
மெல்லினம் 17:
இன்று விடுமுறை மட்டும் முகூர்த்த நாள் என்பதால் நல்ல கூட்டம் கோவிலில். இவர்களை போல் இன்னும் பலரும் திருமணம் செய்வதற்காக வந்திருந்தனர்.
ஸ்ருதி உர்ரென நின்றிருக்க அவளை துளியும் மதிப்பாற் அங்கு யாரும் இல்லை.
‘நீ நிற்கிறாயா நின்று கொள்’ என்ற தோரணையே அனைவரிடமும்.
கதிரை மணக்கோலத்தில் பார்க்க பார்க்க அவளிற்கு உள்ளும் புறமும் எரிந்தது. ‘என் தங்கையை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு இன்று வெட்கமே இல்லாமல் வேறு திருமணத்திற்கு தயாராகி இருக்கிறான்’ என்ற எண்ணமே அவளை இயல்பில் இருக்க விடாமல் படுத்தி எடுத்தது.
எந்நேரமும் வார்த்தைகளில் விஷத்தை தேக்கி கக்கி விடுவேன் என்ற தோரணையிலயே கதிரை கண்களால் எரித்து கொண்டிருந்தாள் ஸ்ருதி.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்க முல்லை கோவிலின் ஓரத்தில் செல்லமாவுடன் அமர்ந்திருக்க மடியில் ரேஷ்மி.
அத்விதன் கதிரின் தோள்களில் இருக்க முல்லைக்கு எதிரே சற்று தள்ளி அவனின் அப்பா முல்லையின் அப்பா மற்றும் தாத்தாவுடன் நின்று பேசி கொண்டிருந்தான்.
முல்லையின் பேச்சு ரேஷ்மியிடம் இருந்தாலும் விழி முழுவதும் அத்விதனையும் கதிரையுமே சுற்றி வந்தன.
ஒய்யாரமாக கதிரின் கைகளில் இருந்த அத்வி கதிர் பேசுவதையே உன்னிப்பாக கவனிக்க அவ்வப்போது அத்வியின் முகத்தை தலைமுடியை வருடி கொடுத்து அவனையும் பேச்சில் இழுத்து கொஞ்சி கொண்டிருந்தான் கதிர்.
அக்காட்சியினை பார்த்தவளிற்கு அத்வி பிறந்த போது ஹரிஷீம் இப்படி அவனை பார்த்து கொண்டது நினைவு வர சட்டென மனதில் கலக்கம் சூழ விழிகளிலும் அதனை பிரதிபலித்தாள்.
சற்றே தெளிவாக இருந்த அவள் உள்ளம் மீண்டும் கலங்க தொடங்க இத்திருமணம் சரி வருமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
பெரியவர்களிடம் பேசியபடி ஏதோச்சையாக திருப்பிய கதிரின் தன்னையே பார்த்தப் படி விழிகளில் அவள் முகமும் கலங்கம் நிறைந்த விழிகளும் விழ சட்டென தன்னை சுதாரித்தவன்,
ஒற்றை புருவத்தை தூக்கி ‘என்ன??” எனும் விதமாக அவளை கண்களால் அதட்டி முறைக்க,
அவன் ஒற்றை முறைப்பில் அவள் கலக்கம் தெறித்து ஓட “இல்லை” எனும் விதமாக தலையசைத்தவள் புன்னகைக்க.
“ம்ம்ம் அது” என கண்களால் மிரட்டல் விடுத்தவன் யாரும் அறியா வண்ணம் ஒற்றை கண்சிமிட்டலை அவளை நோக்கி வீச,
அதில் திகைத்து தலையை குனிந்து கொண்டாள் முல்லை. அவளிற்கு கதிரின் இந்த பரிணாமம் சற்றே பயத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அன்று அவள் சம்மதம் சொன்ன நொடி முத்தமிட்டவன் தான் அதன் பிறகு பார்வையில் கூட அத்து மீறாது அவன் கண்ணியம் காக்க அதனாலயே அவளால் அவனுடன் இயல்பாக இருக்க முடிந்தது.
