Loading

ரகசியம் – 13

குழுவின் பெயர்களைப் பதிவு செய்ய போயிருந்த வேம்பு மீண்டும் வகுப்பறைக்குள் வந்தார்.

“காய்ஸ் உங்க க்ரூப் நேம்ஸ் எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணியாச்சு. அப்புறம் ஒரு முக்கியமான சுவாரசியமான தகவல் ஒன்னு வந்துருக்கு.. அது என்னன்னு சொல்றதுக்கு முன்னாடி நம்ம இன்னைக்கு செஷன் பத்தி பார்ப்போம்.. என்ன தகவல்னு கடைசியா சொல்றேன்..” என்று கூற மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மீண்டும் அவர் தொடர்ந்தார்.

“இன்னைக்கு நாம பார்க்க போறது.. எப்படி கான்ஃபிடென்ட்டா பேசணும்னு தான்… பொதுவாவே நம்ம மனசுல இருக்கறதை அப்படியே பேசுறதும் சில நேரம் தப்பு.. அதே சமயம் மனசுல இருக்கறதை பேசாம இருக்குறதும் தப்பு.. நமக்கு தோணுற விஷயத்தை இந்த இடத்துல பேசலாமா.. பேசுனா பிரச்சனை வருமா.. அப்படியே பேசணும்னு அவசியம் வந்தாலும் அதை எதிர்ல இருக்குறவங்கள காயப்படுத்தாத மாதிரி எப்படி சொல்லலாம்.. இப்படி எல்லாமே ஒரு தடவ யோசிச்சு பேசணும்..

அதுக்காக யோசிக்குறேங்குற பேர்வழி தயங்கி தயங்கி பேசக் கூடாது.. நொடி நேரத்துல நம்ம மூளைக்குள்ள இந்த எல்லா கேள்வியும் எழனும்.. அதே நொடி நேரத்துக்குள்ள அந்த கேள்விக்கான பதிலும் நமக்கு கிடைச்சு.. ஒரு தெளிவான மனநிலைல பேசணும்.. அப்படி நாம பேசுனா கண்டிப்பா இங்க யாருக்குள்ளயும் வாய் தகராறு ஏற்படவே செய்யாது..

என்னடா இவன் நடிப்பைப் பத்தி சொல்லி கொடுப்பான்னு பார்த்தா அதை தவிர மத்த எல்லாத்தையும் சொல்றானேன்னு உங்கள்ள சில பேர் நெனச்சுருக்கலாம்.. நான் ஏன் இதை சொல்றேன்னா.. பொதுவா ஒருத்தங்க நம்மகிட்ட முதல்ல பார்க்குறது நம்மளோட போஸ்ச்சுர்(posture) அதாவது தோரணை.. அதுக்காக எப்போ பார்த்தாலும் விறைப்பா நிக்கனும்னு சொல்ல வரல.. பார்குறவங்களுக்கு மரியாதை ஏற்படுற மாதிரி இருக்கனும்.. ரெண்டாவது நாம பேசுற விதம்.. உண்மைய சொல்ல போன முதல் விஷயம் இல்லனா கூட ரெண்டாவது விஷயம் இருந்தா அவங்க நெறய பேரால கவரப்படுறாங்க..

நடிப்புங்குற துறை நீங்க நெனைக்குற மாதிரி சாதாரணம் இல்ல.. இங்க உங்க நடிப்பையும் தாண்டி உங்க பேச்சால உங்க ஆட்டிட்யூடால கூட நெறய பேர் கவரப்படுறாங்க.. அதுமட்டுமில்லாம இங்க ஏகப்பட்ட அவமானங்கள், ஏகப்பட்ட சிக்கல்கள், ஏகப்பட்ட தோல்விகள் இருக்கும். இதை எல்லாத்தயும் கடந்து நீங்க தொடர்ந்து முயற்சி பண்ணுனா மட்டும் தான் உங்களுக்கான இடத்தை நீங்க தக்கவச்சிக்க முடியும்.. அதுக்காக நீங்க உங்க மனசளவுல ரொம்பவே தயாரா இருக்கனும்.. நான் சொன்ன எல்லாத்தையும் உடனே நெனச்சா உங்களால பண்ண முடியாது.. ப்ராக்டீஸ் மேக் அ மேன் பெர்ஃபெக்ட்.. ” என்று கூறியவர் இன்னும் சில அறிவுரைகள் வழங்கிவிட்டு இன்றைய பாடத்தை முடித்தார். பிறகு கூட்டத்தில் ஒருவன்,

“சார் சர்குலர்ல என்ன வந்துருக்குன்னு இப்போவாச்சு சொல்லலாமே” என்று கேட்க வேம்புவோ சிரித்தபடி,

“அப்போ இதுக்காக தான் நீங்க இவ்ளோ நேரம் அமைதியா கேட்டுருக்கீங்க ரைட்..?” என்று சிரித்தவாறு மீண்டும்,

“ஓகே அதாவது நமக்கு வந்துருக்குற முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல் என்னன்னா… நெக்ஸ்ட் மன்த் நம்ம காலேஜுக்கு ‘சஹா பிலிம் இண்டஸ்ட்ரி’ல இருந்து ஆடிஷன்க்கு வராங்க.. அதாவது அவங்க எடுக்க போற ஒரு ஷார்ட் பிலிம்க்கு ஹீரோ அண்ட் ஹீரோயினுக்கு கூட நடிக்க கோ ஆக்டர்ஸ் தேவைப்படுறாங்களாம்.. அதுக்காக தான் வராங்க.. ஒவ்வொரு இயர்ல இருந்து ரெண்டு ரெண்டு பேர் இந்த காலேஜ் மேனேஜ்மேண்ட் செலக்ட் பண்ணும்.. அதாவது ஆண்கள் ஆறு பேர் பெண்கள் ஆறு பேர்.. அந்த ஆறு பேர்ல அவங்க ரெண்டு பேர் செலக்ட் பண்ணுவாங்க.. இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. சோ உங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க..” என்று கூற மாணவர்கள் அனைவரிடமும் சந்தோஷமும் ஆவலும் ஒட்டிக்கொண்டது.

“நம்ம காலேஜ் மேனேஜ்மேண்ட்ல இருந்து எப்படி செலெக்ஷன் ப்ராசஸ் போகும்னு இனிமே தான் அனௌன்ஸ் பண்ணுவாங்க.. பீ ரெடி ஃபார் இட்.. நௌ யூ மே கோ.. பாய் காய்ஸ்” என்றவர் வகுப்பை விட்டு வெளியில் சென்றிட ஒவ்வொரு குழுவும் சலசலத்தது.

அப்பொழுது எய்ம்ஸ் குழுவில் உள்ள கிருஷ்ணா மாதவிடம்,

“டேய் மச்சான்.. அவன் எப்படி நம்மள நாய்னு சொல்லலாம்.. வா என்னன்னு போய் கேட்போம்” என்று கூற மாதவோ,

“வேணாம் டா.. அவனுங்கள நாம வேற விதமா டீல் பண்ணிக்கலாம்.. இப்போ விடு” என்றான்.

நம் பாண்டவாஸ் குழுவோ நடக்கவிருக்கும் ஆடிஷன் குறித்த கலந்தாய்வில் இருந்தது.

“நாம கண்டிப்பா நல்ல ப்ரிப்பேர் பண்ணனும் இதுக்கு” என்று மாறன் கூற அறிவோ,

“ஆமா ஆமா இது மூலமா நாம அந்த எய்ம்ஸ் க்ரூப்போட மூக்கை ஒடைக்கணும்” என்று அறிவு கூற இனியாவோ,

“சரியா சொன்ன டா திருட்டு பயலே.. இவனுங்களுக்கு நாம யாருன்னு காமிப்போம்” என்று கூற மதுரிகாவோ,

“ஆமா நம்ம க்ரூப்ல இருந்து அட்லீஸ்ட் ஒருத்தராச்சு கண்டிப்பா செலெக்ட் ஆகணும் என்று கூற இதையெல்லாம் கேட்ட மதுரனோ,

“அவங்கள தோற்கடிக்கணும்னு நாமே ஏன் நினைக்கணும்.. அதுக்கு பதிலா நாம ஜெயிக்கணும்னு மட்டும் நெனைப்போமே.. நெகட்டிவா ஏன் திங்க் பண்றீங்க.. அது நமக்கும் நல்லதில்ல.. நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கும் நல்லதில்லை..” என்று பொதுவாக கூறியவன் மதுரிகாவைப் பார்த்து,

“பேரு பண்டாரம்னு இருந்தா போதாது அங்க இருக்குற புக்ஸ்ல சொல்ற மாதிரி நாம நடந்துக்கணும்” வேண்டுமென்றே சீண்ட,

“நான் உங்கிட்ட என் பேரு பண்டாரம்னு சொன்னேனா.. நானே இவனைக் கலாய்க்க அதை சொன்னா.. நீ அதை வச்சே என்னை கலாய்க்குற.. இதெல்லாம் நல்லதுக்கில்ல மிஸ்டர் போர்க்யூபைன் மண்ட” என்று சண்டைபிடித்தாள் அவனிடம். இவ்வளவு நாளாக இனியாவிற்கு இவன் ஏன் இவளை பண்டாரம் என்று கூப்பிடுகிறான் அவள் ஏன் இவனைப் போர்க்யூப்பைன் மண்டை என்று அழைக்கிறாள் என்ற சந்தேகம் இருக்க அதை இன்று கேட்டுவிட்டாள்.

