Loading

நீல கண்களின் காதல் பயணம் 5 💙

இசையை இழுத்து சென்ற கயல் நேராக போய் நின்றது என்னவோ அர்ஜுனிடம் தான். இதுவரை இருந்த கலக்கமான மனநிலை நந்தினியின் வார்த்தைகளில் ஓடி விட்டது.

“எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை நான்சென்சபிள் இடியட் என்றிருப்பாள்.இதை இப்படியேவிட கூடாது”என்ற முடிவுடன் வந்திருந்தால் கயல்.

கோப முகத்துடன் தன் முன் வந்து நின்றவளை என்ன எனும் விதமாக தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான் அர்ஜூன்.

அதை கண்ணிமைக்காமல் பார்த்த கயலின் முகத்தில் இறுக்கம் தளர்ந்து ரசனை .

அவளின் முன் சொடுகிட்டவன் “ஹலோ”என்று அவள் முகத்தின் முன் கை அசைத்தான் அர்ஜூன்.

அவ்வளவுதான் மீண்டும் கோப முகத்துடன் ” நீங்க நந்தினிய லவ் பண்றீங்களா?” என்றாலே பார்க்கலாம்.

அவளின் கோபத்தை ரசித்தவன்”யார் சொன்னது “என்று மீண்டும் புருவத்தை ஏற்றி இறக்கிட,

இவன் வேற நேரங்காலம் தெரியாம மேனரிசம் காட்டுறானே கடவுளே!என மனதோடு கடவுளிடம் மன்றடியவள்,

“அந்த அல்டாப்பு நந்தினி தான் சொன்னா. நீங்க அவளோட ஆளுன்னு. அப்போ நீங்க அவள லவ் பண்றீங்களா?”

அவளின் குழந்தைத்தனம் அவனை அவளின் பக்கம் வெகுவாய் சாயவைத்தது.

ஒரு மென் சிரிப்புடன் “நீயும் தான் என்ன உன்னோட ஆளுன்னும்  நான் உன்ன லவ் பண்றதாவும் சொன்ன. அப்போ நாம லவ் பண்றோமா?”என்றான் நிதானமாக அதே சமயம் அழுத்தமாகவும்.

ஓடி ஒளிந்திருந்த சங்கடம் இப்போது மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள தலையை குனிந்து கொண்டு “சாரி அர்ஜூன்”என்றாள்.

“அது…வந்து…..”

“அதான் வந்துடியே சொல்லு “

“அது…..”ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிதானப்படுத்தியவள் இப்போது நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அவனோ மேலே சொல்லு எனும் விதமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

“பிரபு எங்களை டீஸ் பண்ணி சிரிச்சான். அவனோட முகத்துல பயத்த பார்க்கணும்னு  தோணுச்சி. அதான் அப்படி சொன்னேன். சாரி அர்ஜூன்.

“அது சரி உனக்கு எப்படி அர்ஜூன் தெரியும்?.அதுவும் இல்லாம அவன் பேர சொன்னா பிரபு பயப்படுவானு உனக்கு யார் சொன்னது?”என்றால் நடுவில் நந்தியாக இசை.

“அது சின்ன கதை பங்கு உனக்கு அப்றோம் சொல்ற. இப்போ கொஞ்சம் “என அர்ஜூன் வாயின் மீது கைவைத்து காட்டிட.

இசை மௌனமாக நின்றால் அது இசையே இல்லையே. மீண்டும் “எல்லாம் சரி. அர்ஜூன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?”

“நான் அஞ்சலிக்கு குடுத்தப்போ மேடம் நோட் பண்ணிருப்பாங்க.”

“அது யாரு பங்கு அஞ்சலி?..”

“ம்ம் உன்னோட நாத்தனார். போய் சைட் அடிக்கிற வேலைய பாரு போ. நடுவுல நந்தி மாறி குறுக்க வந்துகிட்டு.”என அவள் தலையில் அடித்து உள்ளே அனுப்பினான் அர்ஜூன்.

