
அத்தியாயம் 35
இன்னும் கரெக்சன் ஒர்க் இருக்கு.. டைம் முடிஞ்சுடுமே அவசரமா போடறேன். Morng fulla படிப்போம் சரியா?
“ஐயோ…” மெல்லிய குரலில் அதிர்ந்து எழுந்து நின்றவள் அவசரமாக இதழ்களை துடைத்தாள்.
“ ஹேய் என்னாச்சு?” என்ற அபியின் குரலில் பின்னால் திரும்பி பார்த்தாள்.. முன்பு எப்படி அமர்ந்திருந்தானோ அப்படி தான் இப்பொழுதும் அமர்ந்திருந்தான்.
‘பிரம்மையா?’ என நினைத்தவள் மானசீகமாக தலையில் அடித்தபடி மீண்டும் அவனருகில் அமர, அவளை குறுகுறுவென பார்த்தான் அபிநயன்.
அவனது குறுகுறு பார்வையில் “அது லைட் பூச்சி மேலே வந்து விழுந்துடுச்சு சார்… அதான் பயந்துட்டேன்” என்றாள் மெல்லிய குரலில்
“ஓ…வாய்க்குள்ளையே விழுந்துடுச்சா?” புருவத்தை உயர்த்தி கேட்டான். அவள் இதழ்களை அவசரமாக துடைத்ததை அவனும் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்.
‘போச்சு… கவனிச்சிட்டு தான் இருந்திருக்கான்… நம்ம நினைச்சது மட்டும் அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்’ அவளது மனம் ஒரு பக்கம் பதறியது.
மனதின் பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
“ம்ம்…” என்று பெரிதாக தலையாட்டி வைத்தாள்.
அவள் தலையாட்டிய விதமும், இதழ்களை துடைத்த விதமும், ஓடிக் கொண்டிருந்த பாடலின் வரிகளும் அவள் என்ன நினைத்து பயந்தாள் என்ற செய்தியை சொல்லாமல் சொல்ல… வெறும் வாயிலேயே புரையேறியது…
அவசரமாக தலையை தட்டியப்படியே ஆனந்தியை பார்த்தான். அவளோ இன்னும் பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள். அவளையே இமைக்காமல் பார்த்தவனுக்கு கோபத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது…
அக்கணம்,
தென்றல் வந்து
என்னைத்தொடும்…
ஆஹா…
சத்தம் இன்றி முத்தமிடும்…
என்ற பாடல் ஒலித்தது… அந்த பாடலின் வரிகள் அபியின் இதழ்களில் வெட்க புன்னகையை பூக்க செய்திருந்தது.
நீண்ட மாதங்களுக்கு பிறகு தன்னவனின் வெட்க புன்னகையை கண்டதும் தென்றலாய் மாறி அவனைத் தழுவிக் கொண்டது மட்டுமல்லாமல் அதற்கு காரணமானவளையும் தழுவி சென்றாள் அவனது அம்மு.
அதே நேரம், தன் மனம் போன போக்கை நினைத்து அதிர்வோடு அமர்ந்திருந்த ஆனந்தியின் செவியில் “ஹேய் கேடி என்ன நினைச்ச?” என்ற அபியின் குரல் கேட்டது. உள்ளம் பதற, திடுக்கிட்டு பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஆடவனைப் பார்த்தாள்.
அவனோ கைகளை கல் திட்டில் ஊன்றி, கால்களை ஆட்டியப்படி மெல்லிய புன்னகையோடு அமர்ந்திருந்தான்… அந்த புன்னகையில் தான் எத்தனை வசீகரம்… பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு..
அக்கணம் ‘சீ ச்சீ…மானத்தை வாங்காத டி…கேட்க வேண்டியதை கேளு’ மனம் கண்டிக்க…
கண்களை இறுக மூடித் திறந்தவள்
“சார்” என்றழைத்தாள்..
“ம்ம்…” என்றபடி திரும்பியவனின் முகத்திலிருந்த வெட்க புன்னகை இவளை மொத்தமாய் சாய்த்திருந்தது…
‘நீ மயங்கி விழற அளவுக்கு அவன் ஒன்னும் வொர்த் இல்லை’ என்ற மனதின் தலையிலேயே ஓங்கி தட்டிவிட்டு அபியை பார்க்க, அவனோ “என்ன” என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி கேட்டான்.
அவனது புருவத் தூக்களில் பொத்தென்று விழத் துடித்த மனதை அடக்கியப்படி “என்கிட்ட ஏதாவது கேட்டீங்களா?” எனக் கேட்டாள்… புருவங்கள் சுருங்க
, இல்லை என்பதைப் போல் தலையாட்டினான்..

