நீல கண்களின் காதல் பயணம் 💙
அர்ஜூன்.
காலையிலேயே பெரும் கேள்வி அவனிடம். தான் ஏன் கயல்விழியின் மீது ஆர்வமாக இருக்கிறோம் என்று. கயல்விழியால் தன்னிடம் காணும் மாற்றம் எதன் வெளிப்பாடு என்பதை இன்று அறிந்தே ஆகவேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு. இதே யோசனையோடு கல்லூரி நடைபாதையில் நடந்து சென்றிட, அவனுக்கு கேட்க நேர்ந்தது மெது மெதுவாக அதிகரித்த தேன் குரலில் பாடல் ஒன்று.
அந்த குரல் அவனில் ஏதோ செய்திட, அந்த குரலின் சொந்த காரியை பார்க்க ஆர்வம் அவனுள். ஆனால் அவனுக்கு ஒரு சின்ன சந்தேகமும் இருந்தது.இந்த தனித்துவமான குரலை ஏற்கனவே அவன் கேட்டிருக்கின்றானே.
பாடல் கேட்கும் திசையை நோக்கி அவன் திரும்பிட ஒரு மரத்தின் பின்னால் இருந்து யாரோ பாடுவதை உணர்ந்தவன், அங்கு சென்று பார்த்தான். அங்கிருந்த கல் மேடை மீது அமர்ந்து கொண்டு, இரு காதுகளிலும் ஹெட்போன் பொறுத்தி கொண்டும், தன் உடலை இடவலமாக அசைத்துக்கொண்டும், கண்களை மூடி ரசனை நிலைத்த முகத்துடன் பாடி கொண்டிருந்தாள் கயல்விழி.
“நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே…
அடி நீயும் பெண் தானே ..
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே…
நீ கேட்டால் சொல்வேனே…
தீம் தனனா ..தீம் தனனா…
தீம் தனனா…தீம் தனனா…
தீம் தனனா…தீம் தனனா…திறனா…”
இனிமையான குரல் கட்டி இழுத்திட, அவளின் அருகில் சென்று அவள் மீது பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அமர்ந்தவன், அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
தன் மீது ஏதோ உரசிய உணர்வில் கண்திறந்தவள் யாரென அருகில் பார்க்க, அர்ஜூன். அவன் தான் என்றதும் புன்னகையை உதிர்த்தாள் கயல்விழி. அவள் அவனை பார்க்க,அவன் அவளை பார்க்க என இரு கண்களும் சங்கமித்த நிலை. மோதிய கண்களில் மின்னல் வேறு வெட்டிட ரசனை பாவனை அவனிடம்.சளைக்காத பார்வை அவளிடம்.
அருகில் கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் நிகழ் உணர்ந்த அர்ஜூன்
” உன்னோட வாய்ஸ் அவ்வளவு அழகா இருக்கு.மயக்குற குரல் உனக்கு. எப்படி இவளோ ஆழ்ந்த உணர்வோட பாடுற?”
ஆச்சரியம் போல் கேட்டவன் அவனுமொர் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு
“உன்னோட பாட்டுல உயிர் இருக்கு , அது தான் கட்டி இழுக்குது போல”
என மென்மையான குரலில் அவளின் கண்களை பார்த்து சொன்னான் அர்ஜூன்.
” என்ன பாஸ் இன்னைக்கி கலாய்க்க நான்தான் கிடைச்சனா உங்களுக்கு.? ” என விளையாட்டாய் சொன்னவள், அவனை பார்த்து பிரகாசமாய் சிரித்துவைக்க அந்த கன்னக் குழியில் விழுந்தே விட்டான் அவன்.
பின் ” விழி எனக்காக ஒரு பாட்டு பாடுறியா?” என அர்ஜூன் கேட்டிட, அவனை பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ
“சரி சொல்லுங்க என்ன பாட்டு வேணும் உங்களுக்கு” என்றிருந்தாள் கயல்விழி.
” உனக்கு புடிச்சதபாடு”
” நீங்களே ஏதாவது சொல்லுங்களேன்.”
