
மெல்லினம் 3
பரபரப்பாக அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கிளம்பி கொண்டிருந்தாள் தேன்முல்லை.
“முல்லை எல்லாம் கரக்ட்டா எடுத்து வச்சிட்டியா” என்ற வந்த தாயை நோக்கி
“ஹாங் மா ஆச்சு”
“டிபன் பாக்ஸ்”
“எடுத்தாச்சுமா”
“தண்ணி பாட்டில்”
“எடுத்தாச்சுமா”
“அப்பறம் அந்த காய் டப்பா?”
“ம்மா போதும் நிறுத்து அத்விக்கு கூட இவ்வளவு செய்ய மாட்டா நீ. நான் என்ன சின்ன குழந்தையா மா?”
“அவனாடி ஸ்கூலுக்கு போறான். நீதான போறா? நல்லா சத்தா சாப்பிட்டா தான சொல்லி குடுக்க முடியும். இரு ஆம்லேட் போட்டு வச்சிருக்கேன் எடுத்துட்டு வரேன்” என்றவர்,
அவள் “ம்மா ” கத்துவதை பொருட்படுத்தாது சென்று விட்டார்.
பாட்டி மற்றும் தாயின் வழக்காடலை கண்ட அத்விதனுக்கு என்ன புரிந்ததோ தன் பொக்கை வாயை திறந்து தேன்முல்லையை கண்டு கிளிக்கி சிரிக்க
“அடேய் போக்கிரி என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா?இருக்கும் இருக்கும் உன்னை ஸ்கூல்ல சேர்க்காம நான் போறன்ல அப்ப நீ சிரிக்க தான் செய்வ உன் பாட்டி வேற எல்கேஜி பிள்ளைக்கு குடுக்குற மாதிரி லன்ச் கட்டி தந்துருகாங்க லன்ச் டவலும் ஸ்பூனும் மட்டும் தான் மிஸ்ஸிங்” என மகனிடம் புலம்பியவாறு ஆயுத்தமாகி கொண்டிருந்தாள்.
விவாகரத்து பெற்று மூன்று மாத காலம் ஆயிற்று. முதல் ஒரு வாரம் எப்பொழுதும் சிந்தனையில் இருந்தவளை குடும்பத்தினர் இழுத்து கட்டி பேச்சில் இழுக்க குழந்தையும் எந்நேரமும் தாயின் அரவணைப்பிலே இருக்க சீக்கிரமே இயல்புக்கு திரும்பி விட்டிருந்தாள்.
தேன்முல்லை பரதநாட்டியத்தில் கெட்டிக்காரி திருமணம் முன்பு வரை பல அரங்கேற்றங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறாள்.
ஹரிஸை திருமணம் முடித்த பின்னர் முதலில் அனுமதித்தவன் பின்பு மெல்ல தடையிட ஆரம்பித்திருந்தான்.
“ம்ம் என்ன தேனு உனக்கு எவ்வளவு ஆசையா சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணி ஏற்காடுக்கு டிக்கெட் போட்டு இருக்கேன். நீ என்னடான்னா அரங்கேற்றம் கச்சேரின்னு சொல்லிட்டு இருக்க” என சலிப்பவனிடம்,
“மொதல்லயே என்கிட்ட டேட் கேட்டு கன்பார்ம் பண்ணிருக்க வேண்டியது தானேங்க” என்றால்,
“உன்கிட்ட சொல்லிட்டு பண்ணுறதுக்கு எதுக்கு சர்ப்ரைஸ்ஸு சரி போ நான் டிக்கெட்டை கேன்சல் பண்ணிடுறேன்” என தொங்கிய முகமாய் செல்பவனை கண்டு மனம் பொறுக்காது வாங்கிய அட்வான்ஸை திரும்பியும் செலுத்தி அதற்கு வாங்கியும் கட்டியிருக்கிறாள்.
முதலில் அதை இதை என சொல்லி தடுத்தவன் பின் ஒரு நாள் “தேனு புரிஞ்சுக்கோடா உன்னை எல்லாரும் ரசிக்கிறத என்னால் ஏத்துக்க முடியல, நீ எனக்கு மட்டுமேயான நாட்டியக்காரி என் முன்னாடி ஆடிக் காட்டு நான் என்ன வேண்டாம்னா சொல்லுறேன்” என பேசி பேசியே அவளின் மனதினை கரைத்து கச்சேரிகளில் ஆட விடாமல் செய்திருந்தான்.
