
மறுவீட்டு விருந்து முடித்து மதுரைக்கு திரும்பினர்… அவர்கள் வந்து இரண்டு நாட்களில் ஊருக்கே கறிவிருந்து ஏற்பாடு செய்திருந்தனர்… அனைத்து சொந்தமும் கூடி மகிழ்ந்தனர்…
மட்டன் பிரியாணி, குடல் வறுவல், பிஷ் ப்ரை, சாப்பாடு, சிக்கன் தண்ணி குழம்பு, எலும்பு ரசம், தயிர், ப்ரெட் அல்வா என அசத்தியிருந்தனர்… வந்தவர்கள் நன்றாக சாப்பிட்டு விட்டு வாழ்த்தி சென்றனர்..
அடுத்த நாளே அதியும் நிவேதாவும் ஹனிமூன் சென்றனர்… கோவை மாவட்டத்தில் உள்ள மலையனுர்(கற்பனை ஊர்)…. பேருக்கேற்றது போல் ஊரை சுற்றி மலைகள் சூழ்ந்திருக்கும்… அருவி ஒருபுறம் இருக்கும்.. அந்த இடமே பசுமை சூழ்ந்திருக்கும்…
அந்த இடத்தில பல புதுமண தம்பதிகளைக் காணலாம்.. தனித்தனி ரிசார்ட்… மரத்தின் மேல் வீடுகள் என நிறைய இருக்கும்… அந்த ஊரில் வசிக்கும் மக்கள் நூறு பேர் தான் இருப்பர்… அங்கு சுற்றுலா பயணிகள் தான் அதிக அளவில் இருப்பர்..
அங்கு தான் தற்போது இருக்கின்றனர்… தனிவீடு சுற்றி மரங்கள்.. தனியாக இருக்க பயமாக இருக்கும் ஆனால் பாதுகாப்பான இடம்… ஒருவர் அருவியில் இருக்கும் போது மற்றவர் யாரு வர முடியாது.. செயற்கை அருவிகள் இரண்டு மூன்று இருக்கும்… இதுவொரு ஹிடன் ஜெம் என்றே சொல்லலாம்.. அதிகளவில் யாரும் வர மாட்டார்கள்…
முதல் நாள் இரவு தான் வந்து இருந்தனர்… பயணக்களைப்பின் காரணமாக அன்று இருவரும் அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டனர்… இருவரும் குளித்துவிட்டு ஒரே போன்ற டிஷர்ட் அணிந்து கொண்டு ஊரைச்சுற்றி பார்க்க கிளம்பினர்..
முதலில் அங்கிருக்கும் பூந்தோட்டத்தைச் சுற்றிப்பார்க்க சென்றனர்… அவன் அவளிடம் “அம்மு நீ உள்ள போ.. ஒரு போன் வருது பேசிட்டு டிக்கெட் வாங்கிட்டு வரேன்” என்று கூறி சென்றுவிட்டான்..
அவள் உள்ளே நுழைந்து அங்கு இருக்கும் பூக்களைப் பார்வையிட்டு கொண்டு இருந்தாள்.. அப்போது அங்கிருக்கும் குட்டி வாண்டு ஒன்றுவந்து அவளிடம் குனியக்கூறியது.. அவளும் குனிந்து என்னவென்று கேட்டாள்… ஆனால் அந்த வாண்டோ அவளிடம் ரோஸை நீட்டி அவளின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு சிட்டாய் பறந்துவிட்டது..
அதே போல் அங்கிருக்கும் இன்னொரு வாண்டு அவளுக்கு பிடித்த சொக்கி சொக்கி ஒரு பாக்ஸ் நிறைய சாக்லேட்டை குடுத்தது..
அவளுக்கு தெரிந்துவிட்டது… இது அவளின் பாவாவின் வேலையென… அவனுக்கு அழைக்கலாம் என்று பார்த்தால் அவள் நேற்றிரவு இருந்தே அவள் போனை பார்க்கவே இல்லை…
என்ன செய்திருக்கிறான் என்று பார்க்க ஆவலாக உள்ளே சென்றாள்… அவள் சென்றுகொண்டிருக்கும் போதே அங்கமர்ந்து கொண்டிருந்த வயதான தம்பதிகள் அவளை அழைத்தனர்.. அவர்கள் அனைவரும் இந்த ஊர்க்கார்கள் போல் இருந்தது…
அவர்கள் ஒரு குட்டி பாக்ஸ் குடுத்தனர்.. அது கிபிட் பேப்பர் சுற்றி இருந்தது.. அவள் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு மீண்டும் உள்ளே தொடர்ந்து நடந்தாள்…
அங்கிருந்த இன்னொரு ஜோடி அவளிடம் இன்னொரு குட்டி பெட்டியைக் கொடுத்தனர்… அவள் கரெக்டாக அந்த தோட்டத்தின் மையப்பகுதியில் நிற்கும் போது அவளின்மேல் பூக்கள் மழை பெய்தது… மிகவும் சந்தோசமாக இருந்தாள்…
ஆனால் அவளின் கண்களோ அவளின் கள்வனை தான் தேடியது… தன்முன்னால் நிழலாட என்னவென்று பார்த்தாள்.. அவளின் கள்வன் தான் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்..
