Loading

நிவேதா படியில் இறங்கிவரும் போது தலைச்சுற்றுவதுப் போல இருந்தது… அதனால் அங்கிற்கும் படியிலேயே உட்கார பார்த்தாள்… ஆனால் அதற்குள் மயங்கி கீழே விழப்பார்த்தாள்…

அதை பார்த்து தான் அதி “அம்மு” என கத்திக்கொண்டு ஓடினான்….ஆனால் அதற்குள் மேலிருந்து கீழே வர வெளியே வந்த அஜய் “அண்ணிம்மா” எனக் கத்திக்கொண்டே அவளை கீழே விழாமல் பிடித்துக்கொண்டான்…

அதியின் சத்தத்தில் வெளியே வந்த அனைவரும் அவள் கீழே விழப்போவதை பார்தது பதறிவிட்டனர்…..

ஆனால் அஜய் பிடித்ததும் தான் நிம்மதியடைந்தனர்… அதி அதற்குள் தாவியோடி வந்திருந்தான்….

அவளைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான்… சிவாம்மா அவளை சோபாவில் படுக்க வைக்ககூறினார்…. அஜய் தண்ணீர் எடுத்துவந்து சிவாம்மாவிடம் கொடுத்தான்…

அவர் அவளை மடிமீது வைத்துக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெளித்தார்… மெதுமெதுவாக கண்ணை திறந்தாள்… அப்போதுதான் அனைவருக்கும் நிம்மதியடைந்தனர்…

சிவாம்மா நிவேதாவை தூக்கிக்கொண்டு அறைக்கு செல்லுமாறு கூறினார்…. அவனும் அவளைத் தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றான்…
அறைக்கு சென்றவுடன் அவளை கட்டிலில் உட்கார வைதான்..

“அம்மு உனக்கு ஏன் மயக்கம் வந்துச்சு… இன்னும் அப்டி தான் இருக்கா வா ஹாஸ்பிடல் போலாம்” என்று அழைத்தான்…

“பாவா அமைதியாகுங்க.. எனக்கு ஒண்ணுமில்ல…. பர்ஸ்ட்  போய் குளிங்க” என்று கூறினாள்…

அவனும் குளிக்க சென்றான்.. அங்கு இருவர் சோப்பை தவிர்த்து இன்னொரு குட்டி சோப் இருந்தது.. ஆச்சர்யத்துடன் வெளியே வந்து துணியை எடுக்க கப்போர்டு திறந்தான்…

அங்கு அவர்கள் துணிகளை தவிர்த்து குழந்தைகள் போடக்கூடிய துணிகள் இருந்தது…

அதைபார்த்து “அம்மு” என கூவிக்கொண்டு   நிவேதாவை அனைத்துக்கொண்டான்… “பாவா மெதுவா” என்று கூறி தலையைக் கோதிக்கொடுத்தாள்…

“எப்போ அம்மு கன்பார்ம் பண்ண??”… என்று கேட்டான்….

“இன்னிக்கு காலைல தான் நேத்தே டவுட் அதுதான் கிட், குட்டி சோப்பு, டிரஸ் வாங்கிட்டு வந்தேன்” என்று கூறினாள்…

“வீட்டுல யாருக்கும் தெரியாதா??” என்று கேட்டான்.. அவள் இல்லை என தலையாட்டினான்… “வா போய் சொல்லலாம்” என்று கூறி அவளை மீண்டும் தூக்கிகொண்டான்…

“அச்சோ பாவா இறக்கிவிடுங்க நான் நடந்தே வரேன்” என்று கூறினாள்…
அவன் கேட்கவே இல்லை..  கீழே சென்று அனைவரிடமும் விஷயத்தைக் கூறினான்…

அனைவரும் அவளை கொண்டாடி தீர்த்தனர்… அனைவரும் விஷயம் கேள்விப்பட்டு மதுரை வந்துவிட்டனர்…

சிறியவர்கள் அனைவரும் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. அஜய் அப்போது விளையாடலாம் என்று கூறினான்…

ட்ருத் ஆர் டேர் ஆடலாம்  என்று முடிவு எடுத்தனர்… அனைவரும் உட்கார்ந்து ஆட ஆரம்பித்தனர்.. பாட்டிலை சுற்றிவிட்டனர்… முதலில் அரசுவுக்கு தான் வந்தது…

அவன் டேர் எனக்கூறினான்.. அவனுக்கு சீட்டு எடுத்து கொடுத்தனர்… அதில் தங்களுடைய துணைக்கு ப்ரொபோஸ் செய்யவேண்டும் என்று இருந்தது… அவனும் அழகாக ப்ரொபோஸ் செய்தான்….