அப்போது விட்ட நடனம் இப்போது அவளிற்கு கை கொடுத்திருக்கிறது. நிறைய பள்ளிகளில் ஏறி இறங்கினாள். இவளின் நிலை அறிந்து சற்றே அட்வான்டேஜ் எடுக்க சிலர் முயல வெறுத்து போய் திரும்பி விட்டிருந்தாள்.
தற்பொழுது சேர்ந்திருந்த பள்ளி அவளிற்கு எல்லா வகையிலும் திருப்தி அளித்திருந்தது.
“ம்மா டைம் ஆச்சு நான் கிளம்புறேன். டேய் போக்கிரி பாட்டி கிட்ட சமத்தா இருக்கணும்” என தாயிடமும் குழந்தையிடமும் விடைபெற்று கிளம்பியினாள் தேன்முல்லை.
இவர்கள் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டரில் தான் இவள் வேலை செய்யும் பள்ளி இருந்தது.
தனது ஸ்கூட்டியில் பள்ளி வளாகத்தை அடைந்தவளிற்கு எப்போதும் போல அப் பள்ளியின் பெயர் வெகுவாய் ஈர்த்தது.
” க்ரோவிங் பட்ஷ்”(மொட்டுகளின் வளர்ச்சி) தான் அப்பள்ளியின் பெயர். ஏனோ இந்த பெயர் அவளிற்கு வெகுவாக பிடித்துப் போயிருந்தது.
எப்போதும் வாகனத்தை நிறுத்தும் இடத்தினில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றவள் ரிஜிஸ்டரில் சைனை வைத்து விட்டு நேராக நடன வகுப்பிற்கென அந்த பள்ளி நிறுவனம் தனியாக ஒதுக்கி கொடுத்திருந்த அந்த சிறிய கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.
எல்.கே.ஜியில் ஆரம்பித்து பணிரெண்டாம் வகுப்பு வரை க்ளாஸ் வாரியாக மாணவிகளுக்கு நடனத்திற்கென ஒரு வகுப்பை ஒதுக்கி கொடுத்திருக்க இவளுக்கு நாள் முழுதும் வகுப்புகள் இருக்கும்.
ஆனால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்புகள் இருக்கும். அதற்கான கணிசமான தொகையையும் வருவதால் தேன்முல்லைக்கு இதில் எந்த வித தொந்தரவும் ஏற்படவில்லை.
இவள் சென்று அவளின் மேஜை மீது பொருட்களை வைத்து விட்டு அந்த கையடக்க கிருஷ்ணர் சிலையை எடுத்து வெளியே வைத்தாள். பல வண்ண கற்கள் பதித்து தங்க முலாம் பூசப்பட்டிருந்த அந்த கிருஷ்ணரை கண்டவர் எவரும் அதன் அழகில் சொக்கி போவர்.
இன்று வரை இந்த சிலையை யார் கொடுத்தது என அவளிற்கு சுத்தமாக தெரியாது. ஏதோ நிலா கால நினைவுகளாக இவள் அந்த சிலையை வாங்கும் சில மங்கிய காட்சிகள் அவள் மூளையில் மரத்து போயி கிடக்கின்றன. அவள் எவ்வளவு யோசித்தும் அந்த காட்சிகள் அவளிற்கு தெளிவு பெறவில்லை. காலப்போக்கில் அவை காணமலும் போயிருந்தது.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அந்த சிலை முல்லைக்கு இன்றியமையாததாக மாறி விட்டிருந்தது. கிட்டதட்ட ஒரு லக்கி சார்ம்மாகவே அதை மாற்றி விட்டிருந்தாள். அது இல்லாமல் அவள் வெளியில் சென்றதே இல்லை எனலாம்.
அவள் குடும்ப உறுப்பினரை போல அச்சிலையும் அவளின் உறவாக மாறி விட்டிருந்தது.
