24. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
அந்த ஐந்து நட்சத்திர ரெஸ்டாரண்டில் நால்வர் அமரும் இருக்கையில் சென்று அமர்ந்தவர்கள், தங்களுக்கு தேவையான குளிர்பானத்தையும் மாலை நேர சிற்றுண்டியையும் ஆர்டர் செய்துவிட்டு நிதானமாக அமர்ந்தனர்.
மதுராவின் முகம் ஒன்றும் அத்தனை தெளிவாகவே இல்லை ஏற்கனவே பிளாக் என்ன செய்கிறான் எப்படி இருக்கிறான் என்று தெரியவில்லையே என்று குழம்பிக்கொண்டே அன்றைய தினத்தை அலுவலகத்தில் கழித்தவள் ஆயிற்றே..! அவன் அருகில் இருந்தாலும் பிடிக்கவில்லை. அவன் அருகில் இல்லை என்றாலும் பிடிக்கவில்லை குழப்பமான உணர்வோடு இருந்தாலும் ஒன்று மட்டும் அவளால் மறுக்க முடியவில்லை அவனைத் தனக்கு பிடித்திருக்கிறது என்பதை தான். அதனால் தானோ என்னவோ அவனை காணாமல் அவளுக்குள் அத்தனை தவிப்பு..
எப்படியோ அலுவலகத்தில் சிந்தை சிதறாது இன்று அவனைப் பார்த்தே ஆக வேண்டும்… என்ற குறிக்கோளோடு வேலையை முடித்தவள், அத்தனை நேர பரபரப்பிற்கு முடிவாய் அவனை தன் கண்ணால் ஒரு முறை பார்த்து விட்டால் இந்த அலைப்புறுதல் அடங்கிவிடும் என்று வீட்டிற்கு செல்வதற்கு முன் தோழியுடன் அவனைப் பார்த்துவிட்டு கிளம்பி விடலாம் என்று மனதிற்குள் திட்டம் தீட்டி வைக்க, அதற்கு விதி அனுமதிக்க வேண்டுமே!
அவளின் திட்டத்தில் குறுக்காக புகுந்து குட்டைய குழப்பிய மூவரும் தன்னை அழைத்து வருவதற்கு பதிலாக அள்ளிக் கொண்டு வந்ததாகவே அவளுக்கு தோன்ற, உர்ரென்ற முகத்தோடு தான் அமர்ந்திருந்தாள்.
“இங்க பாரு குட்ட…”என்று முதலில் பேச்சை ஆரம்பித்த பிரகதீஷ், ஜெகதீஷ் முறைக்கவும்,
குரலை செறுமிக் கொண்டு,
“அது ம்ம்ம் மது… உனக்கு நான் சொன்னா சர்ப்ரைஸ் இவர் தான் இவர் யார் தெரியுமா? நம்ம நாட்டோட இளம் விஞ்ஞானி விருது வாங்கின தி கிரேட் மாஹித் மனோகரன்.. சொந்தமா ரிசர்ச் சென்டர் வச்சிருக்கார்.. அப்பப்போ கெஸ்ட் லக்சரரா இன்டர்நேஷனல் செமினார் எல்லா அட்டென்ட் பண்ணுவார்”
மதுரா எந்த ஆச்சரியமும் படவில்லை.
“ஓஓ… சூப்பர் சயின்டிஸ்ட்டா இவர்..நீங்க படிச்ச காலேஜ்ல உனக்கு பழக்கமா ப்ரக்கு? உங்களுக்கு சீனியரா?”என்று கேட்டாளே ஒரு கேள்வி.
