Loading

“அக்கா இது முரளி அண்ணா வீடு தானு….”

“ஆமா நீ யாரு தம்பி…”

“அக்கா நான் மாறவர்மன் மச்சான்…”

“ஓ அது நீ தான தம்பி… உள்ள வா… சொல்லிட்டு தான் போனாரு… இன்னிக்கு கொஞ்சம் லேட்டா ஆஹ் தான் வருவாரு… நீ எப்ப வந்த தம்பி….”

“நான் வந்து ஒரு மணிநேரம் ஆகுது க்கா…”

“அச்சோ சாரி தம்பி…. இங்க நடந்த பிரச்சனையில உன்ன கவனிக்கல…”

“பரவால்ல க்கா….”

“சரி தம்பி… சாப்பிட வா தம்பி… சாப்பாடு எல்லாம் ரெடியா தான் இருக்கு…..”

“இல்ல க்கா வர அப்பயே சாப்டுட்டு தான் வந்தேன்…”

அப்போது வீட்டுக்குள் வந்த முரளி… “வா அதி எப்படி இருக்க…மாறன் எப்படி இருக்கான்…”

“நல்லா இருக்கேன் அண்ணா… ண்ணா வீடு எப்போ போய் பாக்கலாம்….”

“ஏற்பாடு பணியாச்சு ப்பா… நாளைக்கு மார்னிங் உனக்கு ஓகேன்னா அந்த வீட முடிச்சிடலாம்…. இன்னிக்கி இங்கேயே தங்கிக்கோ அதி…”

“இல்ல ண்ணா.. ஆல்ரெடி ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிட்டு என் திங்ஸ் எல்லாம் வெச்சிட்டு தான் வந்தேன்…”

“ஏன் தம்பி இங்க ஸ்டே பண்ணிக்கலாம்ல… மாறன் ஸ்டே பண்ண வேண்டாம்னு சொன்னானா….”

“ஐயோ அண்ணா மாமா அப்படி எல்லாம் சொல்லல…. அவரு சொன்னாரு நான் தான் புக் பண்ணிட்டேன்…. ண்ணா காலைல எத்தனை மணிக்கு வரட்டும்…”

“காலைல ஒரு எட்டு மணிக்கே இங்க வீட்டுக்கு வா ப்பா.. மார்னிங் பிரேக்பாஸ்ட் இங்கயே சாப்டுட்டு.. அங்க கிளம்பலாம்..”

“இல்ல ண்ணா மார்னிங் அங்கேயே முடிச்சிட்டு வரேனே..”

“என்ன தம்பி நீ.. ஏன் பெஸ்ட் பிரெண்டோட மச்சான் நீ… வெளிய சாப்புடுறன்னு சொல்ற.. நாளைக்கு இங்க தா உனக்கு சாப்பாடு… அங்க நீ வீடு ஷிப்ட் பண்ற வரைக்கும்.. இங்க தான் சாப்பாடு…”

“ம்ம் சரி ண்ணா.. நான் ஹோட்டல் கிளம்புறேன்…” என்று கூறி ஹோட்டல் கிளம்பிவிட்டான்…

அவன் கிளம்பியவுடன்… “என்னங்க…” என்று நிவேதா இங்கு வந்தது… உடம்பு முடியாமல் இருந்தது… அவங்க அம்மா அவளை திட்டியது ..  வசும்மா  அவளை  வீட்டுக்கு அழைத்து சென்றது… என அனைத்து விசயத்தையும் அபர்ணா முரளியிடம் கூறி முடித்தாள்

இதெல்லாம் கேட்ட முரளி… “விடு அபு… இனிமே ஆச்சும் அந்த பொண்ணு நிம்மதியா இருக்கட்டும்… சின்ன வயசுல இருந்து என்ன பாடுபடுத்துனாங்ளோ நாம இங்க வந்து 5 வருஷம் இருக்குமா.. அந்த 5 வருசத்துல  எத்தனை கஷ்டம் அந்த பொண்ணுக்கு…. எத்தனை நாள் சாப்பாடு போடாம இருந்து இருக்காங்க… இனிமே அந்த பொண்ணு நிம்மதியா இருக்கட்டும்…”

“பாவம்ங்க அவ…அவ சந்தோசமா இருந்தா போதும்…. எப்டின்னாலும் வசும்மா அவள நல்லா பாத்துப்பாங்க.. அவ அங்க ஹாப்பியா இருக்கட்டும்…”

“ஓகே அபு.. எனக்கு பசிக்குது.. ஷாலும்மாவும்.. அந்த இம்சையும் என்ன பண்றாங்க …”

“அது என்ன உங்க பொண்ண மட்டும் ம்மா போட்டு கூப்பிடறீங்க..என் பையன் மட்டும் இம்சையா…. போயா.. நீயே போய் போட்டு சாப்பிட்டு உன் பொண்ணு கூட தூங்கு நான் என் பையன் கூட தூங்குறேன்….”

