16. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
‘கார்முகில் வர்ணன்’என்று அவனின் உண்மையான பெயரை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டவள் அவன் அடுத்து அவளது பெயர் என்ன? என்று கேட்டதும், உறைந்து போய்விட்டாள்.
என்ன இவன் தன்னை தெரியாதது போல் பேசுகிறான்?
தான் பெயர் கேட்டும் எந்த பதிலும் சொல்லாமல் சிலை போல நின்றவளின் முன் சொடக்கிட்டவன்,
” மிஸ் கேட் என்ன ப்ரீஸ் ஆகிட்டீங்க? உங்க ஸ்வீட் நேம் என்னன்னு கேட்டேன்” என்றான் மீண்டும்…
மதுராவுக்கு கோபம் வந்துவிட்டது.
தனது வாழ்க்கையை புயல் அடித்தது போல் புரட்டி போட்டவன் தன்னையும் தன் பெயரையும் தெரியாது போல் நடித்தால் அவளுக்கு கோபம் வரத்தானே செய்யும்? அதுதானே நியாயமும் கூட…
பொசு பொசுவென்று பொங்கிய கோபம் அவளின் முகத்தையே சிவக்க வைத்திருக்க…
கடுப்புடன் அவனை முறைத்தவள்,
“முன்ன பின்ன தெரியாதாவங்ககிட்ட நான் நேம் சொல்றது கிடையாது சார்” என்றாள் அழுத்தமாய்.
ஒற்றைப் புருவத்தை மேலே உயர்த்தி அவளின் முகத்தை அவதானித்தவனாக,
“ஆஹான்…”என்று நமட்டு சிரிப்பு சிரிக்க,
அவன் சிரிப்பில் “என்ன?” என்றாள் கோபமாய்.
“ம்ம்..அப்ப நான் முன்ன பின்ன திருப்பி காட்டினா என்ன தெரிஞ்சிடும் தான? அதுக்கப்புறம் நேம் சொல்லுவீங்களா மிஸ் கேட்?” என்று தலையை சரித்து கேட்டவன் குறும்பாய் கண்சிமிட்ட, மதுராவுக்கு நெஞ்சம் படபடத்தது.
என்னாயிற்று இவனுக்கு? முன்பெல்லாம் முகத்தில் முள்ளைக் கட்டிக்கொண்டு முசுடு போல் இருப்பவன் தானே? அவனா இவ்வளவு எளிதாய் தன்னிடம் பேசுகிறான்? சிரிக்கிறான்? என்று ஆச்சரியப்பட்டாலும்
“நக்கல் பண்றீங்களா என்ன? அதோட நான் ஒன்னும் கேட் லாம் இல்ல…”என்றாள் வீம்பாய்…
“நீங்க தான் நேம் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டீங்களே! நேம் சொல்லாதவங்கள செல்லப் பேரு வச்சு தானே கூப்பிடனும் மிஸ் கேட்”
“என்ன தெரியாதவங்க எதுக்கு என்ன கூப்பிடனும் சார்? அதுவும் செல்லப் பேரு வச்சு…”
“ஏன் தெரியாதவங்கள தெரிஞ்சுக்க கூடாதா மிஸ் கேட்?”
“ஓஹோ என்ன தெரியாதா சாருக்கு?”
“ம்ம் யெஸ் ..மிஸ் கேட் சொன்னா தெரிஞ்சுக்கலாம்”
ஐயோ என்ன சொன்னாலும் இவன் எனக்கு கேட் போட்டு திரும்பத் திரும்ப பேசுகிறானே! என்று கடுப்பு வர,
“யோவ் போயா.. உனக்கு என்ன தெரியாதா? இத நா நம்பனுமா?” என்று ஏதோ திட்ட வந்தவள் அவன் முக பாவனைகள் உதடுகளை மடக்கி சொல்ல வந்த வார்த்தைகளையும் உள்ளடக்கி கொண்டாள்.
இவன் மட்டும் தன்னை தெரியாதது போல் நடிக்கிறான் தான் மட்டும் அவனை தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணத்தோடு.. அடுத்து பேச வந்தவள் அவனின் முக பாவனைகள் சரி இல்லை என்று பேச்சை நிறுத்தி விட்டாள்.
