Loading

31. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்

தேஜஸ்வினி கார்முகில் வர்ணனின் வீட்டில் வேலை செய்பவரின் மகள், சிறு வயதில் இருந்து கார்முகில் வர்ணனை அண்ணனாகவே பாவிப்பவள். கார்முகில் வர்ணன் விபத்தில் நினைவிழந்த சமயம் மதுராவின் பாதுகாப்பிற்காக அவளுடன் பணியில் சேர்ந்தவள்… அந்த உண்மையை தன் தோழி மதுராவிடம் அதற்கு மேல் மறைக்காமல் அவள் சொல்ல,

தோழியும் துரோகியாக.. திட்டி தீர்த்த மதுராவிடம்,

அவர்கள் செய்தது  சரிதான்.. நியாயம் தான்.. என்று இருவருக்கும் வாக்குவாதம்…

தேஜுவோ அவளுக்கு இருக்கும் ஆபத்தை உணர்த்துவிடும் வேகத்தில் செய்த செயலின் வினை பலனாய் இதோ இங்கே வந்து சிக்கியிருக்கிறார்கள்…

சுற்றி இருந்த அறையையும் தனது வாட்ச்சையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜு.

மதுராவை தனியாக அழைத்து சென்ற பத்து நிமிடங்களாகி இருக்கும். அவளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று கடவுளிடம் ஒரு பக்கம் பிரார்த்தனை மனதிற்குள் நடந்து கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் அதிகமாகவே பயமாகத்தான் இருந்தது. கார்முகில் வர்ணன் மாதேஷ் இருவரும் விசாரணை செய்தவரை, இந்த கூட்டமே ஒருவகை கல்ட்டு குரூப்பை சேர்ந்தது என்று தெரிய வந்திருந்தது.

 பெரிய ஆபத்து தான் என்றாலும் தாங்கள் இருக்கும் இடம் தெரிந்தால் விரைவிலேயே தங்களை தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அவளின் கணிப்பு படி இன்னும் அரை மணி நேரத்தில் கார்முகில் வர்ணனின் காப்பாளர்கள் அவர்களை மீட்பதற்காக வந்து விடுவார்கள். ஆனால் அதுவரை மதுராவிற்கு எதுவும் ஆகி விடக்கூடாதே!

இரண்டு மூன்று முறை வாந்தி எடுத்ததால் உடலில் தெம்பே இல்லாமல் பாதி மயக்க நிலைக்கு சென்றிருந்தாள் வினோதா.

அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் அறைக்குள் அடைக்கும் போது அவளின் வாய் கட்டை அவிழ்த்து விட்டு சென்றிருந்தார்கள்.

உடலில் தெம்பே இல்லை என்றாலும் கோபம் குறையாமல் வினோதாவின் வாய் மதுராவை தான் திட்டிக் கொண்டிருந்தது.

“அவளால நான் இன்னும் என்னென்ன எல்லாம் அனுபவிக்கனும்னு தெரியல.. என் பாட்டுக்கு நிம்மதியா இருந்த என் வாழ்க்கைக்குள்ள எவ்வளவு பிரச்சனை..”என்றவளை வெட்டவா? குத்தவா? என்பது போல் முறைத்துப் பார்த்தாள் தேஜஸ்வினி.

வாய்க்குள் அடக்கி வைத்திருந்த வார்த்தைகள் வரிசை கட்ட பேச முடியாதவாறு இன்னுமே அவளின் வாய் அடைக்க தான் பட்டிருந்தது.

முயன்று வாய்க்குள் அழுத்தி வைக்கப்பட்டிருந்த துணியை துப்பியவள்,

நிதானமாகவே, “இப்ப எதுக்கு மதுராவை திட்டிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் வினோதாவிற்கும் கோபம் உசுப்பப்பட,

“ஏன் உன்னையும் சேர்த்து திட்டணுமா? ஒரு பிரச்சனைல இருந்து தப்பிக்க அவளை யூஸ் பண்ணிக்க நினைச்சது உண்மைதான்.. ஆனா அவ பிறந்ததுல இருந்து எனக்கு பிரச்சனையை மட்டுமே குடுத்துட்டு இருக்காளே அதுக்கு என்ன சொல்ல போற?”என்றவள் தங்களது குடும்பத்தில் நடந்ததை ஆதி முதல் அந்தம் வரை சுருக்கமாக சொல்லிவிட்டு இப்பொழுது கடன் பிரச்சனைகளில் மாட்டியதையும் வேறு வழியில்லாமல் மதுராவை இதற்குள் இழுத்ததையும் சொன்னாள்.

