Loading

நீல கண்களின் காதல் பயணம் 6 💙.

அடர்ந்த காட்டுக்கு நடுவில் அமைந்திருந்தது ஒரு வெள்ளை நிற இரண்டடுக்கு மாடி வீடு.

காட்டில் இருந்தாலும் அனைத்து வசதிகளும் பெற்றிருந்தது.

அந்த வீடே அதிரும் வண்ணம் ஒரு குரல் ஓங்கி ஒலித்திட பறவைகள் அனைத்தும் மிரண்டு வானில் பறந்தது.

“எப்படி டா? இது எப்படி நடந்துச்சி? அவ்வளவு கட்டுப்பாடையும் மீறி எப்படி அவளால தப்பிச்சி போக முடிஞ்சது?…. நீங்கயெல்லாம் என்ன _*********_ல பார்த்துக்கிட்டீங்க.

ஒரு பொட்டபுள்ள உங்க எல்லார் கண்ணுளையும் மன்னதூவிட்டு போயிருக்கா.அசிங்கமா இல்ல உங்களுக்கு.

என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது இன்னும் 2 வாரதுல அந்த பொண்ணு இங்க இருக்கணும். போங்க.”என்று தன் கணீர் குரலில் கத்தினான் பெருமாள்.

அனைவரும் உக்கிரத்துடன் வெளியே சென்றிட அவனின் அலைபேசி அதன் இருப்பிடத்தை காட்டியது அழைப்பு ஒலியால்.

“ஐயோ… இவர்கிட்ட எப்படி சொல்றது?..” என யோசித்தவன் ,

அழைப்பை ஏற்று “சொல்லுங்க சார்” என்றிட..

“என்ன நடக்குது பெருமாள் அங்க. மதிநிலா எங்க?… அவ பத்திரமா இருக்கா தான.”

“சார்….. அது… வந்து…….”

“என்ன பெருமாள் மலுபுரிங்க? மதிநிலா எங்க?”

“சார் அந்த பொண்ணு எப்படியோ தப்பிச்சி போயிடுச்சு சார். நம்ம ஆளுங்க தேடிக்கிட்டு இருக்காங்க சார் கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம் சார்.”

“யூ ஃபூல் இடியட்… அறிவு இருக்காயா கொஞ்சமாவது . ஒரு வருஷமா கண்காணிச்சி கஷ்டபட்டு தூக்குனவள இப்படி கோட்டவிட்டுட்டு புடிசிடலாம்னு என்கிட்டேயே சொல்றியா?, எவ்வளோ முக்கியமான பொண்ணுன்னு தெரியுமா?. இன்னும் 1 மாசத்துல அந்த பொண்ணு இங்க இருக்கணும் . இல்ல நீ உயிரோட இருக்க மாட்ட. மைண்ட் இட்.” என்றது கம்பீர குரல் ஒன்று.

அவனின் பேச்சிலேயே உடலெல்லாம் வேர்த்து கொட்ட ஆரம்பித்துவிட்டது பெருமாளுக்கு.

ஒருவன் இப்படி இருந்தால் மற்றொருவனோ.. முற்றிலும் வேறு விதமாக இருந்தான்.

மீண்டும் பெருமாளுக்கு அழைப்பு.

” மதிநிலா எங்கடா ?… “

“சார்…அந்த பொண்ணு எப்படியோ தப்பிச்சி போயிடுச்சு சார். சீக்கிரமா உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திடுறேன் சார்”

“எதுக்குடா உனக்குலாம் மீசை?.. போய் புடவை கட்டிட்டு  வளையல் போட்டுக்கோ . ஒரு பொண்ணை பார்த்துக்க துப்பில்லை நீயெல்லாம் என்னடா ஆம்பள. இதுல ரௌடினு பந்தா வேற. த்தூ ….”என்றது கோபம் கொப்பளிக்கும் குரல்.

“ரெண்டு பேருக்கும் நடுவில மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்கே.என்ன பொழப்புடா இது… “என்ற புலம்பலுடன் அவளை தேட சென்றான் பெருமாள். _____________

கவின் தன் மேல் உள்ள கோபத்தில் யாரையும் பார்க்காது கேண்டீனில் இருந்து வெளியேறினான்.

அதை பார்த்த அர்ஜூன் “பங்கு கொஞ்சம் இங்க வாடா” என்றழைக்க திரும்பியும் பாராது சென்றுவிட்டான்.

“நீ என்ன கூப்பிட்டாலும் அவரு திரும்ப மாட்டாரு. ஏன்னா இசையின் மந்திரம் அவரை கட்டி போட்டிருக்கும்.” என கயல் சொல்லிட,

” உனக்கு எப்படி தெரியும், அதும் வந்தன்னைக்கே?”

“இதுக்கெல்லாம் PHD ஆ பண்ணிட்டு வரமுடியும். ரெண்டுபெரோட மூஞ்சியே சொல்லுதே.”

