Loading

மங்களூர், கர்நாடக மாநிலத்தின் அழகான கடற்கரை நகரம். நாட்டின் மிக முக்கியமான வர்த்தக தளம். 

 

இரண்டு அடுக்கு சின்ன பங்களாவில் மட்டும் இடத்திற்கு சம்மந்தமே இல்லாத  வகையில் தமிழ் கடவுள் முருகன் பாட்டு வீடு முழுக்க ஒலித்து கொண்டு இருந்தது.  வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்வது வெற்றிவேல், வீட்டின் தலைவர் ஐம்பதுகளின் தொடக்கம் வயது.  ஆனால் மிக சுறுசுறுப்பாக இருப்பார். 

 

விவான்  “ஓ… டேடி சொல்றதை ஏன் தான் நீங்க கேட்கவே மாட்டேன்கிறீங்க.  உங்க வயசுக்கு நல்லா ரெஸ்ட் தான் எடுக்கனும். இப்படி எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்ய கூடாது” என

 

“அதுக்கு நீயே ஒரு முடிவு கட்டலாம்.  கல்யாணம் பண்ணிக்கிட்டா வர மருமகள் வீட்டை பார்த்துக்க போகிறாள்.  கல்யாண வயசு வந்து தாண்டியும் போயிட்டே இருக்கு” என்ற தந்தையை கவலையுடன் பார்த்து கொண்டு  “அம்மாக்கு அப்புறம் நீங்க ஏன் யாரையும் கல்யாணம் கட்டிக்கலை” என்று கேட்க, 

 

“அவ இன்னும் இங்க தான் டா இருக்கா” என்று தன் இதயத்தை தொட்டு காட்டி விட்டு பின் “ஏன்டா சம்மந்தமே இல்லாததை எல்லாம் கேட்கிற”  என்றதும்

 

“நான் உங்க பையன்ப்பா” என்று மேலே எதுவும் பேசாமல் வெளியேறி விட்டான். அவன் சொன்னது புரியாமல் வெற்றி சிறிது நேரம் முழித்து விட்டு பின் தன் செல்ல மகளை காண சென்றுவிட்டார்.

 

வெளியே வந்தவனது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை இவ்வளவு நேரம் நன்றாக இருந்த அவனது உடல்நிலை இப்போது அவனின் பேச்சை கேட்கவில்லை. நெற்றியில் வழியும் வேர்வையை துடைத்து கொண்டு, அருகில் இருக்கும் மங்களாதேவி கோவிலுக்கு சென்றான். 

 

“எனக்கு வேண்டிய யாருக்கோ ஆபத்துனு என் உள்மனசு சொல்லுது. இப்படி தான் ஒரு வருஷம் முன்ன இதே மாதிரி தான் எதோ தப்பா நடக்கிற மாதிரி என் இதயம் துடிச்சிது. அப்ப நான் இழந்தது என்னனு உனக்கே தெரியும். இந்த முறை    யாருக்கும் எதுவும் ஆக கூடாது. என்னோட ஏஞ்சல் எங்க இருந்தாலும் நல்லா சந்தோசமா இருக்கனும்” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தான். 

 

“யாராவது ஆம்புலன்ஸிற்கு கால் பண்ணுங்க” என்று அந்த பெண் கூடி இருக்கும் மக்களிடம் சொல்லிவிட்டு “மேடம்!!! மேடம்!!! என்னை பாருங்க உங்களுக்கு ஒன்றும் இல்லை இப்ப நாம ஹாஸ்பிடல் போய்டலாம். எல்லாம் சரியாகிடும்னு நம்புங்க” என்று அவளின் கன்னத்தை தட்டிக் கொண்டே சொல்லும் நேரம் ஆம்புலன்ஸ் வந்து விட,  இவளை ஏற்றி கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றது அந்த ஆம்புலன்ஸ்.

 

அவள் பையில் இருந்து அவளின் போனை தேட போன் கிடைக்கவில்லை. ஆனால் அவளது அடையாள அட்டை இருந்தது. அதில் இருந்த நம்பருக்கு கால் செய்ய, 

 

“ஹலோ  யாருங்க” என்றதும், 

 

“சார் நீங்க ஹர்ஷிகா சொந்தமா  அவங்களுக்கு இங்க கோவில் பக்கத்தில் ஆக்ஸிடன்ட் ஆகி  கொஞ்சம் அடிப்பட்டு இருக்கு நாங்க பக்கத்தில் இருக்கிற  @@@ ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகிறோம். கொஞ்சம் அவங்க வீட்டில் சொல்லிடுங்க” என்று மறுமொழி கேட்கும் பொறுமை இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் ஹர்ஷியை எழுப்பி கொண்டு இருக்க, 

 

இந்த பக்கம் செய்தி கேட்ட பிரகாசம் அதிர்ந்து நின்றுவிட்டார்.  கணவரின் அதிர்ந்த தோற்றம் பயத்தை ஏற்படுத்த ஜோதி அவரிடம் “ஏங்க யாரு போனில் என்ன சொன்னாங்க.” என்ன பதட்டமாக கேட்க, 

 

“நம்ம ஹர்ஷிக்கு ஆக்ஸிடன்ட்…. ஹாஸ்பிடலுக்கு….” என்று மேலே பேச முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்ட,  “ஐய்யோ!!! என்னங்க சொல்றீங்க காலையில் தானே அவளுக்கு நல்லதை பற்றி பேசனோம். அதுக்குள்ள இப்படியா இருங்க சின்னவர் வீட்டில் இருக்காரானு பார்க்கிறேன்” என்று வேகமாக எதிர் வீட்டுக்கு ஓடினார். 

 

சித்ரா மதிய உணவை தயார் செய்து கொண்டு இருக்க, பக்கத்தில் இருக்கும் திண்டில் அமர்ந்து கொண்டு பம்பரமாக வேலை செய்யும் மனைவியின் அழகை ரசித்து கொண்டு இருந்தார் அருள். 

 

கணவனின் பார்வையை உணர்ந்து “இப்ப எதுக்கு புது பொண்டாட்டியை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க. வெட்டியா உட்காரமல் எதாவது உருப்படியான வேலையை செய்ங்க”  என்றதும், 

 

“உருப்படியான வேலை தானே செஞ்சிட்டா போச்சு” என்று சித்ராவை நெருங்கி போக, கையை அவர் மார்பில் வைத்து தடுத்து  “உங்க உருப்படியான வேலை என்னனு எனக்கு நல்லா தெரியும். பையனுக்கே கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சு இன்னும் நீங்க புது மாப்பிள்ளை கணக்கா நடக்கிறதை யாராவது பார்த்தா மானமே போகும்” என்று நெளிந்து கொண்டே சொல்ல, 

 

அவளை இழுத்து பக்கத்தில் இருக்கும் சுவற்றில் சாய்த்து “அவன் வளர்ந்தா நான் என் பொண்டாட்டியை லவ் பண்ன கூடாதா. என் வீட்டில் யாரு வந்து பார்க்க போற இப்ப ஒரே ஒரு கிஸ் கொடுப்பியாம் நானும் நல்ல பையனா போய்டுவேன்” என்று சிவந்து நிற்கும் மனைவியின் அழகை ரசித்து கொண்டே சொல்ல, 

 

“நீங்க எவ்வளவு நல்ல பையனு எனக்கு தெரியும். ஆளை விடுங்க முதலில் நகருங்க” என்றதும் அவளை மேலும் நெருங்கி வர  “ஐயோ அந்த பக்கம் நகர சொன்னேன்” என

 

“எனக்கு வேண்டியது கிடைச்சா நகருவேன் இல்ல எவ்வளவு நேரம் ஆனாலும் நகரும் ஐடியா எனக்கு இல்லை” என்று முறைப்பாக சொல்ல, 

 

“சரியான தலைவலியா இருக்கீங்க சரி கண்ணை மூடுங்க” என்றதும் அவனது கண்கள் மூடிக்கொள்ள, கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை வைக்க, 

 

“என்னடீ இது. இதுக்கு நான் சும்மாவே இருக்கலாம்” என்றதும் சித்ரா சிரித்து விட்டார். 

 

“சரி உனக்கு தெரிஞ்சா மாதிரி நீ கொடுத்த இப்ப எனக்கு தெரிஞ்சா மாதிரி ஒன்னு” என்று அவரின் இதழை நெருங்கும் நேரம், 

 

“சித்ரா!!! சின்னவர் எங்கமா” என்று பதட்டத்தில் வேகமாக சமையலறைக்குள் வந்தவர் இருவரும் இருக்கும் நிலை பார்த்து சங்கடத்துடன் வெளியே நின்றுவிட்டார். 

 

“அய்யோ… அக்கா பார்த்துட்டாங்க. என் மானமே போச்சே.  இனி என்னை வெச்சி கலாய்த்து தள்ளுவாங்க. போச்சே போச்சே” என்று புலம்பும் மனைவியின்  கன்னத்தில் முத்தத்தை வைத்து  “அண்ணி எதோ பதட்டமா வந்தா மாதிரி இருக்கு. நீ இப்படி புலம்பறதை விட்டு நாம அவங்களை போய் கவனிக்கலாம் வா” என்றதும் இருவரும் கூடத்திற்கு வர, 

 

ஜோதி கலங்கும் கண்களுடன் தயங்கி கொண்டு “சாரி மா உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றதும்  அருள் “அட அதை விடுங்க அண்ணி என்ன ஆச்சு ஏன் பதட்டமா வந்திங்க” என்றதும், 

 

“நம்ம ஹர்ஷிக்கு ஆக்ஸிடன்ட் பா” என்றதும் நிலைமையை சடுதியில் புரிந்து கொண்டு மற்றவர்களை அழைத்து கொண்டு அவர்கள் சொன்ன மருத்துவமனைக்கு வந்தனர். 

 

முதலில் சைதன்யாவிற்கு அழைக்க அவனது போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. அடுத்து கோயம்புத்தூரில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஜீவிகாவிற்கு அழைக்க, அவள் எடுத்ததும் விசயத்தை கூற அவள் உடனடியாக வருவதாக கூறினாள்.  டெல்லியில் படிக்கும் மிஷ்காவிற்கும் விசயம் பகிரப்பட்டது. அவள் இருப்பதோ டெல்லியில். உடனடியாக வர முடியாமல் தன் அக்காவிற்காக எல்லா கடவுளிடம் பிராத்தனை செய்தவள் சொந்த ஊர் செல்ல எதாவது வழி உள்ளதா என்று விசாரிக்க சென்றாள். 

 

மதியம் வரை ஆப்ரேஷன் நடந்து கொண்டு இருந்தது.  தான் ஒரு மருத்துவ மாணவி என்பதை மறந்து அக்காவிற்காக அழுது கொண்டே சில மணி நேரம் முன் டாக்டர் கூறிய விடயத்தை நினைத்து பார்த்தாள். 

 

“டாக்டர் அக்கா கண்டிஷன் எப்படி இருக்கு” என்றதும்,  “இப்போது எதுமே சொல்ல முடியாது.  கையில் சின்ன சிராய்ப்பு தான். வலது காலில் எலும்பு முறிவு. அதற்கு ஆப்ரேஷன் பண்ணிடலாம். பட் தலையில் கொஞ்சம் பலமான அடி ஸ்கேன் பண்ணா தான் எந்த அளவுக்கு காயம் இருக்குனு சொல்ல முடியும். ஹோப் பார் தி பெஸ்ட்”  என்று சென்றுவிட்டார். 

 

“அப்பாடா ஒரு வழியா மீட்டிங் முடிஞ்சிது. இதுக்கு போய் நம்மை ஒரு வாரமா படுத்தி எடுத்தாங்க. என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன யோசிச்சிட்டு இருக்க” என்ற கிஷோரிடம், 

 

“வீட்டில் இருந்து நிறைய கால் வந்து இருக்குடா. இரு நான் அம்மாக்கு கால் பண்ணிட்டு வரேன்” என்று தனது அன்னைக்கு அழைக்க, 

 

“கண்ணா எங்க இருக்கடா காலையில் இருந்து எத்தனை முறை கால் பண்றது. இங்க ஹர்ஷிக்கு ஆக்ஸிடன்ட் டா. கொஞ்சம் வரியா” என்றதும்

 

“ம்மா…. எப்ப? நான் உடனே வரேன்” என்று அப்போது இருந்த சென்னை டூ கோயம்புத்தூர் விமானத்தை பிடித்தவன் மாலையில் மருத்துவமனையில் இருந்தான். 

 

சைதன்யாவை பார்த்ததும் பெற்றோர்களுக்கு சற்று தெம்பு வந்தது. பெற்றவர்கள் கவலையில் இருக்கும் போது பிள்ளைகளின் ஆறுதல் வார்த்தை தான் மலையளவு நம்பிக்கை தரும். 

 

ஐசியுவில் இருக்கும் அக்காவை பார்க்க காலையில் தான் பேசியதின் விளைவு என்று நன்றாக தெரிந்தது. அதை உறுதி செய்யும் விதமாக விசாரணைக்கு வந்த காவலர் “எதாவது பிரச்சினை என்றால் என்னவென்று அவங்க கிட்ட கேட்கிறது தானே. அவங்க வந்தது ராங் சைட்.  லாரி டிரைவர் மேல தப்பு சொல்ல முடியாது பா.  ஹைவே எல்லா வண்டியும் வேகமாக தான் வரும். ஆனால் வண்டியை நிற்காமல் போனது ரொம்ப தப்பு. கண்டிப்பா அதுக்கு ஆக்ஷன் எடுப்போம்” என்றதும், 

 

தன்னை சுற்றி பார்த்தான் தன் வீ்ட்டார் யாரும் அருகில் இல்லாததை உணர்ந்து “சரிங்க சார் நான் பார்த்துக்கிறேன். கேஸ் எதுவும் போட வேண்டாம். அப்பறம் வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றதும் அந்த காவலரும் நிலைமையை புரிந்து கொண்டு சென்றுவிட்டார். 

 

ஹர்ஷிகாவிற்கு ஆப்ரேஷன் நடந்த பின்னும் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதை பற்றி டாக்டரிடம் கேட்க “எங்களால முடிச்சதை  பண்ணிட்டோம். பட் அவங்க மனசும் உடம்பும் அதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கனும்.  உயிர் வாழனும்னு அவங்களுக்கு ஆசையே இல்லை போல. எதுக்கும் அவங்க உடம்பு ஒத்துழைப்பு கொடுக்க  மாட்டேன்கிறது.  இன்னும் 48 மணி நேரத்தில் அவங்க கண் விழிக்கவில்லைனா காப்பாற்றது ரொம்ப கஷ்டம். நீங்கள் எல்லாரும் அவங்க கிட்ட பேசுங்க” என்றதும் எல்லாரும் பேசி பார்த்தார்கள். எதுக்கும் அவளிடம் எந்த அசைவும் இல்லை. கடைசியாக சைதன்யா  “அக்கா…. ப்ளீஸ் எழுந்து வா. என் கிட்ட கேட்டதை நான் எப்படியாவது கொடுக்கிறேன் வாக்கா. வரேன் கா நீ கேட்டதோட வரேன்” என்று வெளியே வந்தவன் என்ன செய்யலாம் என்ற யோசனையே பெரியதாக இருந்தது. 

 

“அம்மா வீட்டு சாவி தாங்க. நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன்” என்று வீட்டிற்கு வந்தான்.  தன்  அக்கா கேட்டதை கொடுக்க முடிவு செய்து விட்டான். தேட போவது கிடைக்குமா என்று எல்லாம் அவன் யோசிக்கவில்லை. கண்டிப்பா தேடியே ஆக வேண்டும். 

 

முதலில் அவன் அழைத்தது பெங்களூருவில் எட்டு ஆண்டுகள் முன்பு அந்த  போட்டியை நடத்திய நிறுவனத்திற்கு அழைக்க, அவர்களிடம் போராடி அந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரது விவரத்தை கேட்க, அவர்கள் கலந்துகொண்ட கல்லூரி பெயர் மற்றும் கலந்து கொண்ட மாணவர் பட்டியல் மட்டுமே கொடுக்க, 

 

கிஷோர்க்கு அழைத்து  “கிஷோர் ஒரு உதவிடா ஐஐடி போய் ஒருத்தர் போன் நம்பர் இல்ல வீட்டு அட்ரஸ் எதாவது கிடைக்குமானு பார்க்கறியா” என

 

“சரிடா எந்த இயர் என்ன டிபார்ட்மென்ட் பெயர் சொல்லு” என

 

“எல்லாரும் இருக்கிற பெயர் லிஸ்ட் இருக்குடா. எட்டு வருசம் முன் பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியில் கலந்துக்கிட்டாங்க.  பிஜி டா பட் அந்த டைம்ல முதலாம் ஆண்டா இல்ல கடைசி ஆண்டானு தெரியலை டா. ப்ளீஸ் டா என் அக்கா எனக்கு உயிரோட வேண்டும். அதுக்கு இங்க அவங்க வரனும்டா” என்று கலங்கிய குரலில் சொல்ல, 

 

“கண்டிப்பாக டா. கவலைப்படாத அக்காவிற்கு ஒன்றும் ஆகாது” என்று வைத்தான். நாளை வரை காத்திருக்க வேண்டும். இந்த இரவில் கிஷோரும் தான் என்ன செய்வான். 

 

காலையே தன் அணைத்து வேலையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் நண்பன் சொன்னதை பார்க்க சென்றான் கிஷோர்.  கடைசியாக தேடியது கிடைக்க, கிடைத்த நொடியே நண்பனுக்கு பகிர்ந்து விட்டான். 

 

ஜோதி  “ஏங்க புள்ள இன்னும் கண் விழிக்காமல் இருக்கா  டாக்டர் வேற  48 மணி நேரம் சொன்னார். ஒரு நாள் கண்ணு முடி திறக்குள்ள முடிஞ்சிப்போச்சு. இன்றைக்கு அவ கண்ணை திறக்கனும்…. இல்லைனா நம்ம  என்ன பண்றது ரொம்ப பயமா இருக்கு” என

 

சித்ரா “அக்கா நம்ம யாருக்கும் தீங்கு நினைச்சது இல்லை.  ஹர்ஷி  நம்ம வீட்டு மகாலட்சுமி அக்கா. அவளுக்கு எதுவும் ஆகாது” என்று சமாதானம் சொன்னாள். 

 

நேரங்கள் கடந்ததே தவிர எந்த மாற்றமும் இல்லாததால் பெரும் கவலையுடன் அசைவின்றி இருக்கும் ஹர்ஷியை சுற்றி குடும்பத்தார் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர். 

 

ஜீவிகா “அக்கா எழுந்து வா நம்ம இந்த லீவில் நீ எப்பவும் கேட்பியே கேரளா போகணும்னு இந்த முறை கண்டிப்பாக போகலாம் வாக்கா” என

 

ஜோதி  “எனக்கு கல்யாணம் ஆகி சில வருடத்திற்குள்ளே பிள்ளை இல்லைனு என்னை மலடினு இந்த ஊரே தூற்றும் போது, நான் இருக்கேன்மானு எனக்குள்ள உதித்த தேவதைடா நீ…. நீ இல்லைனா அம்மாவால் மட்டும் நிம்மதியா இருக்க முடியுமா” என்று கண்ணீருடன் சொல்ல, 

 

சித்ரா  “குட்டி நீதானே என்னோட பெஸ்ட் ப்ரெண்ட். எனக்கு இருக்கிற ஒரே ப்ரெண்டும் நீ தான்டா. திரும்ப என் கிட்ட வந்திடுமா” என

 

தந்தைமார்கள் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் கண்ணீரில் கரைந்தனர். 

 

டாக்டர்  “இப்ப வரை இவங்க எதுமே ரியாக்ட் பண்ணலை. இவங்களுக்கு பிடிச்சவங்க யாரையாவது வர சொல்லி பேச சொல்லுங்க. நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு” என்று சென்று விட, 

 

ஜீவிகா  “ப்ரோ எங்க அவங்களை பேச சொல்லுங்க” என்றதும் தான் காலையில் இருந்து சைதன்யாவை யாரும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்தனர். 

 

அருள்  “இந்த பையன் இந்த மாதிரி நேரத்தில் நம்ம கூட, ஹர்ஷி கூட இல்லாமல் எங்க போனான். பொறுப்பே இல்லை வயசு ஏற ஏற பொறுப்பு வரும்னு பார்த்தா இருக்கிறதும் போகுது” என்று திட்டும் நேரம் யாருடனோ உள்ளே நுழைந்தான். 

 

வீட்டினர் கேள்வியுடன் அவனை நோக்க அதை உணராமல் கூட வந்தவரின் கையை பற்றி தன் அக்கா முன்பு நிற்க வைத்தவன்  “அக்கா!!! நீ என் கிட்ட கேட்டியே இதோ கொடுத்துட்டேன். கண்ணை திறந்து பாருக்கா” என்று பக்கத்தில் இருந்தவரை பார்த்து  “ப்ளீஸ்ங்க நீங்க கொஞ்சம் பேசுங்க” என்றதும், 

 

அவள் படுத்திருக்கும் மெத்தையை நெருங்கியவன் தளர்ந்து தரையில்  முட்டியிட்டு அமர்ந்து “ஹரி!” என்று அவளின் கைகளை பற்றி கொண்டு  “நா… நான் விவான் மா. கண்ணை திறந்து பாரு எனக்காக எட்டு வருசமா வெய்ட் பண்றியாமே. ஸாரிமா இந்த மரமண்டைக்கு தெரியலை. இப்ப என்னை விட்டு போய் என்னை தனிமரமா மாற்றிடாதே” என்றவனது கண்ணீர் அவள் கையில் விழ, சலனமற்று கிடக்கும் அவளை காண முடியாமல் எழுந்து வெளியே செல்ல திரும்பும் போது அதிர்ந்து சிலையானான். 

 

மந்திரங்கள் தொடரட்டும் 

நிலானி 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்