” அவ அம்மாவால நான் அனுபவிச்சது கொஞ்சமா இல்ல.. அது எப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணினா மனசு வருதோ..! அவங்க அம்மா பண்ணதுக்கு இவ தண்டனை அனுபவிக்க வேண்டாமா?”என்று வினோதா முணங்க,

“அப்ப நீங்க இப்ப பண்ணதுக்கு உங்க வயிற்றில் இருக்கற குழந்தை தானே தண்டனை அனுபவிக்கணும்?”

“ஏய் என்ன பேசுற நீ? இன்னும் பிறக்காத குழந்தைய போய் இப்படி பேசிட்டு இருக்க? உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா?” என்று கோபத்தில் கொதித்துப் போய் கேட்ட வினோதா கை மட்டும் கட்டப்படாமல் இருந்தால் இந்நேரம் தேஜஸ்வினியை அடித்தே இருப்பாள்.

“சோ உங்கள பொருத்த முடியும் பிறக்காத குழந்தையை இப்படி பேசுறது தப்பு அப்படித்தானே? அப்போ அவங்க அம்மா பண்ண தப்புக்கு அப்ப பிறக்க கூட செய்யாத ஒரு குழந்தை மேல நீங்க பழி போட்டு நீங்க ஒதுக்கி வைக்கலாம்… அவ மேல வஞ்சம் வளர்த்து அவள பழிவாங்க அவளை எதுல வேணாலும் இழுத்து விடலாம்? அதுதானே உங்க நியாயம்?”என்ற தேஜஸ்வினி அவளை அழுத்தமாய் பார்த்து கேட்டதில் வினோதா வாயடைத்து தான் போனாள்.

தவறுதான் என்று தெரிந்து செய்தது தானே? தெரியாமல் ஒன்றும் அவள் செய்யவில்லையே! ஆனால் முகத்திற்கு நேராக ஒருத்தி தன் தவறை சுட்டிக்காட்டவும்,

“அவள ஒன்னும் நான் பாழங்குழியில தள்ளனும்னு நினைக்கல ஒருத்தன் இவள கல்யாணம் பண்ண கேட்டு இவ்வளவு பணம் கொடுத்திருக்கான்னா அப்போ அவனுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லாம இருந்திருக்குமா?”

“ஓஹோ அப்போ மதுரா மேல தப்பு இருக்கு அவளை கடத்திட்டு போன்னு நீங்களே அவள கடத்திட்டு போக சம்மதிச்சு இருக்கீங்க?”

“அவன் கல்யாணம் பண்ணனும்னு சொல்லி தான் கேட்டான் இவ திடீர்னு ஓவராக்ட் பண்ணி வீட்டை விட்டு போகலைன்னா இந்த பிரச்சனையே இருந்திருக்காது.. என்னோட கடன் பிரச்சனை மட்டும் இல்லன்னா நான் எதுக்கு தேவையில்லாம இவ விஷயத்துல தலையிட போறேன்?” என்று கடுகடுப்பாய் வினோதா கேட்கவும்

தேஜஸ்வினி சிரித்து விட்டாள் வினோதாவின் பேச்சில்.

“சிஸ்டர் உங்கள பாத்தா எனக்கு சிரிப்பா தான் இருக்கு… உங்க புகுந்த வீட ஒரு டுபாக்கூர் தெரியுமா? அதோட உங்க புருஷன் உங்களுக்கு இன்னுமா உண்மையா இருக்காருன்னு நம்பிட்டு இருக்கீங்க?”

வினோதாவுக்கு ஒன்றும் புரியவில்லை இவள் என்ன சொல்கிறாள்? என்பது போல் பார்த்தாள்.

“சரி முழுசா நனைஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு?”என்றவள் புதிதான சில செய்திகளை சொல்ல ஆரம்பித்தாள்.

“நீங்க நினைக்கிற மாதிரி உங்க பேமிலி கடன்ல எதுவும் மூழ்கிடல.. இது எல்லாமே உங்க ஹஸ்பண்ட் ஓட பிளான்.. என்ன புரியலையா? நீங்க கிட்டத்தட்ட அஞ்சு ஆறு வருஷமா குழந்தை இல்லாம இருந்திருக்கீங்க? அம் ஐ கரெக்ட்?”

வினோத தலையை ஆட்ட,

“சோ உங்க ஹஸ்பண்ட் வெளியில செகண்ட் வீடு ரெடி பண்ணிட்டார்..”

“நோ நோ ரூபேஷ் எனக்கு துரோகம் பண்ணவே மாட்டார் .. அவர் அவரோட உயிரை விட என்ன அதிகமா லவ் பண்ணுவார்? அவருக்காக தான் நான் இந்த கும்பல் கிட்டவே மாட்டிக்கிட்டேன்”

“உங்கள ஒருத்தங்க யூஸ் பண்றாங்கன்னு தெரியாமலேயே இவ்வளவு நாள் இருந்து இருக்கீங்களே மேடம்! இதுல மனசுக்குள்ள பெரிய வில்லின்னு வேற நெனப்பு போல”என்று வினோதாவை தேஜஸ்வினி உண்மையை சொல்லி குழப்பி விட,

அவளின் பேச்சில் திகைத்து போன

வினோதாவிற்கும் இத்தனை நாட்கள் நடந்தது அனைத்தையும் யோசித்துப் பார்க்க பார்க்க ஒருவேளை இவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் துளிர்விட தொடங்கியது.

 திடீரென்று புகுந்து வீட்டில் இருந்து தன்னை பிரித்து வெளியே கூட்டி வந்தது. அதன் பிறகு ஆனா கடன்கள் கடன்காரர்கள் வந்த மிரட்டி விட்டு போனது தன் வசம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று கடனை அடைத்து விடலாம் என்று சொன்னது… பிறகு கடன் இன்னுமே இருக்கிறது என்று மதுராவை ஒப்படைத்து விட்டால் பிரச்சனை முடிந்தது என்று தன்னை சமாதானப்படுத்தியது.. என்று அனைத்திலும் அவளின் கணவனின் கைங்கரியம் இருக்குமோ? அவளின் உள்ளமே மொத்தமா சுருண்டு சுருங்கி வலிக்க வினோதாவிற்கு கணவனின் துரோகத்தை தாங்க முடியவில்லை.

கழுத்து வரை வெள்ளை துணி மூடப்பட்டு மதுரா கட்டப்பட்டிருக்க,

அவ்வரையில் குப்பென்ற ரத்த நொடியும் மருந்துகளின் வாடையும் பொறுத்துக் கொள்ள முடியாததாய் இருந்தது.

அவளின் முன்னால் முகத்தை மறைப்பதற்கான மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்தபடி மார்ட்டின் எமனாய் நின்றிருந்தான்.

மதுரா கண்களை இருக்கும் மூடி இருந்தாலும் தன்னை சமாளித்தவளாய் கண்களை திறந்து எதிரில் இருந்தவனை பயத்தோடு பார்க்க,

“என்னோட அண்ணனுக்கு துரோகம் பண்ண உன் அப்பனுக்கும் உனக்கும் துடிக்க துடிக்க தண்டனை கொடுக்கணும்னு நினைச்சேன்”

“அதுக்காக திட்டம் போட்டு நான் காய் நகர்த்தனா… நீ என் கையில் இருந்து தப்பிச்சு போக பாக்குறியா? உனக்கு உதவி பண்ண யாரும் இங்க வர போறது இல்ல” என்றவனின் கையிலோ அறுவை சிகிச்சை செய்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்…

தன் கையில் இருந்த இன்ஜெக்ஷன் ஒன்றை எடுத்து மதுராவின் கைகளில் போட, நகரக்கூட முடியாமல் வலியில் முகம் சுருங்கி குழம்பி போய் பார்த்த மதுராவிற்கு விடையாய்…

வீல் சேரில் அசைவுகளற்ற முகத்திலும் கண்கள் மட்டுமே வேலை செய்ய, அங்கு அவனின் ஆட்களின் மூலம் கொண்டுவரப்பட்டான் பெர்னாண்டஸ்.

அவன் என் உடலில் எந்த பாகமும் வேலை செய்யவில்லை உயிரை மட்டும்தான் காத்து வைக்க முடிந்திருந்தது முகத்தில் கண்கள் மட்டும் அசைய வில்லை என்றால் அவன் இறந்ததற்கு சமம் தான்.

அவனைப் பார்த்ததும் மதுராவிற்கு திக்கென்று இருக்க,

இவன் எப்படி இங்கே?

“இவன் தான் என் அண்ணன்…”என்று மார்டின் பெர்னாண்டஸை காட்டி அறிமுகப்படுத்த,

“நீ எங்க வாழ்க்கைகுள்ள வர முடியும் எவ்வளவு நிம்மதியா இருந்தோம் தெரியுமா? இப்போ என் அண்ணனோட இந்த நிலைமைக்கு காரணம் யாருன்னு தெரியுதா? நான் இப்பவே உன்ன துண்டு துண்டா வெட்டி போடணும் போல தான் இருக்கு ஆனா என் அண்ணனுக்கு தான் நீ முதல் விருந்து”என்றவனை அருவருப்பை சுமந்த விழிகளுடன் பார்த்தவளுக்கோ,

முத்து மாணிக்கம் கார்முகில் வர்ணனிடம்.. அன்றைக்கு ஒரு நாள் அலுவலகறையில் பேசும்பொழுது கேட்டது நினைவுக்கு வந்தது.