அது சகோதரர்கள் இருவரும் தலையை சொரிந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பின் இருவரும் சிரித்து,
“இல்ல மது… இவர்தான் உனக்காக நாங்க பார்த்திருக்கிற அலையன்ஸ்.. எங்க செலக்சன் எப்படி? உன்ன ஹாண்டில் பண்றதுக்கு உள்ள எல்லா பொறுமையும் இவர்கிட்ட இருக்கு.. அதோட அவர் இங்க ஒரு ரிசர்ச் சென்டர் ஓபன் பண்ண போறாராம் அந்த வேலையா தான் வந்து இருக்கார்… சோ நீ எங்கள விட்டு பிரிய வேண்டாம் எங்க கூடவே இருக்கலாம்” என்று சேர்த்து சொல்ல,
மதுரா அப்பொழுதும் அவர்களின் பேச்சை நம்பவில்லை. இப்படிதான் அடிக்கடி எதையாவது சொல்லி அவளை பயமுறுத்தி விட்டு,பிறகு ஜோக் என்று முடித்து விடுவார்கள் என்பதால்… சிரிப்போடையே
“என்னது? ஜோக் தான பண்றீங்க ரெண்டு பேரும்.. எதுல எதுல விளையாடனும்னு ஒரு வெவஸ்தை இல்ல.. உங்கள உங்க ஃப்ரெண்ட் தப்பா நினைக்க போறார்” என்று எதிரில் இருப்பவனைப் பார்க்க,
மாஹித் மனோகரன், அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அசையும் தொண்டைக் குழியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நொடி அதை கவனித்து விட்ட மதுராவின் கை தன்னிச்சை செயலாக கழுத்தை மறைக்க, அவனின் முகமோ சாதாரணமாகத் தான் இருந்தது.
இதெல்லாம் தன் பிரம்மையோ? என்று நினைத்தவளின் கவனத்தை கலைத்தான் ஜெகதீஷ்.
“நாங்க சொல்றது உண்மைதான் மது… சொல்லுங்க மாஹித்” என்று அவர்களின் பேச்சுக்குள் அவனையும் இழுக்க,
“ம்ம்ம் எஸ்.. மதுரவாணி தானே உங்க நேம்.. ஐ அம் டாக்டர் மாஹித் மனோகரன் ரிசர்ச் ஸ்பெஷலிஸ்ட்… உங்களுக்காக பார்த்திருக்க மாப்பிள்ளை நான்தான்”
“அவரே சொல்லிட்டார் இப்போவது நம்புறியா? நாங்க பொய் சொல்லி உன்ன பிராங்க் எல்லாம் பண்ணல தாயே” என்று பிரகதீஷ் உற்சாகமாக சொல்ல,
அது ஃப்ராங்காக இருந்தால் கூட சந்தோஷப்பட்டு இருப்பாளோ என்னவோ..ஆனால் இது உண்மை என்று சொன்னதால்
மதுரா திக்பிரம்மை பிடித்தவளாக அமர்ந்திருந்தாள்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள்? தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் இவனை தான் திருமணம் செய்ய வேண்டுமா?
எப்பொழுதோ உணர்ச்சிவசப்பட்டு இவர்களுக்கு வரன் பார்ப்பதற்கு தான் கொடுத்த வாக்குறுதி இப்பொழுது அவளின் பாதையில் முள்ளாக விழுந்து மலையாக உயர்ந்து நிற்க.. அவளால் வாயை திறக்க முடியவில்லை.
சரி பேருக்காகவாது தன்னிடம் தனியாக அழைத்து பேசி உனக்கு இஷ்டமா? என்று கேட்டால் கூட பிடிக்கவில்லை என்று சொல்லி சமாளித்து விடலாம்.. ஆனால் இங்கே நடந்தது என்ன? யாரை அவளுக்கு மாப்பிள்ளை ஆக பார்த்து வைத்திருக்கிறார்களோ அவனையே கண்முன்னே அமர வைத்துக் கொண்டு இதுதான் உனக்கு நாங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று அவனின் அருமை பெருமைகளை சொல்லி மதுராவை சம்மதிக்க வைக்க முயன்றால்… வாயடைத்து தான் போனாள். அந்த ஏசி ஹாலிலும் அவளுக்கு வேர்த்து வடிந்தது.
அதை கவனித்த ஜெகதீஷ் ,
“ஓய் எதுக்கு இப்ப டென்ஷன் ஆகுற? நாங்க ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கப் போறது இல்ல எங்களுக்கு இவர் பெஸ்ட் சாய்ஸ்ன்னு தோணுது… “
பிரகதீஷும்,
“நீங்க ரெண்டு பேரும் பேசி பழகிப் பாருங்களேன் உங்களுக்குள்ள ஒத்துப் போச்சுன்னா அடுத்த கட்டத்துக்கு நாம போகலாம்…”
மதுரா தயங்கிக்கொண்டே எதிரில் இருந்தவனை பார்த்தாள். அவனின் முகம் மிக மிக சாந்தமாக அவளைப் பார்த்தபடி இருந்தது.
