Loading

மெல்லினம் 12:

வெளியே புயல் ஓய்ந்திருக்க அதற்கு மாறாக ஹரிஷின் வீட்டில் புயல் அடித்து கொண்டிருந்தது.

வானம் இன்னமும் இருண்டு கிடக்க வீட்டினில் எந்த வித லைட்டும் போடாமல் இருளில் மூழ்கி கிடந்தது.

அறை கதவினை திறந்து கொண்டு வந்த ஹரிஷிற்கு இருட்டில் கண்கள் பழக சிறிது நேரம் எடுக்க சுவிட்சை போட போனவனின் கால் விரல்கள் எதிலேயோ பயங்கரமாக மோதி கொள்ள “ம்மா” என அலறினான்.

ஒருவழியாக தட்டு தடுமாறி லைட்டை போட்டவன் கண்டது ஹாலில் பொருட்கள் எல்லாம் தாறுமாறாக இரைந்து கிடந்ததை தான்.

முதலில் என்ன நடந்தது என புரியாமல் விழித்தவன் மூளையை கசங்க நேற்று இரவு நடந்த நினைவுகள் யாவும் மனக்கண்ணில் வலம் வர,

“ஷிட்” என தலையில் ஓங்கி அடித்து கொண்டான்.

நேற்றைய பொழுது கதிரழகன் விரட்டியடித்ததில் தனது கோபம் முழுவதையும் வண்டியில் காட்டி வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டினுள் நுழைந்தவனை யாருமில்லா வரவேற்பறையே வரவேற்றது. ஒரு வித எரிச்சல் மூள‌ அமைதியாக அறையினுள் சென்றவன் உடைமாற்றி வரும் வரையில் சுரபி வந்தப்பாடில்லை.

மழையினாலும் போட்ட சண்டையினாலும் பசி வயிற்றை கிள்ள கிட்டசனில் நுழைந்தவனை கண்டு வெறும் பாத்திரங்கள் பல்லை இளித்தன. சமைத்ததற்கான அறிகுறி எதுவுமே இல்லை.

மெதுமெதுவாக கோபமும் எரிச்சலும் அவனிற்கு ஏற‌ ஆரம்பிக்க கட்டு படுத்தி கொண்டு ஃப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்தவன் பாத்திரத்தை தேட எதுவும் சிக்கவில்லை.

யோசனையானவன் சற்றே திரும்பி சிங்கை பார்க்க அதிர்ந்து தான் போனான்.

காலையில் அவன் கிளம்பும் போது இருந்த பாத்திரங்கள் அப்படியே கழுவாமல் இருந்தன. பத்தாதிற்கு மதியம் வேறு எதுவோ செய்து உண்டிருப்பாள் போல அதனின் பாத்திரங்களும் சேர்ந்து சிங் நிரம்பி வழிந்தது.

கட்டுபடுத்தி வைத்திருந்த கோபமும் எரிச்சலும் சுர்ரென ஒரே நிமிடத்தில் தலைக்கு ஏறி விட பால் பாக்கெட்டை தூக்கி போட்டவன்,

“சுரபி சுரபி!” என கத்தியவாறே அவன் வெளிய வர அவள் வந்தபாடில்லை.

ஒவ்வொரு இடமாக தேடி பார்த்து தோற்றவன் வெளியே வர அவர்கள் இருந்த ப்ளாக்கில் அனைவர் வீட்டிலும் பால்கனி இருந்ததோடு அனைவருக்கும் சேர்த்தே பொதுவாக இருந்த இன்னொரு பால்கனியில் இருந்து சுரபியின் சிரிப்பு சத்தம் கேட்க,

“சுரபி!” என முடிந்த மட்டும் கோபம் இல்லாத குரலில் அவன் அழைக்க அழைப்புகள் மூன்று நான்கு ஆகியும் அவள் வந்தபாடில்லை.

