Loading

நினைவுகள் -7

அன்று…

 விஸ்வரூபனோ, அங்கு அழுதுக் கொண்டிருந்த அனன்யாவின் அறைக்குள் சென்றான்.

 ” ஏய் அந்துருண்டை எழுந்திரு… எதுக்கு இப்படி கண்ணை கசக்கிட்டு இருக்க…”

“நான் ஏன் அழறேன் என்று உங்களுக்கு தெரியாதா மாம்ஸ்?” என்று அவனைப் பார்த்து முறைக்க…

“என்னாச்சு செல்லம். சொன்னா தானே இந்த மாமனுக்கு தெரியும்.”

“யோவ் மாம்ஸ்… ஓடிப் போயிடு… அப்புறம் என் வாயில நல்லா வந்துரும். இங்கே நான் இருந்தா உனக்கு போட்டியா இருப்பேன்னு என்னை பேக் பண்ணி பாரினுக்கு அனுப்புற…” என்னவளின் கண்கள் மீண்டும் கலங்க…

 “லூசாடி நீ… உன்னை விட்டுட்டு எங்களால தான் இருக்க முடியுமா? இங்கே இருந்தா படிப்பு, படிப்பு என்று இருக்கணும். இதே பிலிப்பைன்ஸிற்கு படிக்கப் போனேன்னு வை.. இங்கே அளவுக்கு படிக்கிறதுக்கு ஸ்ட்ரெஸ் இருக்காது. ஈஸி கோயிங் டீச்சா தான் இருக்கும்.

 அப்புறம் ஜாலியா சுத்திப் பார்க்கலாம். இங்கே எங்க மூஞ்சியைப் பார்த்துக் கிட்டு யாருக்கிட்டையும் பேசாமல் வெளி உலகமே தெரியாமல் இருக்கிற. அங்கே போனால் நிறைய பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க. நாங்களும் அடிக்கடி வருவோம். உனக்கு இங்கே வரணும் தோணுச்சுன்னா காலேஜ் லீவ் போட்டுட்டு நீ வா. ஒன்னும் பிரச்சினை இல்ல.

அப்புறம் நீ அங்கே போறதுக்கு இன்னும் ஃபைவ் ஆர் சிக்ஸ் மன்த்ஸ் ஆகும். அதுவரை ஜாலியா இருக்கலாம். அங்கே போறதுக்கு டெய்லி ஷாப்பிங் பண்ணலாம். என்ன சொல்ற?”

“முப்பது நிமிஷம்.” என்றாள் அனன்யா.

“வாட்?”என புரியாமல் விஸ்வரூபன் வினவ…

” அது தான் முப்பது நிமிஷமாக பிரசங்கம் பண்ணீங்களே. அதை தான் சொல்றேன். வேண்டாம்னு சொன்னா விடவா போறீங்க. நீங்க இவ்வளவு கெஞ்சி சொல்றீங்க. அதுனால ஒத்துக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன். நான் எப்போ ஷாப்பிங் போனாலும், நீங்க தான் ட்ரைவர் அண்ட் செக்யூரிட்டி வேலையை பாக்குறீங்க மாம்ஸ். ரைட் … ” என்றவள் சிட்டாக பறந்து இருந்தாள்.

“அடியே அந்துருண்டை. நான் ஃபைனல் இயர்ல இருக்கேன். அப்புறம் மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்கிற ப்ராஸஸ் வேற போயிட்டு இருக்கு. என்னால உன் கூட சுத்த முடியாதுடி.” என அவன் கத்தியது காற்றோடு கலந்து போனது. கேட்கத்தான் அவள் அங்கு இல்லை.

அப்புறம் என்ன பிலிப்பைன்ஸ் போகும் வரைக்கும், விஸ்வரூபனை சும்மா விடவில்லை. வச்சு செய்தாள் அனன்யா.

 அங்கு இங்கு என்று இழுத்தடித்து ஒரு வழியாக்கி விட்டாள்.

ராதிகாவோ இந்த ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயனுள்ளதாக கழித்தாள்.

 முதலில் தன் தந்தையுடன் அவரது வகுப்பாசியரை சந்திக்க சென்றாள்.

பரிமளா அவர் தான் ராதிகாவின் வகுப்பாசிரியர்.

