
மறக்கவில்லைடா தாயாய் மாறி எனை தாங்கிய உன்னை
மறக்கவில்லைடா குழந்தையாய் மாறி சேட்டை செய்த உன்னை
மறக்கவில்லைடா ஈரமான கூந்தலோடு உன் முன்னே வர திட்டி தலைத்துவட்டிய உன்னை
மறக்கவில்லைடா தோல்வியில் துவண்ட போது தைரியம் தந்த உன்னை
மறக்கவில்லைடா நட்சத்திரங்களோடு போட்டி போட்டு
புன்னகை புரிந்த உன்னை
மறக்கவில்லைடா என் வலியை பிரிபலித்த உன்னை
மறக்கவில்லைடா வழி தவறிய போது கைப்பிடித்து வழிநடத்திய உன்னை
மறக்கவில்லைடா அழும் போது புன்னகைக்க வைத்த உன்னை
மறக்கவில்லைடா கோவம் கொண்டு சென்ற போது ஒற்றைக்கண் சிமிட்டி கோவம் மறக்க வைத்த உன்னை
மறக்கவில்லைடா கண்ணீரை தந்துவிட்டு சென்ற உன்னை
மறக்கவில்லைடா உன் நினைவுகளை
மறக்கவில்லைடா உன்னோடு கழிந்த பொழுதுகளை
கண் மூடும் முன்னே வந்துவிடு
உன்னை சுமந்த நெஞ்சம் மறப்பதில்லை உன்னை….
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


sema baby
❤️❤️❤️❤️