆமா” என்று கூற,

“அந்த ஆமாவ என்னைப் பார்த்து சொல்லு பாப்போம்” என்று கூற.. கூற முயன்று தோற்றாள் அவள். அவனோ புன்னகைத்தபடி,

“நான் சொல்லவா ஏன்னு..” என்று மதுரன் கேட்க அவளோ கேள்வியாய் அவனை நோக்க,

“ஏன்னா.. ஃபிரண்ட்ங்குறத தாண்டி ஒரு உணர்வு என்மேல உனக்கு இருக்கு.. உனக்கு மட்டுமில்ல.. நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கு..” என்று கூறினான்.

“நீ.. நீ.. என்ன சொல்ற.. எனக்கு அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்ல” என்று தட்டு தடுமாறி கூறியவள் எழுந்து செல்ல போக அவளைத் தடுத்தவன்,

“இல்ல நீ பொய் சொல்ற.. சரி உனக்கு அந்த எண்ணம் இல்லாம இருக்குறதாவே இருக்கட்டும்.. ஆனா எனக்கு இருக்குற எண்ணத்தை நீ கேட்டுட்டு போ” என்று கூற அவளோ புரியாமல் முழிக்க அருகிலிருந்த ரோஜா சேடியில் இருந்து ஒரு ரோஜாவைப் பறித்தவன் அவள் முன் மண்டியிட்டு சற்றும் யோசிக்காமல்,

“ஐ லவ் யு தூரிகா” என்றிட இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண்ணவள் அவன் கூற்றில் உறைந்து நின்றாள்.

“நான் உள்ள போறேன்” என்றபடி பெண்ணவள் எழுந்து சென்றுவிட அப்பொழுது தான் தன்னிலை அடைந்த மதுரனுக்கு நடந்தது புரிந்தது.

“சிரிக்காத தயவு செஞ்சி.. செம கடுப்பாகுது” என்று கூறிய பெண்ணவள் முகத்தைத் திருப்பி கொண்டு கோபமாக அமர்ந்துவிட அதற்குப்பின் அவளும் எதுவும் பேசவில்லை. மதுரனும் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு நடந்த எல்லாம் தன் கற்பனை மட்டுமே என்று உணர்ந்த மதுரனோ நாக்கைக் கடித்தவாறு தன் பின்னந்தலையில் தட்டிக் கொண்டான் சிரித்தபடி.

‘இப்போ என் கற்பனையில நடந்தது கூடிய சீக்கிரம் நிஜத்துல நடக்கும் தூரிகா.. இப்போ என் கடைசி காதல் நீயாதான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.. ஏன் எதுக்குன்னு கேட்டா சொல்ல காரணம் இருக்கு தான்.. ஆனா அந்த காரணங்கள் தான் உன்னைக் காதலிக்க வச்சுதான்னு கேட்டா நிச்சயமா இல்ல.. ஏன்னா என்னோட முதல் காதல் நீ தான்னு அன்னைக்கே எனக்கு தோணிடுச்சு..’ என்று நினைத்தவன் பிறகு எழுந்து உள்ளே சென்றான்.

பிறகு அனைவரும் தத்தம் வீடுகளுக்கு சென்றுவிட மாறன் அறைக்கு வந்த மதுரிகா,

“டேய் மாறா.. உங்கிட்ட பேசணும்” என்று கூற அவனோ,

“நானும் உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன் டி.. நீயே வந்துட்ட.. சரி முதல்ல நீ சொல்லு” என்றிட அவளோ,

“எனக்கு தெரிஞ்சு நான் பேச வந்ததும் நீ பேச நெனச்சதும் ஒரே விஷயம்னு தான் நினைக்குறேன்” என்று கூற மாறனுக்கு புரிந்தது அவள் பேச வந்தது தன்னைப் பற்றிய விஷயம் தான் என்று. அவனோ தயங்கியபடியே நிற்க அவளே ஆரம்பித்தாள்.

“மாறா.. நீ இனியாவை லவ் பண்றியா” என்று வெளிப்படையாக கேட்க மாறனுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. கூடவே இருப்பவளுக்கு தெரியாதா.. தன்னிடம் இருக்கும் மாற்றங்களை தான் அறிவதற்கு முன்னரே கண்டுபிடித்து சொல்பவளுக்கு அவனின் மனதின் எண்ணம் அறிவது பெரிய விஷயம் இல்லையே. அதனாலேயே பெரும்பான்மையான விஷயங்களை மதுவிடம் கூற வேண்டிய அவசியமே மாறனுக்கு இருந்தது இல்லை. அவளே அறிந்து அதைப் பற்றி அவனிடம் கேட்டுவிடுவாள். இன்றும் அது தான் நடந்திருக்கிறது. அவளின் கேள்விக்கு,

“தெரியல டி” என்றான் மாறன். மதுவோ,

“நான் கேட்ட கேள்விக்கு நீ இல்லன்னு சொல்லல.. அப்போ அதுக்கு ஆமான்னு தான அர்த்தம்” என்று கேட்க அவனோ,

“நான் ஆமான்னு கூட சொல்லலையே மது.. அப்போ இல்லன்னு அர்த்தம் ஆகுமா..” என்று அவன் கேட்க மதுவோ விசித்திரமாக முழித்தாள்.

“என்ன டா உளறுற.. இனியாவைப் பார்க்கும் போது உன்னோட செயல்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கு.. இதுவரை நீ இப்படி பிகேவ் பண்ணி நான் பார்த்தது இல்ல.. அதனால தான் கேட்குறேன்” என்று மது கூற அவனோ,

“எனக்கும் புரியுது மது.. அவ என்கிட்டே உரிமையா பேசும் போது எனக்குள்ள சந்தோஷமா இருக்கு.. அவளுக்காக ஏதாச்சு செய்யணும்னு தோணுது.. அவ ஏதாச்சு என்னை விட்டுட்டு மத்தவங்களுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்குற மாதிரி தெரிஞ்சா எனக்கு பொசெசிவா இருக்கு.. அவ எனக்கு சாதாரணமா செய்ற விஷயம் கூட என்னை அது ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்குது” என்று மாறன் கூற மதுவுக்கு மாறனின் நிலைமைத் துல்லியமாக புரிந்தது.

“மாறா நான் ஒரு விஷயம் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும்னு நீ நம்புறியா” என்று கேட்க அவனோ,

“லூசா டி நீ.. இத்தனை வர்ஷமா அது தானே பண்ணிட்டு இருக்கேன்” என்று கூற மதுவோ,

“இத்தனை வர்ஷம் நீ செஞ்சது எல்லாம் நம்ம ரெண்டு பேர மட்டும் சார்ந்திருக்கும். ஆனா இது அப்படி இல்ல.. சொல்லப்போனா இது உன் தனிப்பட்ட விஷயம் கூட” என்று மது கூற அவனோ,

“ஹே ச்சீ.. நீ இல்லாம எனக்கு தனிப்பட்ட விஷயம்னு எதுவுமே இல்ல.. நீ என்கிட்ட ஒரு விஷயம் பத்தி சொல்றன்னா அதுல எனக்கான அக்கறை மட்டும் தான் இருக்கும்.. நீ என்னனு சொல்லு” என்று கேட்க அவளோ தன் நண்பனின் கூற்றில் பெருமிதம் அடைந்தாள்.

“மாறா.. நான் கேட்குற கேள்விக்கு ஒன்னு ஆமான்னு சொல்லு.. இல்லனா இல்லன்னு சொல்லு.. வேற எதுவும் பேச கூடாது சரியா” என்று கேட்க அவனோ,

“பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கு.. மேட்டருக்கு வா” என்று கூற அவளோ,

“ஏன் மாறா.. எல்லாரையும் விட அதிகமா உன்மேல உரிமை எடுக்குறது நான் தான.. அப்போலாம் உனக்கு சந்தோஷமா இருக்கும்ல” என்று கேட்க அவனோ,

“ஆமா” என்றான்.

“எனக்காக இதுவரை நான் கேட்காமையே நீ நெறய செஞ்சிருக்க.. இனிமேயும் நீ செய்ய தான் செய்வ.. எனக்காக செய்றதுல உனக்கு சந்தோஷம் தானே” என்று கேட்க அதற்கும்,

“ஆமா” என்றான்.

“டென்த் படிக்கும் போது எக்ஸாம் ஹால்ல என் பக்கத்துல உக்காந்துருந்த சதீஷ் நியாபகம் இருக்கா.. அவன் என்னை அவனோட க்ளோஸ் ஃபிரண்ட்னு ஒரு தடவ சொன்னான்.. அதுக்கு அவனை மது எனக்கு மட்டும் தான் ஃபிரண்ட்னு சொல்லி அடிச்சுட்ட நீ.. நியாபகம் இருக்கா..” என்று கேட்க அதனை யோசித்து பார்த்து சிரித்தவன்,

“ஆமா டி.. நியாபகம் இருக்கு.. இன்னும் எத்தனைக் கேள்வி கேட்க போற” என்று கேட்க அவளோ,

“லாஸ்ட் கேள்வி.. நான் உனக்கு எது செஞ்சாலும் உனக்கு ஸ்பெஷல் தான” என்று கேட்க அவனோ,

“ஆமா ஆமா ஆமா” என்று கூற அவனது பதிலில் சிரித்தவள்,

“சரி.. முதல்ல நீ இனியா பத்தி உனக்கு இருக்குற ஃபீல் எல்லாம் சொன்ன.. அதையே தான் நான் என்னை வச்சு கேள்வியா கேட்டேன். அது எல்லாத்துக்கும் உன்னோட பதில் ஆமா தான்.. அப்போ உன் மனச பொறுத்தவரை எனக்கும் இனியாவுக்கும் என்ன வித்தியாசம்.. ” என்று கேட்க அவள் கேள்வியில் அதிர்ந்தவன் ஏதோ கூற வர அவனைத் தடுத்தவள்,

“நான் இதை என் பதிலா சொல்லல டா.. ஒரு கேள்வியா தான் கேட்குறேன்.. நீ நான் கேட்டதைப் பத்தி பொறுமையா ஆற அமர யோசி.. அதுலையே உனக்கு பதில் தெரிஞ்சுடும்.. நீ இனியாவை லவ் பண்றியா இல்லையான்னு.. அதுக்கு அப்புறம் என்கிட்ட உன் முடிவை சொல்லு.. குட் நைட் டா” என்று கூறியவள் அவனின் தலையைக் கோதிவிட்டு சென்றாள்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்