Loading

எபிலாக்

 

ஒரு மாதம் கழிந்து இருக்கும்.

 

பார்கவி டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள்.அப்போது தான் அவள் கண்ணில் பட்டது அந்த பரம்பரை வைர வளையல்.

 

“அத்தை! இந்த வளையல குடும்பத்து மூத்த மருமகளுக்குனு வச்சிருந்திங்களா என்ன?.. இப்போ முதல் மருமகளா வந்த நான் போட்டுக்கவா.. இல்ல மூத்த மருமகளா வந்த பர்வி போட்டுக்கிறதா?…” என்று கேட்க

 

சமையல் கட்டில் நின்று இருந்த செவ்வந்தி மெல்லிய புன்னகையுடன் வெளியே வந்தவர் “மூத்த மருமகளுக்குதான்னு சொன்னா என்ன பண்ணுவ.. வளையல கழட்டி உன் தங்கச்சிக்கு குடுத்துடுவியா?…” என்று கேட்க

 

அப்போதுதான், தன் அறையில் இருந்து சோர்வாக வரும் பர்விதாவை ஒரு பார்வை பார்த்த பார்கவி

 

“அது எப்படி குடுப்பேன்.. இது என் வளையல்.. நீங்க எனக்கு தானே குடுத்திங்க…” என்று சொல்ல

 

பர்விதாவோ அப்படியே வந்து, அமர்ந்து இருந்த பார்கவியின் கழுத்தை கட்டிக் கொண்டவள்

 

“எனக்கு எந்த வளையலும் வேணாம்.. என் அக்கா கையில தான் இந்த வளையல் அழகா இருக்கு…”என்று சொல்ல

 

“பர்வி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. எப்பவோ நினைச்சேன் இத உன் கைல போட்டு விடணும்னு…” என்றவள் வளையலை கழட்ட போக

 

“அம்மாடி பார்கவி! வளையல கழட்டாதம்மா.. இது உனக்கு நான் ஆசையா போட்டு விட்டது.. அது மட்டும் இல்லாம, ஒரு வளையல் தான் இருக்குன்னு யார் சொன்னா…” என்றவர்

 

“வாங்க!…” என்று இரண்டு மருமகளை பூஜை அறைக்கு அழைத்து வந்த செவ்வந்தி,

 

அங்கே இருந்த பெட்டியை திறந்து, இன்னொரு வைர வளையலை எடுத்தவர் “ரெண்டு வளையல் இருந்துச்சு.. ஒன்னு அபர்ஜித் பொண்டாட்டிக்கு இன்னொன்னு அஸ்வந் பொண்டாட்டிக்குனு நினைச்சிருந்தேன்.. பர்வி கையில இத போடணும்னு நினைச்சுட்டே இருந்தேன் மறந்து போச்சு.. நீயே ஞாபகப்படுத்திட்ட பார்கவி…” என்றவர்

 

பர்விதாவின் கையைப் பிடித்து அவளுக்கு அதை அணிவித்து விட, புன்னகை முகமாக அதை பார்த்துக் கொண்டிருந்த பார்கவிக்கு, கண்கள் இருட்டி, தலை சுற்றுவது போல் இருந்தது.

 

என்னவென்று அவள் யோசிக்கும் முன்னமே அடி வயிற்றிலிருந்து குமட்டிக் கொண்டு வர, வாயை பொத்திக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினாள்.

 

அவள் ஓடுவதைப் பார்த்து பர்விதாவும், செவ்வந்தியும் என்னவோ ஏதோ என்று அவள் பின்னே வர, வயிற்றை பொத்திக் கொண்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

செவ்வந்தி “ஐயோ! பார்கவி!…” என்று பதறியவாறு அவள் அருகில் சென்று, தலையை பிடித்துக் கொண்டார்.

 

பர்விதா உடனே வீட்டினுள் சென்று ஹாலில் நின்றவாறு அஸ்வந்தை மாமா என்று அழைக்க, அஸ்வந் அபர்ஜித் இருவரும் சேர்ந்தே வெளியே வந்தனர்.

