
29. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
மதுரா தேஜுவுடன் கிளம்பி சென்றதும் அவளை தடுக்க தோன்றாமல் சிலையாக நின்றான் கார்முகில்.
அவன் நினைத்தால் அவளை தடுக்கலாம் நிறுத்தலாம் தான்… ஆனால் முடியவில்லை.
இயலாமையுடன் வெறுப்புடன்… அவள் பேசி சென்ற பேச்சு அவனுக்குள் பெரும்பிரளயத்தையே ஏற்படுத்தி இருக்க, அதுவும் அவளது எனக்குன்னு யாருமே இல்லையே! என்ற அந்த கதறல் அவனின் உள்ளத்தை உலுக்கி, அவனின் காதல் மனதை சிதைத்து சில்லு சில்லாய் நொறுக்கியது.
இத்தனைக்கும் மதுரா அத்தனை அழுது தவித்து எனக்காக ‘எனக்காகன்னு சொல்லி இங்க எனக்காக யாருமே உண்மையா இல்லையே!’ என்று கதறிய போது தான்… தாங்கள் அவளுக்காக அவளுக்காக அவள் பாதுகாப்பிற்காக என்று யோசித்தோமே தவிர அவளைப் பற்றி யோசிக்க தவறியது புரிந்தது.
எங்கே தவறினோம்? எதில் தவறிழைத்தோம் என்று அவளை இங்கு சந்தித்த பொழுதிலிருந்து நடந்த அனைத்தையும் யோசிக்கும்போது… அவனுக்கும் சிலது புரிந்தது. ஆரம்பத்திலிருந்தே தன் விருப்பத்தையும் காதலையும் அவளுக்கு சரிவர உணர்த்தாமல், நான் உன் கணவன் என்ற உரிமையை மட்டும் காண்பித்ததாக தோன்ற, ஒரு காதலனாக கணவனாக உனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அவளுக்குள் விதைக்காதது யாரின் தவறு? அப்படி உணர்த்தி இருந்தால் அவள் இன்று தன் கணவன் இருக்கிறானே என்ற நம்பிக்கையுடன் தன்னிடம் அடைக்கலம் புகுந்திருப்பாளே..! தவறு தன் பக்கம் தான் என்ற உண்மை முகத்தில் அடிக்க, உள்ளுக்குள் துடி துடித்தான்.
அவளைப் பார்த்த நாளிலிருந்து தனக்குள் துளி துளியாய் துளிர்ந்து பெரும் விருச்சமாய் வளர்ந்து நிற்கும் தனது காதலை.. காதலுக்குரியவளுக்கு காட்டாமல் போன தன் மடத்தனத்தை எண்ணி இறுகிப்போன முகத்துடன் கண்கள் கலங்கி தன்னை சமன்படுத்த முடியாமல் வெறித்து நின்றது அவனது பார்வை.
மாதேஷ் ஷாலினி இருவரும் சமாதானப்படுத்தயும் அவன் நிலை மாறவில்லை.
ஜெகதீஷும் அதே நிலையில் தான் இருந்தான்.
அவன் நினைத்தது என்னவோ உண்மை தெரிந்தால் தங்கையானவள் தன்னை புரிந்து கொள்வாள் என்பதே…!
ஆனால் அவளோ காயப்பட்டவளாக பெரும் சீற்றத்துடன் கதறி விட்டு தோழியோடு சென்றுவிட, அவனுமே அவளின் இந்த முடிவை கிஞ்சித்தும் எதிர்பார்க்காதத்தால் செய்வதறியாது தான் நின்றான்.
மிஞ்சிப் போனால் கத்துவாள் கோபப்படுவாள் அவளை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைத்தவனின் எண்ணத்தை முற்றிலுமாக தகர்த்து எறிந்து இருந்தாள் மதுரா.
பிரகதீஷ் அதற்கும் மேல் மதுராவின் முடிவால் மனதளவில் சுருண்டு விட்டான். கட்டுப்பாடில்லாத தனது வாயினால் ஏதேதோ பேசி அவளை நேற்றே துன்பப்படுத்தியாயிற்று.
இன்றோ… அவளே மொத்தமாய் ஒதுங்கி சென்று விட்டாள். அதுவும் செல்வதற்கு முன்பு அவளின் கதறல்…!
உள் மன ரணத்தோடு நின்ற பிரகதீஷிற்கு தன் சகோதரனின் மீது அத்தனை கோபம்… எப்படி தன்னோடு ஒரே தொப்புள் கொடியில் ஒன்றாய் பிறந்தவனுக்கு தன்னிடம் சொல்லாமல் இத்தனை பெரிய உண்மைகளை மறைக்க முடியும்? ஓரளவு தன்னால் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான் என்றாலும் அதற்காகவே இத்தனை பெரிய உண்மையை தன்னிடம் இருந்து மறைப்பதா அவன்? அப்படி என்றால் தங்களது குடும்பத்தில் தனது நிலை தான் என்ன? நினைக்க நினைக்க அத்தனை வெறி… அதிலும் சகோதரனின் இச்செயலுக்கு முழு காரண கர்த்தாவாக இருந்தவன்… தன் கண்முன்னே அமர்ந்திருக்கும்
இவன் தானே? என்று ஒரு வெறியுடன் கார்முகில் வர்ணனை பார்த்தவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சோபாவில் இறுகி போய் அமர்ந்திருந்த கார்முகில் வர்ணனை நெறுங்கி, “நடந்த எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம்… நீ மட்டும் திரும்பவும் எங்க லைஃப்குள்ள வராம இருந்திருந்தா.. நாங்க சந்தோஷமா இருந்திருப்போம்” என்று ஆத்திரத்துடன் கண்ணாடி பூச்சாடியை தூக்கி அவன் தலையில் அடித்து விட, தலையில் ரத்தம் வடிந்தாலும் கார்முகில் வர்ணனிடம் அசையவில்லை.
பேசுவான் கத்துவான் சண்டை போடுவான் என்று மட்டுமே நினைத்தவன் இப்படி அடிப்பான் என்று நினைக்கவில்லை ஜெகதீஷ், “டேய் என்னடா பண்ற? விடு அவர..” என்று கத்தி அவனை விலக்கி தள்ள, தள்ளிவிட்ட வேகத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தலை குப்புற கீழே விழுந்தான் பிரகதீஷ் அவனுக்கும் தலையில் அடி.
அதற்குள்,
இடிந்து போய் அமர்ந்திருந்த கார்முகில் குடிப்பதற்காக தண்ணீர் எடுத்த வர சென்ற ஷாலினியும், மொபைலில் வந்த முக்கிய அழைப்பை ஏற்று பேச சென்ற மாதேஷும், ஹாலில் கேட்ட சத்தத்தில் உள்ளே வந்து பார்த்தவர்கள் கார்முகில் வர்ணனின் நிலைமையை பார்த்து அதிர்ந்து விட்டார்கள். அவனின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.. அந்த அளவு வேகத்தில் அவனை அடித்து இருந்தான் பிரகதீஷ். ஒரு பக்கம் பிரகதீஷ் கீழே கிடக்க, ஜெகதீஷோ, என்ன செய்வது? யாரு பக்கம் நிற்பது? என்ன செய்ய? என்ன சொல்ல? என்று தெரியாமல் தலையில் கை வைத்து நின்றான்.
ஒரு சில நொடியில் நடந்தது புரிய, எழுந்து அமர்ந்த பிரகதீஷை கடுங்கோபத்தில் நெருங்கிய மாதேஷ், அதே வேகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“டேய் யார் மேல கை வச்சிருக்கன்னு தெரியுமா?”என்று மாதேஷ் கத்த,
“ஒரு துரோகி மேல தான் கை வச்சிருக்கேன்” அடி வாங்கினாலும் திமிர் குறையாமல் பதில் சொன்னான் பிரகதீஷ்.
“யாருடா துரோகி?”என்று கேட்ட மாதேஷிற்கு ரத்தம் கொதித்தது.
“பின்ன எங்க வீட்டுக்கு உளவு பார்க்க வந்ததும் இல்லாம என் தங்கச்சி வாழ்க்கையையும் வீணாக்கிட்டு போனவன் தானே இவன்?”
