Loading

நினைவுகள் -15

அன்று…

‘ ஐ! பானிபூரியா!’ என்று மனதிற்குள் சப்புக் கொட்டியவள், வெளியேவோ கெத்தாக, ” அது தான் உங்க வீட்ல உள்ள எல்லோருக்கும் வாங்கிட்டல்ல… அப்புறம் என்ன டி. காலையில் இருந்து ஹாஃப்னவர், ஹாஃப்னவர்னு எவ்ளோ தடவை சொல்லிட்ட… அங்க இந்தியாவுல இல்லாதது இங்கே என்ன இருக்கு?”என்று ராதிகா முறுக்கிக் கொண்டாள்.

“அதெல்லாம் உனக்கு தெரியாது. என்னை எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க. நான் ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுத்தால், நானே அவங்க கூட இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. சோ… அதான் இவ்வளவு மெனக்கெடுறேன். இன்னும் மாமாக்கு மட்டும் வாங்கணும். அதுக்கும் நீ தான் ஹெல்ப் பண்ணனும் டி.” என கெஞ்சுதலாக முடித்தாள் அனன்யா.

” ஹேய் என்னால முடியாது. நீ போய் வாங்கு. எனக்கு டயர்டா இருக்கு.என்னை ஆள விடு. நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன். நீ போய் வாங்கிட்டு, எனக்கு ஃபோன் பண்ணு. நான் வரேன்.” என ராதிகா கூற.

அவளது முகத்தைப் பார்த்த அனுவும் வற்புறுத்தாமல் கிளம்பி விட்டாள்.

ஒரு வழியாக பர்சேஸ் முடிந்து, மதிய உணவையும் வெளியே முடித்துக் கொண்டு தான் ஹாஸ்டலுக்கு வந்தனர்.

                  ************************

ராதிகா, அழகிய லேவண்டர் நிற குர்தி, சந்தன நிற ஜீன்ஸில் தயாராகி காத்திருக்க… அனன்யாவோ, இன்னும் தயாராகவில்லை.

அவளோ‍, நேற்று பர்சேஸ் செய்து விட்டு வந்தவற்றை களைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவின் பொறுமை, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

தனது கையிலிருந்த செல்ஃபோனில் டைமை பார்த்தவள், ” ஏன் டி அனு? உனக்கு என்ன தான் பிரச்சினை? எதுக்கு எல்லா ட்ரெஸையும் களைச்சி போடுற‌.”

” ராது! என்ன ட்ரெஸ் போடுறதுனு கொஞ்சம் குழப்பமா இருக்கு. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் வேறயா. நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு போகணும். ஃபர்ஸட் இம்ப்ரஷன். பெஸ்ட் இம்ப்ரஷன்ஸ். அதான் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருக்கு.”

” ஏன் டி அனு. என் வாயில் நல்லா வந்துரும். நம்ம இங்க வந்து ஒன் இயர் முடிஞ்சிடுச்சு‌. அப்புறம் என்னடி உனக்கு டென்ஷன்.”

” அது வேற. இது வேற. அப்ப நம்ம படிக்க போனது சைக்காலஜி. அது வேற காலேஜ். சும்மா கொஞ்ச பேரோட படிச்சோம். அது மாதிரியா. இங்கே நிறைய பேர் இருப்பாங்க. அவங்களோட மிங்கிள் ஆகணும். அது தான் கொஞ்சம் பயமா இருக்கு.” என அனன்யா கூற.

” என்னவோ போ அனு. எனக்கு ஒரே எக்ஸைட்டா இருக்கு. எப்பதான் நாம் ஆசைப்பட்ட மெடிசின் படிப்போமோனு இந்த ஒன் இயரா காத்துட்டுருந்தேன். இந்தியாவுல படிச்சிருந்தா ஃபர்ஸ்ட் இயர் முடிச்சிட்டு செகண்டியர் போயிருப்போம்.

இங்கே பிலிப்பைன்ஸ்ல சைக்கலாஜி ஒன் இயர் படிச்சா தான், மெடிசின் படிக்க முடியும். இப்ப தான் ஒரு வழியாக அதை முடிச்சிட்டு, நம்ம கனவை நிறைவேற்றப் போற காலேஜ்ஜை பார்க்கலாம் என்று பார்த்தால் வரமாட்டேங்குறீயே” என்று ராதிகா கூற.

” நானும் அதுக்காகத்தான் பரபரப்பா கிளம்புறேன். சரி இதுல நான் எதைப் போடுறது? எனக்கு நல்லா சூட் ஆகுறதை சொல்லுடி.” என.

கொலவெறியில் இருந்த ராதிகா, ” அனு… இன்னைக்கு காலேஜ் போட்டுக்கிறதுக்காகத் தானே, நேற்று பர்ச்சேஸ் பண்ணோம். எல்லாம் ட்ரையல் பார்த்து உனக்கு சூட்டாகுறதா தானே வாங்குனோம். அதுல எதையாவது போட்டுட்டு இப்போ வர. இல்லை நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.” என்று மிரட்ட.

அந்த மிரட்டல் வேலை செய்தது. அடுத்த ஐந்தாம் நிமிடம் அனன்யா தயாராகி வந்து விட.

இருவரும் ஹாஸ்டலில் இருந்து கிளம்பி, எதிரே இருந்த மெஸ்ஸுக்கு சென்று உணவருந்தி விட்டு, ஒரு வழியாக காலேஜுக்கு கிளம்பினர்.

 ஜிப்னிற்காக காத்திருக்க, சரியாக அந்த நேரத்தில் வண்டியும் வந்து விட்டது.

காலேஜில் இருவரும் அடியெடுத்து வைக்க.

அனன்யாவோ, “இரு ராது. இன்னைக்கு மாமா வரேன்னு சொன்னாங்க. இங்கே வெயிட் பண்ணுவோம்.” என்று என்ட்ரன்ஸ் கேட் அருகில் நின்றுக் கொண்டாள்.

ராதிகாவோ, ” நீ வெயிட் பண்ணு. நான் உள்ளே போய் வெயிட் பண்ணுறேன். கொஞ்சம் சீக்கிரமா வா அனு.” என்றவள் உள்ளே நுழைந்து அந்த காலேஜ்ஜை ஆர்வமாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது ஆர்வத்தை தடை செய்வது போல, ” ஏ கேர்ள்! ” என்ற குரல் ஒலித்தது.

ராதிகாவோ, அந்தக் குரலை லட்சியம் செய்யவில்லை.

மீண்டும் ” ஹேய் உன்னைத் தான். கம் ஹியர்.” என்ற அலட்டலான குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் ராதிகா.

 ஸ்டைலாக தலையைக் கோதிக் கொண்டே, ஒரு கையால் இங்கே வா என்று சைகை செய்தான் ஒருவன்.

 இவளோ யோசனையுடனே அவனது அருகில் சென்றாள். முன்பானால் பயந்து நடுங்கியிருப்பாள். இப்போ தான் அனன்யாவின் ட்ரைனிங் இருக்கிறது. ‘ யாரேனும் ரேகிங் பண்ணனும் என்று நினைத்தாலே அவங்களை தெறிக்க விடணும்.’ என்று இருவரும் பேசிக் கொண்டது அவளுக்கு நியாபகம் வரவே புன்னகையுடன் சென்றாள்.

நடந்துக் கொண்டே தன் தோழி வருகிறாளா என்றுப் பார்க்க…

அவளோ இன்னும் உள்ளே வரவில்லை.

அவளது பார்வையை உணர்ந்தவனோ, ‘ ஒரு வேளை இவளுக்கு நாம் யாரென்று தெரியுமோ.’ என்று எண்ணியவன், ‘ இருக்காது.’ என்று தனக்குள் கூறிக் கொண்டு,” ஏய் க்வீக் ஃபாஸ்ட்.” என்றான்.

