Loading

மெல்லினம் 5:

அடுத்த நாள் வார விடுமுறை‌யாதலால் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு அத்விதனுடன் சூப்பர் மார்க்கெட் வந்திருந்தாள் தேன்முல்லை.

நாளை மாலை வேறு ரேஷ்மியின் வீட்டிற்கு செல்ல வேண்டும்.அதை நினைக்கும் போதே தலை சுற்றியது அவளிற்கு.

அந்த அளவிற்கு ரேஷ்மி படுத்தி எடுத்தால் என்றால் மிகையில்லை. கிட்டதட்ட மூன்று வாரங்கள் முடிந்து விட்டன இன்னும் முத்திரை கூட ஒழுங்காக பிடிக்க தெரியவில்லை அவளிற்கு.

வகுப்பு ஆரம்பித்து கால் மணி நேரம் அவளை பிடித்து வைப்பதே அரிது. இடை இடையே “மிஸ் தண்ணீ, பாத்ரூம், ஸ்நாக்ஸ்,” என்று பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஓடிவிடுபவளை விரட்டி பிடித்து நிற்க வைத்தாலும் சொல்லி வைத்தார் போல் அவளின் சித்தப்பா கதிரழகன் வந்து நின்று விடுவான் ரேஷ்மியின் நடனத்தை பார்க்கவென,

அவனின் முன் இவள் இயல்பாக ஆட முடியாமல் திணறுவாள். இத்தனைக்கும் அவன் இவர்களிடம் இருந்து மிகவும் தள்ளி இருந்த ஷோபாவிலயே அமருவான். இருந்தும் அவளால் இயல்பாக இருக்க முடியாமல் அவனின் ஆழ்ந்த பார்வை இவளை திணறடிக்கும்.

போதா குறைக்கு சீதா வேறு கீழ்தளத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் என கூறி மேல்தளத்தை தான் கொடுத்திருந்தாள். 

மேல்தளத்தில் இரண்டு அறைகள் பெரிய ஹால் பால்கனி என அமைந்திருந்தது. அந்த அறைகளில் ஒன்று கதிரழகனுடையது வேறு.

“ம்ம்ம் ம்ம ம்மா” என்ற ஆர்ப்பாட்ட குரலில் தேன்முல்லையை அழைத்தவாறு அமர்ந்திருந்த சக்கர‌ தள்ளு வண்டியில் இருந்து அவன் எகிறி குதிக்க முயற்சிக்க,

“டேய் போக்கிரி அடங்கி உட்காருடா சாக்லேட்ட பாத்துட்டா போதும் ஒரே குஷியாயிடுறது” என அவனை திட்டியவளுக்கு அப்போது தான் அது உரைத்தது.

அவள் நின்றிருந்தது மசாலா பொருட்கள் இருந்த இடத்தில் இனிப்பு வகைகள் இருப்பது அதற்கடுத்த பிரிவில்.

‘எதுக்கு இப்புடி கத்துறான்’ என யோசித்தவள் மகனை பார்க்க முயலும் முன்,

“ஹரி இதையும் எடுங்க” என்ற கொஞ்சலான குரலில் அவளின் கவனம் சிதற‌ குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தவளின் இதயத்தில் மெல்லிய வலி.

அங்கே நின்றிருந்தது வேறு யாருமல்ல சுரபியும் ஹரிஸ்ஸூம் தான்.

என்ன தான் விவாகரத்து ஆகி விட்டாலும் ஹரிஷை வேறு ஒரு பெண்ணுடன் அதுவும் நெருக்கத்தில் பார்க்கும் பொழுது மனதில் வலி தோன்ற தான்‌ செய்தது அவளிற்கு.

‘ஒரு வேளை மகனின் இந்த அளவு கடந்த ஆர்ப்பாட்டம் தந்தையை கண்டா?’ என‌ பதட்டமடைந்தவள் அத்விதனை பார்க்க அவளின் கணிப்பை பொய்யாக்காது ஹரிஷை கண்டு தான் குழந்தை ஆர்ப்பரித்து கொண்டிருந்தது.

அங்கிருந்து சென்று விட முயன்று அவள் வண்டியை திருப்பிட தாய் தந்தையிடம் கூட்டி செல்லாது வேறுபுறம் திருப்பிடவும் “ப்பா ப்பா ப்பா” என கத்தியிருந்தான் அத்விதன்.

தங்கள் அருகினில் கேட்ட மழலையின்‌ குரலில் இருவரும் திரும்பிட பார்த்த ஹரிஸூக்கும் சுரபிக்கும் அதிர்ச்சியே

சத்தியமாக இதனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என முகமே காட்டி கொடுத்தது.

