Loading

மெல்லினம் 7 :

கோபாலாசுவாமி-ஞானம்மாள் தம்பதியினருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் முதலாமவன் பிரகாஷ் அவள் மனைவி ஸ்ருதி மற்றும் அவர்களின் குழந்தைகள் ரியாஸ் மற்றும் ஆர்யா.

இரண்டாமவன் ராகேஷ் அவன் மனைவி சீதா மற்றும் குழந்தை ரேஷ்மிகா.

வீட்டின் கடைக்குட்டி கதிரழகன்.

அண்ணன் தம்பி மூவரும் சிவில் இன்ஜீனியர்ஸ். மூவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு சிறிய நிறுவனத்தை “பி.ஆர்.கே பில்டர்ஸ்” வைத்திருக்கின்றனர்.

ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்பு மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், அவர்களின் விடாமுயற்சியாலும் நேர்மையான தரமான பொருட்களாலும், சிறிது சிறிதாக அவர்களின் நிலை உயர்ந்து, இன்று பெரிய பெரிய ஹோட்டல்கள் நிறுவனங்கள் கட்டும் அளவிற்கு முன்னேறியிருந்தனர்.

பிரகாஷிற்கு வீட்டில் பேசி திருமணம் முடித்து வைத்த பெண் தான் ஸ்ருதி.வசதி அவ்வளவாக இல்லை என்றாலும், சொந்தம் விட்டு போக கூடாதென கோபாலாசுவாமி வழி சொந்தத்தில் இருந்தவளை கட்டி வைத்திருந்தனர்.

இரண்டாவது ராகேஷூடையது காதல் திருமணம். “க்ரோவிங் பட்ஷ்” பள்ளியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு, இவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க அதன் பொறுப்பு முழுவதும் ராகேஷிடம் வந்திருந்ததில், அடிக்கடி பள்ளிக்கு சென்று வந்தவனிற்கு சீதாவை கண்டதும் பிடித்து விட, தனது பிடித்தத்தை அவளிடமும் பெற்றோர்களிடமும் கூறி திருமணம் செய்து கொண்டான்.

சீதாவின் அப்பாவும் அவர்களின் வளர்ச்சியை கண்டும் குடும்ப பிண்ணனியை கருத்தில் கொண்டும் மனதார திருமணத்தை நடத்தி வைத்திருந்தார்.

பள்ளி செல்வதற்காக அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள் தேன்முல்லை.

அந்த வார நாட்கள் முழுவதும் ஒரு வித சோர்வுடனும் கடுகடுப்புடனேயே கழிந்தது தேன்முல்லைக்கு.

கடுகடுப்பு எல்லாம் ஸ்ருதியினாலே..

அன்று பேசியதோடு அல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் “ஹோ டான்ஸ் சொல்லி கொடுக்க வந்தவளா நீ, உனக்கெல்லாம் திமிரு தேவையா?” என பல முறை முல்லையிடம் வம்பு பேசி சீண்டி விட,

பலமுறை அமைதியாக இருப்பவள் என்றேனும் “ஒரு வேலையும் செய்யாம சுத்திட்டு இருக்குற உங்களுக்கே, திமிரு இருக்கும் போது எனக்கு இருக்க கூடாதா?” என நன்றாக திருப்பியும் கொடுத்திருக்கிறாள்.

ஸ்ருதி தன்னிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறாளா? என்றால், இல்லை வீட்டினரையும் அலட்சியமாக தான் நடத்துகிறாள்.

கதிரழகன் இருந்தால் மட்டுமே சற்றே அடக்கி வாசிப்பாள் அதுவும் சற்றே தான். இல்லை என்றால், அவனையும் ஏதேனும் பேசி சண்டை இடுவதையே, தான் வேலையாக வைத்திருக்கிறாள்.

இவள் செல்லும் இரண்டு நாட்களில் ஸ்ருதி வீட்டில் இருந்தால் எந்நேரமும் வீட்டினருடன் ஏதேனும் வாக்குவாதத்தில் தான் இருப்பாள்.

‘என்ன பெண் இவள் எப்போதும் வம்பு வளர்த்து கொண்டு’ என அவளிற்கு தோன்றினாலும் அதனை பற்றி மேலும் சிந்தனை செய்யவில்லை.

ஏனெனில் இங்கே அவள் வீட்டின் பிரச்சனைகளை தலைக்கு மேல் கிடக்கின்றன. இதில் புதிதாக எதையும் அவள் ஏற்று கொள்ள விரும்பவில்லை.