“ஹான்… என்னடா வீணாக்கிட்டு போனான்? வீணாக்கிட்டு போனான்னு அதையே சொல்லிட்டு இருக்க? அன்னைக்கு உன் தங்கச்சி கழுத்துல இவன் தாலி கட்டலைன்னா உங்க அப்பா அங்கிருந்த வேற யாரயாவது மதுராவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பார்.. ஏன்னா உன் அப்பாவுக்கு அந்த பெர்னாண்டஸ் மேல அவ்வளவு பயம்..
ஏன் இன்னைக்கு இவ்வளவு கோவப்படுற நீ.. அன்னைக்கே சொல்ல வேண்டியது தானே.. எதுக்கு இப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்றீங்கன்னு உங்க அப்பா கிட்ட கேட்க வேண்டியதுதானே!”
“அப்போ நான் மதுராவ ஏத்துக்கல…”என்று ஏதோ சொல்ல வந்தவனால் முன்பு போல நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பதில் சொல்ல முடியவில்லை. அப்போதைய சூழ்நிலையில மதுரவாணி என்பவள் அவனுக்கு அப்படி ஒன்றும் முக்கியமானவள் இல்லையே! அவனைப் பொறுத்தவரை அவர்களின் குடும்பத்திற்கு தேவை இல்லாத ஒருத்தி தானே அவள்… அதை வெளிப்படையாய் சொல்ல முடியாமல் அவன் மௌனிக்க,
அவனின் மௌனத்தை கேலியாய் பார்த்த மாதேஷ்,
“பதில் சொல்ல முடியல தான? அந்த இக்கட்டான சிச்சுவேஷன்ல மாட்டிக்கிட்டாலும் தன்னோட மனசுல மதுரா இருக்கிறான்னு புரிஞ்சுகிட்டதும் தன்னோட ஸ்டேட்டஸ் தன்னோட பதவி எல்லாத்தையும் மறந்து அவளுக்காகவே அவளை ஏத்துக்கிட்டவன் என் ஃப்ரெண்ட்.. நீயே சொல்லு அன்னைக்கு அவன் கட்டின தாலிய மதுரா தான் கழட்டி கொடுத்தாளே தவிர அவன் கழட்டி கேட்டானா? இல்லனா நான் சும்மாதான் தாலி கட்டினேன்னு வந்து சொன்னானா? எத வச்சு அவன துரோகின்னு சொல்ற? அவ வேண்டாம்னு துரத்த துரத்த உன் தங்கச்சிக்கு எதுவும் ஆக கூடாதுன்னு பின்னாடியே அலையுறானே அதனாலயா?”
என்று கேட்க,
பிரகதீஷ் பதிலின்றி தலை கவிழ்ந்தான்.
ஷாலினியும் விடவில்லை. அவளும் ஒரு பிடி பிடித்து விட்டாள்.
“எவ்வளவு மன்த்ஸ் நினைவு இல்லாம கோமால படுத்த படுக்கையா கஷ்டப்பட்டாங்கன்னு தெரியுமா? இப்போ தான் ஓரளவு நார்மலாகி ப்ச்ச்… எதையும் யோசிச்சு பாக்காம சட்டுன்னு அடிச்சு வைக்கிற? அவ்ளோ பெரிய ஆளா நீ? ஜெகதீஷ் உன்கிட்ட எதுக்கு உண்மையை மறைச்சானு இப்பதான் தெரியுது… பண்றதெல்லாம் முந்திரிக்கொட்டைத்தனம்” என்று தன் பங்கிற்கு திட்டி விட, மாதேஷ் கார்முகில் வர்ணனுக்கு முதலுதவி செய்துவிட்டு மருத்துவருக்கு தகவல் சொல்ல,
பிரகதீஷ் தவறை உணர்ந்தவனாய் தரையிலேயே மடிந்தமர்ந்தான்.
நடந்த கலவரத்தில் மதுரா தேஜஸ்வினியோடு தான் சென்றிருந்தால் என்பதால், கோபத்தில் சென்றவளின் உணர்வுகள் சிறிது சமன்படட்டும், சமாதானப்படுத்தி விடலாம் என்றே அனைவரும் நினைத்திருக்க, நடந்ததோ அதற்கு மாறானது.