புது தாலி மின்ன நின்றிருந்த சுரபியை‌ கண்டதும் முல்லையில் கண்கள் அவள் அனுமதியின்றி கலங்கிட ‘ஹோ‌ திருமணமே முடித்து விட்டானா’ என நினைத்தவள் அவன் முன் அழுது விடாது இருப்பதில் பிராயத்தனப்பட்டு போனாள்.

தான் இவ்வளவும் அழைத்தும் தந்தை தன்னை கண்டு கொள்ளாததில் முகம் அழுகைக்கு மாறா “ப்பா ப்பா ம்மா ப்பா” என ஹரிஷை நோக்கி தூக்குமாறு கைகளை உயர்த்தி அத்வி அழ ஆரம்பிக்க,

மூன்று மாதங்கள் மேல் ஆகின்றது அல்லவா! பார்த்திருந்த ஹரிஷ் தன்னை மறந்து ஒரு அடி குழந்தையை நோக்கி எடுத்து வைத்திட அதில் அதிர்ந்த சுரபி அவனை மேலும் முன்னேற விடாது கைகளை பிடித்து தடுத்து நிறுத்த அதில் சுயம் தெளிந்தவன் சுரபியை காண

“போகலாம்” என பல்லை கடித்து கூறியவளை கண்டவனிற்கு இன்னமும் கைகளை கீழே போடாது அழுதவாறு இருந்தவனை‌ கண்டு அப்படியே விட்டு செல்ல முடியாது அவன்‌ மனது பிசைய என்ன செய்வதென்று தெரியாது நின்று விட்டவனை 

“எக்ஸ்யூஸ்மி” என்றவாறு அவனை நகர்த்தி விட்டு “ஹாய் அத்வி செல்லம்” என்றவாறு வந்தான் கதிரழகன்.

வந்தவன் அமர்ந்திருந்த குழந்தையை தூக்கி கொள்ள “ப்பா ப்பா” என இடைவிடாது அவன் புலம்பியதில் “அப்பா தான் டா செல்லம்” என்றவாறு அவனை உச்சி முகர்ந்தவன் அதிர்ந்து நின்று விட்டிருந்த தேன்முல்லையின் கைகள் மீது தனது கைகளை வைத்து அழுத்தியவன் கையோடு வண்டியையும் தள்ளி கொண்டு அவளையும் இழுத்து சென்று விட்டிருந்தான்.

தன்னை தாண்டி சென்று‌ குழந்தையை தூக்கிய கதிரை கண்டு திகைத்து நின்று விட்டாள் சுரபி.

அவனின் உரிமையான செய்கையை கண்டு ‘எப்படி எப்படி’ என இருவரும் மனதினில் திகைத்து நின்றவர்கள் விடை அறிய வேண்டி அவர்களின் பின்னே சென்றிட,

இவர்கள் வருவதற்குள் குழந்தையையும் அவளையும் அழைத்து கொண்டு வந்தவன் சீக்கிரமே கவுண்டரில் பில்லை செட்டில் செய்து விட்டு கிளம்பி விட,

அவனின் உரிமையான செயலை கண்டு சுரபிக்கும் கதிர் கை பிடித்து அழைத்ததும் அவன் பின்னே சென்று முல்லையையும் கண்டு ஹரிஷீக்கும் என இருவரின் மனமும் எரிந்திட அதன் விளைவாக இருவர் மனதினில் ஏமாற்றமும் கோபமும் ஒருங்கே தோன்றி அதற்கு மேல் ஷாப்பிங் செய்ய விருப்பம் இல்லாது கிளம்பி விட்டிருந்தனர்.

தன் கை பிடித்து பொம்மை போல் வருபவளை கண்ட கதிருக்கு அவள் தன் இயல்பில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. பின்னே இருந்திருந்தால் இப்போது வரை அவன் கைகளுக்குள் தன் கைகளை உறவாட விட்டிருப்பாளா என்பது சந்தேகமே.

இருந்தும் அவளின் நிலையை கலைக்க வேண்டிய சூழல் அவனுக்கு.எதில் வந்தாள் என்று தெரிய வேண்டுமல்லவா?

எனவே, “தேன்முல்லை” என மயிலிறகாய் அவள் பெயரை வருடியவனின் கைகள் உயர்ந்து அவள் தோள்களை தொட்டு அசைத்திட,

“ஹாங் என்ன என்ன” என‌ விழித்தவளிற்கு அவள்‌ எங்கே நிற்கிறாள் என பிடிப்படவே சில நொடிகள் பிடித்தது.

