Loading

மூன்று வருடங்கள் ஓடியிருந்தது…

 அனாமிகா கேன்சரின் காரணமாக இரண்டு வருடம் முன் இறந்திருந்தாள்…

அதே போல் நிவேதாவின் அம்மா சாந்தாவும் உடல்நிலை சரியில்லாமல் போய் சென்ற வருடம் தான் இறந்திருந்தார்…. வசும்மா யாரையும் வரவேண்டாம் என சொல்லிவிட்டு அவரும் நிதிஷும் மட்டும் சென்று அவருக்கு செய்யவேண்டியதை செய்து மின்மயானத்தில் எரித்திருந்தனர்…..

அதி சபரிமலைக்கு சென்று இருந்தான்.. அதனால் நிவேதா போகவில்லை… அதி இருந்தாலும் அவளை போகவிட்டிருக்க மாட்டான்….

இந்த வருட இடைவெளியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து இருந்தது… அதன்பிறகான நாட்கள் அனைவருக்கும் நன்மையையே தந்து இருந்தது…

முரளி தன்னுடைய பணியில் ப்ரோமோஷன் பெற்றிருந்தான்… ஆனால் அவனின் பெற்றோர்கள் ஒருவர்பின் ஒருவராக ஆறுமாத இடைவெளியில் சென்றவருடம்தான் இயற்கை எய்திருந்தனர்….

அதேபோல் அரசுவும் ப்ரோமோஷன் பெற்று திண்டுக்கலில் எஸ்பியாக உள்ளான்… தீப்தி அவளின் தந்தைபோல் புகழ்பெற்ற வக்கீலாக திகழ்கிறாள்…

நிதிஷ் மற்றும் பிரியா இருவரும் தங்கள் கல்லூரியை இன்னும் தரமுயர்த்தி இந்தியாவில் புகழ்பெற்ற கல்லூரியாக மாற்றியிருந்தனர்

மாறன் முழு விவசாயியாகவே மாறியிருந்தான்…. இயற்கை முறையில் விவசாயம் செய்கிறான்… நிவேதாவிற்கு எதோ உதவி தேவைப்பட்டால் அவளுக்கு உதவுவான்…

நிவேதா பிரியாவின் கல்லூரியின் தோழர்கள் கோபால் வினோதினி இருவரும் தற்போது அமெரிக்காவில் உள்ளனர்அவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்

அதி மதுரையிலேயே தான் எஸ்பியாக உள்ளான்… நிவேதா இந்த மூன்று ஆண்டுகளில் இன்னும் வளர்ந்திருந்தாள்…
அவளுக்கு கீழ் ஐந்து பேரை வேலைக்கு வைத்து திறம்பட தன் வேலையை செய்து கொண்டிருக்கிறாள்…..

அந்த வீட்டில் இன்றியமையாதவளாக மாறியிருந்தாள்… அந்த வீட்டில் எப்போதும் “நிவிம்மா, கண்ணம்மா, பாப்பா, நிவி, மீ, அம்மு” என்று அவளின் பெயர்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் …. அந்த குரல்களுக்கு நடுவில் “ம்மு” என்று மழலை குரல் வரும்… அந்த குரலை கேட்டு அதி டென்சனாகி விடுவான்….

அந்த குரலுக்கு சொந்தக்காரன் வேறு யாருமில்லை… நிவேதா அதியின் செல்லமகன் ஆர்யன் தான்… வேண்டுமென்றே அதி அழைப்பதை போல் “அம்மு” என்று தான் அழைப்பான்…

அப்பாவிற்கும் மகனிற்கும் இதனால் தான் போர் மூளும்… நிவேதாவிற்கு இவர்களை சமாளிப்பதே பெரும் வேலையாக இருக்கும்… அக்ஷரா எப்போதும் அமைதிதான்…

தற்போதுகூட மதுரையில் அதிவீரபாண்டியனின் வீடு மின்விளக்குகளால் அலங்கரித்து கம்பீரமாக நின்று இருந்தது…

அனைவரும் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்…. கருடனுக்கும் சிம்பாவிற்கு கூட புத்தாடை…

வீட்டின் மூத்தமருமகளாக நிவேதா அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள்… அவளுடன் மற்ற பெண்களும் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்…

அனைவரும் கிளம்பி தீப்தியின் வீட்டிற்கு சென்றனர்… அஜய் அவனுடன் நிதிஷ் மற்றும் பிரியா.. அவள் கையில் மூன்று மாத வாண்டு யாழினி அழகாக தூங்கிக்கொண்டு இருந்தாள்…

தற்போது அனைவரும் தீப்தியின் வீட்டிற்கு செல்ல காரணம்… நாளை அஜய் ஆராதனாவின் கல்யாணம்… இன்று பெண்ணழைப்பு… அஜய் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தங்களுடைய குடும்ப தொழிலை பார்த்து கொள்கிறான்…

அதேபோல் நீச்சல் பயிற்சியும் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறான்… சென்ற வருடம் நடந்த ஒலிம்பிக்ஸில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்திருந்தான்…

ஆராதனவும் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு பொடிக் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறாள்..