பார்க்க டீசென்டாக தான் இருந்தான். ஒருவேளை தனியாக பேசினால் இவனிடம் தனக்கு திருமணமாகி விட்டதை சொல்லிவிடலாமா? என்று இவள் யோசித்துக் கொண்டிருக்க,
ஆனால் அதற்கும் வழியில்லாமல் பிரகதீஷ் அடுத்து சொன்னது அமைந்தது.
“நீ யோசிக்க எல்லாம் வேண்டாம் மது நாங்க ஆல்ரெடி அவர் கிட்ட உனக்கு நடந்த மேரேஜ் பத்தி சொல்லிட்டோம் உன்னோட பயம் பத்தியும் சொல்லிட்டோம் சோ அவர் உன்னை ஸ்ட்ரெஸ் பண்ண மாட்டார்” என்றான்.
அவள் அருகில் இருந்த பிரகதீஷ் “பேசிப் பாரு” என்று அவளின் தோளைத் தட்டி விட்டு ஜெகதீஷையும் இழுத்துக் கொண்டு சற்று தள்ளி இருந்த மற்றொரு டேபிளில் சென்று அமர,
ஏனோ மதுராவின் உள்ளுணர்வு உனக்கு ஆபத்து இருக்கிறது என்று துடிக்க, இப்படி பைத்தியக்காரத்தனமாக தன்னை மாற்றானோடு பேசு என்று கோர்த்து விட்டு சென்ற அண்ணன்களின் மீது கோபம் கோபமாக வந்தது.
‘ஒரு பேச்சுக்கு சரின்னு சொன்னா இப்படி சொல்லாம கொள்ளாம ஒருத்தன இழுத்துக்கொண்டு வந்து இவன் தான் உனக்கு பார்த்திருக்கிற மாப்பிளைன்னு என் பக்கத்துல உக்கார வச்சுட்டு போயிருக்கானுங்களே லூசு பயலுங்க!’என்று இவள் மனதிற்குள் இருவரையும் மண்டகப்படி செய்த
மதுராவும் அவர்களுக்கு மூன்று டேபிள்கள் தள்ளி அமர்ந்திருந்த அண்ணன்களை பார்க்க, அவர்களின் பார்வையோ இங்கே தான் இருந்தது. ஜெகதீஷ் கூட மதுராவை பார்த்தபடி அமைதியாக தான் இருந்தான்.
ஆனால் அவனுக்கு மாறாய் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் பிரகதீஷ் உற்சாக ஊற்றாய் “பேசு குட்ட பேசு” என்று சைகையாய் தலையை ஆட்டி கண்ணை சிமிட்ட,
அவனை நெருப்பாய் முறைத்தவள்,
“டேய் எருமக்கடா ப்ரக்கு… கண்ணா அடிக்குற கண்ணு.. வீட்டுக்கு வாடா.. மிளகாவைப் பிச்சி கண்ணுல தேச்சு விடுறேன்” என்று முணுமுணுத்தவள்,
மாஹித் “என்ன சொன்ன மது? என்ன மிளகாய்?”என்று கேட்கவும் தான், தான் சத்தமாக பேசியது உரைக்க,
வெளிப்படையாய் தலையில் அடித்தவள்,
“ஐயோ சார் உங்கள இல்ல.. அது சும்மா..”என்று பதறி மறுத்தவளை, வேட்டையாடும் இறையை பார்க்கும் பார்வையை பார்த்த அந்தக் கொடியவன்,
“ரிலாக்ஸ் மதுர வாணி… டெல் மீ அபௌட் யுவர் செல்ப்”என்று கேட்க,
‘என்ன இந்த ஆளு இன்டர்வியூல ஆள் எடுக்க போறவர் மாதிரி பேசுறார்’என்று நினைத்தாலும்,
“இது தெரியாம தான் என்னை மீட் பண்ண வந்தீங்களா?”என்று கேட்டு விட்டாள்.
