
“பாப்பு உனக்கு பாஸ ஆல்ரெடி தெரியுமா???” என இருவரும் பேசிக் கொள்வதை பார்த்து நிதிஷ் பிரியாவிடம் கேட்டான்….
பிரியா அவங்க கிட்ட சொல்லட்டும் நாம என்ன நடந்ததுனு பாக்கலாம் வாங்க ….
கல்லூரி முடிந்து மாலை நான்கு மணிக்கு கல்லூரிக்கு அருகில் உள்ள ஜூஸ் கார்னரில் ஜூஸ் குடிக்க வந்து இருந்தனர்… குடித்து முடித்தவுடன் நிவேதா அங்கு இருக்கும் ஓய்வறைக்கு சென்றாள்…
அதற்குள் பிரியா வண்டியை எடுக்க சென்றாள்… ஆனால் அங்கு இருக்கும் ஆணியை கவனிக்காமல் வண்டியை அங்கு நிறுத்திவிட்டு ஜூஸ் குடிக்க சென்று உள்ளனர்… அதனால் தற்பொழுது வண்டி பஞ்சர் ஆகி இருந்தது…
என்ன செய்வது என தெரியாமல் நின்று இருந்தாள்.. அருகில் எந்த கடையும் இல்லை… அப்பொழுது தான் அதிவீரன் அந்த இடம் அவன் ஜூஸ் குடிக்க வந்தான்…
அங்கு இருக்கும் ஒரு சிலர் பிரியாவையே பார்த்து கொண்டு கேலி பேசி கொண்டு இருந்தனர்…. அதை பார்த்து அதி அந்த ஒரு சிலரை மிரட்டி அனுப்பி விட்டு பிரியாவிடம் வந்தான்…
“சிஸ்டர் எதோ பிரச்சனையா….???” என்று பிரியாவிடம் கேட்டான்..
” நீங்க யாரு… தேவையில்லாம எதுக்கு வந்து பேசுறீங்க… போலீஸ்க்கு கால் பண்ணட்டுமா..???” என்று கூறி போலீஸ்க்கு கால் செய்ய சென்றாள்… அவள் ஏற்கனவே அங்கு இருக்கும் பலர் தன்னை பார்த்து பேசி கொண்டு இருந்ததை அறிந்து தான் இருந்தாள்.. அவர்களில் ஒருவன் என நினைத்து தான் போலீசை அழைத்தாள்….
“சிஸ்டர் வெயிட் வெயிட்… நானே போலீஸ் தான்” என கூறி தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டினான்… “அவங்க உங்களையே பாத்துட்டு இருந்தாங்க…. அது தான் உங்கள கேட்க வந்தேன் எதோ ஹெல்ப் வேணுமான்னு கேட்க வந்தேன்” என்று கூறினான்…
“சாரி சார்… நீங்க அவங்க கிட்ட பேசிட்டு இருந்திங்க… அவங்கள மாதிரி நெனச்சி பேசிட்டேன் சார் சாரி” என்று கூறினாள்….
“சார்லாம் வேணாம் சிஸ்…. அண்ணா இல்லனா ப்ரோ கூப்பிடுங்க.. நீங்க மட்டும் தான் வந்திங்களா… உங்க கூட யாரும் வரலையா..???” என்று கேட்டான்…
“என் பிரண்ட் வந்து இருக்கா அண்ணா… அவ ரெஸ்ட் ரூம் போய் இருக்கா…அவ எனக்கும் மேல அண்ணா நானாச்சும் உங்கள மெரட்டுனேன்… ஆனா மேடம் அழுதுடுவாங்க ண்ணா…” என்று கூறினாள்…
“ஓகே வண்டில என்ன பிரச்சனை…???” என்று கேட்டான்…
“பஞ்சர் ப்ரோ…. ஆணி இருக்குறத பாக்காம நிறுத்திட்டேன் போல… அது தான் பஞ்சர் ஆகிடிச்சு…. பக்கத்துல கடை எதுவும் இல்ல அதுதான் என்ன பண்றது தெரியல அண்ணா…” என்று கூறினாள்
“சரி சிஸ் கவலைப்படாதீங்க…. வெயிட் என்கிட்ட பஞ்சர் டூல் இருக்கு நான் சரி பண்றேன்…” என்று கூறி சரி செய்தான்..