அடுத்து நிவேதாவிற்கு வந்தது… அவளும் டேர் சொன்னாள்… அவளுக்கு அவளுடைய துணைக்கு வைத்த ரிங்டோனை பாட வேண்டும் என்று இருந்தது… அவள் வெட்கப்பட்டுக்கொண்டே

“வாயா என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறைஞ்சி போகட்டும்
வாயா என் வீரா
கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே
மலையை போலேவே…ஏ…”

என்ற பாட்டைப் பாடினாள்… அதி பார்த்த பார்வையில் அவளின் கன்னம் தானாக சிவந்துவிட்டது …. அடுத்து மற்றவர்களுக்கு ட்ருத் டேர் மாறி மாறி கூறினர்….

அதிக்கு வந்து நின்றது…. ட்ருத் எனக் கூறினான்… நிவேதா தான் கேள்வி கேட்பதாக கூறி அவனிடம் கேட்டாள்…

“பாவா அனாமிகா என்ன ஆனா…” என்று கேட்டாள்…. மற்றவர்களுக்கும் தெரியாது… ஆண்களுக்கு மட்டும் தெரியும் அவளுக்கு என்ன ஆனது என்று….

அவனுக்கு தெரியும் அவனின் அம்மு இது தான் கேட்பாள் என… அவனும் கூற தொடங்கினான்… ஏன்னென்றால் அவள் பல தடவை கேட்டுவிட்டாள் ஆனால் அவன் சொல்லவே இல்லைஅதனால் தான் தற்போது அனைவரும் இருக்கும் போது  கேட்கிறாள்…. 

வாங்க நாமலும் சார்டடா பாத்துட்டு வரலாம் …..

அன்று அனாமிகாவின் அப்பா ஜெயிலில் இருந்து தப்பித்து சென்றதிலிருந்து தன்னுடைய அப்பா எப்படியாவது தன்னை வெளியில் எடுத்துவிடுவார் என நம்பிக்கையில் இருந்தாள்…

ஆனால் அவர் வெளியே சென்று ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பயம் அதிகரித்தது… அவளின் பய முகத்தைப் பார்த்து அதி சந்தோசமடைந்தான்…

அவளை தனியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…. சிறையில் அவளை வெளியே தெரியாதவாறு அவளை கொடுமை செய்தனர்… வெளியில் நடந்த எந்த விஷயமும் அவளுக்கு தெரியாது….

இன்னும் ஒருவாரம் சென்றபின் தான் அவளுக்கு அவளுடைய பெற்றோர்கள் இறந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.. அந்த செய்தியைக் கேட்டு எந்த வினையும் ஆற்றவில்லை… ஆனால் ஒரே இடத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்..

யார் என்ன பேசினாலும் அடித்தாலும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் உணர்ச்சியற்ற பாவத்துடன் இருந்தாள்…

ஒரு மாதம் கடந்திருந்தது.. ஒருநாள் ரத்த வாந்தி எடுத்து மயங்கிவிட்டாள்… அவளை அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அனைத்து பரிசோதனையும் செய்து அவளுக்கு ரத்த புற்றுநோய் உள்ளது… இரண்டு மூன்று வருடமாக இருந்திருக்க வேண்டும்…

ஆனால் இவர்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டு இருக்கிறார்கள்… தற்போது கடைசி கட்டத்திற்கு முன்னாள் உள்ள கட்டத்தில் உள்ளார்.. முடிந்த அளவு முயற்சி செய்கிறோம்… மருத்துவமனையிலேயே இருக்கட்டும்.. என்று மருத்துவர் கூறினார்..

அவரிடம் அவளுடன் வந்த போலீஸ் அதிகாரி எதனால் வந்திருக்கும் என்று கேட்டார்…

அவரும் “நாங்க பிளட் செக் பண்ணோம் மேடம்… அழகா இருக்கனும்.. ஸ்லிம்மா இருக்கனும் அப்டிங்கரதுக்காக கண்ட கண்ட டேப்லெட் மருந்து எல்லாம் எடுத்து இருக்காங்க…

ரொம்ப வருஷமா எடுத்து இருக்காங்க போல… அதுனால தான் இவங்களுக்கு முக்கியமா கேன்சர் வந்து இருக்கு” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..