“எதுல வந்தீங்க வண்டிய காணோம்” என அவன் கேட்க,

“இல்லை ஆட்டோல தான் வந்தோம்”

“ஹோ அப்போ சரி வாங்க நான் டிராப் பண்ணிடுறேன்”

“வேண்டாம் சார் நான் ஆட்டோல போய்க்கிறேன்” என்றவளிற்கு தனிமை அவசியம் தேவையாக இருந்தது.

எந்நேரமும் உடைந்து வெளியேறி விடுவேன் என்று நிலையில் அவளது கண்ணீர் நிற்க,

இதயத்தில் ஊடுருவிய வலி அவளை கொல்லாமல் கொன்றது. அதுவும் அத்வி அவனை அப்பா என்றழைத்ததை கேட்ட நொடி உள்ளுக்குள் மொத்தமாக மரித்து போயிருந்தாள்.

அன்று அவனிடம் சொன்ன குழந்தைக்கு தாய்க்கு தாயாக தகப்பனாகவும் அவள் இருப்பாள் என்பதை அவளால் காப்பாற்ற இயலாதோ?

தான் எவ்வளவு தான் பார்த்தாலும் ஒரு நொடியில் “ப்பா” என்றழைத்து அத்தனையையும் குழந்தை உடைத்து விட்டதே.

அப்படி என்றால் அவனிற்கு அப்பாவும் வேண்டும் என்று தானே அர்த்தம் வளர வளர ஹரிஷை கேட்டு அடம்பிடிப்பானா? என கண்டதையும் அவள் யோசித்து கொண்டு நின்றிருக்க வெயிலின்‌ தாக்கத்தில் குழந்தை சிணுங்க குழந்தையை தூக்கி கொண்டு அவன்‌ கார் நிற்கும் இடத்திற்கு சென்றவன் அத்விதனை உள்ளே அமர வைத்து விட்டு காரை எடுத்து கொண்டு வந்து முல்லையில் அருகே வந்து நிறுத்திய பின்பும் அவள் யோசனையில் இருந்து விடுபட வில்லை.

ஹாரனை சத்தத்தை ஒலிக்க விட்டு அவளை நிகழ்வுலகுக்கு திரும்பியவன் “வந்து ஏறுங்க” என்க,

அப்போது தான் தன் மடமையை உணர்ந்தவள் “இல்லை சார் வேண்டாம் குழந்தைய கொடுங்க” என அவள் சுற்றி வந்து அத்விதனை தூக்க முயல,

“உன்னை காருல ஏற தான் சொன்னேன் தேன்முல்லை வீணா இங்க நின்னு சீனை உருவாக்காத அப்புடி ஒண்ணும் உன்ன நான் எதுவும் பண்ணிட மாட்டேன். எனக்கு எந்த விதமான கேவலமான எண்ணமும் கிடையாது என் மேல் நம்பிக்கை இல்லையின்னா இப்பவே குழந்தையை தூக்கிக்க” என அவள் முகம் பார்த்து அழுத்தமாக உரைத்தவன் அவள் முகம் பார்க்க விருப்பமின்றி திரும்பி விட,

அவர்கள் வார்த்தைகளில் இவள் தான் வார்த்தையற்று நின்று விட்டாள்.

இப்படி சொல்லுபவனிடம் என்ன பேசிட முடியும்!

இப்போது குழந்தையை தூக்கினால் அவன் நினைப்பது போல் ஆகி விடுமே.

 மறுபேச்சின்றி அவள் ஏறி அமர்ந்து விட காரை கிளம்பியவனின் முகம் இன்னும் கோபத்தில் சிவந்திருந்தது.

தன் மீதான அவளின் நம்பிக்கையின்மை தான் அவனின் கோபத்திற்கு காரணமே.

முல்லையும் அவன் முகத்தை தான் பார்த்திருந்தாள். அவளிற்கு தனிமை வேண்டி தான் அவள் தயங்கினாலே தவிர அவனின் மீது நம்பிக்கை இல்லாமல் எல்லாம் இல்லை.

இத்தனை நாட்கள் பழக்கத்தில் சீதாவையும் அவளின்‌ குடும்பத்தையும் தவறாக நினைக்க தோன்றவில்லை அவளிற்கு.

‘ஒரு வேளை தன் தயக்கத்தினை தவறாக எடுத்து கொண்டாரோ!” என நினைத்தவள்

“ம்க்கும் ஸாரி சார் எனக்கு கொஞ்சம் லோன்லினஸ்(தனிமை) தேவைப்பட்டுச்சு அதனால் தான் தயங்கினேன். மத்தப்படி வேற எந்த எண்ணமும் எனக்கு இல்லை” என‌ தயங்கி தயங்கி அவள் உரைத்திட,

அதில் அவன் கோபம் சற்று குறைந்தாலும் முழுதாக விடை பெற்று விடவில்லை.

