
மெல்லினம் 2
தன் முன் நின்றிருந்த இருவரையும் பார்த்த நீதிபதி
“அப்போ நீங்க ரெண்டு பேரும் டிவோர்ஸ்ல உறுதியா இருக்கீங்களா அதுல எந்த வித மாற்றமும் இல்லையா?” எனக் கேட்டிட,
“இல்லை இல்லை மேம் எங்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லை” என தேன்முல்லையை பேச விடாது தானே முந்தி அடித்து கொண்டு பதிலை கூறியிருந்தான் ஹரிஸ்.
அவனை பார்த்து நீதிபதியின் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.
“நீங்க சொல்லுங்க மா குழந்தை வேற இருக்கு உங்களுக்கு இதுல சம்மதமா?” என அவர் முல்லையிடம் கேட்டதும்,
எங்கே இவள் சம்மதம் இல்லை என கூறி விடுவாளோ என நினைத்து ஹரிஸின் முகம் பதட்டத்தை தத்தெடுத்தது.
அவனின் பதட்டத்தை கண்டவளிற்கு “ச்சீ” என மனம் விட்டு போயிற்று. ‘இனியும் இவனுடன் சேர்ந்து வாழும் எண்ணத்திற்கு அவசியமே இல்லை’ என நினைத்தவள்,
“எனக்கும் இந்த விவாகரத்துக்கு சம்மதம் தான் ஆனா ஒரு கண்டிஷன் அதுக்கு இவர் ச்சே ச்சே இவன் ஒத்துக்கிட்டா மட்டுமே நான் விவாகரத்து கொடுப்பேன்” என்றிட,
“என்ன வேணும்னாலும் கேக்க சொல்லுங்க மேடம் ஜீவனாம்சமா பணமா இல்லை வேற ஏதும் சொத்துனாலும் எனக்கு ஓகே தான் ” என அத்தனை அலட்சியமாக பதில் வந்தது அவனிடமிருந்து.
“ம்ஹீம் இவனோட பணம் யாருக்கு வேணும் குழந்தையோட கஸ்டடிய முழுசா எனக்கு மட்டுமே கொடுத்திடனும்.
பிற்காலத்துல என் குழந்தையை தகப்பன்ற உறவை வச்சு என்னைக்குமே நெருங்க கூடாது. என் குழந்தைக்கு தேவையான செலவு எல்லாத்தையும் கொடுக்க எனக்கு தெம்பிருக்கு அதுல இவன் தலையிடவே கூடாது. என் குழந்தையை பார்க்க கூட முயற்சிக்க கூடாது முழுசா என் பிள்ளை எனக்கு மட்டும் தான்.
இதுக்கு சம்மதம்னு சொல்லி கையெழுத்து போட சொல்லுங்க அடுத்த நிமிடமே இவன் கேட்ட டிவோர்ஸ்ஸ தூக்கி போடுறேன்” என்றிட
“குழந்தை” என்றதும் அவனின் முகம் சற்றே மாறதான் செய்தது. ஆனால் குழந்தையை நினைத்தால் சுரபி அவனிற்கு கிடைக்க மாட்டாளே?
“குழந்தையா? சுரபியா?” என வரும் போது தானாக அவன் மனம் சுரபியை தான் தேர்ந்தெடுத்தது. இவன் முடியாது என்று சொன்னால் முல்லை விவாகரத்து தருவதில் இடைஞ்சல் செய்வாள் அப்படியே விவாகரத்து வாங்கி விட்டாலும் குழந்தையை பார்க்க செல்வதை சுரபி அறவே விரும்ப மாட்டாள்.
ஏனென்றால் சுரபி தான் ஏற்கனவே அவனிடம் தெளிவாக சொல்லியிருந்தாளே “ஹரி அவ எது கேட்டாலும் மறுக்காம ஜீவனாம்சமா தந்துடுறேன்னு சொல்லிடுங்க அப்பறம் குழந்தை பத்தி வந்தாலும் அவளோட கஸ்டடியிலயே விட்டுடுங்க நீங்க போய் வர்றதுல எனக்கு விருப்பமில்லை. அப்புடியே பாத்தாலும் எத்தனை நாளைக்கு
நமக்குன்னு ஒரு குழந்தை வந்ததும் அதை நீங்க தானே பாத்துக்கணும். நீங்க தானே பணம் எல்லாம் சேர்த்து வைக்கணும் அப்பறம் ரெண்டு குழந்தைகளையும் பாத்துக்க சிரமமாயிடும்.
நான் உங்களுக்காக நான் சொல்லுறேன் புரிஞ்சுக்கோங்க எப்பவும் நீங்க கஷ்டப்பட்டுட கூடாது அதுக்கு தான்” என்றிருக்க,
நொடி நேரம் கூட யோசிக்காது “சரி” என கூறியிருந்தான். பின் அங்கேயே கஸ்டடியை தேன்முல்லைக்கு கொடுத்து விட்டு அதற்கு அவனிடம் கையொப்பம் வாங்கியிருந்த நொடி,
மற்றொரு நீதிபதியின் முன் நின்றிருந்த சுரபி தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காது அலட்சியப்படுத்தியவனை கண்டு முறைத்து கொண்டிருந்தாள்.
அவளை விட்டு பிரிய போவதற்கான சிறு வருத்தம் கூட அவனிடம் இல்லை. கூலாகவே அமர்ந்திருந்தான்.
அதனை பார்க்க பார்க்க பற்றி கொண்டு வந்தது சுரபிக்கு. இத்தனை சீக்கிரம் அவன் விவாகரத்து கேட்பான் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அதையும் விட அவள் விவாகரத்து கேட்கும் முன்னே அவன் செய்ததை கேட்டதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
தான் செய்வது தெரிந்தால் கத்துவான் கோபப்படுவான் பின்பு வாழ்க்கை பிச்சை கேட்பான் அப்போது அவனிடம் “என்கூட வாழும் தகுதி எல்லாம் உனக்கு இல்லவே இல்லை சோ லெட்ஸ் டிவோர்ஸ்டு” என முகத்தில் அடித்தது போல் கூறி அவமானத்தில் அவன் முகம் சுருங்கி தன்னிடம் கெஞ்சுவான் என அவள் நினைத்து திட்டம் போட,
அவனே அவள் செயல்களை அறிந்தது மட்டுமின்றி கமுக்கமாக இருந்து காரியத்தை சாதிப்பது போல் அவனின் அமைதி என்னும் போர்வையில் பின் அனைத்தையும் செய்து முடித்தவன் நேரடியாக அவள் எதிர்பாரா நேரம் அவளிற்கு விவாகரத்து நோட்டீஸை அனுப்பி இதோ இங்கே கொண்டு வந்து அவள் மறுக்க முடியாதவாறு நிறுத்தி விட்டான்.
அதில் அவன் மீது அவளுக்கு எல்லையில்லா ஆத்திரமே!
இதோ இப்போது கூட சிறு வருத்தத்தை இல்லை
அவமானமாகவாது உணர்வானா என்று பார்த்தால் ம்ஹீம் மருந்திற்கு கூட அவனின் முகத்தில் கவலை எதுவும் இன்றி நிர்மூலமாக இருந்தது.
ஒருவேளை குழந்தை இருந்திருந்தால் அவள் நினைப்பது எல்லாம் நடந்தேற வாய்ப்பு இருந்திருக்குமோ? பல முறை இதனை சிந்தித்து பார்த்து விட்டாள்.
ஆனால் எங்கே அந்த கொடுப்பினையை கடவுள் இவளிற்கு கொடுக்க விரும்பவில்லை போலும்,
அவளின் சிந்தனையை கலைத்தது நீதிபதியின் குரல்
“அப்பறம் சொல்லுங்க மிஸ்டர் கதிரழகன் உங்க ரெண்டு பேருக்கு டைம் கொடுக்கலாம்னு நெனைச்சா நீங்க ஆல்ரெடி பிரிச்சு தான் இருந்துருக்கீங்க பத்தாதுக்கு ம்யூசுவல் வேற அப்ளை பண்ணிருக்கீங்க இதுல உங்களுக்கு வேற எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லையே” என்க,
சிறுதும் பதட்டமின்றி கூலாக இருக்கையில் இருந்தவன் “நோ சார் எங்க முடிவுல எந்த வித மாற்றமும் இல்லை” என அவளையும் கூட்டு சேர்ந்து கொண்டு அவளை அழுத்தமான ஒரு பார்வை பார்த்து கொண்டே அவன் கூற,
“ஓகே இருந்தாலும் உங்க மனைவிகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டிடலாம் ” என்ற நீதிபதி,
“சொல்லுங்க மிஸஸ் சுரபி உங்களுக்கு இதுல ஆட்சோபனை எதுவும் இருக்கா?”
நீதிபதியின் கேள்விக்கு தனது கூரிய விழிகளை அவளின் மீது படிய விட்டப்படி அமர்ந்திருந்தவனை கண்டு அவளிற்கு தொண்டையில் முள் சிக்கிய உணர்வு
அவளால் இதனை மறுக்கவும் முடியாதல்லவா? மறுத்தால் அடுத்து ஏன்? எதற்கு? என்ற கேள்வி வரும். அதற்கு முன் கதிரழகன் இவளை சும்மா தான் விட்டுவிடுவானா?
தனது திட்டத்தை எல்லாம் தவிடுப்பிடி ஆக்கி திமிராக அமர்ந்திருந்தவனை கண்டவளிற்கு ‘இவன் தன்னிடம் இறங்கி வந்து விவாகரத்து வேண்டாம் என கெஞ்சிட மாட்டானா?’ என ஏக்கம் எழ அவனின் பார்வையில் அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பதை உணர்ந்தவளுக்கு அவனிடம் மீண்டும் மீண்டும் தோற்பதில் அவமானம் எழ வேறு வழியின்றி ஒத்து கொண்டாள்.
அவள் ஒத்து கொண்டதும் நீதிபதியின் முடிவிற்காக காத்திருந்தவன் அவர் பேசி முடித்ததும் சட்டென எழுந்து வெளியேறி இருக்க
சுரபி தான் அவன் பின்னால் ஓட வேண்டியிருந்தது.
தனது கைகளை ஓங்கி அங்கிருந்த மரத்தில் குத்தியவன் முகம் நிர்மூலமாக இருந்தாலும் உள்ளுக்குள் எரிமலையே வெடித்து சிதறி கொண்டிருந்தது.
என்னதான் தனக்கு ஒன்றும் இல்லை என அவன் வெளிகாட்டி கொண்டாலும் அவள் செய்து வைத்திருந்த காரியம்! இது வெளியில் தெரிந்திருந்தால் அவனின் நிலை!
அதுவும் இல்லாமல் அவள் போட்டு வைத்திருந்த திட்டம்! அதனை நினைக்க நினைக்க தான் அவனின் ரெளத்திரம் அதிகரித்திருந்தது.
“ஹவ் டேர் யூ சுரபி ப்ளடி***” என அவளை மோசமான வார்த்தையில் திட்டியவன்,
“எவ்வளவு தைரியம் இருந்தா அப்புடி ஒரு காரியத்தை பண்ணதும் இல்லாமல் நான் வந்து உன் கிட்ட வாழ்க்கைய பிச்சை போடுன்னு வேற கேட்டு வருவன்னு நெனைச்சிருந்துருக்க? இரிடேட்டிங் இடியேட்!” என ஆத்திரத்தில் இருத்தவனின் செவிகளை மெல்லிய விசும்பல் ஒலி நிறைக்க முதலில் அலட்சியம் செய்தவன் சத்தம் அதிகமாகவும் மரத்தின் அந்த பக்கம் எட்டி பார்க்க
அங்கிருந்த நீண்ட கல்பெஞ்சில் அமர்ந்திருந்தாள் தேன்முல்லை. அவளுக்கு அருகில் சத்யமூர்த்தி.
“அம்மாடி முல்லை நீ ஏண்டா அழுகுற உன்னை வேண்டாம்னு சொன்ன அவன் தான்டா அழுகனும். பாவி என் பிள்ளை வாழ்க்கைய இப்புடி சிதைச்சிட்டு போய்ட்டானே” என அவர் கூறியதிலேயே கதிருக்கு தெரிந்திற்று ஏதோ விவாகரத்து விடயம் என,
“சார் இங்க கொஞ்சம் வாங்க” என தேன்முல்லையின் வக்கீல் சத்யமூர்த்தியை அழைத்ததும் “இருடாம்மா அப்பா வந்திடுறேன்” என அவர் எழுந்து போக அவளின் விசும்பல் ஒலி தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தது.
தன்னை போல் ஒருத்தி என நினைத்தவனிற்கு அவளின் விசும்பல் ஏதோ செய்ய சட்டென அவளின் முன்பக்கம் சென்றவன் தன் கைகுட்டையை எடுத்து நீட்டியிருந்தான்.
தன் முன் நீண்ட முழுக்கை சட்டையின் உள்ளே மறைந்திருந்த உரமேறிய கைகளில் திடுக்கிட்ட தேன் முல்லை நிமிர்ந்து பார்க்க
அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் தனது இறுக்கமான இதழ்களை திறந்து
“நம்ம கண்ணீரை கூட அதுக்கு உரிமையுள்ள தகுதி உள்ளவனுக்காக மட்டுமே சிந்தனும். ஏன்னா நம்மளோட கண்ணீர் எல்லாம் நமக்கு பொக்கிசமான ஒண்ணு அதை கண்ட பொறுக்கிகாக எல்லாம் சிந்தாதிங்க கண்ணை துடைங்க” என்றவனின் சிறு அதட்டலில் அவள் அதிர்ந்து அவனை பார்க்க
இன்னுமே கைக்குட்டையை நீட்டியவாறே நின்று இருந்தவனின் பார்வையில் உள்ள அதட்டலையும் அதிகாரத்தையும் கண்டவளின் கைகள் தன்னால் அவன் கைகளில் இருந்த கைக்குட்டையை வாங்கி கொண்டன.
“ம்ம்ம் குட்” என்றவனின் விழிகள்அவளை உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை கூறு போட
‘இதேதடா வம்பு’ என நினைத்தவளிற்கு அவனை உதாசீனப்படுத்தி விட்டு எழுந்து செல்லவும் மனம் இல்லாமல் போக ஒரு வித அவஸ்தையுடன் அமர்ந்திருந்தவளை
“அம்மாடி முல்லை” என சத்யமூர்த்தி அழைக்க ‘ஹப்பாடி தப்பித்தோம்’ என நினைத்தவள் பதட்டத்தில் அவனிற்கு “தேங்க்ஸ்” என்றவள் விரைந்து தந்தையிடம் சென்றிருந்தாள்.
செல்லும் அவளையே பார்த்திருந்தவனின் மனம் இதமாக “………” என்ற பெயரை அவனின் முரட்டு இதழ்கள் மிகவும் மென்மையாக உச்சரித்திருந்தது.
அதுவரையிலும் மென்மையை தத்தெடுத்து இருத்தவனின் முகம் சுரபி அவனை நோக்கி வரவும் முகம் இறுகி மீண்டும் இயல்பாக்கியவன் தனது வாகனத்தை நோக்கி நடக்க,
அவனின் அலட்சியத்தில் வெகுண்டவள் ஓடி சென்று அவனை இடைமறித்திருந்தாள்.
“இது தான் இது தான் என்கிட்ட நீங்க காட்டுற இந்த அலட்சியம் தான் இன்னைக்கு நம்ம ரெண்டு பேரையும் இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு கதிர்” என அவள் ஆவேசமாக கூற,
“ஓஹ் அப்புடியா நீ சொன்னா சரிதான்” என படு அலட்சியமாக கூறியவன் நகர எத்தனிக்க
“ஏன்? ஏன்? என்கிட்ட மட்டும் இவ்வளவு அலட்சியம் உங்களுக்கு அப்புடி என்ன நான் பண்ணிட்டேன்னு இவ்வளவு அலட்சியம் என் மேல” என அவள் நகருவேனா என நிற்க
“சாரி அதுக்கான காரணம் எனக்கும் தெரியல தெரிஞ்சாலும் உனக்கு சொல்லனம்ன்ற அவசியம் எனக்கு இல்லை” என்க,
“ப்ச் சுரபி நீ ஏண்டா இவன் கிட்ட நின்று பேசிட்டு இருக்க உன்கூட வாழ தான் இவனுக்கு தகுதியில்லை. உன் அருமை தெரியாதவன் கிட்ட எல்லாம் நீ பேச வேண்டிய அவசியம் இல்லை” என சுரபியின் அண்ணன் அரவிந்த் ஒழுக்கசீலனாக பொங்கி எழ,
“பாருடா ம்ஹீம் அப்போ உங்க தங்கச்சியோட அருமை தெரிஞ்சவனா பார்த்து தாரளமாக கட்டி வைங்க நான் என்ன குறுக்கவா நிக்க போறேன்” என அவன் அப்போதும் தன் நிலை மாறாது கூறியதில் அண்ணன் தங்கை இருவருக்கும் பீபீ எகிறியது.
“பார்ப்பேன்டா கட்டாயம் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைப்பேன் மாட்டேன்னு மட்டும் நினைக்காதடா” என அரவிந்த் கதிரின் அலட்சியத்தில் வெகுண்டு பாய்ந்து விட
“வாடா போடான்னு பேசுன அடிச்சு வாயை பேத்துருவேன். அப்பறம் பல்லு எல்லாம் கொட்டின பிறகு மிக்ஸர் திங்க கூட நீ லாயக்கு இல்லை. உன் பிள்ளை உன் பொக்கை வாயை பார்த்து அப்பான்னு கூப்பிடாது, தாத்தாஆஆ அப்புடி தான் கூப்பிடும் என்ன பல்லு செட்டு கட்ட ரெடியாக இருக்கியா ” என அவன் கேட்டதும்,
அப்போது தான் வேலையாக போயிருந்த ராகேஷ் தம்பியின் அருகே வந்தவன் கதிரின் இந்த பேச்சை கேட்டு “குபீர்” என்று சிரித்து விட்டிருந்தான்.
அவனின் சிரிப்பில் அண்ணன் தங்கை இருவரும் அவனை எரிக்க
“ச்சு ச்சு ஒரே காக்கா தொல்லை ” என கைகளால் விரட்டுவதை போல் செய்த ராகேஷ்
“டேய் அவங்கள முறைக்காமா போக சொல்லுடா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. நம்ம ரேஷ்மி குட்டி கூட இவுங்கள விட நல்லாவே முறைப்பா” என விரல்களை வாயில் மேல் வைத்து சிரிப்பை அடக்கியவாறே ராகேஷ் கூற,
“அதான் அண்ணன் சொல்லுறாருல சிரிப்பு காட்டாம போங்க போங்க”என கதிரும் தன் பங்கிற்கு அவர்களை வார,
“நீ வா சுரபி இவனுங்க கண்ணு முன்னாலயே உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என அரவிந்த் கூற,
“அதெல்லாம் நீ பாக்க வேண்டாம் உன் தங்கச்சியே பாத்து வச்சிருக்கா” என்ற கதிரின் வார்த்தைகளில் அதிர்ந்தவள் அதனை அரவிந்த் புரிந்து கொள்ளும் முன் அவனை இழுத்து கொண்டு சென்றிருந்தாள்.
பயத்தில் அதிர்ந்து ஓடியவளை கண்டவனின் முகம் இலகுதன்மையை தொலைத்திருந்தது.
ஏதோ உணர்வு உந்த சட்டென அவன் திரும்பி பார்க்க தேன்முல்லையும் சத்யமூர்த்தியும் அவனை கடந்து செல்ல நிமிடத்தில் கதிரின் முகம் இறுக்கத்தை தொலைத்து மென்மையாக ஒரு மெல்லிய முறுவலை தத்தெடுத்து இருந்தது.
தமையனின் முகத்தில் மாறி மாறி வரும் உணர்வுகளை கவனித்தவாறு ராகேஷீம் கதிரின் பார்வையை தொடர்ந்து பார்க்க ஒரு பெண்ணும் வயதான மனிதர் மட்டுமே அவனிற்கு தெரிந்தனர்.
செல்லும் அவளையே விழிகளில் ரசனையாக படம் பிடித்தவனின் இதழ்கள் மீண்டும் அந்த வார்த்தைகளை மென்மையாக உச்சரிக்க!
அதனை கேட்டு அதிர்ந்து விழித்தது என்னவோ ராகேஷ் தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
18
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எப்பொழுதடா விட்டு ஓடுவோம் என்ற பரபரப்பில், “பெற்ற பிள்ளையின் முகம் கூட இனி காண இயலாது” என்ற உண்மை கூட உரைக்கவில்லை.
புதிய உறவுகள் இனிதாக தெரியும், உண்மை நிலை தெரிய வரும் போது தான் கையில் இருந்த சொர்க்கத்தை தவற விட்டுவிட்டோம் என்று புரியும்.
தன் மீது தவறை வைத்து கொண்டு அடுத்தவரை பழிசொல்லுக்கு ஆளாக்கி கதற வைத்து பார்க்க நினைக்கும் இறுமாப்பு.
கதிரின் திடம் அருமை. மனதுள் இருக்கும் சீற்றம் வெளிப்படாமல், தன்னிலை மாறாமல், நிதானமாக செயல்பட்டிருக்கின்றான்.
சபையில் சண்டையிட்டு அந்த அவமானத்தின் சிறு கீற்று கூட தன்னை நெருங்காமல் பாதுகாப்பாக விலகி விட்டான்.
“நமது கண்ணீர் விலைமதிப்பற்றது”
அதற்கு தகுதியில்லாதவர்களுக்காக அதனை செலவிட கூடாது.
அதற்கு தகுதியானவர்கள் நம்மை அழவிடவும் மாட்டார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த நான் வாழ்வில் உறுதியாக கடைபிடிக்கும் வரிகள் இவை. ❤️
Thank u so much sis lvly cmnt
ஏதாவது பழைய நினைவுகள் இருக்குமோ கதிருக்கும் முல்லைக்கும் … நல்ல தொடக்கம்
Irukumo😷😷😷Thank u sis