அஜய் ஆராதனா இருவருக்கும் அரேஞ் மேரேஜ் தான்… வீட்டில் இருவருக்கும் கல்யாண ஏற்பாடு செய்தவுடன் தற்போது காதல் வானில் சிறகடித்து கொண்டிருக்கின்றனர்…

தீப்தியின் வீட்டிற்கு சென்ற அனைவரும் ஆராதனாவை நலங்கு வைத்து வீட்டிற்கு அழைத்துவந்தனர்… மாலை நல்ல நேரத்தில் அஜய் ஆராதனா இருவரையும் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்…

அடுத்த நாள் காலை நன்றாக விடிந்தது… நல்ல நேரத்தில் அஜய் தன்னவள் கழுத்தில் மங்க நானை கட்டி மிசஸ் அஜய் பாண்டியனாக மாற்றியிருந்தான்…
அவன் காதில் ஆராதனா ” வாழ்த்துக்கள் மிஸ்டர் ஆராதனா” என்று கூறினாள்….

அவனும் சிரித்து கொண்டே “நன்றிகள் மிசஸ் அஜய் பாண்டியன்” என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு கூறினான்…

அதன் பிறகு சடங்குகள் முடித்து மணமக்கள் வீட்டிற்கு சென்றனர்… அங்கு ஆராதனா பூஜையறையில் விளக்கேற்றி வணங்கினாள்….

இரவு சடங்கிற்காக அஜய் முதலில் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அறைக்கு சென்றான்… பின் ஆராதனா அறைக்கு சென்றாள்…

நமக்கு அங்க வேல இல்ல வாங்க போலாம்…..

அடுத்த நாள் காலை நன்றாக விடிந்தது…. அஜய் ஆராதனா காலை எழுந்து குளித்துவிட்டு மதுரை மீனாட்சியை தரிசிக்க சென்று வந்தனர்….

காலை உணவை முடித்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு அனைவரும் மண்டபம் சென்றனர்….

மதியம் நான்கு மணியிலிருந்து விருந்தினர்கள் ஆரம்பித்து
இருந்தனர்… வந்தவர்களை வரவேற்று உபசரித்து அவர்களை சாப்பிட அனுப்பி வைத்தனர்…

இரவு ஒன்பது மணிக்கு தான் விருந்தினர் வருகை குறைந்தது…. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டிருந்தனர்…

நடுவில் தாத்தா அப்பத்தா மற்றும் வசும்மா நடுவில் உள்ள சோபாவில் உட்கார்ந்துந்திருக்க அவர்கள் பக்கத்தில் ஜோடியாக சுந்தரப்பா சிவாம்மா ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்தனர்…

வசும்மா கையில் நிதிஷ் பிரியாவின் இரண்டாவது குழந்தை யாழினி பாந்தமாக அமர்ந்திருந்தாள்….  யாழினி எவ்விடமோ ஆர்யன் பாண்டியன் அவ்விடம்தான்….

இன்னொரு பக்கம் மணிகண்டன் மற்றும் அபிம்மா உட்கார்ந்திருந்தனர்….. தீப்தியின் பெற்றோர் ஆறுசாமி மாதவி இன்னொரு பக்கம் உட்கார்ந்து இருந்தனர்…

அவர்களை சுற்றி முரளி அபர்ணா ஜோடி, மாறன் மீனாட்சி ஜோடி, அரசு தீப்தியின் ஜோடி, நிதிஷ் பிரியா ஜோடி , அஜய் ஆரா ஜோடி நின்று இருக்க நாயகனும் நாயகியும் நடுநாயாகமாக நின்றிருந்தனர்….

எப்போதும் போல் அதியின் முகத்தில் கம்பீரம் நிறைந்திருக்க அவன் பக்கத்தில் அவனின் அம்மு இன்னுமும் குழந்தைதனம் மாறாமல் நின்றிருந்தாள்…

நடுவில் அகரன் அவன் பக்கத்தில் அக்ஷரா முட்டிப்போடு அமர்ந்திருந்தாள்…. நிலவன் அருகில் அபிநயா (அரசு தீப்தியின் மகள்) அமர்ந்திருந்தாள்….

