
32. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் (இறுதி அத்தியாயம்)
அந்தக் கொடுமையான சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்திருந்தது…
அதுவரை மதுராவினால் நடந்து முடிந்த சம்பவத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.
அவள் நேரில் பார்த்த கோரமான காட்சிகள் கனவில் வந்து பயமுறுத்த, மயக்க மருந்துகள் மூலம் தான் அவளின் உறக்கங்கள் யாவும் தொடர்ந்தது. கார்முகில் வர்ணன் தான் முழு நேரமாக அவளின் அருகில் இருந்து அவளை பார்த்துக் கொண்டது.
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருந்தது நர மாமிசம் உண்பவர்களின் பின்னணி வரலாறு. அவர்களுக்கு துணை போகும் முக்கிய பதவியில் இருக்கும் சில கருப்பு ஆடுகளும் இதில் சிக்கியிருக்க, அனைவரையும் மொத்தமாகவே கைது செய்து விசாரிக்க ஆணையிட்டிருந்தது மத்திய அரசு.
அதன் முக்கிய நபராக முத்துமாணிக்கத்தின் கட்சித் தலைவர் கலியமூர்த்தி கைது செய்யப்பட, முத்துமாணிக்கத்தின் மீது இருந்த வழக்கும் மறு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு இடையில் வினோதா தன் கணவன் குடும்பத்தை பற்றியும் கணவனையும் பற்றியும் ஆதாரத்தோடு தெரிந்து கொண்டாள். தேஜு சொன்ன அனைத்துமே முற்றிலும் உண்மை என்பது போல் ருபேஷிற்கு பெண் தொடர்பு இருந்தது. அந்தப் பெண் அவன் குழந்தைக்கு அம்மாவாகவும் இருந்தாள். முக்கியமாக அவள் பணக்காரியாக இருந்தாள்.
ரூபேஷின் குடும்பம், முத்து மாணிக்கம் கைது செய்யப்பட்டு, அவர்களின் குடும்பம் சரிந்து வினோதா செல்லா காசானதும் அவளை விட்டுவிட சொல்ல, அதற்காக பல திட்டங்கள் போட்டு தான் அவன் புதியதாக பிஸ்னஸ் தொடங்கியதும், அனைத்துமே கடனில் மூழ்கியதாய் சொல்லி வினோதாவிடம் இருந்த மற்ற சொத்துக்களை வாங்குவதற்காகவே நிறைய நிறைய முயற்சி எடுத்து இருக்கிறார்கள்… இதற்கிடையில் மதுரா ஒப்படைத்தால் பணம் தருவதாக சொல்லி ஒரு கும்பல் வர, அதையும் வினோதா மூலமாகவே சாதிக்க பார்த்திருக்கிறார்கள்… அதோடு வினோதாவையும் ஒழித்து கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்க, அனைத்து உண்மைகளும் தெரிந்த பிறகு வினோதா மயங்கி சரிந்து விட்டாள்.
அவள் எல்லாம் கணவனுக்காக கணவனுக்காக.. என்று எல்லாவற்றையும் இழந்திருக்க அவளின் கணவனோ அவளை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்காகவே திட்டம் போட்டு இருக்கிறான்…!
செய்த ஊழ்வினை பயனால் ஏற்பட்ட சாபமோ? என்னவோ வினோதாவின் வயிற்றில் இருந்த கருவும் அவளின் அதிர்ச்சியினால் கலைந்திருந்தது.
வினோதா மனநிலை பாதிக்கப்பட்டாள்.
மனநல மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டாள். அவளின் சகோதரர்கள் அவளுக்காக வருத்தப்பட்டாலும், அவர்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
மதுராவின் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபர், கொலை முயற்சி, சொத்துக்கள் அகபரிப்பு என்று ரூபேஷ் கைது செய்யப்பட்டான். அவனின் குடும்பமும் விசாரணைக்கு உட்பட்டது.
அன்றுதான் மதுர வாணி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். கார்முகில் வர்ணன் அவள் வரும்பொழுது முக்கிய வேலை என்று மாதேஷ் உடனும் பிரகதீஷ் ஜெகதீஷ் உடனும் வெளியே சென்றிருக்க, மதுராவிற்கு துணையாக ஷாலினியும் தேஜுவும் இருந்தார்கள்.
ஷாலினி தனக்கும் கார்முகில் வர்ணனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெளிவாகவே விளக்கி விட்டாள்.
“இங்க பாரு மதுரா நானும் முகிலும் சைல்ட் குட் பிரண்ட்ஸ்… ஒர்க் பார்ட்னர்ஸ் கூட.. எங்களுக்கு எங்கேஜ்மென்ட் ஆனது உண்மைதான்.. பட் அது வீட்டு பெரியவங்களா அரேஞ்ச் பண்ணது… சரி நாங்களும் வேற யாரையாவது பியூச்சர்ல கல்யாணம் பண்ண தானே போறோம்ன்னு ஓகே சொல்லிட்டோம்.. பட் பிரண்ட்ஸ் ஸ்டேஜ் தாண்டி எங்களால எதையும் யோசிக்க முடியாம அப்புறம் நாங்களே அதை ஸ்டாப் பண்ணிட்டோம்.. அந்த போட்டோ கூட நாங்க பண்ண தப்ப..அடிக்கடி ஞாபகப்படுத்துறதுக்காக தான்..”
மதுரா மிதமான புன்னகையோடு தான் ஷாலினி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அதோட பாத்தா ஃபர்ஸ்ட் சைட்லயே சார் உன்கிட்ட விழுந்துட்டாரு… அங்க வந்ததுக்கு மிஷன் மட்டும் காரணமா இருந்தா… உனக்கு ஃபுல் டைம் பாடி கார்ட் ஆகணும்னு கூட அவசியம் இல்ல தான்… ஆனா சார் உனக்காக மட்டும் தான் அதை கண்டினியூ பண்ணான்.. உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதும் உனக்கு பொருத்தமே இல்லாத ஜோடின்னு பீலிங்ஸ் ஆப் இந்தியால சுத்திட்டு இருந்தான்.. பட் அவனுக்கே உன்ன மேரேஜ் பண்ணிக்க சான்ஸ் கிடச்சதும் … பையன் ஸ்ட்ராங்க பிடிச்சுகிட்டான்..”என்று சொல்லி சிரிக்க,
மதுரா ஆச்சரியத்தோடு தான் அவளைப் பார்த்தாள்.
“என்ன மதுரா இப்படி சிலை மாதிரி இருக்க?அப்ப எதுக்கு என்ன ஆபீஸ்ல டார்ச்சர் பண்ணிங்கன்னு கேளு”என்று தேஜஸ்வினி ஒரு பக்கம் ஏற்றி விட,
மதுராவும் அதே கேள்வியோடு தான் ஷாலினியை பார்த்தாள்.
“பின்ன கட்டபிரம்மசாரியா இருந்த என் தோஸ்தே.. கஷ்டப்பட்ட கவர் பண்ணி உன்னை மேரேஜ் பண்ணா நீ அவ்வளவு ஈஸியா தாலிய கழட்டி கைல கொடுத்துட்ட.. அதுக்கப்புறம் ஆக்சிடென்ட் ஆகி அவன் உன் மேல பித்து புடிச்ச மாதிரி இருந்த டைம்… எல்லாம் உன்னால தான்னு உன் மேல ஒரு கோபம்..அதான் காட்டிட்டேன்..”
“ஆனாலும் ஃப்ரெண்ட்டுக்கு ஒன்னுனா கடல முத்து ஓவர் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் ஆகிப்றாங்கப்பா..”என்று தேஜு சிரிக்க, மதுராவும் அவள் சொல்லிய விதத்தில் சிரித்து விட்டாள்.
“ஏய் வாயாடி… உன்னோட வேலையால மதுரா எவ்வளவு பெரிய ஆபத்துல மாட்டிக்கிட்டா?’என்று காதை பிடித்து திருகிட,
“பின்ன நான் சொல்ல சொல்ல புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா… சீரியஸ்னஸ் புரிய வைக்கிறதுக்காக ஒரு சின்ன பிட்டு போட்டேன் பார்த்தா கொத்தா தூக்கிட்டு போயிட்டானுங்க..”என்று அன்று உணர்ச்சிவசத்தில் செய்து வைத்த காரியத்தை நியாயப்படுத்துவது போல் இழுக்க,
“உன்னைய கூறு போடாம ஒரு ரூம்ல போட்டு அடைச்சு மட்டும் வச்சிருந்தாங்களே.. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சு வந்துட்டு…வாயப் பாரு வாய்க்கால் மாதிரி..” என்று கிண்டல் அடித்துக் கொண்டே வந்து சேர்ந்தான் மாதேஷ்.
அவனோட வெளியில் சென்றவர்களும் வந்து விட்டார்கள். கார்முகில் வர்ணனும் மாதேஷ் பின்னே ஜெகதீஷ் பிரகதீஷுடன் வந்து சேர, இளையவர்களின் கூட்டணியால் அவ்விடமே களைக் கட்டியது.
“எங்க போயிருந்தீங்க எல்லாரும்?”என்று ஷாலினி கேட்க,
“முகூர்த்த நாள் குறிச்சிட்டு வந்திருக்கோம்… நல்ல நாள் பார்த்து தான திரும்பவும் கல்யாணம் பண்ணி வைக்கணும்? சோ போய் விசாரிச்சிட்டு வந்திருக்கோம்”என்று ஜெகதீஷ் சொல்ல,
“அது பெரியவங்க தானே குறிக்கணும்..” என்று தேஜு கேட்க
“மதுராவுக்கு நாங்கதானே பெரியவங்க?”என்று சிரிப்போடு தான் பதில் சொன்னான் ஜெகதீஷ்.
மதுரா புன்னகையோடு அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருக்க, கார்முகில் வர்ணன் அவள் அருகில் சென்றவன்,”அப்பா உன்ன மீட் பண்ணனும்னு சொன்னார்… நம்ம கல்யாணத்துக்கு வருவார்..”
“ம்ம்ம்”என்று கேட்டுக் கொண்டாள் மதுரா. அவளுக்கும் கார்முகில் வர்ணனை பற்றி அனைத்தும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கார்முகில் வர்ணனின் தாய் சுதா தமிழ்நாட்டை சேர்ந்தவர் தந்தை சிவ தேவ் பிரபாகரன் கனடாவில் பெரும்புள்ளி. பெற்றவர்கள் இருவருக்கும் கார்முகிலுக்கு பதினைந்தாவது வயதிலேயே விவாகரத்து ஆகி விட, கார்முகிலின் தாய் ஒரு விபத்து ஒன்றில் உயிரிழந்ததும் அவனை வளர்க்கும் பொறுப்பு தந்தை பிரபாகரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
18 வயது ஆகும் வரை மட்டுமே அவருடன் இருந்தவன் அதன்பிறகு பிரிந்து வந்து விட்டான்.
தந்தை மீது பாசம் இருந்தாலும் சிறு வயதிலேயே தாயின் வளர்ப்பில் சுயமாய் வாழப் பழகியவனுக்கு தந்தையிடம் ஒட்டவில்லை… சொந்த காலில் நிற்க வேண்டும் என்று சுயமாய் படித்து சிவில் சர்வீஸ் தேர்வழுதி வேலைக்கு சேர்ந்திருந்தான்.
அவனின் சிறு வயது முதல் அவனுடன் தோழமைகளாக மாதேஷ் ஷாலினி இருவரும் இருந்திருக்க… அவர்களின் நட்பு இதோ இப்பொழுது வரை தொடர்கிறது.
மாதேஷும் ஷாலினியும் கார்முகில் வர்ணனை போலவே… அவனது துறையில் பணியாற்றுபவர்கள்.. பின்னாளில் அவர்களுக்குள் தேஜஸ்வினியும் சேர்ந்து கொள்ள, அவர்களின் வட்டம் பெரிதானது.
கார்முகில் வர்ணனுக்காக மட்டுமே அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட மதுராவிற்கு கூட அவர்களின் இத்தனை ஒற்றுமையை பார்த்து ஆச்சரியம் தான்.. முதலில் தன்னை ஏமாற்றி விட்டார்களே என்று கோபப்பட்டாலும் பின்னாளில் ஏற்றுக் கொண்டாள்.
*******
இதோ வட பழனி முருகன் கோவிலில் தெரிந்தவர்களின் முன்னிலையில் எளிமையாக நடந்தது மதுரா – கார்முகில் வர்ணனின் திருமணம்.
ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் தங்கையின் கல்யாணத்தை சந்தோஷமாக பார்க்க, முத்து மாணிக்கம் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
அவரும் கலந்து கொண்டிருக்க, மதுரா மகிழ்ச்சியோடு இம்முறை தாலியை ஏற்றுக் கொண்டாள். அவளின் கண்கள் இத்தனை நாள் கிடைக்காத குடும்ப உறவுகள் தனக்கு கிடைத்ததை எண்ணி சந்தோஷத்தில் கண்ணீரை பொழிந்தது.
தேஜஸ்வினி நாத்தனார் முடிச்சு போட்டு விட, ஷாலினி மணப்பெண் தோழியாக மதுராவின் அருகே நின்றாள். மாதேஷ் தேஜஸ்வினியை பார்த்து அடுத்து தங்களுக்கு தான் என்று கண்ணடிக்க, அவளிடம் வெட்க புன்னகை.
மணமக்கள் இருவரும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, சிறியவர்களின் கேலிகளிலோடும் கலாட்டக்களோடும் அன்றைய தினம் அத்தனை சந்தோஷத்தை அள்ளி தந்தது அனைவருக்கும்.
அனைவருக்கும் அருகில் இருந்த ரெசார்ட் ஒன்றில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க,
அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும், எல்லாரிடமும் சொல்லிவிட்டு மனைவியோடு தனது பிரத்தியேகமான காரில் தூத்துக்குடிக்கு கிளம்பி விட்டான் கார்முகில் வர்ணன்.
அனைவரும் சிரிப்போடு அவர்களை வழி அனுப்பி வைக்க, மதுராவின் முகமும் புன்னகையில் ஜொலித்தது.
அவர்களின் முதல் கார் பயணத்தின் ஞாபகங்கள் வரிசையாக வர… இருவரின் இதழ்களும் புன்னகையில் பூத்தது.
“ஃபர்ஸ்ட் டைம் என்ன மீட் பண்ணும் போது.. எதுக்கு என்னை மொறச்சுட்டே இருந்தீங்க?”என்று கணவனின் உரிமையில் அவனின் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டு மதுரா கேட்க,
“அப்போ நா மிஷன்ல இருந்தேன்.. உன்ன பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போயிட்டு… ஆனா உன்னோட அப்பா மேல எனக்கு நிறைய சந்தேகம்.. அது உன் மேலயும் இருந்துச்சு.. அதனாலயே என்ன நானே வெறப்பா வச்சுக்கிட்டேன்.. ஆனா நீ இருக்கியே.. என்ன அப்படியே விட்டியா? எனக்கு செல்லப் பேரு வச்சது என்ன? நான் எல்லாரையும் அடிச்சு போட்டதுக்கு அப்புறம் வந்த பெப்பர் ஸ்ப்ரே வச்சு குரளி வித்தை காட்டி.. ஒரு காமெடி பண்ண பாரு அதுல மொத்தமா விழுந்துட்டேன்.. அப்பவே ரொம்ப க்யூட் பொண்ணு நீ..” என்று கொஞ்ச, மதுரா குலுங்கி சிரித்தாள்.
