
அத்தியாயம் -9
சபரியின் பேச்சில் எரிச்சலுற்று அவனை முறைத்துப் பார்த்தாள் மீனா.
‘அப்படின்னா இவன் என்னை டெய்லி வேவு பாத்துட்டு இருந்துருக்கான். பொழுதுக்கும் இது தான் வேலையா வச்சிருந்திருப்பான் போல. ச்சே.. என்ன ஒரு கேவலமான குணம்! ஆகாஷ் கூட என்கேஜ்மெண்ட் முடிஞ்சு, இனி
அவர் தான் என்னோட வருங்கால புருஷன் அப்படின்ற நினைப்பில இருந்தேன். அவரோட சுத்தினேன். அதில இவனுக்கு என்ன பிரச்சினை வந்துச்சு? ஆனா கதையே மாறப் போகுதுன்னு எனக்கெப்படித் தெரியும்? முன்னாடியே எல்லாத்தையும் தெரிஞ்சுக்க நான் என்ன மந்திரவாதியா?’
மனதுற்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள் அவள்.
“என்னடி முறைக்கிறே? ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போயித் தானே ஊர் சுத்தினீங்க? அப்படின்னா ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தானே? அதுதான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ ஷாக் ஆறே? கொஞ்சம் குறைம்மா. அப்ப தான் உடம்புக்கு நல்லது!”
“சரிங்க.. நீங்க எப்படி வேணாலும் நினைங்க. அவர் இப்ப எங்கே இருக்காரு? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க”
“அது தெரிஞ்சிகிட்டு நீ என்ன பண்ணப் போறே? உனக்கு அவனை நினைச்சாலே, அச்சோ அவருக்கு என்னாச்சோ? நல்லா இருக்காரா அப்படின்னு உன் மனசில ஒரு பதட்டம், பயம் வருதுல்லே? அது பாக்க நல்லா இருக்குல்ல எனக்கு? அதனால அந்த பதட்டம் இன்னும் கொஞ்ச நாள் அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!
நான் உனக்கு இப்ப ஆகாஷைப் பத்தின விவரம் சொல்லிட்டா, உன் பயம் போயிடுமே! மனசுக்குள்ள இருக்கிற டென்ஷன் குறைஞ்சிடுமே! புருஷனோட ஆசைய நிறைவேத்துறது தானே ஒரு நல்ல பொண்டாட்டிக்கு அழகு. சோ பேபி, இப்ப நீ எதுவும் தெரிஞ்சுக்க வேணாம். கொஞ்ச நாள் உன்னோட இந்த டென்ஷனைப் பாத்து நான் ரசிக்கிறேன். சரியா? அப்புறமா தெரிஞ்சுக்கலாம். ஓகே டியர்?”
பேசியவாறு நக்கலாகப் பார்த்தான் அவளை.
“ஏங்க இப்படி பண்றீங்க? ப்ளீஸ் சொல்லுங்க.. அவர் எங்கே இருக்கார்னு கூட எனக்கு நீங்க சொல்ல வேணாம். அவர் நல்லா இருக்கார்னு மட்டும் சொல்லுங்க போதும் எனக்கு. ப்ளீஸ்ங்க, உங்களைக் கெஞ்சிக் கேக்குறேன்”
“ஹை.. சூப்பர் சூப்பர்! இந்தக் கெஞ்சல் கூட நல்லா இருக்கே பாக்குறதுக்கு. வெரி குட் பேபி. ஐ லைக் இட் வெரி மச்!”
சொல்லி விட்டு சத்தமாக எகத்தாளமாகச் சிரித்தான்.
மீனாவோ, பொலபொலவெனக் கண்ணீர் சிந்தினாள். அதைத் தவிர அவளுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியவில்லை அந்நேரத்தில்.
சட்டென்று சிரிப்பை நிறுத்தியவன், அழுது கொண்டு நிற்கும் அவளை உற்றுப் பார்த்தான்.
சிரிப்புச் சத்தம் நின்றவுடன், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனுடைய முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த கேலியும் கிண்டலும் மறைந்து இப்போது கோபத்தில் சிவந்து தகதகவென எரிந்து கொண்டிருந்தது.
“போடி இங்கே இருந்து. அழுது வேஷம் போட்டுட்டு நிக்காம போ அங்கிட்டு. என் கண்ணு முன்னாடி நிற்காதே போ சீக்கிரமா!” விரட்டினான் அவளை.
அவளும், அறையில் இருந்து வெளியேறத் திரும்பினாள்.
எழுந்து தேநீர் கிளாசைக் கையில் எடுத்தான். அது ஆறி ஆடை படிந்துப் போயிருந்தது.
“ஏய் ஏய் நில்லு.. இந்தா இது ஆறிப் போச்சு. போயி சூடாக்கி எடுத்துட்டு வா!”
கட்டளை பிறப்பித்து விட்டு கிளாசை அதே இடத்தில் வைத்தான். அவளும் அதை எடுத்துக் கொண்டு வெளியேறிச் சென்றாள்.
“என்னம்மா, டீ குடுத்தியா சபரிக்கு? குடிச்சு முடிச்சுட்டானா? கோவிலுக்குப் போகணும்னு சொன்னியா அவன் கிட்ட?”
சமையலறைக்குள் நுழைந்தவளிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார் மாலதி.
“இல்லேத்த.. டீ ஆறிப் போயிடுச்சு. அதுதான் சூடாக்கிக் கொண்டு போறேன் அத்தே. அப்படியே கோவிலுக்குப் போற விஷயத்தைச் சொல்லிட்றேன் அத்த இப்ப”
மாலதியோ மெலிதாக நமுட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிரித்துக் கொண்டாள்.
தேநீர் கொண்டு சென்றவுடன் குடிக்காமல் மகனும் மருமகளும் என்ன செய்தார்களோ என்கிற ஒரு அர்த்தம் தான் அது.
ஆனால் மீனாவுக்கோ, அவருடைய சிரிப்புக்குக் காரணம் சற்றும் புரியவில்லை. அவரைப் பார்த்துப் பேந்தப் பேந்த முழித்தாள்.
“சரிம்மா சரி.. கொண்டு போ” அதே சிரிப்புடன் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
தேநீரை சுட வைத்துக் கொண்டு மீண்டும் அறைக்குச் சென்றாள் மீனா.
‘என் கண்ணு எதுக்க வரவே வராதேன்னு விரட்டினாரு! அப்புறம் எதுக்கு திரும்ப டீய மட்டும் கொண்டு வரச் சொல்லணும்? இப்ப மட்டும் பாக்க பிடிக்குதாமா இவருக்கு? எல்லாம் கொழுப்பு. உடம்பு பூரா கொழுப்பு மட்டும் தான் இருக்கும் போல’
கோபத்துடன் அர்ச்சனை செய்து கொண்டே சென்றாள். அறைக்குள் நுழைந்ததும் எதுவுமே பேசாமல் மேஜை மேல் தேநீர் கிளாசை வைத்து விட்டு, அங்கிருந்து திரும்புவதற்கு எத்தனித்தாள் மீனா.
“ஏன், மேடத்துக்கு அதைக் கையில குடுக்க முடியாதோ? மகாராணி மாதிரி டேபிள்ல வச்சுட்டு நீ பாட்டுக்குக் கிளம்பிப் போறே”
“நீ.. நீங்க தானேங்க..”
பேச வந்தவளைப் பேச விடாமல் தடுத்து இடைமறித்தான் சபரி.
“எதுத்து எதுத்துப் பேசுறது எல்லாம் வச்சுக்காதே என் கிட்ட. சொல்றத மட்டும் செய்யி. உனக்கு இங்கே பேசுறதுக்குக் கூட உரிமையில்ல. புரிஞ்சதா?”
அவனை இலேசாக முறைத்து நின்றாள் பெண்ணவள்.
“என்னடி லுக்கு? அதை எடுத்துக் குடுத்துட்டுப் போ”
எடுத்து அவனிடம் நீட்டினாள். அவளையே பார்த்தவாறு கையில் வாங்கிக் கொண்டான் அவன்.
அறையின் வாசல் வரை சென்றவள், நினைவு வந்து நின்று அவனிடம் திரும்பினாள்.
“நாம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போகணுமாம். அத்த உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க”
“என்னது கோவிலுக்கா? அதுவும் உன்னோட ஜோடியாவா? சான்சே இல்ல. என்னால முடியாது. சொல்லிரு நீயே உன் அத்த கிட்ட”
“நான் எப்படிங்க சொல்ல முடியும் இதை? என்னன்னு சொல்றது? நீங்களே வந்து சொல்லுங்க உங்க அம்மா கிட்ட”
சொல்லி விட்டு, அவன் அடுத்து பேசுவதற்குள் வேகமாக விரைந்தாள் அங்கிருந்து.
இந்த அளவு அவனிடம் பேசியதற்கே நெஞ்சு பயத்தில் படபடவென அடித்துக் கொண்டது அவளுக்கு.
“அத்தே, காலையில டிஃபனுக்கு என்ன பண்ணட்டும்? சொல்லுங்க பண்றேன்” நேராக தன் அத்தையிடம் வந்து வினவினாள்.
“நீயே சொல்லும்மா, என்ன பண்ணலாம்? உனக்கு என்ன பிடிக்கும்?”
“மாமாவுக்கு, உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க அத்தே. அதையே பண்ணிட்றேன்”
“ம்ம்.. அப்படியா? அப்படின்னா உங்க மாமாவுக்கு வெண் பொங்கல் சாம்பார்னா ரொம்பப் பிடிக்கும்மா. சபரிக்கும் பிடிக்கும். நீ அதையே செஞ்சுட்றியா? நான் வெங்காயம் கட் பண்றேன்”
கூறியவாறு வெங்காயத்தையும் கத்தியையும் கையில் எடுத்தார் மாலதி.
“அத்தே, இங்கே குடுங்க. நான் செய்றேன். நீங்க முன்னாடி போயி உக்காருங்க”
கையில் இருந்ததை அவரிடம் இருந்து வாங்கி எடுத்து வைத்து, வலுக்கட்டாயமாக மாலதியை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.
‘நான் இதை அவனுக்குப் பிடிக்கும்னு எல்லாம் செய்யல. மாமாவுக்குப் பிடிக்கும்னு சொன்னதால மட்டும் தான் செய்றேன்’ தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டுத் தன் அத்தையிடம் வந்தாள்.
அங்கு அவள் மாமனார் சீனிவாசனும் அமர்ந்து இருந்தார்.
“அத்தே, எல்லாம் முடிஞ்சிருச்சு. சரியா இருக்கான்னு நீங்க வந்து கொஞ்சம் பாக்குறீங்களா?”
“சரிம்மா வர்றேன் போ”
என்று எழுந்தவரைக் கணவனின் குரல் தடுத்து நிறுத்தியது.
“என்ன மாலதி, மருமக வீட்டுக்கு வந்த மொதோ நாளே, சமையல் வேலைய அவ கிட்ட ஒப்படைச்சிட்டு நீ வந்து உக்காந்துட்டியா?” கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் மனைவியிடம்.
“அப்படி இல்லேங்க. அவ தான் செய்றேன்னா. அது தான் விட்டுட்டு வந்தேன். வெங்காயம் நறுக்கக் கூட என்னை விட மாட்டேன்னுட்டா உங்க மருமக”
உடனே மருமகளைப் பார்த்தார் சீனிவாசன்.
“என்னம்மா மீனா, வந்தவுடனே எல்லா வேலையும் நீயே இழுத்துப் போட்டு செஞ்சேன்னா, அப்புறம் அதுவே பழக்கமா போயிடும்மா பாத்துக்கோ. கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு என் பொண்டாட்டி கிட்ட. என்னம்மா புரிஞ்சதா?”
மாலதியின் முகத்தில் கோபம் பொங்கி எழுந்தது.
“ஏங்க, என்னைப் பாத்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? என்னமோ நான் ஒரு கொடுமைக்காரி மாதிரி உங்க மருமக கிட்ட என்னைப் போட்டுக் குடுக்குறீங்க? அப்புறம் அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா? நான் ரொம்ப பொல்லதவன்னு நினைக்க மாட்டா?”
கணவர், தன்னைச் கலாய்க்கத் தான் அப்படிச் சொல்கிறார் என்று தெரிந்தும், அவருக்குச் சாட்டையடியாக பதில் தந்தார் மாலதி.
“சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் மாலதி. அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவப்பட்றே?”
“ம்கூம்.. சொல்வீங்க சொல்வீங்க” முகத்தை இடித்துக் கொண்டார் மாலதி.
இருவரின் செய்கைகளையும் பார்த்து சிரிப்பு வந்தது மீனாவுக்கு. சிரித்துக் கொண்டே மாமியாருடன் நடந்தாள்.
“இருந்தாலும் கொஞ்சம் பத்திரமா இருந்துக்கோம்மா மீனா. நான் சொல்லுறத சொல்லிட்டேன்பா”
மீனாவுக்கு, தன் மாமனார் மாமியாரை மிகவும் பிடித்து விட்டது. அவளுடைய ஆச்சரியம் எல்லாம் ஒன்று தான்.
‘இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு நல்லவங்களா இருக்காங்க. பேசுறதும் நல்ல அன்பா பேசுறாங்க. அத்தை எவ்வளவு நல்ல அனுசரணையா இருக்காங்க. இவங்களுக்கு இப்படி ஒரு மகனா? புள்ளைய பெத்துக்குறதில மட்டும் இப்படி கோட்டைய விட்டுட்டாங்களே! ஒரு முரடன் இவங்களுக்கு மகனா வர்றதுக்கு என்ன பாவம் பண்ணாங்களோ பாவம்! காட்டில அலைஞ்சுட்டு இருக்க வேண்டியது இதெல்லாம். ஹூம்ம்.. இப்படி வீட்டில இருக்குது!’
எல்லாவற்றையும் அவளால் இப்போதைக்கு மனதில் மட்டும் தான் நினைக்க முடிந்தது.
ஆனால், அதே நேரம் இவற்றை எல்லாம், தன் அறையின் வாசலில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் சபரி. சற்று முன் வெளியே வர எத்தனித்தவன், பேச்சு சத்தம் கேட்டு அங்கேயே அப்படியே நின்று விட்டிருந்தான்.
தன் தாயும் தந்தையும் தன் மனைவியிடம் அன்பாகவும் சகஜமாகவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட சபரிக்கு, மனதில் ஆத்திரம் பொங்கி எழுந்தது.
‘இவ என்ன இங்கே இப்படி சிரிச்சுட்டு இருக்கா? அதுவும் என் அப்பா அம்மா கூட? சிரிக்கலாமா இவ? கூடாதே.. தப்பாச்சே! ஏதாவது செஞ்சாகணுமே இதுக்கு! என்ன செய்யலாம்?’
யோசிக்க ஆரம்பித்தான் சபரி. அறையை விட்டு வெளியே வந்தான்.
சமையலறையில் நின்றிருந்த தன் அம்மாவையும் மனைவியையும் கவனித்தான்.
சிறிது சாம்பாரை கையில் ஊற்றி உப்பு பார்த்த மாலதியின் முகம் மலர்ந்தது.
“பேஷ்.. பேஷ்.. ரொம்ப நல்லா இருக்கே! அருமையா செஞ்சிருக்கே. சொல்லப் போனா நான் செய்றத விட ருசியா இருக்கேம்மா மீனா. ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு” வாயாரப் புகழ்ந்தார் மருமகளை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கணவன் ஆசையை நிறைவேற்றுவது மனைவியோட கடமை அதனால உனக்காக அவ எப்பவும் பயத்தோடவும், பதட்டத்தோடவும் சுத்தனுமா?
சபரி உனக்கு சரியா மிரட்ட கூட தெரியல. அவள கண்முன்னாடி வராதனு சொல்ற, அப்புறம் நீயே டீய சூடு பண்ணி எடுத்துட்டு வர சொல்ற. என்ன தொடாதனு சொல்ற, அப்புறம் நீயே ஏன் கையில் எடுத்து கொடுக்க மாட்டியானு கேட்கிற. 🤣🤣
மாமியார் மாமனார் மட்டும் இல்லை சபரியும் அன்பானவன் தான். ஏதோ தவறான புரிதல் அதனால் தான் இப்படி நடந்துக்கறான்.
சரியா சொன்னீங்க. முதல் நாளே இழுத்து போட்டு வேலை செஞ்சு பழக்கிவிட்டுட கூடாது. 🤭
உங்களின் இந்த அழகான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி 😊
அதான் எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு … இந்த சபரி இவ்ளோ நல்லவர்களுக்கு பிள்ளையா இருந்துட்டு இப்படி பண்றான் ..
மிக்க நன்றி 😊
அருமையான பதிவு 😍
மிக்க நன்றி 😊
அருமையான பதிவு,
பிடிக்கல வெளியே போ என்றால் போய் விடுவதா?
அங்கே வை என்றால் கையில தர முடியதா?
🤣🤣🤣
சில ஆண்களுக்கு இதுதான் வேலை. கண்டுக்காம இரு மீனா
பிறகு சதா வசைபாடல் தான் தொடர்ந்து வரும்.
அம்மாவும், அப்பாவிடமும் சிரித்துப் பேசுவது பிடிக்காம வரானே வல்லவராயன் இப்ப என்ன செய்ய போறானோ தெரியலியே…
விமர்சனத்திற்கு மிக்க நன்றி 😊