அத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு கோழி குஞ்சை போல் மதுராவை அடைகாத்தவர்கள் அன்று எந்த நம்பிக்கையில் தான் தேஜுவுடன் அனுப்பி வைத்தார்கள் என்று தான் தெரியவில்லை.
******
இங்கோ, வினோதாவிற்கோ சாவின் விளிம்பு நிலை தான்… யாரோ தன்னை மூச்சு கூட விட முடியாமல் இறுக்கும் உணர்வு!
இரட்டையர்கள் இருவரும் மதுரா எங்கே இருக்கிறாள் என்று பேச்சுக்கு கூட தேடாமல் முக்கியமான அலுவலக வேலை என்று காலங்காத்தாலேயே அவளை விட்டு சென்றிருக்க, என்ன முயற்சித்தும் மதியவேளை ஆகியும் மதுராவை பற்றிய தகவலை அவளால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் அவளை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் அடுத்தடுத்து மார்டீனின் ஆட்களிடம் இருந்து கொலை மிரட்டலும், கூடவே தமிழ் நாட்டில் அவளின் கணவனை வேறு கடத்தி வைத்துக்கொண்டு மதுராவை அவர்களிடம் ஒப்படைத்து ஆக வேண்டும் இல்லையென்றால் இருவரும் உயிர் பிழைக்கவே முடியாது
என்று கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் அவளுக்கு அப்படி ஒரு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க, மீளவே முடியாத ஒரு ஆழ்ந்த குழிக்குள்… அதள பாதாளத்திற்குள் விழுந்த உணர்வு தான் வினோதாவிற்கு…
தலையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளுக்கு,
மதுரா எங்கே சென்று இருப்பாள்? என்ற யோசனைதான். அவளை மட்டும் பிடித்து ஒப்படைத்து விட்டால்.. தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுவதோடு மதுராவை ஒப்படைப்பதால் கிடைக்கப் போகும் இன்னும் சில பல லட்சங்களோடு இந்த நாட்டை விட்டே சென்றுவிடலாம் இந்தக் கொலைகார கும்பல்களிடம் இருந்தும் தப்பித்து விடலாமே!
அப்படி மட்டும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவள் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.
மதுரா கண்டிப்பாக நேற்று வந்திருந்த அவள் கணவனுடன் தான் சென்று இருப்பாள்.. அவளைப்போய் எங்கே தேடுவது? என்று நினைத்தாலும்..
ஒருவேளை நூற்றில் ஒரு பங்காக
அவள் அவனுடன் செல்லாமல் வேறு எங்கும் சென்றிருந்தால்?
இங்கே அவளுக்கு தெரிந்தவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
என்று யோசிக்கும் பொழுது சட்டென்று கண்முன்னே வந்தது தேஜஸ்வினியின் முகம் தான்!
மதுரா மருத்துவமனையில் இருக்கும் பொழுது அவளின் தோழி என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி பார்க்க வந்தவள் அவள் தானே!
அவளிடம் கூட வினோதா நல்லவள் போல் தான் பேசியிருந்தால்… ஒருவேளை அவளிடம் விசாரிக்க முடிந்தால் மதுரா எங்கே இருக்கிறாள்? என்று தெரிந்து கொள்ளலாம் தானே…!
ஆனால் அவளை எப்படி பிடிப்பது அவளைப் பற்றி அவளின் பெயர் மற்றும் அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தை தவிர… அவளுக்கு மற்ற எதுவும் தெரியாதே!
மீண்டும் அவளின் மூளை வேகவேகமாக கணக்கு போட, மதுராவை கண்டறிவதற்கான வழியும் கிடைத்து விட, கண்ணீரை துடைத்துக் கொண்டு
முகம் பளபளக்க சட்டென்று எழுந்தாள் வினோதா.
தொடரும்…
30. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
இரவின் நிசப்த்தத்தை கிழித்துக்கொண்டு வரிசையாக மூன்று கண்டெய்னர் லாரிகள்… அடுத்தடுத்ததாய் பயணமாகிக் கொண்டிருந்தது
அந்த நெடுஞ்சாலையில்…
மூன்றாவதாக பயணமாகிக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் கை கால்கள் கட்டி போடப்பட்ட நிலையில் மயக்க நிலையில் கிடந்தாள் மதுரவாணி.