சிலையை எடுக்கும் பொழுது அந்த கர்சீப்பும் சேர்ந்தே வந்தது. அன்று அவசரத்தில் அவன் கொடுத்ததை மறந்து கொண்டு வந்து விட்டவள். அன்றிலிருந்து இன்று வரை அவனை எங்கயாவது பார்த்தால் இதனை கொடுத்து விட வேண்டும் என கைப்பையிலேயே வைத்தே சுற்றி கொண்டிருக்கிறாள் தேன்முல்லை.
“ஒன் டூ த்ரி போர்!!”
“தையா தையா தையா தை!”
“தையா தையா தையா தை!”
“தையா தையா தையா தை!”
என சத்தமாக கூறியபடியே இருகைகளையும் இடுப்பின் பின்புறம் உள்ளங்கைகள் தெரியுமாறு பதித்து அரை மண்டியில் அமர்ந்திருந்தவள் அணிந்திருந்த சலங்கை சப்தமாக ஒலி எழுப்பி தாளம் இட தனது வலது காலையும் இடது காலையும் மாற்றி மாற்றி தரையில் ஓங்கி மிதித்து கொண்டிருந்தாள் தேன்முல்லை.
அவளை பின்பற்றி மாணவிகளும் அதனை செய்ய சிறு சிறு பிழைகளை திருத்தி அதனை முழுமையாக ஆட செய்து விட்டிருந்தாள்.
“ஓகே ஸ்டூண்ட்ஸ் ரிலாக்ஸ் கீழ உட்கார்ந்து கால் நீட்டி வார்ம் அப் செய்யுங்க ” என இரண்டு நிமிடம் அவர்களை செய்ய விட்டவள் பின் மதிய உணவு இடைவேளைக்கு விட்டவள் தானும் சென்று முகம் கை கால் கழுவி வந்து விட்டு அன்னை குடுத்து விட்டிருந்த சாதத்தினை திறந்தவளிற்கு அப்படி ஓர் பசி.
வேகவேகமாக சிறு பருக்கை கூட மிச்சம் வைக்காது உண்டு முடித்து மங்கைக்கு போன் செய்து குழந்தையிடமும் பேசி விட்டு வைத்தவள் சிறிது நேரம் கால் நீட்டி கீழே அமர்ந்து அங்கிருந்த புத்தகத்தினை புரட்டி கொண்டிருக்க அடுத்த வகுப்பிற்கான மாணவிகள் வந்து விட்டிட நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது தேன் முல்லைக்கு.
சரியாக மாலை நான்கு மணிக்கு வகுப்புகள் அனைத்தையும் முடித்து விட்டு முல்லை கிளம்பும் நேரம் ப்யூன் வந்து ப்ரின்சிபால் அழைப்பதாக கூற அங்கே சென்றாள்.
“எக்ஸ்யூஸ்மி மேடம்” என்றவாறு உள்ளே நுழைந்தவளை,
” உள்ள வா முல்லை” என பதிலுக்கு சற்று கடுப்பாகவே வந்தது ப்ரன்சியின் குரல்.
“சொல்லுங்க மேடம் கூப்பிட்டிருந்தீங்க”
“ம்ம்ம்ம் என்ன சொல்லுறது நீ வாழ்க்கையில நெனைச்சி கூட பார்த்திராத அளவுக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கு” என,
தேன்முல்லையின் முகத்தில் சற்றே யோசனை அவ்வளவே
தான் சொன்னதும் “என்ன மேடம் என்ன ஆஃபர்” என ஆர்ப்பரிப்பாள் பணிவை காட்டுவாள் என அவர் நினைத்திருக்க அவளின் இந்த முகத்தை கண்ட ப்ரின்சிக்கு தான் கடுப்பாக இருந்தது.
“சேர்மன் சாரோட பேத்திக்கு டான்ஸ் எடுக்குற விஷயமா அவர் பொண்ணு உன்னை பார்க்க வரேன் சொல்லிருக்காங்க” என அவள் பேசாததில் ப்ரின்சியே கூற,
முல்லை நேரத்தை பார்க்க ஐந்தை தாண்டியிருந்தது. மதியம் வேறு மங்கை இன்று கோயிலுக்கு போவதற்காக சற்று சீக்கிரமே வர சொல்லியிருக்க சரி என்றிருந்தாள். ஆனால் இப்போது போக முடியுமா என கேள்வி எழும்ப
“மேம் அவுங்க வர லேட்டாகுமா? எனக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்” என கேட்டு பார்க்க
“ஏன்? கொஞ்ச நேரம் இருந்து நீ பாத்துட்டா போக மாட்டியா சேர்மன் பொண்ணு வராங்கன்னு சொல்றேன் எவ்வளவு அலட்சியம் உனக்கு. நான் மட்டும் இன்டர்வூயூ அப்ப இருந்திருந்தா இப்புடி கொஞ்சம் கூட மரியாதை தெரியாத உன்னை எடுத்துருக்கவே மாட்டேன்” என அவர் இத்தனை நாள் கடுப்பை வெளி கொட்டியிருந்தார்.