அவளின் “யோவ்”என்ற சொல்லே கார்முகிலின் முகத்தில் இருந்த சிரிப்பை நிறுத்தி முகத்தை கடினமாக்கி இருந்தது.
“மிஸ் கேட் எனக்கு ரெஸ்பெக்ட் கொடுத்து பேசினால் தான் பிடிக்கும்..”என்று அவன் இறுகிப்போன முகத்துடன் அழுத்தமாய் சொன்ன விதமே மதுராவிற்கு ஒரு மாதிரி இருக்க,
இதற்கு மேல் இவனிடம் பேச வேண்டுமா? என்று எண்ணத்துடன்
மெல்லமாய், “சாரிங்க சார்” என்றவள் திரும்பி அங்கிருந்த நகர பார்க்க,
“ஓய் கேட்… நீ இன்னும் நேம் சொல்லல..”என்று பழைய குரலில் அவன் வம்பு இழுக்கவே,
இம்முறை அவனே அவளை ஒருமையில் அழைக்க..
‘அடேய்! அந்நியன விட மோசமா இருக்கானே இவன்..’ என்று மானசிகமாய் தலையில் அடித்துக் கொண்டவள்,
“இந்த வம்பு இழுக்கற வேலை எல்லாத்தையும் உங்க பியான்ஸி கிட்ட போய் வச்சுக்கோங்க… மிஸ்டர் எங்கிட்ட வேண்டாம்” என்றாள் முறைப்பாய்!
“சோ நீ நாங்க பேசுனத கவனிச்சிருக்க? அதாவது என்ன நீ கவனிச்சிருக்க..அப்படி தானே?” என்றான் அவளை மடக்க சரியான பாயிண்டை பிடித்தவனாய்!
ஆயாசமாய் அவனைப் பார்த்தாள் மதுரா.
இவன் பிளாக் தானா? இல்லை வேறு யாருமா? தான் அறிந்தவரை பிளாக் இப்படி எல்லாம் பேச மாட்டானே! என்று சந்தேகமே வந்துவிட்டது அவளுக்கு.
இங்கு அதே நேரம் கார்முகில் வர்ணனின் நண்பனான மாதேஷ் தன் அலைபேசியில் யாருக்கோ அழைத்தவன்,
அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“சார் நம்ம பிளான் பண்ண மாதிரி தான் எல்லாம் நடக்கு.. அந்த பொண்ண பாத்துட்டோம்”
என்றதும் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ…
“இல்ல சார்.. பெரிய அளவுல சேஞ்சஸ் தெரியல. பட் அந்த பொண்ண ஃபாலோ பண்ணி போயிருக்கான்…”
எதிர்பக்கம் கேட்ட கனத்த குரல் ஏதோ கட்டளையிட,
“ஓகே நான் பாத்துக்குறேன் சார்”என்று அழைப்பை துண்டித்து விட்டு இவன் கார்முகிலை தேடிப் போக.. இரண்டு கைகளிலும் குளிர்பானத்தோடு படியேறிக் கொண்டிருந்தவள் மீது மோதி விட்டான்.
அதில் நிலைத்தடுமாறி கையில் இருந்த குளிர்பானம் லேசாய் அவள் உடையில் சிந்தி விட,
“பார்த்து வர மாட்டீங்களா?”என்று திட்டிக் கொண்டு நிமிர்ந்த தேஜஸ்வினி,
அவன் பார்வை போகும் திசையை கவனித்து… தோள்பட்டையிலிருந்து இறங்கிய துப்பட்டாவை தன் தாடை மூலம் இழுத்து சரி செய்தவள்,
” அய்ய…மூஞ்சயும் முழியையும் பாரு” என்று முணங்கி விட்டு படியேற…
மாதேஷும் அவளைத் தொடர்ந்து அவள் பின்னே செல்ல,
“ஹலோ சார் எதுக்கு என்ன ஃபாலோ பண்றீங்க?”என்று கோபத்துடன் திரும்பி அவனை முறைக்க,
“நான் எங்கங்க உங்கள ஃபாலோ பண்றேன் நான் என் ஃப்ரண்ட தேடி போறேங்க… ஃபர்ஸ்ட் வழிய விடுங்க”என்று அவளை நகர்த்தி விட்டு முன்னே நடக்க,
தேஜுவும், ‘கொஞ்சம் ஓவரா போயிட்டமோ? ப்ச்ச் எல்லாம் இந்த மதுராவால… எங்க போய் தொலஞ்சான்னு தெரியல.. எல்லாரும் மாடிக்கு தான் போன மாதிரி இருந்துச்சுன்னு சொல்றாங்க சரி போய் பார்ப்போம்…’என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு கைகளில் குளிர்பான டம்ளர்களுடன் போக,
இரண்டாம் தளத்தில் விருந்தினர்கள் தங்கும் அறைகள் மட்டுமே இருந்ததாலும் அந்த அறைகளும் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியிருந்ததாலும் .. திரும்பி விடலாமா? என்று இருவரும் யோசிக்க,
அதற்குள் திறந்திருந்த ஒரு அறையில் இருந்து மதுராவின் குரல் கேட்டதும் இருவரும் போக, அங்கோ, கார்முகில் மதுராவின் மடியில் மயங்கி கிடந்தான்.