ஆனால் இனியும் திருமணம் முடிந்த பின் கதிர் அதனை பின்பற்றுவானா என்பது பெரும் ஐயமே.
இதனை பற்றி பேச முடிந்த அளவு அவளும் இந்த ஒரு வாரத்தில் முயற்சித்தாள் தான் ஆனால் கதிர் அதனை காதில் வாங்கியதாக தெரியவில்லை.
ஆக, இன்னமுமே கதிருடனான வாழ்க்கை தொடங்குவதற்கு அவள் மனதார தயராகவில்லை என்பதே உண்மை.
அவளின் முக குறிப்புகளை அவதனித்து கொண்டிருந்த கதிரழகன் “அதி கண்ணா அம்மா கிட்ட போய் ரேஷ்மி கா கூட விளையாடு” என அவனை இறக்கி விட அவனின் சொல்லை தட்டாது உடனே கீழிறங்கி ஓடி முல்லையின் மடியில் அவனும் மல்லுகட்டி அமர முல்லையின் கவனம் இரு பிள்ளைகளிடமும் திரும்பிட அதனை கண்டு திருப்தியுற்றவன் பெரியவர்களின் பேச்சில் கலந்தான்.
சிறிது நேரத்தில் அனைத்தும் தயராகிட மணவறையில் கதிர் சென்றமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூறி கொண்டிருக்க…
அதற்குள் சீதா முல்லையை கோவிலில் இருந்த அறைக்குள் அழைத்து சென்றவள் முகூர்த்த புடவையை கட்டி விட்டு அவளை சற்றே அழகுபடுத்தினாள்.
தெரிந்தவர், உறவினர் என அதிக ஆட்களை அழைக்காது மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே இரு வீட்டினரும் அழைத்திருந்தனர்.
அதற்கே கூட்டம் நூறு பேரை தாண்டியிருந்தது.
திருமண பரபரப்பில் அடுத்தடுத்த சடங்குகளில் பெரியவர்கள் மூழ்கி விட ரேஷ்மிகாவும் அத்வியும் தனித்து விடப்பட்டனர்.
இருவரும் அங்கே தான் சற்று தள்ளி விளையாடி கொண்டிருந்தவர்கள் விளையாட்டு சுவரஸ்யத்தில் மண்டபத்தினை விட்டு பெரியவர்களின் கண்களில் இருந்து சற்றே தள்ளி வந்து விட்டனர்.
படிகள் இறங்கும் இடத்தில் சற்றே சரிவான சறுக்கல் ஒன்று இருக்க ஓடி பிடித்து விளையாடியதில் அத்வி அந்த சறுக்கினை கவனிக்காது கால் வைத்து விட,
தீபத்தில் இருந்த எண்ணெய் அங்கே சற்று சிறிது சிந்தியிருக்க அத்வியின் காலை வழுக்கி விட்டது.
பிடிமானம் இல்லாமல் அருகிலிருந்த கல்லில் மோத போனவனை “அத்வி கண்ணா!!!” என்றவாறு இழுத்து பிடித்து தூக்கியிருந்தான் ஹரிஷ்.
இன்று விடுமுறையை தினமாதலால் வீட்டிலே அடைத்து கிடக்க பிடிக்காமல் ஹரிஷ் சுரப்பியை அழைத்து கொண்டு கோயிலுக்கு வந்திருந்தான். மலையேறியவர்கள் சுரபி ஏதோ பொருள் வாங்க வேண்டும் என்றதால் அருகிலிருந்த கடைகளில் அவள் வாங்கி கொண்டிருக்க,
வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனின் கண்களில் அத்வி விழ “அத்வி ” என முகம் பிரகாஷிக்க அவன் நினைக்க அதற்குள் அத்வி சறுக்கலில் வழுக்கியிருக்க விரைந்து வந்து அவனை தூக்கியிருந்தான்.