வேகமாக பால்கனிக்கு சென்றவன் அங்கே போன் பேசி கொண்டிருந்தவளை கண்டதும் பசி கோவம் எரிச்சல் என அனைத்தும் சேர்ந்து கொள்ள,

“ஏய் சுரபி அறிவில்லை உனக்கு காது என்ன செவுடா? எவ்வளவு நேரம் கத்துறது? மனுஷனுக்கு பசிக்குமே சமைப்போம்ன்ற நெனப்பு கூட கொஞ்சமும் இல்லாம என்ன டி பேச்சு வேண்டி கிடக்கு” என‌ ஒரேடியாய் கத்தி விட,

இவனின் கத்தலில் அருகிலிருந்த வீட்டு ஆட்கள் வெளிவந்து இவர்களை வேடிக்கை பார்க்க அத்தோடு சுரபியின் தோழி ஒருத்தியும் இன்னமும் லைனில் இருக்க அவமானத்தில் முகம் சிறுத்து விட்டது சுரபிக்கு.

அவனிடம் எதுவும் பேசாமல் போனை கட் செய்தவள் விறு விறு என வீட்டிற்குள் நுழைய பின்னோடு இவன் நுழைந்ததும் தான் தாமதம்.

“கொஞ்சமாச்சும் மூளைன்னு ஒண்ணு இருக்கா ஹரிஷ் உங்களுக்கு? இப்புடி தான் இன்டீசன்ட்டா பிகேவ் பண்ணுவீங்களா? ச்சை போச்சு போனுல வேற என் ப்ரண்ட் இருந்தா இன்னேரம் கான்பரஸன் போட்டு எல்லாருக்கும் சொல்லிருப்பா நீங்க இப்புடி இன்டீசன்ட்டா பிகேவ் பண்ணதை

போச்சு நம்ம ப்ளோர்ல இருக்குறவங்க எல்லாம் நம்மளை பெஸ்ட் கப்ஃபில்ஸ்னு சொல்லிட்டு இருந்தாங்க இன்னைக்கு நீங்க செஞ்ச வேலையில எல்லாம் அவமானமா போச்சு,

இனி எந்த மூஞ்சிய வச்சுகிட்டு நான் அவங்கிட்ட பேசுறது” என அவள் அதற்கு மேல் கத்த,

“ஏய் மனிஷியாடி நீ எல்லாம் காலையில சாப்பிட்டு போனவன் பசியோட வருவானேன்னு நெனைப்பிருக்கா அதை விட வெளியே இருக்குற‌ நிலைமை தெரியாத உனக்கு காலையில வெளியே போனவன் ஆபிஸ் விட்டு இன்னமும் வரலையேன்னு பதறி என்னாச்சோன்னு ஒரு போனை போட்டு பத்திரமா இருக்கேனான்னு கேட்க துப்பில்லை தண்டாம உன் ப்ரண்டுக்கு கால் பண்ணி பேசிட்டு இருக்க” 

“என்ன என்ன! நீங்க என்ன எல்.கே.ஜி பாப்பாவா போனை போட்டு விசாரிக்க ஏன் உங்களுக்கு நிலைமை தெரியும் தான சேப்ஃபா இருந்துக்க மாட்டீங்களா சுத்த பத்தபதலிசா பேசிட்டு இருக்கீங்க

இப்புடி தான் அந்த கதிர் வீட்டுலயும் பண்ணுவாங்க. அவன் வர கொஞ்ச லேட் ஆன போதும் உடனே போனை போடு எங்க இருக்கான்னு விசாரி பொண்டாட்டியோட கடமை மடைமையின்னு டார்ச்சர் பண்ணுனாங்கன்னு பார்த்தா நீங்களும் அதே மாதிரி லூசு தனமா பேசிட்டு இருக்கீங்க,

நான் போன போட்டு விசாரிச்சா மட்டும் கொட்டுற மழை நின்னுடுமா இல்லை உங்கள பூதம் எதுவும் பத்திரமா தூக்கிட்டு வந்து விட்டுடு மா கேணைத்தனமா பேசிக்கிட்டு”

“ஆமா டி ஆமா உன்னை கட்டுனன்ல அப்போ நான் கேணையாத்தா இருக்க முடியும். அதான் கதிர் உன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டான். இப்போ என்னடான்னா என் பிள்ளைக்கு அப்பனாகிற முயற்சியில இருக்கான்!”

