Loading

 

நிவேதாவைப் பரிசோதித்த டாக்டர் அவளுக்கு இதய துடிப்பு இல்லை என்று கூறியவுடன் நிதிஷும் அரசுவும் இடிந்து போய் நின்றுவிட்டனர்… என்ன செய்வது என்று தெரியாமல்….

அங்கு இருக்கும் மருத்துவர் தான் விரைந்து ஆட்டோமேட்டட் எக்ஸ்ட்டர்னல் டிபிபிரில்லேடர் (Automated External Defibrillator) அங்கு கொண்டு வர செய்தனர்… இதய துடிப்பு நின்று விட்டதால் எமெர்ஜென்சி அறை கொண்டு செல்லாமல் அங்கேயே வைத்து இதய துடிப்பு வர முயற்சி செய்தனர்….

 இரண்டு முறை செய்தும் எந்த பயனும் அளிக்கவில்லை… மூன்றாவது முறை செய்யும் போது அங்கிருக்கும் அனைவரும் வேண்டிக் கொண்டனர்…. டாக்டர் பேட் எலெக்ட்ரோட்ஸ்(PAD ELECTRODES) நன்றாக தேய்த்து அவளின் நெஞ்சு பகுதியில் வைத்தார்….

அப்போது நிவேதா அவளின் மூச்சை நன்றாக இழுத்து விட்டாள்… அவளின் உடம்பு ஒருமுறை மேலே தூக்கிப் போட்டு பெட்டில் விழுந்தது….

அதை பார்த்து அங்கிருக்கும் அனைவரும் சந்தோச பட்டனர்… டாக்டர் நிதிஷ் அரசு இருவரிடமும் “இனிமே எந்த பிரச்சனையும் இல்ல…. கொஞ்சம் டிரீட்மென்ட் பாக்கனும்… அதுனால் அவங்கள ரூமுக்குக் கூட்டிட்டு போறோம்…” என்று கூறி நிவேதாவை அறைக்கு அழைத்து சென்றார்..

அங்கு அவளுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க பட்டது…. கால் மணிநேர சிகிச்சைக்குப் பின் டாக்டர் வெளியே வந்து இருவரிடமும் “இப்ப ஓகே அவங்க பட் கொஞ்ச நாளைக்கு அதிர்ச்சியான விஷயம் எதுவும் சொல்லாதீங்க…

இப்ப மயக்கத்துல இருக்காங்க… மயக்கம் தெரிஞ்சதும் கூட்டிட்டு போகலாம்” என்று கூறி மருத்துவர் சென்றுவிட்டார்… அரசுவும் நிதிஷும் ஓய்ந்து போய் அமர்ந்துவிட்டனர்… இன்னும் எத்தனை பிரச்சனை வருமோ என்று!!!….

.

.

.

.

மதுரையில்

மூன்று மணிநேரமாக அதிக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது… அனைவரும் பரிதவிப்புடன் அறுவைசிகிச்சை அறையையே பார்த்து கொண்டு இருந்தனர்…

தீப்தியின் குடும்பம் வரும்போது தாத்தாவையும் அப்பத்தாவையும் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு வந்துவிட்டனர்…. வரும்போதே அங்கு இருப்பவர்களுக்கு மதிய உணவு கொண்டு வந்து விட்டனர்…. அனைவரையும் கட்டாயப்படுத்தி சாப்பிடவும் வைத்து விட்டனர்….

அனைவரும் எதிர்பார்த்தபடியே டாக்டர் வெற்றிகரமாக அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்தார்…

“ஆபரேஷன் சக்ஸஸ்புல்லா பண்ணியாச்சு… ஆனா அதுல ஒரு சின்ன ப்ரோப்லம்…. அவரு எப்ப நினைவு திரும்பும் அப்டினு தெரியாது… ஒரு மணிநேரத்துலயும் நினைவு திரும்பலாம்…. ஒரு வாரமும் ஆகலாம்….

அவர்கிட்ட சின்னவயசுல இருந்து அவருக்கு விருப்பமான விசயத்தை பேசிட்டே இருங்க…. மைண்ட் அபெக்ட் ஆகுற மாதிரி எதுவும் பேசாதீங்க….

