
டிஸர் இதுவும்.. pls kochchikkatheenha udane varn
அத்தியாயம் 39
காலையில் பூக்கும் மலர்கள் அனைத்தும் முழுமையாக வாடத் தொடங்கிய நேரமது…
அங்கே, அந்த தார் சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அபியின் நான்கு சக்கர வாகனம்…
கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவனை நிமிடத்திற்கு ஒரு முறை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே வந்தாள் ஆனந்தி…
“என்னடி… ஏதாவது கேட்கணுமா?” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவனிடம்
“ம்ம்…” என்றவள் அதற்கு நேர் மாறாக இல்லையென்று தலையாடினாள்.
அவளது செய்கையில் மெல்ல சிரித்தவன் “என்னவாம் குளோரிக்கு” மெல்லிய புன்னகையோடு கேட்டான்.
“இல்லை, அனிதா மேமோட திங்க்ஸ், இம்போர்டன்ட் ஃபைல்ஸ் எல்லாத்தையும் இங்க எடுத்துட்டு வராம, அந்த வீட்டுலயே வைச்சு இருக்கீங்களே? ஏன்?…” முதல்முறையாக அனிதாவை பற்றி விசாரிப்பதால் உண்டான தயத்தோடு கேட்டாள்.
“பெருசா காரணம் ஒன்னுமில்லை… அம்முவோட திங்க்ஸ் எல்லாமே அவ மூச்சுக் காத்து பட்ட இடத்திலேயே இருக்கட்டும்னு நினைச்சேன். அதான் அங்கியே எல்லாத்தையும் வைச்சிட்டு வந்துட்டேன்” என்றதும் சரியென்று த
லையாட்டினாள்…