” வாங்க சார்! வா ராதிகா…” என்றவர் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டார் பரிமளா.

“நீங்க கவலையே பட வேண்டாம் சார். வருஷா வருஷம் இங்கே இருந்து பத்து பசங்களாவது பிலிப்பைன்ஸ் போய் படிக்கிறாங்க. நம்பிக்கையான ஏஜன்ட். நீங்க பணத்தை பே பண்ணிட்டீங்கனா, அவங்களே பிலிப்பைன்ஸ்க்கு அழைச்சிட்டு போய், ஹாஸ்டல் சேர்க்கிறது, காலேஜ் சேர்க்கிறது என்று அவங்க பொறுப்புல செய்துடுவாங்க.” என்று நம்பிக்கை அளிக்க.

சற்று நிம்மதியானார் ஷண்முகம்.

ராதிகா அந்த ஏஜெண்ட் டீடெயில்ஸ் எல்லாம் கேட்டுக் கொண்டு வந்தாள்.

 அடுத்து நகைகள் எல்லாவற்றையும் விற்று பேங்கில் பணத்தை போட்டாள்.

சுந்தரி தான் சற்று சுணக்கமாக இருந்தாள்.’ கல்யாணம் பண்ணணும்னா நகை போட வேண்டாமா… இப்படி எல்லாத்தையும் விக்க சொல்றாளே,’ என்று எண்ணியவர், ” அம்மாடி… எல்லா நகையும் இப்பவே விக்கணுமா… அப்பப்ப வித்தா என்ன?” என்று நூல் விட்டுப் பார்க்க…

“அம்மா… நான் அந்தப் பக்கம் போனதும், அப்பாவை படுத்தி நகையை விக்காமல் கடனை வாங்க சொல்லுவே. அதெல்லாம் வேண்டாம்.”

“ராது! இப்படி அமைதியான பொண்ணா இருக்கியேன்னு நினைச்சு கவலைப்படுவேன். ஆனால் அந்த கவலை இனி தேவையில்லை. இவ்ளோ பிடிவாதமா இருக்க… போற இடத்துல பொழைச்சுக்குவ. இங்கே மாதிரி அமைதியா இல்லாமல், அங்கேயாவது எல்லோரிடமும் கலகலன்னு சிரிச்சு பேசு.” என்று சுந்தரி கூற…

அதற்கும் தன் மெல்லிய புன்னகையே பரிசாக அளித்தாள் ராதிகா.

‘இதுக்கே அம்மா இப்படி சொல்றாங்களே… அடுத்து நான் சொல்றதை எப்படி எடுத்துக்க போறாங்களோ என்று தெரியலையே…’ என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

“என்னடா ராது யோசனை. நான் நம்ம விக்ரமை வரச் சொல்லியிருக்கேன். அவனுக்கு தெரிஞ்ச நகைக்கடையில் நல்ல ரேட்டுக்கு வித்து தரேன் என்று சொல்லியிருக்கான். அப்படியே பேங்க்ல டெபாசிட் பண்ணிட்டு வந்துடலாம் என்ன சொல்ற…” என்றார் சண்முகம்.

“சரிப்பா… அப்படியே இன்னொரு விஷயம். நம்ம விக்கி அண்ணன், வேற வீடு பார்க்கணும்னாங்களே… நம்ம மாடி போர்ஷனை கொஞ்சம் ஆல்டர் பண்ணி வாடகைக்கு விடலாம் பா.” என்று தயங்கியபடியே கூறினாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே சுந்தரி “அதெல்லாம் வேண்டாம். அது உனக்கு கல்யாணம் பண்ணா தேவைப்படும் என்று பார்த்து பார்த்து கட்டுனது. வாடகைக்கு விடலாம் வேண்டாம். இப்போ உனக்கு என்ன பிரச்னை?.” என்று மகளிடம் பாய்ந்தாள்.

” அம்மா… பீ ப்ராக்டிகல். நீங்க ரெண்டு பேரும் தனியா எப்படி இருப்பீங்க. அண்ணா பக்கத்துல இருந்தா சேஃப். நானும் கொஞ்ச நிம்மதியாக இருப்பேன். ப்ளீஸ் மா.”என சமாதனப் படுத்த…

அவளோ சமாதானம் அடையாமல் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள்.