“அடியே டார்லி…..” அதற்குள் வீட்டு அழைப்பு மணி அடித்தது…

“ண்ணா ண்ணா…”

“வா அதி.. என்னப்பா ஆச்சி..”

“அண்ணா ஹோட்டல் கீ இங்கேயே வெச்சிட்டு போயிட்டேன்.. கொஞ்சம் தூரம் போன வாட்டி தான் நியாபகம் வந்தது.. அதுதான் எடுக்க வந்தேன்…”

“சரி தம்பி.. இந்தா.. நாளைக்கு கால் பண்றேன் தம்பி.. அப்ப வா…”

“சரி ண்ணா…வரேன் ண்ணா… குட்டிஸ் தூங்கிட்டாங்களா ண்ணா.. அவங்கள பாக்கவே இல்ல”

“ஆமா தம்பி தூங்கிட்டாங்க… நாளைக்கு வா அவங்கள பாக்கலாம்…”

“சரி அண்ணா நான் கிளம்புறேன்.. நாளைக்கு பாக்கலாம்…”

“சரிப்பா..” என்று கூறி அவனை வழி அனுப்பி வைத்தான்…

அவன் சென்றவுடன்…. “டார்லி… டார்லி எங்க இருக்க.. அடியே சொன்ன மாதிரியே போய் தூங்கிட்டியா…”

ஆனால் கிட்சேனில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது.. “அப்பாடா போய் தூங்கலை… மை டார்லினா டார்லி தான்.. டார்லி.. அபு குட்டி என்ன பண்றிங்க..”

“ஒழுங்கா சாப்பிட்டு போய் தூங்கிடுடா.. இல்லன்னா கத்தியால சொருகிடுவேன்…”

“நோ வயலன்ஸ் அபு டார்லி.. இப்ப என்ன சாப்பிடணும்… அவளோ தானு கூல் கூல் சாப்புடுறேன்.. அவளோ தான்.. நீ போய் தூங்கு.. குட் நைட் முரளி ட்ரீம்ஸ்”

“பேட் நைட்… பேய் ட்ரீம்ஸ்… “என்று கூறி தூங்க சென்றுவிட்டாள்….

“ஐயோ டா.. அவ புள்ளய சொன்னா மட்டும் எப்படி கோவம் வருது இந்த டார்லிக்கு… டேய் அகிலு பெரிய இம்சைடா நீ..” என்று கூறி சாப்பிட்டு தூங்க சென்றுவிட்டான்…

இங்கு ரூமுக்கு வந்த நம்ம வீராக்கு… நிவேதா பத்தின யோசனை தான்.. என்னடா இவன் யோசிக்கிறான்னு பாக்குறிங்களா அபர்ணா சொல்ல ஆரம்பிச்ச உடனே வந்துட்டான்..இவன் தொந்தரவு செய்யாம வெளிய நின்னு தான் எல்லாமே கேட்டான்…

“பாவம் அந்த பொண்ணு.. பெத்த அம்மா… கூட பிறந்த தங்கச்சியே இப்டி அந்த பொண்ண திட்டுறாங்க… எப்படி தா இப்டி இருக்காங்களோ…. நம்ம அக்காவ நாம எப்படி பாத்துகிட்டோம்… ஆனா இங்க இந்த குடும்பத்துல என்னடான பெத்த அம்மாவே இப்டி பண்ணி இருக்காங்க… இனிமேயாச்சும் அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும்…. ஆனா அந்த பொண்ணோட முகம் எனக்குள்ள என்னவோ பண்ணுதே…. அந்த சோர்ந்த முகத்தைப் பாத்ததும் ஏன் என்ன என்னவோ பண்ணுது…”

அந்த நேரம் வீராவின் தொலைபேசி அழைத்தது… “யாரு டா அது… ஐயோ மாம்சு… நைட் தூங்குற அப்ப கால் பண்ண சொன்னாரே.. மறந்து போயிட்டேன்….”

“ஹலோ மாமா …” என்று தான் கூறினான்…

“அடேய் அக்காலாம் ஞாபாகம் வராதோ என்ற தம்பிக்கு… அவுங்க மாமன தான் தேடுவீங்களோ… இந்த அக்கா கிட்ட பேசுனா வாயில இருக்கற முத்து கொட்டி போய்டுமோ….”

“நிறுத்து க்கா .. எதுக்கு இப்ப போன் போட்டு கத்துற.. அவரு கிட்ட போன் கொடு..”

“ஆமா பெரிய சீமதுரை.. அவுங்க மாமன் கிட்ட மட்டும் பேசுவானாம்..”

