நீல கண்களின் காதல் பயணம் 💙
அர்ஜூன் கயலை இழுத்து அணைத்துக்கொண்டிருக்க, அவளோ அதிர்ச்சி நீங்காமல் உறைந்திருந்தால்.
இருப்பினும் அவளின் கண்கள் விடாமல் கண்ணீரை வெளியேற்றி கொண்டு தான் இருந்தது.
” பிளீஸ் டீ. இப்படி அழாத. என்னால இத பார்த்துட்டு இருக்க முடியல. என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் தெளிவா சொல்லு டி.”
கெஞ்சும் குரலில் அவன் கேட்டிட, அவளோ கொஞ்சமும் சமையாமல் அவனின் அணைப்பிலேயே நின்றிருந்தாள்.
கேட்டதற்கு பதில் வராமல் போகவே அவளை தன்னிடமிருந்து பிரித்து பார்க்க ஏதோ யோசனையிலேயே நின்றிருந்தாள் கயல்.
” என்ன டி? ஏன் மேல நம்பிக்கை இல்லையா?” இம்முறை அவனின் கண்களை பார்த்தவள் ,
” நம்பிக்கை இருக்கிறதுனால தான் சொல்றேன் போயிடு. என்ன விட்டு போயிடு. எங்கூட இருந்தா உனக்கும் ஆபத்து. உனக்கு ஏதாவது ஆச்சினா என்னாலேயே என்னை மன்னிக்க முடியாது. பிளீஸ் அர்ஜூன். நீ போயிடு.” என்றே மாற்றி மாற்றி அனத்தி கொண்டிருந்தாள் தவிர வேறு எதையும் அவள் சொல்லவில்லை.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன்,
” உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. ஏண்டி இப்படி சாவடிக்குற. உன்னை கஷ்டப்பட விட்டுட்டு நான்மட்டும் எப்படி நிம்மதியா இருப்பேன்?. வாழ்ந்தாலும் செத்தாலும் அது உன்கூடதான்னு எப்போவோ முடிவு பண்ணிட்டேன். போதுமா. இப்போ சொல்லு உன் அகராதியை”
என்று அவன் சொல்ல சொல்ல அவளுக்கு அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளவே நிமிடங்கள் பல பிடித்தது.
அப்படியென்றால் இவன் என்ன சொல்கிறான் .
தன்னை அவன் காதலிக்கிறானா? .
நெருங்காதே என்று எச்சரிக்க நினைத்தால் அவன் உடன் ஒட்டிக்கொண்டுதான் இருப்பேன் என்கிறானே, என யோசித்தவளுக்கு , தலையில் சுளீர் சுளீர் என்று வலியெடுக்க அப்படியே அவன் மீதே மயங்கி சரிந்தாள் பெண்ணவள்.
திடீரென அவள் மயங்கி சரியவும் அனைத்து பிடித்தவன் அவளை அருகில் இருந்த ஷோபாவில் படுக்கவைத்துவிட்டு சமையலறை சென்றான் தண்ணீர் எடுக்கும் பொருட்டு.
எடுத்து வந்தவன் அவளின் முகத்தில்தெளிக்க எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தால் கயல்.
அந்நேரம் அழைப்பு மணி அடிக்க போய் கதவை திறந்தான் அர்ஜுன்.
வெளியே நின்றிருந்தது இசை.
” என்னடா பேய் அரைஞ்ச மாதிரி இருக்க. கயல் எங்க டா? ” என பேசிக்கொண்டே உள்ளே சென்றவள் ஷோபாவில் கயலை பார்த்ததும் ஓடி சென்று எழுப்ப ஜடம் போல் இருந்தால் கயல்.
திரும்பி அர்ஜுனை பார்க்க அவனோ துயரத்தின் உச்சியில் இருந்தான்.
” அர்ஜூன் என்னடா நடக்குது இங்க. இவளுக்கு என்ன ஆச்சி. ஏன் இப்படி இருக்கா?”
அவன் கண்களில் இருந்து கண்ணீர் துளி கன்னத்தில் உருண்டோட,
” ஹே…. உனக்கென டா ஆச்சி ? எதுக்குடா இப்போ அழுகுற?”
என்ற இசை அவனிடம் வர அவனோ மண்டியிட்டு அமர்ந்துவிட்டான் தரையில்.
” உனக்கு கயலை பத்தி என்ன தெரியும் இசை?” தலு தலுக்கும் குரலில் அவன் கேட்க, அவளோ புருவ சுழிப்புடன் பார்த்தாள் அவனை.
” பிளீஸ் பங்கு “
அவனின் கண்ணீரை கண்டு வருந்தியவள் அவனின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக உண்மைகளை சொல்ல தொடங்கினாள் இசை.
” அர்ஜுன் முதல்ல நீ என்ன நடந்துசின்னு சொல்லு. உனக்கான பதில்களை நான் சொல்றேன்.”
அவனும் போட்டோவை பார்த்தது, அதை அவளிடம் கேட்டது, அவள் சொன்னது, கடைசியில் அவன் மனதை அவளிடம் சொன்னது, அவள் மயங்கி சரிந்தது என அனைத்தையும் சொன்னவன் அவளின் முகத்தை கேள்வியாக பார்க்க,
இப்போது புரிந்தது அவளின் இந்த நிலைக்கான காரணம் என்னவென்று.
” உனக்கு அந்த போட்டோ ஞாபகம் இருக்கா?” எவ்வித உணர்வையும் வெளிபடுத்தாது இசை வினவிட, அந்த போட்டோவையே வெறித்து பார்த்தவன்
” இல்ல. எனக்கு ஏதும் தெரியல.” என்றான் விட்டேர்த்தியாக.
எழுந்து சென்ற இசை அந்த போட்டோவை எடுத்துவந்து அவனிடம் கொடுத்து,
” அந்த போட்டோல உனக்கு பின்னாடி பாரு ” என்றதும் அவன் கண்கள் அதனை அலச கண்டுகொண்டான் அந்த சூழ்நிலையை.
அதனில் அவன் பின்னால் இருந்தது புதிதாக திறக்கப்பட்ட பாதாம் ஸ்பெஷல் கடையின் திறப்பு விழா நடைபெற்ற தருணம்.
பார்த்தவனின் கண்கள் சாசரை போல் விரிய, அதை பார்த்தவளின் கண்களும் கலங்கிற்று.
“அப்போ இது…..”
“ம்ம். அதே தான். சுவாதி உன்கிட்ட கிடைச்ச அதே நாள்ல தான் இந்த போட்டோவும் எடுக்க பட்டுருக்கு. இப்போ சொல்லு கயலை நீ சின்ன வயசுல கண்டிப்பா பார்த்திருக்கணும். நல்லா யோசி.”
” இல்ல இசை. விழி……நான் இந்த பேர சின்ன வயசுல கேட்டதும் இல்ல அப்படி யாரையும் பார்த்த ஞாபகம் இல்ல.”
” இந்த பேர விடு. இதுல நீ போட்டோக்கு போஸ் கொடுத்திருக்க. சோ உனக்கு தெரிஞ்சுதான் இதை எடுத்துக்கணும். உன்ன யாராவது போடோ எடுத்த ஞாபகம் இருக்கா ?”
சிறிது நேரம் யோசித்ததற்கு பின் அவன் மூளையில் ஒரு ஒளி வர எழுந்து கயலிடம் சென்றவன் அவளின் வலது கையை பிடித்து பார்க்க,
மோதிர விரலில் பெரிய ஒற்றை கல் வைத்த மோதிரம் ஒன்றை அணிந்திருந்தாள்.
அதனை அகற்றியவன் கண்கள் கலங்கின அவளின் விரலை பார்த்து.
ஏனெனில் அவளின் விரலில் கிரீடம் போன்ற மச்சமா அல்லது டாட்டூவா என்று அறியாத ஒரு அமைப்பு இருந்தது.
அவனின் பின்னாலே வந்தவள் அதை பார்த்துவிட்டு
” அர்ஜூன்……”
என அவனை பார்க்க அவனோ,
” அனு……”
காற்றுக்கும் வலிக்குமோ என்று மெல்ல உச்சரித்தான் அவளின் பெயரை.