Loading

நினைவுகள் -17

அன்று…

” மாமா… ராதுவை ஒன்னும் சொல்லாதீங்க. நான் தான் அவளை கம்பெல் பண்ணி அழைச்சிட்டு போனேன்.”

” ஓஹோ… நீ சொன்னா அந்த அம்மணிக்கு அறிவு எங்கே போச்சு? சேலவர் சாரோட கிளாஸா இருந்ததால பிரச்சனை இல்லை. இல்லைன்னா மூட்டை முடிச்சைக் கட்டிட்டு இந்தியாவுக்கு போக சொல்லிருப்பாங்க. ஏதோ டாட்க்கு தெரிஞ்சவர் என்பதால எனக்கு இன்ஃபார்ம் பண்ணாங்க. தென் இதுவே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கட்டும்.” என.

‘ சேலவர்.’ என்ற பெயரை கேட்டதும் தலையில் கை வைத்த அனன்யா, “ஐயோ! கெட்டப்பை மாத்தினேன். மண்டையில் உள்ள கொண்டையை மறந்துட்டேனே.” என்று உளறியபடியே விஸ்வரூபனைப் பரிதாபமாக பார்க்க‌…

 அவளது பாவனையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

சிரிக்கும் இருவரையும் முறைத்து, பார்த்த ராதிகா, விடுவிடுவென அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

” மாமா ஏன் அவ கிட்டே வம்புக்கு போறீங்க. திஸ் இஸ் மை மிஸ்டேக். அவளை இனி எதுவும் சொல்லாதீங்க.”

” ம்… ” என்று அரைகுறையாக பதிலளித்தவன், ” பட் நீயும் இனி கொஞ்சம் கரெக்டா இரு அனு. நான் சேலவர் சார பாத்துட்டு கிளம்புறேன்.” என்றுக் கூறி விட்டு கிளம்பி விட்டான்.

நாட்கள் விரைந்தோடியது.

*************

” ஏய் அனு! அனு! என்ன ட்ரீம்ஸ்ல இருக்கீயா? காலேஜுக்கு அல்ரெடி டைம் ஆயிடுச்சு.” என ராதிகா உலுக்க.

” ஹாங்…” என கனவிலிருந்து விழித்தவள், ” என்ன ராது? காலேஜுக்கு டைம் ஆகலையா? ” என தன்னை பார்த்து முறைக்கும் ராதிகாவைப் பார்த்து வினவினாள் அனன்யா.

அனுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவள், ” நீ உட்கார்ந்து தூங்கிட்டு, என்ன கேட்குறீயா? அப்படி என்ன யோசனை? கூப்பிட, கூப்பிட திரும்பாமா?” என…

” அது வா ராது டியர்… நாம இங்க வந்து ஒரு ஒன் அண்ட் ஆஃப் இயர் ஆச்சுல. அதைப் பத்தி நினைச்சிட்டு இருந்தேன். இங்கே வந்து நமக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்குல்ல. ” என்று சிரித்தவள்,

” இங்கே வரதுக்கு நான் எவ்வளவு அழுது இருக்கிறேன் உனக்குத் தெரியுமா ராது? எங்க மாமா தான் அதட்டி, உருட்டி என்னை பேக் பண்ணி இங்கே அனுப்பி வச்சார். அவருக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். இல்லைன்னா நான் உன்னை மிஸ் பண்ணி இருப்பேன்.”

” சரி! சரி! எதுக்கு இப்ப இவ்வளவு பெரிய ஐஸ் பார். எதுக்கு அடிப்போடுற அணுகுண்டு.”

” நானே எவ்வளவு எமோஷனலா பேசிட்டு இருக்கேன். உனக்கு கிண்டலா போச்சா ? அதுவும் என்னைப் போய் அணுகுண்டுனு சொல்லுற… “

” இல்லையா பின்ன, எப்ப பாரு ஏதாவது ஒரு குண்டை தூக்கி போட்டுட்டு இருக்குற. அதான் உனக்கு இந்த பேர். உனக்கு ஹன்ட்ரெட் பர்சென்ட் சூட்டாகும். சரி வா. காலேஜுக்கு போய்கிட்டே பேசலாம்.”என்றுக் கூறியவள், அனுவை இழுத்துக் கொண்டே வெளியேறினாள்.