அதன்பிறகு தான் அந்த காவல் அதிகாரி அதி மற்றும் அரசுக்கு சொல்லினர்.. அவர்கள் அங்கேயே சிகிச்சை அளிக்கட்டும் என்று கூறிவிட்டனர்…

அதி அரசுவிடம் “நானே எதோ பெருசா பண்ணனும்னு இருந்தேன்.. ஆனா கடவுளே தண்டனை கொடுத்தாரு.. யாருக்கும் இது தெரியவேணாம் சூர்யா” என்று கூறிவிட்டான்…

ஆனாலும் மாறன் கேட்டுக்கொண்டதனால் முரளி மாறன் நிதிஷ் மூவருக்கு மட்டும் தெரிவித்து விட்டனர்…

இன்னமும் சிகிச்சையில் தான் உள்ளாள்… தற்போது கடைசி கட்டத்தில் உள்ளாள்.. எப்போது வேண்டுமானாலும் உயிர் போகும் என்று டாக்டர் கூறி உள்ளார்….

நடந்த விஷயத்தை அனைத்தையும் அதி கூறி முடித்தான்… அனைவரும் நினைத்தனர்… கடவுள் அவளுக்கு தகுந்த தண்டனை கொடுத்து விட்டது என…

ஆராதனா(தீப்தியின் தங்கை) தான் அனைவரையும் மீண்டும் விளையாட்டினுள் கொண்டு வந்தாள்… அனைவரும் சிறிது நேரம் விளையாடிவிட்டு கீழே சென்றனர்… அன்று மாலையே அனைவரும் அவரவர் இடத்திற்க்கு சென்றுவிட்டனர்..

இரவு தூங்கும்போது நிவேதாவின் மடியில் சாய்ந்து இருந்தான்.. அவளும் அமைதியாக அவனுக்கு தலையை கோதிக் கொண்டிருந்தாள்..

“ஏன் அம்மு அமைதியா இருக்க….” என்று கேட்டான்..

“ஒன்னுமில்ல பாவா ஏதோ ஒரு யோசனை” என்று கூறினாள்…

“ஓகே அம்மு நாளைக்கு அப்பாய்ன்ட்மெண்ட் டாக்டர் கிட்ட வாங்கியிருக்கேன்… நான் நீ அம்மா மூனு பேரும் ஸ்கேனிங் போயிட்டு வரலாம் இப்போ தூங்கு” என்று அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்..

அடுத்த நாள் ஸ்கேனிங் செய்ய அதி நிவேதா சிவாம்மா மூவரும் மருத்துவமனை சென்றனர்… டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு ஸ்கேனிங் அறைக்கு அழைத்து சென்றார்..

அவளை ஸ்கேனிங் செய்து முடித்துவிட்டு இவர்களிடம் “கங்கிராட்ஸ் மிஸ்டர் அன்ட் மிஸ்டர் அதி… உங்களுக்கு ட்வின்ஸ்… ரொம்ப கவனமா இருங்க… நான் குடுக்குற டேப்ளெட்ஸ் ரெகுலரா எடுத்துக்கோங்க” என்று கூறி அனுப்பி வைத்தார்…

வெளியில் வந்தவுடன் அவளை சிவாம்மா உச்சிமுகர்ந்து வாழ்த்து கூறினார்… அதன்பிறகு வீட்டில் அனைவருக்கும் விசயம் கூறப்பட்டது… அனைவரும் இருவருக்கும் வாழ்த்து கூறினர்…

ரூமில் அதி நிவேதாவின் முன் மண்டியிட்டு அவளின் வயிறை தடவிக்கொண்டு இருந்தான்… “அம்மு உன்னால டூ பேபீஸ் முடியுமா… நீயே எனக்கு இன்னும் பேபி தான் ஆனா உனக்கு டூ பேபி வரப்போகுது அம்மு…” என்று கேட்டான்..

“நம்ம பேபீஸ் பாவா முடியுமா கேட்குறீங்க… கண்டிப்பா முடியும் பாவா. இனிமே நான் ஒன்னும் பேபி இல்ல டூ பேபீஸ்க்கு அம்மாவாக்கும் நானு” என்று கூறினாள்…

“உனக்கு எவளோ வயசு ஆனாலும் நீ எனக்கு பேபி தான் அம்மு” என்று கூறினான்…

அதன்பிறகு நாட்கள் வேகமாக பறந்தது… குழந்தை வந்ததினால் நிவேதா தன் வேலையை விடவில்லை… எப்போதும் ஸ்கூட்டியில் செல்பவள் தற்போது காரில் சென்று வருகிறாள் …

அவளை எப்போதும் குழந்தையாக பார்ப்பவர்கள் இன்னும் அவளை உள்ளங்கையில் வைத்து தங்குகின்றனர்…

அதி சொல்லவே தேவையில்லை… அவள் காலையில் மார்னிங் சிக்னஸில் வாடும் போதெல்லாம் அப்படி பார்த்து கொண்டான்..