 

“என்ன ஆச்சு அண்ணியாரே.. எதற்கு அழைத்தீர்கள்?…” என்று அஸ்வந் வந்து நிற்க

 

“ஐயோ மாமா! விளையாடாதீங்க.. அக்கா வாந்தி எடுக்குறா…” என்று பர்விதா பதட்டமாக சொல்ல

 

அஸ்வந் பதறி அடித்துக் கொண்டு வெளியே போக, வாந்தி எடுத்து முடியாமல் செவ்வந்தியின் தோளில் சாய்ந்து நின்றிருந்தாள் பார்கவி.

 

“கவி என்னடி ஆச்சு?…” என்று அவன் கேட்க

 

“ஒன்னும் இல்லடா.. நீ டாக்டருக்கு ஃபோன் போட்டு வர சொல்லு…” என்ற செவ்வந்தி பார்கவியை கைத்தாங்களாக அழைத்து வர

 

அபர்ஜித்தும் “என்னாச்சு பார்கவிக்கு…”என்று கேட்க

 

“இருங்கடா.. நான் என்ன டாக்டரா.. ஃபோன் போட்டு டாக்டர வரச் சொல்லுங்க.. வந்து செக் பண்ணட்டும்.. எனக்கு என்னமோ நல்ல விஷயமா இருக்கும்னு தோணுது.. எதுவாக இருந்தாலும் டாக்டர் வந்து கன்ஃபார்ம் பண்ணட்டும்…” என்றவர்

 

சமையல் அறைக்கு சென்று, கொஞ்சம் தண்ணீரில் உப்பு கலந்து எடுத்து வந்து, பார்கவிக்கு குடிக்க கொடுக்க, அதை அவள் வாங்கி பருகி கொண்டிருக்கும் போதே,

 

அபர்ஜித் அருகில் நின்று இருந்த பர்விதா மயங்கி அவன் தோளில் சரிந்தாள்.

 

“ஐயோ பர்வி…” என்று அவளை தாங்கி பிடித்தவன், அவள் கன்னம் தட்டி “பர்வி என்னடி ஆச்சு.. பர்வி.. எந்திரிடி…” என்று அவளை உசுப்ப

 

“டேய் என்னடா இது.. ஆளாளுக்கு மயக்கம் போட்டு விழுறாங்க.. நேத்து ராத்திரி சாப்பிட்டது எதுவும் ஒத்து வரலையோ…” என்று தான் செவ்வந்திக்கு சந்தேகம் வந்தது.

 

ஏனென்றால் அவரின் கணக்குப்படி அபர்ஜித்திற்கும் பர்விதாவிற்கும் ஏதுவும் ஆகவில்லை என்ற எண்ணம்.

 

பார்கவி மயங்கி விழுந்தாள் என்றால் கர்ப்பமாக இருப்பாளோ என்று நினைக்கலாம், பர்விதாவிற்கு என்ன நினைக்க முடியும்.

 

அதனால் தான் ஃபுட் பாய்சனாகியிருக்க வாய்ப்பு இருக்குமோ என்று தோன்றியது.

 

“தெரியலம்மா…” என்ற அபர்ஜித் அவளை அப்படியே கைகளில் தூக்கிக்கொண்டு, அறையில் கொண்டு கட்டிலில் படுக்க வைத்தான்.

 

செவ்வந்தி தண்ணீர் கிளாஸ் உடன் வந்தவர், அவள் முகத்தில் தெளித்து, துடைத்து விட்டு எழுப்ப, லேசாக மயக்கம் தெளிந்து கண்விழித்தாள்.