அவருக்கு நினைவு திரும்புனா தான் மெமரி லாஸ் எதோ ஆகி இருக்கா அப்டினு பாக்க முடியும் இன்னிக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்க… இன்னிக்கு நினைவு திரும்பலனா நாளைல இருந்து பேச ஸ்டார்ட் பண்ணுங்க” என்று கூறி சென்றுவிட்டார்

அனைவருக்கும் அதியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சந்தோசப்படுவதா இல்லை அவனுக்கு எப்போது நினைவு திரும்பும் என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை…

மாறன் கொஞ்சம் தற்போது தெளிந்து விட்டான்…. எனவே தாத்தா அப்பத்தா சுந்தர் அப்பா சிவாம்மா தீப்தியின் பெற்றோர் என பெரியவர்கள் அனைவரையும் வீட்டுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான்…

முரளி மற்றும் தீப்தியிடம் “ஒரு அரைமணி நேரம் இங்க இருங்க… வீட்டுக்கு போயிட்டு உடனே வந்துடுறேன்… தங்கம் வா” என்று மீனாட்சியை அழைத்தான்…

ஆனால் மீனாட்சியால் இருக்கையில் இருந்து எழ முடியவில்லை… மயக்கம் வருவது போல் இருந்தது… அவளிடம் இருந்து எந்த சத்தமும் வெளிவரவில்லை என்று திரும்பி பார்க்கும் போது தான் அவள் மயங்கி கீழே விழ போவது தெரிந்தது…..

மாறன் வேகமாக சென்று அவளை தாங்கி பிடித்தான்…. முரளியும் தீப்தியும் கூட வேகமாக மீனாட்சியிடம் வந்தனர்…. அவள் மயங்கி விழுந்ததை பார்த்த ஒரு செவிலி வேகமாக வந்து முதலில் அவளின் நாடியைப் பிடித்து பார்த்தார்….

அதில் இரட்டை துடிப்பு கேட்டது… உடனே அந்த செவிலியர் மாறனிடம் “வாழ்த்துக்கள் சார்… உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க… டாக்டர் கிட்ட இன்னொரு தடவை செக் பண்ணிக்கோங்க” என்று கூறி சென்றுவிட்டார்….

மற்ற இருவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்… மீனாட்சி முழித்தவுடன் அவளிடம் விஷயத்தைக் கூறி டாக்டரிடம் இருவரும் சென்றனர்… அங்கு டாக்டரும் உறுதி செய்துவிட்டார்…. இருவரும் தங்கள் சந்தோசத்தைக் கண்களில் காட்டிக் கொண்டனர்…

வீட்டில் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என மாறன் கூறிவிட்டான்.. முரளி தீப்தியிடமும் கூறிவிட்டான்.. அவர்களும் சரி எனக் கூறிவிட்டனர்… மீனாட்சியை பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு ஒரு குளியலை போட்டுவிட்டு அபர்ணாவிடம் மீனாட்சி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிவிட்டான்…

அகில் விஷாலினி இருவரும் பள்ளி சென்றுவிட்டனர்… தாரா தூங்கி கொண்டு இருந்தாள்… மீண்டும் மாறன் மருத்துவமனை சென்றுவிட்டான்…

 நிதிஷ் அரசு நிவேதாவை தவிர மற்ற அனைவரும் அரசுவின் அப்பாவின் காரில் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்… நிவேதாவிற்கு நேர்ந்ததை யாருக்கும் சொல்லவில்லை.. அரசுவின் அப்பாவிற்கு மட்டும் தான் தெரியும்….

மாறன் வரும்போது தீப்தி அரசுவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்… அவள் பேசுவதைக் கேட்ட மாறன் அரசுவிடம் பேச வேண்டும் என்று கூறினான்… அவளும் அரசுவிடம் கூறிவிட்டு மாறனிடம் கொடுத்தான்….

“ஹலோ அரசு பாப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா???” என்று மாறன் கேட்டான்..

அதற்கு மாறன் நடந்த எல்லா விஷயத்தையும் கூறி நிவேதா தற்போது நன்றாக இருப்பதாக கூறினான்… இன்னும் அரைமணி நேரத்தில் சேலத்தில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டு விடுவோம் என்று கூறிவைத்து விட்டான்…

நிவேதாவைப் பற்றி கூறியதும் பதறிவிட்டான்… பின் அவளுக்கு ஒன்றும் இல்லை என தெரிந்தவுடன் தான் ஆசுவாசம் அடைந்தான்… இருவரின் காதலை எண்ணி மாறனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது… இருந்தும் அதியை நினைத்து வருத்தமாக இருந்தது….

முரளியை அழைத்து தீப்தியை வீட்டில் விடுவருமாறு கூறினான்.. அவனும் போய் விட்டுவந்தான்….

.

.

.

.

சேலத்தில்

கண் விழித்த நிவேதா எதுவும் பேசவில்லை… அமைதியாக இருந்தாள்… அவளை அழைத்தவுடன் காரில் சென்று அமர்ந்து கொண்டு கண்மூடி சாய்ந்துவிட்டாள்… இருவரும் எது பேசியும் அவள் அமைதியாகவே இருந்தாள்…

இரவு நேரம் என்பதால் வேகமாக அரசு காரைப் பறக்க விட்டான்… காரின் ஓசை மட்டுமே கேட்டது…

அதி தன்னுடைய அழுகையை நிவேதாவிடம் மட்டும் காட்டியதை போல் இவளும் அவளின் பாவாவிடம் மட்டும் தான் காட்டுவாளோ?!?!

.

.

.

மாறன் மணிகண்டனிற்கு அழைத்து அனைவரும் நாளை மருத்துவமனை வருமாறு கூறிவிட்டான்.. இரவு நேரத்தில் கூட்டம் வேண்டாம் என கூறிவிட்டான்.. அதனால் அவரும் சரி எனக் கூறிவிட்டு அதியின் வீட்டிற்கு சென்றுவிட்டார்…

அங்கு வீட்டில் அனைவரும் ஒரு ஒரு இடத்தில சோகமாக அமர்ந்து இருந்தனர்.. வண்டியின் சத்தத்தைக் கேட்டு தான் அனைவரும் வெளியே வந்தனர்… இவர்களை வரவேற்றுவிட்டு உள்ளே அழைத்து சென்றனர்…

வசும்மா தான் அறுவைசிகிச்சை பற்றி கேட்டார்… சிவாமாமாவும் டாக்டர் கூறியதை கூறினார்… அதற்கு வசும்மா “எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று கூறினார்… சிவாம்மா தான் நிவேதாவை பற்றி கேட்டார்… அதற்கு வசும்மா பிரியா இருவரும் தெரியவில்லை… நிதிஷ் அரசுவிடம் தான் பேசவேண்டும்.. அவளுக்கு அழைத்தாலும் இருவர் தான் பேசுகிறார்கள் என்று கூறினர்…

மணிகண்டன் மெதுவாக நிவேதாவிற்கு நடந்ததை கூறி தற்போது கிளம்பிவிட்டனர்… நிவேதாவிற்கு எதுவும் இல்லை எனக் கூறினார்… அனைவரும் கலங்கிவிட்டனர்.. மீண்டும் அவரே “நிவேதா இப்ப நல்லா இருக்கா… கவலபடாதீங்க” என்று கூறினார்…

அனைவரும் ஹாலிலேயே அமர்ந்து இருந்தனர்.. மீண்டும் மணிகண்டனே அனைவரையும் தூங்க கூறினார்.. சிவாம்மா அனைவருக்கும் அறை தயார் படுத்தி கொடுத்தார்… அனைவரும் அவரவர் அறைக்கு தூங்க சென்றனர்..

.

.

.

நள்ளிரவில் மூவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்… நிவேதா அமைதியாகவே உள்ளே வந்தாள்…. யாரிடமும் பேசவில்லை…. மாறனுக்கும் முரளிக்கும் ஒரு சின்ன சிரிப்பை தந்து அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்….

காரில் வரும்போதே அதிக்கு ஆபரேஷன் செய்தது… பிறகு மருத்துவர் சொன்னது என அனைத்தையும் கூறினர்…. ஆனால் அவள் எதுவும் கூறவில்லை ஆனால் அவர்கள் கூறியதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தாள்….

.

.

.