“என்ன என்ன சொன்னிங்க உங்க பிள்ளையா ஓ இன்னமும் அந்த நெனைப்பு உங்க மனசுல இருக்கா எவ்வளவு தைரியம்” என அவள் கேட்க,

அதில் சீண்டப்பட்டவன்,

“இதுக்கு எதுக்கு டி தைரியம் வேணும் விவாகரத்து வாங்கிட்டா அவன் என் பிள்ளை இல்லையின்னு ஆகிடுமா? என் ரத்தம் டி அவன் என்னைக்கும் மாறாது ஆனா ஆனா எவ்வளவு தைரியம் என் பிள்ளைய என்கிட்ட இருந்து அந்த கதிர் பிரிக்க பாக்குறான் அதுவும் இன்னைக்கு”

“இன்னைக்குன்னா‌‌ எங்க பாத்தீங்க அவுங்கள இந்த மழையில அவங்க வெளியே வர வாய்ப்பில்லை. அப்போ அப்போ நீங்க தேடி போய் இருக்கீங்க அப்புடி தான!!” என் அவள் உக்கிரமாக,

“ஆமா தேடி தான் போனேன் என் பிள்ளைய பாக்க நான் அவ வீட்டுக்கு போனேன் இதை உன்கிட்ட சொல்றதுக்கு பயமா என்ன?” என அவன் அலட்சியமாக,

முதல்முறை சுரபிக்கு பயம் வந்தது.

“அப்போ இன்னமும் உன் பிள்ளை ஞாபகம் இருக்குன்னா அவன் அம்மா ஞாபகமும் இல்ல இருக்கணும்”

“இருந்தா ஒண்ணும் தப்பில்லை பொண்டாட்டி ஞாபகம் இல்லாமையா இருக்கும்” என்றதும் தான் தாமதம்.

நெருங்கி அவன் சட்டையை பிடித்தவள்,

“அவ பொண்டாட்டினா அப்போ நான் யாருடா அவ நெனைப்ப இன்னமும் மனசுல வச்சிகிட்டு தான் என்கூட வாழுற அப்போ என்ன இதுக்கு என்னை கல்யாணம் பண்ண உனக்காக நான் எல்லாத்தையும் விட்டு வருவேனாம் ஆனா துரைக்கு இன்னமும் அவ பொண்டாட்டி புள்ளை நெனைப்பு இருக்குமா” என கத்தி தீர்த்தவள்‌ கோபத்தில் ஹாலில் இருந்த பொருட்களை எல்லாம் தள்ளி விட்டு உடைக்க பார்க்க,

தான் சொன்ன வார்த்தைகளின் வீரியத்தை அவன் உணரும் முன்னர் சுரபியின் இந்த கோபம் அவனை தடுமாற செய்ய,

“ஏய் பைத்தியமா டி உனக்கு எதுக்கு இப்புடி பண்ற”

“ஆமாம் பைத்தியம் தான் நான் பைத்தியம் தான்” என சொன்னவாறே வெறி பிடித்தாற் போல் கத்தியவளை கண்டு பயப்படுவது இவனின் முறை ஆனது‌.

“சுரபி சுரபி கொஞ்சம் பொறுமையா இரு “

“என்ன என்ன பொறுமையா இருக்கணும் போ போ உன் பிள்ளைய தேடி போடா” என இரைந்தவள் அங்கிருந்த அறையில் அடைந்து கொள்ள,

இவன் எவ்வளவு கெஞ்சியும் அவள் கதவை திறக்காததால் வேறு வழியின்றி இவனும் வேறு அறையினுள் நுழைந்து கொண்டான்.

விடிந்தும் சுரபி இருந்த அறை இன்னமும் திறக்காமல் இருக்க…

“சுரபி சுரபி ப்ளீஷ் கதவை தொறயேன். நேத்து ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன் டா ப்ளீஷ் கதவை தெறந்து வெளிய வாடி நேத்து நடந்தது முழுக்க முழுக்க என் தப்பு தான் ரியலி சாரி” என்றவாறு இவன் கதவை தட்ட,

உள்ளிருந்து இவனின் குரலை கேட்டு சுரபிக்கு கண்ணீர் மேலும் பெருகியது.

இதுவரை வந்திராத பயம் நேற்று முதல் முறையாக வந்தது.

ஹரிஷ் தன்னை போல் மனைவி குழந்தையை தலைமுழுகி விட்டான்‌ என அவள் நினைத்திருக்க அப்படி இல்லை என செருப்பால் அடித்தாற் போல் சொல்லி விட்டிருந்தான் நேற்று.

‘ஒரு வேளை பிள்ளை பாசம் அவனை இழுத்திடுமோ, மீண்டும் பிள்ளைக்காக வேண்டி அங்கே போய் விடுவானோ. என்னை விட்டு சென்று விடுவானோ’ என எதை எதையோ நினைத்து இரவு முழுவதும் பயத்தில் அழுது கரைந்தாள்.

இப்போது ஹரிஷின் குரல் கொஞ்சமே கொஞ்சமேனும் நம்பிக்கையை விதைக்க,

‘இல்லை இல்லை ஹரிஷ் என்னை விட்டு போக மாட்டாரா ஒருவேளை பையன பாத்ததும் பாசம் வந்திடுமோ, அப்போ விட்டு போய்டுவானா! இல்லை இல்லை அப்புடி எல்லாம் விட முடியாது. அவனுக்கு பிள்ளை மேல் தானே பாசம் அப்போ எங்களுக்கு ஒரு குழந்தை பொறந்தா அந்த குடும்பத்தை மறந்துடுவாரு குழந்தை வந்துட்டா என்னை விட்டு போகவும் மாட்டார்’ என நினைத்தவளிற்கு மறந்து போனது ஹரிஷ் அத்விதனை விட்டு வந்தது‌.

‘மொதல்ல இப்போ கோபபடமா இவர்கிட்ட அமைதியா போகணும் குழந்தை வர வரைக்கும் இல்லையின்னா எப்ப வேணும்னாலும் என்னை விட்டு போக வாய்பிருக்க அது கூடாது அந்த கதிர் குடும்பத்துக்கு முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டணும்’ என நினைத்தவள் அமைதியாக எழுந்து சென்று கதவை திறந்தவள்,

“சாரி ஹரிஷ் நானும் கொஞ்சம் நேத்து ஓவரா கோபப்பட்டுடேன்” என அடங்கி போக,

“ஓஹ் சாரி பேபி நான் தான் தப்பு சரி விடு அதை பத்தி பேச வேண்டாம். நான் ஆபிஸ்க்கு கிளம்பணும் வர சொல்லிருகாங்க நீ டிபன் ரெடி பண்ணு” என்றவன் ரெடியாக சென்று விட,

ஹாலில் இரைந்து கிடந்த பொருட்கள் இனி வரும் இவர்களின் வாழ்க்கையை பறைசாற்றுவது போல் தெரிந்தன சுரபிக்கு.

*******************************

முழுதாக இரண்டு நாட்கள் தேவைப்பட்டன மழை தன் கோர தண்டாவத்தை நிறுத்துவதற்கு.

