Loading

நீல கண்களின் காதல் பயணம் 💙

அர்ஜூன் வீட்டிற்கு செல்லும் போது ஆதி வீட்டின் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

லட்சுமி சமையலறையில் இரவு உணவிற்கான லிஸ்ட் ஐ, சமைப்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

திடீரென லட்சுமியின் பின்னிருந்து அனைத்தது ஒரு கரம்.

“அஜூ கண்ணா . வந்துடியா? வா  உனக்காக பாதாம்பால் போட்டு வச்சிருக்கேன்.”

என்று அவன் கையில் குவளையை கொடுத்து டிவி முன் இருக்கும் சோபாவிற்கு அழைத்து சென்றார்.

லட்சுமி அமர்ந்ததும் அவர் மடி மீது தலை சாய்தவன் கண்களை மூடிக்கொள்ள,

“டேய். நீ என்ன சின்ன புள்ளையா?  அவ மடியில ஏன்டா  படுக்குற? அவ என்னோட பொண்டாட்டி டா”.

“அது உங்களுக்கு. எனக்கு என்னோட அம்மா. நான் அப்படித்தான் படுப்பேன்.”என்றவன்

“லட்சு ஏதோ பெர்ன் ஸ்மெல் வருதே. உனக்கும் வருதா” என்றிட

“அட படவா. என்கிட்டேயே உன் வேலைய காட்டுறியா? உனக்கு வேணும்னா ஒரு பொண்டாட்டிய கட்டிக்ககோடா.”

“நீங்க சொன்னாலும் சொல்லலனாலும் கட்டிக்க தா போறேன். என் ஆதிப்பாக்கு புடிச்ச மாதிரி “என்றிட பெருமை கலந்த சிரிப்பு ஆதியிடம்.

“கொஞ்ச நேரம் ஆளு இல்லனா  ஏதாவது சண்டைபோட்டுடே இருப்பீங்களா?… சரி சொல்லுங்க என்ன பஞ்சாயத்து?. சுவாதியின் தீர்ப்பு நியாயத்தின் வழியே” என்ற சுவாதி வாகாக லட்சுவின் மறுபுறம் வந்து படுத்துக்கொள்ள,

“வந்துட்டா அடுத்து வெறுப்பேத்த.” ஆதி.

“ஹே வாலு. காலையில இருந்து உன்ன பார்க்கவே முடியல. இதுல மேடம் லெட்டர்லாம் வேற எழுதி வெச்சிட்டு போயிருக்க. ம்ம். அதெல்லாம் சரி இன்னைக்கி காலேஜ் ஓட ஃபர்ஸ்ட் நாள் . எப்படி போச்சு?.” என கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் லட்சுவிடம் திரும்பி

“லட்சு அவனுக்கு மட்டும் புளு கலர்ல கண்ணு குடுத்த தான, எனக்கு மட்டும் ஏன் கருப்பு கலர்?. அப்போ அவன் மட்டும்தான் உனக்கு ஸ்பெசல் ஆ.” என்றிருந்தாள் சுவாதி.

அதில் பெரியவர்கள் தடுமாறிட அர்ஜூன்,”ஹே.அப்பாதான் உன்ன அவர் மாதிரியே அழகா, கியூட்டா, பிளாக் கண்ணோட  வேணும்னு  கேட்டாரு. ஆதிப்பாக்கு உன்ன அவ்ளோ பிடிக்கும். அதனால தான் அம்மா உன்னை பிளாக் ஐஸ் இருக்குரமாதிரி பெத்து குடுத்தாங்க.” என்றிட

” சமாளிக்காதடா. நானே MBBS கு தான் படிக்கிறேன். இந்த கினொவ்லெட்ஜ் கூடவா எனக்கு இருக்காதுன்னு நினைச்ச?.”

“அப்றோம் எதுக்கு கேட்கிற. அதான் உனக்கே தெரியுதுள்ள?..”

“நீ மட்டும் அழகா ஸ்பெசல் ஆ இருப்ப.நான் மட்டும் சாதாரணமா இருக்கணுமா. ?”

“உனக்கென்ன குறை அல்வா மாதிரி அழகா தான இருக்க.”