“ஆமா உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே பழக்கமா.. செல்ல பெயர் வச்சு எல்லாம் கூப்பிடுறீங்க” என்று கேட்க அதில் மதுரன் சிரித்தான். மதுரிகாவோ,

“கொய்யால இது உனக்கு செல்ல பெயரா” என்று அவள் முதுகில் இரண்டு அடி போட அவளோ,

“சரி டி அடிக்காத.. இப்படி கண்றாவியான பெயர் வச்சு கூப்பிட காரணம் என்ன” என்று கேட்க மாறனும் அறிவும்,

“அந்த சோக கதையை ஏன் கேக்குற” என்று ஒருசேர கேட்க அறிவோ,

“சரி நீ சொல்லு டா” என்று கூற மாறனோ,

“இல்ல நீயே சொல்லு” என்றிட அதில் கடுப்பான அன்பினியா,

“அடச்சீ யாராச்சும் சொல்லி தொலைங்களேண்டா” என்று கூற பிறகு மாறன் கூற ஆரம்பித்தான் மதுரன் மற்றும் மதுரிகாவின் முதல் சந்திப்பை. அதனைக் கேட்டுக்கொண்டே கற்பனை செய்து பார்த்தவளுக்கு,

‘ஆஹா.. மோதல்ல ஆரம்பிச்சிருக்கு.. அப்போ கண்டிப்பா இது அது தான ஜெஸ்ஸி’ என்று மனதினுள் நினைத்து வெளியே சிரித்துக்கொள்ள அதனைக் கண்ட மது,

“ஆமா நீ ஏன் சிரிக்குற இப்போ” என்று கேட்க அவளோ.

“உலகத்தை நெனச்சேன் சிரிச்சேன்” என்று கூறி அந்த பேச்சை அதோடு விட்டுவிட்டாள்.

“ஆனாலும் நீ ஒரு அவசரக்குடுக்கை யூ க்னோ” என்று இனியா மதுரிகாவிடம் கூற,

“நீ மூடு.. அதான் அவன்கிட்ட சாரி கேட்டேனே.. அவன் மட்டும் என்னவாம் என்னைப் பழிவாங்க வேணும்னே பிடிக்காம கீழ விழ வச்சான் தானே” என்று விட்டு மதுரனை முறைக்க எத்தனிக்க அவனோ இவளைத் தான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பில் இவள் முறைக்க எண்ணி தோற்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.

“அவன் அப்படி செஞ்சானால தான் இப்போ நாம எல்லாம் ஒரே க்ரூப்ல இருக்கோம்.. இல்லனா அந்த மாதவ்னு ஒரு குரங்கு இருக்கே.. அந்த க்ரூப்ல இருந்துருப்ப நீயு.. போனவ நீ மட்டுமா போவ.. இந்த மாறன் பக்கியையும் சேர்த்து இழுத்துட்டு போவ.. அவனும் அத்தை மகள் வாக்கே வேத வாக்குன்னு உன் பின்னாடியே வந்துருப்பான்..” என்று கூற இவள் எப்படி இப்படி படபடவென மூச்சு கூட விடாதபடி பொரிந்து தள்ளுகிறாள் என்று நினைத்தபடி இனியாவைப் பார்த்து கொண்டிருந்தான் அறிவமுதன். அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த இனியா,

“டேய் திருட்டுப்பயலே.. என்ன என்னை சைட் அடிக்குறியா” என்று முறைத்தபடி கேட்க அவனோ வேகமாக இல்லையென தலையசைக்க அவளோ,

“அப்போ அடிக்கலயா” என்று கேட்க பயத்தில் ஆமென்று தலையாட்டிவிட்டான். அவனைப் பார்த்து நால்வரும் சிரிப்பு தான். பிறகு மதுரிகாவோ,

“ஹே பாவம் டி அவனே.. பயப்படுறான்னு ரொம்ப தான் கலாய்க்குற” என்று அறிவுக்கு ஆதரவாய் பேச அறிவோ,

“தங்கச்சி என் தங்கச்சி.. தங்கமான தங்கச்சி..” என்று பாட்டு படிக்க இனியாவோ,

“அடப்பாவிங்களா இது எப்போ.. புதுசு புதுசா ட்ராக் ஓட்டுறீங்க..” என்று கூறியவள் மாறனிடம்,

“நீ மட்டும் ஏன் டா எந்த ட்ராக்கும் ஓட்டமா இருக்க” என்று கேட்க மதுரனோ,

“அவன் தான் பொறந்ததுல இருந்து அவளோட மாமா பையங்குற பேர்ல சம்பளமில்லாத பிஏவா ஒரு ட்ராக் ஓட்டுறானே” என்று கூறி சிரிக்க மாறனோ,

“அது என்னவோ உண்மை தான் டா.. இவ படுத்துற அலம்பல் தாங்கல.. நாளைக்கு இவளுக்கு புருஷன்னு ஒருத்தன் வந்தான் அவன் செத்தான்” என்று புலம்பியபடி கூற மதுரனின் விழிகள் மதுரிகாவை நோக்க அவன் தன்னைத் தான் பார்க்கிறான் என்று ஓரப்பார்வையில் உணர்ந்த பெண்ணவள் அவன் புறம் திரும்பாமலே இருக்க இவ்விருவர் பாவனைகளையும் அறிவு மற்றும் இனியாவின் கண்கள் நோட்டம்விட அவர்களின் இருவரது பார்வைக்கான அர்த்தம் புரிந்து அறிவும் அன்பும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

மதுரனுக்கு ஏனோ மதுரிகாவின் மேல் விவரிக்கவியலா உணர்வு இருப்பது உண்மை தான். அதனை காதல் என்று வரையறுக்க அவன் விரும்பவில்லை. ஒருவகை ஈர்ப்பு என்றே நினைத்திருக்கிறான். மதுரிகாவிற்கும் மதுரனின் மேல் ஆரம்பத்தில் இருந்த பகைமை உணர்வு முற்றிலும் மாறி அவ்வபோது அவன் நடந்துகொள்ளும் விதமும் பிறரைக் காயப்படுத்தாமல் அவன் பேசும் வெளிப்படையான பேச்சும் நன்மதிப்பையே ஏற்படுத்தியிருந்தது. அவன் அவளை பண்டாரம் என்று அழைக்கும் போதும் கூட அவள் கண்களில் பொய் கோபத்தின் விளைவாய் மட்டுமே முறைப்பு இருக்கும். சொல்லப்போனால் அவன் அவளை சீண்டுவது துளி அளவு மதுரிகாவிற்கு பிடித்தும் இருந்தது எனலாம்.

இவ்வாறாக பாண்டவாஸ் குழு பேசி சிரித்து அங்கலாய்த்துக் கொண்டிருக்க அப்பொழுது மாறனின் அலைபேசிக்கு சத்யன் அழைத்தார். மாறனோ யோசனையாய் அலைபேசியைப் பார்க்க அதனைக் கண்ட மதுரிகா,

“என்னடா ஆச்சு.. யார் போன்ல” என்று கேட்க அவனோ,

“அப்பா கால் பண்ணிருக்காரு டி” என்றான் யோசனையாய்.

“மாமாவா.. அவர் சும்மா எல்லாம் கால் பண்ண மாட்டாரே.. சரி என்னனு எடுத்து பேசு” என்று கூற அவனும் அலைபேசியை ஏற்று காதில் வைத்து,

“ஹலோ அப்பா” என்று பேச மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ அதாற்கு மாறன்,

“என்னப்பா சொல்றீங்க.. சரி நாங்க ரெண்டு பேரும் நேரா அங்க வந்துருறோம்” என்று கூறிவிட்டு பதற்றமாய் அழைப்பைத் துண்டித்தான்.

 

ரகசியம் – 14

மாறன் பதற்றமாய் அழைப்பைத் துண்டிக்கவும் மதுரிகா,

“டேய் என்னாச்சு டா… ஏன் இவ்ளோ நெர்வஸா இருக்க..” என்று கேட்க மற்ற மூவருக்கும் அதே கேள்வி தான்.