ப்ரின்சியின் உறவினர் முறை உள்ள பொண்ணை அவர் இந்த வேலைக்கு ரெக்கமேன்ட் செய்திருந்தார். ஆனால் இன்டர்வீயூ நடந்த அன்று அவரால் வர முடியாமல் போக அந்த பெண்னை மட்டும் அனுப்பி வைத்திருந்தார்.
அப்பள்ளியின் சேர்மன் ராஜசேகர் தீடிரென வருகை புரிந்து விட வேறு வழி இன்றி நேர்முகத் தேர்வு அவருக்கு கீழே சென்று விட்டிருந்தது.
ப்ரின்பால் ரெக்கமென்ட் செய்திருந்த பெண்ணை விட தேன்முல்லை எல்லா விதத்திலும் பெஸ்ட்டாக இருந்ததோடு அவளை தேர்வு செய்ய ஒரு வலிமையான ஒரு காரணமும் இருந்ததில் மறுக்காமல் அவளை செய்து விட்டிருந்தார்.
சேர்மனால் நேரடியாக அவள் தேர்வு செய்யப்பட்டதால் ப்ரின்சுபாலால் எதுவும் செய்ய இயலாது போயிற்று. அந்த கோபம் அவருக்கு இருக்க அவ்வப் போது இப்படி மறைமுகமாக தாக்கி கொண்டிருந்தார்.
‘இப்போ நான் என்ன மரியாதை இல்லாம போசிட்டேன்’ என முல்லை எண்ணி கொண்டிருக்கையில் கதவு திறக்கப்பட ப்ரின்சி கப் சிப்.
கையில் அப்பள்ளியில் பயிலும் சிறு சிறுமியோடு உள்ளே நுழைந்தாள் சீதா.
அவளை கண்டதும் ப்ரின்சி எழுந்து நின்று விட அவருக்கு ஒரு தலையசைப்பை கொடுத்து விட்டு அவரின் நாற்காலியில் அமர்ந்தவள்,
“ஹாய் தேன்முல்லை ப்ளீஸ் பீ சீட்டட்” என புன்னகை முகமாய் அவளை அமர சொல்லியவள் ப்ரின்சியையும் அமர சொல்லியிருந்தாள்.
“சொல்லுங்க முல்லை ஸ்கூல் எல்லாம் பிடிச்சிருக்கா? உங்களுக்கு எந்த சிரமமும் இல்லையே?”என்க,
“அப்புடி எதுவும் இல்லை மேடம்” என்றாள் முல்லை.
“ம்ம் ம்ம் ஓகே சாரி தேன் முல்லை கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ஷோ சீக்கிரமே விஷயத்தை சொல்லிடுறேன். இதோ இது என் பொண்ணு ரேஷ்மிகா இவளுக்கு நீங்க வீக்கன்ட் டேஸ்ல வீட்டுக்கு வந்து டான்ஸ் க்ளாஸ் எடுக்க முடியுமா? இங்கேயே அனுப்பலாம்னு பாத்த ரொம்ப சேட்டைக்காரி.
இவளும் ஆட மாட்டா மத்தவங்களையும் ஆட விடமாட்டா ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுவா ஷோ அதுக்கு தான் கேட்கேறேன் நீங்க வர முடியுமா பீஸ் பத்தி எதுவும் கவலைப்படாதீங்க நீங்க இங்க வாக்குற சாலரியவே நாங்க தந்துடுறோம் என் கண் பார்வையில இருந்தா கொஞ்சம் அடங்கி இருப்பா” என சீதா சொல்லி நிறுத்த
தேன் முல்லைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அத்விதனை பார்க்க வேண்டும் அல்லவா?