 

“என்னாச்சும்மா.. என்ன செய்து?…” என்று கேட்க

 

“தெரியல அத்தை.. தல சுத்துது, வாந்தி வாற மாதிரி இருக்கு…” என்று அவள் சொல்ல

 

‘என்னது’ என்று குழம்பிப்போனர் செவ்வந்தி “டாக்டர் எங்கடா…?” என்று அரபஜித்திடம் கேட்க,

 

அப்போது உள்ளே வந்த அஸ்வந் “டாக்டர் வந்துட்டாங்க.. பார்கவிய செக் பண்ணிட்டு இருக்காங்க…” என்று சொல்ல

 

“சரி முதல்ல அவளுக்கு என்னனு பார்ப்போம்…” என்ற செவ்வந்தி வெளியே வந்து ஹாலில் அமர்ந்து கொள்ள, அபர்ஜித்தும், அஸ்வந்தும் அவரின் இருபக்கம் அமர்ந்து கொண்டனர்.

 

வந்து இருந்த பெண் மருத்துவர் பார்கவியையும், பர்விதாவையும் முழுதாக பரிசோதித்து விட்டு,

 

இவர்களிடம் வந்தவர் “கங்கிராட்ஸ்!.. உங்க ரெண்டு மருமகளும் கர்ப்பமா இருக்காங்க…” என்று சொல்ல மூவருக்குமே ஆனந்த அதிர்ச்சி தான்.

 

செவ்வந்திக்கு அதிகப்படியாக அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். பார்கவி கர்ப்பமாக இருப்பாளோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் பர்விதாவும் கர்ப்பம் என்பது, அது எப்படி திமிங்கலம் என்பது போல் தான் இருந்தது அவரின் நிலைமையை.

 

வீட்டில் ரெட்டை சந்தோஷம், சொல்லவும் வேண்டுமா! அபர்ஜித் அஸ்வந் இருவரும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக தனது இணைகளை தேடிச் சென்றனர்.

 

பார்கவி விரிந்த புன்னகையுடன் கட்டிலில் அமர்ந்திருக்க, ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டான் அஸ்வந்.

 

“அடியே பொண்டாட்டி! சொல்லவே இல்ல…” என்று கேட்க

 

“இன்னும் ஒரு வாரம் போனதும் செக் பண்ணிட்டு, சர்ப்ரைஸா சொல்லலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு…” என்று அவள் மூக்கை சுருக்க,

 

“எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. நீ அம்மா! நான் அப்பா!…” என்று அவன் பெருமைப்பட்டுக் கொள்ள

 

“ஐயாக்கு ரொம்ப பெருமை போல…” என்று அவள் கேட்க

 

“பின்ன இல்லையா.. நம்ம கூட சேர்ந்து விளையாட.. உன் கூட சேர்ந்து ஊஞ்சலாட.. என்கூட சேர்ந்து உன் கூட சண்டை போட.. நமக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுது…” என்று அவளை இழுத்து இதழோடு இதழ் அனைத்து கொண்டான். சந்தோஷத்தின் அழகான வெளிப்பாடு ஆழ்ந்த முத்தமாக சென்றது.

 

அபர்ஜித்தை சொல்லவும் வேண்டாம், அறையினுள் வந்தவன், வாயில் இரண்டு கைகளையும் வைத்து, அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பர்விதாவிற்கு அவன் பார்வையில் உடல் கூச (ஐயோடா) என்று இருந்தது. “என்ன ஆச்சு உங்களுக்கு.. ஏன் இப்படி பாக்குறீங்க…?” என்று அவள் கேட்க

 

“அடுத்த பத்தாவது மாசம் புள்ள வேணும்னு சொன்ன.. அதுக்குன்னு இப்படியாடி.. இன்னும் ஹனிமூன் கூட போகல.. கல்யாணமாகி ஒரு மாசத்துலயே நீ கர்ப்பமா இருக்க…”

 

“இதுக்கு தான் இந்த ரியாக்ஷனா ஷர்ட் காலரை தூக்கி விட்டுக்குங்க.. உங்க ஆண்மையின் பெருமைய நிரூபிச்சிட்டீங்க…” என்று சொல்லி அவள் கண்ணடிக்க

 

“அடிங்க, இதுலலாமா நிரூபிப்பாங்க…” என்றவன் அவளை நெருங்கி, மென்மையாக அணைத்துக் கொண்டான்.