” சரி. ம்ம்…. ஃப்ரெண்ட்ஷிப் பத்தி…. இல்ல வேண்டாம். போர் அடிச்சிடுச்சி. ஒரு சேஞ்க்கு லவ் ஆ பத்தி ஏதாவது பாடேன்.”
“லவ் ஆ……..” என அவனை திரும்பி பார்த்திட மௌனமே அவன் பதிலாய்.
இருப்பினும் பாடினாள் அவனுக்காக.
பாடவேண்டுமென தோன்றியதோ அவளுக்கு.
“கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது …..
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது …..
கேட்கும் கேள்விக்காக தானே பதில் வாழுது……
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல… இயல்பானது….
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…..
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல…..
ரகசியமானது காதல் … மிக மிக ரகசியமானது காதல்….
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்….
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் ….
சுவாரசியமானது காதல் ….
மிக மிக சுவாரசியமானது காதல்….”
ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு முகபாவனை அவளிடம்.
” வாவ். செம்ம செம்ம செம்மசூப்பர், கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு. அவ்ளோ பிடிச்சிருக்கு.” என அவன் சொன்னதும் வெட்கச்சிரிப்பு அவளிடம்.
” அர்ஜூன் நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டியே?”.
” யூ ஹெவ் ஆல் ரைட்ஸ் டூ மீ. கேளு” என்றிருந்தான் அந்த குரல் மயக்கத்தில் தன்னைப்போல. அதை அவளும் கவனித்திருக்கவில்லை.
” உன்னோட மனசுல யாரோ இருக்காங்க. டிஸ்க்ரைப் ஹெர் அர்ஜூன். முடிஞ்சா, விருப்பம் இருந்தா சொல்லு.”
” ம்ம். எப்படி சொல்ற?”
” தோணுச்சி.சோ…….”
“கண்டிப்பா சொல்லணுமா..?” என வசீகரமாக இடது புருவத்தை ஏற்றி இறக்கிட, அவளின் தலையும் தன்னால் ஆடியது ஆம் என்று.
மெல்ல சிரித்தவன் கண்கள் மூடி மெதுவாய் அவளை போல் சாய்ந்து ஆடியவன்
“முழுமதி அவளது முகமாகும் ….
மல்லிகை அவளது மணமாகும் …
மின்னல்கள் அவளது விழியாகும் ….
மௌனங்கள் அவளது மொழியாகும்….
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…..
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் ….
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்….
இதயம் கொடு என வரம் கேட்டேன்….
அதைக் கொடுத்தாள்… உடனே எடுத்தேச் சென்றுவிட்டாள்…..
ஹோ.. ஹோ.. “
என பாடலிலே தன்னவளை வர்ணித்தான் அர்ஜூன். இதை கேட்டவளுக்கு ஐயோ என்றானது. நன்றாக தான் பாடினான். சொல்லபோனால் அவளும் அதை ரசித்தாள் தான் ஆனால் அவள் கேட்டதற்கான பதில் இது அல்லவே.
யாரையேனும் குறிப்பிட்டு சொல்லுவான் என அவள் நினைக்க பாடல் மூலம் அவன் சொல்லியதை என்னவென்று சொல்ல.
“உன் அளவுக்கு பாட வரல. ஏதோ ஒரு அளவுக்கு தான் பாடுவேன்.சோ சாரி.” என அவன் சொல்லிட, பூஜை நேர கரடியாகக் உள்ளே வந்தாள் நந்தினி.
இருவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனரே தவிர அதே பொசிஷனில் தான் அமர்ந்திருந்தனர்.
அந்த கடுப்போடு “அர்ஜூன்.நானும் பார்த்துட்டே இருக்கேன் இவளுக்கு நீ ரொம்பதான் இடம் குடுக்குற. இவலாம் ஒரு ஆளா நமக்கு. த்ரோ ஹெர் அர்ஜூன். இவள பார்த்தாலே எனக்கு இரிட்டெட் ஆகுது.” என்றால் கோபத்தின் கொந்தளிப்போடு.
” லுக் நந்தினி. இட்ஸ் நன் ஆஃப் யூர் பிசினஸ். உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு. தேவை இல்லாம என்னோட விஷயத்துல தலையிடாத.” என்றான் பட்டென.
