Loading

அத்தியாயம் 11

சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த மருமகனை பார்க்க பார்க்க, இன்னும் உறங்கி கொண்டிருந்த மகளின் மீது அத்தனை கோபம் வந்தது சாரதாவிற்கு.

‘நாலு குழந்தை பெத்துக்கிட்டாலும் இவளுக்கு புத்தியே வராது. இன்னும் தூங்கிட்டு இருக்கா பாரு…’என மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட சாரதாவோ அறையை நோக்கி நடக்கவும், “அத்தை…” என அபி அழைக்கவும் சரியாக இருந்தது. சமையலறையிலிருந்து வெளிவந்தவன் அவரிடம் காபியை நீட்டினான்.

 ‘அதுக்குள்ள காபியா…’ என்பதைப் போல் அவரின் பார்வையிருந்தது.

“எழுந்ததும் பாலை அடுப்புல வைச்சுட்டு தான் ரெஸ்ட் ரூம் போனேன் அத்தை” என்றவன் குழந்தைகளிடம் ஹார்லக்ஷை நீட்டிவிட்டு

“நீங்க குடிச்சுட்டு இருங்க. நான் அம்மாவை எழுப்பி விட்டுட்டு வரேன்” என்றவன் அவசரமாக படுக்கையறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டான்.

அங்கு படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவன் “ஐயோ…” என வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டப்படி

“அம்மு, அம்மு எழு,..”அவசரமாக அனிதாவை எழுப்பினான்.

“போ அபி, தூக்கம் வருது…” என சிணுங்கினாள் பெண்ணவள். அவளின் சிணுங்களை இப்பவும் ரசிக்க தோன்றியது அவனுக்கு. தன் மனம் போன போக்கை நினைத்து தன்னையே நொந்து கொண்டவன்

“ஏய் ஜில்லு, எழு டி பசங்களும், அத்தையும் வந்திருக்காங்க…” மெல்லிய குரலில் கூறினான்.

“அத்தை தானே…” என்றவள்

“ஐயோ அம்மாவா?…” என அவசரமாக எழுந்தமர்ந்து திருதிருவென விழித்தாள்.

“ஐயோ டெம்ப்ட் பண்ற டி நீ…” என்றபடியே அவளின் இதழில் இதழ் பதித்து விட்டு நிமிர்ந்தவன்

“சீக்கிரம் குளிச்சுட்டு வா…” என அறையை விட்டு வெளியேறினான்.

*****

சிறிது நேரத்திலேயே அறையிலிருந்து வெளி வந்தவளின் கால்களைக் கட்டிக் கொண்டான் சோழன்.

“ம்ம்மா,…” என அண்ணார்ந்து தன்னை பார்த்தபடி அழைத்தவனை குனிந்து தூக்கியப்படி “ரெண்டு நாளா அம்மா உங்களை பாக்காம எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்றவள் சோழாவின் கன்னங்களில் மாறி மாறி முத்தம் வைத்தாள்.

“ரெண்டு புள்ளையை பெத்துட்டேன்னு தான் பேரு. எட்டு மணிக்கு எழுந்துக்கற பழக்கம் மட்டும் போகவில்லை…” என்ற தன் தாயின் குரலில் பொறுமையாக திரும்பி பார்த்தவள்

“நான் என்ன செய்வேன், வளர்ப்பு சரியில்லை..” என நமட்டு சிரிப்போடு கூற, சாரதா மூக்கு விடைக்க பார்த்தார். தன் தாயின் முறைப்பை கண்டுகொள்ளாமல்

“அக்கா எங்க பட்டு…” அவனின் கலைந்திருந்த கேசத்தை சரி செய்து கொண்டே கேட்டாள். ‘ அங்க…’ என்பதை போல் கையை காட்டினான் சோழன்.

“கிச்சன்ல என்ன செய்யறாங்க…” என்றவள் கிச்சனுக்குள் நுழைய குந்தவியை கையில் வைத்தபடி தோசை வார்த்துக் கொண்டிருந்தான் அபி.