இதோ இன்று மாலை முல்லையின் பெற்றோர் ஊரிலிருந்து கிளம்பி விடுவர் அநேகமாக இரவு உணவிற்கு வந்து விடுவோம் என மங்கை காலையே அழைத்து கூறியிருக்க அதனை கதிரிடமும் கூற,

“ம்ம்ம்” என்றதோடு அவன் முடித்து கொள்ள,

“அதான் அவர்கள் வந்து விடுவார்களே நீங்க கெளம்புங்க” என அவனை கிளம்ப சொல்லவும் அவளிற்கு மனம் வரவில்லை.

முல்லையின் பெற்றோரின் வருகையை கேட்டதில் இருந்து அவன் முகம் சோர்ந்து அமைதியாகி விட இவளிற்கு தாளவில்லை.

என்ன இருந்தாலும் இரண்டு நாட்கள் முழுதாக அவனுடன் இருந்திருக்கிறாளோ எல்லா நேரமும் அவளை விரட்டி கொண்டும் அத்விதனுடன் விளையாடிய படியும் அவனின் பேச்சுகள் வீட்டை நிறைத்த வண்ணமல்லவா இருந்தது.

இப்போது தேவைக்கு கூட பேசாமல் அமைதியாகிவிட்டவனை கண்டவளிற்கு என்னவோ போல் இருந்தது‌.

தன்னிடம் இரண்டு நாட்களாக உருண்டு புரண்டு விளையாடி சண்டை போட்ட கதிர் இன்றோடு கிளம்புவது அத்விதனுக்கு தெரிந்திற்றோ,

மாலையில் இருந்து விடாது அவனின் பின்னே வால் பிடித்து சுற்றி கொண்டிருந்தான். சில நேரம் தோள்களில் சில நேரம் முதுகினில் என சவாரி செய்த வண்ணமே இருந்தான்.

இதோ இப்போது தான் முல்லையின் பெற்றோர் அழைத்தனர் இன்னும் இரண்டு மணி நேரங்களில் வந்து விடுவதாக,

ஆக கதிர் இவர்களுடன் இருக்கும் நேரம் இன்னும் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே.

அவள் பெற்றோர் கிளம்புவது தெரிந்தும் கிளம்ப நினைத்தவன் விட்டு போக முடியாமல் மனம் தவிக்க இன்னும் சிறிது நேரம் அரை மணி நேரம் கால் மணி நேரம் என நேரத்தை நீட்டி  கொண்டே அவன் செல்ல இன்னும் மிச்சமிருப்பது இரண்டு மணி நேரங்கள் மட்டுமே.

சரி அவர்கள் வந்தபின் கிளம்பி கொள்வோம் என அவன் நினைத்த நொடி பிராகஷிடம் இருந்து அழைப்பு.

“கதிரு ஆபிஸ் முன்னாடி புல்லா தண்ணி உள்ளயும் போயிருக்கும். பொருள் எல்லாம் என்ன ஆச்சோ சீக்கிரம் வாடா மழை விட்டிருக்கு திரும்ப வேற வர்றதுக்குள்ள பொருள மட்டுமாவது பத்திரப்படுத்திக்குவோம்.

ராகேஷ் கிட்ட சொல்லிட்டேன் குடேன ரெடி பண்ணிட்டு இருக்கான். நீயும் வா” என அவன் வைத்து விட

தவிர்க்க முடியாத காரணம் பொருட்கள் எல்லாம் என்ன ஆயிற்றோ‌ என்ற கவலை அவனை சூழ்ந்து கொள்ள வேறு வழியின்றி முல்லையிடம் நிலைமையை விவரித்தவன் கிளம்ப,

“நோ! நோ! அங்கிள்” என அவனை கட்டி கொண்டு அத்விதன் ஒரே அழுகை.

