நீல கண்களின் காதல்பயணம்…
அண்ணா யூனிவர்சிட்டி என்ற பெயரை தாங்கியிருந்தது கல்லூரி நுழைவாயில். உள்ளே செல்வதற்கு நடைப்பாதை அமைக்கபட்டு இருபக்கமும் மரங்கள் அணிவகுத்து நின்றிருந்தது. மரங்களின் நிழலில் அமர்வதற்கென கல்மேடையும், பென்ச்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதனை அடுத்து நான்கு அடுக்குமாடி கட்டிடம். ஒவ்வொரு பிரிவிற்கும் ஓரு பிளாக் என மூன்று பக்கம் சுற்றியும் கட்டிடம் கட்ட பட்டு இருந்தது.
இதற்கு வெளியில் மூன்று கடைகள் தள்ளியே அமைந்துள்ளது கே.வி. பாதாம்ஸ்பெஷல் என்ற கடை. இது பாதாம் பருப்பினால் தயாரிக்கப்படும் அனைத்திலும்பிரசித்தி பெற்றது. பாதாம் ஜூஸ், பாதாம் ஐஸ்கிரீம், பாதாம் கேக். பாதாம் பால் போன்றவை இங்கு பிரபலம்.
தனது ராயல் என்பீல்டு வண்டியில் கெத்தாக வந்து இறங்கினான் அர்ஜூன். கண் கண்ணாடியை கழற்றி விரலில் சுற்றிக்கொண்டு உள்ளே சென்றவனை முறைத்து கொண்டிருந்தனர் அனைவரும்.
“ஹாய். எல்லாரும் எப்படி இருக்கீங்க?”என சிரித்த முகத்துடன் கேட்க, யாரிடமும் பதில் இல்லை. அதே பார்வை.
“ஓய் காய்ஸ் எல்லாரும் கண்ணுலே பயர் விடுறிங்க? இப்படி நீங்க பார்த்தா நான் ஒரே நாள்ல தீஞ்சிடுவேன் போலயே. பயர் அ கொஞ்சம் ஆப் (off) பண்ணுங்கடா”. என்று அவர்களை கட்டி அனைத்துக்கொண்டா ன் அர்ஜூன்.
“அவன் தலையிலயே நாலு போடுங்கடா. நான் அவ்வளவு சொல்லியும் இவன் லேட்டா வரான். கொஞ்சமாவது பொறுப்பு பருப்புன்னு எதாவது இருக்கா? எல்லாமே இந்த இசை தா பார்க்கணும்னா எப்படி? என இசை முறுக்கிக்கொள்ள.
“அதான. நீயே ஒரு அன்னக்காவடி உங்கிட்ட பொறுப்ப குடுத்தா அது உருப்படுமா ? நியாயமா பேசணும் பங்கு.அதானடா.” என்று கைத்தட்டி சிரித்தான் அஜய்.
“டேய் அன்னக்காவடின்னு சொல்லாதடா “என விக்ரம் சொன்ன நொடி “நண்பேண்டா ” என்று பெருமையுடன் இசை அவனை பார்க்க. விக்ரமோ “அவங்க சொத்துபத்துனு வாழுற குடும்பம்டா. அவளுக்கு ஏத்தமாதிரி தண்டக்சோறுனு சொல்லுங்கடா.” என்றிட முகமே தொங்கிவிட்டது இசைக்கு.
அனைவரையும் பேசியே சிரிக்கவைப்பவள் இப்போது உம் என முகத்தை வைத்திருப்பது பிடிக்காத கவின்
“டேய் லேட்டா வந்தது அர்ஜீன். அவனதா நியாயப்படி நீங்க திட்டனும். அதவிட்டுட்டு இவள ஏன்டா கலாய்கிரிங்க? சொல்ல போனா உங்களயே இவதான போன் பண்ணி இங்க வர சொன்ன. அவ தண்டச்சோருன்னா அப்போ நீங்கலாம் யாரு?” என இசைக்கு பரிந்து பேசிட, அவளின் கண்களில் சட்டென ஒரு மின்னல் வெட்டி சென்றது.
“பின்ன என்னடா கவின். சீரியஸ்ஸா பேச வேண்டிய டயலாக்க அவ எவ்வளவு காமெடியா சொல்ற பாருடா. அவள கலாய்ச்சா உனக்கு ஏன் கோபம் வருது.?”அஜய்.
“அது,……… பாவம் டா அவ அதான் ” கவின்.
“ம்ம் ம்ம்….” அர்ஜூன்.