அதைப் பார்த்து அதிர்ந்து போன மாதேஷ்,
“ஐயோ என்னாச்சு முகில்?” என்று பதறி போய் அவன் அருகில் வர,
“எனக்கே தெரியல நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க…”என்று பயத்துடனும் அழுகையுடனும் மதுரா சொல்ல,
தோழியையும் அவன் மடியில் படுத்திருந்தவனையும் பார்த்த
தேஜுவோ, “வா மதுரா அவர அவர் ஃப்ரெண்ட் பார்த்துப்பார்..
இது நமக்கு தேவையில்லாதது நம்ம கீழ போயிடலாம்…” என்று தோழியின் கரத்தை பிடித்து இழுக்க,
“இல்ல தேஜு அவர் எந்திரிக்கட்டும் நான் அதுக்கப்புறம் வாரேன்..” என்றவள் மயங்கி கிடந்தவனின் கைகளை பிடித்துவாறு வர மறுக்க,
மாதேஷும், “நீங்க போங்க சிஸ்டர் நான் பாத்துக்குறேன்” என்றான்.
“ஐயோ நான் தான் சொல்றேன்ல அவர் எந்திரிக்கட்டும்.. புரிஞ்சுக்கோங்க அதுவர என்னால அவர விட்டு போக முடியாது”
“மதுரா என்ன பேசுற இவர உனக்கு தெரியாது தானே? தெரியாத ஒருத்தருக்காக நீ எதுக்கு இப்படி துடிக்கிற? வாடி கீழ போய்டலாம்”
“ஐயோ… இவர் ஒன்னும் எனக்கு தெரியாத ஒருத்தர் இல்ல எனக்கு தாலி கட்டின என்னோட ஹஸ்பண்ட் போதுமா.. நீயே சொல்லு என் ஹஸ்பண்ட், இப்படி மயங்கி கிடக்கும் போது அவர அப்படியே விட்டுட்டு உன் கூட வர முடியுமா? புரிஞ்சுக்கோ ப்ளீஸ்” என்றாள் அழுகையோடு.
தேஜுவோ அதிர்ந்து போனவளாய் வாயடைத்து போய் தோழியை பார்க்க, அவளின் அதிர்ச்சி கூட அவளுக்கு உரைக்கவில்லை..
“பிளாக் ப்ளீஸ் என்னாச்சு உங்களுக்கு…” என்று அவனின் கன்னம் தட்ட…
மாதேஷ் கீழே போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அவன் முகத்தில் தெளிக்க,
கண்களில் இருந்த கருமணி அசைய லேசாய் கண் விழித்தவன்,
பார்த்தது தன்னை மடியில் சாய்த்து கொண்டு கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் நீரோடும் இருந்த மதுராவை தான்..
“மிஸ் கேட்..”என்று சொல்லோடு சிரிக்க முயன்றவனுக்கு சிரிக்க முடியவில்லை. தலைக்குள் ஆயிரம் மின்னல் ஒரே நேரத்தில் அடித்தது போல் சுளிரென்ற வலி… விட்டு விட்டு வர..
தலையை தூக்க கூட முடியாமல் அத்தனை பாரமாய் இருக்க,
தலையைப் பிடித்துக் கொண்டு அவள் மடியில் இருந்து எழ முயன்றவனுக்கு மாதேஷ் உதவ,
கஷ்டப்பட்டு எழுந்து நின்றவன், மதுராவை பார்க்க, அவள் எழாமல் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.
தான் மயங்கி விழும்போது அவள் தன்னை கீழே விடாமல் மடிதாங்கி இருக்கிறாள் என்று நினைவில் வர,
தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்,
“நேம் சொல்ல மாட்டீங்க ஆனா மயங்கி விழுந்தா ஹெல்ப் மட்டும் பண்ணுவீங்களா மிஸ் கேட்?” என்று கேட்டவாறே அவள் எழுவதற்கு கை கொடுக்க,
அவனின் நீண்டிருந்த கையை பிடிக்காமல் தன்னாலேயே முயன்று எழுந்து கொண்டாள் மதுரா.
அவ்வளவு நேரம் அமைதியாய் நின்ற தேஜுவோ, ‘இவ என்ன ஹஸ்பண்டுன்னு சொல்றா இவர் என்னன்னா அவர் நேம் என்னென்னு அவகிட்டையே கேக்கறார்.. என்னடா நடக்குது இங்க? ஒரே குழப்பமா இருக்குதே” என்று நினைத்தவள் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல்,
“ஹலோ சார் மதுராவ உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டு விட,
“ஓஹோ மிஸ் கேட்டோட ரியல் நேம் மதுரா வா? ஸ்வீட் நேம்”என்று புன்னகைத்தவனின் முகத்தில் வலியின் சாயல் இருக்க,
அதை உணர்ந்தவளாய் “வலிக்குதா பிளாக்? ஹாஸ்பிடல் போலாமா?”என்று தன்னை மீறிய அக்கறையில் கேட்டாள் மதுரா.
அவள் முகத்தில் தெரிந்த அன்பிலும் தாய்மை உணர்வில் கார்முகில் வர்ணன் பதில் பேசாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க,
மாதேஷ் தான் பதில் சொன்னான்.
“இல்ல சிஸ்டர் அவனுக்கு கொஞ்சம் உடம்பு முடியல டேப்லட் கரெக்ட் டைம்க்கு எடுத்தா சரியாகிடும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க… சரியான டைம்ல டேப்லெட் போடாததால் தான் இப்போ இந்த ப்ராப்ளம் வந்திருக்கனும்..” என்று சொன்னவன் கார்முகில் வர்ணனை முறைத்தான்.
இன்று காலை போடவேண்டிய மாத்திரையை போடாமல் வந்திருந்தான் அதனாலேயே அந்த முறைப்பு..!
அதையெல்லாம் சட்டை செய்யாமல் கார்முகில் வர்ணனின் பார்வை முழுவதும் மதுராவிலேயே இருக்க, மதுரா தான் அவன் பார்வையில் திண்டாடி போனாள்.
அவன் மயங்குவதற்கு முன்பே அவனின் பேச்சிலிருந்து ஓரளவு யூகித்துவிட்டாள் …
தன்னையும் தன்னுடனான திருமணத்தையும் பிளாக் மறந்துவிட்டான் என்று …
தன்னுடன் நிழலாய் பயணித்த கருப்பசாமி என்பவன் இப்பொழுது தன்னைப் பற்றி மறந்து கார்முகில் வர்ணனாக மாறியது புரிந்தது. ஆனால் எப்படி மாறினான் என்று தான் தெரியவில்லை…
அனைத்தையும் மறந்து இருப்பவனிடம் போய் நீ தான் எனக்கு தாலி கட்டினாய்.. நான் தாலியை கழற்றி கொடுத்து விட்டாலும் நீ தான் என் கணவன்.. என்றா சொல்ல முடியும்..
அவளுக்கான பதில் கார்முகில் வர்ணனின் அருகில் இருப்பவனிடம் இருக்கலாம் … இப்பொழுது சற்று நேரத்திற்கு முன்னால் தேஜுவிடம் நான் சொன்னதை கேட்டும் அவன் அமைதியாய் இருப்பதை பார்த்தால் அவனுக்கும் அனைத்தும் தெரிந்து தான் இருக்கும் என்பதை சரியாய் கணித்தாள்.
கீழே திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க, மேலே நின்றது நால்வர் மட்டுமே…
“மதுரா நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் நம்மள தேடுவாங்க…போலாமா?”