“நோ உன்ன பத்தி எல்லாம் எல்லாம்ம்ம் தெரிஞ்சு தான் வந்து இருக்கேன். இருந்தாலும் உன் வாயால கேட்கணும்னு ஆசைப்படுறேன்..”என்றவனின் குரலில் இருந்த இனிமை அவனின் கண்களில் சுத்தமாக இல்லை என்பது மதுராவிற்கு ஏனோ அந்த நொடி தெரியவில்லை.
எங்கே தெரிய? அவளோ அவனை உருப்படியாக பார்க்க கூட இல்லையே பார்த்தால் தானே அவன் கண்களில் இருக்கும் வஞ்சமும் வெறியும் இவளுக்கு புரிவதற்கு..
ஒரு வித இறுக்கத்துடனே,
பெரும் மூச்சைவிட்டவள்..
“இங்க பாருங்க சார் என்ன பத்தி சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்ல.. அதோட எனக்கு இந்த கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்ல…”
“எனக்கும் இன்ட்ரஸ்ட் இல்லாம தான் இருந்துச்சு உன்ன பாக்குற வர… உன்ன பார்த்ததுக்கு அப்புறம் உன்ன எக்காரணம் கொண்டும் விடவே கூடாதுன்னு தோணுச்சு.. சோ விடமாட்டேன்” என்றவனின் குரல் ‘விடமாட்டேன் பொம்மாயி” டோனில் இருந்ததால் மதுரா அவனை நிமிர்ந்து பார்க்க, முகம் மாற்றம் ஏதுமின்றி சாதாரணமாக தனக்கு முன்னால் இருந்த காஃபியை எடுத்து பருகினான் மாஹித்.
ஏனோ அவள் கண்களில் அன்றைய பெர்னாண்டஸ் முகமும் அதிலிருந்த வெறியும் தோன்றி மறைய,
ச்சீ.. என்ன நினைப்பு இது? அவனுக்கும் இவனுக்கு என்ன சம்பந்தமா இருக்க போகுது? என்று நினைத்தவள், தலையை உலுக்கிக் கொண்டாள்.
அதோடு இவரிடம் எப்படியாவது தனது விருப்பம் இல்லை என்று அவரின் மனம் புண்படாதபடி சொல்லிவிட வேண்டும் என்று இவள் மனதிற்குள்ளே ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க, அந்த கொடூரனோ நல்லவன் போர்வையில் அவளை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணன் இவளிடம் எதற்காக மயங்கினான் என்பது புரிந்தது.
உருவமாய் பார்க்கும் பொழுது நல்ல அழகி தான்… அதோடு அவள் மீது வந்த சுகந்தமான வாசனையும் அவள் அருகில் முகர்ந்து பார்க்க சொல்லி தூண்டியது. நர மாமிசம் உண்ணுபவர்களால் ஒரு மனிதனின் பிரத்யேகமான வாசனையை நுகர முடியும்… அந்த வாசனையே அவர்களின் உணவின் ருசியை சொல்லிவிடும்..
சட்டென்று டேபிளின் மீது இருந்த அவளின் கையை பிடிக்க அவன் எத்தனித்த நேரம், எதேச்சையாக கையை நகர்த்திக் கொண்டாள் மதுரா.
“ப்ளீஸ் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.. அதனால நீங்க மனசுல ஆசை வளத்துக்காதீங்க” என்று இவள் அவன் மனம் புண்படாதபடியே மறுத்து சொல்லிட,
அவள் கையை விளக்கியதுமே கொடூரமாய் மாறியவனின் முகம் அவள் அடுத்து சொல்லியதில் இன்னும் கொடூரமாய் மாறியது.
அவள் தன்னை மறுப்பால் என்று அவன் நினைக்கவில்லை.. கண்டிப்பாக மார்டின் அழகாகத் தான் இருப்பான்.. அவனிடம் அளவுக்கதிகமான பணமும் புகழும் கூட இருந்தது.. தன்னை மறுப்பதற்கு அவளுக்கு எந்த காரணமும் இருக்கப்போவதில்லை என்றே நினைத்தான்.
ஆனால் அதெல்லாம் பொய்யாய் போய் இருக்க,
அவளோ பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்தே போய்விட்டாள்.
எவ்வளவு கொழுப்பு? தன்னிடமே ஆட்டம் காட்டுகிறாள்? என்று நினைத்தவனின் கோபம் பெறுக,
தன் வேடம் களைய கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அதற்குள் பேசி முடித்து விட்டாயா? என்பது போல் சந்தேகமாய் அவளை பார்த்தபடி அவளின் சகோதரர்கள் வர,
மதுரா அவர்களின் பார்வையை சந்திக்கவில்லை.
மாஹித்தின் முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. அவர்கள் வந்த காரில் தான் லக்கேஜ் இருக்க, அவன் தங்க போகும் ரெசார்ட்டில் விட்டுவிட்டு
கிளம்பும் பொழுது, “மதுராவுக்கு இஷ்டம் இல்லனா கட்டாயப்படுத்தாதீங்க… இட்ஸ் ஓகே” என்ற சொல்லோடு சென்று விட்டான்.
அதைக் கேட்டிருந்த மதுராவும் ‘நல்லவன் தான் போல’ என்று நினைத்து விட்டாள்.
மூவரும் வீட்டிற்கு வரும் பொழுது இரவாகி இருக்க,
வந்தவர்களிடம் ஆவலே உருவாக “எல்லாம் நல்லபடியாக போச்சா? மதுராவுக்கு ஓகே தானே?”என்று கேட்டாள் வினோதா.
அவளின் தம்பிகள் இருவரும் மதுரா இன்னும் பதில் சொல்லாததை சொல்ல,
வினோதா அவளிடம் காரணம் கேட்டாள்.
உடனே மறப்பதற்கான காரணம் பிடிபடவில்லை மதுராவுக்கு… நிச்சயமாக இன்று பார்த்தவனிடம் எந்த குறைகளும் செல்ல முடியாது தான். ஆனால் தனது மனம் தான் இங்கு பிரச்சனையை என்பதை அவர்களிடம் சொல்லிவிட,
“ப்ச்ச் ஸ்டார்டிங் அப்படித்தான் இருக்கும்.. அடிக்கடி மீட் பண்ணி பேசி பாருங்க உனக்கு பிடிச்சா பார்க்கலாம்”என்று நிதானமாக வினோதா அறிவுரை சொல்ல, மதுரா பேச மொழிகளற்று நின்றாள்.
உற்றவனின் துணை இருந்தால் அவள் இப்பொழுதே எனக்கு திருமணமாகிவிட்டது என் கணவன் இருக்கிறான் நான் எதற்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும்? என்று கேட்க முடியும்.. ஆனால் இங்கு அவர்களின் உறவே அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்க எதை வைத்து சொல்லுவாள் என் கணவன் என் அருகில் தான் இருக்கிறான் மற்றொருவன் வேண்டாம் என்று?
மௌனியாக மதுரா நிற்க,
ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் வினோதா சொல்வது சரிதான் “பழகி பார் மதுரா.. எங்களுக்கு எந்த குறையும் தெரியல.. பார்க்க நல்லா தான் இருக்கார்.. பழகவும் இனிமையாக இருக்கார் என்பது போல் சொல்லி விட்டு அவளுக்கு யோசிப்பதற்கு நேரம் கொடுத்து பிரஷ் ஆக அவர்களின் அறைக்கு செல்ல, வினோதா கணவனுக்கு அழைப்பு விடுத்தபடி மதுராவும் அவளும் தங்கியிருந்த அறைக்குள் சென்றாள்.
மதுராவும் வினோதாவும் ஒரே அறையில் தான் தங்கி இருந்தனர் என்பதால் அவள் கணவனுடன் பேச சென்றதும் பின்னாலேயே போக மனதில்லாமல் குழப்பமான மனநிலையில் ஹாலில் அமர்ந்தவளுக்கு எப்படி இந்த திருமண பேச்சை நிறுத்த வேண்டும் என்று தெரியவில்லை.
