
மெல்லினம் 9:
போக்குவரத்து நெரிசலிலும் சீறி பாய்ந்து கொண்டு சென்ற எமாகாவினை(பைக்) சுற்றுப்புறத்தில் திட்டி தீர்க்க அதில் எல்லாம் சிறிதும் பாதிக்கப்படாதவனாக வண்டியினை செலுத்தி கொண்டிருந்தான் ஹரிஷ்.
ஏனென்றால் அவனின் உள்ளம் தான் ஒரு நிலையில் இல்லாது அத்விதனை நினைத்து குழம்பி தவித்து கொண்டிருந்ததே.
வேகம்! வேகம்! வேகம்! மட்டுமே அவனிடம். மனதின் தெளிவில்லாத தன்மையினை அத்விதனின் நினைவினை வேகத்தின் மூலம் வெளிப்படுத்தி ஆறுதலை தேட முயன்று கொண்டிருந்தான்.
மனம் எங்கும் அத்வியின் மயம் தான்..
சட்டென வண்டியினை ஒரு கிளை சாலையில் ஒடித்து திருப்பி நிறுத்தியவன் அதற்கு மேல் முடியாது என்பது போல் பெட்ரோல் டேங்கின் மீது கவிழ்ந்தடித்து படுத்து விட்டான்.
காதுகளில் “ப்பா லவ் யூ மை அப்பா பெஸ்ட்டுப்பா “என வினோத் குழந்தையின் கொஞ்சிய குரலும் அதற்கு பெருமையாக கர்வத்தில் மின்னிய வினோத்தின் முகமும், அகக்கண்ணில் வந்து போக கூடவே அத்விதனின் நினைவும் வர “ஷிட்” என்று கத்தியவாறு பைக்கின் மீது ஓங்கி குத்து விட்டான்.
“இல்லை,வினோத் வீட்டுக்கு போயிருக்கேவே கூடாது, அவன் பர்த்டே பார்ட்டிக்கு சொல்லி கூப்பிடும் போதே அவாய்ட்டு பண்ணிருக்கணும். அங்க போனதால தானே எனக்கு இப்போ இப்புடி தோணுது, ஐ ஹேட் திஸ் பீலிங்க்ஸ்” என வாய் விட்டு புலம்பியவனுக்கு என்ன முயன்றும் வினோத்தின் வீட்டில் நடந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
வினோத் வேறு யாரும் அல்ல ஹரிஷுடன் வேலை செய்பவன் தான். அவன் குழந்தையின் பர்த்தடே பார்ட்டிக்கு ஹரிஷை அவன் அழைக்க மறுக்க முடியாமல் கிளம்பி விட்டான்.
அங்கே சென்று பார்ட்டிக்கான ஏற்பாடுகளை கண்டதும் பட்டென அவனிற்கு அத்விதனின் நினைவு. பின்னே முதல் வருட பிறந்த நாளை விழாவாக கொண்டாடியிருந்தானே!
சட்டென்று அந்த நினைவுகளை உதறி தள்ளியவன், உள்ளே செல்ல சில நிமிடங்களில் பார்ட்டி ஆரம்பமாகி விட, இங்கே ஹரிஷிற்கு தான் நிலை கொள்ள இயலவில்லை.
வினோத் அவன் குழந்தைக்கு ஒவ்வொரு பரிசு பொருளாக எடுத்து தர,தர வாங்கிய குழந்தையின் முகம் பெருமையிலும் ஆசையிலும் மின்ன, நொடிக்கொரு முத்தங்களால் கொஞ்சி திணறடித்தவன் “ப்பா லவ் யூ தூக்கு” என்றவாறு வினோத்தின் பின்னே சுற்றி, அவனை விட்டு இம்மியும் நகராது, வால் பிடித்து திரிந்த குழந்தையினை காண காண அத்விதனின் முகம் ஆழிபேரலையாய் மேல் எழுந்து மூச்சு விட முடியாமல் திணறி விட்டான் ஹரிஷ்.
அதிலும் குழந்தை வினோத் வாங்கி கொடுத்த பொருளை தனது நண்பர்களிடம் “இங்க பாத்தியா காரு, மை அப்பா வாங்கி தந்தாங்க இன்னும் நெறைய டாய்ஸ் வாங்கி கொடுத்திருக்காங்க லவ் மை ப்பா பெஸ்ட் ப்பா!” முகத்தில் பெருமை விகசிக்க கண்களில் ஆசை மின்ன கூறி கொண்டிருந்த குழந்தையினை கண்டதும் ஹரிஷின் மனம் கலங்கிற்று.
இதே போல் அத்விதன் ஆசை பட்ட காரினை ஹரிஷ் வாங்கி வந்து தந்திருக்க அன்று முழுவதும் அந்த காரினை வைத்து தேன்முல்லையிடமும் அவளின் பெற்றோரிடமும் “எங்கப்பா வாங்கி தந்தது” என்று விட்டு நிமிடத்திற்கு ஒரு முறை காரினை வைத்து விளையாடுவதும் ஹரிஷை வந்து அணைப்பதுமாக அன்று முழுவதும் அத்விதன் செய்த ஆர்ப்பாட்டங்கள் இன்றும் நினைவில் எழுந்து அவனின் உதட்டில் புன்னகையை பூக்க செய்தன.
அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும், அத்விதனின் நினைவு அலை கடலாய் மேலெழுந்து வர, அதற்கு மேல் முடியாமல் வினோத்திடம் சொல்லி கொண்டு புறப்பட்டு விட்டான்.
இருந்தும் அத்விதனின் முகம் விடாமல் அவனை துரத்தியதில் வண்டியினை நிறுத்தி விட்டிருந்தான்.
தலை கவிழ்ந்து படுத்திருந்தவனின் பின் தலையில் “சொத்” என்று எதுவோ விழ நிமிர்ந்து பார்த்தவன் கண்டது இருண்டு கொண்டிருந்த வானத்தை தான். பெரும் மழைக்குரிய அறிகுறியாக அது விளங்க அப்போதும் நினைவு வந்தது அத்விதன் தான்.
அத்விதனுக்கு மழை நேரத்தில் வரும் சத்தம் என்றால் மிகவும் பயமே. பெரும்பாலும் அந்த நேரங்களில் ஹரிஷின் அணைப்பிலேயே அவனை விட்டு கீழிறங்காது தொத்தி கொண்டே கிடப்பான்.
சட்டென அத்விதனை அணைத்து கொள்ள அவன் மனமும் உடலும் பரபரக்க அவன் முகத்தினை பார்க்க துடித்தது மனம்.
விட்டால் அவனை சென்று தூக்கி அணைத்து கொள்ளும் வேகம் அவனிடம்.
அதுவும் அன்று சூப்பர் மார்க்கெட்டில் அத்வி அவனை தூக்க சொல்லி அழுதது நினைவு வர, அவன் மனம் இன்னும் அவனை காண வேண்டும், என்பதில் தீவிரமாகியது.
அத்விதனின் நினைவுகளோடு கூடவே சுரபியின் நினைவும் எழ, பட்டென சிறிது எரிச்சலுக்கு மாறியது அவனின் முகம்.
பின்னே சூப்பர் மார்க்கெட்டில் அத்வியை பார்த்து விட்டு வந்ததில் இருந்து தான் முகத்தை தூக்கி வைத்து கொண்டு சுற்றினாளே! இவன் தானே பின்னால் அலைந்து திரிந்து சமதானப்படுத்த வேண்டியிருந்தது.
இவன் யோசிக்கும் நேரம், மழை பெரும் துளிகளால் மண்ணை தொட, எதுவும் யோசிக்காமல் பைக்கினை முல்லையின் வீட்டிற்கு திருப்பி விட்டான்.
போக போக தான் முல்லை குழந்தையை பார்க்க விடுவாளா? என்ற எண்ணம் எழ, தடுமாறி தான் போனான். இருந்தும் ‘என்னை தடுப்பவர் யார்’ என்ற மிதப்பில் அவன் செல்ல மழையும் அவனை பின்தொடர்ந்தது.
முல்லையின் வீட்டின் முன் அவன் வண்டியினை நிறுத்திய நொடி அடைமழை பேயாய் அடித்து ஊற்ற பைக்கினை வேகமாக நிறுத்தியவன் கேட்டினில் கைவைக்க அது பூட்டியிருந்தது.
‘இந்த மழையில எங்க போனா குழந்தை வச்சிகிட்டு’ என மழையில் நனைந்ததில் எரிச்சலும் சேர, கோபமாய் வந்தது முல்லையில் மேல்.
தொப்பலாக நனைந்து விட்டவன் சற்று ஒதுங்கி நிற்க “டமார்” என்ற இடியின் சத்தம் கேட்டதில், அவனின் உடலும் சற்றே தூக்கி போட தொடர்ந்து அத்விதனின் அலறல் சத்தமும் அவன் காதினை எட்ட, கண்களையும் காதினையும் கூர்மையாக்கி, அவன் சத்தம் வந்த திசையை நோக்க அத்விதன் பக்கத்து வீட்டில் இருப்பதாய் கண்டு கொண்டவன், வேகமாக அவர்கள் வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே நுழைய.
இயற்கையும் தன் கோர தாண்டவத்தை ஆரம்பித்திருந்தது.
வீட்டில் இருப்பவர்களும் சாதாரண மழை என நினைத்து கதவினை திறந்து வைத்திருந்தவர்கள், நிலைமையை உணர்ந்து கதவினை அடைக்க வருவதற்குள் ஹரீஷ் உள் நுழைந்து விட்டிருந்தான்.
தீடிரென ஒருவன் உள்ளே நுழைந்ததும் திடுக்கிட்டு பதறிவிட்டியிருந்தனர் வீட்டில் உள்ளவர்கள்.
பின் ஹரிஷை பார்த்து ஆசுவாசமடைந்தவற்குள் “அத்வி கண்ணா” என்றவன் போட்ட சத்தத்தில் மிரண்டு விட்டனர் வீட்டினர்.
அவனின் சத்தத்தில் உள்ளே இருந்த குழந்தை வெளியில் ஓடி வந்தவன் ஹரிஷை கண்ட நொடி, அதுவரை இருந்த பயத்தில் “ப்ப்பாஆஆஆஆ.” என்றவாறு அத்விதன் ஹரிஷை நோக்கி ஓட,
பட்டென அவனை தடுத்து தூக்கியிருந்தார் அந்த வீட்டின் குடும்ப தலைவர் பரசுராம்.
தன் குழந்தையினை தூக்கி அணைக்கும் ஆவலில் இருந்தவனுக்கு பரசுராமின் செயல் கோபத்தை வரவழைக்க,
“குழந்தைய விடுங்க கீழ” என்க,
“ம்ஹீம் முடியாது, முதல்ல வெளிய போ நீ! இப்புடி தான் வீட்டாளுங்க அனுமதியில்லாம உள்ள வருவியா? முல்லை எங்களை நம்பி தான் குழந்தைய விட்டுட்டு போயிருக்கா, அப்புடி எல்லாம் விட முடியாது வெளிய போ நீ மொதல்ல” என்று விட்டிருந்தார்.
அவருக்கு தான் இவன் விவாகரத்து செய்து விட்டு, வேறோரு திருமணம் செய்து கொண்ட அனைத்து விடயமும் தெரியுமே, பின் எப்படி அவனிடம் குழந்தையை விடுவார்.
“ஏய்! என்ன? என் குழந்தைய விடுயா மொதல்ல” என மரியாதையை காற்றில் விட்டவன் அவரை நெருங்கி அத்வியை வலுக்கட்டாயமாக பிடுங்க முற்பட, அவனின் இச்செயலில் குழந்தை மேலும் கத்தி அழுக ஆரம்பித்து விட, அந்த நொடி தான் கதிரும் முல்லையும் வந்தது.
குழந்தையின் அழுகையையும் தொடர்ந்து கேட்ட ஹரிஷீன் சத்தத்திலும் பயந்தடித்து கொண்டு முல்லை உள்ளே சென்றவள், அங்கே கண்ட காட்சியில் பதறி ஹரிஷிடம் சென்றவள்,
“என்ன பண்ணுறீங்க ஹரிஷ் விடுங்க விடுங்க குழந்தையை, பயத்துல அழுகுறான் விடுங்க” என்றவாறு அவள் ஹரிஷின் கைகளை பிரித்து விட,
“ஏய் அவன் என் பிள்ளை! இந்தாளு என்கிட்ட வர விடமாட்டானாமா?? எவ்வளவு கொழுப்பு போடி நீ” என ஆங்காரத்தில் இரைந்தவன், முல்லையை பிடித்து தள்ளி விட்டு மீண்டும் குழந்தையை இழுக்க போராடா,
அவன் தள்ளி விட்டதில் சுவரில் இடித்து கொண்டு நின்றவளுக்கு இயலாலையிலும் வலியிலும் கண்ணீர் பெருக செய்வதறியாது திகைத்து நின்று விட்டாள்.
முல்லையை தொடர்ந்து வண்டியினை பார்க் செய்துவிட்டு உள்ளே ஓடிய கதிரழகன், அங்கே நடந்த கலவரத்தில் சில நொடிகளே திகைத்து நின்றவனிற்கு, கோபம் தாறுமாறாக எழ, விரைந்து ஹரிஷின் அருகே நெருங்கியவன் ஓரே இழுவையில், அவனை இழுத்து அறைந்து கீழே தள்ளி விட்டவன், குழந்தையினை வாங்கி அருகே அழுகையில் நின்றிருந்த முல்லையிடம் முறைத்தவாறு கொடுத்தவன்,
“ச்சு ச்சு உன் முன்னாள் புருஷனை அடிச்சுட்டன்றதுக்கா இப்புடி அழுகுற” என பல்லை கடித்து கொண்டு நக்கலாக அவன் கேட்க அதில் அதிர்ந்தவளின் கண்களும் கண்ணீர் சொறிவதை நிறுத்தி விட அதில் திருப்தியுற்றவன் திரும்ப,
“ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என்னை அடிப்ப??” என அவன் தள்ளி விட்டதில் ஈரத்தரை வழுக்கி விட எழ முடியாமல் அவன் எகிற,
அவன் அருகில் சென்ற கதிர்,
“மாப்பிள்ளை ரொம்ப துள்ளுன ஒரு மிதி தான் பீஸை புடுங்கிருவான், பாத்துக்க! இப்போ தான் வேற புதுசா கல்யாணம் பண்ணிருக்க, பாத்து பதமா நடந்துக்கனும் என்ன” என மிரட்ட,
கதிர் காலை தூக்கி நின்று நக்கலாக பேசியதில் அவ்வீட்டின் பெண்மணி “களுக்” என்று சிரித்து விட அவமானத்தில் ஹரிஷின் முகம் கருத்து விட்டது.
சிரித்தவரை திரும்பி பாவமாக பார்த்த கதிர் “ஏன் கா ஏன் ? என்னக்கா இப்புடி பண்ணிட்டீங்களே, இப்போ இவன் வேற குப்புற விழுந்து கரப்பான்பூச்சி மாதிரி துள்ளி குதிச்சு பஞ்ச் டைலாக் எல்லாம் பேசுவானே, அதை வேற சிரிக்காமா சீரியஸா கேட்கணும். என் கஷ்டம் தெரியாமா இப்புடி சிரிச்சு மாட்டிவிட்டுடீங்களே க்கா” என அவன் பரிதபமாக கேட்டதில் முல்லைக்கும் சிரிப்பு வந்து விட இதழை பிரித்து விட்டாள்.