அவள் அருகிலேயே தேஜஸ்வினியும் மயக்கத்தில் இருக்க, அவர்களுடனேயே அவர்களைப் போலவே கட்டிப்போட பட்டிருந்தாள் வினோதா. ஆனால் மயக்கத்தில் இல்லை. விழித்து தான் இருந்தாள்.
கண்டெய்னர் லாரி முழுவதும் மருத்துவ உபகரணங்களும் மருந்து வாடையாக இருக்க, வினோதாவிற்கு உமட்டிக் கொண்டு வந்தது. மதுராவை அவர்களிடம் ஒப்படைத்து விட்டால் தப்பித்து விடலாம் என்று நினைத்தவளின் நினைப்பில் பெரும் இடியை இறக்கியது போல அவளையும் சேர்த்து கடத்திருந்தார்கள் அந்த கொடூரர்கள்.
பட்டினி வேறு. குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் இருக்க..கர்ப்பிணி பெண் என்று கூட பாவம் பார்க்கவில்லையே என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவர்கள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் சிறு அறைக்குள்ளேயே மூவரும் கிடக்க,
வெளியே ஆட்கள் சிலர் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பது அவளுக்கு கேட்க தான் செய்தது.
ஆனால் வாயும் சேர்த்து கட்டி போடப்பட்டிருக்க கத்த முடியவில்லை.
கத்த முடிந்தால் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் லாரியில் இருந்து தப்பிக்கவா முடியும்?
அதற்குள் தேஜு கண்விழித்து விட, அவளுக்கும் ஒரு நொடி தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. சற்று நேரத்தில் இருட்டு கண்களுக்கு பழக்கமாகி விட, தன்னருகில் கட்டி போடப்பட்டிருந்த இருவரும் அவளுக்கு அரைகுறையாக தெரிந்தனர்.
மதுரா இன்னும் கண் விழிக்கவில்லை சுருண்டு போய் கிடந்தாள்.
வினோதா விழித்தாலும் அசைய முடியாமல் கிடக்க தேஜஸ்வினி தன் முயற்சியால் பின்னால் கட்டப்பட்டிருந்த தன் கையை தன் கால் வழியாக முன்னாள் கொண்டு வந்து கட்டப்பட்டிருந்தால் இரு கைகளையும் ஒன்றாய் இணைத்து தன் வாயில் இருந்த கட்டையும்
அவிழ்த்து எடுத்தவள், பற்களால் மணிக்கட்டில் இறுக்கமாய் சுற்றப்பட்டு இருந்த கயிறையும் உறுவி எடுத்தாள்.
வினோதா தேஜு எதுவோ செய்கிறாள் என்று உற்றுப் பார்த்ததில் அவள் மிக எளிதாய் தன்னை கட்டி இருந்த கயிற்றை விடுவிப்பதை பார்த்தவளுக்கு அத்தனை ஆச்சரியம்.
ஆனால் ஆச்சரியம் படுவதற்கு கூட தெம்பு இல்லை உடலுக்கு.. தாகமும் பசியும் பொறுத்துக் கொள்ள முடியாததாய் இருந்தது.
அதற்குள் தேஜு மதுராவின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு வினோதாவை பார்க்க, ஒரு நொடி யோசித்தாலும் அவளுக்கும் அத்தனை கட்டுகளையும் அவிழ்த்து தான் விட்டாள்.
மதுரா இன்னும் சுற்றம் தெரியாமல் கிடக்க,
“நா…நா..தப்பு சாரி ” என்று வினோதா சொல்ல வரவும்,
“ஷ்ஷு”என்ற உதட்டிற்கு மேல் கை வைத்து அவளை அமைதியாக்கியவள், தனது கையில் கட்டி இருந்த அனலாக் வாட்ச் பின்பகுதியில் ஏதோ ஒரு பட்டனை அழுத்தவும் பச்சையும் சிவப்புமாக வித்தியாசமாக ஒளிர்ந்தது.
