
நினைவுகள் -12
அன்று
உடனே அவளது கவலையைப் போக்க வேண்டும் என்று தோன்ற. ராதிகா அவளை சமாதானம் செய்தாள்.
” ஓகே அனு … பேபியாட்டாம் முகத்தை தூக்கி வச்சிக்காதே. உன்னோட பர்த்டே அன்னைக்கு கண்டிப்பா லீவ் போட்டு உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்றேன். ” என.
” ம்கூம். என் பர்த்டேக்கு சிக்ஸ் மன்த்ஸ் இருக்கு. அப்புறம் என்னோட பர்த்டேக்கு எங்க ஹோல் குடும்பமே இங்கே வந்து இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என்றுக் கூறி உதட்டைப் பிதுக்கியவள், திடீரென முகம் மலர, ” ராது இப்படி பண்ணினா என்ன? உன் பிறந்த நாளுக்கு அவுட்டிங் போகலாம்.” என.
” அது சரி வராது.”
” ஏன் ராது சரி வராது? அப்போ என் மேல உனக்கு இன்னும் கோபம் போகலையா?” என கண்கள் கலங்க வினவ.
” லூசா நீ. உடனே கண்ணுல டேமை திறந்திட்ட. முதல்ல கண்ணைத் துடை. ப்ரேக் பாஸ்ட் டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. வா முதல்ல சாப்பிட்டு வந்துடுலாம். அப்புறமா இதைப் பத்தி பேசலாம்.” என்று அந்தப் பேச்சிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாள்.
கைப்பிடியாக அவளை இழுத்துக் கொண்டு மெஸ்ஸிற்கு சென்றாள். இவர்களுடை அறை தேர்ட் ப்ளோர். மெஸ் இவங்க பில்டிங்குக்கு ஆஃப்போஸிட் பில்டிங்.
ஒரு வழியாக இருவரும் சென்று உணவருந்தி விட்டு வந்தனர்.
அறைக்கு வந்தவுடன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள் அனன்யா.
” ஏன் ராது? உன் பிறந்தநாளைக்கு அவுட்டிங் போனா என்னாவாம்?”
” அனு! அது வந்து நம்ம அன்னைக்கு அவுட்டிங் போனா, ஒன்று நம்ம இரண்டு பேரையும், எல்லாரும் சந்தேகமாக பார்ப்பாங்க. இல்லை அங்கே இருக்கவங்களை நம்மலால பார்க்க முடியாது. அதான் சொல்றேன்.” என.
” புரியற மாதிரி சொல்லு ராது.”
” என்னுடைய பிறந்தநாள் பிப்ரவரி ஃபோர்டின்.”
” என்னது பிப்ரவரி ஃபோர்டினா. செம்ம போ. உன் பிறந்தநாளைக்கு இன்னும் நான்கு நாள் தானா இருக்கு. சூப்பர்! ஆனால் வொர்க்கிங் டேயில் வருது. அவுட்டிங்கெல்லாம் போக முடியாது. நீ சொல்றதும் சரி தான்.” என்று அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.
அதுக்கு பிறகு, ராதிகா வேலைக்கு கிளம்பும் வரை, அது இது என்று உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் அனன்யா.
ராதிகா அந்தப் பக்கம் நகர்ந்ததும், அனு, அவளது அடுத்த அறைத் தோழிகளுடன் வெளியே கிளம்பி விட்டாள்.
அவளுக்கு உடனடியாக ஷாப்பிங் செய்வதற்கு அவசியம் இருந்தது. சண்டேவை விட்டால், அப்புறம் ரிலாக்ஸாக ஷாப்பிங் பண்ண முடியாது.
ராதிகாவின் பிறந்தநாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது. அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்.
அதற்கான பர்ச்சேஸிற்கு அருகிலிருக்கும் மாலுக்கு, தோழிகளுடன் சென்று வேண்டியதெல்லாம் வாங்கி வந்து, பக்கத்து அறைத்தோழியிடமே வைத்திருக்க சொல்லி விட்டாள். கேக் வாங்கும் பொறுப்பையும், அவளிடமே கொடுத்து இருந்தாள்.
மூன்று நாட்கள் கழித்து இரவு, ராதிகா நேரத்தோடு தூங்கியதும், பக்கத்து அறையிலிருந்த திங்ஸை எடுத்து வந்து, ஃப்ரெண்ட்ஸோடு சேர்த்து அறையை டெகெரேஷன் செய்தாள் அனன்யா.
அனைவரும் சத்தமிடாமல் சைகையில் பேசிக் கொண்டு பலூனை ஊதி ஆங்காங்கே தொங்க விட்டனர். ரூம் டெக்கரேஷனுக்காக வாங்கியவற்றை வைத்து அறையை அழகுப் படுத்தியவர்கள், கேக்கை எடுத்து வைத்து மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு லைட் ஆஃப் செய்தனர்.
அனன்யா, ராதிகாவை எழுப்ப. அயர்ந்து உறங்கியிருந்தவளோ பதறி எழுந்தாள்.
அவளைப் சுற்றி இருந்தவர்கள், ” ஹாப்பி பர்த்டே டூ யூ.” என்று பாட்டு பாடியபடியே, அவர்கள் வாங்கி வைத்து இருந்த ஸ்பேரையை அடிக்க… அங்கு அவள் மேல் நுரை பொங்கியது.
இன்ப அதிர்ச்சியில் ராதிகாவால் ஒன்றும் பேச முடியவில்லை.
“ராது! வா. முதல்ல கேக் கட் பண்ணலாம்.” என்று ராதிகாவை அழைத்துக் கொண்டு சென்றாள் அனன்யா.
கேக்கை வெட்டி ராதிகா, அனன்யாவுக்கு ஊட்டினாள். அதற்குப் பிறகு அன்று இரவு யாரும் உறங்கவே இல்லை. பர்த்டே பேபிக்கு கிஃப்ட் கொடுத்து விட்டு, அவளுக்கு சில டாஸ்க் கொடுத்தனர்.
அவர்கள் சொன்னதைக் கேட்ட ராதிகாவோ, ” ம்கூம்… என்னால டான்ஸ்ஸெல்லாம் ஆட முடியாது. நான் வேணும்னா பாடவா.” என.
” நீ வேண்டும்ன்னா பாட்டு பாடிக்கிட்டே, டான்ஸ் ஆடு. எங்களுக்கு நோ ப்ராப்ளம். இங்கே இது தான் ரூல்ஸ். பர்த்டே பேபி நாங்க கொடுக்குற டாஸ்க் எல்லாத்தையும் செய்யணும். டாட். ” என்று எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்ய.
மறுக்க முடியாமல் ராதிகா அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தாள்.
ராதிகா ஆடும் போதே, எல்லோரும் சேர்ந்து ஆட்டம் போட, நல்ல ஜாலியாக அன்றைய பொழுது போனது.
மறுநாள் கல்லூரிக்கு சென்று, அங்கும் லஞ்ச் ப்ரேக்கில் கேக் வெட்ட, கொண்டாட்டம் தொடர்ந்தது. அனன்யாவின் அன்பைப் பார்த்து, ராதிகாவின் கண்ணில் ஒரு துளி நீர் துளிர்த்தது.
இன்று…
” சரி விடு ஆதி. ஈவினிங் பேசலாம். வா இப்போ கிளாஸுக்குப் போகலாம்.” என்று கூறிய ராதிகா, அவனது தேவதையின் நினைவில் இருந்து தற்காலிகமாக மீட்டெடுத்தாள்.
ஒரு வழியாக அன்றைய வகுப்பு முடிந்ததும், என்னோட ட்ரீட் என்று, பிரபல ஹோட்டலுக்கு ராதிகா அழைக்க.
” அதெல்லாம் வேண்டாம். காஃபி மட்டும் போதும்.” என்று ஆதி கூறி விட.
அரை மனதாக, ஆதியுடன் அவர்களது கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த காஃபி ஷாப்புக்கு சென்றாள்.
பெரிய, பெரிய காலேஜுக்கு பக்கத்தில் அங்கு படிக்கும் மாணவர்களை கவருவதற்காக உருவாக்கிய காஃபி ஷாப். காஃபியில் உள்ள அத்தனை வகைகளும் இருந்தது. ஓப்பன் ப்ளேஸில் குடைக்கு கீழ் சேர் போட்டு இருந்தது. சுற்றிலும் மரம் கொடி இருக்க. காற்று ரம்மியமாக வீசியது.
“ஆதி! ஜூஸ் ஆர்டர் பண்ணவா.” என்று ராதிகா வினவ.
” இல்ல எனக்கு வேண்டாம். எனக்கு காஃபி மட்டும் போதும். வித்தவுட் சுகர். நான் இன்னைக்கு இனிப்பு சாப்பிட மாட்டேன்.”என்றுக் கூற…
அவன் சொன்னது போல, அவனுக்கு சொல்லி விட்டு, தனக்கு கூல் காஃபி ஆர்டர் கொடுத்து விட்டு, அவனை ஆழ்த்துப் பார்த்தாள்.
‘அவளுக்கு அவனிடம் தெரிந்துக் கொள்வதற்கு நிறைய இருந்தது. முதலாவது, முக்கியமானது இன்று மதியம் லஞ்ச் பிரேக்கில் அவன், நாங்கள் என்று சொன்னது, யார் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.’ என்று நினைவுத்தவள், ” ஆதி! உன்னைப் பத்தி சொல்லு. உங்க வீட்ல யார், யார் இருக்குறாங்க. “
” இப்போதைக்கு நானும், எங்கப்பா, அம்மா மட்டும் தான். இதுவே போன வருஷம் கேட்டிருந்தீன்னா, எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், என்னுடைய முதல் தோழன் என்று சொல்லிருப்பேன். இன்றைக்கு தான் அவனுக்கு நினைவுநாள்.” என்று மரமரத்தக் குரலில் கூறினான்.
” என்ன ஆதி சொல்லுற… இன்னைக்குத் தானா…”என்று தடுமாறியவள், ” ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஆதி. உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா.”
” அதெல்லாம் இல்லை ராதிகா. எனக்கு என் மனசுல உள்ளதை, யார் கிட்டயாவது ஷேர் பண்ணிக்கிட்டா, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தோணுது.
ஆஸ் யூஸ்வல் பணக்கார பேரன்ட்ஸ் போலத் தான் என்னுடைய பேரன்ட்ஸும்.
இரண்டு பேருமே டாக்டர்ஸ். பணத்துக்குப் பின்னாடி போக, நானும், அண்ணனும் வேலைக்காரர் வசம் தான் வளர்ந்தோம்.” என்றவன் சற்று நேரம் அவனது அண்ணனின் நினைவில் இருக்க.
” ஆதி! உன் பேரன்ட்ஸ் டாக்டர்ஸ். சோ அவங்க நேரங்காலம் பார்க்காமல் வேலைப் பார்க்க வேண்டியிருக்கும். விடு ஆதி. உனக்குத் தெரியாததா?
“அது சரி தான் ராதிகா. அவங்களுக்கு ஹாஸ்பிடல் முக்கியமாக இருந்தாலும், வீட்டுக்கும் வரும் போது கூட எங்களை கவனிப்பது கிடையாது. அதனால நானும், எங்க அண்ணனும் எங்களுக்குன்னு தனி உலகம் உருவாக்கிட்டோம். நாங்க இரண்டு பேரும் எதையும் எங்களுக்குள்ள மறைச்சிக்கிட்டதே கிடையாது. எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிப்போம். என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் அவன் தான்.
இப்படியே எங்க வாழ்க்கை போயிட்டு இருக்கும் போது, என் அண்ணன் அவனும் டாக்டர் தான். மேற்படிப்புக்கு வேற காலேஜ் சேர்ந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு புயல் வந்தது. அந்த இனிய புயல், எங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக சுழற்றி அடித்தது.
காலேஜில் பார்த்தவுடனே லவ் பண்ணான். எப்பவும் போல என் கிட்ட வந்து ஷேர் பண்ணான். எங்க வீட்டுக்கு வருவாங்க. சிரிக்க, சிரிக்க பேசுவாங்க.” என்றவன் அவளது நினைவில் முகமெல்லாம் இளகியிருக்க.
” ஆதி அவங்க பேர் என்ன?”
” ஆகாஷ்…”
” நான் அண்ணா பேர் கேட்கலை. அவங்க லவ்வர் பேரைக் கேட்டேன்.”
” அவங்க பேர் வேண்டாம் ராதிகா. நான் அவங்களை பேபின்னு தான் கூப்பிடுவேன்.”
” ம்… சரி.” என்றவள் அமைதியாக இருக்க.
மீண்டும் பேச்சை ஆரம்பித்தான் ஆதவன். ” என்னுடைய பிறந்தநாள், அண்ணாவோட பிறந்தநாள் எல்லாம் அப்படி சர்ப்ரைஸ் பண்ணாங்க.
அதெல்லாம் ஒரு வருஷம் தான். அடுத்த வருஷம் பிறந்தநாள் அன்னைக்கு, சர்ப்ரைஸ் பண்ணாலும் ஏதோ மிஸ்ஸிங். எப்பவும் என் கூடவே இருக்குற அண்ணன் கூட, அன்னைக்கு என் கூட இல்லை.
காலையிலேயே பர்த்டே செலப்ரேட் பண்ணிட்டு ,ரெண்டு பேருக்கும் முக்கியமான கிளாஸ் இருக்கு என்று கிளம்பி போயிட்டாங்க. ஆனா அன்னைக்கு அவங்க ரெண்டு பேர் முகமும் சரியில்லை. ஏதோ சம்திங் ராங்க்னு தோணுச்சு.
அப்புறம் பார்த்தா ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணி இருக்காங்க. ஈவினிங் வரை எங்க கெஸ்ட்ஹவுஸ்ல இருந்துட்டு, காலேஜ் முடியற டைம் கிளம்பி வந்திருக்காங்க.
ஆகாஷோட பைக்க லாரி மோதிருச்சு.
ஏதோ டூவிலர் மோதுற மாதிரி வந்துச்சுன்னு, பைக்கை வளைச்சான்னு சொன்னாங்க. அந்த ஏரியால தான் ரேஸ் மாதிரி வண்டியை ஓட்டுவாங்களே. அதனால ஆக்ஸிடென்ட் ஆனதா? இல்லை எங்கண்ணனோட கவனக்குறைவால ஆனதா? ஏதோ ஒன்னு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. எல்லாம் முடிச்சிருச்சு. எங்களுக்கு அப்புறமாத் தான் தெரியும். இரண்டு பேரும் அன்னைக்கு காலேஜ் போகலை என்று. அண்ணா ஸ்பாட் அவுட். அவங்களுக்கு லேசான அடி தான்.” என்று முடித்தவன், பேரர் கொண்டு வந்து வைத்து விட்டு போன காஃபியை குடிக்க ஆரம்பித்தான்.
தன்னுடைய அக்காவின் ஞாபகம் வந்துவிட. கலங்கிய கண்களை சமாளித்து, ” ஃபைவ் மினிட்ஸ் ஆதி. ” என்று கூறி விட்டு, ரெஸ்ட் ரூம் போய் அழுதவள், முகத்தை நன்கு கழுவி விட்டு வந்தாள்.
திரும்பி வந்தவள் பார்த்தது என்னவோ, ஆதியின் சட்டையைப் பிடித்து அவனை, ஆக்ரோஷமாக அடிக்கும் விஸ்வரூபனைத் தான்.
அங்கிருப்பது விஸ்வரூபன் தானா என்று கண்களை சிமிட்டி பார்த்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