 

“எவ்ளவு சந்தோஷமா இருக்குன்னு வாயை திறந்து சொல்ல முடியாது அம்லு…” என்றவன்

 

அவள் முகம் எங்கும் மொச்சு, மொச்சு என்று முத்தங்களை வாரி வழங்கினான். இறுதியாக இதழில் இளைப்பாறினான்.

 

சந்தோஷமான செய்தியை இனிப்பை உண்டு மகிழ்ந்து கொள்வார்கள். இவர்களும் இதழ் தேனை பருகி இனிமையான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

 

செவ்வந்தி உடனே ஃபோனில் வசந்தராஜனுக்கும் சங்கரிக்கும் விஷயத்தை கூறி விட, அவர்களும் மகள்களை பார்க்க வந்துவிட்டனர்.

 

அவர்கள் வரும்போது பார்கவியும், பர்விதாவும் ஹாலில் அமர்ந்திருக்க, அவர்களை வற்புறுத்தி ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் செவ்வந்தி.

 

“ஐயோ அத்தை போதும்…” என்று சிணுங்கிக் கொண்டிருந்தாள் பார்கவி. அபர்ஜித் முறைப்பிற்கு பயந்து பர்விதா மெல்ல மெல்ல குடித்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன சம்பந்திமா.. உங்கள போட்டு பாட படுத்துறாங்களோ என் ரெண்டு பொண்ணுங்களும்…” என்று கேட்டவாறு சங்கரி உள்ளே வர

 

“அட இது என்ன.. இப்பதானே ஆரம்பிச்சு இருக்கு.. இவங்க ரெண்டு பேரும் என் பேரப் பசங்கள பெத்து கையில தார வரைக்கும் நான் என்னாகப் போறேனோ.. இப்பவே பயந்து வருது சம்பந்திமா…” என்று செவ்வந்தி சொல்ல

 

அபர்ஜித்தோ “கவலைய விடுங்க அம்மா, அதான் அத்தை இருக்காங்களே.. அவங்களுக்கும் இவங்க ரெண்டு பேர விட்டா வேற யாரு இருக்காங்க.. இங்கேயே இருந்து ரெண்டு பொண்ணுங்களையும் பார்த்துக்கட்டும்…” என்றவன்

 

வசந்தராஜனை பார்த்து “சரி தானே மாமா…” என்று கேட்க, அவனது சொல்லுக்கு மறுக்க தோன்றுமா அவருக்கு, சரி என்று சொல்லிக் கொண்டார்.

 

தன் அருகில் அமர்ந்திருந்த அபர்ஜித்தின் காதோரம் குனிந்த பர்விதா “எவ்ளோ நேக்கா பேசி அம்மாவை, அப்பாவையும் இங்கவே இருக்க வச்சுட்டீங்க…” என்று கேட்க கண்களை சிமிட்டி அவன் சிரிக்க ,

 

“எத்தன நாளைக்கு குழந்தை பிறந்தாதும் போயிடுவாங்களே…” என்று சொல்ல

 

“குழந்தை பிறந்ததும்.. குழந்தைய பாத்துக்கணும்.. அப்புறம் குழந்தை நடக்க ஆர்ம்பிச்சதும் பாத்துக்கணும்.. அப்புறம் குழந்தை ஸ்கூல் போற வரைக்கும் பாத்துக்கணும்..

 

அதுக்கப்புறம் ரிப்பீட்டு நீ திரும்பவும் கர்ப்பம்.. குழந்தை பிறக்கும்.. திரும்பவும் குழந்தை வளரனும்…” என்று சொல்ல,

 

“வாயைப் பிளந்த பர்விதா “அடப்பாவி பூராவும் பிளான் தானா…” என்று கேட்க

 

“லாயர் புத்திமா ஒன்னும் பண்ண முடியாது…” என்றான் அவன்.