“சரி இப்போ எங்க போறோம் பிளாக்?”என்று மதுரா கேட்க,
“நான் திருவிழாவுக்கு போனதே இல்லன்னு அன்னைக்கு கண்ணீர் வடிச்சியே ஞாபகம் இருக்கா? அன்னைக்கெல்லாம் எனக்கு தூக்கமே இல்ல.. கண்ண மூடினாலே உன்னோட அழுகை வடிஞ்ச மூஞ்சியும் உன்னோட ஏக்கமான பார்வையும் தான்… அதான் நீ ஆசைப்பட்ட இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன்”
என்று மிகப்பெரிய மைதானத்தில் திருவிழாவிற்காக போடப்பட்டிருந்த பொருட்காட்சிக்கு அழைத்து வந்திருந்தான் அவளை… மதுரா விழிகள் கலங்க சிரிப்போடு அவனைப் பார்த்திருக்க,
“என்ன சைட் அடிச்சது போதும்.. உள்ள உனக்கு மட்டும் தான் அனுமதி.. இலவசம்” என்று அவளை ஆசையாக இழுத்து செல்ல..
தன்னவனின் அன்பில் மிக மெதுவாய் கரைந்து கொண்டிருந்தாள் மதுரவாணி.
உள்ளே சென்று ஒவ்வொரு ராட்டினத்திலும் கடைகளிலும் இல்லாத குட்டி கரணங்கள் அடித்து சேட்டை செய்த மதுராவை ஆசையோடு பார்த்தான் கார்முகில் வர்ணன்.
“சின்ன வயசுல வினோ அக்கா ஜெகதீஷ் பிரகதீஷ் மூணு பேரையும் அப்பா கூட்டிட்டு போவார்.. என்னை எங்கேயும் கூட்டிட்டு போனதே இல்ல தெரியுமா? அவ்ளோ ஆசை இங்கெல்லாம் வரணும்னு..”என்று அவனை அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட,
“ப்ச்ச் என்ன சின்ன புள்ள மாதிரி கன்னத்துல கிஸ் தர… இங்க வேணும் எனக்கு தா..”என்று அவன் இதழை காட்ட,
வெட்கப்பட்டாலும் கேட்டதை ஆசையோடு அள்ளி கொடுத்தாள் மதுரவாணி.
இன்று போல் என்றும் நிழலாகிய அவனும் மதுரமாகிய அவளும்.. மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திப்போமாக!
முற்றும்…
கதை முடியும் வரை படித்து எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊❤️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
54
+1
3
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

கதை அருமை. காதல் வழக்கு விசாரணை சஸ்பென்ஸ் பாசம் துரோகம் எல்லாம் கலந்து அருமையான கதை வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன். பிளாக் மதுவுக்கு பாடிகார்ட் வர முத்துமாணிக்கம் இரு பையன்கள் இரு பொண்ணு மனைவி இரண்டு. அரசியல்வாதி பிரச்சினை வர மதுவை காப்பாற்ற பிளாக் வர அவன் வந்த கடமை நிறைவேற்ற அண்ணா இருவரும் தங்கையுடன் கல்கத்தா செல்ல. அக்கா சீ என்ன மனுசத்தன்மை இல்லாதவள்.பிளாக் மதுவை காப்பாற்ற தொடர்ந்து வருகிறது செம. விபத்து ஏற்பட்டாலும் காதல் குறையாமல் இருப்பது செம. நட்பு செம. பிளாக் மது கோபம் சண்டை உணர்வு அழகு. பிளாக் வில்லன்களை பிடித்து தண்டனை தருவது வினோதா தண்டனை கிடைப்பது சூப்பர். மது பிளாக் இணைவது அழகு. முடிவு சூப்பர். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி சிஸ் மா ♥️… ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உங்களது ஆதரவிற்கும் அன்பிற்கும்..❣️🥰
சூப்பர் எபி ♥️
இன்னும் கொஞ்சம் கொண்டு போய் இருக்கலாம்.
மதுரா கருப்பு ♥️