 ” அப்புறம் என்ன அணுகுண்டு?” என மீண்டும் ராதிகா ராகம் பாட…

” ஏய் ராது! இன்னொரு முறை அணுகுண்டுன்னு சொன்னா, நான் அப்புறம் ஃபோன் போட்டு…” என்று ஏதோ சொல்ல வர, அதற்குள் ராதிகா,

“என்ன உங்க வீட்ல சொல்லப் போறீயா? அம்மா! அம்மா! இவ என்னை திட்டுறான்னு கண்ணை கசக்கிட்டு சின்னப்புள்ளை மாதிரி சொல்லப்போறீயா. சோ சேட்.”

” எதுக்குங்குறேன்? ஏதோ இப்போ தான் கொஞ்சம் பொறுப்பா இருக்கேன்னு எங்க வீட்ல எல்லோரும்

கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க. அதை ஏன் கெடுப்பானேன். நான் ஃபோன் போடப் போறேன்னு சொன்னது சுந்தரியம்மாவுக்கு… செய்யட்டா…” என்ற அனு நடந்துக் கொண்டே அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்த…

நடந்து சென்றுக் கொண்டிருந்த ராதிகா நின்று அவளைப் பார்த்து முறைத்தாள்.

இன்று…

வழக்கம்போல கல்லூரிக்குள் நுழைந்த ராதிகா, ஆதவன் அருகே சென்று அமர.

 அவன் புருவத்தை உயர்த்தி, அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

வகுப்பு ஆரம்பிப்பதற்கு நேரம் இருக்கவே, நன்கு அவன் பக்கம் திரும்பிய ராதிகா, ” ஏன் இவ்வளவு ஆச்சரியம் ஆதி?” என்று வினவ.

” அது… இங்கே வேண்டாம் ராதிகா. கேண்டீனுக்கு வர்றீயா? அங்கே போய் பேசலாம்.”

” டபுள் ஓகே.” என்ற ராதிகா, ஆதவனைப் பின்பற்றி சென்றாள். வெளியே செல்லும் இருவரையும் பார்த்த அங்கே இருந்த சொற்ப மாணவர்கள், தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டனர்.

 அதைப் பார்த்த ஆதி முகம் இறுக சென்றான். ராதிகாவோ, யோசனையாகச் சென்றாள்.

” ஆதி! என்னாச்சு?” என்று மென்மையாக ராதிகா வினவ.

” உனக்கு டீ ஆர் காஃபி.” என்று வினவினான் ஆதவன்.

” காஃபி…” என்று விட்டு அமைதியாக இருந்தாள் ராதிகா.

ஆதவன் சென்று இருவருக்குமான காஃபியை வாங்கி வந்தான்.

அதை எடுத்து அருந்திய ராதிகா, ” ம் சொல்லு ஆதி… இப்பவாவது பூனைக்குட்டியை வெளியே விடு.” என…

அதைக் கேட்ட ஆதியோ பக்கென சிரிக்க… குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேறியது.

” ஏய் ஆதி பாத்து, பாத்து… ” என ராதிகா பதறினாள்.

” ராதிகா… நீ ஒரு மாஸ்டர் பீஸ் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா என் ஃப்ரெண்டை நீ ஞாபகப்படுத்திட்டே இருக்க… அவளும் இப்படி தான்… அவ என் பக்கத்துல இருந்தா, நான் எப்பவும் சிரிச்சிட்டே இருப்பேன். அதுக்கு தான் எனக்கு கொடுத்து வைக்கலை.” என்றவன் பெருமூச்சு விட…

” ஏன் ஆதி… என்ன ப்ராப்ளம் சொல்லு. நானும் வந்ததிலிருந்து அதைத் தான் கேட்டுட்டு இருக்கேன். இல்ல ஃப்ரை டே நடந்ததையே நினைச்சுட்டு இருக்கீயா? நான் என்ன நினைச்சேன், வீக்கெண்ட் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வருவியோன்னு நினைச்சேன்.” என்றவாறே அவனைப் பார்த்து கள்ளமில்லாமல் புன்னகைக்க…

அவளையே பார்த்த ஆதி, “உனக்கு நம்ம டாக்டர் கிருஷ்ணா சாரைத் தெரியுமா?”