ஒன்றும் செய்ய இயலாமல், தந்தையைப் பார்க்க…

அவரோ தான் பார்த்துக் கொள்வதாக கண் மூடித் திறக்க அமைதியானாள்.

அவர் சொன்ன மாதிரியே சுந்தரியை கன்வீன்ஸ் செய்து ஒத்துக்க வைத்தார்.

அதோ, இதோ என ராதிகா பிலிப்பைன்ஸ்க்கு செல்லும் நாளும் வந்து விட்டது.

ஏர்போர்ட்டில் வெயிட் பண்ணிட்டு இருக்கும் போதும், சுந்தரி வழக்கம் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

” ராதுமா… நேரத்திற்கு சாப்பிடணும்… மறக்காமல் டெய்லி வீடியோ கால் போடு டா. இப்பவும் நீ அங்கே போய் ஹாஸ்டல்ல சேர்ந்ததும், ஃபோன் போடுடா… அப்ப தான் எனக்கு தூக்கம் வரும். ” என்று சுந்தரி கூறிக் கொண்டே இருக்க.

அவள் கூறியதைக் கேட்ட ராதிகா டென்ஷனாகி, ” மா… நான் என்ன சொன்னாலும் மைண்ட்லயே ஏத்திக்க மாட்டிங்களா மா… எனக்கு ஃப்ளைட் பத்து மணிக்கு தான் டேக்காகும். இங்கே இருந்து சிங்கப்பூர் ரீச்சாக ஃபோர் ஹவர்ஸ் ஆகும். அங்க த்ரீ ஹவர்ஸ் வெயிட் பண்ணி தான், பிலிப்பைன்ஸ்கான கனேக்டிவ் ஃப்ளைட். அதுக்கப்புறம் ஃபோர் ஹவர்ஸ் ட்ராவல் பண்ணி தான் அங்கே ரீச்சாக முடியும். அப்புறம் இமிக்கிரேஷன், மத்த பார்மலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சு நான் ஹாஸ்டல் போய் சேர கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேல ஆகுமா… அதுவரைக்கும் தூங்காமல் இருப்பீங்களா… ஓ காட்.” என்று தன் இயல்புக்கு மீறி படப்படத்தாள்.

இரு விழிகள் அவளை வெறுப்புடன் பார்த்து விட்டு, ‘ என்ன பெண் இவள்? மகளைப் பிரியற ஆதங்கத்தில் பெத்தவங்க ஏதாவது சொல்லத் தான் செய்வாங்க… அதுக்கு இப்படியா டென்ஷனாவாங்க.’ என்று முகம் மாற, மனதிற்குள் அவளைத் திட்டிக் கொண்டே விஸ்வரூபன் அங்கிருந்து நகர்ந்தான்.

தன்னை ஒருவன் திட்டுவதை அறியாமல் ராதிகா படபடப்புடனே இருந்தாள்.

ஆனால் அனன்யாவோ முகம் இறுக வந்த விஸ்வரூபனை புரியாமல் பார்த்தாள்.

இன்று

காரை ஓட்டிக்கொண்டு இருந்த விஸ்வரூபனின் பார்வை அவனது கைகளில் இருந்த மோதிரத்திலே சென்று, சென்று மீண்டது. ‘அனன்யாவின் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு. ‘ என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, ‘ராதிகா?’ என மனசாட்சி கேள்வி எழுப்பியது.

‘அவளுக்கென்ன எங்க இரண்டு பேரையும் பார்த்து, வெறுத்து போயிட்டா… சீக்கிரமே அம்மா, அப்பா பார்க்குற பையனைப் பார்த்து செட்டில் ஆயிடுவா…’ என்று எண்ணியவன் சாலையில் கவனம் செலுத்தினான்.

அனன்யாவோ, தன் வயிற்றில் கையை வைத்துக் கொண்டே உறங்கியிருந்தாள்.

உறங்கும் அவளைப் பார்த்தான் விஸ்வரூபன்.

அவளது அநாதரவான தோற்றம் நெஞ்சத்தை பிசைய,

 மெல்ல அவளை அணைத்து தோளில் சாய்த்துக்கொண்டான்‌.

