6. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
மதுரா அவனையே சந்தேகமாக பார்த்தபடி படிகளில் நின்றிருக்க, கவனமாகக் கதவை லாக் செய்துவிட்டு இயல்பாய் திரும்பியவன், அவள் அங்கு இருப்பதை பார்த்தும் அதிர்ச்சி அடையவில்லை பதறவில்லை சிறு துணுக்கம் கூட அவனிடம் இல்லை.
சிறு புருவ சுழிப்பு மட்டுமே!
அதுவும் இவள் ஏன் இங்கு நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற கேள்வியுடன் தான்…
அவனது கேள்வியான பார்வையில் இப்பொழுது திணறுவது மதுராவின் முறையாயிற்று..
ஒருவேளை தான்தான் தனது முந்திரிக்கொட்டை தனத்தால் அவனை தவறாக நினைத்து விட்டோமோ? என்று நினைத்தவள் தனது பார்வையை மாற்றிக் கொண்டு,
“இங்க என்ன பண்றீங்க மிஸ்டர்?”என்று சமாளிப்பாய் கேட்டு வைக்க,
அவளின் சமாளிப்பை கணித்தவனாய்…
அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து,
“ஒரு முக்கியமான பைல் உங்க அப்பாவோட பிஏவுக்கு தேவைப்படுதாம்… அதான் உங்க அப்பா எனக்கு கால் பண்ணி எடுத்து கொடுக்க சொன்னார்” என்றவன்,
“ஒருவேளை உங்களுக்கு என் மேல சந்தேகமா இருந்தா உங்க அப்பாவுக்கே கால் பண்ணி கேட்டுடுங்க மேடம்” என்று அவளின் சந்தேகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் அவன்.
அவனின் பளிச் என்ற பதில் மதுராவிற்கு மேலும் சங்கடத்தை கொடுக்க, பேச்சை மாற்றுவதற்காக,
“ஆப்டர்நூன் லஞ்ச் சாப்பிட்டீங்களா மிஸ்டர் பிளாக்? சாப்பிடலன்னா என் கூட ஜாயின் பண்ணிக்கோங்களேன்” என்று அழைக்க,
“நான் ஜஸ்ட் உங்க அப்பா கொடுக்கிற காசுக்காக உங்களுக்கு ஷேடோ வேலை பண்ற நார்மல் பாடிகார்ட் மேடம்.. நான் எப்படி மேடம் உங்க கூட உங்க லெவலுக்கு உட்கார்ந்து சாப்பிட முடியும்? அது சரிவராது”என்று விட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல்,
கீழ் தளத்திற்கு செல்ல படி இறங்க ஆரம்பிக்க,
சாதாரணமாகவே அவன் தன்னிடம் அவ்வளவாக பேசியதாக ஞாபகம் இல்லை. இதில் தான் வேறு நேற்று நான் முதலாளி நீ காவலாளி .. என் பின்னால் நிற்க வேண்டிய நீ முன்னால் வர முயலாதே அது இது என்று கத்தி அவனை மேடம் என்று கூப்பிட சொல்லி, தந்தை மீது இருந்த மொத்த கோபத்தையும் நேற்று வசமாய் சிக்கிய இவனிடம் காட்டி விட்டோம் என்று புரிய,
அவன் பின்னாலயே வால் பிடித்துக் கொண்டு கீழே இறங்கியவள்
” மிஸ்டர் பிளாக் ஐ ஆம் ரியலி சாரி நேத்து பேசுனத தயவு செஞ்சு மைண்ட்ல இருந்து எரேஸ் பண்ணிடுங்களேன்.. லெட்ஸ் பி ஃபிரண்ட்ஸ்.. இனி உங்க கிட்ட அப்டி பேச மாட்டேன்” என்று பேசிக்கொண்டே அவனைப் பின் தொடர,
அவளைக் கண்டுகொள்ளாமல்,
கையில் இருந்த டாக்குமெண்ட் அடங்கிய ஃபைலை புரட்டி சரி பார்த்துக் கொண்டே கீழே ஹாலுக்கு சென்றான் கருப்பசாமி.
