
பிறை எபிலாக்
பத்து மாதங்களுக்கு பிறகு..
ஆரத்தி கரைத்த தட்டுடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள் பார்கவி. அவளோடு சரண், திவாகர், சிவானந்தம் இருந்தார்கள்.
மஞ்சள்வயல் கிராமத்தில் அவர்களது வீடே அத்தனை கோலாகலமாக காட்சி அளித்தது.
ஆதிதேவ் – பிறைநிலா அவர்களின் தவப்புதல்வன் இன்று மருத்துவனையில் இருந்து வீட்டிற்கு வர இருக்கிறான். அந்த குட்டி இளவரசனை வரவேற்க தான் இத்தனை ஆர்பாட்டம்.
வெடி வெடிக்கும் சத்தத்தில் வீட்டில் அனைவரும் அவர்களது வருகையை அறிந்து தயாராக இருக்க.. ஆதியின் கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.
காரில் இருந்து மெதுவாக இறங்கி வந்தாள் பிறை. அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்தான் ஆதி. பிரசவத்தின் இறுதி நிலையில், பனிக்குடம் உடைந்து சிக்கல் ஆனதால் அவளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடந்தது.
” ரொம்ப பெயின்னா இருக்கா மூன் ”
” அதெல்லாம் இல்ல.. நானே நடந்துடுவேன் தேவ் ” என சங்கடமாக அனைவரையும் பார்த்து வைத்தாள் பிறை. குடும்பமும், ஊரில் அக்கம் பக்கம் உள்ளவர்களும் அங்கே இருக்க.. இடுப்பில் ஒரு கையும் , தோளில் ஒரு கையும் என நின்று கொண்டிருந்தான் ஆதிதேவ்.
பிங்க் வண்ண நிறத்தில் ரோஜா பூவாக சிரித்து கொண்டிருந்தான் அவர்களது குட்டி இளவரசன்.
” அச்சோ அண்ணி.. கியூட் தான் போங்க.. என் மருமகன் அப்படியே என்னைய மாதிரி ” என பார்கவி அவர்களுக்கு ஆரத்தி சுற்றி, பொட்டு வைத்து உள்ளே அனுப்பினாள்.
வாசலில் குதித்து மகிழும் மனைவியையும்.. கிராமத்திற்கு வந்ததால் புடவையும், மல்லிகை மலரையும் சூடிக் கொண்டு குதித்தவளை ஆர்பாட்டம் இல்லாது அவனது விழிகள் கொள்ளை கொண்டது.
வாசலில் ஆரத்தியை ஊற்றி விட்டு திரும்பியவள்… ” என்ன இங்கேயே நிக்கிறீங்க.. உள்ள வாங்க.. ” என சிரிப்புடன் உள்ளே செல்ல.. மந்திரத்திற்கு கட்டுப் பட்டவன் போல மனைவியின் பின்னால் சென்றான் சரண்.
கல்யாணம் முடிந்த இத்தனை மாதங்களின்.. அவளிடம் நட்பாக பழகினானே தவிர.. மனைவியாக அவளை அணுகவில்லை. அவளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கி கொடுப்பான். அவளோடு ஒன்றாக ட்ரிப் செல்வதும், படத்திற்கு செல்வதும், விடுமுறை நாட்களில் அவளது வீட்டிற்கு அழைத்து செல்வான்.
இத்தனையும் மனைவிக்காக செய்தாலும்.. அவளது மனதை அறிந்து விலகியே காதலிக்க தொடங்கினான்.
முதல் ஒரு மாதம் அவளுக்கு சற்றே தயக்கமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த மாதங்களின் சரணின் செயல்களே அவளை தயக்கத்தில் இருந்து வெளிக் கொண்டு வந்தது. அவளே அவனிடம் அனைத்தையும் உரிமையாக கேட்கும் அளவிற்கு அவளுக்கான இடத்தை கொடுத்தான். சுகமாக அவளது காதலையும் சுமக்க ஆரம்பித்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனம் அவனிடம் தொலைய தொடங்கியது.
அவன் பார்க்காத நேரம் இவள் பார்ப்பதும், இவள் பார்க்காத நேரம் அவன் பார்ப்பதும் என கள்ளப்பார்வையில் களவாடிக் கொண்டிருந்தார்கள்.
சரணுக்கு தந்தை மட்டும் தான். சரண் வீட்டிற்கு சென்றதில் இருந்து சரணை விட அவனது தந்தையுடன் தான் அத்தனை நெருக்கம். மகளை போல பாவித்தவரை எப்படி மனம் ஏற்காமல் போகும்.. வீட்டில் இருவரும் சேர்ந்து சமைப்பது. மருமகளுக்கு தெரியாத உணவுகளை எப்படி செய்வது என சொல்லி கொடுத்தார்.
இளமையிலேயே மனைவியை இழந்ததால், அவருக்கு சமையல் செய்யும் நிலைமை வந்தது. அப்போது கற்றுக் கொண்டார். தற்போது மருமகளுக்கு புது புது உணவுகளை எல்லாம் கற்றுக் கொடுத்ததுடன்.. சரணுக்கு பிடித்த உணவுகளையும் செய்ய வைத்து அசத்தினார்.
ஏனோ மாமனாரை அத்தனை பிடித்தது. மாமா என்று வாயால் அழைத்தாலும், மனதில் அவளுக்கு தந்தையாக திகழ்ந்தார்.
சரண் வீட்டில் இருந்து கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தவன்.. அவளை நீச்சல் பயிற்சியிலும் சேர்த்து விட்டான். வெகு ஆர்வமாக அனைத்தையும் கற்றுக் கொண்டாள்.
இதோ அண்ணனின் மகனை அழைக்க.. அண்ணியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
திருமணம் ஆனதில் இருந்து சல்வார் அணிந்து கொண்டிருந்த மனைவி.. இன்று கிராமத்து மண்வாசனையில் புடவையில் சுற்றி திரிய.. பார்க்க இரண்டு கண்கள் போதாத நிலையில் இருந்தான் சரண்.
உள்ளே வந்ததும் அனைவரும் குழந்தையை பார்த்து மகிழ்ந்து போனார்கள்.
” மா.. நீங்க குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் பிறையை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வச்சிட்டு வரேன் ” என அவளை மெல்ல நகர்த்தி கீழே மாற்றப்பட்டிருந்த அவளது அறைக்கு அழைத்து சென்றான்.
அலுங்காமல் அவளை மெல்ல மெத்தையில் அமர வைத்து, முதுகிற்கு தலையணை வைத்து விட்டு, குளியலறைக்கு சென்று வந்தவனோ.. அவளுக்கும் முகத்தை துடைத்து விட்டு.. சற்றே புத்துணர்வு கொண்டு வந்தான்.
கணவன் செய்யும் பணிவிடைகளை கண் இமைக்காது பார்த்து வந்தாள். மனைவியின் பார்வையை உணர்ந்தவனோ.. ” என்ன டி இப்போதான் ஒண்ணு ரிலீஸ் பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்திருக்கோம்.. அதுக்குள்ள அடுத்ததுனா தாங்காது டி.. ” என அவளது கள்ளப் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு கூறினான்.
” ஆசை தான்… நான் ஒன்னும் அதுக்காக எல்லாம் பார்க்கல .. அந்த ஷூட்டிங் மட்டும் நடக்காம இருந்திருந்தா நீங்க எனக்கு கிடைச்சிருக்க மாட்டீங்க தேவ்.. அதை விட அவன் என்னைய கடத்திட்டு போன இடத்தில.. என்னோட வாசனையை திருட என்னோட பாதி டிரஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டான்.. அந்த நிமிஷத்துல தான் நீங்க வந்து என்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்தீங்க.. அப்படி நீங்க வந்ததுனால தான் .. நம்ம ரெண்டு பேரையும் பத்தி வதந்தி பரவுச்சு.. அதுனால நமக்கு கல்யாணமும் ஆச்சு.. நீங்களும் எனக்கு கிடைச்சீங்க ” அவர்களது திருமணத்திற்கு அவளே ஒரு கதை கூறினாள்.
” அந்த ஷூட்டிங் நடக்கலைனாலும் உன்ன தான் கல்யாணம் பண்ணிருப்பேன் மூன் ”
அதிர்ந்த விழிகளோடு அவனை பார்த்தவள்.. ” எப்படி .. ” என கேட்டாள்.
” உன்ன முதல்ல சென்னைல பார்க்கும் போதே ஒரு ஃபீல்.. ஆனால் அதுக்கு அப்பறம் நடந்த இன்சிடென்ட் எல்லாம் என் மனசை உடைச்சு உன் பக்கம் சாய வச்சிடுச்சு.. அந்த கோவில்ல தீ பத்தின அப்போ, என்ன பத்தி நீ டிரெஸ்ஸிங் ரூம்ல பேசுன காசிப், அதுக்கு அப்பறம் என் வீட்டுக்கு பூஜைக்கு வந்த அப்போ நமக்குள்ள நடந்த அந்த நெருக்கம் எல்லாமே உன்கிட்ட நெருங்க வச்சிச்சு.. இதுவரைக்கும் யாரு மேலயும் வராத ஃபீல் உன் மேல தான் வந்துச்சு.. இந்த ஷூட்டிங் இல்லைனாலும்.. நானே காரணத்தை கிரியேட் பண்ணி உன்ன கல்யாணம் பண்ணி தூக்கிருப்பேன் மூன்.. ”
” எங்க அப்பா சம்மதம் சொல்லலைனா ”
” கடத்திருப்பேன் ” தோளை குலுக்கினான்.
” அப்போ அதுக்கு என் சம்மதம் வேணாமா ” சற்றே காட்டமாக கேட்டாள்.
” நீ என்னைய பர்ஸ்ட் டைம் பார்க்கும் போதே பிளாட் ஆகிட்டன்னு எனக்கு தெரியும் டி.. சும்மா சீன் போட்டுட்டு சுத்தின.. உன் பிரெண்ட் சுஷ்மிதா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா ” என்றதும் தோழியை நினைத்து பல்லை கடித்தாலும்.. வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
” காட்.. மூன்.. நான் ரொம்ப நல்லவனா இருக்க நினைக்கிறேன்.. யூ சேன்ஞ் மை மூட் இடியட் ” என மனைவியிடம் நெருங்க துடித்த மனதையும் உடலையும் கட்டு படுத்திக் கொண்டு முறைக்க.. அதற்குள் வெளியே அவனது மகன் அழுகும் குரலில் அவனை வாங்கி வந்து அவளிடம் கொடுத்து விட்டு, ஆழ்ந்து அவளது நெற்றியில் இதழ் பதித்து விலக.. அவனது சட்டை காலரை பிடித்து அவனது உதட்டில் முத்தம் வைத்து அவனை அதிர வைத்தாள் அவனது மனையாள்.
ஒரு வாரம் அண்ணன் மகனோடு ஆசைதீர இருந்து விட்டு, சென்னை வந்து சேர்ந்தாள் பார்கவி. ஏனோ ஒரு வாரமாக அந்த குட்டி இளவரசன் அவளை வசியம் தான் செய்து விட்டான்.
வந்ததில் இருந்து அவனை பற்றிய பேச்சில் இருந்து அவள் சற்றும் இறங்கி வரவில்லை.
” மாமா.. இந்நேரத்துக்கு அவனுக்கு பசிச்சிருக்கும்.. அண்ணி பால் கொடுத்திட்டு இருப்பாங்க.. குடிச்சதும் அவன் என்னைய தேடுவான்.. அவனுக்கு எப்பவும் பேசிகிட்டே இருக்கனும்.. அப்படியே பார்த்துட்டே இருப்பான் ” என வாய் ஓயாமல் அவனை பற்றி பேசும் மருமகளை சிரிப்போடு பார்த்தவர்..
” உன் அண்ணன் மகனை ரொம்ப தேடுதோ மா ” என கேட்டார்.
” ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன் மாமா.. ”
” சீக்கிரமே நீயும் ஒரு பிள்ளையை பெத்துக்கோ மா.. இதே மாதிரி அந்த பிள்ளையையும் பார்த்துக்கலாம்.. பொட்ட பிள்ளைய பெத்தா உன் அண்ணன் மகனுக்கே கட்டி வச்சிடலாம் ” என கூடவே யோசனையும் வழங்க.. மாமனாரின் பதிலில் சற்றே அதிர்ந்தவளுக்கு.. சரணை நினைத்து கன்னங்கள் சிவந்தி விட.. அப்போது தான் வேலை விட்டு வந்தவனும் இவர்களது உரையாடலை கேட்டு மனைவியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
மாமனாருக்கு பதில் அளிக்காமல் மெல்ல அங்கிருந்து நழுவி அறைக்குள் சென்று விட்டாள் பார்கவி. அவளுக்கும் அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது தான். ஆனால் முதலில் அவனிடம் இதை பற்றி பேச தயக்கம்.
மெல்ல அவனும் அறைக்குள் வந்தவன்.. மனைவியின் யோசனையான முகத்தை பார்த்து.. ” என்ன விஷயம் பாரு.. இவ்வளவு சீரியஸா யோசிக்கிற ”
அதே யோசனையில்.. ” எனக்கு பாப்பா வேணும் … ” என சட்டென கேட்டு விட்டவளுக்கு.. கேட்ட பின்பு தான் விளைவுகள் விளங்கியது.
‘ ஐயோ என்ன டி பார்கவி.. இப்படி பண்ணிட்ட.. பச்சையா கேட்டு வச்சுட்ட.. உன்ன பத்தி அவரு என்ன நினைப்பாரு ‘ என ஓரப்பார்வையில் அவனை பார்த்தாள்.
” அது.. வந்து.. வந்து.. ஊர்ல இருந்து வந்ததுல இருந்து.. குட்டி பையன் நினைப்பா இருக்குங்க.. அதான்.. அது.. அதான்.. சொன்னேன்” திணறினாள்.
அமைதியாக அவளை பார்த்தவன்.. மெல்ல அவளருகில் நெருங்கி.. குனிந்திருந்த அவளது தலையை நிமிர்த்தி.. ” இங்க என்னைய பாரு.. இதுவரைக்கு உன்ன மீறி ஏதாவது நடந்திருக்கா” அமைதியாக கேட்ட கணவனை நிமிர்ந்து பார்த்தவள்.. ‘ இல்லை ‘ என்பதை போல தலை அசைத்தாள்.
” ம்ம்.. இனிமேலும் அப்படித்தான்.. உன்ன மீறி உன்ன தொட மாட்டேன்.. உனக்கு எப்போ நம்ம சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெத்துக்கனுனு தோணுதோ.. அப்போ பார்த்துக்கலாம்.. ஆனால் ரொம்ப லேட் பண்ணிடாத டி.. நான் பாவம் ” என்றவனின் இறுதி வார்த்தையில் , அவள் முகம் புன்னகை புரிந்தாலும்.. எதுவும் பேசவில்லை.
” அப்பா அப்படித்தான் ஏதாவது சொல்லுவாரு.. நீ எதையும் யோசிக்காத ” என துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றவனை தடுத்தது பார்கவியின் வார்த்தை.
அப்பா என்றதுமே அவன் அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு விட்டான் என தெளிவாக தெரிந்தது. ” மாமா சொல்றதுல என்ன தப்பு.. அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல” எப்படியோ மூச்சை பிடித்துக் கொண்டு பேசி விட்டாள்.
குளியலறை வரை சென்றவனது பாதங்கள் அப்படியே நின்றது. மனம் உணர்ந்த உண்மையை அவனுக்கு ஏற்றுக் கொள்ளவே நேரம் பிடித்தது.
” இப்போ என்ன சொன்னா பாரு.. ” என வேகமாக திரும்ப.. அவனை பார்க்காமல் சட்டென எதிர்ப்புறம் திரும்பிக் கொண்டாள் பார்கவி.
இரண்டே எட்டில் அவளை நெருங்கியவனோ.. ” மாமாவுக்கு மட்டும் தான் ஆசையா… இல்ல…. ” என அவளது கையை பிடித்தவனை பார்க்க முடியாமல்.. சட்டென திரும்பி அவனது மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.
மனைவியின் ஆசையும் புரிந்து போனது.. இதற்கு மேல் வாழ்க்கையை தொடர தாமதிக்க வேண்டுமா என்ன.. ” குளிச்சிட்டு வரேன் டி… ” என அவளை விட்டு வேகமாக குளிக்க சென்றான்.
பின் இருவரும் சாப்பிட சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு முன்பே மாமனாரும் மருமகளும் உணவை தயாரித்து வைத்ததால்.. மூவருமே அமர்ந்து உணவுண்டு கொண்டிருக்க.. பார்கவிக்கு உணவு இறங்காமல் சதி செய்தது.
” நீ இன்னைக்கு ஒழுங்காவே சாப்பிடல.. இன்னும் ரெண்டு போட்டுக்க … ” என மாமனார் அதட்டி வைத்த இட்லியை மெல்ல முடியாமல் மென்று தின்றாள். ஆசை இருந்தாலும் பயம் அதை விட அதிகமாக இருந்தது.
இரவுணவை முடித்துக் கொண்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட.. பார்கவியும் பயத்தோடு உள்ளே வந்தாள்.
மனைவி உள்ளே வந்து கதவை தாழிடுவதை பார்த்தவன்.. ” பாரு.. நீ கொடுக்கிற ரியாக்ஷன் பார்த்தா எனக்கே பயமா இருக்கு டி.. நான் ஏதோ ரேப் பண்ண போற பீலிங் வருது.. ” என்றதும் சிரித்துக் கொண்டே அருகில் வந்தவள்..
” இல்ல இல்ல.. அது பர்ஸ்ட் டைம் அதான் கொஞ்சம் பயம்..”
” எனக்கு மட்டும் இது நூறாவது டைமாக்கும் ”
அவனது கூற்றில் அதிர்ந்து பார்த்தவள்.. பின் சட்டென சிரித்து வைத்தாள்.
” எனக்கு என்னமோ உன்ன சுடிதார், நைட்டில பார்த்து பார்த்து போர் அடிச்சிடுச்சு டி.. கொஞ்சம் சேலை எல்லாம் கட்டு அப்ப அப்போ…”
” ஏன் உங்களுக்கு சேலை பிடிக்குமா ”
” ம்ம் ரொம்ப ”
” ஓ ” என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு முக்கியமான ஒரு கால் வந்து விட..
” பேசிட்டு வரேன்.. ” என போனை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டான்.
கால் மணி நேரமாக பேசி விட்டு அறைக்குள் வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சியாக.. சேலையில் அமர்ந்திருந்தாள் பார்கவி.
அவன் வந்ததும்.. எதிர்பார்ப்புகளோடு.. ” இந்த புடவை எனக்கு எப்படி இருக்கு.. நல்லா இருக்கா.. ” என புடவையை சரி செய்து கொண்டு கேட்டாள் பார்கவி.
அவளை மேலிருந்து கீழ் வரை கண்களால் அலசி ஆராய்ந்தவன்.. ” ம்ம்.. ” என தொண்டையை செருமி கொண்டு பேசினான்.
” இந்த ஊக்கை மட்டும் இங்க குத்தி விடுங்களேன்.. சேலை நிக்க மாட்டிது ” என ஊக்கை கொடுக்க.. அதை கையில் வாங்கியவனோ..
” இன்னைக்கு இந்த ஊக்கு தேவைப்படாது பாரு.. ” என அவளை இழுத்து கைவலைவில் வைத்தவன்..
” ரொம்ப அழகா இருக்க டி.. ” கணவனது கரங்கள் மெல்ல மெல்ல முகத்தை வருடி.. கண், காது, மூக்கு, உதடு என ஓவ்வொரு பாகத்தையும் தொட்டு தடவி மோட்சம் அடைந்து கொண்டிருந்தது.
” கிறங்க வைக்கிற… ” என அவளை அப்படியே மெத்தையில் சரித்து இருந்தான்.
” பாரு.. எதுக்கு டி இத்தனை ஊக்கு போட்டு வச்சிருக்க.. ”
ஊக்கு வாங்கியவனின் விரல்கள்,
சேலையைத் தொடும் முன்பே அவளது இடுப்பின் சூட்டை உணர்ந்தது.
“இன்னைக்கு இந்த ஊக்கு தேவையில்லை பாரு…”
அவன் குரல் கிசுகிசுப்பாக மாற,
அவள் மூச்சு தாளம் தவறியது.
” சேலை நிக்காது… அதான் குத்தி வச்சேன் “.. மேல் மூச்சு கீழ் மூச்சி வாங்கியது.
” கழட்ட போற சேலைக்கு இத்தனை ஊக்கு தேவையா டி… மக்கு பொண்டாட்டி ” என ஒவ்வொன்றாக கழட்டி அருகில் இருந்த மேஜை மீது வைத்தவன்..
” இன்னும் எங்கயாவது ஊக்கு குத்தி இருக்கியா டி ” பொறுமை இழந்தவனாக கேட்டான்.
” அவ்வளதாங்க ” என்றவளுக்கு வெட்கம் வரிசை கட்டி வந்தது.
” அப்போ கழட்டிடலாமா ” அனுமதி கேட்டுக் கொண்டே ஆடையில் கை வைத்தவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் பார்கவி.
விளக்கு அணைந்த பிறகு,
அவர்களுக்குள் இருந்த தூரம் தான் முதலில் கரைந்தது.
“பாரு… பயமா இருக்கா?”
அவன் கேட்ட குரலில் ஆசை மட்டும் இல்லை… கவனமும் இருந்தது.
அவள் அவன் மார்பில் முகம் புதைத்தபடியே மெதுவாக,
“இல்ல… நீங்க இருக்கீங்கள்ல…”
அந்த ஒரு வரியில் அவனுக்கு கிடைத்த நம்பிக்கை
எந்த ஆசைக்கும் மேலானது.
மொத்தமாக அனைத்திற்கும் விடுதலை அளித்து, அவளை விடிய விடிய ஆட்சி செய்தவனோ.. விடிந்த பின்னரே ஓய்ந்து போனான். இத்தனை நாள் காக்க வைத்ததற்கு பலமாக கணவனுக்கு ஈடு கொடுத்து அவனோடு விடியலில் உறங்கி இருந்தாள் பார்கவி.
மொத்தமாக அவளை கொள்ளை கொண்டவனோ… தன்னுடைய இத்தனை வருட பிரம்மச்சாரிய விரதத்தை முடித்த நிம்மதியில் அவளை அனைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரைக்கு சேர்ந்திருந்தான்.
இரவு முழுக்க நடந்தது உடல்களின் சங்கமம் மட்டும் அல்ல…
இரு மனங்களின்,பழைய நிழல்களை தள்ளி வைத்து
புதிய வாழ்க்கைக்கு கையொப்பமிட்ட தருணம்.
சஹானா சனா💖
கேட்ட மாதிரியே எபிலாக் கொடுத்துட்டேன். ஹாப்பியா… படிச்சுட்டு சொல்லுங்க மக்களே..💝💝