அவனது அருகே வந்தவளிடம் முதல் கேள்வியாக ,” நீ தமிழா…” என்று வினவியவன்‍, பிறகு வழக்கம் போல சில கேள்விகளை வினவினான். ” உன் பேர் என்ன? எந்த ஊர்? ” என்று எல்லாம் மொக்கை போட்டான்.

ராதிகாவும் கடனே என்று எல்லாவற்றிற்கும் பதில் கூறினாள்.

” சரி உனக்கு பாடத் தெரியுமா?” என்று அடுத்து வினவ.

” ஹாங்…” என்று முழித்தாள்.

“ஏன் பாடத் தெரியாதா? சரி பரவால்ல விடு. இங்கே கழுதை எதுவும் கிடையாது. அதனால பயப்படாமல் பாடு. அட்லீஸ்ட் நாலு லைன்ஸ் கத்திட்டாவது போ.” என்றவன் வெளியே இருந்து யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே வினவினான்.

ராதிகாவோ, ‘ டேய் எருமை மாடு. நீ என்ன என்னை பொண்ணு பார்க்கவா வந்திருக்க‌… பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? என்று கேட்டுட்டு இருக்கிற?.’ என மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தவள், அவன் தொடர்ந்து கூறியதைக் கேட்டு அவனை பார்த்து முறைத்தாள்.

” ஹலோ! என்ன லுக்? சீனியர் கிட்ட கொஞ்சம் கூட பயமே இல்லையா. நான் சொல்றதை செஞ்சுட்டா, நீ போயிட்டே இருக்கலாம். இல்லைன்னா இங்கேயே நிற்க வேண்டியது தான்.” என.

கடுப்பான ராதிகா, அவனை வெறுப்பேத்த ” போடா போடா புண்ணாக்கு‌. போடாத தப்பு கணக்கு.” என பாட.

 அவளது குரலின் இனிமையை கூட ரசிக்காமல் வேகமாக அதிர்ந்தவன் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தான். நல்லவேளை அருகில் யாரும் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன், ” ஓய்! ஒழுங்கா ஒரு நல்ல பாட்டா பாடு. ஆங்… உன் பேர் என்ன ராதிகா தானே. அதுவும் கண்ணனோட ராதிகா தானே. அந்த கண்ணனை வச்சே ஒரு பாட்டு பாடு.” என்று கூற.

அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே அரத பழைய பாட்டான ” கண்ணன் எந்தன் காதலன்.” என்ற பாடலை மெய் மறந்து பாடினாள்.

அவளது குரலில் முகத்தில் வந்து போன பாவத்தில் லயித்து போனான் அவன்.

பாடி முடித்த ராதிகா, ” நான் போகட்டா சீனியர்.” என்று அவனைப் பார்த்து வினவ.

அவனோ ஒன்றும் கூறாமல் ப்ரீஸ் ஆகி நிற்க.

” ஹாய் மாம்ஸ்.நீங்க இங்கே இருக்கீங்களா? நான் உங்களை வெளியே தேடிட்டு இருந்தேன். எப்போ வந்தீங்க. வந்து ரொம்ப நேரம்ஆகுதோ?” என்று படபடவென அனன்யா வினவ.

ராதிகாவோ, கொலை வெறியில் அருகில் நின்றிருந்த நெடியவனைப் பார்க்க. அந்த மாயக்கண்ணனோ, ராதிகாவைப் பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தான்.

இன்று…

வீடியோவை பார்த்து திகைத்து நின்றான் விஸ்வரூபன். அதெல்லாம் ஒரு நிமிடம் தான். பிறகு முகம் இறுக யோசனையில் ஆழ்ந்தவன், கிருஷ்ணனை நிமிர்ந்துப் பார்த்து, ” டாட்! என்ன சொன்னீங்க? அந்த பொண்ணு நம்ம காலேஜ்ஜா?” என்று சந்தேகமாக வினவ.

” ஆமாம் ரூபன். நானே உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சிட்டே இருந்தேன். பட் வொர்க் ஃப்ரெஷர்ல மறந்துட்டேன். அந்த பொண்ணு தான் நம்ம சேலவர் சொல்லி, ஃப்ரீ கோட்டால சேர்த்தது. நம்ம ஹாஸ்பிடலயும் பார்ட் டைம் ஜாபா ஒர்க் பண்ணுறா.”

நம்ம ஹாஸ்பிடலில் தான் வேலைப் பார்க்கிறாள் என்பதைக் கேட்டவுடன் படபடத்த மனதை அடக்கிக் கொண்டு, ” ஓ! இரண்டு பேரும் நம்ம காலேஜ்ஜா? அதான் அந்த ஆதவனோட பழக்கமா?” என்று கேள்வி எழுப்பினான் விஸ்வரூபன்.

” மே பி! காலேஜ்லயும் அந்த பையன் கூடத் தான் உட்கார்ந்து இருந்தா. ரெண்டுபேரும் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க. ஒரு வேளை ஏற்கனவே தெரிஞ்சவங்களாக் கூட இருந்திருக்கலாம். “

” டாட்! நீங்க சேலவர் கிட்ட சொல்லி அந்தப் பொண்ணை கண்டிச்சு வைக்க சொல்லுங்க.”

” வாட் ரூபன்? நீ என்ன சொல்றன்னு தெரிஞ்சு தான் சொல்றீயா? இது அவளுடைய பர்சனல்.” என்றுக் கூறிய கிருஷ்ணனனோ அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க.

” டாட்!அந்த பொண்ணு, நம்ம காலேஜ்ல படிக்குது. அதுவும் இல்லாமல் நம்ம ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணுதுனுவேற சொல்றீங்க. சோ… ஆதவன் கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லுங்க.” என்று ஆழ்ந்துப் பார்த்தான்.

” புரிந்தது.” என்பது போல கிருஷ்ணன் தலையசைத்தார்.

வீல்லென்ற குழந்தையின் அழு குரலில் வேகமாக கை கழுவி விட்டு, தன் தாயின் அறைக்கு அருகிலுள்ள குழந்தையின் அறைக்குச் சென்றான்.

அந்த அவசரத்திலும் கதவைத் தட்டிவிட்டு சென்றான்.

 குழந்தையைப் பார்த்துக் கொள்ள நர்ஸ் ஒருவரையும், ஆயாம்மா ஒருவரையும் நியமித்திருந்தான். பகல் முழுவதும் அவர்கள் பார்த்துக் கொள்ள… இரவு முழுவதும் இவன் வசம் குழந்தை.

” கங்காம்மா… ஏன் அம்மு குட்டி அழறா?”

“பசியா தான் தம்பி இருக்கும். பாப்பா இவ்வளவு நேரம் தூங்குச்சு. ” என்றவரின் கைகளோ, ப்ளாஸ்கில் இருந்த வென்னீரை ஊற்றி பால் பவுடரை விட்டு கலக்கிக் கொண்டிருந்தது.

” ஓ…” என்ற விஸ்வரூபன் நர்ஸின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டான்.

 இரண்டு மாத குழந்தையை லாவகமாகத் தூக்கியவன் மென்மையாக தட்டிக் கொடுத்தான். தாயைப் போல பிடிவாதமாக இருந்த குழந்தையோ விடாமல் வீறிட்டு அழுதுக் கொண்டிருந்தது.

 அந்த நேரத்தில் அவனது ஃபோன் அழைக்க… அந்த சத்தத்தில் குழந்தையின் அழுகுரல் நின்றது. அதை ஆச்சரியமாக பார்த்தான் விஸ்வரூபன்.

“யமுனை ஆற்றிலே…” என்ற பாடல் குழந்தைக்கு தாலாட்டாக தெரிந்ததோ என்னவோ? பொக்கை வாய் திறந்து சிரித்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்