அங்கு ஏற்கனவே ஒருவர் உட்கார்ந்திருக்க, கொண்டு வந்ததை அவர் கையில் கொடுத்தவன்,
“எல்லாம் சரியா இருக்குதான்னு பாத்துக்கோங்க” என்றதும்,
அதை வாங்கி சரிப்பார்த்தவரும்,
“சரியா இருக்கு சார்… நீங்க தந்துட்டதா நான் சாருக்கு இன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி விட்டு நிற்காமல் உடனே புறப்பட்டு விட,
அவன் பின்னால் வந்த மதுராவும்,
அவர் செல்வதைப் பார்த்துவிட்டு, கருப்பசாமியிடம் திரும்பியவள், முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு,
“ஏதோ அறியாப் பிள்ளை தெரியாம பேசிட்டேன்..மன்னிச்சு ப்ளீஸ் .. இனி தேவையில்லாம ஹார்ஷா உங்க கிட்ட பேசவே மாட்டேன்..இது மதுரா ஃபிராமிஸ்.. இதுக்கு எதிரா யாரும் வர முடியாது”என்று இரு விரல்களால் காதை பிடித்துக் கொண்டு தலையை ஆட்டியபடி அவள் சொன்ன விதம் அத்தனை அழகாய் இருக்க, கருப்பசாமியால் அதற்கு அவள் கடுமையை பிடித்து வைத்திருக்க முடியவில்லை.
பெருமூச்சுடன் அவளை பார்த்தவன்,
“இட்ஸ் ஓகே மதுரா லீவ் இட்” என்றான் ஒரு வரி பதிலாக.
ஆனால் அந்த பதில் அவளுக்கு போதுமானதாக இல்லை.
“என்கூட லன்ச் சாப்பிட வரீங்களா மிஸ்டர் பிளாக்?”
என்று கேட்க,
“இல்ல வேண்டாம் மதுரா” என்று அவன் மறுக்க,
“அப்போ என்கிட்ட பொய்யா சொல்றீங்க என்ன மன்னிச்சிட்டேன்னு? எனக்கு பொய் சொன்னா சுத்தமா பிடிக்காது” என்று அவள் முறைக்க,
அவனோ, “அதான் லீவ் இட்னு சொல்லிட்டேனே.. அத லஞ்ச் சாப்பிட்டு தான் ப்ரூவ் பண்ணனுமா என்ன?”என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி பதில் கேள்வி கேட்டான் அவன்.
அதில் கடுப்பானவள்
“ஜஸ்ட் என்கூட லன்ச் சாப்ட்டா உங்களுக்கு என்ன குறைய போகுது?” என்றதும்,
“எதுவும் குறையாது மதுரா நான் எனக்குன்னு பண்ணி வச்ச லன்ச் வேஸ்டா போகும்.. எனக்கு ஃபுட் வேஸ்ட் பண்ணா பிடிக்காது” என்று அவன் சொன்னதை கேட்டு முழித்தவள்,
“உங்களுக்கு நீங்க தான் லன்ச் பண்ணீங்களா? ஏன்? இங்க பிரிப்பர் பண்றதயே சாப்பிடலாமே” என்று கேட்டு வைக்க,
“எனக்கு சாப்பாட்டில் உப்பு காரம் எதுவுமே இருக்க கூடாது.. அதோட நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன்…வேலைக்குன்னு வந்த இடத்துல இதெல்லாம் கேட்டு வாங்கி சாப்பிட எனக்கு இஷ்டம் இல்ல.. அதனால எனக்கு நானே சமைச்சுப்பேன்” என்றான் கருப்பசாமி.
அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாய் அவனை மேலும் கீழும் பார்த்தவள்,
‘பார்த்தா அண்டர்டேக்கருக்கு அண்ணன் பையன் மாதிரி இருக்கார்.. நானும் கறியும் மீனும் முட்டையும் சாப்பிட்டு உடம்ப வஞ்சனை இல்லாம நல்லா வளர்த்து வச்சிருக்காருன்னு பார்த்தா இவர் என்னனா ஆடு மாடு சாப்பிடறத போய் சாப்பிடுவேன்னு சொல்றார்.. அதுவும் உப்பு உரைப்பு இல்லாம’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
ஒருவேளை இப்படி இருக்குமோ? என்ற கணிப்பு வர,
“ஆனாலும் நீங்க ரொம்ப பாவம் மிஸ்டர் பிளாக்.. இந்த சின்ன வயசிலேயே சுகர் பிரஷர் பிரச்சனை இருக்கா உங்களுக்கு?”என்று அவனைப் பார்த்து உச்சி கொட்டிய படி பாவப்பட,
கோபமாய்,
“வாட் யூ மீன்?” என்றவனிடம்,
“பின்ன பிரஷர் இருந்தா தான இப்படி பத்திய சாப்பாடு எல்லாம் சாப்பிடுவாங்க? அப்போ நீங்க பாவம் தானே? ” என்று விழி விரித்து அவள் கேட்ட விதத்தில், இவனுக்கு தான் ஐயோ! இவள் என்னவெல்லாம் யோசிக்கிறாள்? என்றானது.
தனது ஆட்காட்டி விரலால் புருவத்தை தேய்த்தவன்,
“இப்ப என்ன உன் கூட சாப்பிடணும் அவ்வளவு தானே?”என்றவன் கடகடவென்று வெளியே எங்கோ சென்றான்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்தவனின் கையில், அவனுக்கு தேவையான உணவு இருந்தது.
