
அத்தியாயம் -32
மீனலோசனி கல்லூரிக்கு வரவில்லை என்றதும் ஷோபனா மட்டும் தனியே சென்றாள்.
அன்று என்னமோ, வகுப்பு ஆரம்பித்த சிறிது நேரத்தில் இருந்து, ஷோபனாவுக்கு தலை பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. அவளால் உட்கார்ந்து பாடத்தைக் கவனிக்கக் கூட முடியவில்லை.
மதிய இடைவேளை நேரம் வரும் வரையில் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டாள்.
உணவு நேரம் வந்ததும், சாப்பிடக் கூடச் செய்யாமல், தோழிகளிடம் சொல்லி விட்டு கல்லூரியில் இருந்து கிளம்பி விட்டாள்.
இப்போது கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த மீனா(கதையின் நாயகி), படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி யோசித்தாள்.
‘தலைவலின்னு மதியமே கிளம்பிட்டதா சொல்லியிருக்கா ஷோபி. என்னைக்கு அது?’ என்று யோசித்தாள்.
சட்டென்று ஞாபகம் வந்தது அவளுக்கு.
‘ஆமாமா, அன்னைக்கு ஒரு நாள், மதியம் கூட பிராக்டிகல் கிளாஸ் இருந்ததுல்லே. அப்ப கூட நான் கேட்டேனே அவள. பிராக்டிகல் கிளாஸ் போயி லீவு போடணுமான்னு. என்னால சுத்தமா முடியலேன்னு சொல்லி கிளம்பிப் போனாளே!’
நினைவு வந்ததும், மீண்டும் கடிதத்தில் பார்வையைப் பதித்தாள்.
கல்லூரியில் இருந்து விடுதிக்கு வந்து அறையை நோக்கிச் சென்றாள் ஷோபனா. அறைக் கதவைத் திறந்து கொண்டு அவள் உள்ளே நுழையும் போது, மீனா (மீனலோசனி) கட்டில் மேல் அந்தப் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
அவளை அழைக்க வாயெடுத்தவள், சட்டென்று அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருவோம் என்கிற எண்ணத்தில் மெதுவாக அடியெடுத்து அருகே சென்றாள்.
அவள் முன்னால் செல்லாமல், பின்னால் இருந்து, அவளுடைய கண்களைத் தன் கைகளால் பொத்தச் சென்றவள், அவள் இருந்த நிலையைக் கண்டு ஸ்தம்பித்து அப்படியே நின்று விட்டாள்.
கண்கள் மூடிய நிலையில் அரை மயக்கத்தில் இருந்தாள் மீனலோசனி. சிரித்துச் சிரித்து வாய்க்கு வந்ததை ஏதேதோ கூறி உளறிக் கொண்டிருந்தாள்.
அதன் பிறகு அவள் செய்தது தான் உச்சக்கட்ட திகைப்பில் ஆழ்த்தின ஷோபனாவை. அப்படியே கண்கள் பணிக்க, இடிந்து போய் நின்று விட்டாள்.
ஆம்.. அவள் கைகளில் பொட்டலம் ஒன்று இருக்க, அதில் பொடி போன்று ஏதோ இருந்தது. அதைச் சிறிது சிறிதாக எடுத்து வாயில் போட்டு, அப்படியே மூக்கிலும் போட்டு உறிஞ்சினாள்.
‘இ.. இது போதை மருந்தில்ல? அப்படின்னா மீனாவுக்கு (மீனலோசனி) போதைப் பழக்கம் இருக்கா?’
விக்கித்து விதிர்விதிர்த்துப் போய் விட்டாள் ஷோபனா.
அவளால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
‘இந்த போதைப் பழக்கம் எப்படி வந்துச்சு மீனாவுக்கு? யார் கிட்ட இருந்து வந்தது இவளுக்கு? நல்லா தானே இருந்தா?’ கண்களில் கண்ணீர் வழிய அவளருகே சென்றாள் மெல்ல.
சத்தம் கேட்டு சட்டென்று நிமிர்ந்து பார்த்த மீனா (மீனலோசனி), அங்கு கண்ணீருடன் நின்றிருந்த ஷோபனாவைக் கண்டு அதிர்ந்து விட்டாள்.
“நீ.. நீ.. எப்படி இந்த நேரத்தில? கா.. காலேஜ் என்ன அதுக்குள்ளேயா முடிஞ்சிருச்சு?”
அவளால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. நாக்கு குழறியது. முழு போதையில் இருந்தாள்.
அவளுடைய நிலையைப் பார்த்து ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கோபம் தான் வந்தது ஷோபனாவுக்கு.
“ஏய் மீனா, என்னடி இதெல்லாம்? என்ன பண்ணிக்கிட்டு இருக்கே நீ எப்படி இந்த பழக்கம் வந்துச்சுடி உனக்கு? யாரு கிட்ட இருந்து இந்த கன்றாவியக் கத்துகிட்ட? சொல்லுடி..” அவளுடைய தோளைப் பிடித்து உலுக்கினாள்.
“ஓ! தெரிஞ்சிடுச்சா உனக்கு? குட்.. குட்!” சொல்லி விட்டு “ஹா..ஹா.. ஹா..” சிரித்தாள் ஏளனமாக.
“பாவி.. பாவி.. காலேஜ் முடியப் போற நேரத்துல இதெல்லாம் தேவையாடி உனக்கு? நீ படிக்கிறதுக்கு வந்தியா வேற எதுக்கு வந்தே?”
கண்களை விரித்து கோபத்துடன் சத்தம் போட்டாள் ஷோபனா.
“ஏய்.. ச்சூ.. எதுக்கு இப்படிக் கத்துறே? என்ன நடந்துப் போச்சு இப்ப?”
“ஓ! என்ன நடந்து போச்சா?” அவள் கையிலிருந்த பொட்டலத்தைக் காட்டி “என்ன இது? நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உனக்குப் புரியுதா இல்லையாடி? இவ்வளவு அசால்டா பேசுறே?”
“ஹும்ம்.. லூசு மாதிரி பேசாதேடி. இது போட்டா எவ்வளவு நல்லா இருக்கும்னு தெரியுமா உனக்கு? வேணும்னா நீயும் போட்டுப் பாக்குறியா?”
“அடச்சீ.. இந்தக் கன்றாவிய நீ ஏண்டி போட்றேன்னு கேட்டா, நீ என்னையே போடச் சொல்றியா? இரு, இது உன் கையில இருந்தா தானே! இப்பவே இதப் பிடுங்கி எறியிறேன் பாரு!”
கூறியது மட்டும் அல்லாமல், மீனலோசனியின் கையில் இருந்த அந்தப் பொடி நிரம்பிய பொட்டலத்தை அவளுடைய கையில் இருந்து சட்டென்று பிடுங்கிக் கொண்டாள் ஷோபனா.
உடனே பதட்டம் மேலிட, வெகுண்டு எழுந்தாள் மீனலோசனி.
“ஏய் குடுடி அத. மரியாதையா குடுத்துரு”
கோபத்தில் கண்கள் சிவக்க, அவளை நோக்கி நடந்தாள்.
“நான் இப்பவே இந்த விஷயத்த ஆஃபிஸ் ரூம்ல போயி மேடம் கிட்ட சொல்றேன் இரு. என்ன தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலையப் பாத்துருப்பே நீ?”
அங்கிருந்து நகர முயன்றாள் ஷோபனா. ஆனால் அதற்குள் அவளைத் தடுத்து முன்னே வந்து நின்றாள் மீனலோசனி.
“இங்கே பாரு, இப்ப அதக் குடுக்கப் போறியா இல்லையா டி?”
“மாட்டேன்டி. குடுக்க மாட்டேன். உன்னை இந்தச் சாக்கடையில விழறதுக்கு நான் விடவே மாட்டேன். அதுக்கு உன்னை மாட்டி விட்றது தான் ஒரே வழி. அப்ப தான் நிப்பாட்டுவே நீ இந்தப் பழக்கத்த. தள்ளுடி, வழிய விடு. நான் போறேன்”
எதிரே நின்று அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனலோசனி. அவளுடைய கண்களில் தெரிந்த உக்கிரத்தைப் பார்த்து ஒரு கணம் பயந்து போனாள் ஷோபனா.
அவ்வளவு நேரம் அவளிடம் இருந்த தள்ளாட்டம் இப்போது இல்லை அவளிடம்.
“ஏய் ப்ளீஸ், வழி விடு மீனா. உன் நல்லதுக்குத் தாண்டி சொல்றேன் நான். கேளு தயவு செஞ்சு. இந்தப் பழக்கம் உன் வாழ்க்கையையே குழி தோண்டி புதைச்சிரும்டி. ஒரு ஃபிரண்டா இதுக்கு நான் அலோவ் பண்ணவே மாட்டேன்!”
“ஓ! அப்படியா?” கொலை வெறி நிறைந்த கண்களால் அவளை வெறித்தாள் மீனலோசனி.
அவளுடைய பார்வையைக் கண்டு உள்ளுக்குள் உதறல் எடுத்தது ஷோபனாவுக்கு. இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல், கொஞ்சம் அன்பாகப் பேசிப் பார்க்கலாம் என்று தோன்ற, தன் குரலில் இனிமையை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“நீ நல்ல பொண்ணு தானே மீனா? நான் சொன்னா கேப்பேல்ல? ப்ளீஸ்.. இந்தப் பழக்கம் வேணாண்டி உனக்கு. இதனால பாதிப்பு உனக்கு மட்டும் இல்லேடி உன் குடும்பத்தையே பாதிக்கும்டி இது. உன் அப்பாவும் அம்மாவும் உன் மேலே எவ்வளவு நம்பிக்கை வசிசிருப்பாங்க? அவங்கள நீ ஏமாத்தலாமாடி? நான் சொல்றதக் கேளுடி மீனா ப்ளீஸ்!”
பேசிக்கொண்டே அவளருகே சென்று அவளை அணைத்தபடி, தலையை அன்புடன் கோதி விட்டாள்.
ஆனால் அந்த ஒரு சந்தர்ப்பத்துக்காகத் தான் காத்திருந்தது போல், சட்டென அவளுடைய இரு கைகளையும் பலமாகப் பிடித்துக் கொண்டு பின்னால் கொண்டு சென்றாள் மீனலோசனி.
“ஏய் மீனா, என்னடி பண்றே? விடு என்னை” பலங்கொண்ட மட்டும் திமிறினாள் ஷோபனா.
ஆனால் அவளுடைய பலமான பிடிக்குள் சிக்கியிருந்த அவளால் எதையும் செய்ய முடியவில்லை.
“நீ தப்பு மேலே தப்பு பண்றேடி மீனா. விடு கைய, வலிக்குதுடி எனக்கு!”
அவள் பேசிக் கொண்டிருந்த போதே அவளுடைய கைகளை தன் பிடிக்குள் வைத்தவாறே, கீழே கிடந்த அந்தப் பொட்டலத்தைக் குனிந்துக் கையில் எடுத்தாள்.
இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது இவளுக்கு என்பது போல் அவ்வளவு பலத்துடன் பிடித்திருந்தாள்.
திமிறிக் கொண்டிருந்த ஷோபனாவைக் கட்டிலில் தள்ளி விட்டாள். அவளும் நிலை தடுமாறி குப்புற விழுந்தாள் கட்டிலில். கைகளை மட்டும் விடாமல் இன்னும் தன் பிடிக்குள்ளேயே வைத்திருந்தாள்.
இப்போது தான் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது ஷோபனாவுக்கு.
‘இவ என்ன இப்படி கையப் பலமா பிடிச்சிருக்காளே? என்ன பண்ணப் போறா?’ பயத்துடன் பார்த்தாள் தோழியை.
அவளோ, குப்புறக் கிடந்தவளைத் திருப்பினாள் நேராக. பின்னால் இருந்த கைகளை முன்னால் கொண்டு வந்தாள். பிடியை மட்டும் விடவே இல்லை.
திடீரென அவள் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளின் நோக்கம் என்னவென்று புரியாமல் பீதியடைந்தாள் ஷோபனா.
“ஏய் மீனா, என்னடி பண்ணிட்டு இருக்கே நீ? என்னை விடு”
ஷோபனா கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பொட்டலத்தில் இருந்த பொடியைக் கையில் எடுத்து ஷோபனாவின் மூக்கருகே கொண்டு சென்றாள்.
அப்போது தான் புரிந்தது ஷோபனாவுக்கு, அவள் என்ன செய்ய வருகிறாள் என்று. முகத்தில் பயமும் கலவரமும் சூழ்ந்து கொண்டது அவளுக்கு.
“ப்ளீஸ் மீனா, நீ செய்றது கொஞ்சம் கூட சரியில்லடி. என்னை விட்ருடி ப்ளீஸ். நான் எதுவும் யாரு கிட்டேயும் சொல்ல மாட்டேன்டி. என்னை விட்டுடு மீனா ப்ளீஸ்!”
கண்களில் கண்ணீர் வழியக் கெஞ்சினாள், அவ்வளவு நாட்கள் தோழியாக இருந்தவளிடம்.
“ஒரே ஒரு நிமிஷத்தில எப்படி டி இப்படி மாற முடிஞ்சது உன்னால? நான் உன் ஃபிரண்ட் இல்லலயாடி? எனக்கு நீ இப்படிப் பண்ணலாமாடி? விடு மீனா, நான் இங்கே இருந்து போயிட்றேன். யாரு கிட்டேயும் சொல்ல மாட்டேண்டி ப்ளீஸ்!”
அவளுடைய கண்ணீரைக் கண்டு சத்தமாகச் சிரித்தாள் மீனலோசனி.
“ஹ..ஹா..ஹா.. இது..இது.. இப்படி நீ கெஞ்சுறது கூட நல்லா இருக்கே!”
சிரித்துக் கொண்டே இருந்தவள், திடீரென சிரிப்பை நிறுத்தி விட்டு வெறித்துப் பார்த்தாள் அவளை.
“தள்ளுடி ப்ளீஸ்!”
ஷோபனா கெஞ்சக் கெஞ்ச, கையில் இருந்த பொடியை அவளுடைய மூக்கின் உள்ளே போட்டாள். பிறகு இன்னும் கையில் கொஞ்சம் எடுத்து அவளுடைய வாயருகே கொண்டு சென்று, ஷோபனா திமிறத் திமிற வாயினுள் உட்புகுத்தினாள்.
பிறகு இன்னும் சத்தமாகச் சிரித்தாள். ஷோபனாவுக்கோ, கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது. மயக்கம் வருவது போல் கண்களைச் சொருகினாள்.
பிறகு, ஆகாயத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வில் அவளும் சிரிக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவளுக்கு, தான் என்ன செய்கிறோம் என்பது புரிந்தது.
ஆனால் தனக்குள் நிகழும் எதையும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை அவளால். கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
இன்னமும் எடுத்து அவளுடைய வாயில் புகட்டி விட்டாள் மீனலோசனி. தன் எதிர்ப்பைக் கூட காட்ட முடியாமல் கிடந்தாள் பெண்ணவள் பாவம்!
ஆனால் அடுத்து அவள் செய்த காரியம் தான், மனதளவில் பொடிப்பொடியாக நொறுங்கி விட்டாள் ஷோபனா.