**********
“அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா.. இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருப்பா?”என்று மாதேஷ் கடுப்பாகி கத்திக் கொண்டிருக்க,
“ஷீ ஹஸ் சம் ரீசன்ஸ் மாது.. பொறுமையா இரு..”என்று ஷாலினி அடக்கியும், அப்படி என்ன பெரிய காரணமாக இருக்கப் போகிறது என்று நினைத்தவனுக்கு அத்தனை ஆத்திரம்.
மதுராவை தேஜு அழைத்து சென்றதால் மட்டுமே இங்கு அனைவரும் கவலையில்லாமல் இருந்திருக்க, அந்த நம்பிக்கை மதுரா கடத்தப்பட்டதும் பொய்யாகி போயிருந்தது.
அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல்,
தனது சிஸ்டமில் இருந்த சாப்ட்வேர் அலைவரிசையை சரி பார்த்துக் கொண்டிருந்த கார்முகில், “ஜிபிஎஸ் கனெக்ட் ஆகிட்டு… நவ் வீ கேன் ட்ராக் தி லொகேஷன் கைய்ஸ்..”என்று உணர்ச்சியற்றவனாய் சொல்ல,
மாதேஷ் கவலையாய் நண்பனை பார்த்தான்.
ஜெகதீஷ் அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பார்த்தபோது வினோதாவும் அலைபேசியில் யாரோடு தீவிரமாய் பேசியபடி வெளியேறி இருப்பது தெரிய வந்திருந்தது.
ஜெகதீஷ் பிரகதீஷ் இருவருக்கும் தமக்கையை நினைத்து அத்தனை அதிருப்தி.. மதுரா வேண்டாதவளாகவே இருந்தாலும் இப்படியா? என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அங்கு தேஜு ஜிபிஎஸ் ட்ராக்டரை ஆன் செய்ததும், இங்கே அவர்கள் சென்று கொண்டிருக்கும் இடம் தெள்ளத் தெரிந்திருக்க, மதுராவையும் மற்றவர்களையும் மீட்பதற்காக கிளம்பியது அவர்களின் குழு.
இங்கு கண்டெய்னர் லாரியில் மதுராவும் கடைசியாக கண் விழித்திருந்தாள். ஆனால் மற்றவர்களைப் போல் பதட்டமும்
பயமும் இல்லாமல் அவள் நிமிர்ந்து அமர, தேஜு அவளைப் பார்த்து முறைத்தாள்.
வினோதா மதுரா என்ன சொல்ல போகிறாளோ? என்று திக் திக் மனதோடு பார்த்தாள். ஆனால் மதுரா அவளை கண்டு கொள்ளவே இல்லை.
தேஜுவோ, பொறுக்க முடியாமல்
“நான் தான் சொன்னேன்ல நம்ம எடுக்க போறது ஹைய் ரிஸ்க்ன்னு..நா சொல்ல சொல்ல கேட்காம வாண்டடா இவங்க கைல வந்து மாட்டி இருக்கோமே.. இப்ப நம்மள எங்க கொண்டு போறாங்கன்னு கூட தெரியல..”என்று வசைமழை பொழிய,
“அவங்களுக்கு தேவை நான்.. என்ன மட்டும் தான் தூக்கிட்டு வருவாங்கன்னு நினைச்சேன்..”என்றால் அவள்.
வினோதா தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருவரையும் பார்த்தவள்,
“உங்கள நான் தானே கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன்?”என்று கேட்க,
“ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டதும் என் நம்பர் உங்களுக்கு எப்படி யோசிக்காம கொடுத்தாங்கன்னு நினைக்கிறீங்க?”
வினோதாவிற்கும் அப்பொழுதுதான் புரிந்தது. இவர்களின் வலையில் தான்தான் விழுந்திருக்கிறோம் என்று..
“அடப்பாவிகளா உங்களால நானும் இவனுங்க கிட்ட சிக்கிட்டேனே!”
அவளை தேஜஸ்வினி எரிச்சலாய் பார்த்தாள்.
“ஏன் சிஸ்டர் உங்களுக்கு வந்தா மட்டும் தான் ரத்தமா? எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? மதுராவை மட்டும் மாட்டி விடணும்னு நினைக்கிறீங்க?”