“இப்ப வா நம்ம ரெண்டு பேரும் கார்டன் ல உக்காந்து சாப்பிடலாம்.. நீ உன்னோட சாப்பாட எடுத்துக்கோ நான் என்னோட சாப்பாடு எடுத்துக்கிறேன்”
என்றதும், மதுராவும் சந்தோஷமாய் தனக்கு தேவையானதை பிக்னிக் செல்வது போல் ஒரு பெரிய கூடையில் வைத்து கொண்டு வர,
அதைப் பார்த்து அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்புதான்.
இருவரும் கார்டனில் இருந்த பெரிய மரத்தின் அருகே ஓய்விற்காக போடப்பட்டிருந்த வட்ட வடிவ மேஜையில் ஆளுக்கு ஒருபுறம் அமர,
மதுரா கொண்டு வந்திருந்த எல்லாவற்றையும் மேஜையில் அடுக்க ஆரம்பித்தாள்.
அன்று மதுரா மட்டுமே வீட்டிலிருந்ததால், அவளிடம் மெனு கேட்டு தான் செய்திருந்தார்கள்.
மதுரா எப்பொழுதும் தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காதவள், அவர்கள் செய்ததை சத்தம் இல்லாமல் சாப்பிட்டு விட்டு செல்பவள் என்பதால் ஒரு பேச்சுக்கு என்ன வேண்டுமென்று கேட்க வந்த சமையல் வேலை செய்யும் பெண், இவள் எதுவும் கேட்க மாட்டாள் என்ற தைரியத்தில் எதையாவது செய்து வைப்போம்..
என்று அலட்சியமாய் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதே கேட்காமல் நகரப் போக,
அதை புரிந்து கொண்ட மதுராவோ வேண்டுமென்றே தனக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 செட்டிநாடு சிக்கன் தொக்கு என்று ஒரு பெரிய பட்டியலை இஷ்டத்திற்கு சொல்லி வைத்தாள்.
மதுரா சொன்ன பட்டியலில் அரண்டு போய் “கண்டிப்பா எல்லாம் வேணுமா மா?” என்று கேட்டவளிடம், ஆமாம் என்றிருந்தாள் அவள்.
அந்தப் பெண் முறைத்துக் கொண்டே சென்றது அவளுக்கு தெரியத்தான் செய்தது. ஆனால் இவள் கண்டு கொள்ளவில்லை.
அதென்ன தன்னைப் பார்த்தால் மட்டும் அப்படி ஒரு அலட்சியம்? இதே வினோதாவிடமோ வீட்டிலிருந்த மற்றவர்களிடமுமோ இதே அலட்சியத்தோடு பேச முடியுமா? என்ற கோபம் தான் அவளுக்கு.
அவள் சொன்னது எல்லாம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
எல்லாவற்றையும் தூக்கி கொண்டு வந்து விட்டவள் இங்கு கடை
பரப்ப,
கருப்பசாமிக்கு, ‘இவ்வளவுமா சாப்பிடுவாள்?’என்ற கேள்வி வந்தாலும் கேட்டுக் கொள்ளவில்லை.
அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்துவிட்டு, தனது மொபைலை எடுத்து ஒரு புகைப்படத்தை கிளிக் செய்தவள்,
தனக்கு தேவையான உணவை பிளேட்டில் எடுத்துக் கொண்டு கருப்பசாமியை பார்க்க,
அவனோ சாப்பிடுவது மட்டும் தான் தன் வேலை என்பது போல், நிமிரவே இல்லை.
தக்காளி வெங்காயத்துடன் வெள்ளரிக்காய் கேரட் போன்ற சில காய்கறிகள் ஒரே மாதிரியாக வெட்டப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்த வெஜிடபிள் சாலட்டை தான் அவன அவ்வளவு சிரத்தையாக சாப்பிட்டது.
கூடவே பச்சை நிறத்தில் ஜூஸ் ஒன்றும் வைத்திருந்தான்.
‘இதுதான் இவங்க ஊர்ல லன்ச்சா?’ என்று அதை வினோதமாய் பார்த்த
மதுராவும் தனது உணவை ருசித்து சாப்பிட ஆரம்பிக்க, பிரியாணி சிக்கன் 65 முட்டை வறுவல் எல்லாவற்றையும் வரிசையாய் காலி செய்ய, பிரியாணி உடன்
அவள் கடைசியாக சாப்பிட்ட செட்டிநாடு சிக்கன் வறுவல் ரொம்பவே காரமாக போய்விட, ஒரு வாய் சாப்பிட்டவள்..