அவன் திரும்பியநொடி “ஹாப்பி பர்த்டே அம்மு” என்று கூறி அவளுக்கு பிடித்த சிகப்புநிற ரோஜா பூங்கொத்தை நீட்டினான்.. அவள் அதை வாங்கிக்கொண்டு அவனை அணைத்து கொண்டாள்..
பிறகு அங்கிருந்தவர்கள் முன்னிலையில் கேக் வெட்டிகொண்டாடினார்… சிறிதுநேரம் அங்கு சுற்றிபார்த்துவிட்டு அவளுக்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்றனர்..
ரூமிற்குள் நுழைந்தவுடன் அனைத்து பொருட்களையும் மெத்தையில் வைத்துவிட்டு அவனை அணைத்துக்கொண்டாள் இறுக்கமாக… அவனும் அணைத்துக்கொண்டான்…
“தேங்க்ஸ் பாவா என் பர்த்டே நானே மறந்து போயிட்டேன் ஆனா நீங்க…” என்று அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.. அவளவன் தான் தன் இதழால் அவளின் இதழை பூட்டியிருந்தானே….
சிறிதுநேரத்திற்கு பிறகு அவனே விட்டான்… ஆனால் விட்ட அடுத்த நொடி அவள் “தேங்க்ஸ்” என்று ஆரம்பித்தாள்… அதனால் அவனோ மீண்டும் விட்ட வேலையை தொடங்கிவிட்டான்…
அதன்பின் விட்டானா என்று கேட்டால் இல்லை… முழுதாக அவளைதன் வசப்படுத்திக்கொண்டான்… மதியத்திற்கு மேல் தான் இருவரும் விழித்தனர்… இருவரும் குளித்துமுடித்துவிட்டு சாப்பிட்ட பின்தான் அவளிடம் போனைக் குடுத்தான்….
அவளுக்கு அத்தனை செய்திகள் அழைப்புகள் வந்து இருந்தது… “ஏன் பாவா இப்படி” என்று கேட்டாள்…
“சப்ரைஸ் அம்மு” என்று கண்சிமிட்டி கூறினான்..
“நீங்க இருக்கீங்களே!!!” என்று அவனின் கன்னத்தை கடித்துவிட்டு ஒரு ஒருவராக அழைத்து பேசினாள்..
பெரியவர்கள் எல்லாம் வாழ்த்திவிட்டு வைத்து விட்டனர்… பிரியா தீப்தி மீனாட்சி அபர்ணா வினோதினி அனைவரும் அவளை வாழ்த்தியது மட்டும் இல்லாது அவளை வைத்து செய்துவிட்டனர்…
அவர்களுடன் பேசிமுடித்துவிட்டு அதியிடம் அவன் கொடுத்த பரிசுகளுடன் சென்றாள்… முதலில் அந்த பெரியவர்கள் தந்த பெட்டியை திறந்தாள்… அதில் அவளுக்கு மிகவும் பிடித்த ஜிமிக்கி இருந்தது…. அந்த ஜிமிக்கியில் நன்றாக பார்த்தால் இருவரின் பேரும் இருப்பதைப் போல் இருந்தது…
அடுத்து இருந்த பெட்டியை திறக்கும்போது இரு தங்க பிரேஸ்லெட் இருந்தது.. ஒன்றில் அம்மு என்று பொரித்ததும் இன்னொன்றில் பாவா என்று பொரித்ததும் இருந்தது…
“இதுலாம் நீங்க தானு பாவா பண்ணீங்க!!!” என்று ஆர்வமாக கேட்டாள்…
“ஆமா அம்மும்மா நம்ம பட்டறைல போய் நானே தான் பண்ணேன்… என் அம்முக்காக நான் தான் பண்ணுவேன் வேற யாரையும் பண்ண விடமாட்டேன்… நிச்சயத்துக்கு போட்ட மோதிரம் பொண்ணழைப்புக்கு வந்தப்ப போட்ட நகையும் நான்தான் பண்ணேன்… இனிமே உனக்காக பண்ற எல்லா நகையும் நான் மட்டும் தான் பண்ணுவேன்” என்று அவளை காதலுடன் பார்த்தவாறு கூறினான்…
“ஏன் பாவா இப்படி என்ன லவ் பண்றிங்க????.. உங்கள மாதிரி என்னால செத்தா….” என்று அவள் சொல்லவதற்குள் அவளின் வாயை தன் கைக்கொண்டு அடைத்திருந்தான்…
“அம்மு என்ன பேசுற…. இனிமே உன்வாய்ல இருந்து இந்த வார்த்தை வரக்கூடாது.. வந்துச்சு அவளோ தான் அம்மு பேசுறப்ப பாத்து பேசணும்…” என்று கொஞ்சம் கோவமாகவே கூறினான்…
“பாவா இனிமே அப்படி பேசமாட்டேன்… உங்கள மாதிரி என்னால லவ் பண்ண முடியுமா தெரியல பாவா….