 

பார்கவியின் அருகில் அமர்ந்திருந்த செவ்வந்தி. அபர்ஜித், பர்விதா இருவரையும் பார்த்துவிட்டு

 

“அம்மாடி பார்கவி.. கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆகியிருக்கு.. அவன் என்னடானா அந்த அறிவ லவ் பண்ணி லவ் ஃபெயிலியர்ல இருந்தான்.. ஆனா இப்போ பர்விதாவ கர்ப்பமாக்கி இருக்கான்.. எப்படிமா எங்கேயோ இடிக்குதே…” என்று கேட்க

 

பார்கவிக்கு அவரை நினைத்து பரிதாபமாக இருந்தது. அவர் மூத்த மகனைப் பற்றி அவருக்கு தெரிய வரவில்லையே.

 

“அட அத்தை அதுதான் முதல் ராத்திரி அன்னைக்கு நீங்களே சொல்லி அனுப்புனீங்களே .. ஆறுதல் சொல்லி அரவணைச்சுக்க சொல்லி.. அளவுக்கு அதிகமாக அரவணைச்சிருப்பா போல அதுதான் அடுத்த மாசமே கர்ப்பம் ஆகியிட்டா.. விடுவீங்களா உங்க பேரப் புள்ள ரெண்டு வருது.. இது போதாதா…” என்று கேட்க

 

“அட யாரு வேணானு சொன்னா.. ரெண்டு என்ன நாலு கூட பெத்து குடுங்க.. நான் வளர்த்து எடுக்கிறேன்…” என்றார் உற்சாகமாக.

 

****

சரியாக ஒன்பது மாதங்கள் கழித்து அவர் கேட்டது போன்று அல்லாமல், ஆளுக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்திருந்தனர் பார்கவியும் பர்விதாவும்.

 

பார்கவிக்கு காலையில் வலிவந்தது என்றால், பர்விதாவிற்கு மதியவேளை வலி வந்து விட்டது.

 

இருவரையும் ஒரே அறையில் அனுமதிக்க, சுகப் பிரசவத்தில் இரண்டு சிங்க குட்டிகள்.

 

ஆனால் செவ்வந்திக்கு தான் சற்று ஏமாற்றமாக போனது.

 

“ஏன்டா.. எனக்கு தான் நீங்க ரெண்டு பேரும் பையனா போயிட்டீங்கன்னு பார்த்தா.. நீங்க ரெண்டு பேருமே பையன பெற்றெடுத்தா.. நான் பொண்ணுக்கு எங்கடா போறது…” என்று கேட்க

 

பார்கவியோ “அத்தை உங்களுக்கு பொண்ணுங்கன்னா நாங்க ரெண்டு பேரும் தான்.. எங்க பொண்ணுங்கள கூட உங்க பாசத்த பங்கு போட விட மாட்டோம்…” என்று சொல்ல

 

பர்விதாவோ “ஆமா, நாங்க உங்க பொண்ணுங்க இல்லையா…?” என்று கேட்க

 

“யார் சொன்னா.. நீங்க ரெண்டு பேரும் என் பொண்ணுங்க தான்…” என்று பேரப்பிள்ளைகளை தூக்கிக் கொஞ்சினார்.

 

“அப்போ நான் மட்டும் தக்காளி தொக்கா…” என்று கேட்டுக்கொண்டு கார்த்திகேயனுடன் உள்ளே வந்தாள் அறிவழகி.

 

“இந்த வந்துட்டாள் இல்ல.. விஷ பாட்டில்…” என்ற செவ்வந்தி

 

“அடியே உனக்கும் கல்யாணமாகி பத்து மாசம் ஆகுது இல்ல.. புள்ள குட்டி பெத்து எடுக்குற ஐடியா இல்லையா…?” என்று கேட்க

 

“நான் என்ன உங்க புள்ளைய மாதிரி மானங்கெட்டவளா.. பிடிக்காத கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பத்தாவது மாசம் பிள்ளைய பெத்து எடுக்க…” என்று கேட்க

 