“அவளோ தான் சிஸ்டர் முடிச்சிட்டேன்… இங்க பக்கமா நீங்க போகணும்னா இது போதும் நீங்க எதுக்கும் கடைல போய் பாத்துக்கோங்க….”
“ஓகே ண்ணா… தேங்க்ஸ்… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ….” என்று அவனுக்கு நன்றி கூறினாள்…
“ஓகே சிஸ்டர் எனக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்.. இன்னுமா உங்க பிரண்ட் வரல…” என்று கேட்டான்…
“தெரியல ப்ரோ நில்லுங்க பாக்குறேன்… அண்ணா அவ வந்துட்டா… அங்க குழந்தைங்க இருக்காங்க.. அவங்களுக்கு ஜூஸ் வாங்கி கொடுத்து இருக்கா…” என்று கூறி அவள் இருக்கும் இடம் காட்டினாள்… நிவேதா திரும்பி இருந்ததால் அவனால் காண முடியவில்லை….
“சரி ம்மா எனக்கு டைம் ஆச்சி கிளம்புறேன்… நீங்களும் சீக்கிரம் கிளம்புங்க.. பத்திரமா போங்க….” என்று கூறி தன் ஹோட்டல் அறைக்கு சென்று விட்டான்….
பிரியா சென்று நிவேதாவை அழைத்தாள்.. “ஏஞ்சல் வா போலாம்… ஏன் இவளோ நேரம் வரல… வந்து இருந்தா அந்த அண்ணா கிட்ட பேசி இருக்கலாம்… வண்டி பஞ்சர் அந்த அண்ணா தான் சரி பண்ணாங்க… எவளோ பெரிய ஆளு தெரியுமா.. அவரு நெனச்சி இருந்தா யாரையோ கூப்பிட்டு பண்ண சொல்லி இருக்கலாம்… போலீஸ் ஆபீசர்…ஆனா நார்மலா பேசுறாரு தெரியுமா” என்று அதிவீரனின் பெருமை பேசினாள்…
“நான் அவரு உன்கிட்ட வந்த அப்பயே வந்தேன்…. நீ கோவமா பேசுனியா அண்ணாக்கு கால் பண்ணலான்னு இருந்தேன்… ஆனா உடனே நீ நார்மலா பேசுனியா ஓகேனு பக்கத்துல இருக்க இவங்களுக்கு ஜூஸ் வாங்கி தரலாம்னு திரும்பியும் உள்ள போயிட்டேன்… திரும்பி உள்ள வரும் போது அவரு பஞ்சர் சரி பண்ணிட்டு இருந்தாரு… அது தான் குழந்தைங்க கூட பேசிட்டு இருந்தேன்…” என்று கூறினாள்…
“ஓகே ஏஞ்சல்…. வா கிளம்பலாம்.. லேட் வேற ஆயிடிச்சு…”என்று கூறி வண்டியை எடுத்தாள்…
வண்டியில் போகும் போது “அண்ணிம்மா அந்த போலீஸ் அழகா இருந்தாருல.. கெத்தா மாஸா சூப்பரா இருந்தாரு….” என்று தான் அதியை சைட் அடித்ததை கூறினாள்
“அடியே ஏஞ்சல்…. இப்டி சைட் அடி…என்கிட்ட மட்டும் வாய் பேசு… ஆனா வெளிய அப்பாவி புள்ளயா இருக்க.. உன்னையும் அப்பாவினு உன் அண்ணாவும் அத்தம்மாவும் நம்புறாங்க பாரு…கேடி ஏஞ்சல் நீ…. பண்றதுலாம் சேட்டை…. ஆனா அப்பாவி மாதிரி அமைதியா இரு…..
என்று கூறி வண்டியை ஓட்டினாள்….
(இதில் வண்டியில் போன போது பேசியதை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் சொன்னாள் )
(நம்ம ஹீரோ.. ஐயோ அம்மு தான் நம்மள முதல்ல பாத்து இருக்கா…. ஆனா நாம அங்க இருந்த பொண்ண பாக்காம வந்து இருக்கேனே என்று மனதிற்குள் நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் )
“தேங்க்ஸ் பாஸ்…” என்று கூறினான் நிதிஷ்….