ஒரேடியாக மறுத்தாலும் காரணம் என்ன? என்று கேட்டால் என்ன சொல்லுவாள்? இதில் கொடுத்த வாக்கு வேறு குறுக்கே வந்து நிற்க, தன்னை மீறி எதுவும் நடக்காது என்று மனதை தேற்றிக் கொண்டாலும்
பிளாக்கிடம் இந்த விஷயத்தை சொன்னால் அவன் எப்படி ரியாக்ட் செய்வான்? கோபப்படுவானா? ஆத்திரப்படுவானா? அவன் முதலில் தன்னை மனைவியாகத்தான் நினைக்கிறானா? என்ற யோசனை வர, மனைவி என்று நினைக்காதவளிடம் தான் நேற்று அப்படி நடந்து கொண்டானா? என்று அவளின் மனசாட்சி கேள்வி எழுப்பவும்,
சட்டென்று நேற்றைய இரவில் நடந்த நினைவுகள் அடுத்தடுத்த நினைவடுக்குகளில் குமிய, நேத்து எப்படி ஒட்டி ஒட்டி வந்தான் கிஸ் வேற பண்ணான்.. ராஸ்கல் பட் இன்னைக்கு வரவே இல்ல என்று நினைத்து நினைத்து முகம் சிவந்தாள் அவள்.
கூடவே ‘ஐயோ ஃபீவர்னு சொன்னாங்களே எப்படி இருக்கிறார்ன்னு தெரியல்லையே.. ‘
நேற்று அவசரம் என்றால் தொடர்பு கொள் என்று சொல்லி அவளிடம் கொடுத்து வைத்த அவனது பர்சனல் நம்பர் அடங்கிய கார்ட் அவளிடம் இருக்க, அழைத்தாள் அவனுக்கு..
முதலில் முழு ரிங்காகி கட்டாகி விட, மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது இம்முறை அழைப்பு எடுக்கப்பட்டது. ஆனால் அழைப்பை ஏற்று “ஹலோ” என்றவனின் குரலில் அத்தனை தெளிவில்லை. ஏதோ குகைக்குள் அமர்ந்து பேசுபவன் போல் மிகவும் மெதுவாய் மெல்லமாய் தான் ஒலித்தது.
“ஹலோ…நா மதுரா”
“தெரியுது சொல்லு என்னன்னு” குரல் எரிச்சலாய் தான் வந்தது
“என்ன இப்டி பேசுறீங்க? உடம்புக்கு எதுவும் இல்லையே?ஏன் ஆபீஸ்க்கு வரல?”
“நான் வந்தா என்ன வரட்டா என்ன? எனக்கு உடம்புக்கு ஏதாவதுன்னா என்னை வந்து கவனிக்க போறியா என்ன?”என்று கேட்க,
“என்னாச்சு உங்களுக்கு?”
“தெரிஞ்சு என்ன பண்ண போற?”
“இப்ப எதுக்கு எடக்கு மடக்கா பேசுறீங்க? உங்களுக்கு உடம்புக்கு என்னன்னு நா கேட்க கூடாதா?” என்று கேட்ட மதுராவிற்கும் இப்பொழுது கோபம் வந்திருந்தது.
அவள் பேசிக் கொண்டிருந்தது ஹாலில் அமர்ந்திருந்து தான் என்பதால், சற்று மெதுவாகத்தான் பேசினாள்.
அந்தப் பக்கம் நீண்ட பெருமூச்சு விடுவது நன்றாகவே கேட்டது.
“சாரி கொஞ்சம் டென்ஷன்..” என்றான் நிதானமாக.
“அதுக்கு நான் தான் கிடைச்சனா காட்ட…” என்று இவள் கேட்கவும்,
“ஆமா” என்றான் அமைதியாக,
அதைக் கேட்டு மதுரா கடுப்பாகி காலை கட் செய்துவிட,
அவனிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அவள் எடுக்கவில்லை. அரை மணி நேரமாக அழைப்பு வந்து கொண்டே இருந்தாலும் கண்டு கொள்ளவும் இல்லை.
உடனே குறுஞ்செய்தி வந்து விழுந்தது.
“உன்ன மீட் பண்ணனும் வர்றியா?’
இவள் பார்த்துவிட்டு பதில் அனுப்பாமல் இருக்க,
“உன்னோட அப்பார்ட்மெண்ட் வெளியே தான் இருக்கேன் நானே வரவா?” என்று இம்முறை வந்திருக்க,
ஐயோ என்று பதறியவள்,
“என் அண்ணனுங்க அக்கா எல்லாரும் இங்க தான் இருக்காங்க… வந்தீங்க டின்னு கட்டிட்டுவாங்க..”என்று அனுப்ப,
“பரவால்ல என்ன தான டின்னு கட்டு வாங்க நான் பாத்துக்குறேன்.. இன்னும் 5 மினிட்ஸ்ல என் முன்னாடி நீ இல்லனா நான் அங்க இருப்பேன்”என்று அவன் பதில் அனுப்ப,
‘திமிரு புடிச்சவன்’என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள்,
“வரேன் வரேன் எங்க நிக்கிறீங்களோ அங்கே நில்லுங்க”என்ற பதில் அனுப்பிவிட்டு மொபைலை எடுத்தவள், அவசரமாய் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போக, அப்பொழுதுதான் தன் கணவனிடம் வீடியோ கால் பேசி விட்டு வெளியே வந்த வினோதா மதுரா அவசரமாய் வெளியே போவதை பார்த்து அவளும் பின்னால் வந்தாள் மொபைலில் கவனம் வைத்திருந்ததால் மதுரா அதை கவனிக்கவில்லை.
இங்கு கீழே காரில் அமர்ந்தபடி மதுரா வருவதற்காக காத்திருந்தான் கார்முகில் வர்ணன்.
அவன் முகம் முழுவதும் டென்ஷன் டென்ஷன் டென்ஷன் மட்டுமே வியாபத்திற்க, மதுரா வரும் வரை கூட ஆனால் பொறுக்க முடியவில்லை.
அவன் ஐந்து நிமிடத்திற்குள் வர வேண்டும் என்று சொன்னதால் மதுரா அவசரமாய் ஓடி வர மூச்சு வாங்க அவன் முன்னால் நின்றாள்.
அவள் வந்த அடுத்த நொடி தனது மறுபக்கம் இருந்த கார் கதவை திறந்து விட்டவன் உட்காரு என்பது போல் கண்ணை காட்ட,
மதுராவும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கதவை திறந்து உள்ளே சென்று அமர, அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அவன்.
மதுராவும் மன உளைச்சலில் தானே இருந்தாள் அவளுக்குமே அந்த அணைப்பு தேவையாக இருக்க அமைதியாய் அவன் கைக்குள் அடங்கி இருந்தவள், நொடிகள் கடக்கவும் என்ன நினைத்தாலோ, அவனை விட்டு விலக முயல,”ப்ளீஸ் ஒரு டென் மினிட்ஸ் அப்படியே இரு கேட்”என்றான் கெஞ்சல்போல்..
அவனின் குரல் பேதத்தில் “என்ன ஆச்சு பிளாக்?”என்று கேட்டபடி அவனின் முதுகை வருடி கொடுத்தாள்.
அவன் உடலில் சிறுநடுக்கம் பரவியது.
“எல்லாமே வாழுற பசங்க கேட் எல்லாரையும் கொன்னுட்டாங்க…ச்சீ அருவருப்பா இருக்கு சொல்லவே.. அவங்கள விடவே கூடாது”என்று இவன் பேச, மதுராவிற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
ஆனால் அவன் ஏதோ பெரிய துக்கத்தில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.
“சட்டப்படி தண்டிக்கணும்னு நினைச்சேன் அது முடியல… ஆனா ஆனா அவனுங்கள விடமாட்டேன்.. என் கையால தான் கொல்லுவேன்”என்றவனின் குரலில் இருந்த கொலை வெறி மதுராவிற்குள் அச்சத்தை உண்டாக்க அவனின் அணைப்பும் அவன் உள்ளத்தின் கொதிப்பால் இறுகியது.
அணைப்பு இறுக ஆரம்பித்ததும் நெஞ்சம் படபடக்க தன் பலம் கொண்டு மட்டும் அவனை தள்ளி விட்டு நகர்ந்து அமர்ந்தாள் மதுரா.
எல்லாம் இதற்கு முந்தைய நிகழ்வுகளின் பயமே..மதுராவிற்கு இப்பொழுதும் நன்றாக ஞாபகம் இருக்கிறதே அவனுக்கு நினைவு வருவதற்கு முன்னால் அவன் தன்னை அணைப்பு என்ற பெயரில் தன்னை மூச்சு விட முடியாமல் செய்தது.
வினோதா மறைந்திருந்து மதுரா காரில் ஏறியது வரை கவனித்தவள், கோபத்துடன் தன் தம்பிகள் இருவருக்கும் அழைத்து விடுத்து கீழே கார் பார்க்கிங் அருகே வரும் படி சொல்ல, என்ன ஏது என்று விசாரித்தவர்களிடம் கீழே வாங்க சொல்லுறேன் என்று விட்டாள்.
ஏதோ பிரச்சனை என்று புரிந்து அடுத்த சில நொடிகளில் அவர்களும் வந்து விட,
“உங்க அருமை தங்கச்சி மதுரா ரகசியமா இங்க வந்து கார்ல யாருகிட்டையோ உரசிட்டு இருக்கா என்னன்னு போய் பாருங்க.. இல்ல இங்கயும் நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சுடும்.. நம்ம வெளில தல காட்ட முடியாது”என்று தன் தம்பிகளுக்கு எதனால் கோபம் வரும் என்று தெரிந்தே அதை சொன்னாள்.
அவள் ஒரு நினைப்போடு இங்கு வந்திருந்தால் அதற்கு மாறாக மதுரா செயல்பட்டுக் கொண்டிருக்க அவளுக்கோ கோபம்! நான் நினைத்தபடி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்ற ஆணவம் அவளுக்குள்…
வினோதா என்னதான் இட்டுக்கட்டி சொன்னாலும் ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் மதுராவின் மீது சந்தேகம் எல்லாம் படவில்லை. ஆனாலும் இந்த நேரத்தில் எதற்கு தனியாக இப்படி காரில் மறைமுகமாக வந்து யாரை சந்திக்க வேண்டும்? அதுவும் தங்களிடம் சொல்லாமல் அப்படி என்ன அவசரம்? என்ற கோபத்துடனே காரின் அருகே செல்ல, ஜெகதீஷ் காரை யோசனையாக பார்த்து “பொறுமையா இருடா” சென்றான்.
பிரகதீஷ் கோபமாக “மதுரா மதுரா” என்று கார் கதவைத் தட்ட,
அடுத்த நொடி மதுரா பயத்துடன் தன் அண்ணன்கள் இருவரையும் பார்த்தபடி காரில் இருந்து மெதுவாய் இறங்கி நிற்க, மறுபக்கம் டிரைவர் இருக்கையில் இருந்து, கார்முகில் வர்ணனும் பொறுமையாய் கதவை திறந்து இறங்கினான்.
முதலில் மதுராவை பார்த்ததும் “யாரைப் பார்க்க வந்த?” என்று கேட்க வாய் எடுத்தவன் கார்முகில் வர்ணனை பார்த்ததும்
இவனா? என்று பார்த்த பிரகதீஷிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.
“இவன பாக்க தான் வந்தியா? உன் அம்மா புத்தியை காட்டிட்ட ல்ல”என்று கேட்டவன் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மதுராவை ஓங்கி அறைந்திருந்தான்.
அடித்த வேகத்தில் தரையில் சுருண்டு விழுந்த மதுரா நம்ப முடியாத அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க ஜெகதீஷ் தான் “டேய்.. என்னடா பண்ற?”என்று தடுக்க,
அவ்வளவு நேரம் ஏதோ வாய் சண்டை நடக்கப் போகிறது என்று சமாளிப்பதற்காக சாதாரணமாக இருந்த கார்முகில் வர்ணன் மதுரா கீழே விழுந்த நொடியில் பிரகதீஷ் சட்டையைப் பிடித்து அவன் குரல் வளையில் தனது துப்பாக்கியை வைத்திருந்தான்.
தொடரும்…
நீ அடுத்தடுத்த அத்தியாயம் குட்டி குட்டியா வந்துட்டே இருக்கும்.. போன பதிவிற்க்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ☺️♥️♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
27
+1
3
+1
வினோதா சீ.