“மாமா, எனக்கு ரெண்டு தோசை…” என்றவளிடம் தட்டை நீட்டி “குழந்தைக்கு ஊட்டி விடு, அப்படியே நீயும் சாப்பிடு…” என்றவன் மீண்டும்

“ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் அம்மு. குழந்தை ஃபார்ம் ஆயிட்டா அதை களைக்க சொல்லவும் மனசு வராது. சோ இப்பவே ஆப்ரேஷன் பண்ணிடலாம்…” எனக் கூறினான்.

‘குழந்தை வந்தா இருக்கட்டுமே மாமா’ எனக் கூற தோன்றினாலும் அவனிடம் பதில் பேசாது சரியென தலையாட்டினாள். ட்வின்ஸ் என்றதும் அடுத்த குழந்தை வேண்டவே வேண்டாம் என்று விட்டான் நயன். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஆப்ரேஷன் செய்ய அபி சொல்லவும் மாட்டேன் என்று விட்டாள் மூன்றாம் மகவு வந்தால் சரியென கூறுவான் என்ற நம்பிக்கையில்.

அவளின் நம்பிக்கை பொய்யாகும் படி ஒவ்வொரு கூடலின் போதும் “ரெண்டு பேருமே ஆப்ரேஷன் பண்ணல இப்ப பண்ணா பரவாயில்லையா? குழந்தை ஃபார்ம் ஆகாது தானே…” என்ற அபியின் கேள்வி மனதை வலிக்கவே செய்யும். இருந்தும் புன்னகையுடன் ஒன்னும் ஆகாது என்பதைப் போல் தலையாட்டுவாள். இதோ இப்போதும் அதே வலி நிறைந்த புன்னகையை அவனிடம் சிந்திவிட்டு தான் தாயிடம் வந்தவள்

“ம்மா நாங்க ஹாஸ்பிடல் போகணும். இரண்டு பேரும் உன்கூட இருக்கும் போதே போயிட்டு வரலாம்னு இருந்தோம். இன்னைக்கு போக முடியாதுன்னு நினைக்கிறேன். நாளைக்கு நானும், அவரும் போயிட்டு வந்துடறோம்.நீ குழந்தைகளை பாத்துக்கிறயா?…” சோழாவிற்கு ஊட்டி விட்டபடியே கேட்டாள். அவளை மேலிருந்து கீழாக பார்த்தவர் “யாருக்கும் காய்ச்சல் மாதிரி தெரிலயே, வேற ஏதாவது பிரச்சனையா?…”

“அதெல்லாம் ஒன்னுமில்லை ம்மா, அதான் போன மாசமே சொன்னேன்ல ஒயரை கட் பண்ணிட்டு வரன்னு…” எனக் கூற, அவள் கூறுவது சுத்தமாக புரியவில்லை சாரதாவிற்கு

‘ என்ன ஒயரா? மானத்த வாங்கறாளே…’ என மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட அபியோ, கிச்சனில் இருந்தபடியே இவர்களை கவனித்தான்.

“என்ன ஒயர், அப்படினா என்னனு முதல்ல சொல்லு…” என முகத்தை சுருக்கி கேட்கவும்

“ஃபேமிலி பிளானிங் பண்ண போறோம் ம்மா…” என்றாள் சற்றே தயங்கி, அவளை முறைத்துப் பார்த்தபடி

“குழந்தை பிறந்த போதே ஆப்ரேசன் பண்ணிடுன்னு நானும், உன் அத்தையும் சொன்னோம் அப்பா கேட்கல. இப்ப ஏன் இடையில போயிட்டிருக்க, அப்போவே ஆப்ரேஷன் பண்ணிருந்தா வலியும் தெரிஞ்சிருக்காது. வயிறு பெருசா இருக்கவும் அந்த இடம் (பெளோப்பியன் டுபுஸ்) தொப்புள் கொடி கிட்ட இருக்கும். அப்ப பண்ணும் போது கொஞ்சம் வேலை இஸியா முடிஞ்சுரும். இப்ப பண்ணா கொஞ்சம் ரிஸ்க் தான் இதெல்லாம் கவனமா பண்ண வேணும்…” என்றார் சாரதா.