“என்னடா ம்ம்?.. எல்லாம் உன்னாலதா. பைத்தியம் பைத்தியம்.”என அவன் தோள் மீது புத்தகத்தால் இசை அடிக்க.
“பங்கு பங்கு வலிக்குது பங்கு. உன் நண்பன் பா. கொஞ்சம் கன்சிடர் பண்ணுமா “. என அர்ஜூன் முகத்தை சுளிக்க அடிப்பதை நிறுத்தினாள் இசை.
“அடிச்சி அடிச்சி டயர்டா இருப்ப ஒரு பாதாம் பால் சொல்லவா” அர்ஜூன்.
“நோ. பாதம்பால் உனக்கு.எனக்குலாம் ஐஸ்கிரீம் தா வேணும்.” என இசை சொல்ல தலையில் அடித்துக்கொண்டனர் மூவரும்.
“அட பாச பயிருங்களா. இப்போதானடா அடிச்சிக்கிட்டீங்க, அதுக்குள்ள கொஞ்சிக்கிறீங்க. கொஞ்சமாவது கேப் குடுங்கடா. எப்போ எப்படி இருக்கீங்கண்ணு புரியமட்டாங்குது”. என்றான் விக்ரம் புலம்பலுடன்.
பின் நான்கு பாதாம் ஐஸ்கிரீம் (ம) திக்கான ஒரு பாதாம் பால் ஆர்டர் செய்து குடித்துவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.
அஜய், விக்ரம், கவின், இசை, அர்ஜூன் இவர்கள் ஐவரும் பாச பிணைப்புகள். அர்ஜூன் தான் அவர்களின் முதன்மை.நபர்களுக்கென்றால் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திடுவான்.அவர்களின் முகத்தை வைத்தே உள்ளத்தை உணர்ந்து கொள்பவன்.
யார் சொன்னது ஆண்கள் என்றால் கடினமானவர்கள், முரடர்கள் என்று? இவன் மாறுபட்டவன்.மென்மைஆனவன் .
இவர்கள் கல்லூரியில் நுழையும் போது அவர்கள் முன்னாள் சென்று கொண்டிருந்தது ஒரு நீல நிற ஸ்கூட்டி. ஓட்டி செல்வது பெண் என்பதை அவளின் நீண்ட கூந்தலை வைத்து அறிந்து கொண்டனர். கூந்தல் வண்டி சீட்டை தாண்டி கீழே ஊஞ்சல் ஆடியது.
“என்னடா இவ இவ்வளவு நீளமா முடிய வளர்த்து வெச்சிருக்கா. ஒரு வேலை டிஸ்னிப் பிரான்ஸ் ஆ இருப்பாலோ.”என இசை ஆச்சரியமாக பார்க்க, அர்ஜூன் இதயம் நின்று துடித்து.
நீல நிற கிளிப் மற்றும் பேண்ட் போட்டு அழகாக முடியை கட்டி இருந்தால். அதன் அழகை கூட்டியது மல்லிகை பூ .
அதை பார்த்த அர்ஜூன் இதயம் தாறுமாறாக துடித்தது. அவனின் இதய துடிப்பை அவனே அறிவதாய்.
அர்ஜீன் சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தவும். மற்றவர்கள் பதறிவிட்டனர். “என்ன பங்கு ? என்ன ஆச்சி உனக்கு?”இசை.
“நத்திங் பங்கு. சும்மா லுலுலாய்கி பண்ணேன் “.என்று அழகு காட்டி சிரித்துவிட்டு ,”நீங்க அலார்டா இருக்கீங்களானு டெஸ்ட் பண்ணேன்”..என கூறி சமாளித்தான். மற்றவர்கள் “அடடா பைய்த்தியமா இவன்” என்ற பார்வை பார்க்க. அவன் “ஹி ஹி ஹி ” என சிரித்தான். “
அவனுள் ஏதோ ஒரு உணர்வு. அவனுக்கே அது புரியவில்லை.அவன் மனம் அவனிடம் ஏதோ சொல்கிறது . ஆனால் அது அர்ஜுனுக்கு புரியவில்லை.
இசை ஏதோ சொல்ல வரும் போது அவளின் போன் ரிங்டோன் ஒலித்தது. எடுத்து பார்த்தால் கல்லூரியின் பிரின்சிபால் அழைத்திருந்தார்.உடனே அழைப்பை ஏற்று காதில் வைக்கவும்
அவர், “அடுத்த தை ஐந்து நிமிடத்தில் நீ என் அறையில் இருக்க வேண்டும்” என கூறி அழைப்பை துண்டித்திருந்தார்.