“இருந்து என்ன பிரயோஜனம் ? எவனும் எட்டி கூட பார்க்கமாட்டங்கிரான் “என்றாள் கவலை குரலில் கேலி போல.

“அடிங். சைட் கேட்குதா உனக்கு”என்று அவளை இவன் அடிக்க இவளை அவன் அடிக்க என அழகு கவிதை அது.

ஆழ்ந்த அரவணைப்பு மட்டுமல்ல, அன்பின் சண்டையும் அழகு தான்.

சண்டை முடிந்து அவள் அர்ஜூன் மடியிலேயே உறங்கிட, லட்சு “இதுக்குமேல அவகிட்ட மறைக்க முடியும்னு தோணல.”என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்.

“அவளுக்கு உண்மை தெரிஞ்சாலும் தெரியலனாலும் அவ என்னோட தங்கச்சி மா. அவளுக்கு என்னை புரியும். மெடிக்கல்லைன் ல தான படிக்கிறா. புரிஞ்சிக்கிற பக்குவம் இருக்கும். எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்களா எதுவும் சொல்லாதீங்க.”என்று அழுத்தமான குரலில் கூறிட, இதுவரை தன்னிடம் வம்பிழுத்த சிறு பிள்ளையா இது என  வியந்தனர் இருவரும்.

அவ்வளவு கடினம் அவனிடம்.அந்த நாளின் தாக்கம் இப்போதும் அவன் உணர்வதாய். மறக்க முடியாத ஒன்று. இரு வேறு விடயங்களில் தத்தளித்தவன். தனக்கானதை இழந்த நாள்.

தனது அறைக்கு சென்ற அர்ஜூன் மெத்தையில் விழுந்திட நினைவெல்லாம் அவளே.

“ஹார்ட்பீட்💙 ” நினைக்க  மனதினுள் ஒரு நெருடல். யாரென்று தெரியாத போதும் அது அவளின் காதலனாக இருக்காது என்ற அதீத நம்பிக்கை அவனிடம்.

ஆதலால் அந்த கலக்கம் அவனை விட்டு மறைந்தது. நித்திரை தேவியும் இந்நேரம் வராது விளையாட்டு காட்ட,  எழுந்து வந்து புத்தக மேசையில் அமர்ந்தவன், கையில் எடுத்தது என்னவோ ஓவிய புத்தகத்தை தான்.

கண்கள் மூடி அமர்ந்திட நினைவடுக்கில் எல்லாம் தன்னவளே. “ஒரு நாளில் எவ்வளவு மாற்றங்கள்.

தனக்கும் காதல் நோய் வந்துவிட்டதா. அவளின் கன்னக்குழியே போதுமே என்னை சாய்ப்பதற்கு. கள்ளி. யாரென்று தெரியாமலே காதலன் என்றவள் அறிந்ததும் என்னசெய்வாளோ?” என்ற நினைப்பே அவனை புன்னகைக்க வைத்தது.

இந்த இரவின் இனிமையில் அவளின் முகத்தை ரசித்து வரைவது அவ்வளவு பிடித்து விட்டது அவனுக்கு.

_________

காலை 7.00 மணி.

தூக்கத்தில் இசை

“நோ. நான் வரமாட்டேன். நீங்களே போங்க. மாட்டேன்…. மாட்டேன்… நோ…..”என தூக்கத்தில் புலம்பிக்கொண்டிருக்க.

“அட பைத்தியமே. லவ் அ அவன் கிட்ட  சொல்லுடின்னா, மாப்பிள்ளைக்கு மாட்டேன்னு சொல்லுது பாரு இந்த பக்கி .” தலையில் அடித்துக்கொண்டாள் கயல்.

“யார் பெற்ற மகளோ நீ…யார் பெற்ற மகளோ” எனஇசையின்  காதருகே கயல் பாடிட, வாரி யடித்து எழுந்து அமர்ந்தாள் இசை.

“ஏன் டி…… ஏன்?   காலைல பாடவேண்டிய பாட்டா இது. நல்லா ரொமான்டிக் மூட் ல பாடுறத விட்டுடு ஏதோ பஞ்ச பிரதேசி மாதிரி பாடுற?”

“க்கும்… ரொமான்டிக் ஆ பாடிட்டா மட்டும் லவ்வ சொல்லி கிழிச்சிடுவ பாரு…. போய் ரெடி ஆகுடி என் போட்டேட்டோ.” என்றால் தலையில் அடித்து.

“குரு நீ இப்படிலாம் பேசுவியா… கொஞ்சம் சொல்லிகுடேன். “

“நாளைல இருந்து போர்ட் மாட்டி டியூஷன் எடுக்கிறேன் இப்போ போய் ரெடி ஆகு. ப்பெ”

“இருந்தாலும் கயல் ரொம்பதா ஸ்ட்ரிட் பா.”

“இப்ப மட்டும் நீ போகல பாத்திரம் பறந்து வரும் பார்த்துக்கோ.” அவ்வளவு  தான் சிட்டாய் பறந்துவிட்டால் இசை.

இருவரும் கல்லூரி வந்து சேர்ந்திட , வாசலில் காத்திருந்தார்  மணி.

அவரை கண்டதும் ஒரு இறுக்கம் தானாய் வந்தது இசையிடம். அதை கயலும் உணர்ந்திட்டாள்  .

இருப்பினும் எதுவும் சொல்ல முடியாத நிலை.

தந்தையுடன் தன் வீட்டை நோக்கி சென்றாள் இசை.

_____

குளித்து முடித்து தயாரான அர்ஜூன் தன்னைப்போல் அந்த உயர்ரக பெட்டியை திறக்க, கைகள் ஒரு நொடி தயங்கியது.

இருப்பினும் தன்னவளிடம் விளையாடி பார்க்க நினைத்தவன், அந்த லென்ஸ் ஐ போட்டுக்கொண்டான்.

அப்படியே கீழே இறங்கி செல்ல சுவாதி வியந்து பார்த்தாள் தன் அண்ணனை.

“என்னடா? எப்போயும் குரங்கு மாதிரி இருப்ப. இன்னைக்கு அப்சரஸ்கே டஃபூ குடுப்ப போலயே”

“என்ன காலைலயே கலாய்க்க ஆள் கிடைக்கலையா”

“இல்லடா அழகா இருக்கியேன்னு கொஞ்சம் புகழ்ந்து பேசினேன்.”

வெட்கம் கலந்த முத்துப் பற்கள் தெரியும் சிரிப்பு அவனிடம்.

“அட்லண்ணனுக்கு மட்லேரியாதான்…”என்ற முணுமுணுப்பு அவளிடம்.

சாப்பாட்டு மேசைக்கு அவளை அழைத்து சென்றவன் முழு உணவையும் அவளுக்கு ஊட்டிய பின்பு தான் அவன் சாப்பிட்டான்.

இதை பார்த்த லட்சு “தங்கையையே குழந்தை போல் பார்க்கும் தூய மனம் உடைய இவனுக்கு, நடப்பதெல்லாம் நன்மையாகவே அமைய வேண்டும் இறைவா “என்று வழக்கம் போல் தன் பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தார்.

பின் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு சுவாதியுடன் வெளியே  சென்றான் அர்ஜூன்.

சுவாதியை அவளின் மருத்துவ கல்லூரியில் இறக்கி விட்டு சென்றவனின் எண்ணம் முழுவதும் கயல்.

தன்னை பார்த்த உடன் அவளின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும். என்ற சிந்தனையிலேயே கல்லூரிக்கு சென்றடைந்தான் அர்ஜூன்.

ஆனால் அவளோ வாடிய கொடியாக நடைபாதை அருகே உள்ள கல்மேடையில் அமர்ந்திருந்தாள்.

அர்ஜூன் அவளை நெருங்கவும் பிரபு அவளின் அருகே வரவும் சரியாக இருக்க, என்னதான் நடக்கிறது  பார்க்கலாம் என அர்ஜூன் அங்கேயே நின்றுவிட்டான்.

ஆனால் கயலின் கோபமும் பிரபுவின் ரத்தம் தோய்ந்த நிலையும் முற்றிலும் அர்ஜுனே எதிர்பார்க்காதது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்