“பாத்துக்கலாம் ம்மா.” அசால்ட்டாக கூறினாள்.

“சரி,நம்ம துரை ஆஸ்பத்திரிக்கு போங்க…” என அருகில் வந்த குந்தவியை மடியில் தூக்கி வைத்து கொண்டே கூறினார்.

“சாதாரண காய்ச்சலுக்கே அங்க போனா மூவாயிரம் வேணும் மா. இது ஆப்ரேசன் இரண்டு வாரம் பெட்டுலிருக்க வைச்சு,பல ஆயிரத்தைப் புடுங்கிட்டு தான் விடுவாங்க, இப்ப நம்ம இருக்கற நிலைமைக்கு அங்கெல்லாம் போனா கட்டுப்படி ஆகாது…” என்றாள் குடும்ப பெண்ணாக.

தன் மகளின் பேச்சில் ஆச்சரியம் கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

“சரி இப்ப எந்த ஆஸ்பத்திரிக்கு போறீங்க…” என்றார் கேள்வியாக

“இப்ப கவர்மெண்ட் ஆஸ்பத்திரிலயே நல்ல ஸ்பெசிலிட்டி வந்துருக்கு ம்மா. பிரைவேட் ஹாஸ்பிடல் விட இங்க நல்லா தான் இருக்கு. சோ அங்கேயே போயிட்டு வந்துடறேன். மிஞ்சி மிஞ்சி போனா இருபது நிமிசம் ஆப்ரேஷன் தான் பாத்துக்கலாம். இரண்டு பேரும் தான் ஆப்ரேஷன் பண்றோம் ம்மா. முதல்ல நான், எனக்கு சரியானது அவரு பண்ணுவாரு…” என கூச்சமின்றி கூற

“ஐயோ இதையும் சொல்றா…” என வெளிப்படையாக புலம்பினான் அபி.

இங்கு சாரதாவோ தன் மகளை பார்த்தபடி”ஆம்பளைக்கு பண்றதெல்லாம் கத்தியுமில்லை, இரத்தமுமில்லை மாதிரி தான் அஞ்சு நிமிஷம் போதும். ஆனா நமக்கு வயித்த கிழிச்சு தான் பண்ணுவாங்க, காசானாலும் பராயில்லை பெரிய ஆஸ்பத்திரியா பாரு. பத்தலைன்னா நான் வேணா காசு போடறேன்..” என சாரதா பிடிவாதமாக கூறினார்.

“அம்மா இவரே துரை ஆஸ்பத்திரிக்கு தான் போலாம்னு சொன்னாரு. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். எங்க போனாலும் ஒன்னு தான். இதுக்காக போயி ஏன் செலவு பண்ண வேணும்? எனக்கு தரேன்னு சொல்ற காசை அப்படியே வைங்க, பசங்களுக்கு மொட்டை போடும் போது அதை சீரா வைச்சுடுங்க…” என மறுப்பாக கூறவும், சாரதா அதற்கு மேல் பதில் பேசவில்லை அவர்களின் விருப்பம் என்பதைப் போல் அமைதியாகி விட்டார்.

*****

அடுத்த நாள் காலை பத்து மணயளவில் அவ்வுரிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கணவன், மனைவி இருவரும் சென்றிருந்தனர்.

மருத்துவர் வர அரைமணி நேரம் ஆகுமென்று கூறிவிட, வேறு வழியில்லாமல் மருத்துவமனை வாளகத்திலயே அமர்ந்திருந்தனர்.

 சுற்றிலும் மரங்கள் அதற்கடியில் ஆட்கள் அமரக் கூடியளவில் திண்ணை வைத்து கட்டியிருக்க, நேராக திண்ணையில் சென்று அமர்ந்தனர். சில்லென்ற காற்று, அங்கு நிலவிய அமைதி, இருவருக்கும் இடையேயான தனிமையென்று அனைத்தும் ரசித்தவனின் இதழ்கள் தன்னாலேயே அந்த பாடல் வரிகளை முணுமுணுக்க துவங்கியது

“என்ன பாட்டு பாடறீங்க…” என அவனின் தோளில் இடித்தப்படி கேட்டாள்.

“சும்மா தான், நீயும் கேட்கறயா?…” எனக் கேட்டவன் அவளது பதிலையும் எதிர்பாரது, குரலை செருமியப்படி

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி

 என்ற பாடலை பாட, அவனையே இமைக்காமல் பார்த்தாள் அனிதா. கணவனின் குரல் அவளை முழுவதுமாக அவனுள் இழுத்து செல்வது போல் ஓர் மாயை.

மனைவியின் பார்வையை உணர்ந்தவன் அவளை பாக்கவாட்டாக திரும்பி பார்த்து

“நாளாக நாளாக உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி,…” என்றான் காதலுடன்.

கணவனின் பேச்சில், சட்டென தன் நிலைக்கு வந்தவள் “ஏன் அதுக்கு முன்னாடி லவ் பண்ணலயா?..” ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டாள்.

மங்கையின் கேள்வியில் மெல்ல சிரித்தவன் “அப்ப லவ் பண்ணத விட இப்ப அதிகமா லவ் பண்றேன். காதலால சுயத்தை இழக்கறதுன்னு சொல்லுவாங்களே அது மாதிரி… எப்படி சொல்றது பைத்தியமா இருக்கேன் உன் மேல…” என்றான் கிசுகிசுத்த குரலில்

‘நீ என்மேல வைச்சு இருக்கற இந்த காதலால தான் மாமா, இந்த ஆப்ரேஷனை செய்ய ஒத்துகிட்டேன்…’ என நினைத்தவள்

“ஹான் ஹான்…”என வடிவேலு போல் பாவனை செய்ய, பக்கென்று சிரித்து விட்டான் அபிநயன்.

அரைமணி நேரத்தில் மருத்துவர் வந்துவிடுவார் எனக் கூறி ஒரு மணி நேரமான பின்பே மருத்துவர் மருத்துவமனையை வந்தடைந்தார் . அதற்கு பின் ஓவ்வொருவராக பார்த்து முடித்து அனிதா போகவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரமானது.

 சிறிது நேரம் என்றாலும் ஆப்ரேஷன் செய்ய தேவையானது அதற்கான நாள், எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என அனைத்தும் ஒன்றுவிடாமல் விசாரித்து வந்துவிட்டாள்.

“எப்ப சொன்னாங்க?..” மருத்துவரின் அறையிலிருந்து வெளி வந்தவளிடம் அவசரமாக கேட்டான் அபிநயன்.

“அதெல்லாம் இன்னைக்கே கூட பண்ணாலான்னு சொன்னாங்க. நான் தான் நாளைக்கு டேட் வேணும்னு கெட்டுப்வாங்கிட்டு வந்துட்டேன்” என்றாள் நாவல் கன்னத்தை தடவிக் கொண்டே…

“இன்னைக்கு பார்த்துட்டா வர வேலை மிச்சமாகும்ல” என்றவனிடம்

“ஆமா தான் ஆனால் இன்னைக்கு விட்டா நெக்ஸ்ட் டூ ஆர் த்ரீ வீக்ஸ் நீங்க பொறுமையா இருக்கணும். அதான் இன்னைக்கு நைட் இருந்துட்டு நாளைக்கு வரோம்ன்னு சொல்லிட்டு வந்தேன்..” என்றாள் கண் சிமிட்டி..

முதலில் அனிதா கூறியது புரியவில்லை அவனுக்கு. அது புரிந்ததும் கீழ் இதழ்களை அழுத்தி கடித்து கொண்டே கேசத்தை கோதியவன் “போலாமா?” எனக் கேட்க, கணவனின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே சரியென்றாள் அனிதா.

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இரண்டையும் மறந்து விட்டேன்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்