“என்னடி வழக்கம் போல ரெண்டு வார்த்தையா” என அஜய் கேட்க. “பிரின்சி ஏதோ டென்ஷன் ஆ பேசுதுடா. எதோ ஆப்பு வைக்க போகுதுன்னு நிணைக்கிறேன். சரி பங்கு நான் போய் பார்த்துட்டு வரேன்”…என புலம்பலுடனே சென்றாள் இசை.
கவின் லைப்லரி சென்றிட, அஜய் (ம) விக்ரம் இருவரும் கல்லூரி அழகிகளை காணபோகிறோம் என்று சென்றுவிட்டனர். தனித்து விடப்பட்ட அர்ஜீன் தன் ரசனையை நோட்டில் வடிக்க ஆரம்பித்து விட்டான். அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்தவன் தன் ஓவிய ஸ்பைரல் நோட்டை எடுத்து புதிய பக்கத்தை திறந்துவிட்டு கண்கள் மூடி அமர்ந்தான்.
அவனுக்கு பிடித்தது. அவன் ரசிப்பது என்று அனைத்தையும் ஒரு டூடுல் ஆக வரைவான். நாம் டைரியில் நாட்குறிப்பை எழுதுவது போல, ஒரு நாளில் அவன் எதை எல்லாம் ரசிக்கின்றனோ அதை அச்சுஅசலாக வரையும் திறமை கொண்டவன். ஓவியக் கலைநியன்.
இன்று, முதலில் அவன் வரைந்தது அவனின் தொலைபேசி. காலை தன்னை எழுப்பிய இசையின் அழைப்பு.
அதன் பின் அவன் தங்கையின் கடிதம்.பின் அவன் வரும்வழியில்
சிக்னலில் இருக்கும் போது 4 வயது குழந்தை அவனுக்கு பறக்கும் முத்தத்தை வழங்கியது. அதனையும் ஓவியமாக பதிவு செய்திருந்தான். கடைசியாக அவன் பார்த்த நீல நிற வண்டியும் நீண்ட கூந்தலும். இதழ்களின் புன்னகை உடன் வரைந்து கொண்டிருந்தான்.
அருகில் யாரோ அழும் சத்தம். “யாருடா அது முதல் நாளே அழுகிறது ?”.என்று சுற்றி முற்றி பார்க்க , அங்கு நான்கு ஆண்கள் சிரித்துக்கொண்டிருக்க ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள். அர்ஜீன் அவர்களின் அருகில் செல்ல.
“நீ அழுந்தாமட்டும் உன்ன விட்டுடுவோமா? நாங்க சொன்னத செஞ்சா தா நீ இங்க இருந்து நகரவே முடியும்.” என்றான் ரகு.
“எவ்வளவு நேரம் கன்னத்த காட்டுறது. சீக்கிரம் குடுத்துட்டு, கெளம்பு.”என்று குகன் அவசரப்படுத்த அழுகை அதிகரித்தது அந்த பெண்ணிடம்.
“உனக்கு என்ன அவ்வளவு திமிரு ஒரு முத்தம்தான குடுக்க சொன்னோம். மொத்ததையுமா குடுக்க சொன்னோம் ” என்ற வாக்கியத்தை முடிப்பதற்குள் பிரபுவின் கன்னத்தில் இடி என இறங்கியது அர்ஜீனின் கரம்.
ரகு, குகன், பிரபு மூவரும் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் சீனியர் மாணவர்கள். இன்று புதிதாக கல்லூரிக்கு வந்த ஜூனியர் மாணவியை ரேகிங் என்ற பெயரில் அழவைத்து விளையாடினர்.
விளையாட்டே வினையாகும் என்பது போல அவர்களின் ரேகிங் எல்லை மீறியதால் அது அவர்களுக்கே வினையானது. சுற்றியுள்ள அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டிரூக்க சத்தம் கேட்டு அந்த வழியில் சென்ற கயல்விழியும் நின்று நடப்பதை பார்களானால்.
மூவரும் அதிர்ந்து நின்றிட” இன்னொரு முறை இப்படி ஏதாவது பார்த்தன்னா உங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லை”.. என சிங்கத்தின் கர்ஜனை போல அர்ஜூன் உருமிட அவர்கள் விட்டால் போதுமே என்று ஓடி விட்டனர்.
கயலின் கண்களில் ஆர்வமான பார்வை.