“மேம் அது வந்து ” என அவள் தயங்க
அவள் தயக்கத்தை புரிந்து கொண்ட சீதா “நோ ப்ராப்ளம் முல்லை நல்லா யோசிச்சுட்டு கூட பதில் சொல்லுங்க எந்த விதத்துலயும் உங்களை கட்டாயப்படுத்த நான் விரும்பல. உங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் இதை கன்சிடர் பண்ணுங்க” என சீதா நட்புடன் புன்னகை முகமாகவே கூற முல்லையால் அதை தட்டி கழிக்க மனம் வரவில்லை. இருந்தும் குழந்தையை நினைத்து அவள் தயங்க
“ஹாய் மிஸ் நீங்க எனக்கு டான்ஸ் சொல்லி தரீங்களா ப்ளீஸ் எனக்கு டான்ஸ் ரொம்பவே புடிக்கும்” என அவள் குட்டி வரிசை பற்கள் தெரிய அழகாய் மலர்ந்த மல்லி பூவாய் தலை சரித்து கேட்டவளை கண்டு தேன்முல்லையின் மனம் கனிந்து விட்டது.
“ச்சு ரேஷ்மி மிஸ்ஸ டிஸ்டர்ப் பண்ண கூடாது அவுங்க யோசிச்சு சொல்லுவாங்க” என சீதா அவளை அதட்டிட,
“அப்போ நீங்க வர மாட்டிங்களா மிஸ்” என நொடியில் வாடிய மொட்டாய் அவள் கேட்க,
நிச்சயமாய் அவளை மறுக்கும் திரணி இல்லை தேன்முல்லைக்கு.
“ரேஷ்மி!” என சீதா அதட்டிட,
“அச்சோ பாவம் திட்டாதீங்க மேம் நான் வீட்டுல கலந்துப் பேசிட்டு சொல்லுறேன்” என அவள் கூற,
“ஓகே முல்லை நீங்க பேசிட்டு சொல்லுங்க நேரமாச்சு நீங்க கிளம்புங்க நைஸ் டீ மீட் யூ” என சீதா விடை கொடுக்க புன்னகை முகமாய் தானும் விடை கொடுத்தாள் தேன்முல்லை.
தேன் முல்லைக்கு சீதா சம்பளத்தை சொல்லும் போதே இரண்டு நாளைக்கே இவ்வளவா? என திகைத்து போயிருந்த ப்ரின்சி.
அவள் மறுத்ததும் மகிழ்ச்சி அடைந்தவர் எப்படியாவது அவரின் அந்த உறவினர் பெண்ணுக்கு பேசி இதனையாவது வாங்கி கொடுத்து விட வேண்டும் என அவர் நினைத்திருக்க அதிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாள் தேன்முல்லை.
‘அதான எப்புடி விடுவா நோகாமா ரெண்டு நாளைக்கே இவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்க வேண்டாம்னா சொல்லுவா இதுல வீட்டுல பேசுறேன்னு பிகு வேற’ என அவர் நினைத்து பொருமி கொண்டிருந்த வேளை,
“மேம் நான் கிளம்புறேன்” என அவரிடமும் முல்லை விடைபெற சீதா இருப்பதால் வேறு வழியின்றி புன்னகை முகமாகவே அவரும் வழியனுப்பினார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
16
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கதிர் வீட்டுக்கு போக போறா முல்லை …
Poga vachitalam sis😌
குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் நிறைந்த பேச்சிலும், குழந்தையின் புன்னகை இழையோடும் முகம் கண்டும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மீட்டுள்ளாள் தேன்முல்லை.
தனது நாட்டிய நிகழ்வுகளுக்கு மறைமுகமாக தடை விதித்து தன்னை கைபொம்மை போல் ஆட்டுவித்தவனிடம் இருந்து விடுதலை அடைந்துவிட்டாலே நல்லது.
மீண்டும் தனக்கு பிடித்தமான நாட்டிய வகுப்பு, அதிலும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் நேரம் அவள் மனதும் அமைதி பெறும்.
கிருஷ்ணர் சிலை பற்றிய குறிப்பு அருமை.
🤩🤩🤩🤩Thank u so much sis