‘அது என்ன கடையில் ஹரிஷையும் சுரபியையும் பார்த்ததும் அப்படி ஒரு கலக்கம் இவளிற்கு. ஆக இன்னமும் இவள் ஹரிஷை மறக்கவில்லையா? அவனை கண்டதும் “போடா” என்று விட்டு போவாளா? அதை விட்டு அவர்களின் நெருக்கத்தை கண்டு இவள் எதற்கு கலங்க வேண்டும்’ என நினைத்தவனிற்கு அவள் கலங்கி நின்றிருந்த தோற்றமே கண்முன் வர கோபம் மட்டு பட மறுத்தது.

எனவே “ம்ம்ம்” என்ற‌ சொல்லோடு அவன் அமைதி காக்க அவளும் என்ன பேசுவது என தெரியாது அமைதி காத்தாலும் அவளின் முகம் கலக்கத்தை தான் காட்டியது.

ஓரக்கண்ணால் அவளை பார்த்தவன்,

‘சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’ என வெகு தீர்மானமாக முடிவெடுத்து கொண்டான்.

பயணங்கள் முழுவதும் அமைதியிலே கழிய குழந்தை கூட உறங்கி விட்டிருந்தான்.

சில மணி நேரங்களில் அவள் வீடு வந்து விட “தேங்கஸ் சார் ” என்று விட்டு அவள் இறங்க ஆயுத்தமாக,

“முல்லை” என்றவனின் தீர்க்கமான குரலில் அவள் திரும்பிய,

அவள் கண்களை தீவிரமாக சந்தித்தவன்,

“நம்ம வாழ்க்கைக்கு ஒரு பொருள் வேண்டாம்னு முடிவெடுத்தப் அப்பறம் அதை வேறு ஒருத்தர் கிட்ட பாக்கும் போது நிச்சயம் நம்ம கலங்கவே கூடாது. உன்னை வேண்டாம்னு சொன்ன எதுவுமே உனக்கு‌ தேவையில்லாதது உனக்கு என்ன விதிச்சிருக்கோ அது தான் நிலைச்சு நிக்கும். அது பொருளா இருந்தாலும் சரி இல்லை உறவா இருந்தாலும் சரி. நீ கலங்கி உன் பலவீனத்தை எப்பவுமே எதிராளிக்கு காட்டி கொடுத்திடாத,

நான் அன்னைக்கு சொன்னது தான் நம்மளோட கண்ணீர் எல்லாம் விலைமதிப்பில்லாத பொக்கிஷம். அதை தகுதியில்லாத ஒருத்தனுக்கு எப்பவுமே சிந்திடாத குப்பையில இருக்குறவனுக்கு கோபுரத்தோட அருமை என்னைக்கும் புரியாது டேக் கேர்” என்றவன்

அவள் இறங்குவதற்காக காத்திருந்து பின் கிளம்பி சென்று விட,

தேன்முல்லை தான் அவன் பேசிய வார்த்தைகளில் திகைத்து நின்று விட்டாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. கதிருக்கும் முதல்ல கொஞ்சம் கஷ்டம் இருக்க தானே செஞ்சது … அவன் கடந்து வந்துட்டான் … முல்லை பாவம் … குழந்தை செய்ததை அவளால தாங்க முடியல … அவளுக்கு இன்னும் டைம் வேணும் …

    ஆனா கதிர் நீ சூப்பர் ஹீரோ ப்பா … அப்படியே வந்து குழந்தைய தூக்குன பாரு … ஹையோ செம்ம …

  2. தைரியமாக விலகி வந்து தன் வழியில் வாழ்வை நகர்த்திக்கொண்டு இருந்தாலும், தான் தான் உலகம் என்று உருகியவன் சிறிது காலத்துக்குள் இன்னொருவரை கைகளுக்குள் உலகமாக வைத்திருப்பதை காண நேரும் பொழுது சிறு சுணக்கம் எழ தான் செய்யும்.

    குழந்தையின் அப்பா என்ற அழைப்பினில் சிறிதாவது மனம் இளகி தூக்குவதற்கு கைகளை உயர்த்தினானே! சுரபிக்காக கைகளில் இருந்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டான். கூடிய விரைவில் இழந்ததை நினைத்து மனம் வெதும்புவான்.

    குழந்தை அப்பாவை நினைத்து அவனை எதிர்பார்த்து ஏங்குவானோ என்று எண்ணி வருந்துகிறாள் பாவம்.