கடையில் பொருட்களை வாங்கி விட்டு திரும்பிய சுரபி ஹரிஷை தேடியவள் அவன் கையில் இருக்கும் குழந்தையின் முகம் சரியாக தெரியாததால் “யாரது” என நினைத்தவள் அவன் அருகில் வந்து குழந்தையை கண்ட நொடி அத்வி என புரிய அதிர்ந்து தான் போனாள்.
இப்போது தான் அன்று நடந்த பிரச்சனையை மறந்து இருவரும் இயல்பாக இருக்க இன்று மீண்டும் அத்வியை வைத்தே பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை.
“அத்வி கண்ணா என்னாச்சு டா வலிக்குதா??” என் அவன் கால்களை தடவி கொடுத்தவாறே ஹரிஷ் கேட்க,
பார்த்த சுரபிக்கு உள்ளும் புறமும் எரிந்தது. இங்கே வைத்து ஏதும் பேச வேண்டாம் என நினைத்து வாய் மூடி அமைதி காத்தாள்.
ஹரிஷின் முகத்தை பார்த்த அத்விக்கு அவன் யாரென்று புரிந்தாலும் முன்பு போல் எதுவும் கூறாமல் பேசாமல் அவன் அமைதியாக இருக்க ஹரிஷ் தான் விடாமல் பேசி கொண்டிருந்தான்.
அதற்குள் ரேஷ்மிகா இவன் விழுந்ததை சொல்லி ராகேஷை அழைத்து வந்திருக்க அத்வியை ஹரிஷீடன் கண்டதில் அவனுக்குமே திகைப்பே.
இருந்தும் தன்னை சமனித்து கொண்டவன் “அத்வி குட்டி” என அழைக்க,
ராகேஷையும் ரேஷ்மியையும் பார்த்து முகம் மலர்ந்தவன் “பெய்யப்பா” என்றவாறு ஹரிஷிடம் இருந்து குழந்தை இறங்க முயற்சிக்க….
ராகேஷை கண்ட ஹரிஷ்க்கு இவன் எங்கே இங்கே என நினைத்தவனிற்கு அத்வியின் அழைப்பை கேட்டு ஒன்றும் புரியாத நிலையே…
அப்போது தான் அத்வி வந்ததிலிருந்து தன்னை “ப்பா” என்று அழைக்காமல் இருப்பதை உணர்ந்தவன்,
“அதி கண்ணா அப்பா டா இங்க பாரு அப்பா சொல்லுடா” என அவனை விடாமல் கெஞ்ச…
அவனின் முரட்டு பிடியில் அத்வி சிணுங்க தொடங்கியவன் “பெய்யப்பா தூக்கு….” என்றவாறு ராகேஷை நோக்கி கைகளை நீட்ட தொடங்க…
“டேய் ஒழுங்கு மரியாதையா குழந்தைய இறக்கு” என ராகேஷ் விரைந்து வந்து அவனிடம் மிரட்ட,
தான் இத்தனை சொல்லியும் அத்வி தன்னை “அப்பா” என்றழைக்காததில் கோபத்தில் இருந்தவன் ராகேஷ் மிரட்டியதை கேட்டு இன்னமும் கோபம் பொங்க,
“போயா வேலையா பாத்துகிட்டு” என இரைந்தவன் மீண்டும் அத்வியை இறுக்கி பிடித்து அவனிடம் பேச
குழந்தையின் சிணுங்கல் அழுகையாக மாறி கேவலாக வெடிக்க அதற்கு மேல் பொறுமையற்ற ராகேஷ் ஹரிஷிடம் இருந்து குழந்தையை வலுவாக பிடித்து ஒரு இழுவையில் இழுத்து தன் கைவளைவுக்குள் வைத்து கொண்டவன் ஹரிஷை தள்ளிட சமநிலை தவறி கீழே விழுந்திருந்தான் ஹரிஷ்.