அரசு மாமா சொல்லியிருக்காங்க உங்களக்கு நிறைய ப்ரோபோசல் வரும்னு சொன்னாங்க… நீங்க யாரையும் பார்க்கவே மாட்டீங்க அப்டினு சொன்னாங்க… ஏன் பாவா அவங்கள பாக்காம என்னை லவ் பண்ணீங்க…
நான் இப்படி குண்டா இருக்கேன்… நீங்க எவளோ கம்பிரமா இருக்கீங்க.. அவங்க எல்லாம் அழகா இருப்பாங்களாமே… ஆனா நான்!! .. நீங்க …” என சொல்லிக் கொண்டிருந்தவள் அவனின் கோவமுகத்தைப் பார்த்து கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்…
கண்களில் கோவத்தை தேக்கிக்கொண்டு அவளிடம் “ஏன் பேச நிறுத்திட்ட பேசு” என்று மென்மையாக கூறினான்..
அவள் மௌனமாகவே இருந்தாள்… அவன் யாருக்கோ அழைத்து பேசிவிட்டு விறுவிறுவென அருவிக்கு சென்றுவிட்டான்… கண்களில் கண்ணீர் எப்போது வேண்டுமென்றாலும் விழுவேனென்று இருந்தது.. அவளின் அலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது…
அவளின் பாவா தான் அனுப்பியிருந்தான்… “கண்ணுல இருந்து தண்ணி வந்துச்சு அவ்ளோதான்” என்று…
அதைப்பார்த்துவிட்டு ரூமை பூட்டிக்கொண்டு வேகமாக இவளும் அருவிக்கு சென்றாள்… அங்கு அவனோ அருவியில் நின்றுகொண்டிருந்தான்… இவள் வேகமாக சென்று அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டாள்…
“இனிமே நான் அப்படி பேசமாட்டேன்… என்னிக்குமே இந்த வீராக்கு அவனோட வேதா மட்டும்தான்…” என்று அவனின் முதுகில் தன்னுடைய தடத்தை பதித்தவாறு கூறினாள்…
அவனும் கொஞ்சம் இளகினாலும் திரும்பாமல் நின்று இருந்தான்… எப்போதும் கூடல் பொழுதில் மட்டும் தான் “வீரா வேதா” என்று பெயர்கள் வெளிவரும்… மற்றபடி எப்போதும் “அம்மு பாவா” மட்டும் தான்…
அவளின் அமைதியில் அவனின்முன் நின்று அவனின் நெஞ்சில் தன் தாடையை வைத்து அவனின் முகத்தைப் பார்த்தாள்…
“பாவா அப்படி பேசமாட்டேன்… உன் அம்மு தானு தெரியாம பேசிட்டேன்… பர்த்டே பேபிய இப்படி சோகமா இருக்க வைக்கலாமா” என்று முகத்தைப் பாவமாக வைத்து கூறினாள்…
அவன் எதுவும் பேசாமல் அவளை சேர்த்து அணைத்து அவளின் உச்சியில் முத்தமிட்டான்… அதன்பிறகு அருவியில் குளித்தார்களோ முத்தமிட்டார்களோ அவர்களுக்கே வெளிச்சம்…
ஒருவாரம் மலையனூரில் தங்கள் ஹனிமூனை முடித்துவிட்டு மதுரை நோக்கி பயணமாகினர்…
அதன்பிறகான நாட்கள் தம்பதிகள் காதல் வானில் சிறகடிக்க நிவேதா மற்றவர்களின் அன்பில் திளைத்தாள்..
இதுவரை பெற்றவர்களிடம் கிடைக்காத பாசத்தை சிவாம்மா சுந்தரப்பா மூலம் அனுபவித்தாள்…. அதி அவளை தன் காதலின் மூலம் நனைத்தான்…..
இவளும் வீட்டின் மூத்த மருமகளாக அனைத்து விஷயத்தையும் சரியாக செய்தாள்….. அதேபோல் தன்னுடைய கனவை நோக்கி அனைத்தையும் செய்தாள்…..
இதேபோல் மூன்று மாதம் காற்றாய் பறந்தது… ஒரு நன்னாளில் அரசு மற்றும் தீப்தயின் தவபுதல்வி இவ்வுலகில் காலைப் பதித்தாள்….
அனைவரும் சேலம் சென்று பார்த்துவிட்டு வந்தனர் அந்த குட்டி தேவதையை….
அன்றிலிருந்து ஒரு மாத காலத்தில் அந்த தேவதைக்கு “அபிநயா ஸ்ரீ” என்று பெயர் சூட்டினர்…. சேலமில் அதியும் நிவேதாவும் இரண்டு நாள் தங்கிவிட்டு மதுரை சென்றனர்….
பத்துநாள் கழித்து அதி ஒரு வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டு அடுத்த நாள் காலை தான் வீட்டிற்கு வந்தான்…
அவன் வரும்போது அங்கு நடக்கும் காட்சியை பார்த்து அதி அதிர்ந்துவிட்டான்…. “அம்மு” என்று கத்திக்கொண்டே அங்கு ஓடினான்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1


