Loading

18. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்

அவன் திடீரென்று தன்னை இழுப்பான் என்று நினைக்காதவள்,
அவன் மேலே விழுந்ததே அவளுக்கு அதிர்ச்சி தான் என்றால்… அவனோ, அவளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கவே இப்பிறவியை எடுத்தவன் போல் அவளின் தோள்பட்டையில் தாடையை பதித்து இறுக்கமாய் அணைத்துக் கொள்ள, அவனின் நெருக்கமான ஸ்பரிசத்தில் உடலில் உள்ள மயிர் கால்கள் எல்லாம் கூச்செறிய, அடி வயிற்றில் பறந்த பட்டாம்பூச்சிகள் இதுவரை அறியாத ஒரு உணர்வைப் பெண்ணவளுக்குத் தர, இப்பொழுது என்ன நடக்கிறது? இவன் தன்னை என்ன செய்கிறான்? என்று தனக்குள் நடந்த உணர்வு போராட்டத்தில் நடப்பதைக் கிரகித்துக் கொள்ள முடியாமல் பேச்சற்று திரு திருவென விழித்த மதுரா, தான் இப்படியே இருந்தால் சரி வராது என்று அவனிடமிருந்து விலகப் பார்க்க,

அடுத்த நொடி அவனே அவளைப் பிடித்தபடி ..தான் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியில் இருந்து எழுந்தவன் தன்னிடமிருந்து அவளை நகர்த்தி விட்டு “சாரி சாரி.. நீ கொஞ்ச நேரத்துக்கு என் பக்கத்துல வராத போய்டு”என்றபடி தலையை பிடித்துக் கொண்டு அருகே இருந்த சுவரில் சாய்ந்து கொள்ள,

கோபத்தில் திட்ட வாயெடுத்த மதுராவிற்கு  அவன் தன்னை அணைத்தது முதல் மன்னிப்பு கேட்டது எல்லாம் புதிராகவே இருக்க, “பிளாக் என்னாச்சு உங்களுக்கு” என்று கேட்டும் அவன் பதில் சொல்லாமல் தன் நிலையிலேயே இருக்க, மொபைலை கூட தனது இடத்திலேயே வைத்து விட்டு வந்துவிட்டவளுக்கு யாரை அழைப்பது என்றே தெரியவில்லை.

அவனின் இருக்கையிலேயே கிடந்த மொபைலும் பாஸ்வேர்ட் கேட்க, அதுவும் அவளுக்கு தெரியவில்லை. கைரேகை வைக்கலாம் என்றால் அவன் அருகே போகவே பயமாய் இருந்தது. டேபிளில் இருந்த இண்டர்காமை எடுத்து அழைக்க நினைத்தவள்… என்ன நினைத்தாளோ, தனது முடிவை மாற்றி அவசரமாய் வெளியே நின்ற ஆபீஸ் அட்டெண்டரை கூப்பிட்டு “அண்ணா ஒரு எமர்ஜென்சி.. எங்க இருந்தாலும் உடனே மாதேஷ் சார எம் டி ரூம்க்கு கூப்ட்டு வாங்களேன்..” என்று தனது படபடப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் அனுப்பி வைத்தவள் மீண்டும் உள்ளே வந்தபோது,
கார்முகில் வர்ணன் தலையை பிடித்தபடி சுவரோடு ஒன்றி நின்று தன்னை சமாளிக்க பார்க்க, அவன் என்ன முயன்றும் தலைவலி மட்டும் விட்ட பாடில்லை… தலையில் மின்னல் அடித்தது போல் விட்டு விட்டு வலி எடுக்க, உலகமே இறைச்சலாய்  இருப்பது போல் ஒரு மாய பிம்பம் அவனை சுற்றி வர
அதற்கு மேல் முடியாமல், ஆஆஆஆ என்று கத்தியவன் காதை மூடியபடி  தரையில் மண்டியிட்டு அமர்ந்து விட உடல் வெட்டு வந்தது போல் துடி துடிக்க, அவன் நிலையைப் பார்த்து பதறியவளாக அதற்கு மேல் ஒதுங்கி நிற்க முடியாமல் “பிளாக்.. எனக்கு பயமா இருக்கு உங்களுக்கு என்னாச்சு?” என்று  அவன் சொன்னதை மறந்தவளாய் அவனருகில்  வந்தவள் தோளைத் தொட, மீண்டும் அவனால் இழுக்கப்பட்டு கை வளைவுக்குள் சிக்கிக் கொண்டாள்.