அவனின் அழுகையில் இவனிற்கு கண்கள் கலங்குவது போல் இருக்க

“அங்கிள் போய்ட்டு உனக்கு டாய்ஸ் வாங்கிட்டு வந்துடுவாரு அதி கண்ணா” என முல்லை அவனை இழுத்து கொண்டு சமாதானப்படுத்த முயல,

“இல்லை இல்லை இப்பிடி தான் அப்பா வருவாருன்னு சொன்ன, ஆனா வரலை. இப்போ அங்கிளும் போறாரு வர மாட்டாரு ” என அவன் இன்னமும் அழுகையை கூட்ட,

செய்வதறியாது திகைத்து தான் போனாள் முல்லை.

அவனின் அழுகையை பொறுக்காது கதிர் சட்டென வெளியேறி விட,

காரில் ஏறி கொண்டவனுக்கு மனம் கனத்து போனது முல்லையையும் அத்விதனையும் பிரிவதை நினைத்து.

அத்வியின் கண்ணீர் முகம் அவனை கிளம்பி விடாமல் சண்டித்தனம் செய்ய, கார் கதவின் கண்ணாடியை தட்டினாள் முல்லை கையில் அத்வியுடன்.

அவசரமாக இவன் கதவை திறந்து கீழே இறங்கி நிற்க,

“அங்கிள் பாய்‌ நான் குட் பாய் அழுக மாட்டான். தாத்தா பாட்டி வந்ததும் நா உங்களை பார்க்க வரேன். அத்வி குட் பாய் அழுக மாட்டான்” என அவன் கழுத்தை கட்டி கொண்டு அத்வி சிரிப்புடன் கூற,

தனக்காக குழந்தையின் மனதை எதோ கூறி மாற்றியுள்ளாள் என அவனிற்கு புரிய குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்,

“பாய் டா அதி பா அங்கிள் சீக்கிரம் வரேன். அதி குட்டி எப்பவுமே குட் பாய் தான்” என மகிழ்ச்சியுடன் அவன் கூற இப்போது தான் முல்லைக்கு மனம் நிம்மதியானது.

குழந்தையை முல்லையிடம் கொடுத்து அவனிடம் விடை பெற்றவன் முல்லையிடம் பேச வார்த்தை வாரது விழிகளால் உத்தரவு வாங்க தன் விழி இமைகளை மூடி திறந்து சம்மதித்து சிரிப்புடன் அவனை வழியனுப்பினாள் தேன்முல்லை.

வீட்டிற்குள் நுழைந்தவளிற்கு அவன் பேச்சு இல்லாத வீடு வெறுமையாக காட்சி அளிக்க முயன்று வேலைகளில் கவனம் செலுத்தியவளிற்கு மனம் எல்லையில்லா நிம்மதியில் திளைக்க,

அதற்கு இடையூறு செய்யும் வண்ணம் மங்கை ஒரு வரனோட வந்து கொண்டிருந்தார்‌.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. புது வரன் வந்தா நாங்களே ஒத்துக்க மாட்டோம் … முல்லை கதிருக்கு தான் .. அதெப்படி மத்தவங்க வாழ்க்கையை கெடுத்திட்டு நீங்க நல்லா இருக்க முடியும் சுரபி ..

  2. அவசரப்பட்டு அல்ப ஆசைகளுக்காக தவறிவிட்ட பழைய வாழ்க்கை. ஆசைப்பட்டு அடைந்தும் சிதறிய பொருட்கள் போல் சிறிது சிறிதாய் சிதறி செல்லும் புதிய வாழ்க்கை.

    இரு நாட்கள் அவனது அதட்டலும், குழந்தையின் விளையாட்டு சிரிப்புமாய் இருந்த வீடு இப்பொழுது வெறுமையாய் தோன்றுகிறது முல்லைக்கு.

    கிளம்பும் நேரம் குழந்தையின் அழுகையில் அவன் முகம் சுனங்க அதனை அகற்ற உடனடியாக குழந்தையை சமாதானம் செய்து அவனிடம் பேச வைத்து விட்டாள். 😍

    அவனது சிறு முகவாட்டம் கூட உனது மனதை பாதிக்கிறதா முல்லை!