“ஹே மீனா கொண்டா இங்க” என்று மாறனும்.. “க்கா போன மாமா கிட்ட கொடு” என்று வீராவும் ஒரே நேரத்தில் கத்த..

“போய் தொலைங்க.. தங்கம்னு நீங்களும்.. க்கா மீன் கொழம்பு வெச்சி தானு வருவ தானுடா… . இருக்கு டா உங்களுக்கு..” என்று கோவமாக கூறவும்

“க்கா என்னை சொல்ற சாக்குல மாமனையும் டா சொல்ற க்கா.. “

“அப்டி தான் டா சொல்லுவேன்…. ஆயிரம் டா சொல்லுவேன் டா.. போய் தொலைங்க….”

“க்கா க்கா..” என்று இவன் அழைக்க “போடா… நீங்களே பேசுங்க டா..”என்று குடுத்து விட்டு மீனாட்சி சென்று விட்டாள்…

“சாப்டியா வீரா.. என்ன சாப்பிட்ட… நைட் எட்டு மணிக்கு போன் பண்ண சொன்னேன்ல ஏன் டா பண்ணல…”

“சாப்பிட்டேன் மாமா…  இப்ப பண்ணலாம்னு இருந்தேன்… அதுக்குள்ள நீ பண்ணிட்ட…”

“நம்பிட்டேன் டா…டேய் என்ன உன் கொரலு ஒரு மாதிரி இருக்கு..”

“இல்ல மாமா நல்லா தான் இருக்கு..”

“இல்ல டா உன் கொரலு எனக்கு தெரியாத… வீடியோ கால் பண்ணு டா..”

அவன் பண்ணியவுடன் அவன் முகத்தை பார்த்துவிட்டு “ஏன் மூஞ்சி இப்டி இருக்கு…”

“நல்லாதான் இருக்கு… மாமா … மதுரையில இருந்து வண்டில வந்ததுனால அப்டி தெரியுது உனக்கு”

“இல்ல டா … உன் கொரலு ஒரு மாதிரி இருக்கு.. எதையோ நெனச்சி குழப்பிக்குற….”

“இல்ல மாமா… நல்லா தான் இருக்கேன்… “

“என்கிட்டயே ரூட்ட குடுக்காத… உண்மையா சொல்லு…”

“அது மாமா.. இங்க ஒரு பொண்ண பாத்தேன்… பாவம் மாமா அந்த பொண்ணு.. சொந்த அம்மா, தங்கச்சியே அந்த பொண்ண கேவல படுத்துறாங்க” என்று கூறி அவன் கேட்ட அனைத்தையும் பார்த்தது அனைத்தையும் கூறினான்…

“டேய் விடு அந்த பொண்ணு தான் அவங்க ஒரம்பர வீட்டுக்கு போய்டிச்சில இனிமே அவங்க பாத்துப்பாங்க சரியா… அதுலா கொறையே இல்லல.. அவங்கைலாம் மனுசங்களே இல்லல..”

“மாமு.. எனக்கு அந்த புள்ளைய பிடிச்சி இருக்கு மாமு..”

“டேய் வீரா அந்த புள்ளைய நீயீ ஒரு தடவதான்ல பாத்து இருக்க… அது எப்படில பிடித்தம் ஆகும்…. அது பரிதாபம்ல… இனிமே நீயி அந்த புள்ளைய பாப்பியோ இல்லையோ.. ஆனா பரிதாபத்துல வர பிடித்தம் லவு ஆகாதுல… விட்ரு அது வேணாம்…”

“ஏன் மாமா விட சொல்ற… நீயும் தான் காதலிச்சி கல்யாணம் கட்டிக்கிட்டா….”

“டேய் நான் பண்ணதும் நீ பண்றதும் ஒன்னால…. வேணா டா… இப்ப அத பேசவேணாம் டா…… மூஞ்ச இப்டி வைக்காத… என்ன வேலைக்குப் போய் இருக்கியோ அத மட்டும் பாரு டே… இனிமே அத பத்தி பேசாத…”

“சரி… “என்று கூறி அமைதியாகி விட்டான்

“என்ன டே மூஞ்ச ஒரு மாதிரி வெக்குறவன்…. சூதானமா இரு டே… அந்த பொண்ண நீயி இனிமே பாத்தா புடிச்சா பாத்துக்கலாம்…நான் வைக்குறேன்.. உன் அக்காக்காரி கிட்ட பேசுறியா…”

“இல்ல கோவமா இருக்கும்… நா நாளைக்கு பேசுற.. “

“ம்ம் சரி டா…. நாளைக்கு வீட்ட பாத்து பிடிச்சி இருந்த சொல்லு டே.. வாங்கிடலாம்..”