‘உஸ் உஸ்’என்று ஊதிக்கொண்டே நீரை பருக, எரிச்சல் தாங்க முடியாமல் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது அவளுக்கு.. ஆனால் தண்ணீர் குடித்தும் எரிச்சல் தீர்ந்த பாடில்லை. இனிப்பாக எதுவும் இருக்கிறதா என்று பார்க்க எதுவுமே இல்லை. தான் இனிப்பு செய்ய சொன்னாதானே அதில் இருந்திருக்கும் என்று நினைத்து தன் தலையில் தட்டிக் கொண்டவள், சுத்தமாய் காரம் தாங்க முடியாததால்,
ஆபத்திற்கு பாவம் இல்லை என்று கருப்பசாமி வைத்திருந்த அந்த ஜூஸை எடுத்து ஒரு மடக்கு குடித்து விட அடுத்த நொடி அதை கீழே துப்பியிருந்தாள்.
“தூ..தூ.. என்ன எளவு ஜூஸ் இது? இப்டி கசக்குதுத்தூ தூ தூ..”என்று துப்பிக் கொண்ட கேட்க,
“இதுதான் உடலுக்கு ரொம்ப ரொம்ப ஹெல்தியான டேஸ்டியான பாகற்காய் ஜூஸ்”என்று கருப்பசாமி சொன்ன
அடுத்த நொடி,
“அடப்பாவி பிளாக்கு நீ எல்லாம் ஒரு நல்ல மனுசனா? இத போய் என்ன குடிக்க வச்சிட்டியே என்ன?”என்று கேட்டு விட, ‘நானா உன்ன குடிக்க சொன்னேன்?’என்ற பார்வையுடன் அவளை முறைத்தான் அவன்.
மதுராவும் அவன் பார்வையை புரிந்து, “ஹிஹிஹி எரிச்சல் தாங்க முடியலையா அதான் அவசரத்துல தெரியாம குடிச்சிட்டேன்” என்று அசடு வழியே சிரித்து சமாளித்தவளுக்கு இப்பொழுது காரம் குறைந்து வாய் கசப்பாக இருந்தது.
அதனால் சாப்பிட்டவரை போதும் என்று கையை கழுவி விட, அவனும் அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தான்.
அவள் குடித்து வைத்திருந்த ஜூஸ் பாதிக்கு மேலே இருக்க, அதை முழுவதுமாக குடித்து முடித்தான் கருப்பசாமி.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “டெய்லியும் இந்த ஜூஸ் குடிப்பிங்களா பிளாக்?”என்று கேட்க,
“இல்ல என்னோட டயட் பிளான் படி ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஜூஸ்”
“இவ்ளோ கசப்பா இருக்கு எப்படி தான் குடிக்க முடியுதோ!”என்று மனதில் நினைத்தவள் அதை அவனிடமும் சொல்ல,
” டேஸ்டான ஜூஸ் குடிக்கும்போது ரசிச்சு என்ஜாய் பண்ணி குடிக்கோம் தானே.. அது மாதிரி தான் புவர் டேஸ்ட்ல இருந்தாலும் என்ஜாய் பண்ணி குடிக்கணும்… நம்ம வாழ்க்கைல எப்பவுமே ஹேப்பினஸ் மட்டுமே இருக்கறது இல்ல ..இன்பம் துன்பம் எல்லாம் கலந்தா தான வாழ்க்கை… எல்லாத்தையும் அந்தந்த நிமிஷம் அனுபவிச்சு நிம்மதியா கடக்கணும்.. அதே மாதிரி தான் இதுவும்” என்றதும் இவ்வளவு பேசுவானா இவன்? என்று அவனை ஆவென்று பார்த்தவளுக்கு அவனின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாய் பதிந்தது மனதிற்குள்!
மதிய உணவை முடித்துக் கொண்டு மதுரா அவள் அறைக்கு சென்று விட, கருப்பசாமியும் வீட்டை ஒருமுறை சுற்றி பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, திரும்ப வாயிலில் புதிதாய் இருவரைப் பார்த்தான்.
அவர்களை அழைத்து விசாரித்த போது எலக்ட்ரீஷியன்ஸ் என்றனர். சமையலறையிலும் பின்பக்க மோட்டார் அறையிலும் இருந்த ஸ்விட்ச் போர்டில் பிரச்சனை இருப்பதாக சொல்லி அதை சரி செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அடையாள அட்டையை காட்டியதால்
அவனும் சரி என்று விட்டு விட்டான்.
ஆனால் அது தான் தவறாய் போனது.
அவர்கள் செய்து விட்டுப் போன வேலையால்,
அன்று இரவு முத்து மாணிக்கத்தின் வீடே மின்சாரமின்றி… ஜெனரேட்டரும் கோளாறாகி …கார்இருளில் மூழ்க, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதுராவின் அறை சத்தமில்லாமல் திறக்கப்பட்டு அவளின் வாய் யாராலோ அழுத்தமாய் மூடப்பட்டது.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
36
+1
3
+1
2