“அம்மாக்கு திடிர்னு தல வலி வந்து மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம். ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்.. நம்மள உடனே வர சொன்னாங்க” என்று கூறவும் மாறனை விட மதுரிகா அதிகமாக பதறினாள்.

“என்ன சொல்ற மாறா.. வா சீக்கிரம் போலாம்.. நான் அத்தைய உடனே பார்க்கணும்” என்று கண்கள் கலங்க கூற மதுரிகாவின் கையை ஆதரவாக பற்றிய மதுரன்,

“ஹே மது.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஆன்டிக்கு ஒன்னும் ஆகாது..” என்று கூற பின் மாறனிடம் திரும்பியவன்,

“டேய் டிரைவ் பண்ணிட்டு போய்டுவியா இல்ல ஹெல்ப்புக்கு நாங்க வரட்டுமா” என்று கேட்க அவனோ,

“இல்லடா போய்டுவேன்.. மது சீக்கிரம் வா” என்றவன் முன்னே செல்ல அவனோடு பின்னே ஓடினாள் மதுரிகா.

மருத்துவமனை வந்து இறங்க மாறனும் மதுரிகாவும் வேகமாக விஜயா அனுமதிப்பட்டிருக்கும் அறைக்கு விரைந்தனர். சத்யன் விஜயா இருக்கும் அறைக்கு வெளியில் அமர்ந்திருக்க அவரிடம் வந்த மாறன்,

“அப்பா.. அம்மாக்கு என்னாச்சு பா..” என்றும் மதுரிகா,

“மாமா அத்தைக்கு என்னாச்சு” என்று பதறியபடி கேட்க,

“ஹே ரெண்டு பேரும் ரிலாக்ஸ்சா இருங்க. பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… நான் இப்போ சொல்ல போறதைக் கொஞ்சம் கவனமா கேளுங்க” என்றவர் காலையில் நடந்ததைக் கூறினார்.

காலை மாறன் மற்றும் மதுவைக் கல்லூரிக்கு அனுப்பிவைத்துவிட்டு தன் பணியை முடித்து மதிய உணவு சமைப்பதற்காக காய்கறிகளை எடுத்து வந்து தொலைக்காட்சியைப் பார்த்தபடியே நறுக்கிக் கொண்டிருந்தார் விஜயா.

அப்பொழுது தொலைக்காட்சியில் விபத்து காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்க அதனைப் பார்த்தவருக்கு திடிரென்று தலையில் வலி எடுத்தது. அவரது மூளைக்குள் இதே போன்று ஒரு விபத்து காட்சி ஓட அதனைத் தொடர்ந்து யோசித்து கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துவிட்டார். தக்க சமயத்தில் வெளியில் சென்றிருந்த சத்யன் உள்ளே வர மயங்கி கிடந்த விஜயாவைப் பார்த்து பதறி அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்.

விஜயாவைப் பரிசோதித்த மருத்துவர் சத்யனை தனியே அழைத்து பேசினார்.

“உங்க மிஸ்ஸஸ்க்கு இதுக்கு முன்னாடி ஏதும் ஆக்சிடன்ட் ஆகியிருக்கா” என்று கேட்க சத்யனோ,

“ஆகியிருக்கு டாக்டர்.. பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி..” என்று கூற மருத்துவரோ,

“எஸ்.. அப்போ அவங்களுக்கு தலைல அடிபட்டு ஒரு ஆறு மாத கால நினைவை இழந்துருக்காங்க ரைட்..?” என்று கேட்க சத்யனோ,

“ஆமா டாக்டர்.. அதனால ஏதும் பிரச்சனையா” என்று கேட்க அவரோ,

“அவங்களுக்கு ஏற்பட்டது ரெட்ரோக்ரேட் அம்னீஷியா (Retrograde Amnesia).. அதாவது விபத்துனால ஏற்பட்ட அடில விபத்து நடக்குறதுக்கு முன்னாடி இருந்தே நினைவுகளை மறக்குறது.. அதனால தான் அவங்க அந்த ஆறு மாசம் என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டாங்க.. அதை யோசிக்க ரொம்ப இன்னைக்கு முயற்சி பண்ணியிருக்காங்க.. அவங்க ரொம்ப யோசிச்சதுல அவங்களோட பிரைன் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகி மயக்கம் வந்துருக்கு.. அதிகமா யோசிக்காம இருக்குறது நல்லது.” என்று கூற சத்யனோ,

“அப்போ அவளுக்கு வாழ்க்கை முழுசா அந்த ஆறு மாசம் நினைவு திரும்ப வராதா டாக்டர்.. அவ வாழ்க்கைல ரொம்ப முக்கியமான ரெண்டு தருணங்கள் அந்த ஆறு மாச நினைவுகள்ல தான் இருக்குன்னு அடிக்கடி என்கிட்ட சொல்லி வருத்தப்படுவா” என்று கூற மருத்துவரோ,

“அப்படி உறுதியா சொல்ல முடியாது.. எப்போ வேணாலும் திரும்ப வரலாம்.. அதுவா எப்போ வருதோ அப்போ வரட்டும்.. சில நேரம் வராம கூட போகலாம்.. ஆனா இவங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாது.. டேப்லட்ஸ் எழுதி கொடுக்கேன்.. தலைவலி எப்போலான் வருதோ அப்போ இந்த டேப்ளெட்ஸ் போட சொல்லுங்க.. ஏதாச்சும் சீவியரா இருந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுருவாங்க.. யு மே டிஸ்சார்ஜ் இன் ஈவினிங்” என்று கூற மருத்துவருக்கு நன்றி கூறி வெளியே வந்தமர்ந்தவர் விஜயா கண்விழிப்பதற்காக காத்திருந்தார்.

இவ்வாறு நடந்ததைக் கூற மாறன் மற்றும் மதுவுக்கு அதிர்ச்சி.

“என்ன மாமா சொல்றீங்க.. இவ்ளோ நாளா ஏன் எங்ககிட்ட இதைப் பத்தி நீங்க சொல்லவே இல்ல… சொல்லியிருந்தா கவனமா நாங்க அத்தைய கவனிச்சுருப்போம்ல” என்று வருந்தி கூற மாறனும் அதே கேள்வியோடு தான் தந்தையை நோக்கினான்.

“என்னைவிட பெருசா என் விஜியைக் கவனிச்சுடுவீங்களா என்ன” என்று சற்று புன்னகைத்து கேட்டார் பிள்ளைகளின் பதற்றத்தைக் குறைக்க எண்ணி. மதுவும் மாறனும் சிரித்துக் கொண்டனர்.

மதுவுக்கும் மாறனுக்கும் தெரியாதா சத்யன் விஜியின் மேல் கொண்ட அக்கறை எவ்வாறு என்று. வெளியில் கோபமாக கண்டிப்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் விஜியின் மேல் கொண்ட அக்கறை அவ்வபோது சாதாரணமாக வெளிப்படும். பார்ப்பவர்களுக்கு விஜயா சத்யனின் பேச்சைத் தட்டாத பத்தினி போன்று தெரிந்தாலும் உண்மை என்னவோ விஜயாவின் பேச்சைத் தட்டாத கணவர் தான் சத்யன். இந்த சூட்சமத்தை அறிந்த காரணத்தினாலேயே மதுவும் மாறனும் தங்களுக்கு சத்யனிடம் வேண்டியதை விஜயாவைத் தூது அனுப்பி செய்துகொள்வர்.

பிறகு சிறிது நேரத்தில் விஜயா கண்விழித்து விட்டதாக செவிலிய பெண் கூற மூவரும் உள்ளே சென்று பார்த்தனர்.

“இப்போ எப்படி விஜி இருக்கு”, “எப்படிம்மா இருக்கீங்க”, “அத்தை இப்போ எப்படி அத்தை இருக்கு” என்று வரிசையாக சத்யன், மாறன் மற்றும் மது கேட்க விஜயாவோ,

“நான் நல்லா தான் இருக்கேன்..” என்று புன்னகைத்தபடி எழுந்து அமர்ந்தார். பிறகு சத்யனிடம்,

“என்னங்க பிள்ளைங்க கிட்ட எனக்கு என்னாச்சுன்னு சொல்லிட்டீங்களா” என்று கேட்க அவரும் ஆமென்க,

“ஏன் சொன்னிங்க.. அவங்க ரெண்டு பேரும் பயப்படப் போறாங்க” என்று கூற மதுவோ,

“எங்க கிட்ட சொல்றதுக்கு என்ன.. சொன்னா தான நாங்க உங்கள கவனிச்சுக்க முடியும்.. இத்தனை நாள் சொல்லாம இருந்ததுக்கே உங்ககிட்ட நாங்க சண்டை போடணும்.. என்ன டா மாறா” என்று மாறனை துணைக்கு அழைக்க அவனோ,

“ஆமா.. உடம்பு சரியில்லாதனால அமைதியா இருக்கோம்” என்று கோபமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூற விஜயாவோ,

“என் புருஷன் என்னைக் கவனிச்சுக்காததையா நீங்க ரெண்டு பேரும் கவனிச்சுட போறீங்க..” என்று சத்யன் கூறியதைப் போன்று கூற அவர்களிருவரின் அன்யோன்யத்தைக் கண்ட மது மற்றும் மாறனுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய ஆச்சர்யம்.