மங்கையர்க்கரசியின் இந்த ஒருவார அமைதி முகம் காண காண அவள் அடிவயிற்றில் பீதியை கிளப்பியது என்றால் மிகையில்லை.

புயலுக்கு முன் வரும் அமைதியை போல் தோன்றியது அவரின் இந்த மெளனம். எந்நேரத்தில் எந்த குண்டை போடுவாறோ என அவரை நினைத்தே பாதி யோசனை முல்லைக்கு.

வீட்டில் ஏதோ அசாதாரண சூழல் தீடிரென ஏற்பட்டது போல் தோன்றிற்று அவளிற்கு.

இதோ இன்று விஜயதசமி ஆனால் அதற்கான எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக இருந்தது வீடு.

அத்விதனுக்கு மூன்று வயது முடியும் தருவாயில் இருப்பதால் அவனை இன்று பள்ளியில் சேர்ப்பதாக ஏற்பாடு.

நேற்றே தாய் தந்தை இருவரிடமும் சொல்லி விட்டால் “ம்ம் ம்ம் சரிடாமா” என சொல்லி வைத்தாற் போல் இருவரும் ஒரு வாக்கியத்தில் முடித்து விட்டனர்.

“ச்சு இந்த குட்டி இல்லாமா நான் எப்புடி டி இருப்பேன்” என்ற சிறு புலம்பலயாவது தாயிடம் இருந்து எதிர்பார்த்திருந்தாலோ,

சதா சிந்தனையில் இருக்கும் தாயின் முகம் அவளை இயல்பாக இருக்க விடாமல் இம்சை செய்ய வருவதை எதிர்கொள்ள தன்னை தானே திடப்படுத்தி கொண்டிருந்தாள்.

“ம்மா நான் கிளம்புறேன் இன்னைக்கு கொஞ்ச நேரம் மட்டும் இவன் பழகுறதுக்காக அங்க இருக்கட்டும் அப்பறம் அப்பாவ வந்து கூப்பிட்டு போக சொல்லுங்க” என்று விட்டு அவள் கிளம்பிட,

மங்கைக்கு தான் அத்வியை பிரிவது கஷ்டமாக இருந்தது. இருந்தும் மகளின் நல்வாழ்க்கைக்கு வேண்டி சிறிது விலகியே இருக்க அவர் தீர்மானித்திருக்க வலி உயிரை குடித்தது.

அத்விதனை அங்கிருந்த ப்ளேயிங் ஏரியாவில் விளையாட விட்டவள் அவனுக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொண்டிருந்தாள்.

அப்ளிக்கேஷன் பாஃர்மை நிரப்பி கொண்டு வந்தவள் குழந்தையின் பெயரை எழுதி விட்டு அவனின் இனிஷியலை எழுத போகும் முன் அவள் கைகள் தடுமாறி நடுங்க தொடங்கின.

‘இவ்வளவு நடந்த பின்னரும் அவனின் பெயரை இனிஷியலாக போட வேண்டுமா’ என அவளின் மனம் குத்தி கிழிக்க

‘என்ன நடந்திருந்தாலும் அவன் தான் தந்தை என்பது உண்மை தானே. நீ விவாகரத்து வாங்கினால் குழந்தைக்கு தந்தைக்கான உரிமையை நீ மறுப்பாயா? இன்னும் அவன் வளர்ந்து விவரம் தெரியும் வயதில் கேள்வி கேட்க மாட்டானா?

இல்லை தந்தையின் பெயர் இல்லாமல் தாயின் பெயரை மட்டும் இனிஷியலாக போட்டால் அவனை இந்த சமூகம் சும்மா விடுமா “உன் அப்பா யாரு” என்ற‌ கேள்வியே முற்று முழுதாக அவனை சுற்றி வரும். அத்வி வளர்ந்து வரும் காலத்தில் இதனை கொண்டு அவனை நோகடிக்கவும் தயங்க மாட்டார்கள் அவனுக்கான உரிமையை மறுப்பது தவறில்லையா? கோர்ட் தீர்ப்பளித்து விட்டாலும் அவன் குழந்தையின் தந்தை இல்லை என்பதை உன்னால் மறுக்க முடியுமா? 

பின் ஏன் இந்த தடுமாற்றம்?

உன்னுடைய தடுமாற்றம் பிற்காலத்தில் உன் மகனிற்கு பாதகமாக அமையும்’ என மூளை வேண்டாத சமயத்தில் ஆஜராகி அவளை கேள்வி கேட்டு நோகடிக்க முடிவு எடுக்க முடியாத நிலையில் அவள்.

 மனமும் மூளையும் போட்டி போட்டதில் அறிவு வென்று விட அத்விதனுக்காக மனதை இரும்பாக்கி கொண்டு அவனின் தந்தையின் பெயரை இனிஷியலாக எழுத

“ம்ம்ம் நம்ம நாட்டுல புருஷன் என்ன செஞ்சாலும் அடிச்சாலும் மிதிச்சாலும் ஏன் விட்டுட்டு ஓடியே போனாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு பொண்ணுங்க இருப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா இப்போ தான் முதல் முறையா பாக்குறேன்” என்றவனின் நக்கலில் அவள் திடுக்கிட்டு திரும்ப பக்கத்து இருக்கையில் கதிரழகன்.

ஒரு வேலை விஷயமாக அங்கு வந்தவன் முல்லையும் குழந்தையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவள் அருகில் செல்ல அட்மிஷனுக்காக வந்திருக்கிறாள் என புரிந்தது.

அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவள் ஹரிஷின் பெயரை இனிஷியலாக எழுதவும் பற்றி கொண்டு வர தன்னையும் மீறி நக்கலாக வார்த்தைகளை விட்டிருந்தான்.

ஏற்கனவே, ஒரு வித தவிப்பில் இருந்தவளுக்கு அவனின் நக்கலும் கேள்வியும் பொட்டில் அறைந்தது போலிருக்க அவனை முறைத்தவள் எதுவும் பேசாது எழுந்து செல்ல முயல,

“அட இருங்க மேடம் எங்க ஓடுறீங்க பதில் சொல்லிட்டு போங்க” என அவன் வழிமறிக்க,

அதுவரையிலும் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டிருந்தவள்,

“என்ன சார் என்ன பிரச்சனை உங்களுக்கு, ஆமா நான் அவன் அப்பா பேரை போட்டேன் தான் என்னோட சுயநலத்துக்காக அவனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைய‌ மறுக்க சொல்லுறீங்களா? என்னோட பேரை போட்டா அது அவனுக்கு அவமானாமா இருக்காதா?

அப்பா இல்லை டிவோர்ஸ்டு சிங்கள் மதரோட பையன் சொன்னா இந்த சொசைட்டி அவனை அப்புடியே தங்கமா தங்கிடுவாங்களா? நிச்சயம் இல்லை தினம் தினம் தீக்குளிக்க வைப்பாங்க அது இல்லையின்னு உங்களால சொல்ல முடியுமா?

சிங்கிள் மதரா இருக்குறது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை இந்த காலத்துலனு சொல்ல வேணா நல்லாருக்கும் ஆனா அதை நடைமுறைப்படுத்துறாங்களா? புருஷன் இறந்துட்டான்னா அது வேற

இதேது விவாகரத்து ஆகிடுச்சு சொன்னா என்னையும் எம் பையனையும் அப்புடியே சும்மா விட்டுடு வாங்கன்னு நெனைக்கிறீங்களா?

ஏன்? எதுக்கு? என்ன பிரச்சனை? என்ன நடந்துச்சுன்னு? கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அடுத்தவங்க பர்சனல்ல தெரிஞ்சுக்க தான் துடிய துடிப்பாங்க? அதுல ஆறுதலுக்காக கேட்குறவங்களும் இருக்காங்க வம்பு பேச கேட்குறவங்களும் இருக்காங்க!

இவ்வளவு ஏன் நான் இன்டர்வீயூ போன இடத்துலே எல்லாம் “ஏன் உங்க ஹஸ்பண்ட்டை பிரிஞ்சிங்க” என்ற‌ கேள்விதான் முதல அவுங்க கிட்ட இருந்து வந்துச்சு அதுக்கு பதில் சொன்னா என்னை நல்லவளா சொல்லும் இந்த சமூகம் அதுவே சொல்லலைன்னா “பாரேன் திமிர கேட்ட கூட பதில் சொல்ல மாட்டீங்குது இதனால தான் இவ புருஷன் விட்டுட்டு போயிட்டான் போல” ன்னு பழியை என்மேல தூக்கி போட்டு தப்பா பேசுனாங்க

குழந்தையின்னு கூட பாக்காமா அவன் கிட்ட போயி ” உங்கப்பா யாரு? அவரு இனிமேல் வரமாட்டாரா? உங்கப்பா அம்மா தெனமும் சண்டை போட்டுக்குவாங்களா? உங்கப்பா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ண போறாரான்னு” கேக்குறாங்க அவனுக்கு இது எல்லாம் புரியாததுனால அமைதியா இருக்கான்.

இதுவே கொஞ்சம் விவரம் தெரிஞ்சிடுச்சுனா அந்த விஷயம் மனரீதியா அவனுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் இதை எல்லாம் யோசிச்சு தான் என்னோடு பிள்ளை பாதிக்கப்பட கூடாதுன்னு இப்புடி போட்டேன் நான் என்ன இஷ்டப்பட்டா அவன் பேரை போட்டேன்” என அடக்கி வைத்திருந்த அனைத்தையும் வெடித்திருந்தாள்.

மூச்சு வாங்க அவள் பேச அவனிடம் எந்த வித ரியாக்ஷனும் இல்லை,

“முடிச்சிட்டியா? இன்னும் ஏதாவது பேச இருக்கா?” என அவன் புன்னகையில் கேட்க,

இவளுக்கு தான் “சுர்ரென்று” ஏறியது.

“ஆமா யாரு சொன்னா உனக்கு உன்னோட பேரை போட்டா அவமானம்னு? நீ மொதல்ல இந்த எண்ணத்தை மாத்து, பாத்து பாத்து பெத்தெடுத்த உன்னோட பேரை போடுறதுல அப்புடி என்ன அவமானம் வந்துடப் போகுது?

நீ சொன்னது ப்ராக்டிக்கலா சரிதான் இந்த சொசைட்டி எப்பவும் இப்புடி தான் அதுக்காக நீ உன்னை மாத்திப்பியா? யாரு என்ன சொன்னா உனக்கென்ன? அவனா வந்து உனக்கு சம்பாரிச்சு கொட்டுறான்?

நான் திரும்ப திரும்ப சொல்லுறது ஒண்ணு தான் நீ விவாகரத்து ஆனவன்றதுக்கா இவுங்களுக்கு அடிமையா போகணும்னு அவசியம் இல்லை

நிமிர்வா திமிராவே இரு தப்பு பண்ண அவனே இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருக்கும் போது உனக்கென்ன? உண்மை தான் இதுல பாதிப்பு உனக்கு தான் அதிகம் நான் இல்லைங்கல ஆனா எத்தனை நாளைக்கு நீ இவுங்களுக்கு பயந்துகிட்டு இருக்க முடியும்.

வேற இன்னொரு விஷயம் அவுங்களுக்கு கெடச்சுட்டா உன்னை மறந்துடுவாங்க பாசிக் க்ளவுட்ஸ் தான் அவுங்க எல்லாரும் பாதில வந்து பாதில போறவங்களுக்காக உன்னை ஏன் நீ மாத்திக்கிற?

எவனாவது உன்னை கேள்வி கேட்டா “ஆமாண்டா அது என் இஷ்டம் விவாகரத்து தான் ஆகிடுச்சு என்ன கொலையா பண்ணிட்டேன் மூடிட்டு பேங்கடான்னு” மூஞ்சிக்கு நேராவே சொல்லிட்டு போ அவுங்களால ஒண்ணும் உன் வீட்டுல அடுப்பு எரியலையில அப்பறம் என்ன கஷ்டம்?

நீ உன் பலவீனத்தை காட்டிட்டியின்னா திரும்ப திரும்ப வந்து பேசி உன்னை காயப்படுத்துவாங்க இதேது நீ நெருப்பா எதிர்த்து நின்னு கேள்வி கேளு உன் கிட்ட கூட வர யோசிப்பானுங்க?

இன்பெக்ட் இப்ப எல்லாம் கொலை பண்றவன் ரேப் பண்ணுறவன் எல்லாம் வெளியே ஜாலிய தான் சுத்திட்டு இருக்கானுங்க அவனுங்களே பயப்படாமா இந்த சொசைட்டியில இருக்கும் போது நீ இருக்க கூடாதா? கொலைய விட பெரிய தப்பையா நீ பண்ணிட்ட பயப்படுறதுக்கு?” என அவன் கூலாகவே கேட்க,

“பேசாமா நீங்க ஒரு கவுன்சிலிங் சென்டர் ஸ்டார்ட் பண்ணிடுங்களேன் என்ன பாக்குறப்ப எல்லாம் வெறும் அட்வைஸ் மட்டும் தான் பண்ணுறீங்க!” முறைப்பை விடாமல் அவள் கூற,

இவன் தான் “பக்கென்று” சிரித்து விட்டான்.