விழித்திருந்தால் பதறி விலகி இருப்பாள் இப்போது உள்ள அனன்யா.’ பழைய அனன்யாவை திரும்பப் பார்க்கவே முடியாதா?’ என்று எண்ணியவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

முதல்நாள் தஞ்சைக்கு சென்றிருந்தவர்கள், மறுநாளே திரும்பி வந்திருக்க…

“ஏன் பா… என்னாச்சு? வர ரெண்டு நாளாகும் சொன்னீங்க. உடனே வந்துட்டீங்க. அனும்மாவுக்கு ஏதும் பண்ணுதா?” என ரஞ்சிதம் பதற…

“ஒன்னும் இல்லை அத்தை.” என்ற அனன்யா சோர்வாக அவர்களது அறைக்குச் சென்றாள்.

அங்கிருந்து செல்லும் மருமகளை கவலையாக பார்த்தாள் ரஞ்சிதம்.

“அம்மா… பெரிய கோவில் பார்க்கணும்னு ஆசைப்பட்டா… அப்படியே திருச்சிக்கும் போயிட்டு வரலாம் என்று பார்த்தோம். பட் அவளுக்கு டயர்டா இருக்குனு சொன்னா. அதான் வந்துட்டோம். வர வழியிலே சாப்பிட்டோம். இப்ப அவக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நான் ப்ரஷ்ஷாகிட்டு ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வரேன் மா.”

“வந்த உடனே ஹாஸ்பிடலுக்கு போகணுமா? ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போகக் கூடாதா?” ரஞ்சிதம் வினவ.

” ப்ச்… இங்கே இருந்து என்ன பண்ணப்போறேன்.” என்றவன் தனது அறையை நோக்கி சென்றான்.

 ‘ எப்படி கலகலன்னு இருக்குற ரெண்டு பேரும் இப்படி இருக்கிறார்களே. இப்படியே இரண்டு பேரும் ஒட்டாமலே இருந்துடுவார்களோ… இந்த அத்தை இப்படி ஒரு அநியாயம் செய்துருக்கக் கூடாது.’ என்று மனதிற்குள் மகனிற்காக கவலைக் கொண்டார் ரஞ்சிதம்.

                   ***************

நாட்களும் வேகமாக மறைய… ராதிகா சென்னைக்கு கிளம்பும் நாளும் வந்தது.

” ராது எல்லாம் எடுத்து வச்சுட்டியா. இல்லை நான் ஹெல்ஃப் பண்ணவா?” சுந்தரி வினவ.

“அதெல்லாம் தேவையில்லை. நானே பாத்துக்கிறேன்.” என்றாள் ராதிகா.

“ஊருக்கு போகும் போது, இப்படி முகத்தை தூக்கி வச்சி இருக்க? அப்புறம் எப்படி நாங்க நிம்மதியாக இருக்கிறது. இல்லை நானும், அப்பாவும் சென்னைக்கு வரட்டுமா? உன்னை விட்டுட்டு வரோம். “

” எதே… இங்கே இருக்க சென்னைக்கு துணைக்கு வர்றீங்களா… வெளிநாட்டுக்கே நான் தனியா தான் போய்ட்டு வந்துட்டுருக்கேன். அதுவுமில்லாமல் அல்ரெடி ரெங்கா ட்ராவல்ஸ்ல சென்னைக்கு டிக்கெட் போட்டாச்சு.”

” அப்புறேன் ஏன் ராதுமா கோவமா இருக்க?”

” பின்னே நைட் கிளம்பிடுவேன். என்னைக் கண்டுக்காமல் ஸ்வீட்டியையே கவனிச்சிட்டு இருக்கீங்க. அதான் மீ கோவமா இருக்கேன்.”

” அடிக்கழுதை… குழந்தையோட சேடைப் போடுறீயா… உதை வாங்கப் போற… கொஞ்ச நேரத்திலே என்னைப் பாட படுத்தியெடுத்துட்ட… ” என்றாள் சுந்தரி.

” சும்மா… லுலூலாய்க்கு வம்பு பண்ணேன்.” என்ற ராதிகா கலகலவென நகைத்தாள்.

சுந்தரியின் முகமும் மலர்ந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்