இந்த பெர்னாண்டஸ் மனித இறைச்சியை உண்பவன் என்று தந்தை சொன்னாரே… அப்படி என்றால் இவனும் அப்படித்தானே இருக்க வேண்டும்?

மதுராவிற்கு கார்முகில் மாதேஷ் அவளின் சகோதரர்கள் தேஜு அனைவரும் அடுத்தடுத்து ஏதோ ஆபத்து என்று சொல்ல முயற்சித்தது.. தன்னை பாதுகாத்தது ஏன்? எதற்கு? என்று இப்பொழுது தெள்ளத் தெளிவாக புரிய,

அவள் கட்டிப் போடப்பட்டிருந்த அடுத்த அறையில் சில பெண்களின் அலறல் சத்தம் பயங்கரமாய் கேட்க, உடல் வெட வெடக்க நடுங்கி போய் தன் முன்னே நின்ற மனித அரக்கனை பார்த்தாள் மதுரவாணி.

மதுராவின் கண்களில் பயத்தை பார்த்ததும்,

“என்ன இந்த அலறல் சத்தத்துக்கே பயப்படுற? பக்கத்து ரூம்ல என்ன நடக்குன்னு பாக்க ஆசையா இருக்கா? நான் வேணா நேர்ல லைவ்வா கூட்டிட்டு போய் காட்டவா?”

என்றவன், அடுத்த நொடி

அவள் படுக்க வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரக்சரிலிருந்து உருட்டிக் கொண்டு போய் அடுத்த அறைக்குள் நடப்பவற்றைக் காட்ட,

அதெல்லாம் பார்க்கவே முடியாததாய் இருந்தது.

பெண்கள் உயிர் சிதையும் வலியை

காதால் கேட்கும் போதே தாங்காதவள், அந்தக் கொடூரத்தை பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டு கதறி விட்டாள்.

கூட்டி வந்திருந்த பெண்களை ஆடு மாடுகளைப் போல மயக்க மருந்துகள் கொடுத்து உயிரோடு வெட்டிக் கொண்டிருந்தார்கள்.. மருத்துவ உடையில் இருந்த சில கொடூரர்கள்..

அன்று காரில் வைத்து அவளை அணைத்து கொண்டு அழுத விழிகளுடன் பிளாக் ஏதோ சொன்னானே? சிறு சிறு பிள்ளைகள் வாழ வேண்டியவர்கள் என அவன் யாரையோ சொன்னானே அதை இவர்களைப் போன்றவர்களை தான் என்று புரிவது போல் இருக்க, ஆனால் அந்த கொடூரன் அவள் மயங்குவதற்காக போட்ட இன்ஜெக்ஷனின் விளைவால்

மதுராவிற்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

“ம்ம்ம் நானும் எத்தனையோ வித விதமா ரகரகமா சாப்ட்டிருக்கேன்.. ஆனா உன்னோட மீட் ஸ்மெல் டிஃபரண்டா இருக்கு… அதனாலதான் எங்கள நீ அட்ராக்ட் பண்றேன்னு நினைக்கிறேன்”என்று அவளின் மேனியில் மோப்பம் பிடித்து வர்ணனை செய்யவும், நினைவிழக்கும் கடைசி நொடியில் இருந்தாள் மதுரா.

உயிர் பிரியும் நொடி போல்… நினைவிழக்கும் நொடியில் தன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தியவர்களின் அனைவரின் முகமும் அடுத்தடுத்ததாக நினைவிற்குள் வர,

கடைசியாக நினைவடுக்கில் பிளாக்கின் முகம்… அவனுக்காக தான் என்னதான் செய்திருக்கிறோம்? அவன் தனக்காக அத்தனை செய்திருக்க, ஒருவேளை அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அவனோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது மொத்த நினைவையும் இழந்து ஆழ்ந்த மயக்கத்திற்குள் சென்றாள் மதுரவாணி.

அவள் முழுவதுமாக மயக்க நிலைக்கு சென்றதும் … அதற்கும் இடியாக சிரித்த மார்ட்டினின் முகம் தன் அண்ணனின் முகத்தில் நிலைக்க,

“இவளுக்காக தானே நீ இந்த நிலைமையில் இருக்க?

உனக்கு தான் ஃபர்ஸ்ட் படையல்..”