“நீ சரின்னு சொன்னா விதவிதமா கலர் கலரா பேச என்கிட்ட கடலளவு விஷயம் இருக்கு. ஆனா எங்க நீ தான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டுறீயே” என அவன் சன்னமாக முணுமுணுக்க,

அவன் உதடுகள் பிரிவதை கண்டவள் “என்ன சொல்றீங்க?” என சற்றே அதட்டல் போல் கேட்க,

“ம்ம்ம் நீ என்கிட்ட வந்தியின்னா நான் ரெடி தான்” என,

“என்னது!” என அவள் அதிர்ந்து காளி அவதாரம் எடுக்க,

“இல்லை இல்லை நீ என்கிட்ட ஸ்டூடண்ட்டா வந்தா நான் க்ளாஸ் எடுக்க ரெடின்னு சொன்னேன்” என அவன் தோள்களை குலுக்க,

“அதேதுக்கு, அதான் என்ன பாக்குறப்ப எல்லாம் அட்வைஸ் பண்ணுறீங்களே ,இனி தனியா வேற பணம் கட்டி அதை கேக்கனுமா?” என முறைத்தபடியே அவள் கேட்க,

“நீ ஸ்டூடண்ட் டா வந்தா ஃப்ரீ தான். என்னோட ஸ்பெஷல் அண்ட் பர்ஸ்ட் ஸ்டூடண்ட் நீயின்றதால” என அவன் சிரிப்பை அடக்கியபடியே உரைக்க,

அவனது நக்கலில் இன்னும் அவள் முறைத்து நிற்க,

“சரி சரி அட்மிஷன் போடுற‌ எண்ணம் இருக்கா இல்லையா? சீக்கிரம் போ லேட்டாகிடுச்சு” என அவன் அவசரப்படுத்த,

பாஃர்மை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தவள் பின்னே இவனும் செல்ல,

அவனிற்கு முன் தன் குழந்தையின் பாஃர்மை வைக்க போனவள் சில நொடிகள் நின்று அதை வைத்து விட்டு இவனின் பார்வைக்கு அஞ்சி அவள் வேகமாக வெளியேறிட,

தீடிரென அவள் அப்படி சென்றதும் புரியாதவன் பாஃர்மை பார்வையிட அதில் ஏற்கனவே எழுதியிருந்த இனிஷியில் அடிக்கப்பட்டு அவளின் பெயரை இனிஷியலாக கொடுத்திருந்தாள்.

 அவளின் ஓட்டத்திற்கான காரணமும் விளங்கிட உல்லாச

மனநிலையில் இருந்தவனின் இதழ்கள் ரகசிய புன்னகையை சிந்த அதனை தனது கட்டை மீசைக்கு அடியில் மறைத்தவன் அவளை பிடிக்கும் பொருட்டு வேகமாக வெளியேறினான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. கதிர் உனக்கு ஆபீஸ்ல வேலையே இல்லையா … முல்லை பின்னாடியே சுத்திட்டு இருக்க … ஆனா நீ சோ ஸ்வீட் … நடைமுறை எதார்த்தத்தை பார்த்து முல்லை கேள்வி கேட்கிறதுக்கு நீ சரியான பதில் சொல்ற … அது ஏத்துக்க முடியுது …

    அதென்ன கலர் கலரா பேசுவ 😜😜😜😜😜 … மெதுவா போ பா … பேசி பேசியே முல்லையை கரைச்சுருவ … எனக்கு எப்போ டா நீ அவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணுவ … அவ அதுக்கு எப்டிலாம் ரியாக்ட் பண்றா அப்படின்னு பார்க்கணும் … வெயிட்டிங் …

    1. Author

      கூடிய சீக்கிரமே ப்ரப்போஸ் பண்ணிடுவான் சிஸ் 😍😍😍

  2. மகளின் எதிர்கால நன்மைக்காக தங்களது பொறுப்புகளிலிருந்து விலகி நிற்கிறார்கள் பெற்றவர்கள்.

    தாங்கள் இருக்கிறோம் பார்த்துக்கொள்ள என்ற எண்ணத்தினில், மகள் தனக்கான ஒரு துணையை தேடிக்கொள்ளாமலே இருந்துவிடுவாளோ என்ற பயத்தினில் செயல்படுகின்றனர்.

    சமூகத்திற்கு என்ன பேசிக்கொண்டே தான் இருக்கும். நாம் நமது சரியான வழியினில் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    First special student ku free counseling class saa கதிர் 😍😍

    1. Author

      😍😍😍ஆமா ஆமா சிஸ் ஃப்ரீ கிளாஸ் அவளுக்கு மட்டும்