ப்ரெக்னன்டாக இருப்பதால் அடிக்கடி அவளுக்கு மூட் ஸ்விங் ஆகியது… அதில் அதி தான் மாட்டிக்கொள்வான்… அவளை அழகாக கையாண்டான்…

ஒன்பதாம் மாதத்தில் அவளுக்கு வளைகாப்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டது… ஆனால் வளைகாப்பு முடிந்து அவள் சேலம் செல்லவில்லை… அதி விடவில்லை… மதுரையில் தான் இருக்கவேண்டும் எனக்கூறிவிட்டான்..

அதனால் நிவேதாவை மாறன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்… வசும்மா அங்கு தங்கியிருந்து நிவேதாவை பார்த்துக்கொண்டார்…

ஒன்பதாம் மாத இறுதியில் அவளுக்கு பிரசவ வழி ஏற்பட்டது… மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அதி அவள் வழியில் கத்துவதைப் பார்த்து கலங்கிவிட்டான்…

மனதிலேயே தன் மகவுகளிடம் பேசினான்… “டேய் பட்டூஸ் அம்மா பாவம்டா.. அம்மா ரொம்ப அழுறா… அம்மாவுக்கு கஷ்டம் தராம வெளிய வாங்க தங்கங்களா” என்று பேசினான்..

தன் தகப்பன் பேசியது கேட்டதோ என்னவோ அவர்களின் மகவுகள் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐந்து நிமிட இடைவெளியில் தன் அம்மாவை கஷ்டப்படுத்தாமல் வெளியே வந்துவிட்டனர்..

தாதிபெண் இருவர் இரு குழந்தைகளை கொண்டுவந்து சிவம்மா வசும்மாவிடம் கொடுத்தனர்… “பர்ஸ்ட் இவரு பையன்.. அடுத்து இவங்க பொண்ணு.. ரெண்டு பேரும் அஞ்சு நிமிஷ வித்தியாசத்துல பிறந்து இருக்காங்க…. இப்ப நிவேதா நல்லா இருக்காங்க” என்று கூறினார்…

அனைவரும் கொஞ்சி மகிழ்ந்தனர்… சேலமில் இருந்து அனைவரும் வந்து கொண்டிருந்தனர்… சிறிதுநேரத்தில் குழந்தைகளை உள்ளே அழைத்து சென்றுவிட்டனர்…

கொஞ்ச நேரம் கழித்து யாரோ ஒருவரை மட்டும் உள்ளே செல்ல கூறினர்… அதி உள்ளே சென்றான்… நிவேதா அவனைப் பார்த்து சிரித்தாள்… அவனும் சிரிக்க முயன்றான்… ஆனால் அவனின் கண்கள் அவளுக்கு காட்டிக்கொடுத்துவிட்டது அவன் அழுதுள்ளான் என்பதை…

அவனை நோக்கி இருக்கையையும் நீட்டினான்… ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டான்… அவளும் அவனின் முதுகை தடவிக் கொடுத்து சமாதானம் படுத்தினாள்

சிறிது நேரம் கழித்து அனைவரும் வந்து பார்த்து பேசிவிட்டு சென்றனர்…அடுத்த மூன்று மணி நேரத்தில் சேலமில் இருந்து அனைவரும் வந்துவிட்டனர்… அனைவரும் குழந்தைகளை கொஞ்சினர்… பெரியவர்கள் அனைவரும் வெளியில் இருக்க உள்ளே இளைய பட்டாளம் மட்டும் இருந்தது…

பெற்றவர்கள் தவிர்த்து யார் தூக்கினாலும் அழும் குழந்தைகள்… தங்களுடைய தாய் மாமன்கள்(மாமனார்கள்) தூக்கும் போது அமைதியாக இருந்தனர்…

பையன் நிதிஷிடம் அமைதியாக இருந்தால் பெண்குழந்தையோ மாறனிடம் அமைதியாக இருந்தது… மற்றவர்கள் தூக்கினால் அப்படி அழுதனர் ஆனால் மீண்டும் அவர்களிடம் சென்றால் அமைதியாகி இருந்தனர்..

ஒரு மாதம் கழித்து இரு குழந்தைகளுக்கும் பேர் வைக்கும் விழா ஏற்பாடு செய்தனர்.. தாய்மாமன்கள் தங்கள் மருமகன் மருமகளுக்கு சீரை நிரப்பிவிட்டனர்… குழந்தைகளுக்கு “ஆர்யன் பாண்டியன்,  அக்ஷரா பாண்டியன்” என பெயர் சூட்டினர்…

 

இருவரும் அனைவருக்கும் முடிசூடா இளவரசன் இளவரசியாக திகழ்ந்தனர்…

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்