” அவளுக்காக என்ன அவமானப்படுத்துறியா அர்ஜூன். நான் உன்னோட வருங்கால மனைவி. எனக்கு கேட்க எல்லா உரிமையும் இருக்கு. ஒரு அனாதைக்காக என்னையே இன்செல்ட் பண்ணுவியா. இட்ஸ் நாட் ஃபேர்.” என்றவள் காயலிடம்
” ஹே … எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட அர்ஜுனை மயக்க பார்ப்ப. அனாதை நீ ,உனக்கு அர்ஜூன் கேட்குதா?.. உன்ன பெத்ததனால தாண்டி உன்னோட பேரன்ஸ் மேல போய் சேர்ந்துட்டாங்க. கேட்க யாரும் இல்லாம ஊர் மேல திரியிரவங்களுக்கு ஆயிரம் பேர் கெடைப்பாங்க போய் வேற ஆளை பாரு.” என அவள் முடிக்கும் முன் இடியென இறங்கியது அர்ஜுனின் கரம் அவளின் கன்னத்தில்.
“உன்ன பார்க்கவே புடிக்கல. அருவெறுப்பா இருக்கு. நீயெல்லாம் ஒரு பொண்ணா?. இன்னொரு பொண்ண இவளோ கேவலமா பேசுற. யார் சொன்னது அவள் அனாதைனு நாங்க இருக்கோம் அவளுக்கு. நான் இருக்கேன். எப்போய்மே இருப்பேன். ” என்றவன் கயல்விழியின் கையினை பிடித்து இழுத்து வந்தான் அர்ஜூன்.
கயல்விழி அவளின் அனாதை என்ற வார்த்தையிலே உறைந்து விட்டிருக்க மீதம் நடந்த எதுவும் அவளின் நினைவில் ஏறவில்லை. அந்த வார்த்தை கொடுத்த ரணம் மீண்டும் வெளிவர கடந்தகால நினைவுகள் நிழல்களாக கண்களுக்கு தோன்றி மறைந்தன. தலைவேறு விண் விண்ணென வலித்திட, நிலத்திலே அமர்ந்துவிட்டால் கயல்விழி.
“விழி என்ன ஆச்சி? ஏன் கீழ உட்கார்ந்துட்ட?”என அவன் கேட்டிட பதிலேதும் சொல்லாமல் அழுகையில் கரைந்தால் கயல்.
“விழி. பிளீஸ். நீ இப்படி அழுதா எல்லாரும் என்னை தான் தப்பா நினைப்பாங்க. எழுந்திரு பிளீஸ்.” என்றவன் அவளை அங்கிருந்த கல்மேடை மீது அமரவைதான்.
“இப்போ சொல்லு.என்ன ஆச்சி?” என அவன் கேட்டிட,கவலையே உருவாய் மாறிய குரலிலும் கண்களில் நீருடன்
“எங்க அப்பாவும் அப்படிதான் சொல்லுவாங்க.ஆனா…..ஆனா….” என அவள் திக்கி திணறிட பதறிவிட்டான் அர்ஜூன்.
” விழி.. விழி.. என்ன ஆச்சி ?.”
“ஆனா….ஆனா… அஜூ..” என்றவள் கைகள் நடுங்க கால்களை மேடை மீது மடக்கி கட்டிக்கொண்டு கண்களை இறுக்கி மூடி கொண்டு, உடல் உதற ஏதோ பயத்துடன் அமர்ந்து இருந்தாள்.
ஒரு நொடியில் உடலெல்லாம் வேர்த்து வடிய, கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோட நடுக்கத்துடன் அவளிருந்த நிலை அவன் கண்களையும் கலங்க செய்தது. திடீரென நடந்த இந்நிகழ்வில் என்ன செய்வதென தெரியாமல் தவித்தான் அர்ஜூன்.
அடுத்த ஓரிரு நிமிடங்களில் அவளின் அப்பா அப்பா என்ற உளறல் அதிகரித்துக் கொண்டே போக, கண்களை இருக மூடி இருந்ததால் அவளின் நிலையை சரியாக அனுமானிக்க முடியாமல் தவித்தான் அர்ஜூன்.
இதன் இடையே அவனின் போனில் இருந்து வேறு தொடர்ந்து ஏதோ ஒலி வந்துகொண்டே இருக்க எடுத்து பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்.
அதில் “கயல்விழி இன் டேன்ஜெர்அஸ். ஹார்ட் பீட் இஸ் அப்னார்மல். ஷீ வான்ட் ஃபர்ஸ்ட் எயிட்.” என திரை ஒளிர்ந்திட, ஒன்றும் புரியாத நிலை.
சுற்றி இருந்த நான்கு ஐந்து பேர் வேறு அவர்களிடம் வந்துவிட்டனர். அவர்கள் ஏதேதோ யோசனை சொல்லிட ஏதும் அவன் காதுகளில் ஏறவில்லை.
அடுத்த சில நொடிகளில் அவளின் உளறல் கதறலாக மாறிட வெளிப்படையாகவே உதறல் எடுத்தது அவளின் உடல்.
“விழி.. விழி.. இங்க பாரு… ஹே எந்திரி டீ. பயமாயிருக்கு டீ. என்ன ஆச்சி விழி?…” இதுவே ஜெபம் போல் சொல்லிக் கொண்டிருந்தது அர்ஜுனின் வாய். அதை உணரும் நிலையில் அவள் இல்லை என்றாலும் ஒரு நொடி கண்ணை திறந்து அவனை பார்த்தவள், அடுத்த நொடி மூர்ச்சையாகி அவன் மீதே விழுந்தாள் கயல்விழி.
முதலில் உறைந்து நின்றவன் பின் சுயம் பெற்று அவளை கைகளை ஏந்தி மின்னலென மருத்துவமனை விரைந்திருந்தான் அர்ஜூன். சுற்றி இருந்ததில் ஒருவன் அவர்களுக்கு ஆட்டோ பிடித்து மருத்துவமனை அழைத்து சென்றவன், கல்லூரி நிர்வாகத்திடமும் தெரிவித்தான். பிரின்சிபால் மணி இல்லாத காரணத்தினால் அமுதனிடம் தெரிவித்திட அவர் சிலவற்றை சொல்லிவிட்டு அர்ஜுனை அவளின் பாதுகாப்பிற்கு நிறுத்திவிட்டு கல்லூரி வருமாறு பணித்தார் அம்மாணவனை.
மருத்துவமனை சென்றதும் அவளை அட்மிட் செய்த அர்ஜூன் நேராக சென்றது அகிலனிடம் தான். அகிலன் பிரின்சிபால் மணியின் மகன், இசையின் அண்ணன்.
அகிலன் MBBS படித்து சொந்தமாக சிறிய ஹாஸ்பிடல் ஒன்றை நடத்தி வருகிறான். அகிலனிடம் வந்த அர்ஜூன்
” அகிலா விழி… விழிக்கு ஏதோ ஆகிடுச்சி டா. சீக்கிரம் வா.அப்பாஅப்பான்னு சொல்லிட்டே மயங்கிட்டா . சம்திங் ராங்டா. எனக்கு பயமா இருக்கு. சீக்கிரம் வந்து பாருடா.”
” அர்ஜூன் நீயா இது? எப்பவும் நிதானமா இருப்ப. இப்போ ஏன்டா இவளோ எமோஷன் ஆகுற?. கூல். உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களோ?” என்றிட,
“பேசுறதுக்கெல்லாம் நேரம் இல்ல வாடா” என அகிலனை இழுத்துக்கொண்டு கயல்விழி இருக்கும் அறைக்கு விரைந்தான் அர்ஜூன்.
அவனின் செயலில் சிரித்த அகிலன், கயல்விழி முன்பு நின்று ஒரு மருத்துவனாக அவளை பரிசோதித்தான். பக்கத்திலேயே பதட்டமாக நின்ற அர்ஜுனை பார்த்த அகிலன்,
” பிரசவத்துக்கு அனுப்பிய பொண்டாட்டிக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு கவல படுற புருசன் மாதிரி நிக்கிறடா நீ. ரிலாக்ஸா இரு. ஜெஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். ரிப்போர்ட் ஓட வரேன் ” என்றவன் அர்ஜுனை வெளியே காத்திருக்க சொல்லி அனுப்பிவிட்டான்.