“சரி விடுங்க.. அதான் இப்போ நல்லா தானே இருக்கேன்..” என்றவர் சத்யனிடம்,

“என்னங்க வீட்டுக்கு போலாம்.. எனக்கு இங்க இருக்க ஒரு மாதிரி இருக்கு” என்று கூற அவரும்,

“கொஞ்ச நேரத்துல கிளம்பிரலாம் விஜி.. நான் போய்ட்டு உனக்கு சாப்பிட ஏதாச்சு வாங்கிட்டு வரேன்” என்றவர் செல்ல மதுவும் மாறனும் விஜயா அருகில் அமர்ந்து அவரின் கரத்தைப் பற்றிக் கொண்டனர். அதுவும் மதுவின் விரல்கள் இன்னும் லேசான நடுக்கத்துலயே இருந்ததை விஜயாவால் நன்கு உணர முடிந்தது.

“எனக்கு பெண் குழந்தை இல்லாத குறையை உன் அம்மா உன்னை எனக்கு கொடுத்து தீர்த்து வச்சுட்டு போய் சேர்ந்துட்டா” என்று கண்கலங்கி அவர் கூற நிலைமையை சகஜமாக மாற்றும் பொருட்டு மாறன்,

“அதுக்கு என்ன மா இப்போ.. இவ உங்க பொண்ணு மாதிரி எல்லாம் இல்ல.. உங்க பொண்ணு தான்.. என்ன தான் நாங்க அத்தை மக மாமா மகனா வளர்ந்திருந்தாலும் நாங்க எப்போவும் ஒண்ணா பிறந்த ட்வின்ஸ் மாதிரி தான்.. என்ன டி” என்று கேட்க மதுவும்,

“சரியா சொன்ன டா.. இன்னைக்கு தான் நீ உருப்படியா ஒரு விஷயம் பேசியிருக்க” என்று கூற விஜயாவிற்கோ அவ்விருவர் கூற்றை நினைத்து மனதிற்கு நெருடலாக இருந்தது.

“என்ன டா சொல்ற.. அப்போ அத்தான்னு கூப்பிட சொல்லி அவளை அடிக்கடி சீண்டுவ” என்று விஜயா கேட்க மாறனோ,

“ம்மா அவளுக்கு அப்படி கூப்பிட பிடிக்காதுன்னு தெரியும் அதனால வேணும்னு வம்பிழுக்க அப்படி கூப்பிடுவேன்.. அவ்ளோ தான்.. என்னைப் பொறுத்தவரை இவ பொண்ணே இல்ல.. சுடிதார் போட்ட என் நண்பன்” என்று கூற அதில் கடுப்பான மது,

“என்ன டா சொன்ன” என்று அடிக்க துவங்க அசராமல் வாங்கிக்கொண்டிருந்தான் இளமாறன்.

விஜயாவிற்கு தான் அவர்கள் கூறியதை நினைத்து யோசனையாகவும் ஒருபுறம் வருத்தமாகவும் இருக்க பிறகு,

“போக போக சரியாவிடுவார்கள்” எனக்கு தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டார்.

பிறகு மாறனோ,

“ஹே மது.. மதுரன், அறிவு இனியா மூணு பெரும் என்னாச்சுன்னு பயந்துட்டு இருப்பாங்க.. கால் பண்ணி ஒன்னும் ப்ராப்லம் இல்லன்னு சொல்லுவோம்” என்றவன் தன் அலைபேசியை எடுக்க அதில் சார்ஜ் ஒரு சதவிகிதம் என்று காண்பிக்க மதுரன் அலைபேசி எண்ணை புலனத்தில் மதுரிகாவிற்கு அனுப்பி அவள் அலைபேசியில் அழைக்க சொல்ல அவளும் அழைத்து ரிங் போனதும் மாறனிடம் கொடுக்க வர அதற்குள் சத்யன் மாறனை அழைத்ததில்,

“ஹே நீயே சொல்லிடு டி.. நான் இதோ வரேன்” என்றுவிட்டு செல்லவும் மதுரன் அழைப்பை ஏற்கவும் சரியாக இருந்தது.

“ஹலோ.. மது.. அங்க எல்லாம் ஓகே தான.. ஏதும் பிரச்சனை இல்லையே” என்று தயக்கமாய் வினவ அவனின் அக்கறையை நினைத்து புன்னகைப் பூத்தாள் பெண்ணவள். அவள் பதற்றமாய் கிளம்பிய நேரம் அவன் அவளின் கரம் பற்றி ஆறுதல் கூறியதும் நினைவிற்கு வர அதைப் பற்றி யோசித்து கொண்டிருந்தவளின் செவியில் மதுரனின் சொற்கள் விழவில்லை. மதுரனோ,

“ஹலோ.. லைன்ல இருக்கியா..” என்று கேட்க அப்பொழுது தான் நினைவில் இருந்து மீண்டவள்,

“ஹான் இருக்கேன்.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஏற்கனவே முந்தி ஒருதடவைத் தலைல அடிபட்ருந்துச்சு அத்தைக்கு.. அதனால் தான் மயக்கம் வந்துருக்காம்.. பயப்படுற மாதிரி ஒன்னுமில்லன்னு சொல்லிட்டாங்க” என்று கூற அவனோ,

“ஓ அப்படியா.. சரி ஓகே நல்லது” என்றவன் அழைப்பைத் துண்டிக்கவும் இல்லை அதற்குமேல் பேசவும் இல்லை. மதுவோ,

“கட் பண்ணலையா” என்று கேட்க அவனோ,

“நீ ஏதோ என்கிட்ட சொல்ல நெனைக்குறன்னு தோணுச்சு.. அதான் கட் பண்ணல” என்று கூற மதுரிகாவுக்கு லேசான ஆச்சர்யம் தான். அவளின் மனம் அவனுக்கு நன்றி கூற சொல்லியது.. ‘ஆனா அவன் காரணம் கேட்டா என்னன்னு சொல்றது.. நீ எனக்காக பதறுனதுக்கு தேங்க்ஸ்னா சொல்றது’ அவள் யோசிக்க பின்பு,

“சொல்ல நினைக்கல.. கேட்க தான் நெனச்சேன்” என்று கூற மதுரனோ,

“என்ன கேட்கணும் மிஸ் பண்டாரம்” என்று ஆர்வமாய் கேட்க அவளோ,

“ரொம்ப எல்லாம் இமேஜின் பண்ணாத.. என் நம்பர் எப்படி உனக்கு தெரியும்.. கால் பண்ணதும் மதுன்னு கரெக்ட்டா சொன்னியே.. எப்படி” என்று கேட்க அவனுக்கோ புஸ் என்று ஆனது.

“ஐயோ டா இமேஜின் பண்ணிட்டாலும்.. ஆமா நீ பெரிய செலிபிரிட்டி.. உன் நம்பர் கண்டுபிடிக்குறது அவ்ளோ பெரிய கஷ்டமா என்ன.. இனியாகிட்ட வாங்குனேன்” என்று கூற அவளோ,

“சரி ஓகே நான் வைக்குறேன்.. அறிவு கிட்ட சொல்லிடு.. பாய்” என்று கூற அவனும்,

“ஓகே பாய்” என்று துண்டித்தான். மது அவன் எண்ணை மிஸ்டர் போர்க்யூபைன் மண்டை என்று பதிவு செய்ய அவனோ அவள் எண்ணை வழக்கம் போல் மிஸ் பண்டாரம் என்று பதிவு செய்ய இருவரும் அவரவர் அலைபேசியைப் பார்த்து சிரித்து கொண்டனர்.

இரு மதுக்களிடையே காதல் விதையின் தளிர்கள் ரகசியமாய் துளிர்க்கப்பட்டதோ..? வளர்ந்து விருட்சமாகுமா..? அல்ல இடையிலேயே பட்டுப் போய்விடுமா..?