ராகேஷ் ஹரிஸை முறைத்து விட்டு ரேஷ்மியையும் அழைத்து கொண்டு கிளம்ப…
கீழே விழுந்ததில் அவமானமாக உணர்ந்தவனுக்கு கோபம் எரிமையென வெடிக்க
“அத்வி…அத்வி டேய் அவன் என் குழந்தை கொடுடா” என அவர்களை வழிமறித்தவன் மரியாதையற்ற அழைப்பில் ராகேஷிடம் இருந்து அத்வியை வாங்க முயல,
ராகேஷ், ரேஷ்மிகாவை பார்த்த சுரபிக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
ஹரிஷின் செயலை கண்டவள் விரைந்து அவனிடம் சென்று ” ஹரிஷ் என்ன பண்றீங்க எல்லாரும் பாக்குறாங்க வாங்க” என அவன் கைப்பிடித்து இழுக்க,
“ஏய்…விடுடி என்னை அவன் என் பிள்ளை நான் அவன் அப்பா….” என்னவனை இடைமறித்த ராகேஷ்
“என்ன உன் பிள்ளையா கோர்ட்ல பிள்ளைக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லன்னு எழுதி கொடுத்தது எல்லாம் மறந்து போச்சா” என நக்கலாக உரைக்க…
“எழுதி கொடுத்தா எல்லாம் முடிச்சுச்சா நான் அவன் அப்பன் இல்லையின்னு மாறிடுச்சா என்ன??”
“மாறதாண்டா போகுது இன்னும் கொஞ்ச நேரத்துல அத்வி என் தம்பி கதிரோட பிள்ளைய மாற போறான்” என அவனையும் சுரபியையும் பார்த்து அழுத்தமாக கூறியவன் அங்கே நில்லாது சென்றிட,
கேட்ட இருவருக்கும் தீ மிதித்த உணர்வே…எப்படி எப்படி என்று யோசித்தவர்களுக்கு விடை தெரியாது ஹரிஷ் ராகேஷின் பின்னே செல்ல கதிர் என்ற பெயரே சுரபியையும் அவன் பின்னே செல்ல தூண்டியது.
கதிர் முல்லை இருவரும் சேர்ந்து மந்திரங்களை சொல்லி கொண்டிருக்க முல்லையில் விழிகள் சுத்தி முத்தி அத்விதனை தேட கதிரின் நிலைமையும் அதுவே.
இருவரும் மணவறையில் அமர்ந்திருந்தால் வாய் திறந்து கேட்கவும் முடியாத நிலை.
அத்வியை தூக்கி கொண்டு ராகேஷ் வருவதை கவனித்து விட்ட கதிர் முல்லையின் கைகளை அழுத்தி கண்களால் நேரே பார்க்குமாறு கூற…
அவள் துரதிஷ்டம் பாவையவளின் விழிகளில் அத்வியோட அவன் பிறப்பிற்கு காரணமானவனும் அவள் மனைவியும் சேர்ந்தே விழ திகைத்து விட்டாள்.
ஹரிஷை கண்டவளிற்கு மறைந்திருந்த குழப்பங்களும் அவனுடனான திருமணமும் சேர்ந்து வர படபடத்து போனவளின் இதயம் அதி வேகமாக துடிக்க அதன் விளைவாக உள்ளங்கைகள் இரண்டும் வேர்க்க கண்களில் மெல்லிய நீர் படலம் சட்டென தோற்றிற்று.
முல்லையின் கைகளை பிடித்திருந்தவன் ஈரம் உணர்ந்து அவளை பார்க்க அவளின் நிலை புரியாது திகைத்தவன் அவள் விழி சென்ற வழி தானும் செல்ல நிச்சயமாக ஹரிஷை எதிர்பார்க்கவில்லை.
எதிர்பார்க்கவில்லையே தவிர கதிர் திகைக்கவெல்லாம் இல்லை.அதற்கான அவசியமும் அவனிடம் இல்லை.
அவனின் கவலை அதிர்ச்சி எல்லாம் முல்லையையும் அவளின் நிலையையும் நினைத்தே.