அபர்ஜித் அவளை முறைக்க, “என்ன சீனியர் பார்வை பலமா இருக்கு.. ஊர் உலகத்துக்கு உங்களுக்கு நடந்தது பிடிக்காத கல்யாணம்.. அதை வச்சு நான் என்ன வேணாலும் சொல்லுவேன்…” என்று அறிவு ரகசியமாக சொல்ல

 

ஆபர்ஜித்தோ “ஆமா நான் மானங்கெட்டவன்.. இவள் அப்படியே மன்னர் பரம்பரை.. புருஷன் மேலேயே 94 கேஸ் போட்டுட்டு வச்சிருக்கா இன்னும் ஆறு கேஸ போடு, செஞ்சுரி அடிச்சிடலாம்…” என்று அவன் சொல்ல

 

“அதுக்கு தான் தேடிட்டு இருக்கேன்.. ஒன்னுமே இல்ல…” என்று கார்த்திகேயனை கடைக்கண்ணால் பார்த்து அவள் சொல்ல

 

கார்த்திகேயன் அவள் காதருகே குனிந்து “நேத்து நடந்த ரேப் கேஸ் போடலாமே…” என்று சொல்ல

 

அவனை முறைத்தவள் “அத நூறாவது கேஸுக்கு வச்சிருக்கேன்…” என்று சொல்லிவிட்டு குழந்தைகளை தூக்கி கொஞ்சியவள்,

 

அவர்களுக்காக வாங்கி வந்த பரிசுகளையும் கொடுத்துவிட்டு கார்த்திகேயனுடன் சென்றுவிட,

 

“சரி நான் வீட்ட போய் பத்திய சாப்பாடு சமைச்சு எடுத்துட்டு வாரேன்.. டேய் நீங்க ரெண்டு பேரும் பொண்டாட்டிங்கள கவனமா பாத்துக்குங்க…” என்ற செவ்வந்தி, பேரப்பிள்ளைகளை விட்டுச் செல்ல மனதே இல்லாத சங்கரி, வசுந்தராஜனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

 

பெரியவர்கள் சென்றுவிட அறையில் இரண்டு கட்டில்களுக்கும் நடுவே இருந்த ஸ்கிரீனை இழுத்து விட்டான் அஸ்வந்.

 

எதற்கு என்று தெரிந்த பர்விதா அபர்ஜித் உதடுகளில் மெல்லிய புன்னகை.

 

பார்கவியோ “எதுக்கு ஸ்கிரீன எடுத்து விடுற…?” என்று மெல்லிய குரலில் கேட்க

 

அவளை நெருங்கி, கட்டிலில் இருந்த சிறு இடைவெளியில் படுத்து, அவள் தோளில் தலையை வைத்து, நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் கையை கொடுத்து, அவளை கட்டிக் கொண்டான் .

 

பார்கவி மெலிதாக புன்னகைத்தவள் “என்னாச்சு என் மாமாக்கு…” என்று கேட்க

 

“எவ்ளவு பயந்துட்டேன் தெரியுமா?.. எனக்கு இவன் வேணாம் .. உன்ன எவளோ கதற வச்சுட்டான்ல…” என்று மகனை பார்த்து கூற

 

பார்கவியின் மனது நெகிழ்ந்து போனது. எப்போதும் அவனுக்கு அவள் தான் முதலிடம்.

 

“அப்போ உனக்கு உன் மகன் வேணாமா.. நான் தான் வேணுமா…?” என்று கேட்க

 

“யாருக்கு வேணும் இவன்..அம்மாகிட்ட வளக்க கொடுத்திடலாம்.. நான் உன்ன கடத்திட்டு எங்கேயாச்சும் யாரும் இல்லாத இடத்துக்கு போயிடுறேன்.. இவன் வயித்துல வந்ததுல இருந்து நீ கூட என்ன கவனிக்கிறது இல்ல.. இப்படி தூங்கி எவ்ளோ நாளாச்சு…” என்றவன் மெதுவாக காலையும் தூக்கி, அவளுக்கு வலிக்காத வண்ணம், அவள் கால் மீது போட்டுக் கொண்டு தூங்கவே ஆரம்பித்து விட்டான்.