“ம் மாமா..”

“டே வீரா மாமன் மேல கோவமால… புரிஞ்சிக்கோ பாத்தா பிடிச்சது வேற.. ஆனா நீ பரிதாபத்துல பிடிச்சி இருக்கு சொல்ற…”

“ம் மாமா வைக்குறேன்…” என்று போனை வைத்துவிட்டான் ….

இங்கு மாறன் வீட்டில்..

“தங்கம்.. “

“போயா போயி உன் மச்சானையே கட்டிட்டு அழுகு.. என்ன எதுக்கு கூப்பிட்ற…”

“இல்ல டி அவன் கொரலு ஒரு மாதிரி இருந்திசி… அதுதான் வாங்கி பேசுனேன்…. “

“போயா…. அவனுக்கும் நீ தான் முக்கியம் உனக்கும் அவன் தான் முக்கியம்… நீ வர வரைக்கும் அக்கா அக்கானு என் பின்னாடி பாசாம இருந்தவன் நீயி வந்த வாட்டி மாமானு உன் பின்னாடி சுத்துறான்…. என்ன கண்டுக்கவே மாட்டிங்குறான்… போங்க…”

“ஏய் தங்கம்… இங்க என்னை பாரு.. என்னதுக்கு இப்ப அழகுறவ என்னய்ய பாருடி.. “

“போ மாமா… நீங்க ரெண்டு பேருமே என் உசுரு தான்.. ஆனா ரெண்டு பேருமே என்ன கண்டுக்கவே மாட்டிங்குறீங்க..”

“ஏய் தங்கம் இங்க என்னய பாரு டி.. அவனுக்கு ஒரு பொண்ண பிடிச்சி இருக்கு… ஆனா அது காதலாம் இல்ல… பரிதாபத்துல வந்த பிடித்தம் அது…”என்று வீரா கூறியது எல்லாம் கூறி தான் கூறியது கூறினான் மாறன்..

“என்ன மாமா சொல்ற…”

“விடு இன்னொரு டைம் பக்காவா போறான்.. பாத்து அப்பயும் அந்த பொண்ண பிடிச்சி இருக்குனு சொன்னா பாத்துக்கலாம்..”

“மாமா உண்மையா பிடிச்சி இருந்தா… என்ன பண்றது…”

“அடியே இங்க பாரு என்ன… அவனுக்கு அந்த பொண்ண ஒரு மணி நேரமா தா தெரியும்… அப்றம் எப்படி பிடித்தம் ஆகும் புள்ள… விடு.. அப்டியே மாமனா கவனிக்குறது..”

“யோவ் போயா.. இந்நேரம் வரைக்கும் மச்சானைக் கொஞ்சிட்டு இப்ப கவனிக்குறதாம்… போயா..” என்று சென்றுவிட்டாள்…

“ஏய் தங்கம்… போய்ட்டாளா… சரி நாம போய் குட்டிய பாக்கலாம்…”

இங்கு சேலத்தில்…

“ஹூம் ஹூம் இல்ல வீரா.. மாமா சொல்றது சரிதான்… நாம அந்த புள்ளய ஒரு மணி நேரமா தான் பாக்குறோம்… அது எப்படி காதல் ஆகும்… இனிமே இங்க தானு இருக்கோம்.. அந்த புள்ளய பாத்தா பேசிக்கலாம்… அந்த புள்ளய பத்தி தெரிஞ்சிக்கணும்…”

“முரளி அண்ணா வீட்டுல அந்த புள்ள போட்டோவ போட்டோ எடுத்துட்டோம்… இத வெச்சி கண்டுபிடிக்குறோம்….”

“அம்மு மாமா கண்ணுல சிக்காம இரு.. சிக்கின மாமா உன்ன விடவே மாட்டேன்… உன் அந்த சோக முகம் எனக்குள்ள என்னமோ பண்ணுது…. நீ என்கிட்ட வந்துட்டா உன்ன என் உள்ளங்கையில் வெச்சி தாங்குறேன்டி அம்மு நீ பட்ட கஷ்டம்லாம் இன்னியோட போகட்டும் … உன்ன பத்தி எனக்கு தெரியல தான்.. ஆனா உன்ன ராணி மாதிரி பாத்துக்குறேன் அம்மு….” என்று தனக்குள் பேசிக் கொண்டு தூங்கி விட்டான்..

நம்ம ஹீரோ முதல் தடவை நம்ம ஹீரோயின பாத்ததும் பிளாட்….. நம்ம ஹீரோயினுக்கு காதல் வருமா????

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வித்தியாசமான லவ் ஸ்டோரியா இருக்கே … எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்கலாம் …

    1. Author

      தொடர்ந்து படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க சிஸ்.. 🤗