என்று தேஜு கேட்க,
“போலாம்” என்ற மதுரா, கார்முகில் வர்ணனை பார்க்காமல் கீழிறங்க போக,
“ஓய் கேட் உன் நம்பர் சொல்லிட்டு போ..”என்றவனின் குரல் கேட்டாலும் இவள் திரும்பவே இல்லை.
“ரொம்பத்தான் பண்றா? ஜஸ்ட் நம்பர் தானே கேட்டேன்”என்று கார்முகில் முணங்க,
மாதேஷோ, “அந்தப் பொண்ணு பரவால்ல டா அவ கூட ஒரு ஃப்ரெண்ட் இருக்காளே? பெரிய உலக அழகின்னு
நெனப்பு.. ஜஸ்ட் ஜூஸ் கொட்டிட்டேன்னு அவ ட்ரஸ தான் பாத்தேன்.. அதுக்கே ஓவரா ரியாக்ட் பண்றா…” என்று சொல்லிக் கொண்டிருந்தனின் மீது ஜூஸ் அபிஷேகம் செய்யப்பட்டது.
தான் அங்கிருந்த டேபிள் மீது வைத்துவிட்டு போன குளிர்பான டம்ளர்களை எடுப்பதற்கு மீண்டும் தேஜஸ்வினி மதுராவுடன் திரும்பி வந்திருக்க, அவன் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டதும் கோபத்தில் அவனது மேலேயே அதை கொட்டி விட்டாள்.
“ஏய் அறிவு இருக்காடி”என்று மாதேஷ் எகிற,
“உனக்கு தாண்டா அது சுத்தமா இல்ல.. போய் கடையில வாங்கிக்கோ” என்று தேஜஸ்வினி பதில் எகிறிக் கொண்டு வர, இருவருக்கும் வாய் தகராறு ஆனது..
மதுரா தோழியை சமாதானப்படுத்துவதற்காக அவளைப் பிடித்து இழுக்க, இதில் எதிலும் கலந்து கொள்ளாத கார்முகில் வர்ணன் அவளையே ரசித்திருக்க,
மதுராவிற்கோ ஐயோ என்றானது…”தேஜு வாடி போகலாம்..”என்று இவள் தோழியை இழுத்துக் கொண்டு செல்ல,
மாதேஷ் கோபமாய், “ஒரு பேச்சுக்காது என்கிட்ட சண்டை போடாத ன்னு சொல்றியா டா?”என்று கார்முகில் வர்ணனை முறைத்துப் பார்க்க…
“நீ இன்னும் கொஞ்ச நேரம் சண்ட போட்டு இருக்கலாம்.. நான் என்னோட திருட்டுப் பூனைய பார்த்துட்டு இல்ல இல்ல ரசிச்சிட்டே இருந்திருப்பேன்”
“அடப்பாவி அதுக்காக அந்த சொர்ணாக்கா கூட என்ன சண்ட போட சொல்றியா?”என்று அதிர்ந்துபோய் கேட்ட மாதேஷ்,
நினைவு வந்தவனாய்,
“எப்படிடா ஃபீல் பண்ற?”என்று கேட்க,
“சம் வாட் … மிஸ் கேட்ட பாத்ததுல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டான ஃபீல்…” என்று லயிப்புடன் தனது நெஞ்சத்தை சுட்டிக்காட்டி சொல்ல,
மாதேஷ் புன்னகைத்தான்.
திருமணம் முடிந்த உடன், தேஜஸ்வினி மதுராவை அவளது ஏ டு பி அப்பார்ட்மெண்டில் கொண்டு விட்டு விட,
வீட்டிற்கு சென்றவள்… ஹாலில் இருந்த சகோதரர்கள் இருவரையும் பார்க்காமல் தன்னறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள,
சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
இந்த ஏழு மாதத்தில் வினோதா அவர்களை தொடர்பு கொள்ளாமல் இல்லை. அவளுடன் இவர்கள் பேசினாலும் முன்பு போல அவளிடம் உரிமையுடன் எல்லாம் பேசவில்லை.