இப்போது தான் அவள் சற்றே நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள் இப்போது பார்த்து தான் இவன் வரவு இருக்க வேண்டுமா என்ற கடுகடுப்பு அவனிடம் எழ ,
“முல்லை” என்றழைத்தவனின் கலங்கிய குரலில் சட்டென அவனை கண்ட முல்லைக்கு தான் செய்து கொண்டிருப்பது உரைக்க கதிரின் கலக்கம் சுமந்த முகம் அவளையும் கலங்கடிக்க,
“முல்லை…சுரபி…என்னோட எக்ஸ்-வொய்ப்” என்று அதுனால் வரை அவளிடம் சொல்லாது வைத்திருந்த சுரபி தான் அவள் முன்னாள் மனைவி என்ற விஷயத்தை போட்டுடைக்க அதிர்ந்து தான் போனாள்.
அவன் விவாகரத்து ஆனவன் என்று தெரியும் மற்றபடி அவன் மனைவி பற்றி எல்லாம் எதுவும் அவளும் சரி குடும்பத்தினரும் சரி கேட்டு கொள்ளவில்லை.
ஆக இந்த தகவல் பாவைக்கு அதிர்ச்சியே…
இவ்வளவு நல்லவனான அன்பான கதிருக்கு துரோகம் செய்து விட்டு சென்ற சுரபியை காண காண அவளுக்கு ஆத்திரமும் கோபமும் எழ முடிந்த மட்டும் சுரபியை கண்களால் எரித்தவள் அவளின் முன் கதிர் கலங்க கூடாது என எண்ணம் அவளிற்கு தோன்ற அடுத்த நொடி அவளின் குழப்பங்களை எல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு
,அவனை திரும்பி பார்த்து புன்னகைக்க சரியாக மாங்கல்யமும் அவன் கைக்கு வந்தது.
எந்த வித உறுத்தலும் வேதனையும் கவலைகளும் இன்றி மனநிறைவாகவே மாங்கல்யத்தை ஏற்க அவள் தலை தாழ்த்த,
மனதில் உவகை பொங்க ஹரிஷையும் சுரபியையும் அழுத்தமாக நக்கலாக பார்த்தவன் முல்லையின் கழுத்தில் மாங்கல்யத்தை பூட்டி பிரிக்க முடியாத அவனின் சொந்தமாக மாற்றி கொண்டவன் அத்வியை நோக்கி கை நீட்ட தாவி வந்து அவனை அணைத்து முத்தமிட்ட குழந்தை அவனின் மடியில் சமர்த்தாக அமர்ந்து கொண்டான்.
அத்வியின் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்ட கதிர் முல்லையின் தோள்களை பிடித்து கொண்டு “இனி இவர்கள் என் உரிமை நெருங்க முயற்சித்திடாதே” என்ற செய்தியை விழிகளால் மிரட்டி ஹரிஷிற்கு கடத்திட,
சுரபியை அங்கே எதிர்பார்க்காது ஸ்ருதி “சுரபி” என்று சத்தமாக அழைத்திட அதில் அனைவரின் பார்வையும் திரும்ப
நடந்து முடிந்ததை ஏற்று கொண்டு ஜீரணிக்க முடியாத மனநிலையில் இருவரும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எதுக்கு ஹரிஷ் சுரபி உங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சி.. நீங்க மட்டும் கல்யாணம் பண்ணிக்கணும்.. கதிர் முல்லை கல்யாணம் பண்ணிக்க கூடாதா.. இதென்ன அநியாயமா இருக்கு.. ஹரிஷ் லூசு எப்போ பார்த்தாலும் பிள்ளை பிள்ளைன்னு சொல்லிட்டு.. விட்டுட்டு போயிட்ட தான.. இப்போ என்ன பாசம் பொங்குது..
கதிர் இந்த இடத்துல முல்லை கிட்ட சுரபி பற்றி சொல்ல காரணம்.. நானும் உன்னை போல் தான் இவர்களால் காயப்பட்டிருக்கிறேன்.. என் வாழ்வை இழந்திருக்கிறேன்.. அவர்களே வாழும் போது.. நீயும் நானும் மட்டும் ஏன் இது தப்பு அப்படின்னு குற்ற உணர்ச்சியோட வாழணும்.. இனி வாழ்க்கையை சந்தோஷமா தொடங்கலாம் அப்படிங்கிறது தான்..
எப்படியோ முல்லை கதிர் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது..