
சேலத்தில் நிச்சயதார்த்தம் செய்து நிவேதாவை மதுரைக்கு அழைத்து சென்று அங்கு கல்யாணம் வைத்து கொள்ளலாம் என முடிவு எடுத்து இருந்தனர்…. அதியை மதுரையிலேயே விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவரும் முன்னாடி நாள் மதியமே சேலம் வந்து இருந்தனர்….
அதிக்கு துணையாக அரசுவும் தீப்தியும் இருந்தனர்…. தீப்திக்கு இது ஏழாவது மாதம்… அதனால் அலைய வேண்டாம் என அவர்கள் இருவரையும் மதுரையில் அதிக்கு துணையாக இருக்குமாறு கூறிவிட்டு மற்றவர்கள் சேலம் நோக்கி சென்று விட்டனர்…
நிச்சயதார்த்த நாள் நன்றாக அனைவருக்கும் சந்தோசமான நாளாக விடிந்தது…. அவளுக்கு நலங்கு வைத்து நல்ல நேரம் பார்த்து அவளை மதுரைக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகினர்…
அனைத்து பெண்களை போல அவளுக்கும் அழுகை வந்து இருந்தது.. என்ன தான் அவள் மதுரையில் இருந்தாலும் சேலம் அவள் பிறந்து வளர்ந்த ஊர் அல்லவா…
நிதிஷ் பிரியா வசும்மா என மூவரும் கண்ணீரில் தான்…. கொஞ்ச நேரத்தில் வசும்மாவே சமாதானம் ஆகி மற்றவர்களையும் தேற்றி அவளை வழியனுப்பி வைத்தார்… நிவேதாவுடன் கோபாலும் வினோதினியும் மதுரைக்கு சென்றனர்…. (கோபால் வினோதினி ரெண்டு பேரும் நிவேதா பிரியாவோட ப்ரண்ட்ஸ்)
கோபால் வினோதினி இருவருக்கும் சென்ற வருடம் தான் கல்யாணமாகி இருந்தது… மதுரையில் இருந்து அனைவரும் அவர்கள் கல்யாணத்திற்கு சென்று வந்தனர்…
தற்போது இவர்கள் செல்லும் காரில் மாறன் காரை ஓட்ட அவன் அருகில் இருக்கும் சீட்டில் கோபால் அமர்ந்து இருந்தான்…
பின் சீட்டில் மீனாட்சி அகரனுடன் நிவேதாவும் அமர்ந்து இருந்தனர்.. கடைசி சீட்டில் தாரா பாப்பாவுடன் வினோ அமர்ந்து இருந்தாள்….
கார் மதுரையை நோக்கி சென்றது…. கார் மதுரையில் உள்ள அவர்கள் வீட்டிற்கு நுழையும் போது கரெக்டாக பாட்டு ஒலித்தது
கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே
பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை
ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம்
கேட்கும் இனிமேல்
நம் வீட்டில் எப்போதும்
.
.
.
அண்ணி உன் வடிவில்
அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்…..
இந்த பாட்டை அஜய் தான் போட்டு இருந்தான்… அனைவருக்கும் பெரும் சிரிப்பு… அந்த மனநிலை உடனே நிவேதாவிற்கு ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து சென்றனர்….
பிறகு நல்ல நேரம் பார்த்து அதி நிவேதா இருவரையும் தனி தனியாக மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்… பெண்கள் அனைவரும் ஒரு அறையில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்…
அப்பத்தா தான் வந்து அனைவரையும் சத்தம் போட்டு தூங்க அனுப்பி வைத்தார்… மற்றவர்கள் ஒவ்வொரு அறையில் தூங்க செல்ல வினோதினியும் நிவேதாவும் ஒரு அறையில் தூங்கினர்…
வசும்மா நிதிஷ் பிரியா நிலவன் நால்வரும் சீர் வரிசை பொருட்களோடு அவர்கள் சேலத்தில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் அவர்களும் கிளம்பி இருந்தனர்… ஆனால் அவர்கள் அந்த பொருட்களை அரசுவின் வீட்டில் இறக்கி வைத்து விட்டு பிறகு தான் மண்டபம் வந்து சேர்ந்தனர்…
.
.
.
.
நள்ளிரவில் தூங்கிக் கொண்டு இருந்த நிவேதாவிற்கு பறப்பது போன்று தோன்றியது… கண்ணை திறந்து பார்த்தால் அவளவன் தான் அவளை பூப்போல் தூக்கிக் கொண்டு எங்கேயோ சென்று கொண்டிருந்தான்….
முதலில் பயந்து பின் தெளிந்து “அச்சோ பாவா என்ன பண்ணிட்டு இருக்கீங்க…. எங்க தூக்கிட்டு போயிட்டு இருக்கீங்க விடுங்க விடுங்க பாவா” என்று கையில் இருந்தவாறு கெஞ்சிக்கொண்டு இருந்தாள்..
“அம்மு கிளோஸ் யுவர் ஐஸ் நான் சொல்றவர திறக்க கூடாது… வாயும் பேசக் கூடாது… அப்டியே இந்த நிமிஷத்தை பீல் பண்ணிட்டு வா” என்று அவளை மண்டபத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து வந்தான்…
அவளை ஒரு இடத்தில நிற்க வைத்து விட்டு அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து “அம்மு ஓபன்யுவர் ஐஸ்” என்று கூறினான்…
அவள் கண்ணை திறந்தநொடி அவளுக்கு பிடித்த ரெட் ரோஸ்களை வைத்து உருவாக்கிய பூங்கொத்தை நீட்டி “ஐ லவ் யூ அம்மு” … என்று கூறி அவளுக்கு ப்ரொபோஸ் செய்தான்…
இதுவரை அவன் அவளுக்கு ஐ லவ் யூ சொன்னதே இல்லை… இன்று கூறியிருக்கிறான்…. அவளும் அவனிடம் இருந்து பூங்கொத்தை வாங்கி மண்டியிட்டு அவனை அணைத்து கொண்டு “ஐ லவ் யூ டூ பாவா…” என்று கூறினாள்..
அதி அவளை இன்னும் இறுக்கி அணைத்து கொண்டான்… சிறிதுநேரம் கழித்து “அம்மு வா போட்டோஸ் எடுத்துக்கலாம்” என்று கூறி அவளை அழைத்து சென்றான்….
அந்த இடத்தை லைட்டால் அலங்கரித்து இருந்தது… அங்கு இருக்கும் சுவரில் பலூன்களால் ஐ லவ் யூ என்று எழுதி இருந்தது..
பிறகு சிகப்பு ரோஜாக்களால் ஆனா பெரிய இதயம் போன்ற வடிவில் ஒரு ரோஜா குவியல் நின்று இருந்தது… இருவரும் சிலபல போட்டோக்கள் எடுத்து கொண்டனர்… பின் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அதி அமர்ந்தான்… அவனின் மேலே நிவேதாவை அமரவைத்தான்…
இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தனர்… “போதும் பாவா கிளம்பலாம்… எந்திரிங்க… முகூர்த்தம் லேட் தான் ஆனா சீக்கிரம் எந்திரிக்கனும்ல எந்திரிங்க போய் தூங்குங்க” என்று அவனின் மேல் இருந்து எழுந்தாள்…
ஆனால் அந்த கள்வனோ அவளின் கையைப் பிடித்திழுத்து “அம்மு கல்யாணத்துக்கு முன்னாடி குட்டியா தப்பு பண்ணலாமா?!?!” என்று கண்ணடித்தவாறு கேட்டான்..
அவளோ அவளின் சிப்பி வாயை ஆ என மெலிதாக பிரித்தாள்.. அவளின் அதிர்ச்சியை ரசித்துக் கொண்டே மெதுமெதுவாக அவளின் இதழை தன் இதழால் சிறைபிடித்தான்…
அவளின் இதழில் அமிர்தத்தைக் கண்டானோ என்னவோ அதிலேயே மூழ்கி போனான்… அவனின் கைகள் அவளின் உடலில் மேய தயாராகின… அவள் அதை தடுக்க முயற்சி செய்தாள்..
ஆனால் அவனோ முத்தத்தை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு “அம்மு ப்ளீஸ் லிமிட் கிராஸ் பண்ணமாட்டேன்… டூ மினிட்ஸ் நானே விட்டுறேன்…” என்று கூறி அவளுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் மீண்டும் சிறைபிடித்து கொண்டான்…
அவனின் கையோ அவளின் சேலையை தாண்டி அவளின் இடுப்பை பிடித்து கொண்டு இருந்தது… அவளின் இடுப்பை நன்றாக பிடித்து கொண்டு அவளின் இதழை மென்று கொண்டு இருந்தான்..
அவனின் போன் ஓசையில் தான் இருவரும் மீண்டனர்… அவளோ அவனின் முகத்தை பார்க்க வெக்கப்பட்டு கொண்டே அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டான்… அவனும் சிரித்து கொண்டே அவளின் உச்சியில் முத்தமிட்டுவிட்டு யாரழைத்தது என்று எடுத்து பார்த்தான்… அவனின் சூர்யா தான் அழைத்து இருந்தான்…
“என்னடா நாயே எதுக்கு போன் பண்ற..” என்று கோவமாக கேட்டான்..
அவனோ “எப்பா தேவா நாளைக்கு உங்களுக்கு தான் கல்யாணம்… இப்ப மணி ரெண்டு அஞ்சு மணிக்கு எழுந்து இருக்கனும்.. ஏழு மணிக்கு முகுர்த்தம்.. வந்து தூங்குங்க ராசா” என்று கூறி அழைப்பை துண்டித்தான்…
அவன் மீண்டும் அவளை தூக்கிக் கொண்டு படுக்கையில் விட்டுவிட்டு அவளை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் உச்சியில் முத்தமிட்டுவிட்டு வெளியேறிவிட்டான்… அவன் வெளியேறிய இரண்டு நிமிடத்தில் வினோ உள்ளே நுழைந்தாள்… அவள் நிவேதாவை சிறிதுநேரம் ஓட்டிவிட்டு இருவரும் தூங்கிவிட்டனர்…
அந்த நாள் நிவேதாவிற்கு பல உணர்வுபூர்வமான பலநிகழ்வுகளைக் காட்ட காத்துக்கொண்டிருந்தது….
அனைவரும் விடியற்காலையே எழுந்து பரபரப்பாக வேலைகளைப் பார்த்துகொண்டு இருந்தனர்… பார்லரில் இருந்து வந்த பெண்கள் வந்து அலங்கரித்திருந்தனர்….
அதி வெண்பட்டு சட்டை வேட்டியில் கம்பிரமாக அமர்ந்திருக்க நிவேதாவோ பச்சை வண்ண பட்டில் மதுரை மீனாட்சியைப் போல் நடந்து வந்தாள்…அனைவரின் பார்வையும் அவளின்மேல் தான் இருந்தது…
அனைவரின் ஆசீர்வாதத்தோடு அதியே மூன்று முடிச்சியையும் போட்டு திருமதி அதிவீரபாண்டியனாக மாற்றி இருந்தான்… பின் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்…மாறன் மீனாட்சியின் முன்வந்து ஆசீர்வாதம் வாங்க முற்பட்டபோது அவர்கள் தடுத்து விட்டனர்.. ஆனாலும் அவர்களின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்… அதேபோல் தான் முரளி அபர்ணாவிடமும்…
வந்த உறவினர்கள் எல்லாம் மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.. வீட்டினரும் நெருங்கிய அங்காளி பங்காளிகள் மட்டுமே எஞ்சி இருந்தனர்… மணமக்களை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்…
ஆரத்தி எடுத்து உள்ளே சென்றனர்… பூஜை அறையில் விளக்கேற்றி சாமியை வணங்கிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர்…
செய்யவேண்டிய சடங்கினை செய்துமுடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்… இந்த கல்யாணத்தில் வயித்தெரிச்சலுற்ற ஒருவர் சபையில் “அப்பறம் என்ன மாமா பொண்ணுக்கு செய்யவேண்டிய சீர் எல்லாம் பாக்கலாமா… வழக்கமா அது தானு பண்ணுவோம்.. பொண்ணு வீட்டுக்காரங்களை எடுத்துட்டு வர சொல்லுவோம்” என்று தாத்தாவிடம் கூறினார்…
தாத்தவோ “இப்ப எதுக்கு நாளைக்கு கூட பாத்துக்கலாம்” என்று கூறினார்… ஆனால் அந்த மனிதரோ “என்ன மாமா வழக்கமா பண்றது தானே… கொண்டுவர சொல்லுங்க … என்னப்பா நான் சொல்றது சரிதானே” என்று கேட்டார்..
இந்த கல்யாணத்தில் இன்னும் வயித்தெரிச்சலில் இருந்த இரண்டு மூன்று பேர் அந்த மனிதரின் கூற்றுக்கு ஆமோதித்தனர்… “முருகன் சொல்றது சரி தானே பெரியப்பா… எப்பயும் கல்யாணம் முடிஞ்சி பண்றதுதானே…” என்று அந்த மனிதரும் கூறினார்…
தாத்தா எதோ கூற வருவதற்குள் நிதிஷே “தாத்தா அவங்க கரெக்டா தானே சொல்றாங்க… எடுத்துட்டு வந்து வைக்கலாம்… நாங்க போய் சீர் கொண்டு வரோம்” என்று கூறி பிரியா வசும்மாவோடு அரசுவின் வீட்டிற்கு சென்றான்…
அவர்கள் சென்று பத்து நிமிடத்தில் ஊரே வியக்குமாறு சீர் பொருட்களை கூடத்தில் நிரப்பி விட்டனர்… சீரை வைத்து கேவலப்படுத்தலாம் என்று எண்ணிய மனிதர்களின் மூக்கை அறுத்திருந்தனர் கொண்டு வந்த சீர் பொருட்களை வைத்து..
அனைவரும் உள்ளே செல்ல நேரிடும் போது மாறன் அவனின் உடன்பிறவா தங்கைக்காக சீர்வரிசை பொருட்களைக் கொண்டு வந்து இறக்கினான்… அதை பார்த்து அனைவரும் நெகிழ்ந்து போய் நின்று இருக்க அதியின் அருகில் நின்றிருந்த நிவேதா வேகமாக சென்று மாறனின் தோளில் சாய்ந்து கொண்டாள் உணர்ச்சி குவியலோடு…
முரளியும் அபர்ணாவும் சீர் கொண்டு வந்தனர்… அபர்ணாவோ “உனக்கு அக்கா நானும் இருக்கேன்” என்று கூறி சீர் செய்தாள்… அவளைப் போய் அணைத்து கொண்டாள்…
உனக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை போல் தீப்தியின் குடும்பம் அவளுக்காக சீர்வரிசை கொண்டு வந்தது… தீப்தி நிவேதாவிடம் “உனக்காக அக்கா நான் இருக்கேன்.. தங்கச்சி அப்பா அம்மா நாங்க இருக்கோம்” என்று கூறி அவளை அணைத்து கொண்டாள்…
நிவேதாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை… மகிழ்ச்சி என்று சொல்வதை விட அதுக்கு என்ன உணர்வு அவளால் சொல்ல முடியவில்லை என்பதே இல்லை
அடுத்து அவளுக்காக சீர் கொண்டு வந்தவரை பார்த்து நிவேதா அழுதே விட்டாள்… “அப்பா” என்று கத்திக்கொண்டே ஓடிச்சென்று சுந்தரப்பாவை அணைத்து கொண்டாள்…அவரும் அவளை பாசமாக அணைத்து கொண்டார்…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…..
வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா…..
யாருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை… அவர் இவ்வாறு செய்வது சிவாம்மாவிற்கு கூட தெரியாது….அனைவரும் உணர்வுக்குவியலோடு நின்றிருந்தனர்..
அந்த சீரைப்பற்றி பேசிய அனைவரும் மூக்கறுந்து அவ்விடத்தை காலி செய்தனர்… நிவேதா மிகவும் உணர்ச்சிவயப்பட்டு இருந்தாள்.. அதி அனைவரிடமும் கூறிவிட்டு நிவேதாவை அழைத்துக்கொண்டு மேலுள்ள அறைக்கு சென்றான்…
அவளை அழைத்து சென்றவன் “அம்மு எதுவும் பேசாத… மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு நகை எல்லாத்தையும் ரீமூவ் பண்ணிட்டு டிரஸ் செஞ்சு பண்ணிட்டு தூங்குடா” என்று கூறி கீழே சென்றுவிட்டான்… அவளுக்கு உதவியாக பிரியாவை அனுப்பி வைத்தான்….
அன்று இரவு அனைவருக்கும் எப்போதும் போல் தான் சென்றது… நிவேதாவிற்கும் அதிக்கும் இரவு சடங்கு எதுவும் இல்லை… நாளை வரவேற்பு முடிந்து வைத்து கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டனர்…
எனவே அனைவரும் அவரவர் அறையில் தூங்கினர்.. அடுத்த நாள் காலை அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருந்தனர்… மாலை நான்கு மணிக்கே வரவேற்பு ஆரம்பமாக இருந்தது…. எனவே காலையே அனைவரும் மண்டபம் சென்றுவிட்டனர்…
மாலை விருந்தினர்கள் அனைவரும் வர ஆரம்பித்தனர்…. தேவதையும் அவளின் தூதனும் அனைவரின் கண்ணைக் கொள்ளையடித்து கொண்டு இருந்தனர்… இரவு ஒன்பது மணிவரை விருந்தினர்கள் வந்தே இருந்தனர்…
காவல்துறை உயரதிகாரிகள்… இவர்களின் தொழில் சார்ந்த நண்பர்கள் அவர்களின் குடும்பம்… என அத்தனை பேர் இருந்தனர்… வந்தவர்களிடம் அனைவரையும் அறிமுகப்படுத்தி பேசிப் போட்டோ எடுத்து கொண்டனர்….
விருந்தினர்கள் குறைந்தவுடன் விளக்குகள் எல்லாம் அணைந்தது… அதி “அம்மு டோன்ட் பேனிக்” என்று கூறி எங்கயோ சென்றான்…
சிறிதுநேரத்தில் விளக்கு எரிந்தது… அங்கு அதி நடுவில் நின்றிருந்தான்.. அதி ஒருவனிடம் கண்ணசைக்க பாட்டு ஒலித்தது…
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம்
நான்கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
என்ற பாட்டுக்கு நடனமாடினான்… சிறிது நேரம் அனைவரும் நடனமாடினர்… பிறகு அந்த மண்டபத்திலேயே ரெடியாகி இருவரும் அந்த தோப்பு வீட்டுக்குச் சென்றனர்…
இருவரும் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்…
பின் மெதுமெதுவாக அவளை முத்தமிட்டு அவளை அணைத்து அவளுள் மூழ்கினான்… அந்த அறையில் அவளின் சிணுங்கல் மட்டுமே பிறகு கேட்டது…
அடுத்த நாள் இருவரும் எழுந்து சிறிதுநேரத்தில் குளித்து மதுரை மீனாட்சியைத் தரிசித்துவிட்டு வீட்டிற்குச் சென்றனர்….
அன்றே தீப்திக்கு வளைகாப்பு வைத்தனர்… வளைகாப்பு முடித்து தீப்தி பெற்றவர்கள் வீட்டிற்கு சென்றாள்… மறுநாள் அனைவரும் மறுவீட்டு விருந்துக்கு மதுரை சென்று வந்தனர்…. ஒருவாரம் புதுமண தம்பதிகள் சேலத்தில் தங்கினர்.. மற்றவர்கள் மறுநாளே மதுரை திரும்பிவிட்டனர்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
+1