இப்போது கயல் சிரித்த சிரிப்பில் அர்ஜூன் தான் விழவேண்டியதாய் போனது அவளின் கன்னங்குழியில்.

“சரி நீ சொல்லு. உன்னை காப்பாத்த நான் அஞ்சலிக்கு சொன்னத சொல்லியிருக்க. ஓகே தான். பட் நான் அவள என்னோட தங்கச்சின்னு தான் சொல்ல சொன்னேன். ஆளுன்னு சொல்ல சொல்லலையே?”

“அது…. அந்த நேரத்துல ஒரு புளோல சொல்லிட்டேன்.”

“ம்ம் அப்போ புளோல என்ன வேணுனாலும் சொல்லிடுவியா?.”

“அதான் சாரி சொல்லிடேனே பிளீஸ் விடேன்.”என்றால் கண்களை சுருக்கி.

“ஃப்ரெண்ட் ” என அவள் கையை நீட்டிட…..

ராட்சசி கொஞ்சியே கொள்ளுறா. என்ன இது ஒரே நாளிலே இப்படி மாறிட்டேன்.என மனதோடு பேசிக்கொண்டிருந்தான் அர்ஜூன் .

அடுத்த வகுப்பிற்கான மணி அடிக்க அங்கு வந்துகொண்டிருந்தால் நந்தினி. அதை பார்த்த கயல் “அர்ஜூன் கொஞ்சம் கை கொடுக்கிறீங்களா?” என்றிட.

நினைவு வந்தவனாக அவளை பார்க்க அவள் கை கொடுக்குமாறு சைகை செய்து கண் காட்டினாள்.

அவன் குனிந்து பார்க்க, அவள் கையை நீட்டிக்கொண்டிருந்தாள்.

உடனே அவள் கையை மென்மையாக அர்ஜூன் பிடிக்க இருவர் மனதிலும் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு.

நந்தினி அவர்களை பார்த்துவிட கயல் கண்களாலே அவளுக்கு கையை காட்டி சிரித்திட கொலைவெறியே வந்தது நந்தினிக்கு.

இருப்பினும் அர்ஜூன் முன்பு காட்ட முடியாத கடுப்பில் அறை கதவை எட்டி உதைத்திட “ஐயோ” என கத்திக்கொண்டே கீழேஅமர்ந்தாள் நந்தினி.

சத்தமாய் கயல் சிரித்து கொண்டிருக்க அதை ரசித்துக்கொண்டிருந்தான் அர்ஜூன்.

பின் வகுப்பும் தொடங்கியது.

அனைவரும் பாடத்தை கவனித்திட அர்ஜூன் மட்டும் கீழே குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

அவன் ஆண்கள் அமரும் வரிசையில் 5 ஆவது வரிசையின் கடைசியில் அமர்ந்திருக்க, கயல் மற்றும் இசை பெண்கள் 4 ஆவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.

ஆதலால் அர்ஜுனுக்கு அவளை பார்ப்பது சுலபமாகிவிட, தன் கண்ணோட்டதிலேயே கயலை வைத்திருந்தான்.

மனதில் இருந்த கலக்கம் மறைந்து இப்போது அர்ஜூன் உடன் நட்பு என வந்ததும் எந்த தயக்கமும் இன்றி பேச ஆரம்பித்தாள் கயல்.

அதில் அவனை திரும்பி பார்க்க அவனோ கீழே ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் கைகளில் இருந்த பென்சில் ஸ்கெட்ச் ஐ வைத்து அவன் ஏதோ வருகிறான் என்று தெரிந்துகொண்டவலுக்கு, அதை பார்க்க வேண்டுமென ஆவல்.

__________

மதிய உணவு இடைவேளை வந்துவிட அனைவரும் கலைந்து சென்றனர்.

ஒரு மாணவன் வந்து இசையை பிரின்சிபால்  அழைத்தாக தெரிவித்திட விரைந்து சென்றிருந்தாள் இசை.

அவளுக்காக ஐவரும் காத்து கொண்டிருக்க வந்தவளின் முகம் முற்றிலும் கவலையை தாங்கி இருந்தது.

“என்ன பங்கு? ஏன் ஒரு மாதிரி இருக்க?. சார் ஏதாவது திட்டினாரா?”என அர்ஜூன் அக்கறையாக வினவ.

“நத்திங் பா.வாங்க போகலாம்”

“எனிதிங் சீரியஸ் பங்கு”…

“டேய். நத்திங் டா.வா சாப்பிட போகலாம் . பசி கண்ணைக்கட்டுது.” என அனைவரையும் கேன்டீன்  அழைத்து சென்றாள் இசை.

அர்ஜூன் அனைவருக்கும் உணவினை வாங்கி வர, கயல் தனக்கு ஏதும் வேண்டாம் என்றிருந்தாள்.

இசையும் எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டாள். கயல் உணவினை மறுத்துவிட. அவளின் அருகில் இருந்த இடத்தில் வந்து அமர்ந்த அர்ஜூன்

” இப்போ நீயா சாப்பிடுரிய இல்ல நானே ஊட்டி விட்டு உன்னை சாப்பிட வைக்கடுமா? எப்படி வசதி?”என்றிட கண்கள் இரண்டும் வெளியே குதித்துவிடும் அளவிற்கு தனது முட்டை கண்ணை விரித்து பார்த்தாள் கயல்.

மற்றவர்கள் முகத்தில் குறும்பு புன்னகை கூத்தாடா, இசை முகம் மட்டும் கவலையுடனே இருந்தது.

அதை கவனித்த கவின் “இசை என்ன ஆச்சி உனக்கு?.என் உம்முனு இருக்க?. எனி ப்ராப்ளம்?”என காட்டிட

உதட்டில் சிறு சிரிப்புடன் இல்லை என தலை அசைத்தவள் சாப்பாட்டை பாதியில் விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

ஏதோ சரியில்லை என கவனித்த கவின் யாரின் கவனமும் ஈர்க்காது இசையின் பின்னே செல்ல இருவரின் கண்களில் இருந்து இக்காட்சி தப்பவில்லை.

இசை கை கழுவிவிட்டு திரும்ப கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அழுத்தமான பார்வையுடன் நின்றிருந்தான் கவின்.

இசையின் கண்களில் கண்ணீரின் தடம். அதை பார்த்தவன் இசை என ஏதோ கேட்க வர காற்றுக்கு கூட இடம் விடாது இறுக்கமாக  அமைந்திருந்தால் இசை.

என்ன நடக்கிறது என்று கவின் உணரும் முன்னே எல்லாம் நடந்துவிட்டது.

தன்னிடம் தஞ்சம் கொண்டு தேம்பி அழும் இசையை எவ்வாறு தேற்றுவதென்று தெரியாமல் விழிதிருந்த கவின்,பின் மெதுவாய் அவளின் தலை கோதி “இது என்னோட இசை இல்லையே. அவள் மத்தவங்களை சிரிக்கவைப்பா . இப்படி ஆழமாட்டா . என்ன ஆச்சி என்னோட இசைக்கு ” என பரிவாய் பேசிட இன்னும் அழுகை தான் அதிகரித்தது அவளுக்கு.

தன்னிடம் ஒட்டியிருப்பவளை பிரித்து நிறுத்தியவன் அவளின்முகத்தை பார்க்க என்ன நினைத்தானோ மீண்டும் அவனே இறுக அனைத்து , அவளின் காதருகே

“என்ன டி ஆச்சி. ஏண்டி இப்படி அழுது என்னையும் அழுகவைகிற? பிளீஸ்டி.  உன்னை இப்படி பார்க்க முடியலடி. ப்ளீஸ்.”என்றிட இசை அதிர்ந்து அவனை  பார்த்தாள்.

எப்போதுமே தன்னை டி என உரிமையுடன் அழைக்காதவன் திடீரென இப்படி பேசினால் அவள் என்ன செய்வதாம்.

அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தபின்புதான் என்ன பேசினோம் என்பதே கவினுக்கு உறைத்திட அடுத்த நொடி வெளியே சென்றிருந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்