 

ரகசியம் – 15

வீடு வந்த இனியா.. இமைவிழி அருகில் தன் தந்தை அமர்ந்து அவளுக்கு ஏதோ சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தவள் தானும் முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்து அவர்களோடு அமர்ந்தாள். அவள் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிய,

“என்னாச்சு அன்பு.. வாட்டமா தெரியுற.. ஏதும் பிரச்சனையா” என்று ராமானுஜம் கேட்க அவளோ,

“என் ஃபிரண்டோட அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு கால் வந்து அவனும் அவன் அத்தை பொண்ணும் பதட்டமா போனாங்கபா.. அதான் என்னவா இருக்குமோன்னு ஒரு மாதிரி இருக்கு” என்று கூற அவரோ,

“அப்படியா.. அந்த பையனுக்கோ இல்ல அந்த பொண்ணுக்கோ கால் பண்ணி கேட்டுட வேண்டியது தான” என்று கூற,

“இல்லப்பா அங்க எந்த மாதிரி சூழ்நிலைன்னு தெரியல.. அதான் டிஸ்டர்ப் பண்ணவேணாம்னு கால் பண்ணல” என்று கூற அவரோ,

“அதுவும் சரி தான்.. சரி நீ கவலைப்படாத.. அவங்க நல்லா இருக்காங்கன்னு ரெண்டு பேர்ல யாராச்சு ஒருத்தர் கால் பண்ணி சொல்லுறாங்களான்னு கொஞ்ச நேரம் பார்ப்போம்.. இல்லன்னா நாம கால் பண்ணி கேட்டுக்கலாம்” என்று கூறி முடிக்கவும் மதுவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ப்பா.. கால் வந்துட்டு” என்றவள் உடனே எடுத்து பேச விஜய நலமாக இருக்கிறார் என்று மதுரிகா கூற பிறகு தான் இனியாவிற்கு நிம்மதியே வந்தது. விசாரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவள்,

“அப்பா நீங்க சொன்ன மாதிரி அவங்க நல்லா இருக்காங்களாம்” என்று மகிழ்ச்சியாக கூற அவரோ,

“நல்லது மா.. சரி அன்பு காலேஜ் எப்படி போகுது பிரண்ட்ஸ் எல்லாம் செட் ஆயிட்டாங்களா..” என்று விசாரித்தார் ராமானுஜம்.

“அதெல்லாம் சிறப்பா போகுது பா..” என்றவள் அவளின் நண்பர்கள் பட்டாளத்தைப் பற்றி கூற அவரும் அதனைப் பொறுமையாகவே கேட்டார். ராமானுஜத்திற்கும் பெண்ணவள் இந்த துறையைத் தேர்ந்தெடுத்திருப்பதில் விருப்பமில்லை தான். ஆனால் அவள் ஏதேனும் முடிவு எடுத்தால் அது சரியாக தான் இருக்கும் என்று இதுவரை பல விஷயங்களில் பார்த்திருக்கிறார். அதுமட்டுமின்றி பிள்ளைகளின் படிப்பு விடயத்தில் தன் சொந்த விருப்பு வெறுப்பைத் திணிக்கக்கூடாது என்று கருதி ஒப்புக்கொண்டார்.

“ஆமா வழக்கம் போல உங்க தமிழ் வாத்தியார் வேலைய ஆரம்பிச்சுட்டங்களாப்பா” என்று இனியா கேட்க விழியோ,

“அட ஆமா டி.. நான் தமிழ் பாடத்துல இலக்கணத்துல எந்த டவுட்டு கேட்டாலும் அசராம சொல்றாரு டி.. இங்கிலிஷ் படிச்சு பட்டதாரி ஆயிட்டு ஆடிட்டரா வேலை செஞ்ச இவருக்கு எப்படி தமிழ் ஆர்வம் வந்துச்சோ.. இப்படி படிச்ச படிக்கும் செய்ற வேலைக்கும் இவரோட ஆர்வத்துக்கும் சம்மந்தமே இல்ல ஆனாலும் எப்படி இப்படி எல்லா விஷயத்துலயும் ஆல்ரவுண்டரா இருக்காரோ தெரில.. ஆனா இது அவருக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ… என்னோட பாடத்துல சந்தேகம் தீர்க்கவும் நான் எழுதுற கதைல எனக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் லாஜிக் மிஸ்டேக் பார்த்து கொடுக்கவும் எனக்கு யூஸ் ஆகுது” என்று கூறி சிரித்துக் கொண்டாள்.

ஆம் இமைவிழி சிறு கதை எழுத்தாளர் என்றும் வைத்து கொள்ளலாம். அவ்வப்போது கவிதைகளும் கிறுக்குவதுண்டு. தன் மனதில் எழுந்த கற்பனையில் சில உண்மை சம்பவங்களை கலந்து சில சிறுகதைகள் எழுதியிருக்கிறாள். அதனைத் தன் தந்தையிடமும் காண்பித்திருக்கிறாள். கதை கரு நன்றாக இருந்த போதும் வயது பக்குவமில்லாத காரணத்தினால் அவளின் கதையின் உரையாடல்கள் சிறுபிள்ளைத் தனமாக இருக்கும். அதனை இவ்வாறு எழுது அவ்வாறு திருத்திக்கொள் என்று ராமானுஜம் அறிவுரை வழங்குவதுமுண்டு. தனக்கு தமிழின் மேல் இருக்கும் ஆர்வம் தன் மகளுக்கும் வந்ததிருக்கிறதோ என்று பெருமையும் பட்டிருக்கிறார்.

“அதுசரி.. பார்த்தீங்களா பா உங்கள எப்படி யூஸ் பண்றான்னு” என்று இனியா விழியைப் பற்றி தந்தையிடம் குற்றம் சாட்ட அவரோ,

“உங்க ரெண்டு பேருக்காக தான் நானே இருக்கேன்.. உங்களுக்கு பயன்படாமா வேற என்ன நான் செஞ்சிட போறேன்” என்று வாஞ்சையாய் கூற மகள்கள் இருவரும் தன் தந்தையைக் கட்டிக்கொண்டனர். பின்பு எழுந்தவர்,

“சரி எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு.. நீங்க பார்த்து இருந்துக்கோங்க” என்றவர் வெளியில் சென்றுவிட சகோதரிகள் இருவரும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பார்க்க அதில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாத சந்தோஷம் தந்தானே
என்ற பாடல் வரிகள் ஓடிக்கொண்டிருக்க அதனைக் கேட்ட விழியன் இதழ்களில் அவளை மீறிய புன்னகை அரும்பியது. அதனைக் கண்டு இனியாவின் புருவங்கள் சுருங்க,

“ஹே நீ இப்போ சிரிச்ச தான” என்று கேட்க சட்டென தன்னை சுதாரித்த விழி,

“நான் எங்க டி சிரிச்சேன்.. பாட்டு தான கேட்டுட்டு இருக்கேன்” என்று சமாளிக்க,

“இல்ல டி.. நீ சிரிச்ச நான் அதை பார்த்தேன். என்னன்னு சொல்லு” என்று கேட்க,

“சும்மா சிரிக்காதவள சிரிச்ச சிரிச்சன்னு சொல்லிட்டு இருந்தா நான் என்ன செய்றது..” என்று கடுப்பாக விழி கூற அவள் செய்கைகள் ஏதோ இனியாவை யோசிக்க தூண்டியது.

‘ஆத்தாடி.. இப்படியா பச்சையா சிரிச்சு தொலைவோம்.. முட்டக்கண்ணி வேற சந்தேகமா பார்க்குறா.. இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு தான் ஆபத்து’ என்று மனதினுள் நினைத்துக் கொண்ட விழி எழுந்து குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

“சம்திங் ராங்” என்று நினைத்த அன்பினியா பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் கவனமானாள்.

———————-

இவ்வாறாக அந்த நாள் முடிய மறுநாள் கல்லூரி நிர்வாகம் நடக்கவிருக்கும் ஆடிஷனில் பங்கேற்க தேவையான விதிமுறைகள் மற்றும் போட்டி பற்றி கூறியதை வேம்பு மாணவர்களிடம் தெரிவித்தார்.

“சோ காய்ஸ்.. இவ்ளோ சீக்கிரம் ஒரு ஆடிஷன்ல கலந்துக்குற பேட்ச் நீங்களா தான் இருப்பீங்க.. நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் சொல்றேன்னா இதுக்கு முன்னாடி எல்லாம் மூணாவது வருஷம் படிக்குற மாணவர்களுக்கு மட்டும் தான் ஆடிஷன்ல கலந்துக்க பெர்மிஷன் உண்டு.. ஆனா இந்த வாட்டி ரூல்ஸ் செஞ்ச் பண்ணிருக்காங்க.. சோ இதை யுட்டிலைஸ் பண்ணிக்கோங்க.. நான் நேத்து சொன்ன மாதிரி.. ஆடிஷன்க்கு நம்ம மேனேஜ்மேண்ட் எந்த மாதிரி செலக்ஷன் ப்ராசஸ் வச்சுருக்காங்கன்னு சொல்ல தான் வந்துருக்கேன்..

அதாவது பெருசா ஏதும் இல்ல.. ஸ்கூல் படிக்கும் போது ட்ராமா நெறய நடிச்சுருப்பீங்க.. அங்க மேபி உங்களுக்கு டீச்சர்ஸ் கான்செப்ட் சொல்லி கொடுப்பாங்க.. ஆனா இங்க நீங்களே ஏதாச்சு ஒரு மூவில இருந்து ஏதாச்சு ஒரு சீன சீகுவென்ஸ் சூஸ் பண்ணி நடிச்சு அதை வீடியோ எடுத்து அனுப்ப போறீங்க.. காஸ்ட்யூம்ஸ் என்விரான்மெண்ட்ஸ் எல்லாம் சீனோட மேட்ச் ஆகணும்னு அவசியம் இல்ல.. உங்க எக்ஸ்பிரஷன் அண்ட் டயலாக் டெலிவரிக்கு மட்டும் தான் மார்க்ஸ்.. வீடியோ அனுப்புறதுக்கு கடைசி நாள் அடுத்த மாசம் இதே நாள்.. இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு..

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. சஹா பிலிம் இண்டஸ்ட்ரி அவங்களோட ஆடிஷன் வைக்குறதா சொன்ன டேட்ட மாத்திருக்காங்க.. நெக்ஸ்ட் மந்த் சொன்னேன் இல்லையா.. ஆனா இப்போ அவங்க பைனலைஸ் பண்ணிருக்குறது த்ரீ மந்த்ஸ் கழிச்சு தான்..

உங்களுக்கு நிறைய டைம் இருக்கு.. கவனமா உங்களுக்கான சீன்ஸ் தேர்ந்தெடுத்து அதை அடிக்கடி ப்ராக்டீஸ் பண்ணி பாருங்க.. உங்க க்ரூப்புக்குள்ளயே நீங்க யார்கூட வேணும்னாலும் ஜோடி சேர்ந்துக்கலாம். அது உங்க விருப்பம்.. ஏன் உங்க க்ரூப்புக்குள்ள மட்டும் சொல்றோம்னா.. இந்த போட்டி மூலமா உங்களோட இன்டெர்னல் மார்க்ஸும் கால்குலேட் பண்ணுவோம்.. ஓகே காய்ஸ் சீ யு. டுமாரோ” என்றவர் சென்றுவிட அனைத்து குழுக்களும் கலந்தாலோசிக்க தொடங்கினர்.

நம் பாண்டவாஸ் அணியும் தீவிரமான ஆலோசனையில் இருந்தது.

“காய்ஸ் கண்டிப்பா நாம எல்லாரும் பார்ட்டிசிபேட் பண்றோம் ஓகேவா” என்று மதுரிகா கூற இனியாவும்,

“ஆமா நல்ல சீனா சூஸ் பண்றோம்… நடிச்சு மாஸ் பண்றோம்” என்று கூற,

“ஆமா எந்த மாதிரி சீன சூஸ் பண்ணலாம்னு நல்ல யோசிச்சு எடுப்போம்..” என்று மாறன் கூற அறிவோ,

“ஆமா எனக்கு தெரிஞ்சு எல்லாரும் ட்ரெண்டுங்குற பேருல புது புது படமா தான் யோசிப்பாங்க.. நாம கொஞ்சம் பின்னாடி போய் 90ஸ் ஸ்டைல்ல யோசிப்போம்.. அப்போ தான் நல்ல ஃபீல் கிடைக்கும்” என்று கூற இனியாவோ,

“டேய் திருட்டுப்பயலே.. ரசனைக்காரனா இருக்கியே டா.. எங்கேயோ போய்ட்ட போ..” என்று பாராட்ட மாறனும் மதுவும் கூட,

“ஆமா நிஜமா வேற லெவெல் யோசனை” என்று கூறிக்கொண்டிருக்க மதுரனும்,

“ஆமா அறிவு நீ சொன்ன ஐடியா செம தான்..” என்று எதையோ யோசித்தபடியே கூற அறிவோ,

“அதை ஏண்டா நீ யோசனையோட சொல்ற.. நீ வேற ஏதும் பிளான் வச்சுருக்கியா” என்று கேட்க அவனோ,

“இல்ல டா.. நான் வேற விஷயத்தை யோசிக்குறேன்” என்று கூற மதுரிகாவோ,

“அப்படியென்ன யோசனையும் இந்த போர்க்யூப்பைன் மண்டைக்குள்ள” என்று கேட்க,

“என்ன செய்ய பண்டாரம்.. சில விஷயம் முதல்லயே யோசிக்குறது நல்லது தான” என்று கூற பொறுமையிழந்த இனியா,

“ஏன் டா இப்படி நான்சிங் பேசுறதையே வேலையா வச்சிருக்கீங்க.. டேய் மதுரா உனக்கு இப்போ என்ன யோசனை அதை முதல்ல சொல்லு” என்று கூற அவனோ,

“நாம ஒவ்வொருத்தரும் நடிக்கணும்னா மூணு சீன்ஸ் வேணும்.. பட் மூணு பாய்ஸ்க்கு ஜோடியா நடிக்க ரெண்டு கேர்ள்ஸ் தான இருக்கீங்க.. அப்போ யாராச்சு ஒருத்தர் ரெண்டு பேர்கூட நடிக்குற மாதிரி ஆகும்.. ” என்று கூற அனைவர்க்கும் அவன் கூறியது நன்றாகவே புரிந்தது.

“ஹே ஆமால்ல.. வேற டீம்ல இருந்தும் ஆள் எடுக்க கூடாது.. நம்ம டீமுக்குள்ளயே நடிக்கணும்னா.. மதுரன் சொன்ன மாதிரி யாராச்சு ரெண்டு பேர் கூட நடிக்கணும்” என்று மாறன் கூற மதுரிகாவோ,

“அப்படியும் இல்லன்னா யாராச்சு ஒருத்தர் இல்லனா ரெண்டு பேர் சைட் அக்டர்ஸா நடிக்கணும்.. ஆனா அது நல்லாவா இருக்கும்” என்று கேட்க இனியாவோ எதையோ யோசித்து,

“ஆமா ஆமா அதெல்லாம் சரி வராது நடிச்சா எல்லாருமே லீட் ரோல் நடிப்போம்..” என்று கூற மதுரனும்,

“எஸ் இனியா.. யு ஆர் கரெக்ட்.. அப்போ ஒன்னு செய்யலாம்.. பிளான் பண்ண மாதிரி மூணு சீன் சூஸ் பண்ணுவோம்.. அதுவும் லவ் சீனா சூஸ் பண்ணுவோம்.. யாருக்கு யாரு பேரிங்னு லாட் போட்டு முடிவு பண்ணுவோம்.. ஓகே வா” என்று கேட்க மாறனோ,

“அதுவும் சரி தான்.. அப்போ மது அண்ட் இனியா இவங்க பெயர் மட்டும் ரெண்டு ரெண்டு தடவ எழுதி நாலு சீட்டு போடுவோம்.. நாங்க மூணு பெரும் ஒவ்வொரு சீட்டு எடுக்குறோம்.. யாருக்கு யார் நேம் வருதோ அவங்க அவங்க கூட நடிக்கணும்.. கண்டிஷன் ஓகேவா” என்று கேட்க பெண்கள் இருவரும் ஒப்புக்குள்ள சீட்டில் பெயர் எழுதினர். இனியா தனக்கு அறிவு தான் ஜோடியாக வர வேண்டும் என்று முதலில் நினைக்க பிறகு,

‘ஆமா நான் ஏன் அவன் தான் வரணும்னு யோசிக்குறேன்.. மத்த ரெண்டு பேருக் கூட என்னால இமேஜின் கூட பண்ண முடியலையே..’ என்று யோசிக்க பிறகு தன்னைத் தான் கடிந்து கொண்டவள்,

‘ச்ச அப்படி எல்லாம் நெனைக்க கூடாது.. நாம எல்லாருமே ஃபிரண்ட்ஸ்.. நம்ம சூஸ் பண்ணிருக்குற இந்த ஃபீல்டுல நாளைக்கு ஒருவேளை யாருன்னே தெரியாதவங்க கூட எல்லாம் நடிக்க வேண்டியிருக்கும்.. அப்படி இருக்க நம்ம ஃபிரண்ட்ஸ் கூட நடிக்குறதுல என்ன இருக்கு’ என்று சிந்தித்தவள் அதன் பிறகு அந்த யோசனையைத் தள்ளிவைத்தாள். அதே சமயம் மதுரனோ,

‘ஒருவேளை இந்த பண்டாரம் எனக்கு ஜோடியா வருவாளோ’ என்று சிந்திக்க மதுரிக்காவும்,

‘ஒருவேளை இந்த போர்க்யூபைன் மண்டையன் தான் எனக்கு ஜோடியா வருவானோ’ என்று சிந்திக்க அந்த சமயம் இருவரது பார்வைகளும் ஒரு வினாடி நேர்கோட்டில் சந்தித்தது. அதே நேரம் மாறனோ,

‘நமக்கு இந்த ராட்சசி வர போறாளா.. இல்ல அந்த பஜாரி வர போறாளா’ என்று யோசிக்க அனைவரின் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிவு,

“சீட்டு ரெடி.. குலுக்கலாமா..” என்று கேட்டு குலுக்கிவிட்டு போட ஆடவர்கள் மூவரும் ஆளுக்கொரு சீட்டினை எடுத்தனர். மூவரும் பிரித்து பார்த்தனர்..

 

ரகசியம் – 16

ஒருவழியாக சீட்டு குலுக்கி ஆடவர்கள் மூவரும் ஒவ்வொரு சீட்டு எடுத்து அதனை ஒவ்வொருவராக பிரித்துப் பார்த்தனர். முதலில் அறிவு திறந்து பார்க்க பார்த்ததும் அவனின் கண்கள் இனியாவை நோக்கியது. ஏற்கனவே அவனைப் பார்த்துக் கொண்டிருந்த இனியா அவன் அவளை நோக்கியதும் புரிந்துக் கொண்டாள் அவன் கையில் இருப்பது தன்னுடைய பெயர் தான் என்று. ஏதோ ஓர் மகிழ்ச்சி மனதில் தோன்ற அதனை வெளிக்காட்ட முடியாமல் தவித்தாள். மதுரனோ,

“என்ன டா யார் வந்துருக்கா” என்று கேட்க அறிவின் இதழ்கள்,

“அன்பு” என்று அசைந்தது.

“பார்றா.. சூப்பர்.. சரி அடுத்து மதுரா நீ பார்த்து சொல்லு” என்று மாறன் கூற மதுரனும் பார்க்கலானான். பார்த்தவனின் இதழ்கள் விரிய,

“மிஸ் பண்டாரம்” என்றது. மதுரிகா கண்கள் விரிய மதுரனைப் பார்க்க அவனோ புருவம் உயர்த்தி, “என்ன” என்று கேட்டான்.

“ஒண்ணுமில்ல” என்று தலை அசைத்தவள் குனிந்து கொள்ள அறிவோ மதுரனின் காதில்,

“என்னடா நடக்குது இங்க” என்று கேட்க மதுரனோ,

“கொஞ்ச நேரம் முன்னாடி அங்க நடந்ததையும் பார்த்தேன்” என்று பதிலுக்கு அவனைக் கேலி செய்ய கப்பென வாயை மூடியவன்,

“சரி மாறா.. நீ சொல்லு” என்று கூற உரையாடலைத் மாற்றினான். மாறனோ,

“சாகணும்னு முடிவு பண்ண அப்புறம் தூக்குமாட்டி செத்தா என்ன தூக்க மாத்திரை சாப்பிட்டு செத்தா என்ன ” என்று புலம்பியபடி சீட்டினைத் திறக்க போக அவனின் கூற்றில் பெண்கள் இருவரும் அவனை அடித்தனர்.

“விடுங்க டி.. வலிக்குது” என்றபடி சீட்டினைத் திறந்து பார்க்க அதில் இருந்த பெயர் அன்பினியா.

“ஹே பஜாரி நீ தான் டி” என்று கூற இனியாவின் கண்கள் அறிவமுதனின் முகத்தில் ஏதேனும் மாற்ற தெரிகிறதா என்று ஆராய ஏமாற்றம் அவளுக்கு தான். பிறகு மதுரனோ,

“காய்ஸ்.. எல்லாருக்கும் ஓகே தான..” என்று கேட்க மாறனோ,

“வேற வழி இல்ல ராசா” என்று கூறி இனியாவிடம் அடி வாங்கினான். பிறகு மதுரிகாவோ,

“சரி அப்போ இனிமே சீன்ஸ் சூஸ் பண்ண வேண்டிய வேலை தான்.. எப்போதும் போல ஆளுக்கொரு சீன்ஸ் யோசிச்சுட்டு வாங்க.. நாளைக்கு எந்த சீனுன்னு ஃபைனலைஸ் பண்ணி பிராக்டீஸ் ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கூற அனைவரும் ஆமோதித்தனர்.

பிறகு கல்லூரி முடிந்து அனைவரும் வீடு வர வந்ததும் முதல் வேலையாக எந்த படத்தில் எந்த காட்சியைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் மதுரிகா.

அதே சமயம் மதுரனும் அவனது வீட்டில் அவனின் மடிக்கணினியை எடுத்து உயிர்ப்பித்து அதில் தேட ஆரம்பித்தான். வந்ததும் அலைபேசியை எடுத்து அமர்ந்த மதுவைப் பார்த்த மாறன்,

“என்ன டி வந்ததும் வராததுமா.. மொபைல எடுத்துட்டு உக்காந்துருக்க.. என்ன விஷயம்” என்று கேட்க அவளோ,

“டேய் மறந்துட்டியா.. சீன்ஸ் யோசிக்க வேண்டாமா.. வா நீயும் உனக்கு யோசி” என்று கூற அவனும் அமர்ந்து தேடினான். அங்கு மதுரனும் பல காட்சிகளைத் தேட ஏனோ எதுவுமே சரியாக வரும் என்று தோன்றவில்லை. இங்கு மதுரிக்காவிற்கும் அதே நிலை தான். தேடி கொண்டிருந்த மாறனோ சிறிது நேரத்தில,

“ஹே எனக்கு சீன் கண்டுபிடிச்சுட்டேன் டி..” என்று கூற மதுவோ,

“அதுக்குள்ளயா.. ஹே எப்புறா” என்று கேட்க அவனோ,

“அதெல்லாம் என்னை மாதிரி ரசனைக்காரனா இருக்கணும்டி” என்று காலரைத் தூக்கிவிட்டபடி கூற அவளோ,

“அய்ய.. உன் ரசனை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாதா… சரி சொல்லு என்ன சீன்” என்று கேட்க அவனோ,

“சொல்லமாட்டேனே.. என்ன பண்ணுவ” என்று நக்கல் செய்ய,

“ஹே ப்ளீஸ் டா சொல்லு டா.. சஸ்பென்ஸ் வைக்காத டா” என்று கெஞ்ச,

“உன்னைப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு.. சரி அப்போ ஒன்னு பண்ணலாம்.. ஒரு தடவ என்னைப் பார்த்து அத்தான்னு கூப்பிடு சொல்றேன்” என்று வம்பிழுக்க,

“போடா நாயே.. நீ சொல்லவே வேணாம்” என்றபடி தன் தேடலைத் தொடர்ந்தாள் மதுரிகா.

வீடு வந்த இனியா தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மும்முரமாக நடிக்க தேவையான காட்சியை தேடும் பணியில் ஈடுபட அப்பொழுது அங்கு வந்த விழியோ,

“என்ன டி ஏதோ தேடுற மாதிரி இருக்கு..” என்று கேட்க அவளோ,

“ஆமா டி.. நல்ல லவ் சீனா ஒன்னு சொல்லேன்” என்று அலைபேசியைப் பார்த்தபடியே கூற அவளை மேலும் கீழுமாய் பார்த்த விழி,

“எதுக்கு டி” என்று கேட்க இனியாவோ சற்றும் யோசிக்காமல்,

“ப்ரொபோஸ் பண்ண தான்” என்று கூறிவிட,

“என்னடி சொல்ற ப்ரோபோஸா யாருக்கு டி” என்று அதிர்ந்து கேட்க அப்பொழுது தான் இனியா தான் என்ன கூறினோம் என்றார் யோசித்தாள். போட்டியில் நடிப்பதற்கு காட்சிகளைத் தேடினாலும் உள்மனதில் தன் உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்தும் விதமாக ஏதேனும் காட்சி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவளையும் மீறி ஓடிக் கொண்டிருந்தது. விழி.. அதிர்ந்து கேட்கும் போது தான்.. தான் என்ன கூறினோம் என்றும்.. இவ்வளவு நேரம் எந்த எண்ணத்தில் காட்சிகளைத் தேடிக் கொண்டிருந்தோம் என்றும் அவளுக்கு விளங்கியது. பிறகு தன்னை சமாளித்தவள்,

“ச்ச மொபைல்ல தேடிட்டே பாதி மட்டும் சொல்லிட்டு நிப்பாட்டிட்டேன்.. அதாவது..” என்று ஆரம்பித்தவள் தன் கல்லூரியில் நடக்கும் போட்டியைக் குறித்து விலக்கிவிட்டு,

“அதுக்காக தான் ஒரு நல்ல சீனா அதுவும் ப்ரொபோஸ் பண்ற மாதிரி சீனா தேடிட்டு இருக்கேன்” என்று சிறிது தடுமாறிக் கூற இதுவரை எப்பொழுதும் படபடவென பொரிந்து தள்ளும் இனியாவிடம் தடுமாற்றத்தை காணாத விழிக்கு இனியாவின் பாவனை புதிதாக தோன்றியது. சந்தேகமாய் அவளை நோக்கிய விழி தன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு,

“ஓ அப்படியா.. சரி எந்த மாதிரி சீன் வேணும்” என்று கேட்க இனியவோ,

“ஒரு பொண்ணு அவளோட ஃபீலிங்ஸ அந்த பையன்கிட்ட கன்வே பண்ற மாதிரி ஒரு சீன் வேணும்” என்று கூற விழிக்கு இப்பொழுது நன்றாகவே புரிந்தது.

“ஓஹோ அப்படி போகுதா கதை” என்று விழி கேட்டுவிட மறுபடியும் தான் உளறிவிட்டதை எண்ணி நொந்தாள் இனியா.

“எ..எ..என்ன கதை” என்று உதடுகள் தந்தியடிக்க விழியோ,

“ஹே நடிக்காத டி… யாருன்னு சொல்லு” என்று கேட்க இதற்கு மேல் தன் தங்கையை சமாளிக்க முடியாதென்று அறிந்தவள்,

“ஹே விழி.. நீ நெனைக்குற அளவுக்கு எல்லாம் இல்ல டி.. சும்மா ஒரு கிரஷ் தான்” என்று கூற அதனை நம்பாமல் பார்த்த விழி,

“தோ டா.. என்கிட்டயே பொய் சொல்ற பார்த்தியா..” என்று கேட்க,

“இல்ல டி நிஜமா தான்.. உன்மேல சாத்தியமா” என்று இனியா கூற விழியோ,

‘இவ ஒருவேளை லவ்வுன்னே தெரியாம லவ் பண்ணிட்டு இருக்காளோ’ என்று யோசித்தவள்,

“ஓ பெருசா ஒண்ணுமே இல்லாம தான் அன்னைக்கு கிண்டல் பண்ணதுல அவங்க ஃபீல் பண்ணிட்டாங்கன்னு நீ மூஞ்ச தொங்க போட்டு உக்காந்தியா.. இன்னைக்கு கூட நீ தேடணும்னு இந்த மாதிரி சீன தேடலை.. உனக்கே தெரியாம உன் ஆழ் மனசு சொல்லி பண்ணிட்டு இருக்க.. இதெல்லாம் பார்த்தா நீ அவங்கள லவ் பண்றன்னு தான் தோணுது..” என்று கூற அப்பொழுது தான் அவள் கூறியதை எல்லாம் சிந்தித்து பார்த்தாள் இனியா. பிறகு மீண்டும் தொடர்ந்தவள்,

“ஆமா இதுக்கு முன்னாடி அவங்களை உனக்கு தெரியுமா” என்று கேட்க அவளோ,

“அதெல்லாம் இல்ல.. காலேஜ் வந்து தான் பார்த்தேன்.. ஏன் கேக்குற” என்று கேட்க,

“இல்ல எப்படி தான் இந்த கண்ட உடன் காதல் எல்லாம் வருதோன்னு அன்னைக்கு என்னோட ஷார்ட் ஸ்டோரிய படிச்சுட்டு புலம்பிட்டு இருந்த.. இப்போ நீயும் அந்த கண்டிஷன்ல தான வந்து நிக்குற அதான் கேட்டேன்” என்று கூற என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாறியவள்,

“நீ ஏதேதோ பேசி என்னைக் குழப்புற.. நானே சீன் யோசிச்சுக்குறேன்..” என்றவள் அலைபேசியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென மொட்டைமாடிக்கு சென்றுவிட்டாள். காற்றினை உள்ளிழுத்து சுவாசித்தபடியே விழி கேட்ட கேள்விகள் மனதில் ஓட ஒவ்வொன்றாக யோசித்தாள்.

அவள் கூறுவதும் சரி தானே.. பாரபட்சம் பார்க்காமல் பிறரை கலாய்த்து தள்ளுபவள் இதுவரை யாருக்காகவும் இந்த அளவு வருந்தியதில்லையே. கண்ட உடன் காதல் மீது நம்பிக்கை இல்லாதவளுக்கு கண்டதும் அறிவை மட்டும் எவ்வாறு பிடித்தது. சுற்றி மதுரிகா மதுரன் மாறன் என்று இருந்தாலும் உரிமையாக இவனை மட்டும் சீண்ட தோன்றுவது ஏன்.. இன்றும் கூட தனக்கு ஜோடியாக அறிவு தான் வர வேண்டும் என்று நினைத்தாள் தானே.. அதுமட்டுமா விழி கூறியது போன்று அவலறியாமல் அவள் மன உணர்வுகளை அறிவிடம் வெளிப்படுத்துபடியான காட்சிகளை தானே தேடித் கொண்டிருந்தாள்.

இவ்வாறு தன் மனதிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தவளுக்கு மனம் கூறிய இறுதி பதில் “காதல்”.

காதல்.. அது எப்போது வேண்டுமென்றாலும் யாரிடம் வேண்டுமென்றாலும் எந்த ஒரு காரணங்கள் இல்லாமலும் தான் காதலிக்கிறோம் என்று தனக்கே தெரியாமலும் கூட வரும் தானே.. காரணங்கள் இருந்தால் அது காதலாகுமா..?

காதல் என்று உணர்ந்த அந்த கணமே அவளின் அலைப்பேசிக்கு வந்தது அவளின் காதலுக்குரியவனின் அழைப்பு. அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,

“சொல்லு அமுது” என்று மென்மையான குரலில் கூற அறிவோ புதிதாக உணர்ந்தான். பிறகு,

“அன்பு.. இன்னைக்கு மழை பெய்யும்னு நினைக்குறேன்” என்று கூற அவளோ,

“மழையா.. ஏன்”

“பின்ன என்னைக்கும் இல்லாத அதிசயமா என்னைத் திருட்டுப்பயலேன்னு கூப்பிடாம இருந்தது மட்டுமில்லாம என்னை யாருமே கூப்பிடாத பெயரை சொல்லி வேற கூப்புடுறியே.. அதான் மழை வரும்னு சொன்னேன்” என்று கூற காதலை உணர்ந்த தருணத்தின்போது காதலன் அழைத்த மகிழ்ச்சியில் தன் மனதில் இருந்த வந்த அழைப்பைக் கவனிக்க தவறிவிட்டாள். பிறகு சமாளிக்க நினைத்து,

“அதுவா அது வேற ஒன்னுமில்ல.. உனக்கு இல்லாத ஒரு விஷயத்தை உன் பேரா சொல்லி கூப்பிட மனசு வரல அதனால.. ஐ மீன் அறிவை சொன்னேன்.. ஆனா இப்போ கூப்பிடல்ங்குறதுக்காக நீ திட்டுப்பையன் இல்லன்னு சொல்ல மாட்டேன்..” என்று கூற,

“அதான.. எங்க திருந்திட்டியோன்னு நெனச்சேன்.. சரி அதை விடு நான் சொல்ல வந்ததை மறந்துட்டேன்.. நமக்கான சீன நீயே யோசிச்சுடு சரியா.. நான் இன்னைல இருந்து பார்ட் டைமா ஜாப் போறேன்.. அதனால எனக்கு டைம் இல்ல.. நீ எந்த சீன செலக்ட் பண்றியோ எனக்கு ஓகே தான்” என்று கூற இவளும்,

‘நல்லதா போச்சு..’ என்று நினைத்துவிட்டு சரியென்க அழைப்பு துண்டிக்கப்பட்டது. சிலமணிநேர யோசனைக்கு பிறகு தங்களுக்கான காட்சியை முடிவு செய்த பெண்ணவள் அதில் இருவரையும் கற்பனை செய்து பார்த்து, “திருட்டுப்பயலே இம்சை பண்றடா” என்று மனதினுள் கூறிக்கொண்டு சிரித்தபடி அறைக்குள் அடைந்து கொண்டாள்.

————————————————

மாறன் மற்றும் இனியாவிற்கான காட்சியும் தேர்வு செய்தாகிவிட்டது. அறிவு மற்றும் இனியாவிற்கான காட்சியும் தேர்வு செய்தாகிவிட்டது. ஆனால் மதுரன் மற்றும் மதுரிகா இருவரும் இன்னும் தேர்வு செய்தபாடில்லை. இணையத்தில் தேடி ஓய்ந்தவர்கள் தொலைக்காட்சியில் ஏதேனும் கிட்டுகிறதா என்று ஒரே போன்று எண்ணியபடி அவரவர் வீட்டில் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து ஒவ்வொரு சேனலாக மாற்ற இருவரது கண்களிலும் தென்பட்டது அந்த காட்சி. பார்த்த உடனேயே அக்காட்சி இருவருக்கும் அவர்களின் முதல் சந்திப்பை நினைவுப்படுத்த தங்களுக்கான காட்சியாய் அதனை தேர்வு செய்தனர்.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்