Loading

#OLD_IS_GOLD
#தூரிகை_தமிழ்_நாவல்கள்

“என்னண்ணே மஞ்சள் வாசம் இங்கன வர வீசுது?” லிங்கம் பிரேமுக்கு கேட்டிடாது வீரனின் பக்கம் குனிந்து கிசுகிசுக்க…

“எட்டடியில இருக்க மஞ்சள் வாசனை இங்க வரதுல என்னடே அதிசயம்?” என்றான் வீரன்.

“நான் மீனாகுட்டி கையிலிருக்கும் மஞ்சளை சொல்லலை” என்ற லிங்கம் “அவளோட நெத்தியிலிருக்குமாட்டி” என்று வீரனின் மார்பு பகுதி சட்டையை காண்பித்தான்.

குனிந்து பார்த்த வீரன் அங்கு எப்படி மஞ்சளின் தடம் வந்தது என்பதை நினைத்து மந்தகாசமாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“பாரேன்… மீசையை முறுக்கிட்டு அய்யனார் கணக்கா தோரணையா திரியிற வீரனா இது” என்று லிங்கம் ஆச்சரிய பாவனை காட்டிட…

“அடேய்…” என்று அசடு வழிந்தான் வீரன்.

பிரேம் ஒன்றும் புரியாத போதும்…

“ரெண்டு நாளா உன் முகமே பிரகாசமா இருக்கு மாமா” என்றான்.

“என்னண்ணே நடந்துச்சு?” லிங்கம் கேட்டிட,

“உன் மீனாகுட்டியவே கேளுடே” என்ற வீரன், தன் சட்டையில் பதிந்திருந்த மஞ்சளின் தடத்தில் விரல் வைத்து வருடினான்.

“ரொம்ப முத்திப்போச்சு.” லிங்கம் சற்று உரக்கக் கூறிட,

“இளநீரெல்லாம் முத்திப்போச்சு தான் வீரா. கொலை இறக்கிடலாம் நினைக்குறேன்” என்றார் பாண்டியன்.

“ஆங்… இந்த வாரத்துல இறக்கிடலாம் ஐயா” என்ற வீரன், “செத்த வாப்பெட்டியை மூடிட்டு இருடே” என்று தம்பியை அடக்கினான்.

*********************************

“காலையில பொங்க வைய்க்கும்போது ஏதும் வில்லங்கமா நடக்குதான்னு நா கேட்டதுக்கு, அது உன் முடிவை பொறுத்துன்னு சொன்னிங்களே… வெளங்கிடுச்சு” என்றான் லிங்கம்.

“அப்புறம்?”

“அண்ணே இப்போ நான் என்ன சொல்லணுமாட்டிக்கு நெனைக்கிற நீயி?” சற்று கடுப்பாகவே கேட்டான் லிங்கம்.

“நீதான் சொல்லணும் லிங்கம்!” வீரன் சொல்லிட மீனாள் அருகில் வந்தாள்.

வீரனிடம் பார்வையைக் கூட திருப்பாது,

லிங்கத்தின் முன் சென்று மண்டியிட்டவள் அவனின் கையை பிடித்துக்கொண்டு…

“என்ன வெசனம் லிங்கு மாமா உனக்கு? அவள் சின்னப்புள்ள. எடுத்து சொன்னாக்கா புரிஞ்சிப்பா(ள்). நீயி இப்படி சோர்ந்து உடக்காரத. என்னமோ மாறி இருக்கு” என்றாள்.

“அப்போ உனக்கும் தெரிஞ்சிருக்கு. என்னன்னு எனக்குத்தான் லேட்டா தெரிஞ்சிருக்குல. நானு அம்புட்டுக்கு முட்டாளா இருந்திருக்கேன்” என்ற லிங்கத்தின் பேச்சினை மறுத்த மீனா, “நானும் ரெண்டு நாளாத்தான் கவனிக்கேன் மாமா” என்றாள்.

“சரி… அப்போ ரெண்டேறும் அவகிட்ட பேசாம, என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கீய்ங்க. இது தப்புன்னு எடுத்து சொல்லும். பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?”

லிங்கம் அங்கையை மட்டுமே மனதில் வைத்து அப்படி பேச, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மீனாள்.

மீனாளின் பார்வையில் அவளின் மனப்போக்கை கண்டுகொண்டவன், நெற்றியில் தட்டி தன்னையே நிந்தித்தவனாக,

“அச்சோ மீனாக்குட்டி… நானு உன்னைய” எனும் போதே…

“புரியுது மாமா. தப்பா நினைக்கல” என்றிருந்தாள்.

இவர்களின் இந்தப்பேச்சில் வீரனுக்கு ஒன்று தெரிந்தது.

*************************************

“நான் பொண்ணுங்க சராசரி உயரத்தை விடவும் கூடுதல் உயரம். வேணுன்னா பாருங்க, என் தலை உங்க நெஞ்சை தொடுது. நீங்க பனை மரம் கணக்கா ஆறடிக்கு மேல ஒசரமா வளர்ந்துட்டா, என்னைய மட்டம் சொல்லுவீங்களோ” என்றாள். அவனை பார்த்து அவலம் காட்டி.

“சரியான ஒசரம் தான். இதுக்கமேல வேணாமாட்டி. இப்போதான் பொருத்தம் பக்காவா இருக்கு” என்றவன் அவளின் நெற்றி முட்டி…

“இந்த படபட பேச்சை ரொம்பவே மிஸ் பண்றேண்டி. எப்போ என்கிட்ட பழையமாறி இருப்பியாம்?” என்றான்.

அதில் சுதாரித்தவள் மஞ்சளை மறந்தவளாக வேகமாக முன் சென்றிட, மஞ்சள் காட்டை நெருங்கியவன்… கிழங்கோடு செடிகளை பிடிங்கிக்கொண்டு அவளை எட்டி பிடித்தான்.

“இந்தா பிடி. இதுக்காகத்தான வந்த” என்று மஞ்சளை அவளிடம் நீட்டினான்.

மீனாளும் அவனை முறைத்துக்கொண்டே…

“என்னை நெருங்க முயற்சி பண்ணாதீங்க. ரெண்டேருக்கும் வலியாகிப்போவும்” எனக்கூறி மஞ்சளை வலது கை நீட்டி வாங்கிட…

“நேத்தே கழட்டி போட்டிருப்பேன்னு நினைச்சேன்” என்றான். அவளின் கையில் அவன் கட்டிவிட்ட கயிற்றை சுட்டிக்காட்டி.

“ஏன் மாமா. எதுக்கு பக்கம் வர. முடியல மாமா. எட்டவே நில்லு. அதுதான் எனக்கு நல்லது” என்றவளின் கண்கள் குளமாகின.

 

திங்கள் முதல் (15.12.2025)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன். டீசர் சூப்பர்.

  2. கிராமத்து பேச்சு வழக்குல நல்லா இருக்கு … 3 விதமான சூழ்நிலைகள் அதை விரிவா பார்க்க போறோம் … 🥰🥰🥰