என்றவன்,

மதுராவின் உள்ளங்கையை கிழிக்க பீறிட்டு பாய்ந்து வந்த ரத்தத்தின் மணம் பெர்னாண்டஸின் விழிகளை அசைந்தது.

அவளின் ரத்த துளிகளை தன் அண்ணனின் இதழுக்குள் இடமாற்றியவன்,

“இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமா முடிச்சிடலாம்”என்று பேய் போல சிரிக்க, அதற்குள் மொத்த கும்பலையும் கூண்டோடு பிடிக்க மும்பை போலீஸோடு ஆஜராகி இருந்தனர் கார்முகில் வர்ணனின் குழுவினர்.

அத்தனை நாட்கள் அவர்களின் பின்னணி முக்கிய ஆதாரங்கள் இல்லாததாலேயே அத்தனை பொறுமையாக விடயத்தை கையாண்டு கொண்டிருக்க, இன்று அனைத்துமே கிடைக்க வேண்டிய கட்டாயம்..

வந்திருந்தவர்கள் வெளியே இருந்த சில ஆட்களை கைது செய்துவிட்டு அங்கிருந்த ஒவ்வொரு அறையாக தேட, எந்த பலனும் இல்லை யாரும் கடத்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

 கார்முகில் வர்ணன் கிட்டத்தட்ட வெறி பிடித்தவன் போல் அங்கிருந்த ஒவ்வொருவரையும் அடித்து விசாரித்து ஒவ்வொரு அறையும் தேடியும்.. மதுரா கிடைக்காமல் போக பைத்தியம் பிடித்தவனாய் அலறினான்.

ஆனால் அதே பில்டிங்கில் சுரங்க பாதை ஒன்று இருப்பதும், அங்கிருந்த ஒரு அறையில் தான் அவள் இருப்பது அவர்களுக்கு தெரியாதே..!

மேலே இருப்பவர்களிடம் என்னதான் விசாரித்தாலும் இது சாதாரண ஆராய்ச்சி நிலையமாஅ என்றே பதில் வர, ஆனால் தேஜு அனுப்பிய ஜிபிஎஸ் ட்ரக்கரில் இருந்து சிக்னல் அவ்விடத்தை தான் காட்டியது.

மாதேஷ் ஷாலினி இருவரும் நம்பிக்கை இழந்தவர்களாகிட, ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் தலையில் அடித்துக் கொண்டு அழுக, கார்முகில் வர்ணனின் மனது மட்டுமே அவளின் சுவாசத்தை உணர்ந்ததால் இன்னும் துடித்துக் கொண்டுதான் இருந்தது.

“இல்ல மதுரா இங்க தான் இருக்கா.. நான் கண்டுபிடிப்பேன்”என்ற தனக்குத்தானே உருப் போட்டுக் கொண்டவன், அங்கிருந்த ஒவ்வொரு இடுக்கையும் ஒவ்வொரு இடைவெளியையும் சோதனை விட, கடைசியாக ஸ்டோர் ரூம் வடிவில் இருந்த ஒரு அறையின் கதவு நேரடியாக பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படும் இடத்திற்கு அழைத்து செல்ல, அந்த லாரியை அங்கிருந்து எடுக்க சொன்னவன் எப்படியோ கண்டுபிடித்து விட்டான் கீழே இருந்த சுரங்க பாதையை..

அத்தனை அதிகாரிகளும் அவசரமாய் கீழே சென்று சோதனையிட ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகையான பெண்கள் உயிரோடும் உயிர் இல்லாமலும் கிடக்க, ஒவ்வொன்றையும் துடித்த போய் தான் பார்த்தார்கள் வந்திருந்த காவல்துறை அதிகாரிகள்.. அவர்களும் மனிதர்கள் தானே?

மாதேஷ் ஒரு அறையில் இருந்து தேஜஸ்வினியையும் வினோதாவையும் மீட்டுக் கொண்டு வந்திருக்க, மதுரா மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.

உடலும் மனமும் பதற தன்னவளுக்கு எதுவும் ஆகி இருக்காது…என்று கடைசியாக இருந்த அறையைத் திறக்க,

உடைகள் களையப்பட்ட நிலையில் மதுராவின் உடலை கூறு போடும் ஆயுதத்தில் ரத்தம் வடிய மார்டின் நின்றான்.

அவன் கையில் இருந்த ஆயுதம் மதுராவின் கை விரலை வெட்டிக் கொண்டிருந்தது.

அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் தனது துப்பாக்கி குண்டை அவனின் கைகளில் இறக்கியிருந்தான் கார்முகில்.

தொடரும்…

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
30
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்