“இதுக்குலாம் எதுக்கு தேங்க்ஸ்…. காலேஜ் ப்ரோபஸ்சர் பாஸ்… அண்ட் இது என் வைப் பிரியதர்ஷினி… அண்ட் அது என் தங்கச்சி நிவேதா… ரெண்டு பேருமே செகண்ட் இயர் பண்றாங்க…” என்று கூறி “போய் வீட்ட பாக்கலாமா பாஸ்..” என்று கேட்டான்…
“போலாம் பாஸ்.. அண்ணா போலாமா….” என்று முரளியை பார்த்துஅதி கேட்டான்…
“போலாம் அதி..” என்று கூறி முரளி,அதி, நிதிஷ் மூவரும் வீட்டைப் பாக்க சென்றனர்…
பார்த்தவுடன் அதிக்கு அந்த வீடு பிடித்து இருந்தது.. அதை மாறனிடம் சொல்ல கால் செய்தான்…
“மாம்ஸ் எனக்கு நீங்க பாத்த வீடே பிடிச்சி இருக்கு அதுவே வாங்கிக்கலாம்…”
“ஓகே வீரா அப்டினா முடிச்சிடலாம் ரெண்டு மூணு நாளுக்குள்ள… எனக்கு வேல இருக்கு… நைட் பேசலாம்…. ஓகேவா…. நான் முரளிகிட்ட பேசிக்குறேன்….”
“ஓகே மாம்ஸ்.. நைட் பேசலாம்” என்று கூறி அதி வைத்து விட்டான்…
“என்ன அதி உன் மாமா கிட்ட பேசிட்டியா….???”
“பேசிட்டேன் ண்ணா… மாமா உங்க கிட்ட பேசிக்குறேனு சொன்னாரு….”
“ஓகே அதி…. நான் அவன் கிட்ட பேசிக்குறேன்… உனக்கு ஓகேல வீடு..”
“டபுள் ஓகேன்னா… பிடிச்சி இருக்கு… இந்த வீட்டு ஓனர் கிட்ட பேசணுமா…”
“வேணாம் அதி… அது நானும் மாறனும் பாத்துக்குறோம்…”
“மாமா வீட்டுக்கு போலாமா???” என்று நிதிஷ் முரளியிடம் கேட்டான்…
“போலாம் நிதிஷ்… வா அதி போலாம்….” என்று கூறி மூவரும் நிதிஷ் வீட்டை அடைந்தனர்….
அங்கு வீட்டில் மூவரும் உள்ளே வரும் போது நிவேதாவை சுற்றி அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர்….
“என்ன தம்பி வீடு பிடிச்சி இருக்கா…” என்று அதியிடம் கேட்டார் வசும்மா…
“பிடிச்சி இருக்கு மா…. ரெண்டு மூணு நாளுல ரெஜிஸ்டர் பண்ணிடலாம்….” என்று கூறி விட்டு “சரி ம்மா நான் கிளம்புறேன்… ஆபிஸ்ல வேல இருக்கு ம்மா..” என்று கூறினான்
“காபி ஆச்சும் சாப்பிட்டு போ ப்பா…” என்று கூறினார்
“இல்ல ம்மா கெளம்புறேன்… முரளி அண்ணா கிளம்புறேன்…. மாமா போன் பண்றேன்னு சொன்னாரு.. வரேன் அக்கா… வரேன் சிஸ்… வரேன் பாஸ்.. வரேன்ங்க… ஷாலு ம்மா டாட்டா.. டேய் அகிலு டாட்டா..” என்று கூறி கிளம்பிவிட்டான்…
ஒரு வாரம் ஓடி விட்டது அதி வீட்டை பார்த்து முடித்து…. வீட்டை பேசி முடித்து அதியின் பெயரில் ரெஜிஸ்டர் செய்து நாளை வீடு பால் காய்சுதல்….
(எல்லாரும் கேட்கலாம் போலீஸ்க்கு குவாட்டர்ஸ் தந்து இருப்பாங்களே எதுக்கு வீடுனு அதியை எப்போது பாக்க தோன்றினாலும் உடனே வந்து தங்கிவிட்டு செல்ல… குவாட்டர்ஸ் என்றால் அங்கு காவலுக்கு நிறைய பேர் இருப்பர் வீடு என்றால் பிரைவசியாக இருக்கும் என வீடு வாங்கி விட்டனர்)
மதுரையில் இருந்து அனைவரும் இன்று காலை தான் சேலம் வந்து இருந்தனர்…. அனைவரும் முரளி வீட்டில் தான் இருந்தனர்…
“அபிம்மா வந்து உட்காரு எவளோ வேல பாப்ப… வா இங்க வந்து உட்காரு” என்று கூறி தன்னுடன் அமர்த்திக் கொண்டார் சிவகாமி அம்மா…
அவளும் அவர் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்… அவருடன் அம்மணி பாட்டி… மீனாட்சி என அனைவரும் இருந்தனர் ….
அப்பொழுது அகில் வந்து “ம்மா சித்திய பாக்க இன்னி (இன்னிக்கு ) போதாம்னு (போலாம்னு) சொன்ன வா போய் பாக்கதாம் (பாக்கலாம் )” என்று அபர்ணா கையை பிடித்து இழுத்தான்…..
“அகிலு இப்ப இல்லை நைட் போலாம்…. இப்ப எல்லாரும் இங்க இருக்காங்கள.. நாம எல்லாரும் நைட் சித்திய பாக்க போலாம்… சரியா…”
“ம்மா இல்லை இப்பயே போகணும்… போதாம் (போலாம்) வா…”
“அகிலு அடம் பிடிக்க கூடாது… அப்பா வெளிய போய் இருகாங்க.. அப்பா வந்ததும் கூட்டிட்டு போக சொல்றேன் இப்ப போய் விளையாடு…”.
“ம்மா சித்தா வெளிய… சித்தா கூட டூர் டூர் போறேன்…” என்று கூறி சத்தமாக அழ ஆரம்பித்து விட்டான்….
“அகிலு அழக்கூடாது…. குட் பாய்ல அப்பா வந்ததும் போலாம்… என் தங்கம்ல அழக் கூடாது…” என்று அவனை சமாதானம் படுத்தினாள்…
அவன் அழுவதை கேட்ட அதி உள்ளே வந்தான்… அவன் வருவதை பார்த்து அகில் “சித்தா சித்தி பாக்க போதாம் ( போலாம் ) வா ” என்று கூறி அவனிடமும் அழுதான்…. அகிலை தூக்கிக் கொண்டு சமாதானம் செய்தான்….
“அகில் குட் பாய்ல அழுக கூடாது… சரி நாம உன் சித்திய பாக்க போலாம் அழுகாத குட்டி … சிரி பாக்கலாம் அப்ப தான் உன் சித்திய பாக்க கூட்டிட்டு போவேன்….”
அவன் அப்டி கூறியவுடன் அழுகையை அடக்கி சிரிக்க ஆரம்பித்தான்… ஆனால் அபர்ணா “அதுலாம் வேணாம் அதி இவன் இப்டி தான் அழுவான்.. நைட் தான் போக போறோம்ல அப்ப பாத்துக்குலாம்.. இப்ப வேணாம் “.. அவள் அப்டி சொன்னவுடன் திரும்பியும் அழுக ஆரம்பித்து விட்டான்…
“அகில் அழுக கூடாது… எந்த சித்தி சொல்லு போய் உன்ன விட்டுட்டு வரேன்….”
“சித்தா நிவே சித்தி பாக்க போதாம் (போலாம் )… “
(அட நம்ம ஆளு..அகிலு உன்னால தான் அந்த வீட்டுல திரும்பியும் என் அம்முவை பார்த்தேன்…. இப்ப பாக்க முடியலனு கவலையா இருந்தேன்.. இதோ உன்ன கூட்டிட்டு போய் விட்டுட்டு பாத்துட்டு வருவேன்…. ) என்று தனக்குள் பேசி விட்டு அபர்ணாவிடம் “இருக்கட்டும் அண்ணி அஞ்சு நிமிஷம் தானு போய் விட்டுட்டு வந்துறேன்…. வா அகிலு போலாம்” என கூறி அவனை தூக்கினான்…. அகில் அபர்ணாவை பார்த்து கேலி செய்து விட்டு அதியுடன் நிவேதாவை பார்க்க சென்றான்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



ஓஹோ நிவி யும் அதியை பார்த்து சைட் அடிச்சிருக்கா … ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு … அடுத்து என்ன நடக்க போகுதோ