அதற்காக உடன் பிறந்தவளை அப்படியே விட்டு விடவும் மனதில்லை என்பதால் நேரம் கிடைக்கும் பொழுது பேசிக்கொள்வார்கள்…
இன்றும் அப்படி தான் அவளுடன் வீடியோ கால் பேசும் பொழுது,
“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க இன்னும் எத்தனை நாள் மதுராவ உங்க கூட வச்சுக்க போறீங்க? அவ கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்லுவா… ஆனா நமக்கு நம்ம கடமை இருக்கு தான.. அவளுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சு குடுக்க வேண்டாமா? உங்க கிட்ட சொல்லாம தன்னோட வாழ்க்க இப்படி ஆகிட்டேனு தனியா பீல் கூட பண்ணிட்டு இருக்கலாம்”என்று சொன்னது நியாயம் தான் என்று பட்டாலும் “அவ கிட்ட பேசி பார்க்கிறோம் அக்கா” என்று பதில் சொன்னவர்கள்,
இன்றைய மதுராவின் முகத்தையும் அவள் தங்களை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றதையும் கவனித்தவர்களுக்கு விரைவிலேயே மதுராவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணம் ஆழமாய் பதிந்து விட,
அச்சிறு வயதிலேயே வீட்டின் பெரியவர்களாய் போன இருவரும் தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர்.
இது எதுவும் தெரியாமல் அறைக்குள் வந்ததும் தனது மெத்தையில் குப்புற விழுந்த மதுராவிற்கு அவளின் பிளாக்கின் எண்ணமே!
அப்படி என்னவாகி இருக்கும் அவனுக்கு? அதுவும் தன்னை மறக்கும் அளவிற்கு?
என்று குழப்ப மேகங்கள் இருந்தாலும்…
கூடவே அவனின் இன்றைய பார்வைகளும் அவனின் பேச்சுக்களும் அவளுக்கு பிடித்திருக்க, சொல்ல முடியாத உணர்வில் தத்தளித்தாள் பேதை.
ஆனால் அவளை காவு வாங்குவதற்கு கொடூரமான ஒருவன் காத்திருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை….
அவன் பெர்னாண்டஸின் உடன்பிறந்தவன்…
மார்டீன்…
இரக்கமற்றவன்…
அவனும் அவனின் அண்ணனைப் போலவே மனிதர்களை உண்ணும் மாமிச உண்ணி…
மிகப்பெரிய மருத்துவமனையில் தனியாக இருந்த விஐபி பிரிவின் ஒரு அறையில் நின்றிருந்தவனின் கண்களோ… வீல் சேரில் தலையை கூட அசைக்க முடியாமல் உணர்விழந்து அமர்ந்திருந்த தன் அண்ணன் பெர்னாண்டஸின் முகத்தையே அசையாமல் பார்த்திருக்க,
வஞ்சம் நிறைந்த விழிகளால், அந்நிலையிலும் அவன் கையில் இறுக்கமாய் பிடித்திருந்த மதுராவின் நிழல் படத்தை வெறுப்பு உமிழும் கண்களால் பார்த்தவன்,
“சீக்கிரமே உன்ன அணு அணுவா சாவடிச்சு என் அண்ணனுக்கு ரத்த படையல் வைக்கிறேன் டி”என்று கத்த, அவனின் குரலே அறை முழுவதும் எதிரொலித்தது. அங்கிருந்த அத்தனை பேரின் முகத்திலும் பேரச்சத்துடன் தெரிந்தது மரண பயம் மட்டுமே..!
அதே நேரம் மாப்பிள்ளையாக மார்ட்டினின் புகைப்படத்தை தனது தம்பிகளுக்கு அனுப்பினாள் வினோதா.
தொடரும்…
போன யூடிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊 ♥️
இந்த எபிசோட் பற்றிய தங்களது கருத்துக்களை பதிவிடவும்..
நன்றி🙂♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
38
+1
3
+1
5
Vinotha theriyama mappilai photo send pannala.. illa therinjitha send pannala sis..🤔🤔
Black ku ennachi sis… Madhu va epati maranthan…
Epi super sis.. 🙂
Waiting next episode sis…🙂
Thank you so much sister 😍❤️ nega ketta Ella questions kum flash back la answers kedaikum … keep supporting 🙆🏻♀️❤️
வினோதா வில்லியே தான்.
😂😂😂 vino vinothamana villi than sis 🙆🏻♀️ thanks for your comment sis 😍❤️
சூப்பர் எபி ♥️
Thank you so much sister 😍❤️