வினோதா பதில் பேச முடியாமல் விழித்தவள்,
“என் ஹஸ்பண்ட கடத்தி வச்சிட்டு அதான் என்ன மிரட்டுனாங்க.. என் ஹஸ்பண்ட கம்பேர் பண்ணும் போது இவ எனக்கு ஒன்னும் முக்கியம் இல்ல” என்று மதுராவை காட்ட,
அவள் பக்கம் திரும்பவே இல்லை மதுரா.
“அப்போ எங்க உயிர கம்பேர் பண்ணும் போது உங்க உயிரும் எங்களுக்கு முக்கியம் இல்ல.. நாங்க மட்டும் இங்க இருந்து தப்பிச்சு போயிருக்கிறோம்”
“என்ன சொல்றீங்க மனசாட்சியோட தான் பேசுறீங்களா? நான் பிரக்னண்டா இருக்கேன் நீங்களாவது ஒரு உயிர் நான் ரெண்டு உயிரா இருக்கேன்..”என்று வினோதா வாதிடமும்,
“என்ன சொல்றீங்க நாங்களும் ரெண்டு உயிரா தான இருக்கோம்?”என்ற தேஜஸ்வினி மதுராவின் தோள் பட்டையில் கை போட்டுக்கொள்ள,
அவர்களை எரிச்சலாய் பார்த்தாள் வினோதா.
“என்ன காண்டாகுதா? உங்கள மாதிரி செல்பிஷா யோசிக்க மாட்டோம் கவலைப்படாதீங்க.. தனியா எல்லாம் தப்பிச்சு போக மாட்டோம்”என்று அப்பொழுதும் தேஜு விடவில்லை.
அதுவரை மதுரா எதுவும் பேசாததால்,
“என்னாச்சு மது ஏன் அமைதியா இருக்க?” என்று தேஜஸ்வினி கேட்க,
“அவங்களுக்கு தேவை நான் தானே உங்கள எதுக்கு கடத்துனாங்க?”துயரம் சுமந்த விழிகளுடன் தோழியை பார்த்தாள் மதுரா.
“நீ தானே உனக்கு அப்படி என்ன ஆபத்து இருக்குன்னு கேட்ட… நான் சொன்னேன்.. நம்பல..இப்ப ஆபத்து என்னன்னு தெரிஞ்சிருக்குமே!”என்று சொன்ன தேஜஸ்வினிக்கு இன்னும் சிரிப்பு வாடவில்லை.
மதுரா கலங்கிய விழிகளோடு அவளைப் பார்த்தாள்.
அந்த சூழ்நிலையும் இருட்டும் அவளுக்கு பயத்தை கொடுக்காமல் இல்லை ஆனாலும் தோழியின் அருகே இருக்கிறோம் என்ற தைரியமே தேஜஸ்வினியை தெளிவாக்கியது.
கூடவே அவளின் உடன்பிறவாத அண்ணன் கார்முகில் வர்ணன் எப்படியாவது காப்பாற்றி விடுவான் என்ற தைரியமும் அவளுக்கு நிறைய இருந்தது.
வினோதா தான் இவர்களுக்கு எப்படி தன்னை பற்றி எப்படி தெரிந்தது என்று குழப்பத்தோடு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் அவ்வறையில் இருந்து வந்த சத்தத்தில் வெளியே இருந்த ஆட்களில் ஒருவன் வந்து கதவைத் திறந்து விட்டு பார்க்க,
மூவரும் மயங்கியது போல் கிடந்தாலும் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டிருந்தது அவர்கள் தப்பிக்க முயற்சிக்கிறார்கள் தெரிந்துவிட,
அந்தத் தகவல் உடனுக்குடன் மார்டினுக்கும் பகிரப்பட்டது.
கண்டெய்னர் லாரி முழுவதும் சவுண்ட் ஃப்ரூப் சிஸ்டம் இருந்ததால் இவர்களின் சத்தம் வெளியே போக போவதில்லை.
அதே நேரம் வெளியே இருக்கும் ஆட்களிடம் இருந்தும் ஓடும் லாரியில் இருந்தும் மூன்று பெண்களும் தப்பிக்கவும் முடியாது என்பதால் பயமில்லை என்றாலும், யார் முதலாக போட்ட கட்டை அவிழ்த்தது என்று விசாரிக்க சொன்னான்.. அவனுக்கு நன்றாக தெரியும் தன் ஆட்கள் அவ்வளவு லேசாக கட்ட மாட்டார்கள் என்று… அத்தனை இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும் கட்டில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள் என்றால்? அவர்களை இப்பொழுதே தட்டி வைக்க வேண்டுமே!
அடியாட்கள் வந்து விசாரிக்கும் பொழுது, மதுரா தான் தான் முதலில் அவிழ்த்ததாக சொல்லிவிட, மார்ட்டீனுக்கு தகவல் போனது.
“இன்னும் கொஞ்ச நேரத்துல என்கிட்ட வந்து பொணமாக போகறவ தானே.. அடிக்க வேண்டாம் விடுங்க” என்று சொல்லிவிட்டான். ஆனாலும் மீண்டும் பழையபடி கட்டிப்போட பட்டார்கள் அவர்கள்.
நேரம் இரவு இரண்டு மணி… மும்பை மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணமாகிக் கொண்டிருந்த லாரிகள் மிகப்பெரிய ஆராய்ச்சி கூடமாய் குடோன் போன்ற அமைப்பு ஒன்றிற்கு வந்து சேர்ந்தது.
மதுரா தேஸ்வினி வினோதா மூவரையும் சாக்குமூட்டை போல் தூக்கிக்கொண்டு வந்து போட,
எங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறோம்? அவதானிக்க முடியாத அளவிற்கு இப்படி ஒரு வித்தியாசமான நாற்றம் வேறு.
சுத்தமாய் முடியாததால் வினோதா வாந்தி எடுத்துவிட்டாள். அதற்கு அங்கு நின்ற அடியாட்களிடம் இரண்டு திட்டும் அடியும் தான் அவளுக்கு கிடைக்க, இன்னும் தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை.
அவர்களுக்கு முன்னால் வந்திருந்த இரண்டு லாரிகளிலும் கூட பொருட்களோடு பொருட்களாக பெண்கள் தான் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்டிருந்தனர்.
அவர்களின் கதறல் கேட்காதவாறு வாய் வேறு அடைக்கப்பட்டிருந்தது.
இத்தனை பெரிய இடத்தில் சிக்கி இருக்கோமே…என்ற பயமும் தோழியை இதில் இழுத்து விட்டோமே என்ற பயமும் இல்லாமல் தேஜு அமைதியாக அங்கிருந்த சூழ்நிலையை அவதானிக்கப்படி இருந்தாள்.
மதுராவின் கண்கள் அங்கிருந்த பெண்களை தான் பார்த்தது.
எல்லாம் பள்ளி படிப்பில் இருக்கும் பிள்ளைகளாகவும் கல்லூரி படிப்பில் இருக்கும் பிள்ளைகளாகவும் இருக்க, இத்தனை பேரே என்ன செய்யப் போகிறார்கள்?
ஏதோ தவறாக இருக்கிறதே!
பிள்ளைகளை தரம் வாரியாக பிரித்து தனித்தனியாக ஒவ்வொரு இடத்திற்கு அவர்கள் அனுப்ப,
தன்னை என்ன செய்யப் போகிறார்களோ? என்று வினோதா பயத்தோடு அமர்ந்திருந்தாள்.
ஆனால் தேஜு வினோதாவை தனியறைக்கு அனுப்பி விட்டு வினோதா மட்டும் ஸ்ட்ரக்சரில் ஒரு அறையில் கட்டி போடப்பட்டிருக்க, சற்று நேரத்தில் அவளுக்கு எமனாக வந்தான் மார்ட்டின். அவன் கண்களில் தெரிந்த பழிவெறியும் இரத்த வெறியும் மதுராவை அரை உயிராக்கி இருக்க, மதுராவின் கண்கள் இறுக்கமாய் மூடிக் கொண்டது.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
35
+1
2
+1
1
⬅ Prev Episode
நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் -28
Next Episode ➡
நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் – 31
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

சூப்பர் எபி ♥️