அவன் பேச்சில் இன்னும் அவமானமாக உணர்ந்த ஹரிஷிற்கு, முல்லையின் சிரிப்பு இன்னும் அவனின் கோபத்திற்கு தூபம் போட தட்டு தடுமாறி எழுந்தவன்,
“ஹோ! இவன் கூட சுத்துற ஆசையில் தான் பிள்ளை இடைஞ்சலாக இருக்க கூடாதுன்னு இந்த மழையிலும் விட்டுட்டு போனியோ?” என அவன் குரோதமாக கேட்டதில் முல்லையின் சிரிப்பு பட்டென நின்று விட்டு அவள் இதழ்கள் அழுகையில் துடிக்க,
“ச்சே ச்சூ மாப்பிள்ளை இப்புடி பேசி அழுக வைக்கிறது எல்லாம் பழைய டெக்னிக்கு, இன்னமும் நீங்க அப்டேட் ஆகாம இருக்குறீங்களே ,வெரி பேட் இன்னும் கொஞ்சம் நல்லா எஃபெக்ட் போடுங்க இப்பதான் லேசா உதடு அழுகையில துடிக்குது கமான் மாப்பிள்ளை கமான் அடுத்து என்ன சொல்ல போறீங்க மீ வெயிட்டிங்” என,
“ஏய் என்ன நக்கலா???”
“இல்லை மாப்பிள்ளை விக்கல்! அது சரி நீங்க இங்க வந்தது உங்க புதுசு கண்ணா புதுசு! புது பொண்டாட்டிக்கு தெரியுமா?” என முக்கியமான விஷயத்தில் கதிர் அவனை தாக்க,
அப்போது தான் ஹரிஷிற்கு அது உறைந்தது. வெளியில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்க, இதுவரை ஒரு போன் கூட சுரபியிடம் இருந்து வரவில்லை என்பதை. சட்டென்று உடல் பலமிழந்ததை போல் உணர்ந்தான்.
அவனின் தோள்களை வலுவாக பற்றிய கதிர் “அப்பறங்க மாப்பிள்ளை உங்க சம்சாரம் உங்களுக்காக வழி மேல் விழி வைத்து பதறிட்டு இருப்பாங்க, கிளம்புறீங்களா கொஞ்சம்! போயிட்டு உங்க சம்சாரத்தோட வட்ட மேஜை மாநாடு நடத்தி கொஞ்சம் திட்டுறதுல அப்டேட் ஆகிட்டு வாங்க சரியா” என கிட்டதட்ட இழுத்தவாறு வாயிற் கதவருகில் வந்து நிறுத்தி விட அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அந்த மழையிலும் ஹரிஷ் கிளம்ப,
அப்போது கொஞ்சம் தேறியிருந்த அத்வி அவன் போவதை கண்டு “ப்பா..! நோ..!” என்க,
“அப்பா தான்டா அதி ப்பா!” என அன்று சூப்பர் மார்க்கெட்டில் கூறியது போல் இன்றும் சத்தமாக கூறிய கதிர் கதவினை ஹரிஷின் முகத்தில் அடித்தாற் போல் சாற்ற, அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நில்லாது தனது கோபம் முழுவதையும் வண்டியில் காட்டி பறந்தான் ஹரிஷ்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கைகளுக்குள்ளேயே அடங்கி இருக்கையில் புரியாத அருமை எல்லாம் அதனை கீழே உதறிவிட்ட பிறகே புரியும்.
தன்னை நாயகனாக பாவித்து தூக்கி வைத்து கொண்டாடிய மகனை, இனி பார்க்க கூட தேவையில்லை என்று உறுதிப்படுத்தி கையெழுத்திடும் போது இந்த பரிதவிப்பு எல்லாம் எங்கே சென்றது?
தெளிவில்லாத அவனது நினைவுகளால் சூழப்பட்ட மனதுடன் ஆறுதல் தேடி கடும் மழையினில் வீதியில் அலையும் காலம் வாய்க்கும் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருந்திருக்க மாட்டான்.
இது ஆரம்பம் மட்டுமே இன்னும் மனவேதனை பட நிறைய இருக்கின்றது.
முல்லையின் கண்களில் கண்ணீரை காண இயலவில்லை கதிரினால். அத்வியின் அப்பா மீதான பாசம் நெகிழ செய்கின்றது.
வந்துட்டான் பிள்ளையை குடுன்னு … பாசம் பொங்குது … கதிர் இன்னும் ரெண்டு போட்டிருக்கலாம்ல … எதுக்கு முல்லைய திட்டுற பாவம் .. அவளை தைரியமா மாத்த டிரை பண்ணுறியா .. காமெடியன் தேவை இல்ல கதிர் … அந்த ரோலும் ஹீரோ நீயே சேர்த்து பண்ணிடுற …