அடுத்த நாள் காலை அனைவரும் மருத்துவமனை வந்துவிட்டனர்… நிவேதா நேராக சென்று சிவாம்மா தோள் சாய்ந்து விட்டாள்…

நேற்று அதிக்கு நினைவு திரும்பமல் போனதால் இன்று யாரோ இருவரை போய் பேசிவர கூறினார் மருத்துவர்… சிவாம்மா முதலில் நிவேதாவை தான் போக கூறினார்…

அவளும் மற்ற யாரிடமும் பேசாமல் அதியிருந்த அறைக்குச் சென்றாள்… அவனோ ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான்… மெதுவாக அவனின் அருகில் போய் நின்றாள்.. அவளின் கண்ணில் கண்ணீர் வழிந்தது…

“நான் உங்கள அழுக வெச்சது மாதிரி என்னையும் அழுக வைக்கணும்னு நினைக்குறிங்களா பாவா… நான் அழுக கூடாதுனு சொல்லுவிங்கள பாவா… நான் அழுதா உங்க மனசு வலிக்கும்னு சொல்லுவிங்கள… இப்ப நான் அழுகுறேன் பாவா.. மனசுலாம் ரொம்ப வலிக்குது பாவா… உங்க அம்மு பாவம்ல வந்துருங்க பாவா…

உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனது தெரிஞ்சதும் என் ஹார்ட் பீட் நின்னு போச்சு தெரியுமா…. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணாங்க..

என்னால யார் கூடயும் பேச முடியல பாவா.. என்னால அழுக கூட முடியல பாவா… நீங்க வாங்க… நீங்க சொல்லுவிங்கள உன்ன முழுசா எனக்குள்ள உணரணும் அப்டினு… எனக்கும் அப்டி தோணுது பாவா…..

பாவா ஒன்னு மட்டும் கேளுங்க பாவா இல்லனா அவரோட அம்மு இங்க இருக்கமாட்டா….” என்று கூறி அவனின் நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்து விட்டு அவனை பாராமல் வெளியேறிவிட்டாள்…

நிவேதா பேசியது அவனுக்கு கேட்டதோ என்னவோ மெதுமெதுவாக அவனின் இமையை பிரிக்க முயற்சித்தான்…

அவனை பார்க்க வந்த சிவாம்மா அவன் இமையை பிரிக்க முயற்சி செய்வதை பார்த்து வேகமாக வெளியே சென்று மருத்துவரை அழைத்தார்…

அவரும் வேகமாக அந்த அறைக்கு விரைந்தார்…. அதற்குள் அதி கண்களை திறந்து இருந்தான்… மருத்துவர அவனிடம் “அதி உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா???” என்று கேட்டார்… அவனும் ஆம் என்று தலை ஆட்டினான்…

“உங்களுக்கு என்ன ஆச்சுனு ஞாபகம் இருக்கா??? ” என்று கேட்டார்…

அவனும் ஒரு லாரி வந்து இடித்து சென்றதாக கூறினான்….. பிறகு வீட்டினர் ஒரு ஒருவராக அழைத்து எல்லாரையும் தெரிகிறதா என்று கேட்டார்.. அவனும் அனைவரையும் தெரிகிறது என்று கூறினான்…

ஆனால் அவனின் கண்கள் வேறு ஒருவரை தேடியது… அவன் தேடியவளோ வெளியே உட்காந்து இருந்தாள் உள்ளுக்குள் பயத்துடன்…

அனைவரும் வெளியே வந்தனர்… சிவாம்மா நிவேதாவை எழுப்பி அறையில் உள் அழைத்து சென்றுவிட்டு வெளியே வந்து கதவைச் சாற்றிவிட்டார்….

உள்ளே அதி அவளை நோக்கி கையை நீட்டி “அம்மு” என்று அழைத்தான்… அவ்வளவு தான் “பாவா” என்று கத்திக்கொண்டே அவனின் கையைப் பிடித்து இவ்வளவு நேரம் அழுத்திவைத்து இருந்த அனைத்து அழுகையையும் அழுது தீர்த்துவிட்டாள்…

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. யாரோ, எதோ என்று எழுதுவது சரியல்ல.. மாற்றி கொள்ளுங்கள்.. நன்றி