” இது என்ன கேள்வி ஆதி? அவர் நம்ம காலேஜ் டீன். அதுமட்டுமல்லாமல் நான் வொர்க் பண்ணுற ஹாஸ்பிடல்லோட சேர்மன். அவரைத் தெரியாமல் இருக்குமா…” என புருவத்தை உயர்த்தி எதிர் கேள்வி கேட்டாள்.

” ராதிகா! கொஞ்சம் சீரியஸ்ஸா பதில் சொல்லு. பர்சனலா அவரைத் தெரியுமா?”

” எனக்கு அவரை பர்சனலா தெரியாது. பட் அவருக்கு என்னை தெரிஞ்சு இருக்கலாம். நான் இங்கே ஃப்ரீ கோட்டால தான் ஜாயின் ஆகியிருக்கேன். என்னோட வெல்விஷர் டாக்டர் சேலவர். அவர் தான் என்னை ரெக்கமண்ட் செய்தார்.”

” ஓ… ” என்ற ஆதவன் அமைதியாக இருக்க…

” எதுக்கு ஆதி. இதையெல்லாம் கேட்குற?”

” இந்த வீடியோவை பார்த்தியா…” என்று வெள்ளிக்கிழமை காஃபி ஷாப்பில் நடந்ததை யாரோ எப்ஃ பி, வாட்ஸ்அப்பில் வீடியோ அப்லோடு பண்ணியிருந்தார்கள். அதைக் காண்பித்தான்.

அதைப் பார்த்து ஒரு நிமிடம் மனம் கணக்க இருந்தவள்,” சோ வாட்? இதுக்கு தானா இவ்வளவு கவலை. அதான் காலையிலிருந்தே எல்லோரும் ஒரு மாதிரியா நம்மைப் பார்க்கிறார்களா. லீவ் இட். ஜஸ்ட் டூடேஸ் இதைப் பற்றி பேசுவாங்க. அப்புறம் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்பாங்க.” என்றாள்.

இவ்வளவு நேரம் மன பாரத்துடன் இருந்தவன், ராதிகாவின் தெளிவில் முகம் மலர்ந்தான். ” அப்போ அந்த வீடியோவை பத்தி நான் இனி பேசலை. பட் மிஸ்டர் விஸ்வரூபனை உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்றான் ஆதவன்.

தெரியும், தெரியாது என்று சொல்லாமல், ” ஏன் கேட்கிற ஆதி.” என்று வினவினாள் ராதிகா.

” நான் கேட்ட கேள்விக்கு இது

பதில் இல்லை. சோ உனக்கு தெரிஞ்சவங்க தான். ரைட் விடு.” என்றவன் எழுந்து செல்ல முயல…

” ஹே ஆதி… என்ன அவசரம் உட்கார்.” என்றவள், எதை சொல்வது, எதை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் தவிக்க…

 ‌” வேண்டாம் ராதிகா. உனக்கு கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்.” என்று இறங்கி வந்தான் ஆதவன்.

” முதல்ல நீ காஃபியை குடி.” என்று, அவன் பாதி குடித்துவிட்டு வைத்து இருந்த காபி கஃப்பை எடுத்து அவனிடம் நீட்ட…

ஆறிப் போயிருந்த காஃபியை மடக் மடக் என்று குடித்து முடித்தான்.

” சரி ஆதி. எப்படி அவர் எனக்கு தெரிந்தவர்னு நீ கண்டுபிடிச்ச?” என்று ராதிகா வினவ…

” அந்த வீடியோவில் ஒரு பெண்ணிற்காக இருவர் பொது இடம் என்று பார்க்காமல் சண்டை. மருத்துவரும், மருத்துவக் கல்லூரி மாணவரும் சண்டை என்று போட்டு இருந்தது.

அது உண்மை இல்லைனு நமக்குத் தெரியும். என்ன இருந்தாலும் அதை பார்க்கும் போது எனக்கு கஷ்டமா இருந்தது. அந்த வீடியோ அனுப்புனது யாரு? என்ன என்று கண்டு பிடிக்கணும்னு எனக்கு கோவமா வந்தது.

நான் எனக்கு தெரிஞ்ச சைபர் க்ரைம் ஆஃபீஸர் கிட்ட சொன்னேன். ஆனால் நான் சொல்றதுக்கு முன்னாடியே ஏற்கனவே யாரோ கம்ப்ளைன்ட் பண்ணி அந்த வீடியோவை ரிமூவ் பண்ணிட்டாங்க.

 நீ பார்த்தியா என்றும் தெரியலை. உனக்கு அந்த அளவுக்கு இன்புளூயன்ஸ் இருக்குமா என்றும் தெரியலை. சோ இந்த வீடியோல சம்பந்தப்பட்ட மூணாவது நபர், அந்த வேலையை செய்து இருக்கணும். சோ அவருக்கு உன்னை முன்பே தெரிந்திருக்கும். உன் பெயர் சோஷியல் மீடியாவுல அடிபடுவதை விரும்பவில்லைனு நினைத்தேன்.

 அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோவை பாரு. எவ்ளோ கோவம் வெறியோட இருந்த டாக்டர் சார், உன்ன பார்த்த உடனே அதிர்ந்ததும் மட்டும் அல்லாமல் கோபத்தை அடக்கிக்கிட்டு போயிட்டாரு.

 அவர் முகத்துல அப்படி ஒரு பொஸஸிவ்னஸ் தெரிந்தது. அதான் உனக்கு தெரிந்தவர்னு கேட்டேன். ஆனால் நான் கேட்டதுக்கு மட்டும் பதில் இன்னும் வரல. சரி வா கிளாஸ்க்கு டைமாயிடுச்சு போகலாம்.” என்றான்.

” ஆதி அவர், ரொம்ப வேண்டியவர் தான். பட் அதெல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம். நவ் வீ ஆர் நாட் ரிலேட்டட் டூ ஈச் அதர். தட்ஸ் இட்.”

” ஓ! ஆனால் நீ மட்டும் தான் அப்படி நினைக்கிற போல… ஆனால் அவர் அப்படி விடுகிற ஆள் இல்லை.” என்ற ஆதி சிறிது நேரம் யோசனையில் இருந்தான்.

 மீண்டும் அவளிடம், ” ராதிகா! உன்னோட வெல் விஷர் என்று சொன்னீயே… டாக்டர் சேலவர். அவர் எதுவும் சொன்னாரா? நம்ம இரண்டு பேரும் பேசுறதை தடுக்கப் பார்த்தாரா?” என பரபரப்புடன் வினவ…

 அப்போது தான் அவளுக்கும் டாக்டர் சேலவர் வந்து ஆதவனைப் பற்றி பேசியது‌ ஞாபகம் வர, அதிர்ந்தாள்.

ஆதிக் கேட்ட கேள்விக்கு மறுமொழி கூறாமல், ” யார் என்ன சொன்னாலும், உன்னோட நட்பை என்னைக்கும் இழக்க மாட்டேன் ஆதி.” என்றுக் கூற…

அவளை ஆழ்ந்துப் பார்த்த ஆதி, ” ப்ராமிஸ்…” என்று கையை நீட்ட…

அவளும் கைமேல் கை வைத்து உறுதியளித்தாள். இந்த வாக்குறுதியே பின்னாளில் அவள் வாழ்க்கையில் பிரளயத்தை கொண்டு வரப் போகிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்