அடுத்து அகில் அவன் அருகில் தாரா அமர்ந்திருந்தாள்… இவர்களுக்கு இருபுறத்தில் ஒருபுறம் விஷாலினி பூப்பெய்து பருவமங்கையாக முட்டிப்போட்டு அமர்ந்திருக்க அவளின் பார்வையோ இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருக்கும் முரளியின் அக்கா மகன் கண்ணனின்மேல் ஏக்கமாக பதிந்து மீண்டது…. அவனோ இளங்குமரனாக முறுக்கு மீசையுடன் அவள் பார்வை உணர்ந்தும் கண்டும்காணாமல் அமர்ந்திருந்தான்….

போட்டோகிராபர்  மொத்த குடும்பத்தையும் பார்த்து வியப்படைந்து “ரெடி நான் த்ரீ சொல்லி முடிச்சதும் பாய் சொல்லுங்க ஒன் டூ த்ரீ” என்று கூறிமுடித்துவுடன் எல்லாரும் பாய் கூறினர்….. போட்டோக்கிராபர் அதை போட்டோ எடுக்க வீடியோகிராபர் அழகாக வீடியோ எடுத்தார்…

“ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
இந்த அன்பை போல வேறேது
வார்த்தைகள் எல்லாம் போதாது
எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும்
பறவை சொந்த கூட்டை மறந்திடுமா!!”

அனைவரும் போட்டோ எடுத்தவுடன் வீட்டிற்கு கிளம்பினர்… அக்ஷரா மற்றும் ஆர்யனை சிவம்மாவுடன் காரில் அனுப்பிவிட்டு அதியும் நிவேதாவும் பைக்கில் தோப்பு வீட்டிற்கு சென்றனர்….

இருவருக்கும் அந்த வீடு எப்போதும் ஸ்பெஷல் தான்… முப்பதைந்து வயதில் அதி ஒருசில வெள்ளை முடிகளுடன் அதே காதல் பார்வையுடன் பைக் ஓட்ட பின்னால் அதே காதல் பார்வையுடன் அவனின் இடுப்பை சுற்றி கைப்போட்டு அணைத்தபடி அமர்ந்திருந்தாள்…

இருவரும் தோப்புவீடு அடைந்து குளித்துவிட்டு அங்கிற்கும் மாற்றுடை அணிந்து ரூமில் இருக்கும் ஊஞ்சலில் அதி அமர்ந்திருக்க அவன் மடிமேல் நிவேதா அமர்ந்திருந்தாள்…

“பார்த்தியா அம்மு உன் பையனை உன்கூட என்னை இருக்கவே விட மாட்டிங்குறான்… கிட்ட வந்தா அப்படி அழுவுறான்… நீயும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ற…. இப்ப கூட பார்த்தல எவ்வளவு சேட்டை பண்றான்” என்று ஆர்யனை நிவேதாவிடம் திட்டிகொண்டிருந்தான்….

“பாவா விடுங்க அவன் சின்ன பையன் அப்படித்தான் இருப்பான்… சரியாகிடும்” என்று கூறினாள்….

சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்… அதியே அவளிடம் “அம்மு இந்த குட்டி மூளைக்குள்ள என்ன போட்டு யோசிக்குற….” என்று கேட்டான் …

“இல்ல பாவா நீங்க மட்டும் என் லைப்குள்ள வரலைனா என்ன ஆகியிருக்கும்…. உங்க காதல்… நம்மவீடு எல்லாரையும் மிஸ் பண்ணியிருப்பேன்” என்று கூறினாள்..

“நீ என்னோட தேவதை டா அம்மு…. நீ என் லைப்குள்ள வர நான்தான் குடுத்து வெச்சியிருக்கணும்…. என்னை இப்படி யாராலயும் காதலிக்கவும் முடியாது.. புரிஞ்சிக்கவும் முடியாது… நீ எனக்கு கிடைச்ச தேவதை அம்மு நீ ” என்று கூறி அவளின் உச்சியில் முத்தமிட்டான்….

“நான் தேவதையா இருந்தாலும் அந்த தேவதையை காக்க வந்த தேவதூதன் பாவா நீங்க… என்னோட கஷ்டத்தை நீக்க வந்த தூதன் நீங்க” என்று கூறினாள்…

“நீ என்னோட தேவதை நான் உன்னோட தேவதூதன்… ஓகேவா அம்மு” என்று கேட்டான்…

அவளோ “கரெக்ட் பாவா” என்று கூறி அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்… இருவரும் ஜன்னலில் தெரியும் பௌர்ணமி நிலாவின் வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தனார்…

அந்த நிலாவின் வெளிச்சத்தைப்போல் அனைவரின் வாழ்வும் வெளிச்சம் பரவட்டும்…

நாம் இனிதே தேவதையிடமிருந்தும் தேவதூதனிடமிருந்தும் விடைபெறுவோம்…..

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்