“நிறைய வித்தைகளை கையில வெச்சிருப்ப போலயே “

இல்லாத சுடிதார் காலரை தூக்கி விட்ட கயல்”அதனால தான் நான் குரு, அவள் சிஷ்யை “. என்றிட.

“உன் விரல் இடுக்குள்ள என் விரல் கிடக்கணும்…..

நசுங்கிற அளவுக்கு இறுக்கி நான் பிடிக்கணும் ….

நான் கண்ணை திறக்கையில் உன் முகம் தெரியணும்…..

உசுருல்ல வரைக்குமே உனக்கென்ன புடிக்கணும்…..”

என்ற பாடல் பெண்ணின் தேன் குரலில் கேட்டிட , அந்த குரல் அர்ஜூனுல் ஏதேதோ செய்தது. அறை நிமிட பாடல் என்றாலும் அந்த குரலுக்கு அர்ஜூன் அடிமை.

அது கயலின் குரல். அவள் தான் ஸ்வேதாவிற்காக அப்பாடலை பாடி பதிவு செய்திருந்தாள்.

கயல் அவளின் போன் ஐ எடுத்து பார்க்க.

அதில் “ஹார்ட் பீட் 💙” என ஒளிர்ந்தது.

அழைப்பை ஏற்று “ஹலோ . சொல்லுடா” என்றாள் கயல்.

பாடல், ஹார்ட் பீட் 💙, அவளின் டா என்ற அழைப்பு இதையெல்லாம் வைத்து அது ஒரு ஆண் என நினைத்த அர்ஜூன், சொல்லென எழுந்த ஏமாற்றத்தை மறைக்க மிகுந்த சிரமப்பட்டான்.

அதை பார்த்த கயல் “டார்லிங், நான் உனக்கு ஈவினிங் கால் பண்றேன். பாய்.”என அழைப்பை துண்டித்துவிட்டு அவனை பார்க்க,

அவனும் அவளின் பேச்சில், முகத்தை சீராக்கி திரும்பினான்.

அதற்குள்ளே இசையும் அவர்களுக்கு அருகில் வந்துவிட , பேச வந்ததை நிறுத்திவிட்டு அவளை பார்த்தனர்,

இசை நேராக வந்து அர்ஜுனின் மடியிலே படுத்து கொண்டாள்.

அர்ஜூன் அவளின் தலையில் அழுத்தம் கொடுக்க அவளுக்கு மீண்டும் அழுகை தான் வந்தது.

கயல் இசைக்கு என்ன ஆனதோ என்ற கவலையில் அர்ஜுனின் மறுபக்கம் வந்து அமர்ந்து அவளை பார்க்க,

அர்ஜுனுக்கு தான் ஒருபுறம் மகிழ்வு, மறுபுறம் கவலை.

தன் தோழி அழுவதை தாங்காது,” பங்கு, இப்போ என்ன கல்யாணமா முடிஞ்சிடுச்சி. ஜெஸ்ட் நாளைக்கு உன்ன பார்க்க தான வராங்க. அதுக்கு ஏன் இப்படி பீல் பண்ணிட்டு இருக்க?”

“இல்ல பங்கு. இவ்ளோ நாள் சும்மா விளையாட்டா தான் இருந்தேன். ஆனா இன்னைக்கி அப்பா கல்யாண பேச்செடுத்ததும் என்னமோ மாதிரி இருக்கு டா.”

” கவின் கிட்ட சொல்லிடியா “

அவள் இல்லை எனும் விதமாக தலையசைக்க,

“லூசு, இப்பவும் சொல்லலனா வேற எப்போதா சொல்ல போறீங்க? லவ் பண்ணுறத சொல்லவே தைரியம் இல்லனா எதுக்கு லவ் பண்றீங்க?” என பொறிந்தாள் கயல்.

அவளை ஒரு பார்வை பார்த்த அர்ஜூன் இசையிடம்”அப்றோம் ஏன் அவன் tension ஆ போனான்?” என்றதுதான் தாமதம்,

“அதெல்லாம் சொல்ல முடியாது போட.”என கவலையை மறந்து சிரித்து கொண்டு இசை எழுந்து ஓடிட,

இப்போ இங்க என்ன நடந்துச்சி என்ற ரீதியில்  முழித்தனர் இருவரும்.

மாலை கல்லூரி முடிய தனது நீல நிற ஸ்கூட்டியை இயக்கினாள் கயல்.

திடீரென இசை பின்னால் அமர்ந்து ம்ம் போலாம் என்றிட,

“நான் வீட்டுக்கு போறேன். நீ எங்க போகணும்.”

“நானும் உன்னோட வீட்டுக்கு தா போகணும்.”

“ஏன்?”

“இனிமேல் எனக்கும் அதுதான் வீடாம். உன்னோட ஹார்ட் பீட் தா சொல்லுச்சு” என்றாள் சோகமே உருவான குரலில்.

அவள் சொல்லிய தொனியில் கயலுக்கு சிரிப்பே வந்துவிட்டது.

“அப்போ உன்னோட திங்ஸ்”

“எனக்கு முன்னாடியே அது எல்லாம் உன்னோட வீட்டுல பத்திரமா போய் சேர்ந்துடுச்சி”

“யார் பார்த்த வேலை இது “என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில்கயல்.

“அதுவும் உன்னோட ஹார்ட் பீட் 💙 தான்” சோகமாக சொல்லிட சிரித்துகொண்டே தலையசைத்து வண்டியை இயக்கினாள் கயல்.

சரியென இருவரும் சாலையில் செல்ல அவர்களின் பின்னாலே வந்தான் அர்ஜூன்.

அதை பார்த்த கயல் வண்டியை நிறுத்தி விட்டு அவனை பார்க்க அவனும் அவர்களின் அருகே நின்றான்.

“நீ ஏன் எங்க பின்னாடி வர, உங்க வீட்டுக்கு போகவேண்டியது தான”

“வீடு வரைக்கும் கூட வரணுமாம். உன்னோட தோஸ்து , என்னோட இசையின் கட்டளை.” என்றான் சுரத்தே இல்லாமல்.

கயல்அதை உணர்ந்தாலும்  இசையின் முன் எதையும் கேட்க முடியாமல் வண்டியை இயக்கி வீடு நோக்கி சென்றாள்.

வீட்டை அடைந்ததும் அர்ஜூன் அப்படியே திரும்பி செல்ல பார்க்க,”அர்ஜூன். இவ்வளவு தூரம் வந்துட்டு அப்படியே போனா எப்படி. உள்ள வந்துட்டு போங்க.”

“இல்ல விழி. டைம் ஆகுது நான் கிளம்புறேன்” என்றவன் இருவருக்கும் பொதுவாக பத்திரம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

__________

உள்ளே நுழைந்த இசை “என்னடி இது. நீல கலர் பெயின்ட் டப்பா உள்ள குதிச்ச மாதிரி எல்லாமே ப்ளூ கலர்ல இருக்கு” என சுத்தி முத்தி பார்த்தவள்,

உறைந்து நின்றுவிட்டாள். ஏனெனில் பார்த்த பொருள் அப்படி.

அங்கு சுவற்றில் எட்டு வயது உடைய ஒரு சிறுவனின் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. அந்த சிறுவனுக்குஅச்சுறுத்தும் வகையில் அடர் நீல நிற கண்கள் .

விளையாடிவிட்டு கலைந்த கூந்தலும் அழுக்கான உடை சகிதம் இருந்தான் அந்த சிறுவன்.

“இது…….”என இசை இழுக்க.

“இது என்னோட குட்டி வயசு கிரஷ். அஜு குட்டி.” என்றாள் கயல் அழகாய் ஒற்றை கண்ணடித்து.

“கிரஷ் ஆ?… இது யாருனு தெரியுமா?.”

“இல்ல இசை.தெரியாது. தெரிஞ்சிக்கனும்னு  ஆசையும் இல்ல . பட் அவனுக்காக தான் நான் இப்போ காஞ்சிபுரம் வந்ததே.”என்றாள்.

குரலில் கவலையின் சாயல்.

“தெரியாதுன்னு சொன்ன. இப்போ அவனுக்காக வந்ததா சொல்ற என்னடி உன் கதை?.” இசை அழுத்தமாய் கேட்டிட

“ஜெஸ்ட் ஒரு முறை ஒரே ஒரு முறை இவன பார்க்கணும்னு ஆசை. என்னோட லைஃப் டைம் முடியிறதுக்குள்ள இவன பார்க்கணும் இசை. அதுதான் என்னோட கடைசி ஆசையும் கூட.”

என்றவள் அந்த புகைப்படத்தில் கைவைத்து

“இந்த கண்கள். அந்தஅறியாத  வயசுலயே ரொம்ப பிடிக்கும். நீ கேட்டல ஏன் உனக்கு ப்ளூ கலர் புடிக்கும்னு, இதனால தான் ப்ளூ கலர் ரொம்ப புடிச்சிடுச்சி. “

“கடைசி ஆசையா? என்னடி சொல்ற?… எனக்கு ஒன்னும் புரியல.”என்ற இசை கயலின்முன் வந்து நிற்க .

“எதையும் சொல்ற நிலைமைல நான் இல்ல இசை. நேரம் வரும்போது சொல்றேன் . இப்போ வா சாப்பிடலாம்.” என கயல் இசையை இழுத்து செல்ல ஒரு குழப்பமான மனநிலையில் என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது மொத்தமாக உணவினை அள்ளி வாயில்  போட்டுக்கொண்டாள் இசை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments