Loading

அத்தியாயம் -5

சிரிப்பை நிறுத்தி விட்டு அவளுடைய அந்த அதிர்ச்சி கலந்த முகத்தை ஒரு வித இரசிப்புடன் பார்த்தான் ஆடவன் அவன்.
மீண்டும் தொடர்ந்து பேசினான்.

“இதெல்லாம் எதுக்குத் தெரியுமா பேபி?”

அவளுடைய முகத்துக்கு நேராக தன் கை காட்டி விரலை நீட்டியபடி..

“உன்னை.. உன்னைக் கல்யாணம் பண்றதுக்கு மட்டும் தான் இதெல்லாம். புரிஞ்சதா?”

மீண்டும் பலமாக, அந்த அறையே அதிரும் படி சிரித்தான். அந்தச் சிரிப்பில் குரூரமும் வன்மமும் கலந்து இருந்தது.

சபரி பேசிய பேச்சில் விக்கித்துப் போய் நின்றிருந்தாள் மீனா.

அவனுடைய அந்தப் பயங்கரமான குரூரச் சிரிப்பு தெறித்து வந்து காதில் விழுக விழுக மேலுமே அதிர்ந்து பயந்து போய் விட்டாள் பெண்ணவள்.

‘என்ன சொல்றாரு இவரு? எல்லாமே இவரோட திட்டம்னு சொல்றாரே! எதுக்கு இப்படி? என்னை இப்படி பழி வாங்குற அளவுக்கு அப்படி இவருக்கு என்ன பண்ணிட்டேன் நான்? முன்னே பின்னே இவரை நான் பாத்தது கூட இல்லையே!’

மனதில் இருந்த பயத்துடன் குழப்பமும் கலந்து, இனி தன்னுடைய எதிர்காலம் என்ன? அது எப்படி இருக்கப் போகிறதோ என்கிற நினைப்பு பூதாகரமாக கண்ணெதிரே வந்து நின்று அவளைப் பயமுறுத்த, எதையோ சாதித்து விட்ட திருப்தியில் இன்னமுமே பேய்த்தனமான ஒரு சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்த கணவனை, கலங்கிய விழிகளுடன் பார்த்தாள் மீனா.

அவனோ, அவளுடைய கலங்கிய முகத்தைப் பார்த்து இன்னமும் கை தட்டி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தான்.

“ரொம்ப பாவம் மீனா நீ! பாரு, உன்னோட இந்த அழகான முகத்தில எவ்வளவு பதட்டம்! உன்னோட அந்தப் பளபளக்கிற ரெண்டு கண்களிலேயும் எவ்வளவு பயம்! அந்த ரெண்டு கண்ணிலேயும் கண்ணீர் தேங்கி முன்னாடி வந்து நிக்குது பாரு! ஹா..ஹா.. ஹா.. பாக்குறதுக்கே எவ்வளவு நல்லா, மனசுக்குக் குளிர்ச்சியா இதமா இருக்கு தெரியுமா! இதை..இதை.. இதைத்தாண்டி நான் எதிர்பார்த்தேன்!

இப்ப என் மனசு பூராவுமே சந்தோஷம்.. சந்தோஷம்.. சந்தோஷம் மட்டும் தான் நிறைஞ்சு இருக்கு. இதெல்லாம் பாக்கணும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, ரெண்டு வருஷமா இதுக்காகத் தாண்டி வெயிட் பண்ணேன்.

நவ் சபரி இஸ் சோ ஹேப்பி டியர்!”

மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் அரக்கத்தனமாக.

‘என்னது, ரெண்டு வருஷமா வெயிட் பண்றாரா? என்னோட இந்த அழுகையும் பயமும் இவருக்கு சந்தோஷத்தக் குடுக்குதா?

கடவுளே! இங்கே என்ன நடக்குது? யாரு இவன்? கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம இவன் ஏன் என்னைப் பழி வாங்கணும்? ஒருவேளை இ.. இவன் சை..சைக்கோவா இருப்பானோ? பொண்ணுங்கள எல்லாம் கடத்திட்டுப் போயி கொலை பண்ணுவாங்களே, அந்த மாதிரியான ஒரு சைக்கோ சீரியல் கில்லரா இருப்பானோ?’

அந்தப் பெண்ணின் மனதிற்குள் எண்ண அலைகள் கட்டுக்கடங்காமல் சிதறி ஓடியது.

அதிலும் அவன் பெண்களைக் கொலை செய்யும் கொலைகாரனாக இருப்பானோ என்கிற ஒரு நினைப்பு வந்ததும் அவளுடைய தேகம் எல்லாம் நடுங்கத் தொடங்கியது.

எவ்வளவு முயன்றும் அடக்க முடியாமல் அழுகை பீறிட்டுக் கிளம்பியது அவளுக்குள்.

திடீரென அவனுடைய சிரிப்புச் சத்தம் நின்றது. அந்த நேரத்தில் அந்த அமைதியுமே அவளை பயமுறுத்தத் தான் செய்தது.

கலக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள் அவனை. அவனோ சிரிப்பதை நிறுத்தி விட்டு அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய அந்தக் கண்களில் இருந்த உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் மீனா.

‘அப்பப்பா! இவரோட கண்ணில தான் எவ்வளவு கோவம், எத்துணை வெறி! இது எல்லாமே என் மேலே வந்தது. எதுக்கு? ஒன்னுமே புரியலையே.. அய்யோ!’

குழப்பத்தில் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது அவளுக்கு.

கடைசியில் ஒரு வழியாக மனதில் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி, அவனைப் பார்த்துத் தன் சந்தேகத்தைக் கேட்கத் தயாரானாள்.

“நீங்க எ.. என்னை என்ன பண்ணப் போறீங்க? கொ.. கொலை பண்ணப் போறீங்களா? அதுக்குத் தான் இப்படி பண்ணீங்களா?”

இதைக் கேட்டதும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் அவன். இப்போது அந்தச் சிரிப்பில் வேடிக்கை தான் நிறைந்து இருந்தது.

அவள் ஏதோ பெரிய ஜோக் ஒன்று சொன்னது போலவும், அதைக் கேட்டுத் அடக்க முடியாமல் சிரிப்பது போலவும் தான் இருந்தது அவனுடைய அந்தச் சிரிப்பு.

“எ..என்னது கொ.. கொலையா? கொ.. கொலையா? அதுசரி.. என்னை என்ன பொண்ணுங்கள எல்லாம் தேடித் தேடி வரிசையா கொலை செய்ற சைகோ கொலைகாரன்னு நினைச்சுட்டியா? உன்னைக் கொலை பண்ணிட்டு என்னை என்ன ஜெயில்ல போயி உக்காரச் சொல்றியா? போயும் போயும் உன்னைக் கொலை பண்ணிட்டு வாழ்க்கை பூரா ஜெயில்ல போயி உக்காந்து இருக்கிறதுக்கு நான் என்ன முட்டாளாடி பைத்தியம்?

ஆனா பரவாயில்ல, பயத்தில யோசனை உனக்கு எப்படி எல்லாம் போகுது பாரேன். இதுவும் பாக்குறதுக்கும் கேக்குறதுக்கும் நல்லா தான் இருக்கு. ஓகே ஓகே.. யூ கோ அஹெட் பேபி!”

சொல்லி விட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். இப்போது மீனாவுக்கு கொஞ்சம் எரிச்சல் தான் வந்தது. ஆனாலும் தைரியம் வரவில்லை.

“அப்படின்னா நீங்க யாரு? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்குப் புரியுதா இல்லையா? எனக்கு நடக்க இருந்த கல்யாணத்த திட்டம் போட்டு நிறுத்தி, நயவஞ்சகமா என் குடும்பத்தை ஏமாத்தி என் கழுத்தில தாலி கட்ற அளவுக்கு உங்களுக்கு அப்படி நான் என்ன பாவம் பண்ணேன்? எதுக்கு என் மேலே இவ்வளவு வன்மம்? நான் உங்கள இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்ல. எனக்கு எதுவுமே புரியல. கொஞ்சம் சொல்றீங்களா விஷயம் என்னன்னு?”

“ம்ம்.. இப்ப கேட்டே பாரு. இது கேள்வி. ஆனா நீ கேட்டா, உடனே நான் பதில் சொல்லிடுவேன்னு நினைச்சியாடி? இதுக்கான பதில நான் உனக்கு இப்ப சொல்லப் போறதில்ல. காரணமே தெரியாம, ஏன் எதுக்குன்னு நினைச்சு நீ தினம் தினம் சாவணும். சாவணும்டி. நான் அதைப் பாத்து இரசிக்கணும். ரசிச்சுட்டே இருக்கணும். புரிஞ்சதா?”

“ஏங்க இப்படி எல்லாம் பண்றீங்க? உங்களுக்கு நான் என்ன கெடுதல் செஞ்சேன்? அது சொன்னா தானேங்க எனக்குப் புரியும்? எதுவுமே சொல்லாம ஏன் இப்படி சிரிச்சுச் சிரிச்சே என்னை சாகடிக்கிறீங்க?”

உடனே அவளையே முறைத்துப் பார்த்தவாறு அவளை நோக்கி நடந்து வந்தான். அவன் அவளை நெருங்கி வருவதற்குள், பீதி நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்தவாறு பின்னே நடந்தாள் மீனா.

அவளுக்கு இப்போது வேறொரு பயம் வந்து விட்டது. கணவன் என்கிற உரிமையை எடுத்துக் கொள்ளத் தான் தன்னை நெருங்கி வருகிறானோ என்று.

‘ஆனா எக் காரணத்தக் கொண்டும் அதுக்கு மட்டும் இடம் குடுக்கவே கூடாது. பழி வாங்குற நோக்கத்தில இவன் என் கிட்ட வந்தான்னா, அப்புறம் நான் இவனக் கொலை பண்ணக் கூடத் தயங்கவே மாட்டேன்’

அதற்குள் இன்னும் அவன் நெருங்கி விட்டான் அவளை. உடனே வேறு வழியின்றி அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

“வே.. வேண்டாங்க.. பக்கத்தில வராதீங்க தயவு செஞ்சு. உங்களைக் கெஞ்சிக் கேக்குறேன். என் கிட்ட வராதீங்க”

நடந்தவளுக்குப் பின்னே சுவர் வர, அதை இடித்துக் கொண்டு நின்றாள்.

“என்னை எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ். உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேக்குறேன். என் மேலே கை வைக்கிற வேலை எதுவும் வச்சுக்காதீங்க. தள்ளிப் போங்க தயவு செஞ்சு!” கை இரண்டையும் சேர்த்துக் கும்பிட்டாள் அவனை.

“அடச்சீ நிறுத்து!” ‌அவனுடைய அதட்டல் அவளைத் தூக்கிவாரிப் போட வைத்தது.

“உனக்கு அந்த எண்ணம் வேற இருக்கா? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ! நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். எதுவுமே செய்ய மாட்டேண்டி. இந்த ஊருக்குத் தான் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி. ஆனா இந்த ரூம்ல நீ யாரோ நான் யாரோ. என் கை விரல் கூட உன் மேலே படாது புரிஞ்சதா? என்னைப் பொறுத்தவரை உன்னைத் தொட்றது கூட பாவம்.

அது தாண்டி உனக்குத் தண்டனை. இந்த ஜென்மத்தில சந்தோஷம் என்ற ஒன்னு கிடைக்கவே கிடைக்காது உனக்கு. உன் முகத்தில நான் சிரிப்பே பாக்கக் கூடாது எப்பவுமே. சிரிக்கிறது எப்படி என்றதையே மறந்து போயிடணும் நீ. புரிஞ்சதா?

அப்புறம் கேட்டேல்ல.. ஏன் இப்படி எல்லாம்? எதுக்கு இந்தக் கொடுமைன்னு? அதை உனக்கு நான் இப்ப உடனே சொல்லப் போறது இல்ல. நீ அனுபவிச்ச கொடுமை போதும்னு எனக்கு எப்ப தோணுதோ, அன்னைக்கு அந்தக் காரணத்த சொல்றேன் நான். சரியா?

அதுவரை, நாம என்ன பண்ணோம்? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? கல்யாணத்த நிறுத்தி என் கழுத்தில தாலி கட்டிக் கூட்டிட்டு வந்து இப்படி ஒரு கொடுமை பண்றானேன்னு நினைச்சு நினைச்சு நீ அழணும். நாம எதுக்கு இதையெல்லாம் அனுபவிக்கிறோம்னு தெரியாம மண்டைய போட்டுக் குழம்பணும். அந்தக் குழப்பத்தில உனக்கு ஒருவேளை பைத்தியம் பிடிச்சா கூட எனக்குச் சந்தோஷம் தான்.

ஆனா அதுக்காக இந்த வீட்டில உனக்கு எந்த ஒரு வேலையும் இல்லேன்னு எல்லாம் நினைச்சுத் தப்புக் கணக்கு போட்றாதே. எல்லா வேலையும் செய்யணும் நீ. சுருக்கமா சொல்லணும்னா இந்த வீட்டில இனிமே நீ ஒரு வேலைக்காரி. எஜமானி இல்ல. என்னைக்கும் அது ஆகவும் முடியாது! புரிஞ்சதா?”

இடைவிடாது ஆத்திரம் தீர பேசினான் ஆடவன் அவன்.
சற்றே நிறுத்தி விட்டு மீண்டும் அவனே பேசத் தொடங்கினான்.

“இதெல்லாம் செய்றதுக்கு எதுக்கு ரெண்டு வருஷம் காத்திருக்கணும்? மனசிலே இப்படி ஒரு பழி வாங்குற எண்ணம் இருந்தா, ஏன் கல்யாண நாள் வரைக்கும் நான் வெயிட் பண்ணேன்னு தானே உன்னோட சந்தேகம்.

நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு! அந்த ஆகாஷ் வர்றதுக்கு முன்னாடியே நான் உன் கிட்ட உன் அப்பா கிட்ட பேசி, உன்னைச் சாதாரணமா கல்யாணம் பண்ணி இருந்தேன்னு வையி.. இந்த ஒரு கிக் கிடைச்சிருக்குமா சொல்லு? கொஞ்சம் கூட உப்பும் சப்பும் இல்லாம இருந்திருக்கும். இதோ இன்னைக்கு உன் கண்ணில பாத்த இந்தக் கவலை, பதட்டம், குழப்பம் எல்லாத்துக்கும் மேலே இதோ, உன் கண்ணில அப்படியே பொங்கிப் பொங்கி வருது பாரு இந்த அழுகை, இதெல்லாம் மிஸ் பண்ணிருப்பேன்ல! அது என்ன நல்லாவா இருக்கும்?

அவனுடைய பேச்சில் தெரிந்த அந்த நையாண்டித்தனம் அவளுக்குள் எரிச்சலைத் தான் கிளப்பியது.

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

10 Comments

  1. பார்க்கலாம் என்ன நடக்கப் போகுதுன்னு?

  2. சபரியின் இந்த வில்லங்கமான நடவடிக்கையினில் தனது எதிர்கால வாழ்க்கையின் மீதான பயம் மீனாவிடம்.
    தனது அழுகையும் பயமும் அவனுக்கு இவ்வளவு சந்தோஷத்தை அளித்து அவனை ஆறுதல் படுத்தும் அளவுக்கு தான் என்ன இவனுக்கு என்ன வினை செய்தோம் என்ற குழப்பம் வேறு.
    மீனா இனி வாழ்க்கையில் சிரிப்பையே தொலைத்து அதனை மறக்கும் அளவுக்கு அவளை வருத்தி பார்க்க எண்ணுகிறானே! அத்துணை வன்மமும் வெறியும் ஏனோ?
    இப்பொழுது தான் கதையின் தலைப்பிற்கான காரணம் பிடிபடுகிறது. நிதானமாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக செல்கிறது கதை.👏🏼

  3. அடப்பாவி,

    இப்படியா அவள் வாழ்க்கையை அழிக்க பார்ப்பது. மீனா அவன் கோபம் கொள்ளும் விதமாக அப்படி என்ன தப்பு செய்தா தெரியலயே… அப்படியே இருந்தாலும் அதற்காக இப்படியா பழி வாங்குவது

    நாளைக்கு உனக்கே அது மாறி அடிச்சிட கூடாது சபரி

    பார்த்துப் பதமா பண்ணு.

  4. Meena apati enna thapu panna sis.. illa sabari, Meena va thapa purinjikitana…

    1. Author

      அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படியுங்கள் சிஸ். அது தான் சபரி உடனே சொல்ல முடியாது என்று கூறி விட்டானே. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். உண்மை ஒரு நாள் வெளி வரும். உங்கள் விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி 😊

  5. பயங்கரமான வில்லனா இருப்பான் போலயே … இப்படி வந்து மாட்டிக்கிட்ட மீனா