அவனது உடலோ இன்னும் வெட்டி வெட்டி இழுக்க..
போன முறையை விட இம்முறை அவனது பிடி அசுரத்தனமாக.. முரட்டுத்தனமாக… கட்டுப்படுத்த முடியாததாக இருக்க…
அவன் தனது வலியையும் வலிமையையும் முழுவதுமாய் அவளின் உடலில் காட்டினான் போலும்…அவனது  இறுகிய பிடியில், மூச்சு  கூட விட முடியாமல் அவள் திணற, எதிர்ப்புக் கூட காட்ட முடியாமல் கைகளால் அவனின் முதுகை அடித்தும் பயனில்லை…
அவளின் தேகம் அதற்கு மேல் போராட தெம்பு இல்லாமல் அவனின் இறுக்கத்தில் துவண்டு விட, கண்களில் வழிந்த நீரோடு, “பிளாக்க்க்” என்ற சொல்லோடு நினைவை இழந்து மயக்க நிலைக்கு சென்றாள் மதுரா.

அதை உணர்ந்தும் உணர முடியாத நிலையில் இருந்த கார்முகில் வர்ணன்  தன் உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தில் இன்னும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டே வலியில் துடித்து வியர்வையில் நனைந்து மூளை மெது மெதுவாய் தன் சுயத்தை உணர்ந்து விழித்துக் கொள்ள தனது பிடியின் இறுக்கத்தை குறைத்தவன்,
பார்த்தது என்னவோ தன் கைகளில் அழுது கசங்கிய முகத்தோடு மயங்கி கிடந்த மதுராவை தான்…!

அவள் இருந்த நிலையை பார்த்து துடித்தவன்,
“மதூதூ… “என்று கத்திய சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

இவை அனைத்தையும் அதே ஆபீஸில் இருந்த கண்காணிப்பு அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மாதேஷ் கூடிய விரைவில்
தன் நண்பனுக்கு எல்லாம் சரியாகும் என்று நினைத்தவன், அப்பொழுதுதான் கவனித்தான் மதுரா கார்முகிலின் பிடியில் உணர்விழந்து கிடப்பதை..
“ஓஓ…ஷிட்”என்றபடி அவசரமாய் அவன் அங்கு வந்து பார்த்த பொழுது, மதுராவை கைகளில் ஏந்தி கொண்டு வந்த நண்பனின் கண்ணீர் நிறைந்த விழிகளை தான்…!

அது அவனைக் குற்றம் சாட்ட,
“சாரிடா இப்படி நடக்கும்ன்னு எதிர்பார்க்கல… உனக்காக தாண்டா அப்டி பண்ணேன்” என்று சொல்லியும், அவன் கண்டு கொள்ளாமல் தன் கைகளில் மயங்கி கிடந்த மதுராவை கையில் ஏந்தியபடி வெளியேறி இருந்தான்.

வந்த முதல் நாளே எம்டி பொறுப்பில் பதவி ஏற்றவன் அந்த கம்பெனியில் பணி புரியும் சாதாரண எம்ப்ளாயி ஒருத்தியை அவனின் அறையில் இருந்து கையில் ஏந்தி கொண்டு வெளியேறி சென்றதால் ஆபிஸில் அத்தனை பரபரப்பு!

தேஜஸ்வினியும் விஷயம் கேள்விப்பட்டு அவர்களின் மேனேஜரிடம் அனுமதி பெற்று மதுராவை தேடி ஓடி வர, ஆனால் அதற்குள் கார்முகில் மதுராவோடு தனது காரில் பறந்திருந்தான்.
அதைப் பார்த்தவளுக்கு மதுராவை நினைத்து மனதுக்கு கஷ்டமாக இருக்க, இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவள் அப்பொழுது தான் கவனித்தால் மாதேஷ் அவசரமாய் நண்பனைப் பின் தொடர்வதற்காக தனது காரில் ஏறுவதை…
உடனே அவனை வழிமறித்தவள்,  தன் தோழியை பார்க்க தானும் வருவதாக சொல்ல, அவளின் கவலையான குரலில்
மறுக்க முடியாமல், “வந்து கார்ல ஏறு” என்றவனை ஒரு மாதிரியாக பார்த்தவள், “நீங்க முன்னாடி போங்க நான் உங்கள என் ஸ்கூட்டில ஃபாலோ பண்றேன் சார்”
அந்நிலையிலும் அவளின் முன்னெச்சரிக்கையும் சந்தேகத்தையும் உணர்ந்தவன் முறைத்துக் கொண்டே, “சரி ஸ்கூட்டி எடுத்துட்டு வா… வெயிட் பண்றேன்”என்று சம்மதம் தர, அவள் எடுத்து வந்ததும்,இவனும் சென்றான் அவர்கள் தங்கி இருக்கும் மாளிகையை நோக்கி…

************
இங்கோ தனது அறையில் மயக்கத்தில் இருந்தவளைப் பூப்போல தனது மெத்தையில் படுக்க வைத்தவன்,

எதற்காக அவளை அலுவலகத்திலிருந்து தனது வீடு வரை அழைத்து வந்தான் என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை.
ஆனால் அதில் அவளை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொள்ளும் அவசரம் மட்டுமே இருக்க, அவன் அதற்கு மேல் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

முகத்தில் தண்ணீர் தெளித்தும் “மது …மது..மதுரா..மதுரா‌‌…” என்று கன்னத்தில் தட்டி எழுப்ப முயல,
யாரோ கிணற்றுக்குள் இருந்து அழைப்பது போல் இருக்கவும், சுயநினைவிற்கு வந்து விட்டாலும் அவ்வளவு எளிதில் கண் திறக்க முடியவில்லை.
உடல் எல்லாம் அசதியில் வலிக்க, முயன்று கண் இமையைப் பிரித்தவள், தன் எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் நடந்தது எல்லாமே நினைவில் வர பயத்தில் கால்களை மடக்கி அமர்ந்தவள், சுற்றும் முற்றும்  அறையின் பிரம்மாண்டத்தை பார்த்து மேலும் மிரண்டவளாய் கண்களை விரித்தாள்.

“கூல் மதுரா நான் தான்… இது என் ரூம் தான்.. ஐ மீன் நம்ம ரூம் தான்”என்றவனின் தோரணையில் மதுராவின் கண்கள் மேலும் விரிய,
“பிளாக்?” என்றாள் அதிர்ச்சியாய்.

“என்ன ஷாக் ஆகுற? புருஷன் ரூம் பொண்டாட்டிக்கு சொந்தம் தானே?நீ தாலியை கழட்டி கொடுத்துட்டு போனதும்… நா பேசாம போனதால  உன்ன விட்டுட்டேன்னு அர்த்தம் இல்ல”

“பிளாக்.. நா..”என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்… அப்போ இருந்த உன்னோட சிச்சுவேஷன் எனக்கு புரிஞ்சது.. அதனாலதான் அப்போதைக்கு பேசாம போனேன்..  உன்ன விட்டு போகணும்னு நான் நெனைக்கல..”

அவன் பேச பேச அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் அவன் நினைவில் தான் இருக்கிறோம் என்ற உணர்வோடு.. உணர்வுகளின் பிடியில் இருந்தவளுக்கு மனதிற்குள் சொல்லவெண்ணா மகிழ்ச்சியும் கூடவே அவன் இன்று நடந்து கொண்ட முறையில் வலியும் சேர்ந்தே வந்தது‌‌.

அவளின் கலங்கிய விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகள்… தன் இதயத்தை துளைத்தெடுப்பது போல் வலியை கொடுக்க, அதை துடைத்து விட முயன்றவனை தன் மருண்ட விழிகளால் பயத்துடன் பார்த்தவள் அவன் தன்னை இழுத்து முன்பு போல இறுக்கி விடுவானோ? என்று அரண்டு பின்னே நகரவும்,
துடைக்க நீண்ட தன் கைகளை இழுத்துக் கொண்டவனோ தன் அடங்கா சினத்தை கட்டுப்படுத்த முடியாமல் கைமுஷ்டியால் அருகில் இருந்த கண்ணாடி டேபிளில்  குத்த அதுவோ சில்லுசில்லாக நொறுங்கி விழுந்தது.

அதில் பயந்து காதை மூடி கொண்டவள் கண் திறக்கும் போது பார்த்தது என்னவோ..
கார்முகிலின் கைகளில் இருந்து சொட்டு சொட்டாக வழிந்த உதிரத்தை தான்…

“அய்யோ! எவ்ளோ ரத்தம்.. ஏன் பிளாக் இப்படி பண்றீங்க? உங்கள நீங்களே காயப்படுத்தி என்னயும் ஏன் கொல்லாம கொல்றீங்க? வினோக்கா சொன்ன மாதிரி நான் ஒரு தரித்திரம் தான் போல.. என்னால எல்லாருக்கும் கஷ்டமும் பிரச்சனையும் மட்டும் தான் நடக்குது.. நான் எதுக்கு தான் பிறந்தேன்னு எனக்கே தெரியல” என்று எப்பொழுதோ நடந்ததை எல்லாம் நினைத்து ஏங்கி ஏங்கி கைகளால் முகத்தை மூடியபடி அழுதவளைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் அவளை விட்டு விலகி இருக்க முடியவில்லை.

அவள் திமிற திமிற அணைத்துக் கொண்டான் ஆறுதலாய்! கூடுதலாய் தனது அன்பிற்குரியவளை அந்த வினோதா பேசியதாய் சொன்ன வார்த்தைகளும் அவனுக்குள் இறங்கி அவளின் மீது வஞ்சத்தை ஏற்படுத்தியது.

சில நொடிகள் மட்டும் அவனது அணைப்பில் கட்டுண்டு அழுது கிடந்தவளின் உடல் மீண்டும் அவன்  தன்னை நசுக்கிய நினைவில்.. அவனது நெருக்கத்தை ஏற்காது நடுங்க
ஆரம்பிக்க, “ரிலாக்ஸ் மதுரா” என்று அவளை விட்டு விலகியவன் அவளின் முகம் பார்த்து,
“பயப்படாத மதுரா… நான் உன்னோட பிளாக் .. உன்ன எதுவும் செய்ய மாட்டேன்”
என்று சொல்லியும் அவள் முகம் தெளியாமல் பயந்தபடியே அமர்ந்திருக்க,
பெருமூச்சுடன், “இங்க பாரு மதுரா..நான் எடுத்துக்கிற மருந்தோட சைட் எஃபெக்ட்ல தான்.. அப்டி நடந்துகிட்டேன்… இல்லனா என்ன மீறி உன்ன கஷ்டப்படுத்துவேன்னு நீ நினைக்கிறியா ?”

அவன் கேட்டதற்கு மறுப்பாய் தலையசைத்தவளுக்கு அவனைப் புரியாமல் இல்லை.

ஆனாலும் அவளையும் மீறி நடுங்கும் உடலுக்கு அவள் என்ன பதில் சொல்வாள்?

தன்னை ஓரளவு சமன்படுத்தி நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள்,
“மிருகத்தனமா நீங்க நடந்துக்கற அளவுக்கு அப்படி என்ன மருந்து எடுத்துக்குறீங்க பிளாக்?” என்று  கேட்க,

அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
“உனக்கு தெரியாத விஷயங்கள் இங்க நெறைய இருக்குது மதுரா…” என்று புதிர் போட்டவனை
புரியாமல் அவள் பார்க்க,

அவளின் பார்வையை தாங்கி நின்றவனும்,
“அதுல முக்கியமானது..அந்த பெர்னாண்டஸ் தப்பிச்சிட்டான்… எதிரிகளோட சதி திட்டம் அந்த ஆக்சிடென்ட்…  அதுக்கப்புறம் தான் எல்லா பிரச்சனையும் ஆரம்பிச்சது…” என்றதும்,

“என்ன பிளாக் சொல்றீங்க நீங்க சொல்ற ஆக்சிடெண்ட் பத்தி எதுவுமே சோசியல் மீடியாவுலையோ நியூஸ் சேனல்லையோ வரலையே?”

“வந்திருக்காது ஏன்னா அத கான்ஃபிடன்சியலா வச்சிருக்காங்க…. அரெஸ்ட் பண்ண ஒரு சீரியல் கில்லர அவ்வளவு ஈஸியா தப்பிக்க விட்டுட்டாங்கன்னு பப்ளிக் கிட்ட எங்க மேல இருக்கற நல்ல அபிப்ராயம் போயிடும்னு.. இன்னும் அந்த பெர்னாண்டஸ் வெளியே சுத்திட்டு இருக்கான்னு
சொல்ல முடியாது ஏன்னா அவன் ஏற்கனவே பாதி செத்துட்டான்.. அரை குறையான உயிரோடு தான் அவன அரெஸ்ட் பண்ணோம்.. அதனால சந்தேகத்தின் பேரிலேயே இவ்வளவு நாள் அந்த நியூஸ் வெளியேவே வரல”

“அப்போ உங்களுக்கு இப்படியானதுக்கு காரணம் அந்த ஆக்சிடென்ட்… அதுல உங்களுக்கு ஞாபகம் போய்ட்டா?” என்று கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“அத நான் இப்ப சொன்னாலும் ஏற்கனவே பயந்து போய் இருக்கற நீ இன்னும் பயந்துடுவ.. மதுரா.. அத நீ தெரிஞ்சுக்காம இருக்கறதுதான் இப்போதைக்கு நல்லது” என்றவன் அதைப் பற்றி மட்டும் சொல்ல மறுக்க,

“ப்ளீஸ்..பிளாக் சொல்லுங்க” என்று அவள் கெஞ்சி கேட்டும் அவன் சொன்ன பாடில்லை.

மறுப்பாய் தலையசைத்தவன்,
“இது கொஞ்சம் கான்ஃபிடன்சியல் மதுரா…என்னால இப்போதைக்கு நீ கேக்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது.. புரிஞ்சுக்கோ” என்றதும்,
வலி நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்தவள், ” இப்ப கூட என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்களா பிளாக்? உங்களுக்கு என்னதான் ஆச்சு” என்று உடைந்த குரலில் கேட்க,

அவளை அந்நிலையில் பார்த்தவனுக்குள் தன்மேலேயே வெறுப்பு… ஆனால் அதற்கு தடையாய் அவனின் கடமையை முன்னே வந்து நிற்க, கண்களை மூடி தன்னை ஒரு நிலைப்படுத்தியவன்,
அவளை நெருங்கி அமர்ந்து,
“ப்ளீஸ் மதுரா என்ன தப்பா நினைச்சுக்காத” என்றவன்
அடுத்த நொடி அவளை ஒரு பூவை போல் மென்மையாய் அணைத்துக் கொண்டான்.

மதுரா இம்முறை அவனை பயத்தோடு விலகவில்லை என்றாலும் பதிலுக்கு அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை.

அவளை அணைத்தபடியே,
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் மதுரா” என்றான் பீடிக்கையாக.
அவளிடம் பதில் இல்லை.

“நீ நம்ம கல்யாணத்துல சொன்னது மாதிரி நான் ஒன்னும் என் கடமைக்காக உன்ன கல்யாணம் பண்ணல மதுரா”

அவள் இம்முறை அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
அவனின் முகம் பார்ப்பதற்காக..

“இந்த மிஷன் ஸ்டார்ட் பண்ணும் போதே இதுல சம்பந்தப்பட்ட எல்லாரையும் எவிடன்ஸ் ஓட பிடிக்கணும்னு மட்டும் தான் என்னோட எய்மா இருந்துச்சு… பட் எப்போ இதுக்குள்ள நீ வந்தியோ.. அப்பவே எனக்குள்ள ஒரு பயம்… இதெல்லாம் தெரிஞ்சா
குழந்தை மாதிரி
இருக்கற உன்னோட மனநிலை எப்படி இருக்கும்ன்னு மட்டும் அடிக்கடி யோசிப்பேன்… ஆனா ஏன் அப்டி யோசிச்சேன்னு எனக்கே தெரியல..”
என்றவனைக் குழப்பமாய் தான் பார்த்தாள் மதுரவாணி.

“கூடவே உன்ன கல்யாணம் பண்ணிக்க போற இடத்துல அந்த பத்ரி இருக்கறத பார்க்கும்போது எனக்குள்ள அவ்ளோ எரிச்சல்.. உன்கிட்ட அவனோட பார்வையும் மேனரிசமும் சுத்தமா சரியில்ல… ஆனா வெறும் பாடிகார்ட் பொசிஷன்ல இருக்கற என்னால எதுவும் செய்ய முடியல..” என்றவனின் குரலில் மதுராவின் புருவங்கள் மேலே ஏறி வியப்பை காட்ட,

அதில் மூழ்கியவன், மேலும் சொன்னான்.
“அன்னைக்கு என்னோட மிஷன் லாஸ்ட் டே … உன்ன கல்யாண பொண்ணா அடுத்தவனோட பார்க்க எனக்கு இஷ்டம் இல்ல… பல்ல கடிச்சுட்டு …கடமையை நிறைவேத்துறதுக்காக உன்னோட கண்ணுல படாத தூரத்துல தள்ளி தான் நின்னேன்.. அப்பதான் நானே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துச்சு … உன்னோட கல்யாணம் நின்னு போச்சு… நானும் பக்கத்துல வந்து என்னன்னு பார்க்கும்போது உன்னோட அப்பா திடீர்னு வந்து என்ன கல்யாணம் பண்ணிக்க  சொல்லுவாருன்னு சத்தியமா எதிர்பார்க்கல … ஆனா அந்த செகண்ட் எனக்கு உன்ன மிஸ் பண்ணவும் தோணல… நீ எனக்கு வேணும்னு தோணுச்சு…அதனால நீ அவ்ளோ ட்ராமா பண்ணியும் உன்ன விட்டுக் குடுக்காம உன் கூட மணமேடையில வந்து உட்கார்ந்தேன் ” என்றவனை விழிகள் விரிய பார்த்தாள் மதுரா.

அவன் தன்னை கடமைக்காக மட்டுமே திருமணம் முடித்தான் என்று நினைத்திருக்க அவனின் இத்தகவலில் ஏனோ அவளுக்குள் சிறு குளிர்ச்சி. அது அவளது பார்வையிலும் தெரிந்தது.

அவளின் விழியகலாப் பார்வையில் அவளின் கையை பிடித்து தனது மார்பில் வைத்துக் கொண்டவன்,
“நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டு.. சமாதானப்படுத்த வந்தபோ நீ என்ன பேச விடாம தாலிய கழட்டி வீசாத குறையா தந்த …அப்போ.. எனக்குள்ள அவ்ளோ வலி.. ஆனா உன்னோட அப்பாவ அரெஸ்ட் பண்ண கையோட என்னோட மனச உன்கிட்ட வெளிபடுத்தி சமாதானப்படுத்தவும் முடியாத சிச்சுவேஷன்… உன்னோட கோபம் புரிஞ்சது.. உன்னை அதுக்கு மேல நெருங்க முடியாம அங்கிருந்து கிளம்பிட்டேன்.. ” என்று தன் அன்றைய மனநிலையை சொல்ல,

அதன் பிறகும் அவன் தன்னை தேடி வரவில்லையே என்று நினைத்த
மதுராவின் முகம் வாடி விட,

அவள் மனதை புரிந்தவன் போல,
“அதுக்கப்புறம் நான் சொன்ன ஆக்சிடென்ட்.. பெர்னாண்டஸ் தப்பிச்சது எனக்கு இப்படி ஆனது எல்லாம்… இப்ப கூட உனக்காக தான் இவ்வளவு தூரம் வந்தேன்” என்றவன் மார்பில் இருந்து அவளின் கையை இதழுக்கு கொண்டுவர,
அவர்கள் இருந்த அறை படாரென்று திறக்கப்பட்டது.
பூஜை நேர கரடிகளாய் வந்து சேர்ந்தனர் மாதேஷும் தேஜஸ்வினியும்.

இருவருக்கும் என்னானதோ? என்று பதற்றத்துடன் உள்ளே நுழைந்தவர்கள் இருவரும் சாவகாசமாய் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் இருவரின் முகத்திலும் அப்படி ஒரு கொதிப்பு!

தொடரும்…

போன அத்தியாயத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ☺️♥️

இந்த அத்தியாயத்திற்கும் தங்களது கருத்துக்களை பதிவிடவும் நட்பூஸ் 🙂 ♥️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
44
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Nice epi sis…
      Black ku ennachi sis….
      Thirumpa maranthuruvana..??

      Waiting next epi sis…

    2. Sis story super… Yen next ud podala?…we are waiting..😉