 

பார்கவி அவன் தலைமுடியை கோதி விட்டு, உச்சியில் முத்தம் வைத்தாள்.

 

உடைந்து உதிரிப்பூக்களாக கிடந்த அவள் நெஞ்சத்தை, ஒன்று கூட்டி அழகிய பூச்சரமாக மாற்றியது அவனும், அவன் காதலும் தானே.

 

அபர்ஜித், தாய்மை அழகில் ஜொலிக்கும் பர்விதாவை, ஆசையாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் மகன் கத்தி அழ ஆரம்பித்து விட்டான்.

 

அவனைப் பூப் போல கைகளில் தூக்கிக் கொண்டவன், பர்விதாவின் கைகளில் கொடுக்க, அவளும் தன்மார்போடு அணைத்துக்கொண்டு, மகனின் அழுகையை நிறுத்த தாலாட்டினாள்.

 

ஆனால் அந்த குட்டிக் கண்ணன் அழுகையை நிறுத்தவில்லை.

 

அபர்ஜித்தோ “என்னாச்சு.. ஏன் அழுகைய நிப்பாட்ட மாட்டேங்குறான்.. பசிக்குதோ…” என்று கேட்க

 

“அதெல்லாம் இல்லைங்க.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே பால் கொடுத்தேன்…” என்ற பர்விதா எதுவோ தோன்ற

 

குழந்தையின் கன்னத்தில் அழுத்தி முத்தம் வைக்க, அழுகை நின்றது.

 

அதை அதிசயமாக பார்த்த அபர்ஜித் “எப்படி இது…” என்று கேட்க

 

“இவன் வெளியே வந்ததுமே அழுதுட்டே இருந்தான்.. டெலிவரி வாட்ல இருந்தப்போ முத்தம் கொடுக்கவும் அழுகைய நிறுத்திட்டான். சரி அந்த ட்ரிக்ஸ் வொர்க் அவுட் ஆகுதான்னு பார்த்தா.. இப்போ முத்தம் கொடுக்கவும் அழுகைய நிறுத்திட்டான்…” என்று அவளும் முகம் விகாசிக்க கூற ,

 

மீண்டும் அவர்கள் மகன் அழ ஆரம்பிக்க, இம்முறை குனிந்து அபர்ஜித் மகனின் கன்னத்தில் முத்தம் வைக்க, அழுகை!உடனே நின்றது.

 

“என்னடி இது.. முத்தம் வெச்சா அழாம இருக்கான்…”

 

“உங்க புள்ள இல்ல.. கண்ட்ரோல் பண்ண, முத்தம் ஒன்னு போதும் போல…” என்று அவள் சொல்ல

 

“ஓஹோ! அப்போ மேடத்துக்கு முத்தம் வேணாமா?…” என்று கேட்க

 

“யார் சொன்னா வேணாம்னு.. கத்தி கத்தியே எனர்ஜி எல்லாம் போயிடுச்சு.. ஸ்ட்ரோங்கா ஒரு முத்தம் வேணும்…” என்று சொல்ல

 

உலர்ந்து, வறண்டு இருந்த அவள் இதழ்களை நோக்கி குனிந்து, இவன் இதமாக முத்தமிட்டான்.

 

தன் மகவை பெற்று, மறு ஜென்மம் எடுத்து, சோர்ந்து இருந்தவளின் இதழ்களுக்கு, அவன் எச்சில் கொண்டு இதம் கூட்டிக் கொண்டிருக்க,

 

அவர்கள் மகன் மீண்டும் அழ ஆம்பிக்க, பர்விதா சற்றே மகனை தூக்கிப் பிடித்து, ஒரு கன்னத்தில் முத்தம் வைக்க, மறுகன்னத்தில் அபர்ஜித் முத்தம் வைத்தான்…

அவர்களது இதழில் முகிழ்க்கும் முத்தம் இருதி வரை தொடரட்டும்…

 

சுபம்.

 

 

Click on a star to rate it!

Rating 3.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்